ஊமைச் சிறுவனைப் பேசவைத்த பரவாய் பெருமாள்! - எஸ்.பி.சேகர்

/idhalgal/om/paravai-perumal-who-made-dumb-boy-speak-s-p-seker

கோவில்கள் நிறைந்த நகரம் கும்பகோணம். திரும்பும் திசையெங்கும் தெய்வங்கள் ஆட்சிசெய்யும் கோவில்களே கண்ணுக்குத் தெரியும். அதேபோன்று திரும்பும் திசை யெங்கும் கோவில்கள் நிறைந்த கிராமம் பரவாய்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்வாங்கிய கிராமம் இது. பரவாய் என்னும் சொல்லுக்குத் தமிழ் அகராதியில் பரவு, பரவிநிற்கும் நீர், உப்பு, கடல், மதில், சிவபெருமானைப்பற்றிப் பாடிய நால்வரில் ஒருவரான சுந்தரரின் மனைவி பரவை நாச்சியார், நலம், நன்மை, உதவி, சிறப்பு, நற்குணம், மேம்பாடு, நல்லருள், புதுமை, தீமையை விலக்குதல் என பல்வேறு பொருள்கள் கூறப்பட்டுள்ளன.

முன்னர் கடல்நீர் பரவியிருந்து, பின்னொரு காலத்தில் கடல்நீர் உள்வாங்கியபிறகு உருவான பகுதியில் ஊர்கள் தோன்றியுள்ளன. அவை அரியலூர், பெரம்பலூர் மாவட்டங் களில் அமைந்துள்ளன என்று கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக இப்பகுதியில் டைனோசர் முட்டைகள், கல்மரங்கள் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக் கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட ஊர்களில் பரவாயும் ஒன்று.

இராமாயண காலத்தில் இராமபிரானுக்கு உதவிசெய்த வாலி சிவனை வழிபட்ட ஊர் இந்த ஊருக்கு மேற்கே பத்து கிலோமீட்டர் தொலைவில் வாலிகண்டபுரம் என்னும் பெயரில் அமைந்துள்ளது. இங்குள்ள சிவன் வாலிகண்டீஸ்வரர், வாலீஸ்வரர் என்னும் பெயர்களில் கோவில்கொண்டுள்ளார். மகாபாரத காலத்தில் பாண்டவர்கள் 12 வருடங் கள் வனவாசம் முடித்து ஓராண்டு அக்ஞாத வாசத்தை (தலைமறைவு வாழ்க்கை) விராட தேசத்தில் வாழ்ந்தனர். அது இப்பகுதியே என்று சொல்லப்படுகிறது. அந்த விராட தேசத்தில் அமைந்திருந்த விராடபுரம் என்ற ஊர் தற்போது மருவி லாடபுரம் என்று அழைக்கப்படுகிறது.

இப்படி சிறப்பு வாய்ந்த பகுதியில் அமைந் துள்ள பரவாய், சோழ மன்னர்கள் காலத்தில் மிகமுக்கிய ஊராக இருந்துள்ளது. இதற்குப் பல கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. முப்பத்திரண்டு சந்திகள் (தெருக்கள் சந்திக்கும் இடம

கோவில்கள் நிறைந்த நகரம் கும்பகோணம். திரும்பும் திசையெங்கும் தெய்வங்கள் ஆட்சிசெய்யும் கோவில்களே கண்ணுக்குத் தெரியும். அதேபோன்று திரும்பும் திசை யெங்கும் கோவில்கள் நிறைந்த கிராமம் பரவாய்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்வாங்கிய கிராமம் இது. பரவாய் என்னும் சொல்லுக்குத் தமிழ் அகராதியில் பரவு, பரவிநிற்கும் நீர், உப்பு, கடல், மதில், சிவபெருமானைப்பற்றிப் பாடிய நால்வரில் ஒருவரான சுந்தரரின் மனைவி பரவை நாச்சியார், நலம், நன்மை, உதவி, சிறப்பு, நற்குணம், மேம்பாடு, நல்லருள், புதுமை, தீமையை விலக்குதல் என பல்வேறு பொருள்கள் கூறப்பட்டுள்ளன.

முன்னர் கடல்நீர் பரவியிருந்து, பின்னொரு காலத்தில் கடல்நீர் உள்வாங்கியபிறகு உருவான பகுதியில் ஊர்கள் தோன்றியுள்ளன. அவை அரியலூர், பெரம்பலூர் மாவட்டங் களில் அமைந்துள்ளன என்று கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக இப்பகுதியில் டைனோசர் முட்டைகள், கல்மரங்கள் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக் கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட ஊர்களில் பரவாயும் ஒன்று.

இராமாயண காலத்தில் இராமபிரானுக்கு உதவிசெய்த வாலி சிவனை வழிபட்ட ஊர் இந்த ஊருக்கு மேற்கே பத்து கிலோமீட்டர் தொலைவில் வாலிகண்டபுரம் என்னும் பெயரில் அமைந்துள்ளது. இங்குள்ள சிவன் வாலிகண்டீஸ்வரர், வாலீஸ்வரர் என்னும் பெயர்களில் கோவில்கொண்டுள்ளார். மகாபாரத காலத்தில் பாண்டவர்கள் 12 வருடங் கள் வனவாசம் முடித்து ஓராண்டு அக்ஞாத வாசத்தை (தலைமறைவு வாழ்க்கை) விராட தேசத்தில் வாழ்ந்தனர். அது இப்பகுதியே என்று சொல்லப்படுகிறது. அந்த விராட தேசத்தில் அமைந்திருந்த விராடபுரம் என்ற ஊர் தற்போது மருவி லாடபுரம் என்று அழைக்கப்படுகிறது.

இப்படி சிறப்பு வாய்ந்த பகுதியில் அமைந் துள்ள பரவாய், சோழ மன்னர்கள் காலத்தில் மிகமுக்கிய ஊராக இருந்துள்ளது. இதற்குப் பல கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. முப்பத்திரண்டு சந்திகள் (தெருக்கள் சந்திக்கும் இடம்) அமைந்துள்ள இந்த ஊர் மிகவும் பழமை யானது என்பதற்கு இன்னொரு ஆதாரம், புத்த மதத்தினர் தங்களது கொள்கைகளை ஆங்காங்கே பீடம் அமைத்துப் பரப்பி வந்தனர்.

அப்படி ஒரு புத்த விகாரம் இந்த ஊரில் அமைந் திருந்தது. புத்தமதத் துறவிகள் இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தங்கள் மதத்தைப் பரப்பியுள்ளனர். இதற்கு ஆதாரமாக ஊரின் மையத்தில் பெரிய புத்தர்சிலை அமர்ந்த கோலத்தில் தற்போதும் உள்ளது.

இங்கு இரண்டு சிவன் கோவில்கள், இரண்டு பெருமாள் கோவில்கள், விநாயகர் மற்றும் முருகன், எல்லையம்மன், செல்லியம்மன், துரோபதையம்மன், மாரியம் மன், காவல் தெய்வமான முனியப்பர், பெரியாண்டவர் என திரும்பும் திசையெங்கும் கோவில்கள் சிறப்பாக உள்ளன. இங்குள்ள தெய்வங்கள் மகிமைவாய்ந்தவை என்பதற்கு ஒரு உவமைக் கதையை ஊர்ப் பெரியவர்கள் சிலர் கூறினர்.

நாத்திக எண்ணம்கொண்ட ஒரு குறுநில மன்னன், மக்கள் தங்கள் தெய்வங்களை உருவ வழிபாடுமூலம் வணங்கி வருவதை மக்கள் சபையில் ஏளனம் செய்து பேசியுள்ளான். அவன், "கடவுள் மீசை வைத்துள் ளாராம். சடாமுடியோடு தலையில் கங்கை நதியை வைத்துள்ளாராம். இன்னொரு கடவுள் சங்கு, சக்கரம் ஏந்திய நான்கு கரங்கள் உடையவராம். இன்னொரு கடவுளுக்கு 16 கைகள் உள்ளதாம். மற்றொரு கடவுளுக்கு ஆறு முகம், 12 கைகள் உள்ளதாம். இப்படி கடவுளுக்கு இத்தனை உருவங்கள் இருக்கமுடியுமா?'' என்று மட்டம்தட்டிப் பேசியுள்ளான்.

அப்போது அந்த கூட்டத்திலிருந்து எழுந்த இளைஞன் ஒருவன், "அரசே, நான் உங்களை சில கேள்விகள் கேட்பேன். அதற்குத் தாங்கள் பதில்கூறத் தயாரா?'' என்று கேட்க, அரசன், "அப்படி என்ன கேட்கப்போகிறாய்... தாராள மாகக் கேள்'' என்று சொல்ல, அந்த இளைஞன், "உங்கள் தாய்- தந்தை உயிரோடு இருக்கின்ற னரா?'' என்று கேட்டான்.

மன்னன், "இல்லை; இறந்துவிட்டார்கள்'' என்றான்.

