Advertisment

ஓம் பதில்கள் -புதியபகுதி

/idhalgal/om/om-answers

வீட்டில் சுபிட்சம் பெருக. காயத்ரி மந்திரம் சொல்லும் நேரம் எது? -காமாட்சி, பொன்னேரி.

Advertisment

காயத்ரி மந்திரத்தை காலை- மாலை என இருவேளை களில், வனம், ஆற்றங்கரை, இவற்றில் தினம் ஆயிரம் முறை 30 நாட்கள் ஜெபித்துவந்தால் ஓதுவனின் பாவங்கள் அனைத்தும் கழன்று விடும். மூன்றாண்டு காலம் இவ்விதம் ஜெபிப்பவர், காற்றுப் போல் பறக்க வல்லவன் ஆகிவிடுவர். இம் மந்திரத்தை, தினமும் ஜெபம் செய்தால் எதிலும் வெற்றி நிச்சயம் கிடைக்கும். இந்த காயத்ரி மந்திரம் பற்றி கூறும் போது, பெரியவாளின் கருத்தை இங்கு பதிவிடுவது அவசியம். ஒருவர், "பெரியவரி டம், நான் காயத்ரி மந்திரம் கூறலாமா என வினவும் போது உனது பெண் குழந்தைக்கு காயத்ரி என பெயரிட்டு, அவளை அப்பெயரில் கூப்பிடு. உனக்கு, காயத்ரி மந்திரம் சொன்ன புண்ணியம் கிடைத்துவிடும்'' என்றார்.

Advertisment

எனது மகன் ராம்பிரசாத்திற்கு 31 வயது முடிந்துவிட்டது. இதுவரை திருமணம் தடையாகி கொண்டேபோகிறது. திருமணம் நடைபெற என்ன செய்ய வேண்டும்? -ராம்பிரசாத், மடிப்பாக்கம் -91.

ரிஷப லக்னம், தனுசு ராசி, பூராட நட்சத்திரம். லக்னத்திற்கு 2-ல் செவ்வாய், கேது. ராசியில் ராகு. 7-ல் கேது. எனவே இவருக்கு லக்னப்படியும், ராசிப்படியும் செவ்வாய் தோஷம், நாக தோஷமுள்ளது. இது மாதிரி ஊரில் பாதி ஜாதகர்களுக

வீட்டில் சுபிட்சம் பெருக. காயத்ரி மந்திரம் சொல்லும் நேரம் எது? -காமாட்சி, பொன்னேரி.

Advertisment

காயத்ரி மந்திரத்தை காலை- மாலை என இருவேளை களில், வனம், ஆற்றங்கரை, இவற்றில் தினம் ஆயிரம் முறை 30 நாட்கள் ஜெபித்துவந்தால் ஓதுவனின் பாவங்கள் அனைத்தும் கழன்று விடும். மூன்றாண்டு காலம் இவ்விதம் ஜெபிப்பவர், காற்றுப் போல் பறக்க வல்லவன் ஆகிவிடுவர். இம் மந்திரத்தை, தினமும் ஜெபம் செய்தால் எதிலும் வெற்றி நிச்சயம் கிடைக்கும். இந்த காயத்ரி மந்திரம் பற்றி கூறும் போது, பெரியவாளின் கருத்தை இங்கு பதிவிடுவது அவசியம். ஒருவர், "பெரியவரி டம், நான் காயத்ரி மந்திரம் கூறலாமா என வினவும் போது உனது பெண் குழந்தைக்கு காயத்ரி என பெயரிட்டு, அவளை அப்பெயரில் கூப்பிடு. உனக்கு, காயத்ரி மந்திரம் சொன்ன புண்ணியம் கிடைத்துவிடும்'' என்றார்.

Advertisment

எனது மகன் ராம்பிரசாத்திற்கு 31 வயது முடிந்துவிட்டது. இதுவரை திருமணம் தடையாகி கொண்டேபோகிறது. திருமணம் நடைபெற என்ன செய்ய வேண்டும்? -ராம்பிரசாத், மடிப்பாக்கம் -91.

ரிஷப லக்னம், தனுசு ராசி, பூராட நட்சத்திரம். லக்னத்திற்கு 2-ல் செவ்வாய், கேது. ராசியில் ராகு. 7-ல் கேது. எனவே இவருக்கு லக்னப்படியும், ராசிப்படியும் செவ்வாய் தோஷம், நாக தோஷமுள்ளது. இது மாதிரி ஊரில் பாதி ஜாதகர்களுக்கு உள்ளதுதான். எனினும் இவருக்கு திருமணம் தடை, தாமதமாவதற்குரிய காரணம். ஆண்களுக்கு முக்கியமான ஸ்தானமான 3-ஆமிட அதிபதி, 8-ல் மறைந்து ராகுவுடன் உள்ளார். மூன்றாமிடத்தை சனி பார்த்து பலம் இழக்கச் செய்கிறார். ஒரு மனிதருக்கு திருமணத்துக்குரிய சுக்கிரன் நீசம். சுக ஸ்தானாதிபதி சூரியன் அம்சத்தில் நீசம். இவரின் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் நீசம். பூர்வபுண்ணியாதிபதி, 8-ஆம் அதிபதி 4-ஆம் அதிபதியுடன் சேர்க்கை. இவர் சென்ற ஜென்மத்தில் மானாவாரியாக திருமணம் செய்திருப் பார். எனில் இவருக்கு திருமணமாகும் வாய்ப்பு உள்ளதா என்றால் கண்டிப் பாக நடக்கும். இவரின் 7-ஆம் அதிபதி செவ்வாய், லக்னாதிபதி சுக்கிரனை பார்க்கிறார் எனவே வேறு மதத்தைச் சேர்ந்த பெண், இவரைத் தேடிவந்து மணம் புரிந்துகொள்வார். நடப்பு ராகு தசை, ராகு புக்தி 2024 டிசம்பர்வரை. எனவே அதற்குள் கலப்பு காதல் திருமணம் நடந்துவிடும்.ஞாயிறு மாலை 4.30 மணிமுதல் 6.00 மணிக்குள் பைரவருக்கு செவ்வரளி மாலை சாற்றி, நெய்தீபமேற்றி வழிபட, திருமணம் நடந்துவிடும். இவ்விதம் 3-ஆம் அதிபதி மறைவு ஸ்தானத்தில் அமர்ந்திருந்தால், நிறைய வதந்திகள் ஆரம்பித்து, திருமணம் தாமதமாகும். இவர்கள், மதுரை- சோழவந்தான் அருகில் திருவேடகம், ஏடக நாதேஸ்வரர் கோவில்சென்று வணங்கவும். திருமணத்தை ஏதாவது கோவிலில் வைத்து நடத்தவும்.

qq

25 வயதிலிருந்து இன்றுவரை போராட்ட வாழ்க்கை! காரணம்- "பித்ருதோஷம்' என்கிறார் கள். எனக்கு சனி தசை எப்படியிருக்கும்? -அண்ணா அன்பழகன், அந்தணப் பேட்டை-611 102.

பிதுர்தோஷம் ஒரு ஜாதகத்தில் எவ்வித அமைப்பில் அமையும்.

ப் பிதுர் ஸ்தானம் எனும் 9-ஆம் வீடு, 9-ஆம் அதிபதி பாதிக்கப்படுவது.

ப் சூரியன் எனும் பிதுர்காரக கிரகம் சனி, ராகு, கேது இவற்றுடன் சம்பந்தம்.

ப் 9-ஆம் வீட்டில் சனி அமர்வது.

ப் சித்திரை, ஆவணி, ஐப்பசி மாத முதல் தேதியில் பிறப்பது.

ப் கிருத்திகை, உத்திரம், உத்திராடம் எனும் நட்சத்திரத்தில் பிறப்பது.

ப் சனி, சிம்ம வீட்டிற்கு சம்பந்தம்.

இவையனைத்தும் பிதுர்தோஷம் இருப்பதைக் காட்டும். இதனைத் தீர்க்க பல வழிகள், கோவில்கள் உள்ளது. எளியவழி காகத்திற்கு சாதம் வைப்பது. காகத்திற்கு சாதம் வைப்பது சம்பந்தமாக, பெரியவாளின் அறிவுரை யைக் கடைப் பிடிப்பது நல்லது. காகத்திற்கு சாதம் இட்டுவிட்டு, அதை சாப்பிடு கிறதா எனப் பார்த்துக்கொண்டு இருக்கக் கூடாது. தள்ளிப் போய்விடவேண்டும். இதனைக் கடைபிடியுங்கள். இன்னொரு வழி, ஞாயிறுதோறும் சூரிய பகவானை வழிபடுங்கள். சனி தசை பற்றி கேட்டிருக்கிறார். ஜாதகம் அனுப்ப வில்லை. எனினும் பொதுவாக சனி பகவான் ப்ரீதி செய்ய, ஏழு வாரம் சனிக் கிழமைகளில், நல்ல எண்ணெய் தானம் செய்யவேண்டும். பொதுவாக நல்லெண் ணெயை யாரும் தானம் வாங்கமாட்டார் கள். எனவே, சிறிய எவர்சில்வர் டப்பா அல்லது கிண்ணத்தில் நல்லெண்ணெயை ஊற்றி, சனீஸ்வர சந்நிதி அர்ச்சகரிடம் கொடுத்து விடுங்கள். இதனை அனைத்து சனி தோஷ ஜாதகர்களும் பின்பற்றலாம். எளிய ஆனால் வலிய பரிகாரமாகும்.

விளக்கு வீட்டு மகாலட்சுமி... அதனை பரிசளிக்கக் கூடாது என்பது எதனால்? -மீரா, காஞ்சிபுரம்.

உண்மைதான். நன்கு விவரம் தெரிந்தவர் கள், விளக்கை பரிசளிக்க மாட்டார்கள். நீங்கள், பூஜையறையில் விளக்கேற்றும்போது, அதன் தீப ஒளியில் மகாலட்சுமி ஒன்றி, ஒளிவிட ஆரம்பிக்கிறாள். இந்த தீபச்சுடர், நன்கு ஆடாமல்- அசையாமல், முத்துப் போல ஒளிரவேண்டும். அப்போது வீடு சுபிட்சமாக இருக்கிறது என்று அர்த்தம். தீபம் அங்குமிங்கும் அலை பாய்ந்து, சீரில்லாமல் இருப்பின், வீட்டு நிகழ்வு களில் கவனம் இருத்தல் அவசியம். ஏற்றிய தீபம், சட்டென்று குளிர்ந்து விட்டால் (தீபத்தை அணைப்பது என்று சொல்லாமல் குளிர்விப்பது என்பர்) ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். உங்கள் வீட்டு பூஜையறை விளக்கை நீங்கள், உங்கள் பெண், உங்கள் மருமகள் இவர்கள் தான் ஏற்றவேண்டும். வந்தவர், போனவர், சொந்த பந்தத்தை எல்லாம் விளக்கேற்றச் சொல்லக்கூடாது. ஒரு நேரம்போல் இல்லாமல், மகாலட்சுமி அவர்களுடன் போய் விட்டால் என்ன செய்வது? மகாலட்சுமி தாயார் அலைபாயும் குணமுடையவர். தாமரை மலரில் அசைந்து கொண்டே இருக்கிறாள். ஆக, ஒரு வீட்டில் விளக்கு தீபமேற்றுவதற்கே இன்னும் நிறைய ரூல்ஸ் உள்ளது. ஏனெனில் விளக்கு என்பது அந்த வீட்டின் சுபிட்சம். நிம்மதி, செல்வவளம், நிறைவாழ்வு என அனைத்தும் தரும். இத்தனை வளமுள்ள விளக்கை, பிறருக்கு பரிசளிக்கக் கூடாது. உங்கள் பெண், பேத்தி, ரத்த உறவு களுக்கு சீர்வரிசையாக கொடுக்கலாம். ஆனால் பரிசளிக்கக்கூடாது; கவனம் தேவை.

7-ல் செவ்வாய் இருப்பது மனைவிக்கு பாதிப்பைத் தருமா? -பரத், இராயபுரம், சென்னை.

7-ல் செவ்வாய், என்பது களஸ்த்திர ஸ்தானத்தில் செவ்வாய் இருக்கிறது என்றாகிறது. ஆக, மனைவியைக் குறிக்கும் இடத்தில், செவ்வாய் இருக்கிறது என்றால், மனைவி எத்தணை கோபக்கார பெண்ணாக இருப்பாள் என்று யோசிங்கள். உங்களை, கணவரை தூக்கிபோட்டு மிதித்துவிட மாட்டாளா... இப்போது கேள்வியை சரியாகக் கேளுங்கள் 7-ல் செவ்வாய் இருப்பது, கணவனுக்கு பாதிப்பைத் தருமா என்று கேட்டால், ஆம், சரியான பாதிப்பைத் தரும். அவ்வப்போது கணவனுக்கு, பெண்டு நிமிர்த்தி பட்டி பார்த்திடல் அவசியம் நேரும். இதுமாதிரி செவ்வாய் தோஷம் இருப்பின், பெண்ணுக்கு ஏதோ ஒரு இடத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் சரியாகிவிடும்.

om010324
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe