மேல்சேவூர் அருள்மிகு ரிஷபபுரீஸ்வரர் திருக்கோவில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியி-ருந்து 17 கிலோமீட்டர், விழுப்புரத்திலிருந்து 48 கிலோமீட்டர், சென்னையி-ருந்து 151 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பாடல்பெற்ற திருத்தலமாகும்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் இத்தல இறைவனைப் போற்றி பதிகத்தில் குறிப்பிட்டுள்ளதால் இத்தலம் தேவார வைப்புத் தலமாக போற்றப்படுகிறது. பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட தலம்.
பொது தகவல்
வெளிச்சுற்றில் வலது புறத்தில் விநாயகர் சந்நிதியும், கிழக்கில் அறுபது கல்தூண்கள் தாங்கிய மகா மண்டபம். கொடிமரம், பலிபீடம், சிவபெருமானை நோக்கும் நந்தி. கருவறையின் வாயிற் கதவுகளுக்கு இருபுறமும் விநாயகர், முருகன். மேற்புறத்தில் நரசிம்மரின் கற்சிற்பம். கல்தூண்களின் கீழ்ப்பகுதியில் யாளி உருவம். கருவறை முன்னர் சுமார் ஒன்பதடி உயரத்தில் துவார பாலகர்கள். இவையனைத்தும் பல்லவ மன்னர்களின் கைவண்ணத்தில் உருவானது. கருவறையில் ரிஷப
புரீஸ்வரர், நாக குடையின் கீழ், லிங்கவடிவில் காட்சி அளிக்கிறார். உள் மண்டபத்தில் சிவன், சோமாஸ்கந்தர், நடராஜர், கணபதி, முருகன் போன்ற உற்சவர் இருக்கும் மாடம். பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி, சூரியன், ஏழு கன்னியர், சகஸ்ர லிங்கம், காசி விஸ்வநாதர், திருமால் சந்நிதி உள்ளது. பெரிய கூடத்தைக் கட
மேல்சேவூர் அருள்மிகு ரிஷபபுரீஸ்வரர் திருக்கோவில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியி-ருந்து 17 கிலோமீட்டர், விழுப்புரத்திலிருந்து 48 கிலோமீட்டர், சென்னையி-ருந்து 151 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பாடல்பெற்ற திருத்தலமாகும்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் இத்தல இறைவனைப் போற்றி பதிகத்தில் குறிப்பிட்டுள்ளதால் இத்தலம் தேவார வைப்புத் தலமாக போற்றப்படுகிறது. பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட தலம்.
பொது தகவல்
வெளிச்சுற்றில் வலது புறத்தில் விநாயகர் சந்நிதியும், கிழக்கில் அறுபது கல்தூண்கள் தாங்கிய மகா மண்டபம். கொடிமரம், பலிபீடம், சிவபெருமானை நோக்கும் நந்தி. கருவறையின் வாயிற் கதவுகளுக்கு இருபுறமும் விநாயகர், முருகன். மேற்புறத்தில் நரசிம்மரின் கற்சிற்பம். கல்தூண்களின் கீழ்ப்பகுதியில் யாளி உருவம். கருவறை முன்னர் சுமார் ஒன்பதடி உயரத்தில் துவார பாலகர்கள். இவையனைத்தும் பல்லவ மன்னர்களின் கைவண்ணத்தில் உருவானது. கருவறையில் ரிஷப
புரீஸ்வரர், நாக குடையின் கீழ், லிங்கவடிவில் காட்சி அளிக்கிறார். உள் மண்டபத்தில் சிவன், சோமாஸ்கந்தர், நடராஜர், கணபதி, முருகன் போன்ற உற்சவர் இருக்கும் மாடம். பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி, சூரியன், ஏழு கன்னியர், சகஸ்ர லிங்கம், காசி விஸ்வநாதர், திருமால் சந்நிதி உள்ளது. பெரிய கூடத்தைக் கடந்தால் வள்ளி, தெய்வானை சமேத முருகன் சந்நிதி.
அருகே கோவிலைக் கட்டிய கமல முனிவர்,சோழ தம்பதியர், துர்க்கை அம்மன். கீழேசண்டிகேஸ்வரர் சந்நிதி. வாகனக் கிடங்கைஅடுத்து நவகிரக சந்நிதி. தெற்கு நோக்கி மங்களாம்பிகை தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிறாள். அக்காலத்தில் இக்கோவிலை பாண்டி மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்கள் பராமரித்து வந்ததை செப்பேட்டில் அறியலாம்.
தல வரலாறு
சிவபிரானின் வாகனமான ரிஷபம் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் இறைவனுக்கு ரிஷபேஸ்வரர் என்று பெயர். சங்கராபரணி ஆற்றின் மேற்குக் கரையில் கிழக்கு முகமாய் இரண்டு ஏக்கர் பரப்பில் கோவில் அமைந்துள்ளது. இராஜகோபுரத்துடன் உள்ள மேற்கு வாசல் வழியேதான் கோவிலுக்குள் போய்வர முடியும். முன்னொரு காலத்தில் இவ்வூரில் வெள்ளம் வந்தபோதுஅம்பாளின் பாதத்தைத் தொட்டவுடன், பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று சங்கராபரணி நதி திசைமாறி ஓடியது. அன்றுமுதல்அம்பாள் இங்குள்ளவர்களுக்கு இஷ்ட தெய்வமானாள். அதுமுதல் ஆற்றை நோக்கிய கிழக்கு வாயில் மூடப்பட்டது. இன்றும்அம்பாள் இந்த அதிசயத்தைச் செய்வதாகச் சொல்கிறார்கள். அம்பாள் மங்களாம்பிகை என்ற பெயருடன் தெற்கு நோக்கிநின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் தனிச்சந்நிதியில் தாமரை பீடத்தில் அருளுகிறார். இறைவன் ரிஷபபுரீஸ்வரர் கிழக்கு நோக்கிக் காட்சிதருகிறார். தம் திருமேனியில் காளையின் குளம்பு வடிவுடன் உள்ளார். இவருடைய புராதனப் பெயர்தான் தோன்றி மகாதேவர் என்று கல்வெட்டுகளில் உள்ளது. ஜெயங்கொண்ட சோழமண்டலத்து உத்தம சோழ வளநாட்டு சேவூர் என்று இவ்வூர் குறிப்பிடப்பட்டு இப்போது மேல்சேவூர் என்ற பெயருடன் விளங்குகிறது. கி.பி. 898#ஆம் ஆண்டு முதலாம் ஆதித்த சோழனின் 27#ஆம் ஆண்டு கல்வெட்டு இங்குள்ளது. வீரமலை சுவாமிகள் என்பவரின் சீடர் பாபு நாயுடு அவர்கள் இயற்றிய மங்களாம்பிகை அம்மன் பாடல்கள் மற்றும் சேவூர் இராமசாமி நாயுடு அவர்கள் இயற்றிய மங்களாம்பிகைத் துதிப்பாடல்கள் என இரண்டு நூல்கள் அம்மனைப் புகழ்கின்றன. தலமரம் புன்னை. ஆறு சங்கராபரணியாறு.
திருவாதிரைத் திருவிழாவில் நந்தீஸ்வரரும், மங்களாம்பிகையும் மதியம் புறப்பட்டு வருவர். சிவனைக்கண்ட அம்மன், சினந்து பாதி வழியிலேயே தன் பிள்ளைகளுடன் கோவில் வந்தடைவார். தனக்கும், பரவை நாச்சியார்க்கும் ஏற்பட்ட பிணக்கைத் தீர்த்திட பெருமான் இரவில் இருமுறை தூது சென்ற நன்றியால் சுந்தரர்அம்மனிடம் தூது சென்று இருவரையும் சேர்த்து வைப்பார்.சுந்தரர் தூது சென்ற சிறப்பு ஆதிரைத் திருநாளில் இங்கு மட்டுமே நடைபெறுகிறது. இங்குள்ள ஆற்றை சங்கரன் தனது பரணியால் சுத்திகரித்ததால் "சங்கராபரணி' என்று அழைக்கப்படுகிறது.
வரலாறு-கல்வெட்டுகள்
இக்கோவில் பல்லவர் காலத்தில் (கி.பி. 850) கட்டப்பட்டதாகக் கூறப்பட்டாலும், கல்வெட்டுபடி பராந்தக சோழனால் (கி.பி. 928) கோவில் கட்டப்பட்டதாகவும், சோழர்கள் மற்றும் விஜயநகர நாயக்கர்களின் பங்களிப்பின்படி. இத்திருக்கோவி-ல் பல்லவர் காலக்கலவையான தமிழ் மற்றும் கிரந்த கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஆதித்ய சோழா-ஒ (கி.பி 898), இராஜராஜன்-ஒ (985-1014), இராஜேந்திரசோழர்-ஒ, குலோத்துங்க சோழன்-ஒ, சம்புராயர் மற்றும் விஜயநகர கால கல்வெட்டுகள் சுவர்களில் காணப்படுகின்றன. கல்வெட்டின்படி இத்தலம் ஜெயங்கொண்ட சோழமண்டலத்து உத்தம சோழவளந்து சேவூர் என்றும், இறைவனை தான் தோண்டீஸ்வரர் என்றும் அழைக்கின்றனர்.
கல்வெட்டுகள் முக்கியமாக நில தானம்,நிரந்தர விளக்கு எரிக்க கால்நடைகள் மற்றும்தினசரி பூஜைகள் பற்றி பேசுகின்றன என்பதுகல்வெட்டு ஆய்வாளர்களின் கருத்தாகும்.மேல்சேவூர் செப்பேடுஇச்செப்பேட்டில் மன்னனின் பெயர் குறிப்பிடப்படவில்லை. மன்னனின் ஆட்சிஆண்டோ அல்லது சகாப்தமோ குறிப்பிடவில்லை. சாருவாரி ஆண்டு, சித்திரை மாதம் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இதைக்கொண்டு இச்செப்பேடு எழுதப்பட்டு எத்தனை ஆண்டுகள் என கனிக்க முடியவில்லை.
ஆனால் இச்செப்பேட்டுச் செய்தியில்,அகோர சிவாச்சாரியார் என்பவர் குறிப்பிடப்பட்டுள்ளார். அகோர சிவாச்சாரியார், அதிவீரராம பாண்டியரின் தீட்சா குரு ஆவார். அதிவீரராம பாண்டியரின் காலம் 16-ஆம் நூற்றாண்டு ஆகும். அதாவது கி.பி. 1565. இதைக்கொண்டு பார்க்கும்போது இச்செப்பேடு எழுதப்பட்ட ஆண்டு 16-ஆம்நூற்றாண்டு ஆகும். அதாவது சுமார் 450 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் இச்செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள உலகமாதேவிபுரம் செட்டிகள் என்பவர்கள், திண்டிவனம்வட்டத்திலுள்ள, தற்பொழுது உலகாபுரம் என அழைக்கப்படும் ஊரைச் சேர்ந்த பெருமக்களாவர். இந்த இனத்தவர்கள் தற்பொழுது திண்டிவனம் வட்டம் உலகாபுரம், திண்டிவனம், செஞ்சி வட்டத்திலுள்ள மேலச்சேரி ஆகிய ஊர்களில் வாழ்கின்றனர்.
இச்செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளால் 16-ஆம் நூற்றாண்டில் சைவ ஆச்சாரியர்களும், வைணவ ஆச்சாரியர்களும் சமய வேறுபாடு பாராமல் ஆலயங்களில், வழிபாடு நடைபெற செவ்வனே பணியாற்றி வந்துள்ளதை அறியமுடிகிறது.
திருவிழா
ஆடி மாதத்தில் மூன்றாம் வெள்ளிக்கிழமையன்று சந்தன நிறைமண விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆடிகிருத்திகை, திருவாதிரை, பிரதோஷம் போன்ற நிகழ்வுகளும் நடைபெறுகிறது.
தல சிறப்பு
சிவன் சந்நிதியின்முன்பு சுமார் ஒன்பதடிஉயரத்தில் துவார பாலகர்கள் உள்ளது சிறப்பு.
நேர்த்திக்கடன்
பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.