இரண்டாம் பாகம் - ஸ்ரீராகவேந்திர விஜயம்! 19

/idhalgal/om/part-2-sri-ragavendra-visit-19

ரீஷி மகரிஷி உண்டு, மெல்ல மெல்ல விழிகள் உறக்கத்திற்கு ஆயத்தமாக, ரிஷிபத்தினி அவரின் பாதங்களை இதமாய்- சற்றே விரல்களில் மிதமாய் அழுத்தம் கொடுத்துப் பிடித்துவிட, அவர் ஏகாந்தமாய் உறங்கும் நிலையின் ஆரம்பத்தில் இருந்தார். மரீஷி மகரிஷி பிரம்மாவின் புதல்வன் ஆவார். அவர் தன் புதல்வரை சந்திக்கும் எண்ணத்தோடு அவர் குடில் தேடிவந்தார். தன் மாமனா ரான பிரம்மா வந்தவுடன் அவரை வரவேற்கும் மரியாதையின் அவசரத்தில் எழுந்தோடிய மனைவியினால், தனது உறக்கம் கலைந்து கோபத்துடன் எழுந்தவர், காரணம் ஏற்காது மனைவிக்கு சாபமிட்டு அகன்றார்.

முனி பத்தினி தன் நிலையை பிரம்மதேவரிடம் முறையிட, அவரோ மகத்தான சக்தி கொண்ட மகனின் சாபத்தை தன்னால் போக்க இயலாது என கைவிரித்தார்.

""நீ எதற்கும் பரந்தாமனிடம் சென்று இதைப் பகர். மகனின் சக்திக்குக் காரணம் பரந்தாமனின் பக்தி'' என்றதைக் கேட்டு ரிஷி பத்தினி மகாவிஷ்ணுவைச் சரணடைந்தாள்.

""பரந்தாமன் சாபத்தை பக்தன் தீர்க்கமுடியும். பக்தனது சாபத்தை பரந்தாமனால் தீர்க்க இயலாது'' என்று பக்தனது சக்தியை பரந்தாமனே ஒப்புக்கொண்டது பக்தியின் பரிமணாமத்தை உலகிற்கு எடுத்துக்கூறியது உத்தம நிகழ்வு.

தன் அருளுரையின்போது மேற்கண்ட நிகழ்வைக் கூறினார் ஸ்ரீராகவேந்திரர்.

""ஸ்வாமி.. அப்படியாயின் பக்தனைவிட அவள் வணங்கும் கடவுளின் சக்தி தாழ்ந்ததா?'' என்றார் பணிவுடன் வெங்கண்ணா. மெலிதான புன்னகையுடன் அவரைக் கண்ட ஸ்வாமிகள்-

""அப்படியல்ல; மனம் சம்பந்தப்பட்டது பக்தி. ஏன், அதையும்விட மனம் கடந்ததும் பக்தியே. உன்னதமான பக்தியில் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இருப்பதில்லை. எதிர்பார்ப்பு இல்லாதபோது அங்கு என்ன நிகழ்ந்துவிடப்போகிறது. செல்வம் தேவையில்லை. உணவின்மீதான பற்று இருப்பதில்லை. தேகத்தின்மீது பற்றற்றுப் போய்விடும். ருசி- அருசி என்ற பாகுபாடு இருக்காது.

ஆம்; உணவின் தேவையினை தேகம் எதிர்பார்க்காதபோது பசி என்ற உணர்வே தோன்றாது. அந்த மனம் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டது. நேர்மைக்கு உட்பட்டது. ஒரு புன்னகைகூட மற்றொருவரை காயப்படுத்தும் என்ற மென்மையான மெல்லிய உணர்வுக்குள் தங்களைப் புதைத்துக்கொள்ளும் மகா உத்தமத் தன்மை கொண்டவர்கள். இறப்பைக்கூட இனிமையாக ஏற்கும் தன்மைகொண்ட, காலம் கடந்த மனோநிலை கொண்ட வர்கள்- உரோம மகரிஷியின் வழியில் நடப்பவர்கள்.''

""நான் அறியாத ஏதேதோ நல்ல உபதேசங்களை உங்கள்மூலம் கேட்கும் பாக்கியம் ஸ்வாமி. மன்னிக்க வேண்டும். அந்த உரோம மகரிஷியின் நிகழ்வை என்னுடன் சேர்ந்து பிறரும் அறிய தாங்கள் எடுத்துரைக்கும்படி வேண்டுகிறேன்.''

ஸ்ரீ ராகவேந்திரரின் புன்னகை மகோன்னதமாக எழுந்தது.

""நல்லது வெங்கண்ணரே. மி

""நல்லது வெங்கண்ணரே. மிகச் சுருக்கமாகச் சொல்லி முடிக்கிறேன். இந்திரன் சுகபோகி. எதையுமே தனதாய் நினைக்கும் சுயநலமும் உண்டு. சுந்தரமான விஷயங்கள் அனைத்தும் தனக்குச் சொந்தமாக வேண்டும் என்ற மனநிலையினைக் கொண்டவன். அதனால் அவன் அனுபவித்த இன்னல்கள் அநேகம் அநேகம். அப்படிப்பட்ட சுகபோகியான கலாரசிகனான அவனுக்கு தேவருலகமே வியக்குமளவு பெரும் மாடமாளிகையினைக் கட்டும் எண்ணம் தோன்ற, தேவலோக சிற்பி மயனை அழைத்து ஈரேழு பதினான்கு லோகத்திலும் இல்லாத- மொத்த லாவண்யமும் பொதிந்த மிகப்பெரிய மாளிகையினை உருவாக்கப் பணிந்தான். மயனும் எண்ணங்களை இழைத்து இழைத்து கலை ததும்பும் பெரும் கோபுரங்கள் நிறைந்த மாளிகை ஒன்றை உருவாக்கினான்.

"ஆஹா... எங்கும் இல்லாத- காண இயலாத இத்தகைய மாளிகையினைக் காண்பது நமது வாழ்நாளில் சிறப்பு' என்று கண்டவர் வியந்தனர்.

இந்திரன் தனது மாளிகையினைத் தானே பெருமைப்பட பார்த்துப் பார்த்து ரசிக்கலானான். அன்றைய தினம் நாரத மகரிஷியின் லோக சஞ்சாரத்தின்போது அவரை அழைத்து மாளிகையினை பெருமைப் படக் கூறலானான். ""இதுபோன்றதொரு மாளிகை மும்மூர்த்திகளுக்கும் இல்லை. அந்த முப்பெரும் தேவியருக்கும் இல்லை. எப்படி நாரதரே எனது சாமர்த்தியம்?''

""ஆஹா! உன்னைத் தவிர யாரால் இது முடியும். இத்திசை கடக்கும் அனைவரும் வியக்க வேண்டியதொன்று இது. ஆனால் பாரேன். படுக்கும் பாயை சுருட்டி தலையில் சுமந்து செல்லும் அந்த யாரோ ஒருவன் உனது மாளிகையைப் பாராது செல்வது உனக்கு உதாசீனமாகத் தோன்றவில்லை?'' என சீண்டினார் நாரதர்.

""ஆம்... ஆமாம்... அட யாரப்பா அது... ஏய் இங்கே வா'' என கோபத்துடன் அழைக்க, அவர் பாயுடன் அருகில் வர, அவர் யாரென்பது புலனாயிற்று. உடம்பெல்லாம் ரோமம் நிறைந்து, ஆங்காங்கே சடையிட்டு, வினோத ரூபத்துடன் வந்தவரைக் கண்டு எழுந்து நின்று வரவேற்றார் நாரதர்.

""வாருங்கள் ரிஷியே. உங்களை தரிசித்த இந்த நாள் எனக்கு புனிதம் சேர்த்தது'' என வணங்கினார். கண்ணோரம் சுருங்க, நெற்றியில் யோசனையின் தாக்கத்துடன், ""நாரதரே யார் இவர்...'' என்றான் இந்திரன்.

""என்ன இந்திரபதி... இவர்தான் ரோமரிஷி. மகாமகா தபஸ்வி. அவர் அனைத்தும் தெரிந்தவர். அனைத்தும் கடந்தவர்.''

""அப்படியாயின் எனது மாளிகை பற்றிச் சொல்லுங்கள்.''

""அப்படியா. சரி. ரிஷிகளே, மயனே வியக்கும் இந்த மாளிகையினைப் பற்றி நீங்கள்...''

""போதும் நாரதரே. நிலையில்லாத ஒன்றினைப்பற்றி கருத்து தெரிவிக்கக் கூறுவது எனக்கு கோபத்தை வரவழைக்கவா?''

