Advertisment

ஒன்றே குலம் ஒருவனே தேவன்! - யோகி சிவானந்தம்

/idhalgal/om/one-clan-one-god-yogi-sivananda

ழுக்கம்... ஒழுக்கம்... ஒழுக்கம்.!

ஒழுக்கத்தின் உள்ளே தான் இறைவனும் இயற்கை யும் மாபெரும் சிம்மாசன மிட்டு அமர்ந்துகொண்டி ருக்கிறார்கள்.

Advertisment

ஆம்; போக்குவரத்து விதிகளில் ஒழுக்கம் வேண்டும். கல்வியில் ஒழுக் கம் வேண்டும். பக்தியில் ஒழுக்கம் வேண்டும். உடற்பயிற்சியில் ஒழுக்கம் வேண்டும். உணவில் ஒழுக் கம் வேண்டும். உழைப்பில் ஒழுக்கம் வேண்டும். உறவில் ஒழுக்கம் வேண்டும். ஒழுக் கம் எங்கே குறைகிறதோ அங்கே உணர்வு மழுங்கி ஆரோக்கியம் கெட்டு மகிழ்ச்சி நம்மைவிட்டு தொலைதூரம் ஓடிவிடும்.

Advertisment

இன்றைய இளைய சமுதாயத்தில் எங்கேயோ ஒரு குரல், "ஒழுக்கம் என் றால் என்ன? அது கிலோ எவ்வளவு? அது எங்கே கிடைக்கும்? என்ற கேள்வியைக் கேட்கிறது. திருக்குறள் கூறும் ஒழுக் கத்தைப் பார்ப்போம்.

"ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்.'

ஒழுக்கமுடைமையே உயர் குடித் தன்மையாகும். ஒழுக்கம் தவறுதல் தாழ்ந்த பிறப்பாகிவிடும். உயர்ந்தவன்- தாழ்ந்தவன் என்பதெல்லாம் அவரவர் ஒழுக்க நெறியின் அடிப் படையைக்கொண்டே அமைவதாகும். ஒழுக்கம்.

ஆன்மிகம், ஆராய்ச்சி, வழிபாடு குடும்ப உறவு, அரசாட்சி, நிர்வாகம், நீதி, நடுவு நிலைமை அத் தனைக்கும் உலகிற்கு எடுத்துக் காட்டாக நமது சமுதாயமே மிக உயர்ந்த வழி காட்டியாக வாழ்ந்துகொண்டிருக் கிறது; வாழ்ந்து காட்டியிருக்கிறது. நாம் அதைக் காப்பாற்றுகிறோமோ இல்லையோ- அதனை சிதைக்கக் கூடாது.

உணவு ஒழுக்கத்திற்கு அடிப்படை உழவு ஒழுக்கம். அந்த உழவு ஒழுக்கத் தின் ஆணிவேர் ஜல்லிக்கட்டு. ஜல்லிக் கட்டு என்பது சாதாரண வார்த்தை யல்ல. அது மனித வளத்தை மாண்போடு, இயற்கையோடு இயற்கை வளங்களைக் காக்கும் ஒரு அற்புத கருவியாகும். உழவு மாடுகளாக இருக்கட்டும்; கறவை மாடுகளாக இருக்கட்டும். இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் நமது வாழ்வோடு, வாழ்க்கை முறைகளோடு பின்னிப் பிணைந்த ஒரு விஷயமாகும். உலகத்தின் பசிப்பிணியைப் போக்கும் வல்லமை நமது நாட்டிற்கு உண்டு.

அதன் மூலாதாரமான நாட்டு மாடு களின் இனத்தை எங்கோ ஒரு நாட்டின் மூலையில் உட்கார்ந்துகொண்டு நமக்கு யாரும் அறிவுரை வழங்கக்கூடாது. விலங்கினங்களைத் துன்புறுத்துகி றோம், துன்புறுத்தப

ழுக்கம்... ஒழுக்கம்... ஒழுக்கம்.!

ஒழுக்கத்தின் உள்ளே தான் இறைவனும் இயற்கை யும் மாபெரும் சிம்மாசன மிட்டு அமர்ந்துகொண்டி ருக்கிறார்கள்.

Advertisment

ஆம்; போக்குவரத்து விதிகளில் ஒழுக்கம் வேண்டும். கல்வியில் ஒழுக் கம் வேண்டும். பக்தியில் ஒழுக்கம் வேண்டும். உடற்பயிற்சியில் ஒழுக்கம் வேண்டும். உணவில் ஒழுக் கம் வேண்டும். உழைப்பில் ஒழுக்கம் வேண்டும். உறவில் ஒழுக்கம் வேண்டும். ஒழுக் கம் எங்கே குறைகிறதோ அங்கே உணர்வு மழுங்கி ஆரோக்கியம் கெட்டு மகிழ்ச்சி நம்மைவிட்டு தொலைதூரம் ஓடிவிடும்.

Advertisment

இன்றைய இளைய சமுதாயத்தில் எங்கேயோ ஒரு குரல், "ஒழுக்கம் என் றால் என்ன? அது கிலோ எவ்வளவு? அது எங்கே கிடைக்கும்? என்ற கேள்வியைக் கேட்கிறது. திருக்குறள் கூறும் ஒழுக் கத்தைப் பார்ப்போம்.

"ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்.'

ஒழுக்கமுடைமையே உயர் குடித் தன்மையாகும். ஒழுக்கம் தவறுதல் தாழ்ந்த பிறப்பாகிவிடும். உயர்ந்தவன்- தாழ்ந்தவன் என்பதெல்லாம் அவரவர் ஒழுக்க நெறியின் அடிப் படையைக்கொண்டே அமைவதாகும். ஒழுக்கம்.

ஆன்மிகம், ஆராய்ச்சி, வழிபாடு குடும்ப உறவு, அரசாட்சி, நிர்வாகம், நீதி, நடுவு நிலைமை அத் தனைக்கும் உலகிற்கு எடுத்துக் காட்டாக நமது சமுதாயமே மிக உயர்ந்த வழி காட்டியாக வாழ்ந்துகொண்டிருக் கிறது; வாழ்ந்து காட்டியிருக்கிறது. நாம் அதைக் காப்பாற்றுகிறோமோ இல்லையோ- அதனை சிதைக்கக் கூடாது.

உணவு ஒழுக்கத்திற்கு அடிப்படை உழவு ஒழுக்கம். அந்த உழவு ஒழுக்கத் தின் ஆணிவேர் ஜல்லிக்கட்டு. ஜல்லிக் கட்டு என்பது சாதாரண வார்த்தை யல்ல. அது மனித வளத்தை மாண்போடு, இயற்கையோடு இயற்கை வளங்களைக் காக்கும் ஒரு அற்புத கருவியாகும். உழவு மாடுகளாக இருக்கட்டும்; கறவை மாடுகளாக இருக்கட்டும். இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் நமது வாழ்வோடு, வாழ்க்கை முறைகளோடு பின்னிப் பிணைந்த ஒரு விஷயமாகும். உலகத்தின் பசிப்பிணியைப் போக்கும் வல்லமை நமது நாட்டிற்கு உண்டு.

அதன் மூலாதாரமான நாட்டு மாடு களின் இனத்தை எங்கோ ஒரு நாட்டின் மூலையில் உட்கார்ந்துகொண்டு நமக்கு யாரும் அறிவுரை வழங்கக்கூடாது. விலங்கினங்களைத் துன்புறுத்துகி றோம், துன்புறுத்தப்படுகிறது என்று சொல்லிக்கொண்டிருக்கும் குழுவில் இருப்பவர்கள் யார்? எந்த நாட்டைச் சார்ந்தவர்கள்! விலங்கினத் தைத் துன்புறுத்தக்கூடாதென்று சொல்லி பல்வேறு விலங்குகளை உணவாகத் தின்பவர்கள் நமக்கு உபதேசிக்கக்கூடாது.

அடுத்து உணவு. உணவில் கலப்படம் செய்வதை விட கொடுஞ்செயல் எதுவுமில்லை. "மது நாட்டுக் கும் கேடு; வீட்டுக்கும் கேடு' அருமையான பஞ்ச் டயலாக்! யார் இதை படிக்கின்றனர். ஒரு தீய பழக்கத்தை உருவாக்கிவிட்டு, அது தீமை- அதைத் தொடாதே என்று சொல்லக்கூடாது. குடிப்பது தவறு குடிப்பவன் தவறு செய்கிறான். சரியா? சரிதான். ஆனால் குடிக்கும் பொருள் எங்கிருந்து வருகிறது? இதனைத் தயாரிப்பதற்கு யார் காரணம்? சாராயத்தில் நல்ல சாராயம், கள்ளச்சாராயம் என்பதெல்லாம் இல்லை. ஒருவர் பேட்டியில் சொல்கிறார்- "நான் கடந்த 15 வருஷமாக இதைத் தான் குடிக்கிறேன்' என்று. யார் தவறு செய்தாலும் தவறு தவறுதான். தவறு மேலும் நடவாமல் பார்க்கவேண்டும். அதற்கு தகுந்தாற்போல் தக்க சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும். குடிமையைப் பற்றி குறள் கூறும் கருத்தினை பார்ப்போம்.

"ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்மூன்றும்

இழுக்கார் குடிப்பிறந் தார்.'

நல்லகுடியில் பிறந்தவர் ஒழுக்கம், வாய்மை, நாணுதல் ஆகிய மூன்றிலிருந்தும் ஒருபோதும் தவறமாட்டார்.

ஜீவகாருண்யத்தைப் பற்றி நம் நாட்டில் உள்ளவர்களுக்கு- குறிப்பாகத் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு எந்த வெளிநாட்டவரும் உபதேசிக்கத் தேவையில்லை.

ஜீவகாருண்யத்திற்கு நாம் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியும். ஏனென்றால், இங்கே நம் வழிபாடுகளில், ஆன்மிகத்தில் பக்தியில் நம் கடவுளோடு சேர்ந்து விலங்கினங்களையும் பார்க்கிறோம். ஏனென்றால் இங்கே வானரத்தை வதைக்காமல் ஆஞ்சனேயராக வழிபடுகிறோம்.

மயிலைத் தன் வாகனமாகவும், பாம்பைத் தனது கட்டுக்குள்ளும் வைத்திருப் பவனே நமது முருகப்பெருமா னான ஆறுமுகச்சிவன் ஆவான்.

ஆயுதங்களை மனிதன் அனாவசியமாக பயன்படுத்தக் கூடாது என்பதற்காகவே அன்னை பத்ரகாளி அஷ்டபுஜ பத்ரகாளியாக உருவெடுத்து அனைத்து ஆயுதங்களையும் தன்னகத்தே வைத்திருக்கின்றாள்.

அம்மா அங்காள பரமேஸ்வரி சிங்கத்தை தனது அன்பு வாகனமாக வைத்திருக்கின்றாள்.

காளிதேவி புலியை வாகனமாக வைத்திருக்கிறாள்.

ஐயப்பனும் புலியையே வாகனமாக வைத்திருக் கிறான். திருப்பதி ஏழு மலையான் கருடனையே தனது வாகனமாக வைத்தி ருக்கிறார். விநாயகப் பெருமான் மூஞ்சூரை வாகனமாக வைத்திருக்கி றார்.

பிரபஞ்சப் பேராற்ற லில் சிவக்குடும்பத்தின் தலைவனான சிவப்பரம் பொருள் காளையைத் தனது வாகனமாக வைத்திருக்கிறார். காலத்தை விரயம் செய்யாத காலதேவனான எமதர்மராஜனும் எருமை யைத் தனது வாகனமாக வைத்திருக்கின்றார்.

இப்படியாக நமது வம்சாவளியினர், பரம் பரையினர் இறைவழிபாட்டுக்குள்ளேயே அனைத்து விலங்கினங் களையும் குடும்பமாக, உறவாக வைத்து வாழ்ந்து வந்திருக்கின்றனர். வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஒரு படி மேலே சென்று சனீஸ்வரனோ காகத்தை தனது வாகனமாக வைத்தி ருக்கிறார்.

ஆறறிவு பெற்ற மனிதனின் அறிவை மழுங்கச் செய்து உயிரை மெல்ல மெல்லக் கொல்லக்கூடிய விஷத்தை எவர் இங்கே முதலில் பரவச் செய்தது? ஒழுக்கத்தைப் பற்றி தெரியாத எவரும் நமது நாட்டிற்கு உபதேசம் சொல்லவேண்டிய அவசியமில்லை! இந்த சூழலில் இந்தக் கட்டுரையை எம் மக்களுக்காக எழுத வேண்டிய அவசியம் இருக்கிறது. நமது உயிர் விலைமதிப்பற்றது. இது பிரபஞ்ச பேராற்றல், பிரபஞ்ச சக்தி சிவபெருமான் நமக்கு அருட்கொடையாக வழங்கியிருக்கிறது. சுய ஒழுக்கமாக இருந்தால் மட்டுமே இவ்வுடலை நீண்டநாள் ஆரோக்கியமாக உயிருடன் காப்பாற்றமுடியும். ஒழுக்கத்தில் கொல்லாமையும் ஒன்று. இதைப்பற்றி திருமந்திரச் சிற்பி கூறியுள்ளதை பார்ப்போம்.

"பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர் மற்றோர்

அணுக்களை கொல்லாமை ஒண்மலர்

நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும் உற்றாரும்

ஆவி அமர்ந்திடம் உச்சியே.'

வெற்றிகொள்ள வேண்டிய உயர்ந்த ஞானத் தலைவனான சிவபெருமானுடைய பூஜைக்கு உகந்த பல மலர்களில் உயர்ந்த மலர், இன்னொரு உயிரைக் கொல்லாமை ஆகிய சிறந்த மலர் மாலையே ஆகும். தெளிந்த ஒருமைப்பாட்டுடன் கூடிய உளப்பூர்வமான மனவுறுதியே பூஜைக்கு ஏற்ற தீபமாகும். உணர்ந்து அறிந்து இறைவனை வைத்து வழிபடும், உயிர் விளங்கும் இடம் தலை உச்சியாகும்.

ss

உயிர்வதையை பற்றி பல நூறு ஆண்டுகளுக்குமுன்பே இவ்வாறு திருமூலர் உரைத்துச் சென்றுள்ளார்.

மருத்துவ ஞானி திருவள்ளுவர் அருளியதைப் பார்ப்போம்

"நல்லாறு எனப்படுவது யாது எனின் யாதொன்றும்

கொல்லாமை சூழும் நெறி.'

நல்லவழி என்று சொல்லப்படுவது எதுவென்றால் அது எந்தவொரு உயிரையும் கொல்லாமையைக் கடைப்பிடிக்கும் உயரிய நெறியாகும்.

காணும் உயிரினங்களையும், கண்ட உயிரினங்களையும், பறவை களையும் விலங்குகளையும் கொன்று தின்னும் எவருக்கும், நாம் விலங்குகளை துன்புறுத்துகிறோம், துன்புறுத்தக்கூடாது என்னும் அறிவுரையை வழங்க எந்த யோக்கியதையும் இல்லை. ஏனென்றால் நாம் ஜீவகாருண்யத்திற்கு சொந்தக்காரர்கள். அருட்பிரகாச ராமலிங்க வள்ளலார் கூறிய ஜீவகாருண்ய ஒழுக்கத்தைப் பற்றி இப்போது பார்க்கலாம். வள்ளலார் நான்கு வகை ஒழுக்கங்களாகப் பகுத்துணர்ந்து நமக்கு வழங்கியுள்ளார். 1. இந்திரிய ஒழுக்கம், 2. கரண ஒழுக்கம், 3. ஜீவ ஒழுக்கம், 4. ஆன்ம ஒழுக்கம்.

இந்திரிய ஒழுக்கமென்றால் கொடிய வார்த்தைகளை வாயால் சொல்லாமல் காதால் கேட்காமலும் இருப்பதேயாகும்.

கரண ஒழுக்கமென்றால் உண்மையான கடவுள் ஒருவரே என்று உளப் பூர்வமாக நம்புவதேயாகும்...

ஜீவ ஒழுக்கமென்றால், எல்லா மனிதரிடத்திலும் ஜாதி, மதம், சமயம், ஆசிரமம், குலம் கோத்திரம், சூத்திரம், சாத்திரம், தேசமார்க்கம், உயர்வு-

தாழ்வு முதலிய பேதமில்லாமல் இருப்ப தாகும்.

ஆன்ம ஒழுக்கம் என்பது சகல உயிர் களிடத்தும் அன்பு செலுத்துவது.

ஒழுக்கமே அத்தனைக்கும் அடிப்படை யாக அமைகின்றது மருத்துவ ஞானி திருவள்ளுவர் அருளியதை பார்ப்போம்.

"பேதமையுள் எல்லாம் பேதைமை காதன்மை

கையல்ல தன் கண் செயல்.'

ஒருவனது அறிவிலி எனும் அறிவற்ற தன்மை அதில் மிகப்பெரிய பேதமை என்பது தகாத ஒழுக்கத்தில் பெருவிருப்பம்கொள்ளு தல்.

எனவே நாம் ஒழுக்கத்தில் சிறந்து இருக்கும்பொழுதே மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் சொந்தக்காரர்களாக மாற முடியும். அதற்கு இயற்கையில் ஒளிந்திருக் கும் இறைவனின்மீது மாறா பற்றுக் கொண்டிருக்கவேண்டும்.

செங்கோல் என்பது ஒரு அடையாளம். செங்கோல் என்றால் செங்கோன்மை கொடுங்கோன்மை எனும் பொருட்களை உள்ளடக்கிய செங்கோன்மை பற்றி குறள் கூறுவதை பார்ப்போம்.

குடிதழீஇக் கோல்ஓச்சும் மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு.

தன் குடிமக்களை அரவணைத்துக் கொண்டு நீதிநெறி தவறாமல் செங்கோன்மை செலுத்தும் பெருநில மன்னனுடைய அடி களை நாடு முழுவதும் விடாமல் போற்றி நிற்கும்.

"கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் கோல்கோடிச்

சூழாது செய்யும் அரசு.'

முறை தவறி கொடுங்கோலனாகி எதையும் ஆராயாமல் செய்யும் அரசன் தன் செல்வத்தை மட்டுமல்லாது மக்களையும் ஒருசேர இழப்பான்.

அரசர்க்கு அழகு அறத்தோடு இருப்பது.

அரசாட்சியின் ஒழுக்கத்தைப் பற்றி திருமந்திரம் உரைத்துள்ளதைப் பார்க்கலாம்.

"நாள்தொறும் மன்னவன் நாட்டில் தவநெறி

நாள்தொறும் நாடி அவன்நெறி நாடானேல்

நாள்தொறும் நாடு கெடும்மூடம் நண்ணுமால்

நாள்தொறும் செல்வம் நரபதி குன்றுமே.'

அன்றாடம் அரசன் அவனுடைய நாட்டில் நன்னெறி, அற ஒழுக்கம் கெடாதிருக் கப் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி அவன் அன்றாடம் அவனுடைய நாட்டில் நீதிமுறை சரியாக உள்ளதா என்பதை ஆராய்ந்தறியத் தவறுவானேயானால், அவனுடைய நாடு ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக கெட்டழியும். அறியாமை எங்கும் மிகும். செல்வமும், செல்வாக்கும் நாளும் குறைந்து, நாடும் அழிந்து அரசனும் அழிவான்.

எனவே ஒரு நாட்டின் ஆட்சியாகட்டும், அதிகாரமாகட்டும், வேளாண்மையாகட்டும், நிர்வாகமாகட்டும், நீதி பரிபாலனமாகட்டும். இவையத்தனைக்கும் மூடநம்பிக்கை அற்ற உள்ளன்புடன்கூடிய பக்தியும், சுய ஒழுக்கமுமே அடிப்படை ஆதாரமாகும். இவை சரியாக இருந்துவிட்டால் அந்த நாட்டை எந்த நாட்டவராலும் வெற்றி கொள்ள இயலாது. மக்களும் மகிழ்ந்திருப் பார்கள்.

திருமந்திரத்தில் கூறியுள்ளதைப் பார்க்க லாம்.

"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமனில்லை

நாணாமே சென்றே புகும்கதி

இல்லை நும்சித்தத்து

நின்றே நிலைபெற

நீர்நினைந்து உய்மினே.'

மனித குலம் முழுமையும் ஒன்றுதான். இதில் எந்த பாகுபாடும் இல்லை. பிரபஞ்சம் முழுமைக்கும் இறைவனும் ஒருவனேதான். எப்போதும் யாவர்க்கும் நல்லதே நினையுங்கள், நல்லதே செய்யுங்கள். இப்படி இருப் பவர்களுக்கு இறப்பென்பதே இல்லை. ஏனென் றால் அவர் இறவாப் புகழுடன் வாழ்வார்.

இதைத் தவிர வெட்கப்படாமல் துணிந்து நீங்கள் செல்லத்தக்க வழி வேறில்லை. எனவே மனத்துள்ளே சிவப்பரம் பொருளை நினைத்து அவன் அருள் உணர்வோடு பொருந்தி தடுமாற்றம் இன்றி அவன் திருவடி நினைந்து நற்கதி அடைவோம்.

om010723
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe