இருபதாவது சர்க்கம் நாரதர் இராவணனைத் தூண்டுதல் பூவுலகில் அனைவரையும் நடுங்கச் செய்துகொண்டிருந்த அரக்கர் தலைவனான இராவணன், ஒருசமயம் புஷ்பக விமானத்தில் சென்றுகொண்டிருந்தான். அப்போது மேகக் கூட்டத்தினிடையே வந்துகொண்டிருந்த நாரதரைக் கண்டான். அவரைப் பணிவுடன் வணங்கிய இராவணன் முறைப்படியான நலம் விசாரித்தபின் அவர் வந்துகொண்டிருந்ததன் காரணத்தைக் கேட்டான்.
மிகுந்த தவப்பொலிவால் பிரகாசித்துக் கொண்டிருந்த தேவரிஷி நாரதர் மேகக் கூட்டத்தில் இருந்தபடியே புஷ்பக விமானத் தில் அமர்ந்திருந்த இராவணனைப் பார்த்து, "அரக்கர்களின் மாமன்னனே, நல்லவனே, நற்குலத்தின் பிறந்தவனே! நான் சொல்வதை சற்று கேள். கொஞ்சமும் சந்தேகத்திற்கு இடமின்றி உன் எல்லையற்ற ஆற்றல் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதனால் நான் மிகவும் மகிழ்வுற்றிருக்கிறேன். வீரம் பொருந்திய அரக்கர்களைக் கொன்று தனது ஆற்றலை நிலைநாட்டிய மகாவிஷ்ணுவைப் போல, கந்தர்வர்களையும் பன்னகர்களையும் பகைவர்களையும் எதிர்த்து, அவர்களை அழித்து உனது வீரத்தை நிலைநாட்டினாய். இதைக்கண்டு நான் உவகை கொள்கிறேன். மாண்புமிக்க உன்னிடம் சில விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். உனக்கு விருப்பமிருந்தால் சற்றுநேரம் கேட்டுவிட்டுப் போகலாம். நான் சொல்வதை நன்றாகக் கூர்ந்து கேள்.
தேவதைகளாலும்கூட உன்னைக் கொல்ல முடியாது. அவ்வாறிருக்கும்போது இந்த மண்ணுலகில் வாழும் மக்களைக் கொல்வதால் உனக்கு என்ன பெருமை? எப்படியும் மனிதர்கள் எமன் கைவசப்பட்டவர்கள்தானே? தேவர்- தானவர்- அசுரர்- யக்ஷர்- கந்தர்வர்- அரக்கர் என எவராலும் அழிக்கமுடியாத நீ, சாதாரண மனிதர்களுடன் போரிட்டு வெற்றியடைகிறாய் என்பது உனது வீரத்திற்குப் பெருமையல்ல.
தினமும் சுகத்திற்காகவும் வசதிக்காகவும் அலைந்து திரிந்து அறியாமையில் மூழ்கியிருப்பது- மிகப்பெரிய ஆபத்துகளால் சூழப்பட்டிருப்பது- முதுமை, நூற்றுக்கணக்கான நோய்களால் அகப்பட்டிருப்பது என இவ்வாறான வாழ்க்கையிலிருக்கும் இந்த உலக மக்களை, உன்னைப்போன்ற பேராற்றல் படைத்த மாவீரன் கொல்வதென்பது விந்தையல்லவா!
இந்த உலகில் எங்கு சென்றாலும் தொடர்ந்து ஆபத்துகள்தான் ஏற்படுகின்றன. இந்த உண்மையை அறிந்துகொண்ட எந்தவொரு அறிவாளியாவது மனிதர்களுடன் போரிட மனம் வைப்பானா?
இந்த உலகமக்கள் பசி, தாகம், முதுமை ஆகியவற்றால் தளர்ந்துகொண்டே செல்கிறார்கள். மன வலிமை குன்றி அறியாமையில் ஆழ்ந்திருக் கும் இந்த மக்களை நீவேறு ஏன் துன்புறுத்த வேண்டும்? வலிமை மிக்கவனே, நல்லது- கெட்டது அறியாது, சுகபோகங்களை நாடி எங்கோ சுற்றித் திரிந்துகொண்டிருக்கும்- போக்கிடம் அறியாத இந்த மனிதர்களை விட்டுவிடு. பார்... சில மனிதர்கள் மகிழ்ச்சியாக இசை, நடனம் போன்றவற்றை அனுபவித்து பொழுதைக் கழிக்கி றார்கள். பலர் துன்பம் பொறுக்காமல் பெருகும் கண்ணீரோடு வாய்விட்டு அழுதுகொண்டிருக்கிறார்கள். தாய்- தந்தை, பிள்ளைகளிடம் பாசம்; மனதிற்கேற்ற மனைவி; உற்றார்- உறவினர்களிடம் அன்பு போன்றவற்றால் மனம் மயங்கி, உலகமக்கள் நிலைகுலைந்திருக்கிறார் கள். அறியாமையால் தாங்கள் கட்டுண்டு கிடப்பதை அவர்கள் உணரவில்லை.
தெளிந்த அறிவிலிருந்து விலகி அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் இந்த மனித குலத்திற்கு நீ மேலும் பல துன்பங்களை

தெளிந்த அறிவிலிருந்து விலகி அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் இந்த மனித குலத்திற்கு நீ மேலும் பல துன்பங்களை விளைவிப்பதால் உனக்கு என்ன பெருமை கிடைக்கும்? மனிதர் வாழும் மண்ணுலகம் உன்னால் வெற்றிகொள்ளப்பட்டது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எதிரிகளை வெல்பவனே, உனது அமைச்சர்கள், படைவீரர்களோடு எமனுடைய உலகத்திற்குச் செல். அவனுடன் போரிட்டு அவனை உன் கட்டுக்குள் கொண்டுவந்தால் அதுவே உனக்குப் பெருமை தரும். எமன் மட்டும் உன்னால் வெல்லப்பட்டான் என்றால் மற்ற அனைவரும் வெல்லப்பட்டார்கள் என்பதே பொருள். இதில் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை.''
இவ்வாறு நாரதர் கூறி முடித்ததும், சிறுநகை புரிந்த இராவணன் அவரை வணங்கிவிட்டுக் கூறத் தொடங்கினான்.
"பல உலகங்களிலும் சுற்றிவருபவரே, போர் நிகழ்வுகளைக் காண்பதில் ஆர்வம் கொண்டவரே, எல்லா உலகங்களையும் வெற்றி கொள்ளும் எண்ணத்துடன் புறப் பட்டுச் சென்றுகொண்டிருக்கிறேன். அடுத்து ரஸாதலம் செல்லவேண்டும் என்பது என் எண்ணம். மூவுலகங்களையும் வெல்லவேண்டும். நாகர்களையும் தேவர்களையும் வென்று என் ஆணைக்கு உட்பட்டவர்களாக்க வேண்டும். உயிரை நிலைநிறுத்தும் மூலிகைகள், சத்துகள் நிறைந்த பெருங்கடலைக் கடைந்து அமிர்தத்தைப் பெறவேண்டும். இவை யெல்லாம் எனது அடுத்த செயல்கள்" என்றான்.
இதைக் கேட்ட நாரதர் இராவணனைப் பார்த்து, "என்ன செய்கிறாய் நீ? ரஸா தலத்திற்குச் செல்லும் பாதையை விட்டுவிட்டு வேறுவழியில் ஏன் போய்க்கொண்டிருக்கி றாய்? எமலோகத்தின் வழியாகச் செல்லும் இந்தப் பாதை மிகவும் மோசமானது. இது உனக்குத் தெரியாதா? எதிரிகளை வெல்பவனே, கடப்பதற்கு மிகவும் அரிதானது இந்தப் பாதை'' என்றார்.
இதைக் கேட்ட இராவணன் பெருஞ்சிரிப்பு சிரித்துவிட்டு, "உங்கள் சொற்களை ஏற்கிறேன். பிரம்மாவின் புதல்வரே, எனக்கு சரியான வழிகாட்டி யிருக்கிறீர்கள். ரஸாதலத்தைப் பிறகு பார்த்துக்கொள்கிறேன். இப்போது எமனைக் கொல்லவேண்டும் என்னும் வேகம் எனக் குள் எழுந்துள்ளது. சூரியனின் மகனும், திசைக்குக் காவலனாகவும் உள்ள எமன் இருக்கும் தென்திசை நோக்கி இப்போதே பயணப்படுகிறேன். ஒரே சமயத்தில் போர்புரியத் துடித்துக்கொண்டிருக் கும் நான், நான்குதிசைக் காவலர்களையும் வென்றுகாட்டுவேன் என்று சபதம் செய்தேன். எனவே அதனை நிறைவேற்றும் பொருட்டு, உயிரிழந்தவர்களுக்குத் தலைவனாக இருக்கும் எமனின் நகரத்தை நோக்கி இப்போதே செல்கிறேன். உயிர்களுக்கு சித்திரவதை கொடுக்கும் அவனையே காலனிடம் ஒப்படைக்கிறேன்.''
இவ்வாறு கூறிய இராவணன் நாரதரை வணங்கி விடைபெற்றுக் கொண்டு, அமைச்சர்கள் பின்தொடர மிகவும் மகிழ்வுடன் தென்திசை நோக்கிப் பயணித்தான். புகையின்றி ஜுவாலை விட்டெரியும் தீக்கொழுந்துபோல, சான்றோர்களில் முதன்மையானவரான நாரதர் மனதை ஒருமுகப்படுத்தி சற்று நேரம் தியானத்தில் ஆழ்ந்து தனக்குள் சிந்தனை செய்தார்.
"ஆயுட்காலம் முடிந்தவுடன் அசையும்- அசையா பொருட்கள், இந்திரன் உள்ளிட்ட மூவுலக மக்களும் அறநெறிகளுக்கு உட்பட்ட எவரால் தண்டிக்கப்படுகிறார் களோ- அத்தகைய தனிப்பெரும் ஆற்றல் பெற்ற எமனை இவனால் எவ்வாறு வெல்லமுடியும்? உயிரினங்களின் தான- தர்மங்களுக்கு யார் சாட்சியாக இருக்கி றாரோ- தனது பேரொளியால் மற்றொரு அக்னிபகவான் போல யார் விளங்குகிறாரோ- எந்த மகாத்மாவிடமிருந்து உயிர்ப் பைப் பெற்று எல்லா உயிரினங்களுக்கும் பலவகையான செயல்களில் ஈடுபடுகிறாரோ- யாரிடமுள்ள பயத்தால் மூவுலக உயிரினங் களும் அவரிடமிருந்து விலகியிருக்க வேண்டுமென்று அஞ்சி நடுங்குகின்றனரோ- அத்தகையவருடன் இந்த அரக்கர் தலைவன் நேரில் சென்று எவ்வாறு வெல்வான்? மூவுலகங்களையும் பாதுகாத்துப் பரி பாலித்து வருபவர் எவரோ- மனிதர்களின் பாவ- புண்ணியச் செயல்களுக்குரிய பலன்களைத் தருபவர் எவரோ- அனைத்துலக உயிர்களையும் வெற்றிகொண்டுள்ளவர் எவரோ அவரை இவனால் வெல்லமுடியுமா? இவன் எதிர்க்கப்போகும் அவரே அனைத் துயிர்களையும் பறிக்கும் காலனாக இருக்கும்போது, இவன் வேறெந்த உபாயத்தால் அவரை வெல்வான்? இப்போது எனக்கும் ஆர்வம் உண்டாகிவிட்டது. எமனுக்கும் இராவணனுக்கும் நடைபெறும் போரை நேரில் காண்பதற்கு இப்போதே நானும் எமலோகம் செல்கிறேன்.'
21-ஆவது சர்க்கம் எமனுக்கும் இராவணனுக்குமான போர் நினைத்த இடங்களுக்குச் செல்லக்கூடிய நாரதர், இராவணனுடன் தான் பேசிய செய்தியை உள்ளது உள்ளபடி சொல்ல எமனது இருப்பிடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் அவ்விடத்தை அடைந்ததும் எதிரே அக்னி பகவான் அமர்ந்திருக்க, எந்தெந்த உயிர்களுக்கு என்னென்ன வினைகள்- அவற்றுக்கு என்ன பயன்கள் என்று விதிகளை வகுத்துக்கொண்டிருக்கும் எமனைப் பார்த்தார்.
நாரதர் வந்திருப்பதைக் கண்ட எமன் முறைப்படி அர்க்கியம் முதலானவற்றால் உபசாரம் செய்துவிட்டு, சிறந்த ஆசனத்தில் அமரச்செய்தான்.
பின்னர், "தேவர்கள், கந்தர்வர் கள் போன்றோரால் வணங்கப்படும் தவமுனிவரே, அனைத்தும் நல்லமுறையில் தானே நடந்துவருகின்றன? தாங்கள் நலம்தானே? அறத்திற்கு எங்கேனும் அழிவு ஏற்படவில்லையே? இப்போது தாங்கள் இங்கே வந்திருப்பதன் நோக்கம் என்ன?'' என்று கேட்டான்.
அதற்கு நாரதர், "ஒரு முக்கியமான செய்தியைச் சொல்லவே நான் இங்கு வந்தேன். அதைக் கேட்டபின் அதை எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும் என்னும் வழிகளை நீதான் வகுத்துக்கொள்ள வேண்டும். உடலைத் துறந்து வரும் உயிர்களின் தலைவனே, தசக்ரீவன் என்னும் பெயர்கொண்ட ஒரு அரக்கன், எவராலும் வெல்லமுடியாத உன்னைத் தன் பேராற்றலால் வென்று தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக இங்கே வந்துகொண்டிருக்கிறான். இதைச் சொல்வதற்காகவே நான் விரைந்து வந்தேன். காலகண்டரின் உறவினரான உங்களை அவனால் என்னதான் செய்யமுடியும்?'' என்றார்.
இவ்வாறு நாரதர் பேசிக் கொண்டிருக்கும்போதே, பிரகாசமான கதிர்களை வீசும் சூரியன் உதிப்பதைப் போன்று, இராவணனின் பேரொளி வீசும் விமானம் தொலைவில் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். இராவணனுடைய புஷ்பக விமானத்தின் பேரொளியால் அப்பகுதியிலிருந்த இருள் முற்றிலுமாக விலகியது. அவனது விமானம் நெருங்கி வந்தது.
வலிமைமிக்க தசக்ரீவன் எம லோகத்திற்கு வந்ததும், அங்கிருந்த உயிர்களெல்லாம் அவர்களது நற்செயல்- தீயசெயல்களுக்கேற்ப பலன்களை அனுபவித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். அங்கு எமனுடைய பணியாளர்களையும் படைவீரர்களையும் பார்த்தான். எம வேதனை அனுபவித்துக்கொண்டிருந்த காட்சிகளையும் பார்த்தான். கொடூரமான உருவம் கொண்டவர்களும், பயங்கரமான இயல்புடையவர்களும் அச்சுறுத்தக்கூடியவர்களுமான எமதூதர்கள், உயிர்களை அடித்து வதைத்துக்கொண்டிருப்பதையும், அந்த வேதனையைத் தாங்கமுடியாமல் அந்த உயிர்கள் அழுது கூக்குரலிடுவதையும் கண்டான். பலரை புழுக்கள் அரித்துக்கொண்டிருந்தன. வேறு பலரை கொடூரமான நாய்கள் கடித்துக் குதறிக்கொண்டிருந்தன. அந்த பிரேத உயிர்கள் அனைத்தும் கேட்போரை நடுங்கச்செய்யுமாறு அவலக்குரல் எழுப்பிக்கொண்டிருந்தன.
சிவந்த நீர் பாய்ந்தோடும் வைதரணி நதியை, அடிக்கடி கடந்துசெல்லும்படி பலர் கட்டாயப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். கொதிக்கும் மணலில் மீண்டும் மீண்டும் நடந்து செல்லும்படி பலர் வற்புறுத்தப்பட்டனர். பெரும் பாவங்கள் செய்த சிலர், கூர்மையான கத்தியைப் போன்ற இலைகள்கொண்ட மரங்கள் நிறைந்த அசிபத்திரம் எனும் காட்டில் சென்று, அந்த இலைகளால் கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்தார்கள். சிலர் ரௌரவம் எனும் நரகத்தில் தள்ளப் பட்டுகொண்டிருந்தனர். உப்புநீர் பெருக் கெடுத்தோடும் ஆறுகளில் பலர் அமிழ்த்தி எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தார்கள். கத்தி முனையின்மீது ஓடுமாறு பலரும் விரட்டப்பட்டனர். பல்வேறு உயிர்கள் பசி, தாகத்தினால் பரிதவித்துக்கொண்டிருந்தனர்.
சிலர், 'ஒரு வாய் நீராவது தாருங்களேன்' என்று கெஞ்சிக்கொண்டிருந்தார்கள். சிலரோ பிணங்களைப்போல பயங்கரமாக, மெலிந்து நிறம்மாறி தலைவிரி கோலத்துடன் காணப்பட்டனர்.
அழுக்கு படிந்து பரிதாபமான தோற்றத் துடன் பலரும் நான்கு திசைகளிலும் ஓடிக்கொண்டிருந்தனர். இவ்வாறு ஆயிரங்கணக்கான உயிர்கள் தண்டனைகளை அனுபவித்துக்கொண்டிருக்கும் காட்சிகளை செல்லும் வழியில் இராவணன் கண்டான்.
சிலர் தாங்கள் செய்த புண்ணியத்தின் பயனாக, மிக அகன்ற இல்லங்களில் இசை, நடனம் போன்ற நுண்கலைகள் ரசித்துக்கொண்டு உல்லாசமாக பொழுதைக் கழித்துக்கொண்டிருப்பதையும் இராவணன் கண்டான். அவரவர் கர்மவினைகளுக்கு ஏற்றபடி சுக அனுபவத்துடன் இருந்தார்கள். பசுதானம் செய்தவர்கள் பசும்பால் அருந்துவதையும், அன்னதானம் செய்தவர் கள் பலவகை உணவுகளை உண்டு மகிழ்வதையும், வீடு தானம் செய்தவர்கள் மிகப்பெரிய மாளிகைகளில் இருப்பதையும் அவன் கண்டான்.
அருளாளர்கள் சிலர் அழகுமிக்க உடல் பெற்றவர்களாக- தங்கம், வைரம், முத்து போன்ற அணிகலன்களை அணிந்துகொண்டு இளமைச் செருக்கோடு மதர்த்துத் திரியும் இளம்பெண்களுடன் சேர்ந்திருப்பதைக் கண்டான்.
ஆற்றல் மிக்க மன்னன் இராவணன், தீய செயல்களின் பயனை பயங்கரமாக அனுபவித்துக்கொண்டிருந்த ஆன்மாக் களைத் தனது வீரத்தால் பலாத்காரமாக விடுவித்தான். இராவணனால் விடுவிக்கப் பட்ட அந்த உயிர்கள் எண்ணிப்பார்த்திராத சுகத்தை சற்றுநேரம் அனுபவித்தன.
பாவ ஆத்மாக்கள் துன்பமயமான நரகத்திலிருந்து விடுவிக்கப்பட்டதைக் கண்டு கோபம்கொண்ட எமனது காவலர்கள் இராவணன்மீது தாக்குதல் தொடுத்தனர். படைவீரர்கள் எழுப்பிய ஆவேசக் குரல்கள் அனைத்து பக்கங்களிலிருந்தும் எழுந்தன. ஈட்டிகள், சூலங்கள், உலக்கைகள், வேல்கள் வல்லயங்கள் போன்ற ஆயிரங்கணக்கான ஆயுதங்களை புஷ்பக விமானத்தின்மேல் பொழிந்தார்கள். கூட்டமாக வந்து தாக்கும் தேனீக்களைப்போல அவர்கள் இராவணனின் விமானத்தில் நுழைந்து, அதிலிருந்த மேடைகள், இருக்கைகள், தோரணங்கள் போன்றவற்றை வேகமாக அழித்தார்கள். தேவ சக்திகளின் ஆதிக்கத்திலிருந்த அந்த விமானம் சிதைத்து நொறுக்கப்பட்டாலும், பிரம்மதேவரின் வரத்தின் பயனாக அடுத்த நொடியே சீரடைந்தது. எவ்வளவு தாக்கப்பட்டாலும் எப்போதும் அது அழியக் கூடியதல்ல.
எமனது படையின் எண்ணிக்கை எல்லை கடந்ததாக இருந்தது. பல்லாயிரக்கணக்கான வீரர்கள் முன்னேறிச் சென்று பொருதனர்.
அப்போது இராவணனும் அவனது அமைச்சர் களும், அவரவர் ஆற்றலுக்கும் விருப்பத்திற் கும் ஏற்ப அங்கிருந்த மரங்களையும் மலை களையும் நூற்றுக்கணக்கான மாளிகை களையும் பெயர்த்தெடுத்து கடும்போர் புரிந்தனர்.
இராவணனின் அமைச்சர்களின் உடல்கள் பலவகையான படைக்கலங்களால் தாக்கப்பட்டு ரத்தத்தை வடித்தன. அவ்வாறி ருந்தும் அவர்கள் பெரும்போர் புரிந்தனர்.
எமனுடைய படையினரும் இராவணனின் அமைச்சர்களும் அஸ்திர சஸ்திரங்களால் தாக்கி எதிர்த்து கடுமையாகப் போரிட்டனர். பின்னர் எமனது வீரர்கள் இராவணனின் அமைச்சர் களை விட்டுவிட்டு, இராவணன்மீது ஏராள மான சூலாயுதங்களைப் பொழிந்து தாக்கினர். அந்த ஆயுதங்களின் தாக்குதலால் உடல் தளர்ந்து, உடலெங்கும் குருதி வழிய, பூத்து நிற்கும் அசோக மரத்தைப்போல இராவணன் புஷ்பக விமானத் தில் காட்சிதந்தான். அவன் தனது அஸ்திர சக்தியினால் சூலங்கள், கதா யுதங்கள், ஈட்டிகள், வேல்கள், வல்லயங்கள், அம்புகள், உலக்கைகள், பாறைகள், மரங்கள் போன்றவற்றை எதிரிகள்மீது வீசினான். அந்த தாக்குதலால் எமனுடைய படைகள் கீழே சாய்ந்தன.
ஆனாலும் அவர்களோ, அவன் வீசிய ஆயுதங்களை முறித்தெறிந்துவிட்டு, இராவணனின் அஸ்திரங்களை விலக்கியபடி, ஆயிரங்கணக்கானவர்கள் ஒன்றாகக்கூடி இராவணனையே குறிவைத்து பயங்கரமாகத் தாக்கினார்கள்.
ஒரு மலைச்சிகரத்தை சூழ்ந்துகொண்டு மேகங்கள் மழையைப் பொழிவதைப்போல, அவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து சூலங்களாலும் கவண் கற்களாலும் மூச்சு விடக்கூட நேரம் கொடுக்காமல் தொடர்ந்து அவனைத் தாக்கினார்கள். இராவணனின் கவசம் உடைந்து விழுந்தது. அவன் உடலெங் கும் ரத்தப் பெருக்கு! கோபம் பெருக்கெடுத்த அவன் புஷ்பக விமானத்திலிருந்து இறங்கிக் கீழே நின்றான். சற்று நேரத்தில் சுய உணர்வு பெற்றவன், உத்வேகம் கொண்டவனாக வில்லும் அம்பும் ஏந்திக்கொண்டு, சினம் மிகுந்து நிற்கும் காலனைப்போல போர்க்களத் தில் நின்றான். தெய்வீக அஸ்திரமான பாசு பதாஸ்திரத்தை வில்லில் பூட்டி, எமனது படை வீரர்களைப் பார்த்து, 'நில்லுங்கள்... நில்லுங் கள்' என்று கூவியபடியே வில்லை வளைத்தான்.
தேவர்களின் பகைவனான இராவணன் காதுவரை நாண் கயிற்றை இழுத்து, முப்புரங்களை எரிக்கப் புறப்பட்ட சங்கரர்போல வெகு கோபத் துடன் அந்த அஸ்திரத்தை விடுவித்தான். அப்போது அந்த அஸ்திரத்தின் தோற்றம் நெருப்பும் புகையும் மண்டிய தாக, கோடைகாலத்தில் பற்றியெரியும் காட்டுத் தீயைப்போல மிகுந்த நாசம் விளைவிப்பதாக இருந்தது.
அந்த அஸ்திரம் வில்லிருந்து விடுபட்டதும் நெருப்பு வளையங்களைக் கக்கிக்கொண்டு, புதர்களையும் மரங்களையும் எரித்த வண்ணம் வேகமாக முன்னேறியது.
அதைப் பின்தொடர்ந்து மாமிசம் உண்ணும் உயிரினங்கள் சென்றன. அஸ்திரத்தால் வீழ்த் தப்பட்ட உடல்களை உண்பதற்காக பிணந் தின்னிகள் பின்தொடர்ந்து சென்றன. அந்த அஸ்திரத்தின் ஆற்றலால் எரிக்கப்பட்ட எமனுடைய படை வீரர்கள், ஊழித்தீயால் கருகிய மரங்கள்போல கீழே சாய்ந்தனர்.
எல்லையற்ற பேராற்றல் கொண்ட அரக் கனான இராவணன் தனது அமைச்சர் களுடன், உலகையே நடுங்கச் செய்வதுபோல வெற்றி முழக்கத்தை எழுப்பினான்.
(தொடரும்)