""பொறுங்கள் ரிஷகளே. ஏதோ பாவம் இந்திரபதி தனது மாளிகையின் சிறப்பினை உங்களைப்போன்ற முற்றும் கடந்தவர்களிடம் கேட்பது ஆசியாக நினைக் கின்றான்.''

rrr

""சற்றும் கடக்காதவனின் சிருஷ்டியி னைப் பற்றி முற்றும் கடந்தவனைக் கேட்பது முரணாக உங்களுக்குத் தெரியவில்லையா. சரி; சொல்கிறேன். உண்டு உறங்கவே இந்த மாளிகை. அதற்கு இந்த எளிமையான தர்ப்பைப் பாய் போதுமே. நமது வாழ்நாளே சொற்பமானது.

நாளும் விரயம்; நல்லதும் விரயம். போதும் இது. நான் வருகிறேன்'' என்றவர் திரும்பி விரைந்தார்.

""பித்துக்குளியின் பிதற்றல்'' என்றான் இந்திரன்.

""இந்திரனே, உனது கோணல் எண்ணத்தால் விபரீதம் தேடிக் கொள்ளாதே. உரோம மகரிஷியின் ஒவ்வொரு உரோமம் உதிரும்போதும் ஒரு பிரம்மனின் ஆயுட்காலம் முழுமையாகும். அப்படியாயின் பலகோடி ஆண்டுகளைத் தனது ஆயுட்காலமாகப் பெற்றிருக்கும் இவர் பல சதுர்முகன்களைக் கண்டவர். பல லட்சம் ரோமம் கொண்ட- பல்லாயிரம் கோடி ஆண்டுகளைத் தனது ஆயுட்காலமாகக் கொண்ட அந்த மாபெரும் மகரிஷியே வாழ்நாளை சொற்பம் எனக்கூறி, தினசரி படுக்கை மட்டும் சுமக்கிறார். வாழ்நாளின் நிலையற்ற தன்மையை மனிதருக்குப் போதிக்கும் இந்த சூட்சுமமான தருணத்தை உனக்கு போதித்தபோது புரியவில்லையா'' என கேட்க, இந்திரன் நடுநடுங்கிப்போனான்.

தன் மாளிகையினை இடித்து தரை மட்டமாக்கினான்.

மகரிஷிகளும் தேவர்களும் இணைந்த சம்பவங்கள் அனைத்துமே போதனைகள். மாபெரும் மகரிஷியான பலகோடி ஆண்டுகளை வாழ்நாளாகக் கொண்டவரே அதனை சொற்பம் என கூறுகையில், நூறுக்கும் குறைவான ஆயுளைக்கொண்ட மானுடர்கள் இந்த உண்மையை அறிந்துகொள்ளவே இந்த தேவ நிகழ்வை உங்களுக்குக் கூறினேன்''

என்று ஸ்ரீராயர் அன்று விளக்கியது அவரின் சீடர்களுக்கு பெரும் ஆழங்கள் பொதிந்ததாக இருந்தது. கூடியிருந்த மக்கள் ஆரவாரத்துடன் ராகவேந்திரரின் அருளுரையை வரவேற்றனர்.

""என்னை சந்திக்கும் உங்கள் முகத்தில் சந்தோஷம் தளும்பித் ததும்பி நிற்கின்றதே திவான் அவர்களே. என்ன விஷேசம்?''

""ஸ்வாமிகள் அறியாததா? தங்களின் ஆணையை நவாப் அவர்கள் பூர்த்தி செய்து சாசனமாக்கிவிட்டார். அதனைத் தங்களின் பாதங்களில் சமர்ப்பிக்கவே நான் வந்துள்ளேன்'' என்றவர், ஒரு நீண்ட அழகான குழல் போன்ற பெட்டியினை ஸ்ரீராகவேந்திரரின் முன்பாக மரியாதையுடன் வைத்துப் பணிந்து எழுந்தார்.

""என் மூலராமன் இந்த எளிய சந்நியாசியின் வேண்டுதலுக்கு வெகு சீக்கிரமாக செவிசாய்த்தது என் பாக்கியம்...'' ஸ்ரீராகவேந்திரர் கண்மூடி கைத்தொழுதார். மூடிய அவரின் விழிப்பந்துகள் அங்குமிங்கும் இடதும் வலதும் வெகுவேகமாக ஓடியது அவரின் பரவசத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது.

ஸ்ரீராகவேந்திரர் தனது சீடர்களுடன் நதியோரம் அன்று மாலை நடந்து சென்றுகொண்டிருந்தார். நதியின் ஓட்டம், அதன் சலசலப்பு சப்தம், நீர்ப்பறவைகளின் சிறகடிப்பு என மகோன்தமாக இருந்தது. ஸ்ரீராயர் மெல்லமெல்ல நடந்து வெகுதூரம் வந்துவிட்டிருந்தார். சற்றுத் தொலைவே மனிதக் கூட்டம் ஒன்று எதிரே வந்தது. அதில் முஸ்லிம்களும் இந்துக்களும் கலந்தே வந்தனர். ஸ்வாமிகளின் எதிரில் வந்து தங்களது கரம் கூப்பி வணங்கினர்.

