Advertisment

ஓம் பதில்கள் 01.01.25

/idhalgal/om/oma-patailakala-010125

மனதை ஒருமுகப்படுத்துவது இல்லறத்தில் இருப்பவர்களுக்கு சாத்தியமா? -கே. பிரபாவதி, கன்னியாகுமரி.

பகவத் கீதை "உன் கர்மாவைச் செய் பலனை எதிர்பாராதே, அதனை நான் பார்த்துக்கொள்கிறேன்' என்று பொருள்படலி "த்யக்த ஸர்வ பரிக்ரஹ சரீரம் கேவலம் கர்ம' என கூறுகிறது.

கபீர், நாமதேவர், வள்ளுவர் போன்ற ஞானிகள் கையால் தொழிலை செய்துகொண்டே, வாயினால் இறை நாமத்தை ஜெபித்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள். ஸ்ரீகிருஷ்ணர், தாம் ஒரு தெய்வப் பிறப்பு எனத் தெளிவாக அறிந்திருந்தாலும்கூட, தேமேன்னு சும்மா இருக்கவில்லை. மாடு மேய்த்தார். பால் கறந்தார். ஆசிரியரின் மனைவி இட்ட கட்டளைகளை சீராக செய்தார். அர்ச்சுனனுக்கு தேர் ஓட்டினார். ஆக, பெரிய ஞானிகளும், தெய்வ அவதாரங்களும்கூட, வேலை செய்துகொண்டே இறை நாமத்தையும் கூறியபடியே இருந்துள்ளனர்.

குறிப்பாக இல்லறத்தில் உள்ளவர்களால், ஒரு இடத்தில் கண்மூடி உட்கார்ந்து, மனதை ஒரு முகப்படுத்துவது என இதெல்லாம் முடியாத விஷயம்; இயலவும் இயலாது. இல்லற தர்மத்திற்கான கடமையைச் செய்வதே சாலச் சிறந்தது. இல்லற தர்மம் என்பது கோவிலை பராமரிப்பது, அதிதிகளுக்கு உபச்சாரம் செய்வது, என நிறைய இருக்கிறது. இதை விட்டுவிட்டு, ஒரு பக்கமாக உட்கார்ந்து, மனதை ஒருமுகப்படுத்து

மனதை ஒருமுகப்படுத்துவது இல்லறத்தில் இருப்பவர்களுக்கு சாத்தியமா? -கே. பிரபாவதி, கன்னியாகுமரி.

பகவத் கீதை "உன் கர்மாவைச் செய் பலனை எதிர்பாராதே, அதனை நான் பார்த்துக்கொள்கிறேன்' என்று பொருள்படலி "த்யக்த ஸர்வ பரிக்ரஹ சரீரம் கேவலம் கர்ம' என கூறுகிறது.

கபீர், நாமதேவர், வள்ளுவர் போன்ற ஞானிகள் கையால் தொழிலை செய்துகொண்டே, வாயினால் இறை நாமத்தை ஜெபித்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள். ஸ்ரீகிருஷ்ணர், தாம் ஒரு தெய்வப் பிறப்பு எனத் தெளிவாக அறிந்திருந்தாலும்கூட, தேமேன்னு சும்மா இருக்கவில்லை. மாடு மேய்த்தார். பால் கறந்தார். ஆசிரியரின் மனைவி இட்ட கட்டளைகளை சீராக செய்தார். அர்ச்சுனனுக்கு தேர் ஓட்டினார். ஆக, பெரிய ஞானிகளும், தெய்வ அவதாரங்களும்கூட, வேலை செய்துகொண்டே இறை நாமத்தையும் கூறியபடியே இருந்துள்ளனர்.

குறிப்பாக இல்லறத்தில் உள்ளவர்களால், ஒரு இடத்தில் கண்மூடி உட்கார்ந்து, மனதை ஒரு முகப்படுத்துவது என இதெல்லாம் முடியாத விஷயம்; இயலவும் இயலாது. இல்லற தர்மத்திற்கான கடமையைச் செய்வதே சாலச் சிறந்தது. இல்லற தர்மம் என்பது கோவிலை பராமரிப்பது, அதிதிகளுக்கு உபச்சாரம் செய்வது, என நிறைய இருக்கிறது. இதை விட்டுவிட்டு, ஒரு பக்கமாக உட்கார்ந்து, மனதை ஒருமுகப்படுத்துவது வேண்டாத வேலை. இதனை இறைவனும் விரும்பமாட்டார். வீட்டுக் கடமையுடன் வேலை செய்துகொண்டே இறைவனையும் வணங்குங்கள். அதனையே இறைவனும் அங்கீகரிப்பார்.

