வால்மீகி மகரிஷி அருளிய ஸ்ரீமத் இராமாயாயண உத்தரண்டம்! தொகுப்பு : மலரோன்(11)

/idhalgal/om/order-srimad-ramayana-inspired-by-valmiki-maharishi-gallery-malaron-11

22-ஆவது சர்க்கம் எமனை வெல்லுதல்

மனது படைவீரர்களை வென்ற இராவணன் வெற்றி முழக்கம் செய்தான். அந்தப் பேரோசையைக் கேட்டதும் சூரியனின் மகனான எமன், எதிரி வெற்றிபெற்றுவிட்டான்;

தனது படை தோற்றுவிட்டது என்பதை அறிந்துகொண்டான். தன் வீரர்கள் கொல்லப்பட்டதால் கோபத்தால் கண்கள் சிவக்க, தேரோட்டியிடம் உடனே ரதத்தைக் கொண்டுவருமாறு உத்தரவிட்டான்.

அவன் மிகப்பெரிதான தெய்வீக ஆற்றல்கொண்ட தேரை எமன் முன்பாகக் கொண்டுவந்து நிறுத்தி னான். வீரம் பொருந்திய எமன் தேரில் ஏறினான். மூவுலகங்களையும் அழித்தொழிக்கும் மிருத்யு தேவதை பாசத்தையும் உலக்கை யையும் ஏந்திக்கொண்டு எமன் எதிரில் நின்றது. எமனது ஆயுதமான காலதண்டம் பேரொளிகொண்ட உருவமேற்று எமனருகில் நின்றது. எமனுடைய இருபுறங்களிலும் அழிவற்ற காலபாசமும், நெருப்புக்கு ஒப்பான தீண்ட இயலாத தன்மையுடைய உலக்கையும் உருவமேற்று நின்றன.

ff

அனைத்துயிர்களுக்கும் பேராபத்தை ஏற்படுத்தும் காலதேவன் கோபம் கொண்டதைப் பார்த்து மூவுலகங்களிலும் குழப்பம் நிலவியது. வானுலகோர் நடுங்கினார்கள். பிறகு செவ்வண்ணம் கொண்ட குதிரைகளைத் தட்டிவிட்டான் தேரோட்டி. அச்சமூட்டும் ஒலியை ஏற்படுத்திய வண்ணம் தேரானது இராவணன் இருந்த இடம் நோக்கிச் சென்றது.

இந்திரனுடைய குதிரைகளுக்கு ஒப்பான வீரமும், மன வேகத்திற்கு ஒப்பான வேகமும் கொண்ட அந்த குதிரைகள் போர் முனைக்கு மிக விரைவாக எமனைக் கொண்டு சேர்த்தன. கோரமான தோற்றத்துடன் மிருத்யு தேவதையுடன் வரும் தேரைக் கண்டதுமே இராவணனின் அமைச்சர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

ஆனால், உலக மக்களுக்கு பெரும் பயத்தை ஏற்படுத்தும் அந்த தேரைக்கண்டு இராவணன் மனம் தளரவோ அச்சப்படவோ இல்லை. எமன் இராவணனை நெருங்கி வல்லயங்கள், வேல்களைக்கொண்டு கோபத்து டன் அவனது உயிர்நிலைகளில் தாக்கினான்.

உயிர் நிலைகளில் தாக்கப்பட்ட இராவணன் மலை பிளந்ததுபோன்ற காயங்களுடன் செயலற்று நின்றான். சிறிது நேரத்தில் தன்னுணர்வு பெற்ற அவன், எமனது தேர்மீது மேகங்கள் மழை பொழிவதுபோல அம்புமழை பொழிந்தான். பின்னர் இராவணனுடைய அகன்ற மார்பில் எல்லையற்ற ஆற்றல்கொண்ட நூற்றுக்கணக்கான வேல்கள் வந்து மோதின. அவை ஏற்படுத்திய காயங்களால் துன்பப்பட்ட அவன் எதிர்தாக்குதல் நடத்த முடியாமல் நின்றான்.

எதிரிகளை வதைக்கும் எமன் பலவகை ஆயுதங் களைக்கொண்டு இராவணனை ஏழு இரவுகள் தொடர்ந்து தாக்கினான். எவருக்கும் வெற்றி- தோல்வியின்றி போர் நடந்தது. அவர்கள் போர்க்களத்திலிருந்து பின்வாங்கவில்லை. வெற்றியைத் தனதாக்கிக் கொள்ள விரும்பினர். அப்போது தேவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், முனிவர்கள் போன்றோர் பிரம்மதேவரை முன்னிருத்தி போர்முனையில் ஒன்றுகூடினர்.

அரக்கர் தலைவனும் பிரேதங்களின் தலைவனும் மும்முரமாகப் போர் செய்துகொண்டிருந்ததால் உலகத்தில் பிரளயம் வந்ததுபோன்ற நிலை ஏற்பட்டது. இராவணன் ஒளிவீசும் தனது வில்லை வளைத்து இடைவெளியின்றி ஆகாயத்தில் அம்புகளை செலுத்தினான். மிருத்யு தேவதையை நான்கு அம்புகளாலும், தேரோட்டியை ஏழு அம்புகளாலும் தாக்கினான். ஆயிரக்கணக்கான அம்புகளால் எமனின் உயிர்நிலைகளைத் தாக்கினான்.

அப்போது எமனுடைய முகத்திலிருந்து கோபக்கனல் வெளிப்பட்டது. அது நெருப்பு வளையங்களால் சூழப்பட்டு, மூச்சுக்காற்றி னால் ஊதப்பட்டு, புகைமூட்டத்தால் மூடப்பட்டிருந்தது. க

அப்போது எமனுடைய முகத்திலிருந்து கோபக்கனல் வெளிப்பட்டது. அது நெருப்பு வளையங்களால் சூழப்பட்டு, மூச்சுக்காற்றி னால் ஊதப்பட்டு, புகைமூட்டத்தால் மூடப்பட்டிருந்தது. கோபம் கொண்டி ருந்த மிருத்யு, கால தேவதைகள் இந்த அற்புதம் நிகழ்ந்தது கண்டு மிக மகிழ்ந்தனர்.

அப்போது மிருத்யு தேவதை எமனைப் பார்த்து, "என்னை போர்புரிய அனுமதியுங் கள். இந்த பாவி அரக்கனை அழித்து விடுகிறேன்'' என்றது.

மேலும் அது, "இயல்பாகவே எனக்கு தனிப்பட்ட ஆற்றல் உண்டு. போர்க்களத்தில் என்னை எதிர்த்து இந்த அரக்கன் உயிரோடு திரும்பச் செல்லப்போவதில்லை. தவ வலிமை மிகுந்த இரணியகசிபு, நமுசி, சம்பரன், தூமகேது, பாணாசுரன், எண்ணிலடங்காத ராஜரிஷிகள், அறநூல் அறிந்தவர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், இயக்கர்கள், அப்சரக் கூட்டங்கள், பெருங்கடல்கள், மலைகள், ஆறுகள், மலைகள் போன்றவற்றுடன்கூடிய மண்ணுலகம் என எல்லாவற்றையும் ஊழிக்காலத்தில் நான் அழித்திருக்கிறேன். இவர்களன்றி இன்னும் வெல்வதற்கு அரிதானவர்கள் பலரும் அழிந்துபோனதைப் பார்த்திருக்கிறேன். சாதாரண இந்த தனி அரக்கன் எம்மாத்திரம்? அறம் தெரிந்தவரே, என்னைப் போரிட அருள்கூர்ந்து அனுமதியுங்கள். இவனை நான் கொன்றுவிட்டு வருகிறேன். எத்தகைய பலசாலி ஆயினும் என் பார்வை பட்டவன் உயிருடன் இருக்கமாட்டான். இவன் ஒரு முகூர்த்த காலம்கூட உயிருடன் இருக்கப் போவதில்லை. என் வலிமையைப் புகழ்ந்து இவ்வாறு கூறவில்லை. இயற்கையாகவே என்னிடம் அமைந்துள்ள ஆற்றல் இது'' என்றது.