""சாமி. நீங்கள் எங்கள் பூமியில் கால் வைத்தது நாங்கள் செய்த பாக்கியம்'' என்றார் அதில் நடுநாயகமாக இருந்த நபர்.

அவர் ராமாபுரம் அடுத்து பிச்சாலி என்ற கிராமத்தின் தலைவராவார். ஆதம்பாய் என்பது அவரின் பெயராகும். ""எங்கள் ஊர் அப்பண்ணா சாமி இப்போது தங்களது சீடர் என்பதும் எங்களுக்குப் பெருமை. அல்லாவின் அரும்பெருங்கருணை, உங்களைப் போன்ற பெரிய ஞானிகளை நாங்கள் பார்ப்பதும் பேசுவதும்.. அடடா பெரும்பேறு பெரும்பேறு'' என்றார்.

ஸ்வாமிகள் புன்னகைத்தார். இருகரம் தூக்கி ஆசிர்வதித்தார். ""எனது மூலராமன் மிகவும் போற்றத்தக்கவன். கருணாசாகரன். இவ்வளவு வெள்ளை உள்ளம் கொண்ட சமத்துவ மக்களைக் காண்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். ஆமாம்; நான் இங்கு வந்ததும் குடியமர்ந்ததும் உங்களுக்கு, உங்கள் வாழ்வாதாரத்திற்கு ஏதேனும் இடையூறு நேர்ந்ததா?

அப்படியாயின் நான் எனது எளிய குடிலை அடுத்த ஊரினிலோ அல்லது இந்த ஊரின்... ஏன், இந்த நாட்டின் எல்லை கடந்தும் அடுத்த ஊரில் குடிபெயர்ந்து...''

""ஆஹா! என்ன வார்த்தையைக் கூறிவிட்டீர்கள். நீங்கள் இங்கு வந்து எங்கள் ஊருக்குப் பெருமையல்லவா தேடித் தந்துவிட்டீர்கள். மாதம் மும்மாரி பொழிந்து, புற்கள் செழித்து வளர்ந்து கால்நடைகளுக்கும் நல்ல தீவனம் கிடைத்து... இப்படி சொற்ப காலத்திலேயே செழுமையைக் கொடுத்துவிட்டீர்கள் ஸ்வாமி. அந்த மாஞ்சாலித் தாயின் மகிமையும் இதற்கு ஒரு காரணம்.''

ஸ்வாமிகளின் முகம் சட்டென்று மலர்ந்தது.

""ம்... மறுபடி சொல்லுங்கள். அந்தப் பெண் தெய்வத்தினை நீங்கள் அனைவரும் போற்றிப் பூஜிக்கிறீர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. மாஞ்சாலியம்மன் என்பதுதான் அந்தப் பெண் தெய்வத்தின் பெயரா?''

""ஆம்... இந்த ஊரின் பெயரைத் தன் பெயராய்க் கொண்டவள்.''

""அந்தத் தாயே உங்கள் எல்லைத் தெய்வம். சரிதானே அன்பர்களே.''

""ஆமாம் ஸ்வாமி.''

""நல்லது. மிக நல்லது. எனக்கும் அத்தாயிடம் ஒரு தேவை உள்ளது. நல்லது. நீங்கள் அனைவரும் ஊருக்குச் செல்லுங்கள். நான் இன்னும் நடக்க வேண்டியுள்ளது.''

ஸ்ரீராகவேந்திரரின் மனம் ஜபிக்கத் தொடங்கியது. "என் ஆத்ம மூலராமா. இங்கேயே இனி தங்கிவிடுவதாக உத்தேசித்துள்ளேன். எனது கடைசி நாளும் இங்கேயே அமைந்துவிடவேண்டும்.

அந்த எல்லையை எனக்கு இனம் காண்பி. அவளிடம் நான் இங்கிருக்க அனுமதி பெறவேண்டியுள்ளது எனதய்யனே. ஐதீகம் என்பதுகூட எனக்கும் பொதுவான ஒன்றல் லவா. எனவே என் செயலை நான் நேர்ப்படுத்தி உண்மைத்தன்மையுடன் வெளிப்படையாயிருந்து, இந்த ஊர் மக்களின் நம்பிக்கையினை ஸ்திரப்படுத்த எனக்கு உதவுவாய் ஐயனே. மனம் அரற்றி யது. "இங்கு எனது முற்பிறவியில் நான் செய்த அனைத்தையும் உணரவைத்தவனே. நான் இவ்விடத்தில் நிரந்தரமாயிருக்கும்படி உபாயம் காண்பி.'

""யேய் டுர் டுர் டுர்... ஒதுங்கு... ஒதுங்கு.'' தனக் குப் பின்னால் யாரோ ஒரு பெண் வினோத மாய் சப்தம்கொடுப்பதை உணர்ந்தார். வலதும் இடதுமாய் மாறிமாறி நடந்தார்.

""அட... என்னப்பா இது. ஒன்று நின்றுவிடு. அல்லது நகர்ந்துவிடு. இல்லையெனில் ஒதுங்கி வழிவிடு... என்ன நான் சொல்.... அடடா...

யாரோ சாமியார்போல... மன்னிக்கவும் சாமி. எனது ஆட்டு மந்தையைக் காப்பாற்றி நான் கரை சேர்ப்பது எனது வேலை. நீங்கள் சாமியார் என்று அறியாமல்... அதனால்தான்... ஒன்று இங்கே நீங்கள் நின்றுவிட்டால் எனது மந்தைக்கு வழிகிடைக்கும்.. அப்படிப் போவதா அல்லது இப்படிப் போவதா என நீங்கள் வலது இடதாய்த் தடுமாறினால் எனது மந்தையும் தடுமாறும். சிந்தையும் இடம்மாறும். என்ன நான் சொல்வது சரிதானே...''

ஸ்வாமிகள் வேகவேகமாய் நடந்ததனா லும், பெரும் ஆட்டுக்கூட்டத்தினிடையே தாங்கள் சிக்கிக்கொண்டதனாலும், ஸ்வாமிகளுடன் வந்தவர்கள் நினைவற்று, சிந்தனையற்று அங்கே நின்றுவிட்டனர்.

""என்ன சாமி... நான் சொல்வது சரிதானே. இங்கேயே நின்று எனது மந்தைக்கு வழி கொடுப்பீர்களா?'' அந்தக் குரல் அந்த தெய்வீகத் தொனி...

ஸ்வாமி சட்டென்று மலர்ந்தார். ஆஹா! எவ்வளவு சக்தி வாய்ந்தவள் இந்த எல்லைத் தெய்வம். நினைத்து வேண்ட சட்டென்று வாத்சல்யமாய் வந்து விட்டாள். சமத்காரமாய் இம்மக்களை மந்தையாகவும், தன்னை மேய்ப்பவளாக வும், நான் இங்கேயே தங்கி அவர்களை நல்வழி செய்ய வேண்டுமென்றும் சூசகமாகப் பேசி...

""ஆஹா தாயே. கருணைக்கரசியே! நன்றி அம்மா. வேண்டியவுடன் வந்து வேண்டியதைத் தந்து அனுமதியை ஆசியாய்க் கூறிவிட்டாய். இன்னும் ஏன் என்னிடம் மூன்று வேடம். காட்சி தருவாய் அம்மா!'' ஸ்வாமிகள் வாய்விட்டு அரற்றி வேண்ட, அந்த மாஞ்சி கிராமத்து எல்லைத் தெய்வம் மாஞ்சாலியம்மன் மந்தகாசப் புன்னகையுடன் காட்சிதந்தாள்.

""தன்யனானேன் தாயே... தன்யனானேன்.''

""மகனே ராகவேந்திரா. இதுவரை நான் இங்கிருந்து எல்லை காத்தேன். இனி நீ இங்கிருந்து மக்களை நல்வழிப்படுத்தி என் சொல்லைக் காப்பாய். வயதான அம்மா வுக்கு ஓய்வு வேண்டுமல்லவா?''

""நொடிக்கு நொடி லோக ஷேமத்தை ஆய்வு செய்பவள். உனக்கு ஓய்வா தாயே. கேலி போதுமம்மா.''

""சரஸ்வதியே உன்முன் தோன்றி உன்னை உணரவைத்த பெருமைமிக்க என் மகனே. திறன்மிக்க உன்னைத் திணறடிக்கமுடியுமா?''

ஸ்ரீராகவேந்திரர் பரவசமாய் வணங்கினார்.

(தொடரும்)

om010919
இதையும் படியுங்கள்
Subscribe