"அப்படியானால் இறந்துபோன உங்கள் தாய்- தந்தை எங்கே இருக்கிறார்கள்? காட்ட முடியுமா'' என்ற இளைஞன் கேட்க, "மறைந்து போனவர்களை எங்கிருந்து காட்டமுடியும்?'' என்று மன்னன் சொல்ல, "அப்படியானால் அவர்களை நீங்கள் பார்க்க விரும்பினால் என்ன செய்வீர்கள்?'' என்று கேட்டான்.

மன்னன், "அவர்கள் உருவத்தை வரைந்து வைத்துள்ளேன். அதைப் பார்த்து சந்தோஷமடைவேன்'' என்றான்.

உடனே அந்த இளைஞன், "கண்ணுக்குத் தெரியாத உங்கள் தாய்- தந்தையரின் உருவத்தை வண்ணம் தீட்டி அதைப்பார்த்து எப்படி மகிழ்ச்சியடைகிறீர்களோ, அப்படித் தான் நாட்டுமக்களாகிய நாங்கள் கண்ணுக்குத் தெரியாத தெய்வங்களை அவரவர் விருப்பத்திற்கேற்படி சிவனாக, கிருஷ்ணனாக, இராமனாக, சக்தியாக, முருகனாக, காளியாக உருவங்கள் செய்து வழிபட்டுவருகிறோம். அவற்றி டம் எங்கள் குறைகளை- சிரமங்களைச் சொல்லி ஆறுதல் அடைகிறோம். நம்பிக்கையோடு வழிபடும் மக்களுக்கு நல்லது நடக்கிறது" என்றார்.

ss

இப்படி அந்த இளைஞன் மன்னனுக்கு விளக்கம் கூற, நாத்திக எண்ணம் கொண்ட மன்னன் மக்கள்முன் வெட்கித் தலைகுணிந்தான். பிறகு ஆன்மிகவாதியாக மாறினான்.

"இப்படி மன்னனை எதிர்த்து இறைவன் பற்றி விளக்கம் சொன்ன இளைஞர் சுவாமி விவேகானந்தர்.

அவரது கருத்தியல்படியே எங்கள் ஊரில் பல்வேறு தெய்வங்களை தனித் தனிக் கோவில்களில் வைத்து வழிபடுகிறோம்'' என்று நம்மிடம் கூறினர் ஊர் முக்கியஸ்தர்கள்.

"இங்குள்ள பெருமாள் ஊமையாக இருந்த சிறுவனைப் பேசவைத்த பெருமைக்குரியவர் என்னும் உண்மைச் சம்பவம் உள்ளது'' என்கிறார் கள் ஊர்ப் பிரமுகர்களான கருப்பையா, தருமர், இளைஞர் ராஜ்குமார் ஆகியோர்.

"புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டுக்கோட்டை செட்டியார் வம்சத்தினரான ஒரு குடும்பத்தினர், பல ஆண்டுகளுக்குமுன்பு பஸ் போக்குவரத்து இல்லாத காலத்தில், கூட்டுவண்டிகளில் தங்கள் குடும்பத்தினருடன் வாய்பேச முடியாத தங்கள் மகனை அழைத்துக்கொண்டு, திருப்பதி வேங்கடேசப் பெருமாளை தரிசித்து தங்கள் மகனுக்குப் பேச்சுவரவேண்டும் என்று வேண்டுதல் செய்வதற்காகப் புறப்பட்டு வந்தனர். அவர்கள் எங்கள் ஊர் வழியே வந்தபோது இருட்டி விட்டது. இரவு இங்கேயே தங்கி காலையில் செல்ல முடிவெடுத்த அவர்கள், இங்குள்ள பெருமாள் கோவில் முன்பு சமைத்து சாப்பிட்டுவிட்டு கோவில் வாசலில் படுத்துறங்கினார்கள். படுப்பதற்கு முன்பு இங்குள்ள பெருமாளை வணங்கி, "எங்கள் மகன் பேசவேண்டும்; அதற்கு அருள் புரியுங்கள் பெருமாளே' என்று வேண்டிக் கொண்டனர்.

அதிகாலையில் கண்விழித்த அந்த குடும்பத்தின் பெரியவர்கள் திருப்பதி புறப்பட ஆயத்தமாகும் பொருட்டு தூங்கிக்கொண்டிருந்தவர்களை எழுப்பினார் கள். அப்போது அந்த ஊமைச் சிறுவனையும் தட்டி எழுப்ப, "அப்பா அம்மா' என்று அழைத்தபடியே எழுந்துள்ளான். வாய்பேச முடியாத மகன் "அப்பா அம்மா' என்று பேசியது எல்லாரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதுமட்டுமல்ல; அவர்களது குடும்பத்தினர் அனைவரையும் உறவுமுறை சொல்லி தெளிவாகப் பேசியுள்ளான் அந்தச் சிறுவன். இங்குள்ள பெருமாளின் அருளினால்தான் பேச்சு கிடைத்தது என்று மெய்சிலிர்த்த அவர்கள், பெருமாளுக்கு வழிபாடு செய்துவிட்டு திருப்பதிக்குச் சென்று, வேங்கடாசலபதியை வணங்கிவிட்டுத் தங்கள் ஊர் திரும்பினர்.

தங்கள் ஊமை மகனுக்கு பேச்சு வழங்கிய எங்கள் ஊர் பெருமாளை அவர்கள் மறக்க வில்லை சில மாதங்கள் கழித்து மீண்டும் எங்கள் ஊருக்கு குடும்பத்தினருடன் வந்து பெருமாளை வழிபட்டுச் சென்றனர்.

அப்போது முதல் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த வம்சாவளியினர் ஆண்டுக்கு பலமுறை வந்து பெருமாளை வழிபட்டுச் செல்வதோடு, சிதிலமடைந்திருந்த பெருமாள் கோவிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகளைத் தற்போது செய்துவருகின்றனர். அந்த குடும்பத்தின் சிறுவனைப் பேசவைத்ததன் காரணமாக, இந்தப் பெருமாளுக்கு பேசும் பெருமாள் என்று பெயர் உருவானது'' என்கிறார்கள் மனநெகிழ்சியுடன்.

இங்கிருந்து சிறிது தூரத்தில் வரதராஜப் பெருமாள் என்னும் பெயரில் இன்னொரு பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மூலவராக ஸ்ரீதேவி, பூதேவியோடு காட்சியளிக்கும் வரதராஜப் பெருமாளின் முகத்தை எந்த திசையிலிருந்து பார்த்தாலும் அவர் நம்மைப் பார்த்துப் புன்னகைக்கும் தோற்றம் பார்ப்போரை மெய்ம்மறக்கச் செய்கிறது. இங்கு அபூர்வமான உருவ அமைப்புகொண்ட பெருமாள் சிலையாக உள்ளார். இவர் நின்றகோலத்திலுள்ள கோவில் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. அதை சீர்படுத்திச் செப்பனிடும் முயற்சியில் இறங்கியுள்ளனர் ஊர்மக்கள்.

இங்குள்ள வரதராஜப் பெருமாள் கோவில் அருகில் மிகபெரிய வேப்பமரம் தலவிருட்சமாக உள்ளது. இதன்கீழே உள்ள விநாயகர் மிகப்பெரிய உருவத்துடன் காட்சிதருகிறார். இவ்வூருக்கு வடமேற்குப் பகுதியில் பிரகன்நாயகி உடனுறை வன்னீஸ்வரர் ஆலயம் புனரமைக்கப்பட்டு சிறப்பாக வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இதே ஊரிலுள்ள இன்னொரு சிவாலயம் சிதிலமடைந்த காரணத்தால், அங்கிருந்த சிவலிங்கத்தையும் இவ்வாலயத்திலேயே வைத்து வழிபட்டு வருகிறார்கள்.

சோழமன்னர்கள் ஆட்சிக்காலத்தில் இங்குள்ள கோவில்கள் புனரமைக்கப்பட்டு சிறப்பான முறையில் வழிபாடுகள் நடந்துள்ளன. அதிலும் குலோத்துங்க சோழன் காலத்தில் இவ்வூர் ஆலயத்திலுள்ள சிவனை வழிபடுவதற்காக, குலோத்துங்க சோழனின் மனைவி மற்றும் குடும்பத்தினர் சாரட்டுவன்டியில் அவ்வப்போது வந்து பூஜைசெய்து சென்றுள்ளனர் என்பதற்கு கல்வெட்டு ஆதாரம் உள்ளதாகக் கூறுகின்றனர்.

இங்குள்ள பெருமாள், சிவன் மற்றும் எல்லை தெய்வங்களை வழிபடுவதற்கு ஒருநாள் முழுவதும் செலவிடவேண்டும்.

பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் இங்குவந்து, இங்குள்ள தெய்வங்களை வழிபட்டு வாழ்கையில் வெற்றிபெற்று நோய்நொடியின்றி நலமுடன் உள்ளனர். இப்படிப்பட்ட கோவில்கள் நிறைந்துள்ள பழமைவாய்ந்த பரவாய் என்னும் ஊர் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூரிலிருந்து வடகிழக்கில் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அனைத்து போக்குவரத்து வசதிகளும் உள்ளன.

om010821
இதையும் படியுங்கள்
Subscribe