இவ்வார்த்தைகளைக் கேட்ட எமதர்மராஜன் மிருத்யு தேவதையைப் பார்த்து, "நீ இங்கேயே இரு; இவனை நான் கொல்கிறேன்'' என்றான். உடனே எமன் ஆற்றல் படைத்த காலதண்டத்தைக் கையில் எடுத்தான். அதன் பக்கவாட்டில் கால பாகங்கள் நிலைகொண்டிருந்தன. வஜ்ரம்போலவும் அக்னிபோலவும் ஒளிவீசும் உலக்கை ஒரு வடிவமேற்று அருகில் நின்றது.

காலதண்டத்தின் பார்வைபட்ட மாத்திரத்திலேயே பிராணிகளின் உயிரைக் கவர்ந்துசெல்லும் தனித்தன்மை வாய்ந்தது. அவ்வாறிருக்க, அது ஒரு உயிரினத்தைத் தொட்டாலோ ஒன்றின்மேல் விழுந்தாலோ அது குறித்து சொல்லவும் வேண்டுமா! நெருப்பு வளையங்களால் சூழப்பட்டிருந்த அந்த காலதண்டமானது இராவணனை எரித்துப் பொசுக்குவதற்குத் தயாராக இருந்தது. வலிமைமிக்க எமன் அந்த ஆயுதத்தைக் கையில் எடுத்ததும் அது மேலும் பிரகாசமாகி ஜொலித்தது. போர்க்களத்தில் இருந்த அனைவரும் அது கண்டு பயம்கொண்டு அங்கிருந்து ஓடிப்போனார்கள். காலதண்டத்துடன் நிற்கும் எமனைக்கண்டு தேவர்கள் அனைவரும் மிகுந்த கலவரமடைந்தனர்.

இராவணன்மேல் அந்த ஆயுதத்தை செலுத்த முனைந்தபோது பிரம்மதேவர் உடனே வந்து, "வலிமை மிக்கவனே, இந்த அரக்கன் உன்னால் காலதண்டம் கொண்டு கொல்லப்பட வேண்டியவன் அல்லன்.

வேண்டாம். நான் இவனுக்கு வரம் கொடுத்திருக்கிறேன். நீ எனது வாக்கை பொய்யாக்காதே. எந்தவொரு தேவதையோ, மனிதனோ என் சொற்களைப் பொய்யாக்கி னால், அவர்களுக்கு மூவுலக மக்களையுமே பொய்யர்களாக்கிய மிகப்பெரும் பாவம் வந்துசேரும் என்பது உறுதி. இந்த காலதண்டம் அனைத்து உலகங்களுக்கும் பேராபத்தைத் தரக்கூடியது; பயங்கரமானது.

உன் கையிலிருந்து விடுபட்டவுடன் எதிர்ப்படுபவர்களை எல்லாம் நல்லவர்- தீயவர் என்று வேற்றுமை பார்க்காமல் அழித்துவிடும். என்னால் உருவாக்கப்பட்ட அளவற்ற ஆற்றலுடைய இந்த காலதண்டம் எப்போதும் வீண்போகாது. இதனால் தாக்கப்பட்டவர்கள் உயிர்பிழைக்க மாட்டார்கள். எனவே இராவணன்மேல் இதனை ஏவாதே. எவ்வளவு வரங்கள் பெற்றவனாக இருந்தாலும், இதனால் தாக்கப்பட்டால் ஒரு முகூர்த்த காலம்கூட பிழைத்திருக்க மாட்டான். இந்த தண்டத்தால் தாக்கப்படும் இராவணன் இறக்கலாம் அல்லது உயிர் பிழைக்கலாம். இந்த இரண்டு எதிரெதிர் நிலைகளுமே என் வார்த்தைகளைப் பொய்யாக்குபவைதான். எனவே இலங்கை மன்னனை குறிபார்க்கும் நீ அந்த முயற்சியைக் கைவிடு. உலக மக்களின் பொதுநன்மையில் பார்வையை செலுத்தி என்னை சத்தியவானாக்கு'' என்றார்.

இவ்வாறு பிரம்மா கூறியதும் அறம் தவறாத வனான எமன், "இதோ, காலதண்டத்தை அடக்கிவிட்டேன். தாங்களே அனைவருக்கும் ஒப்பற்ற தலைவர். உங்கள் வார்த்தையை மீற இயலாது. வரங்களால் காக்கப்படும் இவனை என்னால் கொல்லமுடியாது எனும்போது, இவனுடன் போர்புரிவதால் என்ன பயன்? எனவே இந்த அரக்கன் பார்வையிலிருந்து இத்துடன் நான் மறைந்து விடுகிறேன்'' என்று கூறிவிட்டு, அப்போதே தேர், குதிரைகளுடன் கண்ணுக்குப் புலப் படாமல் மறைந்தான் எமதர்மன்.

எமன் கண்களுக்குப் புலப்படாமல் போகவே அவன் போர்க்களத்திலிருந்து தோல்வியை ஒப்புக்கொண்டு மறைந்து விட்டான் என்றெண்ணிய இராவணன், எமனை வென்றுவிட்டதாக அறிவித்துவிட்டு புஷ்பக விமானத்திலேறி எமலோகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றான்.

பின்னர் சூரியனின் மகனான எமன், பிரம்மாவை முன்னிருத்தி தேவர்களுடன் வானுலகம் நோக்கி மனத்திருப்தியுடன் சென்றான். நாரதரும் சென்றார்.

23-ஆவது சர்க்கம் வருணனை வெல்லுதல்

எமதர்மனை வெற்றிகொண்டபின் போர் செய்வதில் விருப்பம் கொண்ட இராவணன் தன் உதவியாளர்களை சந்தித்தான். ஆயுதங்களின் தாக்குதலால் நைந்துபோன உடலுடன் ரத்தம் வடிய வந்திருக்கும் இராவணனைக் கண்டு அவர்கள் வியப்படைந்தனர். அவனுக்கு வெற்றிவாழ்த்து கூறிய மாரீசன் முதலான அமைச்சர்கள் புஷ்பக விமானத்தில் ஏறிக்கொண்டார்கள். அவர்களுக்கு இராவணன் ஆறுதல் கூறினான். பின்னர் ரசாதலம் செல்ல விரும்பிய அவன் அசுரர்கள், உரகர்கள் வசிப்பதும், வருணதேவனால் எச்சரிக்கையுடன் பாதுகாக்கப்படுவதுமான பெருங்கடலுக்குள் புகுந்தான். வாசுகியால் பரிபாலிக்கப்படும் போகவதி நகரத்திற்குச் சென்று நாகர்களை வசப்படுத்தினான். பின்னர் மணிமய நகரத்தை மகிழ்வுடன் அடைந்தான்.

பிரம்மாவிடம் வரம்பெற்ற நிவாத கவசர்கள் என்னும் அசுரர்கள் அங்கு வசித்துக்கொண்டிருந்தனர். அங்குசென்று அவர்கள் அனைவரையும் போருக்கு அழைத்தான். அவர்கள் மிகுந்த வீரம் பொருந்தியவர்கள். வலிமை மிக்கவர்கள். பல்வகைப் படைக்கலங்களைக் கையாளும் திறன் பெற்றவர்கள். போர்செய்வதில் துடிப்பும் உற்சாகமும் மிகுந்தவர்கள்.

அப்போது அரக்கர்களும் அசுரர்களும் சூலம், திரிசூலம், வஜ்ராயுதம், கலப்பை போன்றவற்றால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இவ்வாறு ஓராண்டு காலத்திற்கு மேலாக போர் செய்தும் எந்தப் பிரிவினரும் வெற்றி- தோல்வி அடைய வில்லை. அந்த நிலையில் அழிவற்றவரான பிரம்மதேவர் தேரில் ஏறி அங்கு வந்தார். அவர் நிவாத கவசர்களை போர்செய்வதிலிருந்து தடுத்து, பின்வருமாறு கூறினார்:

"அனைத்து தேவர்களும் அசுரர்களும் ஒன்றுசேர்ந்து வந்து போரிட்டாலும் இராவணனை வெல்லமுடியாது. அதே போல தானவர்களும் தேவர்களும் ஒன்றிணைந்து வந்தாலும் உங்களையும் அழிக்கமுடியாது. அதனால் அரக்கர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்வதே சாலச்சிறந்தது. நண்பர்களுக்கிடையே வேற்றுமையுணர்வு தொலைந்து போனால் இருவரும் சுகபோகங்களை சமமாக அனுபவிப்பார்கள்.''

அப்போது இராவணன் அக்னிசாட்சியாக நிவாத கவசர்களோடு நட்பு கொண்டான். அதனால் மிகவும் மகிழ்ந்தான். பின்னர் நிவாத கவசர்கள் அவனை முறைப்படி உபசரித்தனர். ஓராண்டு காலம் அங்கேயே தங்கியிருந்தான். தனது சொந்த இடத்தில் இருப்பதைப்போலவே அவனுக்கு எல்லா சுகபோகங்களும் அங்கு கிடைத்தன. அவர் களிடமிருந்து இராவணன் நூறுவகை மாய வித்தைகளை அறிந்துகொண்டான். அதன்பின் வருணனுடைய நகரத்தைக் கண்டுபிடிப்பதற்காக ரசாதலத்தை சுற்றி வந்தான்.

அவன் காலகேயர்கள் வசித்துக் கொண்டிருக்கும் அச்ம நகரத்திற்குச் சென் றான். வலிமை வாய்ந்த காலகேயர்களைக் கொன்றழித்தான். இராவணன் சகோதரி சூர்ப்பனகையின் கணவனும், பலம் வாய்ந்தவனுமான வித்யுஜ்ஜிஹ்வன் இராவணனைக் கொல்ல விரும்பினான்.

ஆனால் மிக எளிதாக அவனைக் கொன்ற இராவணன், மேலும் நாநூறு தைத்யர் களையும் கொன்றான்.

அதன்பின்னர் வெண்மேகம்போல தோற்றமளிப்பதும், கயிலைபோல ஒளிவீசும் தன்மை வாய்ந்ததுமான வருணனுடைய இருப்பிடத்திற்கு வந்தான். அங்கு சுரபி என்னும் பசு பால்சொரிந்த வண்ணம் இருப்பதைக் கண்டான். அது சொரியும் பாலினால் கடல் நிறைந்து பாற்கடல் என்னும் பெயரைப் பெற்றது. பரமேச்வரனுடைய வாகனமான ரிஷபத்தின் தாய் சுரபிதேவியையே இராவணன் கண்டான். சுரபியின் பால் பொழிவினால் ஏற்பட்ட பாற்கடலில்தான் குளிர்ந்த கிரணங்களைக்கொண்ட சந்திரன் தோன்றி னான். பாற்கடலின் கரையில் கடல் நுரையை மட்டுமே உணவாய்க்கொண்டு தவம்புரியும் முனிவர்கள் பலர் வாழ்ந்துகொண்டிருந்தனர்.

பாற்கடலி-ருந்தே அமிர்தம் தோன்றியது. ஸ்வதா எனும் மந்திரத்துடன் வழங்கப்படும் பொருட்களை உண்ணும் பித்ருகளுக்குரிய தேவதையான ஸ்வதா பாற்கடலில்தான் தோன்றியது.

தனிப்பெருமை கொண்டதும், பூவுலகில் சுரபி என்னும் பெயரால் அழைக்கப்படுவதுமான அந்த கோமாதாவை வலம்வந்து வணங்கிய இராவணன், பலவகைப் படைகளால் பாதுகாக்கப்படும் வருணனின் இருப்பிடத்திற்குள் நுழைந்தான். நூற்றுக்கணக்கான நீர்வீழ்ச்சிகள் கொண்டதும், சரத்கால மேகம்போல பளீரென்று விளங்குவதும், எப்போதும் மகிழ்ச்சியில் திளைத்திருப்பதுமான வருணனுடைய மிகச்சிறந்த மாளிகையைக் கண்டான். பின்னர் போரிட்டு படைத் தலைவர்களை அழித்தான்.

அவனைத் தாக்கியவர்களைப் பார்த்து, "உங்கள் அரசரிடம் சென்று "இராவணன் போருக்கு அழைக்கிறார். அவருடன் போர்புரியுங்கள் அல்லது கைகளைக் கூப்பியவண்ணம் நான் தோற்றுப் போனேன் என்றாவது கூறுங்கள். அப்படி கூறிவிட்டால் அவரிடமிருந்து நமக்கு ஆபத்து ஏற்படாது' என்று கூறுங்கள் என்றான்.

இதற்கிடையில் செய்தியை அறிந்து கொண்ட வருணனுடைய புதல்வர்கள், பேரன்கள், புஷ்கரன் என்னும் பெயர் கொண்ட படைத்தலைவன் ஆகியோர் கோபத்தோடு வெளியேறி வந்தனர்.

அவர்கள் அனைவரும் வீரம்மிக்கவர்கள். சூரியனுக்கு நிகரான உடல் படைத்தவர்கள். விரும்பிய வண்ணம் செல்லும் தேர்களில் ஏறிக்கொண்டு தத்தம் படைவீரர்கள் சூழ போர்க்களம் வந்தனர். பிறகு வருணனின் மகன்களுக்கும் இராவணனுக்குமிடையே மயிர்க் கூச்செரியச் செய்யும் பயங்கர போர் தொடங்கியது. பராக்கிரமம் மிகுந்த தசக்ரீவனுடைய அமைச்சர்களால் அவர் களுடைய படை முழுவதும் நொடிப் பொழுதில் அழிக்கப்பட்டது.

வருணனுடைய மகன்கள் தங்கள் படை யினர் அழிந்த நிலையைக் கண்டதாலும், இராவணனின் அம்புக் கூட்டத்தால் துன்பப்பட்டாலும் சற்றுநேரம் போர் புரிவதைத் தவிர்த்தனர். புஷ்பக விமானத் தில் இராவணன் நிற்பதைப் பார்த்த அவர்கள், வேகமாகச் செல்லும் தேர்களில் ஆகாயத்தை சென்றடைந்தனர். இப்போது ஆகாயத்தில் இராவணனுக்கும் அவர்களுக்கும் பெரும் போர் மூண்டது. அந்தப் போர் தேவாசுரப் போர்போல கடுமையாக நிகழ்ந்தது. அப்போது வருணனுடைய மகன்கள் தீக்கொழுந்துபோல பிரகாசிக்கும் அம்பு களால் தாக்கி இராவணனை போர்க்களத்திலிருந்து ஓடச்செய்து மகிழ்ச்சி பொங்க வெற்றி முழக்கம் செய்தனர்.

மன்னன் இராவணன் இழிவுபடுத்தப் பட்டதைக் கண்ட மகோதரன் எனும் அமைச்சன் பெரும் கோபம்கொண்டு, மரண பயத்தை அகற்றி எதிரிகளை நோக்கி னான். பயங்கரமானவர்களும், காற்றைவிட வேகமாகச் செல்லக் கூடியவர்களுமான வருணனின் வீரர்கள் மகோதரனின் கதாயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்து மண்ணில் விழுந்தனர். நூற்றுக்கணக்கான குதிரைகளையும் கொன்றுவிட்டு, தேரிழந்து தரையில் நிற்கும் அவர்களைப் பார்த்து மகோதரன் பேரொலி எழுப்பினான். அவர் களுடைய தேர்கள், குதிரைகள் அனைத்தும் மகோதரனால் தாக்கப்பட்டு மண்ணுலகில் விழுந்தன. வருணனுடைய மகன்கள் மட்டும் விமானம் இல்லாவிட்டாலும் தங்களது தனிச்சிறப்பால் ஆகாயத்தில் நின்றார்கள். அவர்கள் வில்லில் நாணேற்றி அம்புமழை பொழிந்து மகோதரனை சிதறடித்தனர். அவர்கள் ஒன்றுசேர்ந்து இராவணனைத் தாக்கினர். ஒரு மலையின்மேல் மேகங்கள் நீர்பொழிவதைப்போல அம்புகளால் அவனைத் துளைத்தனர். அப்போது தசக்ரீவன் ஊழிக்கால நெருப்புபோல வெளியே வந்துமிக பயங்கரமான அம்புகளால் அவர் களது உயிர்நிலைகளில் தாக்கினான்.

வருணனின் மகன்களும் தொடர்ந்து தாக்கினர். அந்தத் தாக்குதலில் விசித்திரமான உலக்கைகள், வளைந்த கணுக்களையுடைய பல்லம் என்னும் நூற்றுக்கணக்கான அம்புகள், பட்டய வகையைச் சேர்ந்த கத்திகள், இரும்பு ஆணிகள் பொருத்தப்பட்ட சதக்னீ என்னும் எந்திரங்கள் போன்றவற்றை எதிர்கொள்ள முடியாதவனாக, இராவணன் விமானத்தில் இருந்தபடியே அவர்களை அம்புகளால் நிறைத்தான்.

இராவணனின் பலவகை ஆயுதங்களால் காயமடைந்த வருணனின் படையினர், அறுபது ஆண்டுகள் வயது நிரம்பிய யானைகள் சேற்றில் அகப்பட்டுக்கொண்டது போல தவித்தனர். இதுகண்டு வருணனின் புதல்வர்கள் துயருற்று குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

அதனால் பெருமகிழ்ச்சி கொண்ட இராவணன் மேகத்தின் கர்ஜனைபோல வெற்றிமுழக்கம் செய்தான். பலவகையான அஸ்திர சஸ்திரங்களால் வருணனுடைய மகன்களைத் தாக்கினான். வருணனின் மகன்கள் மேலும் போரிட எண்ணாமல், தளர்ந்துபோனவர்களாக போர்க்களத்திலிருந்து திரும்பி தரையில் விழுந்தனர். அவர் களது பணியாளர்கள் அவர்களைத் தூக்கிச்சென்று இருப்பிடம் சேர்த்தனர்.

அப்போது அந்தப் பணியாளர்களைப் பார்த்து, "இங்கே நடந்தவற்றை வருணனிடம் கூறுங்கள்'' என்று இராவணன் சொன்னான்.

வருணனின் அமைச்சரான பிரபாசன், "போருக்கு வருமாறு நீங்கள் அழைக்கும் வருண மாமன்னர் இசை கேட்பதன் பொருட்டு பிரம்மலோகம் சென்றிருக்கிறார். மன்னர் இல்லாதபோது யாருடன் நீங்கள் போரிடப் போகிறீர்கள்? அவரது வீரப் புதல்வர்கள் அனைவரும் இங்கே உங்களால் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள்'' என்றான். அதைக்கேட்ட அரக்க மன்னன் இராவணன் "நான் வெற்றிபெற்றேன்'' என்று மகிழ்வுடன் முழக்கமிட்டு, வருண லோகத்திலிருந்து ஆகாய மார்க்கமாக இலங்கையை நோக்கிச் சென்றான்.

(தொடரும்)

om011221
இதையும் படியுங்கள்
Subscribe