நகரின் முக்கியஸ்தர்களெல்லாம் கூடியிருந்தார்கள். நடுவே நின்றிருந்தாள் சுயாதை! மருமகளான சுயாதை; தன்னை அவமானம் செய்ததாக பஞ்சாயத்தைக் கூட்டியிருந்தார் அவளின் செல்வந்தரான மாமனார்.
ஆனால்...
தன்மீது குற்றமில்லை என்பதால் அவள் பஞ்சாயத்தார் நடுவே கம்பீரமாக நின்றிருந்தாள்.
அவளுடைய அப்பாவின் நேர்மையை அறிந்திருந்தவர்கள் அவளை கண்ணியக்குறைவின்றி விசாரித்தனர்.
"உன் மாமனார் தங்கத் தட்டில் நெய்யும் பருப்பும் உருகி வழிய வழிய... சுடச்சுடத் தயாராகியிருந்த சர்க்கரைப் பொங்கலை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நீதான் பற
நகரின் முக்கியஸ்தர்களெல்லாம் கூடியிருந்தார்கள். நடுவே நின்றிருந்தாள் சுயாதை! மருமகளான சுயாதை; தன்னை அவமானம் செய்ததாக பஞ்சாயத்தைக் கூட்டியிருந்தார் அவளின் செல்வந்தரான மாமனார்.
ஆனால்...
தன்மீது குற்றமில்லை என்பதால் அவள் பஞ்சாயத்தார் நடுவே கம்பீரமாக நின்றிருந்தாள்.
அவளுடைய அப்பாவின் நேர்மையை அறிந்திருந்தவர்கள் அவளை கண்ணியக்குறைவின்றி விசாரித்தனர்.
"உன் மாமனார் தங்கத் தட்டில் நெய்யும் பருப்பும் உருகி வழிய வழிய... சுடச்சுடத் தயாராகியிருந்த சர்க்கரைப் பொங்கலை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நீதான் பறிமாறினாய்.
பிறகு ஏன் ஒரு புத்தபிக்கு யாசகம் கேட்டு வந்தபோது... "மாமா... பழைய சோறு தான் சாப்பிடுகிறார். புதுச்சோறு சாப்பிடும் போது வாருங்கள்'' என பிக்குவிடம் சொன்னாய்? உன் மாமனார் செல்வந்தர். ஆனால் அவருக்கு சுடுசோறு சாப்பிட வசதி யில்லை என்பதுபோல் ஏன் சொன்னாய்?'' -இப்படிக் கேட்டுவிட்டு பஞ்சாயத் தார் அவளின் பதிலுக்காக அவளது முகத் தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
"என் மாமனார் செல்வாதிபதிதான். ஆனாலும் போதிய தர்ம தானத்தை அவர் செய்யவில்லை. தர்மம் செய்யாதவர் களுக்கு அடுத்த பிறவியில் புண்ணியம் கிடைக்காது. இதை மாமாவிடம் நேரடியாக எப்படிச் சொல்லமுடியும்? மாமா நெய்ப் பொங்கல் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது... யாசகம் கேட்டு குரல் கொடுத்தார் பிக்கு. மாமா அதைப் பொருட்படுத்தவில்லை. அவர் அனுமதியின்றி நான் பொங்கலை பிக்குவிற்கு கொடுத்துவிடமுடியாது. அதனால்தான் "மாமா பழைய சோறு சாப்பிடுகிறார்' எனச் சொன்னேன்.'' -இப்படி விளக்கம் சொன்னால் சுயாதை.
சரிம்மா... "இன்னும் உணவு தயாராகவில்லை' என்று சொல்லியிருக்கலாமே? ஏன் பழைய சோறு எனச் சொன்னாய்?''
"அதற்குக் காரணம் இருக்கிறது. மாமாவிடம் தர்ம சிந்தனை இருக்கிறது. ஆயினும் இப்போது வெளிப்படுத்தவில்லை. அதனால்... மாமா போன பிறவியில் செய்த புண்ணியத்தால் கிடைத்த பலனை இந்தப் பிறவியில் அனுபவிக்கிறார்... எனும் பொருட்டே... "மாமா பழைய சோறு சாப்பிடுகிறார்...
அதாவது... பழைய பிறவி பலனை
அனுபவிக்கிறார்' எனும்விதமாக....
அவ்வாறு சொன்னேன்'' என்றாள்.
சுயாதையின் அறிவும், புத்தம்சமும் பஞ்சாயத்தாரை வியக்கவைத்தது. புத்தரின் ஞானத்தைக்கொண்ட சுயாதையை எல்லாரும் வணங்கினர்.
அவளின் கண் நிறைய காட்சிதந்த புத்தர், தன் கருணைச் சிரிப்பால் அவளை ஆசீர்வதித்தார்.
உள்ளம் தூய்மையானால் அங்கே பகவான் குடியிருப்பார் என்பது சுயாதை மூலம் நிரூபிக்கப்பட்டது. பின்னாளில் புத்த பிக்குணி (பெண் துறவி) ஆகி... பல்வேறு புத்தமடங்களை உருவாக்கினாள் சுயாதை.
சிவாஜிக்காக என்.டி.ஆர், பாடுவது போல் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் மெல்லிசை மன்னர்கள் இசையில் கண்ணதாசன் எழுதிய "கர்ணன்' படப் பாடல்...
"உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா!
வருவதை எதிர்கொள்ளடா'
எனத் தொடங்கும்.
சுயாதையும் "வருவதை எதிர்கொள்ளத்' தயாராகியே...
அப்படிச் சொன்னாள்.
உள்ளம் போற்றுவோம்... அதில்
உள்ளதைப் போற்றுவோம்.
(பெருகும்)