ச்சையம்மன் கிராம தெய்வங்களில் ஒருவராக வழிபடப்படுபவள். இந்த அன்னையைக் குறித்து பல்வேறு கதைகள் உள்ளன.

Advertisment

dd

கங்காதேவி ஒரு மன்னனின் மகளாகப் பிறந்து பச்சையம்மனாக சிவபெருமானை வழிபட்டாள் எனவும்; பார்வதிதேவி சிவபெருமானின் இடபாகத்தில் இடம்பெற பச்சை வண்ணத்தில் தவம் மேற்கொண்டாள் என்றும்; சூரகோபன் என்னும் அசுரனை வதம் செய்யச் சென்றபோது பச்சை நிறத் தில் இருந்தாள் எனவும் கூறப்படுகிறது. மேலும், போரில் இறந்த கணவனுக்காக தீயில் பாய்ந்த மனைவிகளை பச்சையம்மனாக வழிபடுவதாகவும் கூறுகின்றனர்.

Advertisment

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பச்சையம்மன் ஆலயங்கள் உள்ளன. அது போல சமீபத்தில் மலேஷிய நாட்டில், தைபிங் என்னும் எழில் சூழ்ந்த இடத்தில் பிரம்மாண்ட பச்சையம்ம திருவுருவை நிறுவி கும்பாபிஷேகம் செய்திருக் கிறார்கள்.

மலேஷியா தமிழர்கள் அதிகம் வாழும் நாடு. அங்குள் பத்துமலை முருகனின் மிகப்பெரிய 140 அடி உயர முருகன் சிலை அனைவரும் அறிந்ததே. அதுபோல 72 அடி உயர அய்யனார் சிலையும், 52 அடி உயர முனீஸ்வரர் சிலையும் உண்டு. சமீபகாலமாக ஸ்ரீராகவேந்திரர் வழிபாட்டு மன்றங்களும் தியான பீடங்களும் பெருகிவருகின்றன. தமிழர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் தங்கள் குலதெய்வங்களை ஸ்தாபித்து வழிபடுவது மரபு. அவ்வகையில் உருவாக்கப்பட்டதுதான் இந்த பச்சையம்மனின் திருவுருவம்.

Advertisment

ff

சுமார் 72 அடி உயரத்தில் காண்போரை மெய்சிலிர்கவைக்கும் வண்ணம் திறந்த வெளியில் அமைந்துள்ளது பச்சையம்மன் விக்ரகம். கடந்த 21-8-2022 அன்று லட்சக் கணக்கான பக்தர்கள் திரள வெகுசிறப்பாக கும்பாபிஷேகம் நடந்தேறியது. பக்தர்களின் பக்திகோஷம் விண்ணைப் பிளந்தது.

உலகுக்கே தாயான அன்னையின் இந்த திருவடிவம், மலேஷியத் தமிழர்கள் வழங்கிய கொடை எனலாம்.

-எம்