ர்ச்சாரூபராய் பார்முழுதும் அருள்புரிந்துவரும் திருவரங்கன், திருமால்பாடி என்னுமிடத்தில் குளிர்ந்த ஏரிக்கரையின்மீது அமைந்த குன்றில், அனந்த சயன கோலத்தில் அடியார்களின் குறை களைந்திட அதியற்புத மாக அருளாட்சி நடத்துகிறார்.

பள்ளிகொண்ட கோலத்தில் அந்த பரந்தாமன் இங்கு எழுந்தருளக் காரணமென்ன?

வேதவியாசரின் மகனான, கிளிமுகம் கொண்ட சுகப்பிரம்ம ரிஷி இப்பகுதி வழியாக வரும்போது, விரஜாபுரி என்னும் (வைகுண்டத்தில் பிரவகிக்கும் புண்ணிய நதியின் பெயர் விரஜை) திருமால்பாடி குன்றின்மீது திருமாலை நோக்கித் தவமிருந்தார்.

tt

Advertisment

அவரது தவத்திற்கு இரங்கிய திருமால் தேவர்களுடன் கூடிய அரங்கநாதனாக தரிசனம் தந்து, "வேண்டும் வரம் யாது?'' என கேட்க, சுகர் தனக்கு முக்திப்பேறு வேண்டினார். அதற்கு அரங்க நாதர் அருகிலுள்ள தீர்க் காசலம் என்னும் நெடுமலை யில் தவம்புரியும்படியும், இராமாவதாரத்தின்போது இளவல் லட்சுமணன், அன்னை சீதாபிராட்டி மற்றும் அனுமன் புடைசூழ காட்சிதந்து முத்திப்பேறு தருவதாகவும் வாக்களித்து மறைந்தார்.

அதன்படி இக்குன்றில் தவத்தை முடித்து, அரங்கனின் கட்டளைப்படி நெடுமலையை அடைந்து, அங்கு மீண்டும் திருமாலைக் குறித்துத் தவமிருந்தார். பின்னர் இராமச்சந்திர பிரபுவைக்கண்டு வணங்கி, முக்தி நிலையை எய்தினார் சுகப்பிரம்ம ரிஷி.

இந்த புராணப் பின்னணியை மனதில்கொண்டு கி.பி. 1136-ஆம் ஆண்டு பராந்தக சோழனின் மகன் விக்கிரம சோழனால் இக்குன்றில் அரங்கநாதருக்கு ஆலயம் எழுப்பப்பட்டது. அதுமுதல் அடியார்களின் குறைகளை நீக்கி அற்புதமாக அருள்பா-த்து வருகிறார் ஸ்ரீரங்கநாயகி சமேத ஸ்ரீரங்கநாதப் பெருமாள்.

Advertisment

குளிர்ந்த ஏரி நீரில்பட்டு வீசும் தென்றலும், பூஞ்சோலைகளும், பசுமையான வயல்வெளிகளும் சூழ... அற்புதமான சிறு குன்றின்மீது கோவில் கொண்டுள்ளார் பெருமாள். 108 திவ்ய தேசங்களை நினைவூட்டும் 108 படிகளைக் கடந்து மேலே செல்ல, முத-ல் மேற்குப்புறமாக வசந்த மண்டபம் காணப்படுகின்றது. அடுத்ததாக மூன்று நிலை களும் ஏழு கலசங்களும் கொண்ட ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. முன் மண்டபத்தின் இருபுறமும் கருங்கல் திண்ணைகள். உள்ளே... மகா மண்டபத்தில் நேராக தென்திசையைப் பார்த்த படி ஸ்ரீ வீர ஆஞ்சனேயர் தரிசனமளிக்கின்றார்.

சற்று இடப்புறம் திரும்பினால் ஸ்ரீரங்கநாயகித் தாயார் அலங்கார ரூபத்தில், சர்வ மங்களங்களையும் அருளும் கடாக்ஷியாகத் திருவ ருள் பொழிகிறாள். அருகில் ஸ்ரீநரசிம்மரது தரிசனம். மகா மண்டபம் கடந்து பெரிய அந்த ராளத்தை அடைந்து, எழில் சுரக் கும் ஸ்ரீரங்கநாதப் பெருமாளை கண்குளிரக் கண்டு வணங்கு கிறோம். 15 அடி நீளமுள்ள ஐந்து தலைகள் கொண்ட ஆதிசேஷன்மீது, மரக்காலை தலைக்கு வைத்தபடி பெருமாள் அனந்த சயனத்தில் இருக்க... தலையருகே ஸ்ரீதேவி யும், கால்பகுதில் பூதேவியும் அமர்ந்து அரங்கனுக்கு சேவை புரிகின்றனர். திருப்பாதங் களின் அருகே பிரகலாதனும், சுகப்பிரம்ம ரிஷியும் தவமிருக்க, பரந்தாமனின் திரு முகமோ பக்தர்களைப் பார்த்தபடி இருக்கி றது. இந்த பூலோக வைகுண்டத்தின் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. நேரில் வந்து தரிசித்தால்தான் இந்த பேரானந்தம் புரியவரும்.

tt

தலைக்குக்கீழே இரண்டு விரல்களையும் உள்ளே மடக்கி, மூன்று விரல்களை வெளியில் காட்டியபடி, "யான் மூவுலகங்களையும் அளந்தவன்' என சுட்டிக் காட்டுகிறார். இவரது பார்வை பக்தர்களைப் பார்க்கும்வண்ணம் உள்ளது வெகு விசேடமாகும். பக்தர்களின் குறைகளைத் தனது நயனத்தினாலேயே தீர்த்தருளும் திறத்தை நிரூபிக்கிறார்.

இவருக்கு முன்னே உற்சவ மூர்த்தங்களாக ஸ்ரீதேவி, பூதேவி யுடனான சங்கு- சக்கரம் ஏந்திய ஸ்ரீ மஹாவிஷ்ணு சேவை சாதிக்கிறார்.

அரங்கனின் அதியற்புத தரிச னம் முடித்து, ஆலய வலம் வருகை யில் ஆண்டாளை தரிசிக்கிறோம்.

சந்நிதிக்கு வெளியே தனியாக சந்நிதிகொண்டு, அரங்கனைப் பார்த்துக் கூப்பிய கரங்களோடு நின்றபடி இருக் கும் பெரிய திருவடியான கருடாழ் வாரையும் தரிசிக்கிறோம்.

வடக்குப் புறமாக சிறுவாயில் ஒன்றுள்ளது. அதில் சில படிகள் வழியாகக் கீழே இறங்கினால் சுனை வடிவிலுள்ள தல தீர்த்த மான நாரத தீர்த்தத்தைக் காண்கி றோம். பாறைமீது நின்றபடி கீழே யுள்ள ஏரியையும், சுற்றியுள்ள இயற்கை அழகையும் கண்டு பெருமகிழ்ச்சியும் புத்துணர்ச்சி யும் அடைகிறோம். வானரக் கூட்டங்கள் பெருமளவில் உள்ளன. இங்கு சொர்க்க வாசலும் அமைந்துள்ளது.

சோழர்காலக் கல்வெட்டுகள் பெருமள வில் காணப்படுகின்றன. கி.பி. 1140-ல் முதலாம் குலோத்துங்கன், கி.பி. 1135-ல் சகலலோகச் சக்கரவர்த்தி இராஜநாராயண சம்புவராயர், கி.பி. 1529-ல் வீரசிங்கத்தேவரின் மகனான அச்சுத தேவமகாராயர் ஆகியோரால் திருப்பணி கள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட எல்லா வைணவ சம்பிரதாயங்களும் இங்கு விசேட மாக அனுசரிக்கப்படுகின்றன.

திருமண பாக்கியம், குழந்தைப்பேறு வேண்டுவோர் இங்கு அரங்கனுக்குத் திருமஞ்ச னம் செய்வித்து நற்பலன் அடைகின்றனர்.

அரசு வேலை மற்றும் வேலையில் இட மாற்றம் வேண்டுவோர் இங்கு வழிபட்டுப் பலனடைந்துள்ளனர். அயல்நாட்டு வேலை வாய்ப்பும் இவ்வரங்கனின் அருளால் பலருக்கும் கிடைத்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்திலுள்ள திருமால்பாடி திருத்தலம், செஞ்சி- சேத்துப் பட்டு பேருந்து சாலையிலுள்ள வளத்தியி-ருந்து தேசூர் செல்லும் வழியில், அருந்தோடு கிராமத்திற்கு அருகே அமைந்துள்ளது.

ஒருமுறையாவது அரங்கனைக் கண்டு சேவித்து, நம் அருவினைகள் களைந்து, அளவில்லா ஆனந்தம் பெறுவோம்.