Advertisment

ஓம் பதில்கள் 01.11.24

/idhalgal/om/om-answers-011124

ப் அன்பு வழி, ஒழுக்க வழி ஆகிய இரண்டில் எது முக்திக்கான வழி? -ஆர். விநாயகராமன், செல்வமருதூர்

முக்கியடைவதற்கு, அன்பும் ஒழுக்கமும் முக்கியம்தான். ஆனாலும் அன்பு எனும் நிலை ஒருபடி முன்னே நிற்கிறது. அலங்காரத்தம்மாள் என்பவர் ரமண மகரிஷியின் தீவிர பக்தை. இவர் முதன்முறையாக ரமணரை சந்திக்க வந்தபோது, ரமணரும் அவரின் சிஷ்யர்களும், பிச்சை எடுத்துவந்த உணவையே சாப்பிட்டு வந்தனர். இதனைக்கண்ட அலங்காரத்தம்மாள் தனது சொத்தையெல்லாம் விற்றுவிட்டுத் திருவண்ணாமலைக்கு வந்து, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, உணவு தயாரித்து மகரிஷிக்கு தினமும் எடுத்துச் செல்வார். அவர் மிகவும் வயதாகி, தள்ளாத நிலையிலும் பகவானுக்கு உணவு கொடுப்பதை நிறுத்தவே யில்லை. ஒருநாள் மதிய நேரம், சாப்பாடு பரிமாறிய பிறகும் ரமணர் இலையில் கைவைக்காமல் இருந்தார். பின்னர் தான் அலங்காரத்தம்மாள் கொண்டுவந்த உணவு இலையில் வைக்கப்படாததைத் தெரிந்து கொண்ட சீடர்கள், அதனைக் கொண்டுவந்து பரிமாறியப் பிறகே பகவான் உணவுண்ண ஆரம்பித்தாராம். இதனைக் கண்டு பக்தர்கள் "இது உணவின் ருசியல்ல; அன்பின் ருசி' எனக் கூறி மகிழ்ந்தனர். தெய்வம் அன்பிற்குக் கட்டுப்பட்டது. எனவே முக்திக்கு வழி அன்புவழிதான் எனத் தெரிகிறது.

Advertisment

s

ப் பிரதோஷம் அன்று கோவிலைச் சுற்றி வலம்வரக்கூடாது என்கிறார்களே? -கே. பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்

பொதுவாகவே சிவன் கோவிலை முழுவதுமாக, முக்கியமாக சிவன் சந்நிதியை முழுமையாக சுற்றக்கூடாது. வட இந்தியாவில் நீர்க்கால்வரை செல்லவிட்டு பின் திரும்பி வரச் சொல்லிவிடுவார்கள். முழுமையாக சுற்ற அனுமதிக்க மாட்டார்கள். சிவனின் தலையிலிருந்து கங்கைநீர் பெருகி வந்துகொண்டிருப்பதாக நம்புகிறோம். அதனால் அந்த கங்க

ப் அன்பு வழி, ஒழுக்க வழி ஆகிய இரண்டில் எது முக்திக்கான வழி? -ஆர். விநாயகராமன், செல்வமருதூர்

முக்கியடைவதற்கு, அன்பும் ஒழுக்கமும் முக்கியம்தான். ஆனாலும் அன்பு எனும் நிலை ஒருபடி முன்னே நிற்கிறது. அலங்காரத்தம்மாள் என்பவர் ரமண மகரிஷியின் தீவிர பக்தை. இவர் முதன்முறையாக ரமணரை சந்திக்க வந்தபோது, ரமணரும் அவரின் சிஷ்யர்களும், பிச்சை எடுத்துவந்த உணவையே சாப்பிட்டு வந்தனர். இதனைக்கண்ட அலங்காரத்தம்மாள் தனது சொத்தையெல்லாம் விற்றுவிட்டுத் திருவண்ணாமலைக்கு வந்து, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, உணவு தயாரித்து மகரிஷிக்கு தினமும் எடுத்துச் செல்வார். அவர் மிகவும் வயதாகி, தள்ளாத நிலையிலும் பகவானுக்கு உணவு கொடுப்பதை நிறுத்தவே யில்லை. ஒருநாள் மதிய நேரம், சாப்பாடு பரிமாறிய பிறகும் ரமணர் இலையில் கைவைக்காமல் இருந்தார். பின்னர் தான் அலங்காரத்தம்மாள் கொண்டுவந்த உணவு இலையில் வைக்கப்படாததைத் தெரிந்து கொண்ட சீடர்கள், அதனைக் கொண்டுவந்து பரிமாறியப் பிறகே பகவான் உணவுண்ண ஆரம்பித்தாராம். இதனைக் கண்டு பக்தர்கள் "இது உணவின் ருசியல்ல; அன்பின் ருசி' எனக் கூறி மகிழ்ந்தனர். தெய்வம் அன்பிற்குக் கட்டுப்பட்டது. எனவே முக்திக்கு வழி அன்புவழிதான் எனத் தெரிகிறது.