கோவிலுக்குச் சென்றதும் முதலில் வணங்கவேண்டியது எது? -அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

கோவிலைச் சென்றடைந்தவுடன், உங்கள் கண்களுக்கு, கோபுரம்தான் முதலில் கண்ணில் படும். எனவே முதலில் கோபுர தரிசனம், பின்பு உள்ளே நுழைந்தவுடன் கொடி மரம் இருக்கும். எனவே கொடி மரத்தைத் தரிசனம் பண்ணவும். பின்பு பிள்ளையாரை வணங்கிவிட்டு, மற்ற தெய்வங்களை வணங்கவும்.

பிள்ளையாருக்கு உரிய அறுபடை வீடுகள்

1. திருவண்ணாமலை செல்வ கணபதி.

2. விருத்தாச்சலம் விருத்தகிரிஸ்வரர் கோவிலிலுள்ள ஆழத்து பிள்ளையார்.

3. திருக்கடவூர் கள்ளவாரண பிள்ளையார்.

4. திருச்சி உச்சிப்பிள்ளையார் அல்லது மதுரை காரிய சித்தி விநாயகர்.

5. பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர்.

6. திருநாரையூர்- பொல்லாப் பிள்ளையார்

மேற்கண்ட கோவில்கள், விநாயகரின் அறுபடை வீடுகள் ஆகும்.

Advertisment

ss

நிஜமாகவே சொர்க்கம்- நரகம் என்று இரு உலகம் இருக்கிறதா? -எஸ் ஆர் ஹரிஹரன், சென்னை.

உலகில் மூன்று லோகம் இருக்கிறது. தேவலோகம், மனுஷ்ய லோகம் மற்றும் நரக லோகம் என்று உள்ளது. வலிக்கும் வரை இன்பம் மட்டுமே உள்ளது தேவ லோகம் அல்லது சொர்க்கம். இன்பமும், துன்பமும் கலந்திருப்பது மநுஷ்ய லோகம். துன்பம் மட்டுமே உள்ளது நரக லோகம். மகாபாவம் பண்ணினவன், அடுத்த ஜென்மம் நீசமாக எடுப்பதற்குமுன், தன் பாவகர்மாவுக்கு அதிகப்படி தண்டனையாக இந்த நரகத்துக்குப் போகிறான் என்று சாஸ்திரம் கூறுகிறது. அங்கே ரொம்ப கஷ்டப்பட்ட பின் அதிகப்படி பாவத்தை கழித்துவிட்டு பின் லோகத்துக்கு மறு ஜென்மா எடுக்கவருகிறான். உலகம் ஒரு தெர்மா மீட்டரைப்போல் இருக்கிறது. அதில் அதிக கொதிக்கும் இடம் நரக லோகம். ஜில்லென்று இருக்கும் இடம் ஸ்வர்க்க லோகம். நடுவில் டிகிரிகள் இருக்குமிடம் பூலோகம். கொதிக்கும் இடத்தில் குளிர்ச்சி இல்லை. உறையும் இடத்தில் உஷ்ணமே இல்லை. இந்த இரண்டுக் கும் நடுவே உள்ளது சுகம்- துக்கம் எனக் கலந்த மிச்ரலோகம் எனும் மண்ணுலகம். மனுசர்கள் செய்கிற கர்மா, அவனுடைய குணம் இரண்டும் சேர்ந்து ஜீவனை மற்ற லோகங்களுக்கு அழைத்துச்செல்கிறது. நிஜமாகவே சொர்க்கம், நரகம் உள்ளது. உங்களின் புண்ணிய, பாவ செயல்களே, உங்களுக்கான லோகத்தைத் தேர்ந்தெடுக்கும்.

ஒரு சுப நிகழ்ச்சி நடைபெற என்ன காரணம்? -சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

Advertisment

சுப நிகழ்ச்சி நடைபெற சில காரணம் உள்ளது. சம்பந்தப்பட்ட நபருக்கு, 8-ஆம் அதிபதியின் தசாபுக்தி, அந்தரம் அல்லது 8-ஆம் அதிபதி சாரம்பெற்ற கிரகத்தின் அந்தரம் நடக்கலாம். இன்னொன்று, உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கக் கூடாதென சில செயல்கள் செய்யப்பட்டிருக் கலாம். உங்கள் வீட்டு சுப நிகழ்வைப் பற்றி பிறரிடம் பெருமையாக பேச, அதைக் கேட்டவர்கள் வயிறெரிந்து அழுதிருக்கலாம். அந்த அழுகையானது, சுப நிகழ்ச்சியை நடத்த விடாமல் செய்துவிடும். எல்லாவற்றிருக்கும் மேலாக, இறைவனின் விருப்பம், அனுக்கிரகம் என்று ஒன்று உள்ளது. சில செயல்கள் நடக்காமல் இருப்பதிலும், சில நன்மைகள் ஒளிந்திருக்கலாம். எனவே இறைவனே சில சுப நிகழ்ச்சிகளைத் தடை செய்யவும் கூடும். இறைவன்மேல் பாரத்தை போட்டுவிட்டு அடுத்த வேலை யைப் பாருங்கள்.

கோவில் தரிசனத்தின்போது பின்பற்ற வேண்டியவை பற்றி கூறவும். -அ. யாழினி, சென்னை.

ss

கோவிலுக்கு செல்லுமுன் நன்கு குளித்து சுத்தமாக இருப்பது அவசியம். சந்தனம், விபூதி அணியும்போது நெற்றியில் பூசும்போது "ஓம் புருஷோத்தமாய நம' என்றும், இதயத்தில் "ஓம் ஸ்ரீ வைகுண்டாய நம' என்றும் மனதில் இந்த நாமங்களை இருத்தி பூச வேண்டும். சந்தனத்தை இடுப்புக்கீழ் பூசக்கூடாது. திருநீறு பூசாமல் இருக்கக்கூடாது. கோவி லுக்குள் செருப்புடன் போகக்கூடாது. கோவிலுக்குள் சென்றவுடன் கோபுரம், கொடி மரம், பிள்ளையார் இத்தரிசனத்திற்கு பின், மூலவரை தரிசனம் செய்யவும். கோவில் தரிசனத்தின்போது, அமைதியாக இருக்கவும். வீண் வம்பு பேசக்கூடாது. கோவிலை அசுத்த மாகக் கூடாது. சுவாமி சிலைகளைத் தொட்டு வணங்கக்கூடாது. கோவிலின் பலிக்கல்லை மிதிக்கக் கூடாது. அதைத் தொடவும் கூடாது. கோவிலில் ஆலமரம் அல்லது கோவிலின் தல விருட்சத்தை சுற்றிவர முடிந்தால் கண்டிப் பாக சுற்றிவரவும். பெண்கள் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யக்கூடாது, ஆண்கள் மட்டுமே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யலாம். இறைவன், அரசன், குரு, குடும்பத்தலைவன் என இவர்களை வெறுங்கையுடன் பார்க்கக் கூடாது என்பது விதி. எனவே, கோவிலுக்குச் செல்லும்போது உங்களால் இயன்ற பூ, பழம், குங்குமம் என கையில் கொண்டு சென்று வணங்கவும். காணிக்கை செலுத்த மறக்கவேண்டாம். கோவில் பிரசாதம் கிடைத்தால், இறைவனின் அனுக்கிரகம் என எண்ணி உண்ணவும். வீட்டு விலக்கான பெண்கள், ஒரு வாரம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது. மீறிச் சென்றால், சென்றவர்களுக்கு பெரும் கேடு நேரிடும். கோவிலுக்குச் சென்று, தெய்வத்தை வணங்கிவிட்டு, வம்பு பேசுவது, திருடுவது, பொறாமைகொள்வது என இருந்தால், வீட்டில் செல்வம் சுத்தமாக துடைத்துவிடும்; கவனம் தேவை.

om010125
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe