டந்த 26 வருடங்களாக பல்வேறு சமூக சேவைகளை செய்து வரும், எளிமையான, ஆனால் பொது நற்பணிகள் செய்வதில் வலிமையான மனிநேய தொண்டர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் முதல் ஆன்மிக சொற்பொழிவாளர் சுகிசிவம், இராமாயணம், மகாபாரதம் பற்றி பல்வேறு மேடைகளில் பேசிவரும் நடிகர் சிவகுமார், கேப்டன் விஜயகாந்த் விருது மற்றும் ஏராளமான விருதுகள், பாராட்டு சான்றிதழ்களை பல்வேறு வி.ஐ.பிக்களிடம் பெற்றுவரும் கோவை உடையாம்பாளையம் "பாரத மாதா நற்பணி அறக்கட்டளை' நிர்வாக அறங் காவலர் கௌரிசங்கரை சந்தித்து பேசினோம்.

தனது குலதெய்வம் பேரருளால், குலதெய்வம் நிகழ்த்திய அற்புதத்தால்தான் உயிருக்கு ஆபத்தான விபத்தில் உயிர் பிழைத்தது பற்றியும், ஏழை எளியவர்கள், மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள், மருத்துவ செலவுகளுக்கு வசதியின்றி நிதி உதவி தேடும் ஏழைகளுக்கு உதவிசெய்து பாராட்டுகள் பெற்று "ஆத்ம திருப்தி' அடைந்துவருவது பற்றி நம்மிடம் விளக்கமாக கூறினார் கோவை கௌரிசங்கர்...

ss

"பொள்ளாச்சி அருகிலுள்ள செஞ்சேரி மலை எனும் கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து பள்ளிப்படிப்பு, பாலிடெக்னிக் படிப்பை நல்ல உள்ளங்களின் உதவியுடன் படித்து முடித்தவன் நான்.

செஞ்சேரி கிராம கோவிலான அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன்தான் எங்கள் குலதெய்வம். பல தலைமுறைகளாக நாங்கள் வணங்கிவரும் பல அற்புத சக்திகள்வாய்ந்த பெண் தெய்வம் தான் அங்காள பரமேஸ்வரி அம்மன். தினமும் நானும் எங்கள் குடும்பத்தினரும் மனைவி, மகனும் பக்தி பரவசத்துடன் எங்கள் குலதெய்வ அம்மனை மனமார வணங்கி வேண்டிய பிறகுதான் எங்கள் பணிகளை துவங்குவதை அன்று முதல் இன்றுவரை வழக்கமாக வைத்துள்ளோம்.

Advertisment

பத்துவயது முதலே எனக்கு பக்தி ஈடுபாடுகள் வந்துவிட்டது. அன்று முதல் இன்றுவரை நெற்றி நிறைய விபூதி பூசாமல் நான் இருந்தது இல்லை. சிறுவனாக பள்ளியில் படிக்கும்போதே நண்பர்களுடன் சேர்ந்து பணம் சேர்த்து கோவில் திருவிழாக்களில் இலவச நீர்மோர் பந்தல், தண்ணீர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு வழங்கி மகிழ்ந்து இருக்கிறேன்.

கோவில்களை சுத்தப்படுத்தும் திருப்பணிகளிலும் ஈடுபட்டு இருக்கிறேன். அம்மனிடம் எனக் கும் என் குடும்பத்திற்கும் மட்டும் சாமி கும்பிடாமல் ஏழை எளியோர் நலமாக வாழ உதவும் சக்தி, வலிமை, வசதியை எனக் கும் எனக்கு உறுதுணையாய் சேவை செய்ய வருபவர்களுக்கும் தருவாய் தாயே' என்றே வேண்டுகிறேன்..

நான் படித்து முடித்து வேலை தேடிய நேரத்தில் ஓர் பயங்கர வாகன விபத்தில் சிக்கி, இடுப்பிற்கு கீழ் செயல் இழக்கும் நிலைக்கு ஆளானேன். நான் சற்றும் எதிர்பாராத அந்த விபத்தால் எனது லட்சியத்தை செய்ய முடியாமல் போய் விட்டதே என நினைத்து வருந்தினேன்.

Advertisment

என் குடும்பமும், நண்பர்களும், நிலை குலைந்தார்கள். என்னை காப்பாற்று என்று மன்றாடி எங்கள் குலதெய்வத்தின் பாதத்தில் பரிபூரண சரணாகதி அடைந்தேன்.

டாக்டர்கள் எனக்கு அறுவை சிகிச்சை செய்தாலும் கூட இனி இவர் நடக்க வாய்ப்பில்லை என்று கைவிரித்து விட்டனர்.

ஆறுமாத காலம் படுத்த படுக்கையில் தீராத வலியால் துடிதுடித்தேன். என் குலதெய்வம் மட்டுமன்றி இஷ்ட தெய்வங்களான சீரடி சாய்பாபா, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அருளையும் நானும் என் குடும்பத்தினரும் வேண்டி பக்திப் போராட்டம் நடத்தினோம்.

எங்கள் குலதெய்வ, இஷ்ட தெய்வ வேண்டுதல்கள் என்னை கைவிடாமல் டாக்டர்களும் மற்ற அனைவரும் வியக்கும்படி, தெய்வ அற்புதம் நிகழ்ந்து நான் பூரண குணம் அடைந்து நடக்க துவங்கினேன்.

ஆனால் கடினமான வேலை, கனமான பொருட்களை தூக்க முடியாத நிலை வந்ததால் "கொரியர் நிறுவனம்' ஒன்றில் அலுவலக பணி செய்யும் வேலை எங்கள் குலதெய்வ அம்மன் அருளால் கிடைத்து, எனது லட்சிய நோக்கமான சமூக சேவைகளை ஆர்வத்துடன், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சிறப்பாக கடந்த 26 ஆண்டுகள் செய்து தொடர்வதற்கும் அம்மன் அருளே காரணம்.

எங்கள் குலதெய்வ அங்காள பரமேஸ்வரி அருளால், "இவரா... இந்த சாதாரண எளிய வாழ்வு நடத்தும் மனிதரால் எப்படி இவ்வளவு பெரிய, நிறைய, நிறைவான சமூக சேவைகளை, நற்பணிகளை செய்ய முடிகிறது?' என்று பலரும் பாராட்டும்படி என் சமூக சேவைகளை தொடர்ந்து செய்துவருகிறேன்.'

நானும் எனது நண்பர்களும் இணைந்து மாலை நேரங்களில் பல்லாயிரக்கணகான படிப்பறிவில்லாத முதியவர்கள், தொழிலாளர் களுக்கு அறிவொளி இயக்கத்துடன் இணைந்து கல்வி வெளிச்சம் தந்துள்ளோம்.

இதுவரை பல்லாயிரக்கணக்கான ஏழை மாணவ- மாணவிகளுக்கு கல்வி பயில இலவச நோட்டு புத்தகங்கள், கல்வி உதவி தொகைகளை வழங்கி அவர்களை சமுதாயத்தில் உயர்ந்த மாணவர்களாக உருவாக்கியுள்ளோம்.

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறையை கையில் எடுத்து பல குழந்தை தொழில்புரியும் மாணவர்களை கண்டறிந்து கல்வி பயில வைப்பதுடன், தாய்- தந்தையை இழந்த பிள்ளைகளை எங்கள் பொறுப்பில் கோவையிலுள்ள ஆதரவற்ற இல்லங்களில் சேர்த்தும் கல்வி பயில வைத்தும் இன்று எங்கள் பகுதியில் குழந்தை தொழிலாளரே இல்லாத நிலையை உருவாக்கி உள்ளோம்.

ஆதரவற்ற இல்லங்களில் வாழும் குழந்தைகள், முதிய வர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உணவு, உடை, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்களை வழங்கு வதுடன் எங்கள் அறக் கட்டளையின் ஆண்டு விழாவை தீபாவளி பண்டிகையாக மாற்றி இன்றுவரை ஆதர வற்ற பிள்ளைகளோடு வருடந்தோறும் கொண் டாடி அவர்களுக்கு ஓர் உறவை ஏற்படுத்தி வருகின்றோம்.

தெருவோரம் ஆதர வற்று சுற்றித்திரியும் முதிய வர்கள், மனநிலை பாதிக் கப்பட்டவர்களை மீட்டு ஆதரவற்றோர் இல்லங் களில் சேர்த்து எங்கள் பொறுப்பில் பராமரித்து வருகின்றோம்.

சுற்றுப்புறத்தை சீர் கெடுக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி பிளாஸ்டிக் பயன்பாட்டை எங்கள் பகுதியில் ஒழித்துள் ளோம்.

சுயவேலைவாய்ப்பு, பொதுமருத்துவ முகாம், கண் சிகிச்சை முகாம் நடத்தியும், திருமண நிதியுதவி, இதய நோயாளிக்கு நிதியுதவி, முதியோர், விதவை உதவித்தொகை உள்ளிட்ட மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு நேரடியாக பெற்றுத் தருகிறோம்.

இரத்ததானம் குறித்த அவசியத்தை வலியுறுத்தி இரத்ததான முகாம் நடத்தி பல இளைஞர்களை பங்குபெற வைப்பதுடன் நானும் இதுவரை 27 முறை இரத்ததானம் செய்து ஆபத்தான நிலையில் இருந்த பல உயிர்களை காப்பாற்றியுள்ளேன்.

குடியரசு, சுதந்திர தின விழாக்களை பண்டிகை திருநாள்போல் பேச்சு, கட்டுரை, விளையாட்டு போட்டிகள் நடத்தி பகுதிவாழ் மாணவ- மாணவியரை பங்குபெற வைத்து பரிசு வழங்கி தேசபக்தியை இளைய சமுதாயம் அறிந்திட செய்துவருகின்றோம்.

குலதெய்வம் அருளோடு குன்றாத சமூகநல நற்பணிகள் தொடர்ந்து செய்து மேலும் பல உயர் விருதுகள், பாராட்டுகளை பெற கௌரிசங்கரை வாழ்த்தி விடை பெற்றோம்.

கோவை பாரதமாதா நற்பணி இயக்கத் திற்கு உதவ விரும்புவோர் தொடர்பு கௌரி சங்கர் கைபேசி எண்: 70922 36848