Advertisment

s

ப் பிரதோஷம் அன்று கோவிலைச் சுற்றி வலம்வரக்கூடாது என்கிறார்களே? -கே. பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்

பொதுவாகவே சிவன் கோவிலை முழுவதுமாக, முக்கியமாக சிவன் சந்நிதியை முழுமையாக சுற்றக்கூடாது. வட இந்தியாவில் நீர்க்கால்வரை செல்லவிட்டு பின் திரும்பி வரச் சொல்லிவிடுவார்கள். முழுமையாக சுற்ற அனுமதிக்க மாட்டார்கள். சிவனின் தலையிலிருந்து கங்கைநீர் பெருகி வந்துகொண்டிருப்பதாக நம்புகிறோம். அதனால் அந்த கங்கைநீர் செல்லும். வழியைக் கடக்கக் கூடாது என்பது ஐதீகம். அதனால் இயன்றவரை சிவன் சந்நிதியை முழுமையாகச் சுற்றவேண்டாம். இது பிரதோஷக் காலத்திற்கு மட்டுமல்ல; எந்நேரமும் கடைப்பிடிக்கவேண்டிய விதியாகும். ப் நாம் செலுத்தும் அஞ்சலி நிஜமாக இருந்தால் அமரர்களின் ஆசிர்வாதம் நமக்குக் கிடைக்கும்தானே? -ஸ்ரீவித்யா, சென்னை நாம் பக்தி சிரத்தையுடன் பித்ருக்களுக்குச் செய்யும் விஷயங்கள், நமக்கு ஆசிர்வாதமாக மாறிக் கிடைக்கும். இந்த ஆசிர்வாதத்தை பித்ருக்கள் நேரிடையாகவே தருவார்கள் என சொல்லமுடியாது. இங்கு பித்ருக்களுக்குக் கொடுக்கும் திவசம், தர்ப்பணம் போன்றவற்றை அதற்கென்றுள்ள பித்ரு தேவதைகள் பெற்றுக் கொண்டு, நமது பித்ருக்கள் எங்கே, எந்த ரூபத்தில் பிறந்திருந் தாலும் அங்கே அதற்கேற்ற உணவாக மாற்றி அவர்களுக்குக் கிடைக்கச் செய்வர். சிலர் இது போன்ற பித்ருக்கடன்களைச் செய்வதில்லை. அவர்களை காலமாகிவிட்ட அவர்களின் தாய்- தந்தை, பாட்டி- தாத்தா போன்றவர்கள் சபிப்பார்களா என்றால், சபிக்கமாட்டார்கள். ஆனால் பித்ரு தேவதை கள் சபித்துவிடுவார்களாம். இந்த சாபத்தால் வீட்டிலுள்ள பின் சந்ததியினர் சித்த பிரமை, கால்- கை வலிப்பு, துர் தேவைதைகளின் அவஸ்தை போன்ற இன்னல்களுக்கு ஆளாவர். முன்னோர்கள் செய்த பாவ- புண்ணியப்படி, மறுஜென்மம் கிடைத்திருக்கும். அவர்கள் கஷ்டப்படும் நிலையில் பிறந்தால் செல்வமும், மாடாகப் பிறந்தால் வைக்கோலும், குதிரையாகப் பிறந்திருந்தால் கொள்ளும், பறவையாகப் பிறந்திருந்தால் பழங்களும் என, அந்தந்த பிறவிகளின் இயல்புக்கேற்ற தேவைகளை பித்ரு தேவதைகள் கொண்டுசேர்ப்பர். நமது பித்ருக்கள் சாபமிடாவிட்டாலும், பித்ரு தேவதைகள் சாபமிடாமல் இருக்க வேண்டுமல்லவா? அதற்காகவாவது சிரத்தை யோடு சிரார்த்தம் செய்யுங்கள். முக்கியமாக பின் சந்ததியினரின் நலனை உத்தேசித்தாவது, பித்ரு காரியங்களை ஒழுங்காக நடத்தி ஆசி பெறவேண்டும்.

ப் பூஜையறையில் அனுமன் படம் வைக்கலாமா? -என். முருகானந்தம், மதுரை-19

ஒருசிலரைத் தவிர மற்றவர்கள், தாராளமாக வைத்து வணங்கலாம். புதிதாகத் திருமணமான இளம் தம்பதியர் ஒரே அறையில் சமயலறை, அதிலேயே ஒரு செல்ஃபில் சாமி படம் வைத்திருப்பது என இருந்தால், அவர்கள் கண்டிப்பாக அனுமன் படம் வைக்கக்கூடாது. ஏனெனில், ஆஞ்சனேயர் சுத்த பிரம்மச்சாரி தெய்வம். அதனால் தூய்மை அவருக்கு அவசியம். வீட்டில் தனியாகப் பூஜையறை அல்லது பூஜை அலமாரி இருப்பின், தாராள மாக அனுமன் படம் வைத்து வழிபடலாம். அனுமனைக்கொண்டு ஒரு புராண சம்பவம் கூறப்படுகிறது. இராமர் அவதாரித்து இராவணனை வதம்செய்யும் காலத்தில், அவருடன் கூடவே இருப்பதற்கு சிவனுக்கும் ஆசை வந்தது. இதை அவர் பார்வதிதேவியிடம் கூறியவுடன், அதிர்ச்சியடைந்த பார்வதிதேவி, "நானும் கூடவே வருவேன்' என்று கூறினார். அதற்கு சிவன், "வானர உருவில் செல்லப்போகிறேன்' என்று கூறவே, அதற்குப் பார்வதி, "அதனாலென்ன, நான் உங்களின் வாலாக ஒட்டிக்கொண்டாவது வருகிறேன்' என அருதி யிட்டுக் கூறிவிட்டாள். நாம் நினைத்த விஷயம் கைகூடாமல் தடைப்பட்டுக்கொண்டே வந்தால் ஆஞ்சனேயரின் வாலில் தினமும் சந்தனம், குங்குமம் கொண்டு ஒவ்வொரு பொட்டாக வைத்துக்கொண்டு வரவேண்டும். தினமும் திராட்சை அல்லது கற்கண்டு அல்லது முந்திரி வைத்து பொட்டு வைத்து, தீப தூபம் காட்டி வழிபடுகிறோம். இவ்வாறு பொட்டு வைப்பது பூர்த்தியாவதற்கும், நம் எண்ணம் நிறைவேறவும் சரியாக இருக்கும். நம்பிக்கையுடன் கடைப்பிடிக்கவேண்டும். இன்னொரு முக்கியமான விஷயம், அனுமனின் வாலிற்கு மட்டும்தான் பொட்டு வைக்கவேண்டும்; அனுமனுக்கு அல்ல. ஒரு நாளைக்கு ஒரு பொட்டு மட்டுமே வைக்கவேண்டும்.

ப் ஒழுக்கம் என்பது மனித குலத்திற்கு மட்டும்தானா? -என். ஜானகிராமன், திசையன்விளை

ஆம்; ஒழுக்கம், கட்டுப்பாடு, கடமை, கண்ணியம் என்பதெல்லாம் மனித குலத்திற்கு மட்டும்தான் உள்ளது. ஐந்தறிவு ஜீவன்களுக்குக் கிடையாது. தேவி மஹாத்மியம், "பாசம் என்பது மனிதருக்கு மட்டுமல்ல; பறவை, மிருகம் என அனைத்து ஜீவன்களுக்கும் உள்ளது' எனக் கூறுகிறது. பாசம் இருப்பதால் தான் தாய்ப்பறவை தன் குஞ்சுகளின் அலகில் உணவூட்டுகிறது. பாசம், அபிமானம் என்பவை மனிதருக்கு மட்டுமல்ல; எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானது என கூறுதிபடக் கூறுகிறது. ஆனால் ஒழுக்கம் பற்றி எதுவும் எங்கும் கூறப்படவில்லை.

ப் திருப்பதிக்குச் செல்வதற்குமுன் குலதெய்வக் கோவிலுக்குச் செல்ல வேண்டுமா? -அண்ணா அன்பழகன், அந்தணன்பேட்டை

இந்தப் பழக்கம் முன்னொரு காலத்தில் நடைமுறையில் இருந்ததுதான். ஏனெனில் அப்போதெல்லாம் திருப்பதி யாத்திரை என்பது மிகவும் கரடுமுரடான, கடினமான பயணம். எனவே மிக பத்திரமாகப் போய் சேவித்துவிட்டு பின் பத்திரமாக ஊர் திரும்பவேண்டுமே எனும் அச்சத் தில் முதலில் குலதெய்வத்தை வணங்கி, அவரின் ஆசியைப் பெற்றுக்கொண்டு கிளம்பினார்கள். இப்போதைய நிலை அப்படியல்ல. நினைத்தால் கிளம்பிவிடலாம். பயணம், யாத்திரை மிக எளிதாகவிட்டது. பணவசதி இருந்தால் வி.ஐ.பி. தர்சனமும் கிடைக்கும். எனினும் திருப்பதிக்குக் கிளம்புவதற்கு முன் மனதார குலதெய்வத்தை வணங்கி, முடிந்த காசை முடிச்சிட்டு வேண்டி வைத்துவிட்டுக் கிளம்பவும். சரி இது எதற்காக? அரை நொடியில் உங்களைத் தள்ளிவிடாமல், ஒரு நொடி நேரம் பெருமாள் தரிசனம் கிடைப்தற்காகத்தான்.

ப் வீட்டில் உடைந்த சுவாமி படங்களை குப்பைத் தொட்டியில் போடுவது சரியா? -கலைச்செல்வி, இராயபுரம்

மிகத் தவறு. வீட்டில் உடைந்த சுவாமி படங்கள், தெய்வச்சிலைகள் போன்றவற்றைக் குப்பையில் போட்டால், மிகப்பெரிய பாவம் வந்துசேரும். கூடியமட்டும் இதுபோன்ற உடைந்த தெய்வப் பொருட்களை, மரத்தின் வேர்ப் பகுதியில் வைத்துவிடுங்கள். ப்ரேம் போட்ட படம் உடைந்துவிட்டால், அந்த கண்ணாடியை அகற்றி தூர எறிந்துவிட்டு, படமும் சிதிலமாகி இருப்பின் அதையும் மரத்தின் அருகே வைத்துவிடுங்கள். அல்லது ஆறு, நதி, கடலில் போட்டுவிடுங்கள். காலில் மிதிபடாமல் பார்த்துக்கொள்ளவும்.

ப் சிலர் கோபத்தில் சாபம் விடுகிறார்களே, இது பலிக்குமா? -கவிதா, காஞ்சிபுரம்

அந்தக் காலத்தில் முனிவர்கள் கடும் தவமிருந்து, மிக மன வலிமையும், வாக்கு தீட்சண்யமும் பெற்றிருப்பர். இத்தகைய முனிவர்கள் சாபம் தந்தால் உடனே பலித்துவிடும். இப்போது அப்படியா? சாபம் விடுபவருக்கும் நல்ல யோக்யதை கிடையாது. சாபத்தை வாங்கு பவரும் சாதாரண ஆளாக இல்லை. இதில் சாபம் பலிக்க சாத்தியம் இல்லையே. ஆனால் ஒன்று. சாபம் பலிக்கவே பலிக்காதா என்றால், சிலசமயம் பலித்துவிடும். சாபம் வாங்கியவர் நிஜமாகவே தவறு செய்திருந்தால், நாளடைவில் அவரின் மன உறுத்தல் அதிகமாகும். இந்த உறுத்தல் மெள்ள மெள்ள அதிகமாகி, புத்தியை பாதித்து, உடல்நிலையையும் பாதித்துவிடும். இதனைக் காண்பவர்கள் "பாத்தியா, சாபம் பலித்து விட்டது' என்பர். ஆனால், இப்போதைய காலத்தில் ஏகப்பட்ட கெடுதல்களைச் செய்துவிட்டு ஒரு கேடுமின்றி நடமாடுகிறார்கள். இதற்குக் காரணம் அவர்களின் மன வலிமையேயாகும். எதற்குமே கவலைப் படாமல் கடந்துவிடும் கல்மனம் கொண்டோ ருக்கு சாபம் பலிக்குமா என்பது சந்தேகம் தான்.

om011124
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe