Advertisment

பரமனின் பாமர தரிசனம்! -பொ.பாலாஜிகணேஷ்

/idhalgal/om/paramans-vision-p-balajiganesh

ப்பூவுலகில் பரமன் இல்லாத இடமே இல்லை. பரந்த இந்த உலகத்தில் பரமனுக்குப் பலவிதமான எழில்மிகு ஆலயங்கள் உள்ளன. வரலாற்று சிறப்பு மிக்க ஆலயங்கள் பல இருந்தாலும், சில இடங்களில் சிறிய ஆலயத்தில்கூட சிறப்புகள் பல அடங்கியிருக்கும். அப்படியொரு சிறப்புவாய்ந்த ஆலயத்தைப் பற்றி இங்கு பார்ப்போம்.

Advertisment

கடலூர் மாவட்டத்தில், சிதம்பரம்- கிள்ளை ரயில் மார்க்கத்தில் உள்ளது கோவிலாம்பூண்டி கிராமம். இங்கு ரயில்வே இருப்புப் பாதை அருகிலேயே சிறப்புமிக்க ஆலயம் ஒன்றுள்ளது.

இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் பரமனின் திருப்பெயர் லிங்கேஸ்வரர். இங்கிருக்கும் சிவலிங்கமும் வனதுர்க்கையும் மிகப் பழமை வாய்ந்தவை.

dd

Advertisment

மேற்கூரைகூட இல்லாமல், ஒரு வேப்பமரத்தின் அடியில் திறந்த வெளியில், சதுர பீடத்தில் லிங்கேஸ் வரர், அவர் எதிரில் நந்தீஸ்வரர், இடப்புறம் வனதுர்க்கை ஆகியோரை தரிசனம் செய்யலாம். இந்த ஆலயம் எப்போது அமைக்கப்பட்டது என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் எதுவுமில்லை. நூற்றாண்டுக்குமுன் முதன்முறையாக தமிழ்நாட்டில் இருப்புப் பாதை அமைக்க ஆங்கிலேயர் ஆட்சியில் முடிவு செய்யப் பட்டது. அதற்காக வழித்தடம் அளவிடும் பணி நடைபெற்றது. அப்பொழுது இப்பகுதி யில் ஒரு சிவலிங்கமும்

ப்பூவுலகில் பரமன் இல்லாத இடமே இல்லை. பரந்த இந்த உலகத்தில் பரமனுக்குப் பலவிதமான எழில்மிகு ஆலயங்கள் உள்ளன. வரலாற்று சிறப்பு மிக்க ஆலயங்கள் பல இருந்தாலும், சில இடங்களில் சிறிய ஆலயத்தில்கூட சிறப்புகள் பல அடங்கியிருக்கும். அப்படியொரு சிறப்புவாய்ந்த ஆலயத்தைப் பற்றி இங்கு பார்ப்போம்.

Advertisment

கடலூர் மாவட்டத்தில், சிதம்பரம்- கிள்ளை ரயில் மார்க்கத்தில் உள்ளது கோவிலாம்பூண்டி கிராமம். இங்கு ரயில்வே இருப்புப் பாதை அருகிலேயே சிறப்புமிக்க ஆலயம் ஒன்றுள்ளது.

இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் பரமனின் திருப்பெயர் லிங்கேஸ்வரர். இங்கிருக்கும் சிவலிங்கமும் வனதுர்க்கையும் மிகப் பழமை வாய்ந்தவை.

dd

Advertisment

மேற்கூரைகூட இல்லாமல், ஒரு வேப்பமரத்தின் அடியில் திறந்த வெளியில், சதுர பீடத்தில் லிங்கேஸ் வரர், அவர் எதிரில் நந்தீஸ்வரர், இடப்புறம் வனதுர்க்கை ஆகியோரை தரிசனம் செய்யலாம். இந்த ஆலயம் எப்போது அமைக்கப்பட்டது என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் எதுவுமில்லை. நூற்றாண்டுக்குமுன் முதன்முறையாக தமிழ்நாட்டில் இருப்புப் பாதை அமைக்க ஆங்கிலேயர் ஆட்சியில் முடிவு செய்யப் பட்டது. அதற்காக வழித்தடம் அளவிடும் பணி நடைபெற்றது. அப்பொழுது இப்பகுதி யில் ஒரு சிவலிங்கமும் வனதுர்க்கையும் அவர்களின் அளவீடு பணியின் குறுக்கே, விளைநிலங்களுக்கு மத்தியில் இருந்தது.

இருப்புப்பாதை போடுவதற்கு இவை இடையூறாக இருப்பதாகக் கருதி அதை அப்புறப்படுத்தும் பணியில் ஆங்கிலேய அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதைப் பார்த்த ஊர்மக்கள் மட்டுமல்ல; சுற்றுப்புற கிராம மக்களும், "எங்கள் ஊரைக் காக்கும் மகேசன். அதனால் இவரை அப்புறப் படுத்த வேண்டாம்'' என்று எவ்வளவோ மன்றாடினார்கள்.

மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், ஆங்கிலேய அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அந்த கோவிலை அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். ஆனாலும் அதிகாரிகளின் முயற்சி தடைப்பட்டது. இங்கேதான் மகேசனின் மகிமை தாண்டவமாடியது.

முதலில் அவர்கள் சிவலிங்கத்தைத் தோண்டியெடுத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தோண்டத் தோண்ட சிவலிங்கத்தின் அடிப்பகுதி தெரியவில்லை.

இதனால் மிகவும் அதிர்ச்சியடைந்த ஆங்கிலேய அதிகாரிகள், "இவ்வளவு ஆழம் தோண்டி இதை அப்புறப்படுத்த முடிய வில்லையே' என்று வாயடைத்துப் போய், தோண்டும் பணியைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டுச் சென்றனர்.

சில நாட்களுக்குப்பிறகு மீண்டும் லிங்கத்தை அப்புறப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்தன. ஒருநாள் அதை முன்னின்று நடத்திய ஆங்கிலேய அதிகாரியின் கனவில் வந்த மகேசன், "நான் இங்கிருக்கும் மக்களைக் காப்பவன்; என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம்' என்று கூறி மறைய, அந்த அதிகாரி இதில் ஏதோவொரு தெய்வீக சக்தி இருக்கிறதென்று முடிவுசெய்து, உயரதிகாரிகளுக்கு விவரம் கூறி, இந்த இடத்தைவிட்டு அதன் பக்கத்தில் பாதை அமைக்குமாறு கூறினார். அவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.

அதிகாரிகள் இந்த கோவிலி-ருந்து சில அடிகள் தள்ளி இருப்புப் பாதையை அமைக்கத் தொடங்கினர். பாதைப் பணிகள் முடிந்த வுடன் அந்த ஆங்கிலேய அதிகாரி வந்து மகேசனுக்கு அபிஷேகம், பூஜைசெய்து தனது நன்றியைத் தெரிவித்துவிட்டுச் சென்றதாகக் கூறுகிறார்கள்.

இன்றுவரை இந்த இருப்புப்பாதை காவல் தெய்வமாகவும், ரயில்வே ஊழியர்கள், சுற்றுப்புற கிராம மக்களின் காவல் தெய்வ மாகவும் விளங்கிவருகிறார். பக்தர்கள் இதை லிங்கத்தடி கோவில் என்றழைக்கிறார்கள்.

ஆண்டுதோறும் சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமியன்று ரயில்வே ஊழியர்கள் அனைவரும் இணைந்து இங்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்து, ஏழு பானையில் பொங்கலிட்டு, மிக விமர்சையாக பௌர்ணமி விழாவை நன்றிக்கடனாக செலுத்திவிட்டுச் செல்கின்றனர் . அதேபோல் சுற்றுவட்டார கிராம மக்கள் அனைவரும் கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி சிறப்பாகக் கொண்டாடிவருகிறார் கள்.

இப்பகுதி கிராம மக்கள் தினந்தோறும் இக்கோவிலுக்கு வந்து வணங்கிச் செல்கின் றனர். அதிலும் பிரதோஷ தினங்களில் மாலை பிரதோஷ வேளையில் கிராம மக்கள் ஒன்றி ணைந்து மிகச் சிறப்பாக நந்தீஸ்வரருக்கும், லிங்கேஸ்வரர், வனதுர்க்கைக்கும் பூஜைசெய்கிறார்கள்.

இந்தக் கோவிலில் மனமுருகி வேண்டிக் கொண்டால் நம்மிடம் எந்த தீயசக்தியும் அண்டாமல் பார்த்துக்கொள்வார் இந்த லிங்கத்தடியார் என்று மெய்யன்பர்கள் சிலிர்ப்போடு கூறுகின்றனர்.

திருமணமாகாத ஆண்- பெண் இரு பாலாரும் பிரதோஷத்தன்று நெய்தீபமேற்றி சிவபெருமானுக்கு புத்தாடை அணிவித்து வழிபட்டால் மிகவிரைவில் திருமணம் கைகூடுமென்பது பக்தர்களின் நம்பிக்கை.

இங்கிருக்கும் ஆதிவேப்ப மரத்திற்கு வெள்ளிக்கிழமையன்று மஞ்சள் பூசி குங்குமம் வைத்து, அதில் ஒரு திருமாங்கல் யக் கயிறுகட்டி வழிபட்டால் திருமணத் தடைகள் யாவும் உடைந்து திருமணம் விமர் சையாக விரைவில் நடைபெறுவதாகவும் நம்பிக்கையோடு பக்தர்கள் கூறுகிறார்கள்.

சுற்றியிருக்கும் கிராமப் பொது மக்கள் வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ளும் போது இந்த லிங்கத்தடி கோவிலுக்கு வந்து, "நாங்கள் வெளியூர் செல்கிறோம். எங்கள் வீட்டையும் உடைமைகளையும் நீங்கள்தான் காவல் தெய்வமாய் காப்பாற்றவேண்டும்' என்று, லிங்கத்தடியாரிடம் வீட்டின் சாவியைவைத்து வணங்கி எடுத்துச் செல்கின்றனர். லிங்கத்தடியார் தங்கள் உடைமைகளைப் பாதுகாப்பதாக இப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இங்குள்ள வனதுர்க்கை மிக சக்தி வாய்ந்தவள். குழந்தை பாக்கியம் இல்லாத வர்கள் இந்த வனதுர்க்கைக்கு அபிஷேகம் செய்து, வெண்பொங்கல் படையலிட்டு அன்னதானம் செய்தால், மிக விரைவில் புத்திர பாக்கியம் கிடைப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

நந்தி சிலை பக்தர்களால் சில ஆண்டு களுக்குமுன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

மகேசனுக்கு பிரம்மாண்டமான கோவில் களைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் இங்கே மிக எளிமையாக- சக்திவாய்ந்த இந்தப் பரமனைக் காண வாருங்கள். வாழ்க்கையில் எல்லா வளமும் கிடைக்க லிங்கேஸ்வரர், வனதுர்க்கையை வணங்கி அருள்பெற்றுச் செல்லுங்கள்.

சிதம்பரம்- கோவிலாம்பூண்டி மினி பேருந்தில் கோவிலாம்பூண்டி வரலாம். கோவிலுக்கு அரை கிலோமீட்டர் தூரம் நடந்துதான் செல்லவேண்டும்.

இந்தக் கோவிலுக்கு அர்ச்சகர்கள் யாரு மில்லை. பக்தர்களே அபிஷேகம், ஆராதனை செய்யலாம்; அலங்காரமும் செய்யலாம். எதற்குமே தடையில்லை.

இக்கோவில் சம்பந்தமான வழி காட்டுதலுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய அலைபேசி எண்: 98425 50844

om010223
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe