பதின்மூன்றாவது சர்க்கம்
கொல்லப்பட்ட குபேரனின் தூதன் (அரக்கர்கள் வரலாற்றை இராமபிரானுக்கு அகத்தியர் கூறிவருகிறார்.)
சிலகாலம் சென்றது. பிரம்மதேவனால் அனுப்பப்பட்ட உறக்கத்தின் தேவதையானவள், கும்பகர்ணனுள் புகுந்து அவனை ஆட்கொள்ளத் தொடங்கினாள்.
அச்சமயம் அவன் சிம்மாசனத்தில் வீற்றிருந்த தசக்ரீவனைப் பார்த்து, "அரசே, உறக்கம் என்னை மிகவும் தழுவுகிறது. எனவே நான் உறங்குவதற்கான இடத்தை ஏற்படுத்திக்கொடுங்கள்'' என்று கேட்டான். உடனே தசக்ரீவன் விஸ்வகர்மாவைப் போன்ற கட்டட வல்லுநர்களை அழைத்து, கயிலை போன்ற மாளிகையை கும்பகர்ணனுக்கு அமைத்துக்கொடுக்கும்படி ஆணையிட்டான். இரண்டு யோசனை நீளம், ஒரு யோசனை அகலம் உள்ளதும், பார்த்து பிரமிக்கத்தக்கதும், தூய்மையானதும், எவ்வித குற்றங்கள் அற்றதுமான மாளிகையை அவர்கள் கட்டி முடித்தனர்.
எல்லா இடங்களிலும் தங்கத்தால் இழைக்கப்பட்ட அழகுமிகு ஸ்படிகத் தூண்கள், வைரங்கள் பதிக்கப்பட்ட படிக்கட்டுகள், எங்கும் இனிய ஒலியெழுப்பும் மணிகள், யானைத் தந்தத்தினாலான வாயில், வைரம், ஸ்படிகங்கள் கொண்டு அமைக்கப்பட்ட மேடைகள் என, மனதைக் கவரும் வண்ணம், எல்லா வசதிகளும் நிரம்பியதாக- எப்போதும் சுகத்தை அளிக்கக்கூடிய- புனிதமான மேருமலையின் குகைபோன்ற மாளிகையை தம்பி கும்பகர்ணனுக்காக அமைத்துக்கொடுத்தான் அரக்கனான இராவணன்.
பெரும் பலம்பொருந்திய கும்பகர்ணன் அந்த மாளிகையில் உறங்கத் தொடங்கினான்.
பல்லாயிரம் ஆண்டுகள் உறங்கியும்கூட அவனது துயில் கலையவில்லை. இவ்வாறு அவன் உறங்கிக்கொண்டிருந்த காலத்தில், (தசக்ரீவனுக்கு அறிவுரை சொல்ல கும்பகர்ணனைத் தவிர வேறு எவராலும் இயலாது; அவன் உறங்கிக்கொண்டிருந்த காரணத்தால்) தேவர்கள், முனிவர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள் என பலரையும் இராவணன் கொன்றான்.
மனதைக் கொள்ளைகொள்ளும் தேவர் களின் நந்தவனங்களுக்குச் சென்று மிகவும் கோபத்துடன் அவற்றை அழித்தான். யானைகள்போல ஆறுகளில் இறங்கி விளையாடிக் கலக்கினான். பெருங்காற்றுபோல் மரங்களைப் பிடுங்கி வீசியெறிந்தான். வஜ்ராயுதம்போல மலைகளைத் தகர்த்தான். அவனது மூர்க்கத்தனமான செயல்களை அறிந்த குபேரன், அரக்கனா னாலும் அறம் தெரிந்தவனாதலால், தனது குலப்பெருமையை எண்ணிப் பார்த்தான். இராவணனுக்கு தான் அண்ணன் எனும் கடமையை உணர்ந்து, அவனுக்கு நன்மை செய்யும்பொருட்டும் தன் பாசத்தை வெளிப் படுத்தும் வகையிலும் ஒரு தூதனை இலங் கைக்கு அனுப்பிவைத்தான்.
அந்தத் தூதன் இலங்கை நகர் சென்று விபீஷ ணனை முதலில் சந்தித்தான். அவனை முறைப் படி வரவேற்ற விபீஷணன், உற்றார்- உறவினர் களின் நலம

அந்தத் தூதன் இலங்கை நகர் சென்று விபீஷ ணனை முதலில் சந்தித்தான். அவனை முறைப் படி வரவேற்ற விபீஷணன், உற்றார்- உறவினர் களின் நலம்குறித்து கேட்டுவிட்டு, அவன் அங்கு வந்ததற்கான காரணத்தைக் கேட்டறிந் தான். பின்னர் அவனை அழைத்துக்கொண்டு அரியணையில் வீற்றிருந்த தசக்ரீவனிடம் சென்று தூதனை அறிமுகப்படுத்தினான்.
கம்பீரமாக வீற்றிருந்த அரசனைக் கண்டதும், "மன்னருக்கு வெற்றி உண்டாகட் டும்'' என்று வாழ்த்துக் கூறி அமைதியாக நின்றான் தூதன். பின்னர், மிகச்சிறந்த அழகான ஆசனத்தில் அமர்ந்திருந்த தசக்ரீவனைப் பார்த்து தூதன் கூறத் தொடங்கினான்:
"மன்னரே, உங்களது அண்ணன் குபேரன் கூறியனுப்பிய செய்தியை அப்படியே கூறுகிறேன்.
நம் இருவருடைய பரம்பரையும் ஆசார அனுஷ்டானங்களும் ஒன்றானவை.
மேன்மை மிக்கவை. இதுவரை நீங்கள் செய்த கொடுமைகள் மிகவும் அதிகம்! செய்தது போதும். இனிமேலாவது நல்வழியில் சென்று புண்ணியத்தைத் தேடிக் கொள்ளுங்கள். நற்செயல் கள் செய்தால் நன்மை விளையும். தேவலோக வனங்களை நீங்கள் பாழாக்கியதை நான் நேரிலேயே பார்த்தேன். முனிவர்கள் உங்களால் கொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டேன். அரசரே, அதனால் கோபம்கொண்ட தேவர்கள் உம்மைப் பழிவாங்கும் முயற்சியில் இறங்கிருக்கிறார்கள். நானும் பலமுறை உம்மால் அவமானப்படுத்தப் பட்டிருக்கிறேன். என்றா லும் ஒரு சிறுவன் தவறு செய்தால் அதை அவனது உற்றாரும் உறவினர் களும் மறந்து அவனைக் காப்பாற்றவேண்டும்.
நான் ஒருமுறை, புலன் களையடக்கி சிவ பெருமானைக் குறித்து கடுந்தவம் செய்வதற்காக எனக்குள் பல கட்டுப் பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு, அறவழியில் செல்லும் நோக்குடன் இமயமலைச் சாரலுக்குச் சென்றேன். அங்கே யாரோ இருவர் இருப்ப தாக உணர்ந்தேன். அவர் கள் பார்வதியும் பரமேஸ் வரனுமே என்பது எனக்குத் தெரியாது. விதியின் விளைவால், யார் அங்கிருக்கிறார் கள் என்பதைத் தெரிந்துகொள்ள எனக்கு ஆவல் மிகுந்தது. எனக்குள் வேறெந்த எண்ணமும் இல்லை. இடக்கண்ணைத் திறந்து பார்த்தேன். நிகரே இல்லாத அழகான தோற்றத் துடன் ருத்ராணி அங்கிருந் தாள். அந்த தேவியின் அளவற்ற தெய்வீக சக்தியால் எனது இடக் கண் எரிந்துவிட்டது. வலக்கண் துகள்களால் மறைக்கப்பட்டதுபோல பழுப்புநிறமாகி விட்டது.
பின்னர் அந்த மலையின் இன்னொரு பகுதிக்குச் சென்று மௌனவிரதம் மேற்கொண்டு 800 ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தேன். அந்த விரதம் முழுமையாக நிறைவேறியவுடன் சங்கரனார் எனக்கு தரிசனம் தந்தார். உவகை பொங்கிய மனத் துடன், "நற்பண்புகள் உடையவனே. அறம் தெரிந்தவனே. உனது தவத்தினால் மகிழ்ந்தேன். செல்வத்திற்குத் தலைவனாக விளங்குபவனே, இந்த விரதம் முன்னர் என்னால் அனுஷ்டிக்கப்பட்டது. அதை இப்போது நீயும் கைக்கொண்டாய். இத் தகைய கடும் விரதத்தை மேற்கொள்ள மூன்றாவ தாக ஒருவர் நிச்சயமாக இல்லை. செய்வதற்கு அரிதான இந்த விரதத்தை சில காலத்திற்குமுன்பு உலகிற்கு வெளிப்படுத்தி னேன். நீ விரும்பினால் எனது நண்பனாக இருக்கலாம். கடுந்தவம் செய்து என்னையே வென்றுவிட்டாய். எனவே, நீ எனக்கு நண்பனாக இருக்கத் தகுதியுடையவன். பார்வதியின் தெய்வீக சக்தியினால் எரிந்துபோன இடக்கண்ணோடு நீ இருப்பதால், ஏகாக்ஷிபிங்கலன் (மஞ்சள் நிற ஒற்றைக் கண்ணுடையவன்) என்னும் பெயருடன் விளங்குவாயாக' என்று கூறினார்.
இப்படி சிவனுடைய நட்பைப் பெற்று அவருடன் அவரிடம் விடைபெற்று இருப்பிடம் திரும்பினேன். வந்ததும் நீ செய்த பாவச் செயல்கள் பற்றிக் கேள்வியுற்றேன். பரம்பரைக்கு இழிவு தரும் தர்மத்திற்குப் புறம்பான செயல்களை உடனே நிறுத்துக. தேவர்களும் முனிவர்களும் உங்களை அழிப்பதற்கான வழிகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.''
இவ்வாறு குபேரன் கூறியனுப்பியதைக் கேட்ட தசக்ரீவனின் கண்கள் கோபத்தால் சிவந்தன. கைகளைப் பிசைந்துகொண்டு பற்களைக் கடித்த அவன் கூறத் தொடங்கி னான்:
"தூதனே, நீ கூறிய செய்திகளின் உட்பொருளை நான் புரிந்துகொண்டேன். இனி நீ உயிரோடு இருக்கவேண்டியவன் அல்ல. உன்மூலம் எனக்கு செய்தி அனுப்பிய சகோதரனும் இனி இருக்கமாட்டான். முட்டாளே, என் நலனுக்கான செய்தியை அவன் சொல்லவில்லை. பரமேஸ்வரனுடைய நண்பன் அவன் என்று கூறினாய் அல்லவா? மிரட்டல் தொனி கொண்ட அந்த சொற்களை என்னால் சகித்துக்கொள்ள முடியாது. அண்ணனைக் கொல்லக்கூடாது என்னும் காரணத்தால் இதுவரை அவனை விட்டுவைத்தேன். இப்போது அவனது சொற்களைக் கேட்டதும், எனது வலிமையால் மூவுலகங்களையும் வெல்லவேண்டுமென்னும் உறுதியான எண்ணம் என் மனதில் தோன்றுகிறது. இந்திரன், எமன், வருணன், குபேரன் ஆகிய நான்கு லோக பாலகர்களில், குபேரன் என்னும் ஒருவன் செய்த குற்றத்திற்காக, இந்த நேரத்திலேயே அந்த நால்வரையும் எமனுடைய இல்லத்திற்கு அனுப்புகிறேன்.''
இவ்வாறு கூறிய இலங்கேஸ்வரன், தூதனைக் கத்தியால் வெட்டிக் கொன்றான்.
அவனது உடலை அரக்கர்கள் உண்பதற் காகக் கொடுத்துவிட்டான். அதன்பின்னர் குருமார்களின் வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டு தேரில் ஏறிய இராவணன், மூவுலகங்களையும் வெற்றிகொள்ளும் ஆவலுடன் குபேரனின் இருப்பிடத்தை நோக்கி முதலில் சென்றான்.
பதினான்காவது சர்க்கம்
யக்ஷர்- அரக்கர் போர் வலிமை மிக்கவர்கள் என்னும் எண்ணத்தில் எப்போதும் ஆணவத்துடன் இருந்த மகோதரன், பிரஹஸ்தன், மாரீசன், சுகன், ஸாரணன், போர்செய்வதில் மிகுந்த விருப்பமுடையவனான தூம்ராக்ஷன் ஆகிய ஆறு அமைச்சர்களுடன், உலகத்தையே எரித்துவிடும் கோபம் கொண்டவனாக தசக்ரீவன் சென்றான். காடுகள், நதிகள், மலைகள், பற்பல நகரங்கள் என அனைத் தையும் கடந்து வெகுவிரைவாக கயிலை மலையை அடைந்து முகாமிட்டான்.
போர் தொடுக்கும் தீர்மானத்துடன் இராவணன் வந்து தங்கியிருக்கிறான் என்பதை யறிந்த யக்ஷர்கள், அவன் தங்கள் மன்னன் குபேரனின் சகோதரன் என்பதையெண்ணி, இராவணனை எதிர்த்துநிற்க இயலாதவர் களாக இந்த விஷயத்தைக் குபேரனிடம் கூறுவதற்காகச் சென்றனர். குபேரனிடம் இராவணன் வந்திருக்கும் நோக்கத்தை எடுத்துரைத்தார்கள். குபேரன் போர்புரிய அனுமதி கொடுக்க, அவர்கள் மகிழ்ச்சியுடன் புறப்பட்டார்கள். யக்ஷ மன்னனுடைய படைகள் கடல்போல் பெருகத் தொடங்கின. பெரும் படைகள் குவிந்ததால் அந்த மலையே நடுக்கம் கண்டது.
தொடர்ந்து யக்ஷர் படைகளுக்கும் அசுரர்களுக்குமிடையே கடும்போர் ஆரம்பமாயிற்று. யக்ஷர்களின் கடும் தாக்குதலால் தசக்ரீவனின் அமைச்சர்கள் மிகுந்த துயரமடைந்தனர்.
தன் படை தோல்வியைநோக்கிச் செல்வதைக் கண்ட தசக்ரீவன், பலமுறை சிம்மநாதம் எழுப்பி மிகுந்த கோபத்துடன் எதிரிப்படையினூடே புகுந்து ஓடினான்.
அவனுடைய பராக்கிரமம் படைத்த அமைச் சர்கள் உற்சாகமடைந்து, ஒவ்வொருவரும் தனித்தனியே ஆயிரம் யக்ஷர்களுடன் போர் புரிந்தனர்.
யக்ஷர்களது கதாயுதங்கள், உலக்கைகள், வாள்கள், வேல்கள், எறியாயுதங்கள் போன்றவற்றால் தாக்கப்பட்டபோதிலும், அந்த படையினுள் தசக்ரீவன் புகுந்து சென்றான். சூல்கொண்ட மேகங்கள் கனமழையைப் பொழிவதுபோல எதிரிகளின் ஆயுதங்களால் தாக்கப்பட்டு, மூச்சுவிடக்கூட நேரமின்றி தசக்ரீவன் முன்னேறிச் செல்லாமல் தடுக்கப்பட்டான்.
மழைப்பொழிவினால் இடைவிடாமல் நீராட்டப்பட்டாலும் கொஞ்சமும் கலங்காத பெரிய மலையைப்போல, யக்ஷர்களது சஸ்திரப் பொழிவினால் தாக்கப்பட்ட போதிலும் இராவணன் கலங்கவில்லை. காலதண்டம் போன்ற கதாயுதத்தைத் தன் கரத்தில் ஏந்தி எதிரிகளின் படையில் புகுந்து ஏராளமானவர்களை எமலோகத்திற்கு அனுப்பினான். காற்றின் வேகத்தால் வலிமைபெறும் நெருப்பைப் போன்றவன், சிதறிக்கிடக்கும் துரும்புகள் போன்றும், உலர்ந்த கட்டைகள் சிதறிக் கிடப்பதுபோலவும் இருந்த யக்ஷர் படையை எரித்து அழித்தான்.
இராவணனுடைய அமைச்சர்களான மகோதரன், சுகன் ஆகியோரால் யக்ஷர்கள் பலர் கொல்லப்பட்டனர். எஞ்சியிருந்தவர்கள் சிலரே. படைக்கலங்களால் தாக்கப்பட்ட யக்ஷர்கள் பலர் போர்க்களத்தில் விழுந்து கிடந்தனர். கோபத்துடன் உதட்டைக் கடித்தவாறு போர் செய்யும்போது இருந்த நிலையில் தரையில் சாய்ந்துகிடந்தார்கள். களைத்துப்போன யக்ஷ வீரர்கள் ஒருவரை யொருவர் கட்டிக்கொண்டனர். அவர்கள் கைகளிலிருந்து ஆயுதங்கள் நழுவிக் கீழே விழுந்தன. ஆற்றில் பெருவெள்ளம் பெருக்கெடுத்து வரும்போது கரைகள் சரிந்துவிழுவதுபோல அவர்கள் சோர்ந்து விழுந்தார்கள்.
கொல்லப்பட்டு மேலுலகம் செல்பவர்கள், போர்க்களத்தில் போர்புரிபவர்கள், இவற்றை காண்பதற்காக வந்து குழுமியிருந்த கணக்கிலடங்கா முனிவர்கள் ஆகியோரது கூட்டத்தால் வானத்தில் இடைவெளி என்பதே இல்லாமல் போயிற்று. பெரும் வலிமை வாய்ந்த யக்ஷர் தலைவர்கள் தறிகெட்டு ஓடுவதைக்கண்டு, அவர்களது மன்னனான குபேரன் வேறு சில தலைவர் களை போர்முனைக்கு அனுப்பினான்.
இதற்கிடையில் ஏராளமான வாகனங் கள் மற்றும் படைவீரர்களுடன் ஸம்யோதகண்டகன் என்னும் பெரு வீரனான யக்ஷன் அங்கு வந்துசேர்ந்தான். அவன் சக்ராயுதத்தால் தாக்கும் மகாவிஷ்ணுவைப்போல மாரீசனைத் தாக்கினான். அதைத் தாங்க இயலாத மாரீசன், தேவலோகத்தில் புண்ணியப் பலனை முழுமையாக அனுபவித்து முடித்துவிட்டவர்கள் மண்ணுகத்திற்குத் தள்ளிவிடப்பட்டு விழுவதைப்போல, அந்த மலைமீதிருந்து தரையில் விழுந்தான்.
சிறிது நேரம் சென்றபின் தன்னுணர்வு வந்து சற்று களைப்பாறிய மாரீசன், தன்னைத் தாக்கிய யக்ஷனுடன் போர்புரியத் தொடங்கினான். அந்த யக்ஷன் வலிமையற்று அங்கிருந்து ஓடிவிட்டான்.
பின்னர் தசக்ரீவன், தங்க வேலைப்பாடுகள் செய்யப்பட்டு, வைடூரியம், வெள்ளி போன்றவை இழைக்கப்பட்ட தோரணவாயிலைக் கடந்து காவலர்களால் காக்கப்படும் எல்லையைமீறி உள்ளே புகுந்துசென்றான். அவன் நுழைவதைக் கண்டு வாயிற்காவல னான சூரியபானு என்பவன் தசக்ரீவனைத் தடுத்து நிறுத்தினான். ஆனால் அதையும் மீறி தசக்ரீவன் உள்ளே புகுந்தான்.
தன்னைப் பொருட்படுத்தாமல் உள் நுழைந்த அரக்கனைக் கண்டு அந்த யக்ஷன், ஒரு தூணைப் பிடுங்கி அவன் மீது எறிந்தான். அந்த பெருந்தூணின் தாக்குதலால் இராவணனின் உடலில் ரத்தம் பெருக்கெடுத்தது. அப்போதும், செந்நிறமான தாதுக்களைப் பொழியும் மலையைப்போல அவன் நிலைகுலையாமல் நின்றான். ஒரு மலைச்சிகரம்போல் விளங்கிய மிகப்பெரிய தூணினால் தாக்கப்பட்டபோதிலும், பிரம்மாவிடம் பெற்றிருந்த வரத்தின் மகிமையால் தசக்ரீவன் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை. அவன் அதே தூணையெடுத்து அந்த யக்ஷனைத் திரும்பத் தாக்க, அவன் உடல் சாம்பலாகிப் போனது. பிறகு அவன் கண்களில் படவே இல்லை.
தசக்ரீவனின் நிகரற்ற பேராற்றலைக் கண்ட யக்ஷ வீரர்கள் அனைவரும் அவ்விடத்தைவிட்டு ஓடிப்போயினர்.
அவ்வாறு ஓடிய பலர் அச்சத்தில் ஆற்றில் விழுந்தார்கள். குகைகளில் பதுங்கினர். போர்க் கருவிகளை உதறிவிட்டு, போரிடும் எண்ணத்தை விடுத்து முகம் வெளிறி ஒடுங்கினார்கள்!