Advertisment

ஓம் பதில்கள் 01.08.24

/idhalgal/om/om-answers-010824

மூடநம்பிக்கையின் பிரதிபலிப்புதான் ஐதீகம்- உண்மையா? -ஆர்.கே. லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

Advertisment

ஐதீகம், சாஸ்திரம் என இவைபோன்ற நிறைய விஷயங்களை முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளனர். கோவில் அருகில், கொடிமரத்தைவிட அதிக உயரத்தில் கட்டடம் கட்டக் கூடாது என்பர். இவ்வாறு கட்டினால், சுவாமிக்கு "பிரஸ்டீஜ் ப்ராப்ளம்' வந்துவிடுமா என்ன? அப்படியெல்லாம் கிடையாது. கொடிமரம் அனேகமாக, செம்பு உலோகத்தினால் பொதிந்து அமைக்கப்பட்டிருக்கும். அதுவொரு இடிதாங்கிபோல் செயல்படும். எவ்வளவு பெரிய இடி, மின்னல் ஏற்பட்டாலும், அதனை "எர்ந்' செய்து, மற்ற கட்டங்களைக் காப்பாற்றிவிடும். எனவேதான் கோவில் கொடி மரத்தைவிட அதிகமான உயரத்தில், கோவில் அருகே கட்டாதீர்கள் என கூறப்படுகிறது. பொதுவாக வாசல்படியில் தலை வைத்துத் தூங்கினால் தரித்திரம் வந்துவிடும் என்பர். வாசல்படியில் நிறைய எதிர்மறை சக்திகள் பரவுவதாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த இடத்தில் நாம் தலை வைத்துத் தூங்கினால், அந்த சக்தி நமது மூளையை பாதிப்பதாகக் கூறுகின்றனர். இவ்விதம் மூளை பலவீனமடைந்து, யோசனைகள் சீர்கெட்டால் தன்னிச்சையாக தரித்திரம் வரத்தான் செய்யும். இதைத்தான் வாசல் படியில் தலைவைத்துத் தூங்கக் கூடாது என்றனர் போலும். இதன் அடிப்படையில்தான். வாசல்படிக்கு, மஞ்சள், குங்குமம் வைப்பதும் சாம்பிராணி தூபம், கற்பூர தீபம் காட்டுவதும் வழக்கத்தில் உள்ளது போலும். எனவே மூடநம்பிக்கைதான் ஐதீகம் எனக் கூறுவதைத் தவிருங்கள். ஒவ்வொன்றிலும் ஒரு மனித வாழ்வின் பாதுகாப்பு அம்சம் ஒளிந்திருக்கிறது.

Advertisment

மந்திரம் என்பது தந்திரமா! -சீனிவாசன், குடியாத்தம்.

மந்திரம் என்பது சப்தம்தான். சப்தம் என்றால் என்ன? அது

மந்திரம் என்பது சப்தம்தான். சப்தம் என்றால் என்ன? அது ஒரு அதிர்வலைகள் தான்; அதிர்வுதான் என விஞ்ஞானத்தில் கூறுகிறார்கள். அதிர்வு உண்டானால் சப்தம் உண்டாகிறது. இதனால் சப்தம் உண்டாக வேண்டுமானால். அதற்கான அதிர்வு ஏற்பட்டாக வேண்டும். பரமாத்மாவின் சுவாசமான வேத சப்தத்திலிருந்து லோகம் வந்தது. இது சாதாரண மனிதர்கள் காதுக்கு எட்டாதது; புரிபடாதது. கடுந்தபஸ் பண்ணிய ரிஷகள் இந்த சப்தத்தை, சலனத்தை, அதிர்வலைகளை, பகவானின் சுவாச கதிகளை உள்வாங்கும் சக்தி கிடைக்கப் பெற்றார்கள். இந்த சப்தத்தை அவர்கள் மந்திரமாக மாற்றினார்கள். இதனையே வேத மந்திரம் என்றனர். வேதத்துக்கு "ச்ருதி' என்று பெயர். கேட்கப்படுவது எதுவோ அதுவே "ச்ருதி'. சிரோத்ரம் என்றால் காது. எழுதிப் படிக்காமல், வாயால் சொல்லி, காதால் கேட்கப்படுவதால் மந்திரங்களை ச்ருதி என்றழைத்தனர். இதனால்தான் மந்திரங்களைத் தவறில் லாமல் சொல்லவேண்டும் என்கிறார்கள். ஒரு சிறு ஏற்ற- இறக்க ஒலி, சப்தம் அதன் பலனை மாற்றிவிடக்கூடும். த்விஷ்டா என்ற தேவதச்சன், இந்திரனை வதம் செய்யக்கூடிய பிள்ளை வேண்டுமென மந்திரத்தை ஜெபம் செய்தான். இந்த மந்திரங்களின் அக்ஷர உச்சரிப்பில் பிழை ஏற்பட்ட காரணத்தால், இந்திரனால் வதம் செய்யக்கூடிய பிள்ளையைப் பெற்றான். அவருடைய தவறான உச்சரிப்பு பலித்து, அவருடைய பிள்ளையை இந்திரன் வதம் செய்துவிட்டான். இதனால்தான் வேத மந்திரங்களில் உச்சரிப்பில் தவறு ஏற்பட்டுவிடக்கூடாது எனக் கூறுவர். வேதத்தை தமிழில் "எழுதாக் கிளவி' எனக் கூறுவர். எனவே மந்திரம் என்பது தந்திரமா என கேள்வி கேட்காதீர்கள். மந்திரம் என்பது, பகவானின் அதிர்வுகளிலிருந்து பெறப் பட்டது. இதனால்தான் வீட்டில் சில எதிர்மறை விஷயம் நடப்பதுபோல் இருப்பின் சில யாகங்கள் பரிந்துரைக்கப்படுகிறது. அந்த யாக மந்திர உச்சரிப்பு சப்தம் அந்த வீட்டில் நல்ல அதிர்வலைகளை உண்டாக்கி, நேர்மறை ஆற்றலைக் கொடுக்கிறது. அதுபோல், கோவில்களில் நடக்கும் வேத சடங்குகளில் அமர்ந்து கேட்டாலும், யாகப்பாராயணம் செவிகளில் விழுந்தாலும், பீடைகள் ஒழியும் என நம்புகிறோம். தயவுசெய்து மந்திரங்களைப் பழிக்காதீர்கள். அது தெய்வத்தையே அவமதித்தது போலாகும்.

aa

இறைவன் ஒருவரே. அவர் எங்கும் இருக்கிறார் என்றால் கோவில் குளமென்று தேடியலைய வேண்டுமா? -கே.எல். புனிதவதி, கோவை-17.

இந்த சந்தேகத்திற்கு நிறைய ஆன்மிகப் பெரியவர்கள் பதில் கூறியிருக்கின்றனர். பசுமாட்டிலிருந்துதான் பால் சுரக்கிறது. அதன் மடியிலிருந்து மட்டுமே. நம்மால் பால்கறக்க முடியும். அதன் முகத்தை வருடினாலோ, வாலைத் திருகினாலோ பால் கிடைக்குமா என்ன? கிடைக்காதல்லவா. அதுபோலத்தான் எங்கும் நீக்கமற இறைவன் உறைந்துள்ளார். எனினும் கோவில் சென்று, அவரை தரிசித்து, மனமுருக வேண்டினால் நமக்கு மனம் நிறையும். வாழ்வு வளம் பெறும். மேலும் நிறைய கோவில் தலக் குளங்கள் மிகச் சிறப்பு பெற்றவை. அதில் நீராடினால் நமது பீடைகள் ஒழியும். ஆமாம்; தெரியாமல்தான் கேட்கிறேன். வீட்டிற்குள்ளேயே இருந்து என்ன செய்யப் போகிறீர்கள்? நான்கு கோவில். குளம் போய் நாற்பதுவித ஜனங்களைப் பார்த்தால், மனம் சந்தோஷித்து விசாலமடையுமே. ஒரே இறைவனுக்கு சகஸ்ரநாமம் உள்ளதே. எனவே நிறைய கோவில் குளம் செல்லுங்கள்; புண்ணியம் பெறுங்கள்.

தேய்பிறை அஷ்டமியின் சிறப்பென்ன? -வி. உமாமகேஸ்வரி, திருப்பத்தூர்.

ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்புப் பெயர் உள்ளது.

சித்திரை மாதம்- ஸ்னாதனாஷ்டமி, மகாதேவாஷ்டமி.

வைகாசி- சதாசிவாஷ்டமி.

ஆடி- நீலகண்டாஷ்டமி

ஆவணி- ஸ்தாணு அஷ்டமி, சண்புகாஷ்டமி.

புரட்டாசி- சம்புகாஷ்டமி.

ஐப்பசி- ஈசான சிவாஷ்டமி, ஈஸ்வராஷ்டமி.

கார்த்திகை- கால பைரவாஷ்டமி, ருத்ராஷ்டமி.

மார்கழி - சங்கராஷ்டமி.

தை- தேவதாஷ்டமி.

மாசி- மகேஸ்வராஷ்டமி.

பங்குனி- திரியம்பகாஷ்டமி.

தேய்பிறை அஷ்டமியன்று பைரவருக்கு பூஜை செய்வது பழங்காலத்திலிருந்து நடத்தப் படுகிறது. இந்த வழிபாடு தீமைகளை விலக்கி நன்மைகளை நல்கும் சிறப்புடையது.

திருமணத்திற்குப் பொருத்தம் பார்ப்பது அவசியமா? -ஜெயலட்சுமி கிருஷ்ணன், சென்னை-14.

திருமணம், காதல் திருமணமாக இருப்பின் ஜாதகப் பொருத்தம் பார்க்கவேண்டாம் என, ஜோதிட மூலநூல்கள் கூறுகின்றன. பெரியவர்களால் நிச்சயம் செய்யப்படும் திருமணத்திற்கு, கண்டிப்பாகப் பொருத்தம் பார்த்துச் செய்யவேண்டும் என அதே ஜோதிட நூல்கள் தெளிவுபடுத்துகின்றன. இரு மனங்கள் இணைந்துவிட்ட பின் மணப் பொருத்தத்திற்கு அங்கே வேலை யில்லை. வாழ்வில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு களை அவர்களே சமாளித்துக்கொள்வர் என்பதுதான் அதன் உட்கருத்தாகும்.

ஆடி மாதத்தை அம்மனுக்குரிய மாதம் என ஏன் கூறுகின்றனர்? -கே. ராஜேஸ்வரி, காஞ்சிபுரம்.

ஆடி மாதம் என்பது, சூரியன் கடக ராசியில் நிலைகொண்டிருப்பார். கடகம் என்பது சந்திரனின் வீடு. சந்திரன் பெண் தெய்வமான அம்மனைக் குறிக்கும். அங்கு சூரியன் நிலைகொள்ளும் மாதம், தாயும் தந்தையும் மற்றும் ஈசனும் அம்பாளும் ஒன்றாக இருக்கும் மாதமாகும். எனவே ஆடி மாதம் அம்மனை வணங்குவதில் வியப்பு ஒன்றுமில்லை. இன்னொரு காரணம் என்னவென்றால் சூரியன் தனது சொந்த வீடான சிம்ம ராசியின் விரய வீட்டில் செல்லும் மாதமிது. சூரியன் ஒரு ராஜ கிரகமாகும். அவர் தனது வீட்டிற்கு விரயத்தில் செல்லும்போது செய்யும் எந்த செயலும் அவ்வளவு விருத்தி தராதென நம்பப்படுகிறது. எனவே சொந்த லௌகீக வேலையை சற்று ஒதுக்கிவைத்துவிட்டு கோவில் விஷயத்தைக் கையில் எடுத்துக்கொள்கின்றனர். கடக ராசி என்பது காலபுருஷ தத்துவத் தின் 4-ஆமிடமாகும். இது தாய் மற்றும் தாய்வீட்டைக் குறிக்கும். எனவேதான் இந்த ஆடி மாதத்தில், பெண்கள் அம்மன் கோவிலை நோக்கி, தன் தாய் இல்லம் நோக்கிப் படையெடுக்கின்றனர். அம்பாளும் தன் பெண்களை, உச்சி முகர்ந்து ஆசீர்வதிக்கி றாள். எனவே பெண்கள், சந்திரன் தனது சொந்த வீடான கடக ராசியின் ஆடி மாதத்தில், அம்பாளை வணங்குவதில் வியப்பேது?

கோவில் கர்ப்பகிரகம், மூலவர் தரிசனம் மட்டும் போதும்தானே? -எஸ். முருகேசன், விழுப்புரம்.

கோவில் கட்டடத்தில் ஆறு உறுப்புகள் உள்ளன. அடி, உடல், தோள், கழுத்து, தலை, முடி ஆகியவை. இதன் சிற்ப முறைப்பெயர்கள்- அதிஷ்டானம், பாதம், மஞ்சம், கண்டம், பண்டிகை, ஸ்தூபி என்பன. அடி அல்லது அதிஷ்டானம்- இது பூமி, தலம், ஆதாரம் எனும் அர்த்தம் பெறும். உடல் அல்லது பாதம்- இது கருவறையின் சுவர்களைக் குறிக்கிறது. தோள் அல்லது மஞ்சள்- இது தள வரிசையைக் குறிப்பிடும். கழுத்து அல்லது கண்டம்- இது களம் மற்றும் கர்ணம் என அறியப்படும். தலை அல்லது பண்டிகை- இதனை கூரை அல்லது சிரம் என்பர். முடி அல்லது ஸ்தூபி- இதனை சிகை அல்லது கலசம் என்பர். இப்போது யோசியுங்கள். ஒரு மனிதரைப் பார்த்தவுடன் அவரது தலையை மட்டும் பார்த்துவிட்டு வந்துவிட இயலுமா? முழு உருவத்தையும்தானே பார்த்தாக வேண்டும். எனவே கோவிலுக்குப் போனால், கர்ப்பக் கிரகம் உட்பட கொடிமரம். கோபுரம் மற்றும் அனைத்து தெய்வ சந்நிதிகளையும் தரிசனம் செய் யுங்கள். இவ்வாறு வணங்கும்போது, முழுமை யாக தெய்வத்தை வணங்கிய பலன் கிடைக்கும்.

om010824
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe