மேஷம்

மேஷ ராசிநாதன் செவ்வாய் 6-ல் மறைவாக இருக்கிறார். மாத முற்பாதிவரை 5-க்குடைய சூரியனும் அவருடன் மறைகிறார். நினைத்த காரியம் தாமதப் படுதல், தந்தைவழியில் சில சங்கடங் களை சந்தித்தல் போன்ற பலன் கள் ஏற்படலாம். 2-க்குடைய சுக்கிரன் 7-ல் ஆட்சிபெற்று 5-ஆம் தேதிமுதல் ராசியைப் பார்க்கி றார். எனவே பொருளாதாரச் சுமை, பற்றாக்குறை விலகும். தேவையற்ற செலவுகள் குறையும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வளம் பெருகும். பகைவர் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். புதிய வீடு, மனை வாங்கும் அமைப்புகளைப் பற்றிய சிந்தனை மேலோங்கும். சுபகாரியப் பேச்சுவார்த்தை நல்ல முடிவுக்கு வரும். சிலர் பணி நிமித்தமாக குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருந்தால் மீண்டும் சேரும் வாய்ப்புகள் ஏற்படும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஆதரவும் அனுசரிப்பும் உண்டாகும். சிலருக்கு உயர்பதவி அடையும் யோகமும் அமையும்.

ரிஷபம்

Advertisment

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 5-ஆம் தேதிமுதல் 6-ல் மறைகிறார். என்றாலும் ஆட்சியாக இருக்கிறார். எனவே மறைவு தோஷத்தைப் பற்றிய கவலை தேவையில்லை. குரு 7-ல் நின்று ராசியைப் பார்க்கும் பலத்தால் ராசிநாதனின் மறைவு பாதிக்காது. அட்டமத்துச்சனி சில காரியங்களில் மந்தத்தன்மையை ஏற்படுத்தினாலும் காரிய நிறைவேற்றம் உண்டு. அவ்வப் போது குடும்பத்தில் சிற்சில குழப்பங்களும் வாக்குவாதங் களும் சங்கடங்களும் நிகழலாம். 2-ல் இருக்கும் ராகுவும், அவரைப் பார்க்கும் சனி, கேதுவும் இதற்கு ஒரு காரண மாக அமைகிறார்கள். உறவினர் வகையில் கருத்து வேறுபாடு ஏற்பட இடமுண்டு. குறிப்பாக சகோதரவகையில் தாமரை இலைமேல் தண்ணீர்போல ஒட்டியும் ஒட்டாமலும் செயல்படும். சிலர் திடீர் இடமாற்றத்தை சந்திக்கலாம். அதன்பிறகு பதவி உயர்வும் ஏற்படலாம். தொழில் கூட்டாளிகளால் திடீரென சில மனக்கிலேசம் வந்துவிலகும். பணவிரயமும் உண்டாகலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்கு 5-க்குடைய சுக்கிரன் ஆட்சி. அவருடன் ராசிநாதன் புதன் சேர்க்கை. எனவே நற்பலன்கள் நடைபெறும். எடுத்த செயலை வெற்றிகரமாக நிறைவேற்றலாம். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். 4-ல் செவ்வாய். மனை, வாகனம் வாங்கும் அமைப்பும் யோகமும் ஏற்படும். 10-க்குடைய குரு 6-ல் மறைந் தாலும் 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால், தொழில்துறையில் நஷ்டத்திற்கு இடமில்லை. வரவும் செலவும் மாறிமாறி வந்து கொண்டிருக்கும். சேமிப்புக்கு இடமிருக்காது. 7-ல் உள்ள சனி, கேதுவால் கணவன்- மனைவிக்குள் சச்சரவு வரும். திருமணமாகாத ஆண்- பெண்கள் திருமணத் தாமதம், தடைகளை சந்திக்கலாம். உறவினர்வகையில் சற்று ஒதுங்கியிருப்பது நல்லது. நண்பர்களின் ஆதரவும் உறுதுணையும் ஒருபுறம் நல்ல நம்பிக்கையையும் தைரியத்தையும் தரும். தகப்பனார்வழி சொத்து சம்பந்தமான வழக்கு வில்லங்கம், வியாஜ்ஜியங்களில் சாதகமான பலனை எதிர்பார்க்கலாம்.

lll

கடகம்

Advertisment

கடக ராசிக்கு 5-ல் குரு நின்று ராசியைப் பார்ப்பது ஒரு சிறப்பு. உங்கள் திறமை, புகழ், கீர்த்தி, செல்வாக்கு உயரும். அந்தஸ்து பெருகும். 10-க்குடைய செவ்வாய் 3-ல் மறைகிறார். தொழில் அல்லது வேலை அல்லது உத்தியோகத்தில் சில சங்கடங்கள் ஏற்படலாம். சுயதொழில் புரிபவர்கள் வேலையாட்கள் சிலரை விலக்குவதால் பணிச்சுமை கூடலாம். அதனால் யாரைப் பார்த்தாலும் எரிச்சல், நிம்மதியற்ற சூழ்நிலையை சந்திக்கநேரும். கடந்த மாதம் ஏற்பட்ட விரயம் விலகும். பொருளாதாரச் சேர்க்கை உண்டாகும். ஒன்றாக வேலை பார்த்த நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடு, வாக்குவாதம், மோதல் போன்றவை ஏற்படலாம். 6-ல் உள்ள சனி எதிரித் தொல்லையை விலக்குவார். நோய்நொடி, பிணிபீடைகளும் அகலும். ஆரோக்கியம் தெளிவாகும். கடன்சுமை குறையும். பொருளாதார வளம் மேம்படும். அவப்பெயர் மறையும்.

சிம்மம்

சிம்ம ராசிநாதன் சூரியன் 3-ல் இருக்கிறார். மாத முற்பாதிவரை 2-ஆம் இடத்திலும், பிறகு 3-ஆம் இடத் திலும் சஞ்சாரம் செய்கிறார். பணத் தேவைகள் பூர்த்தி யாகும். எந்த வொரு செயலை யும் சற்று பிர யாசைப்பட்டே முடிக்கவேண்டி வரும். 11-ல் உள்ள ராகு தொழில் அமைப்பு களில் வெற்றியைத் தேடித் தரும். குடும்பத்தில் கணவன்- மனைவி கருத்து வேறுபாடு ஏற்பட்டு மறையும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதன்மூலம் ஒற்றுமைக் குறைவையும் மனக்கிலேசங் களையும் தடுக்கலாம். சுக்கிரனால் பிரிந்த தம்பதிகள் ஒன்றுசேர்வார்கள். அரசு ஊழியர்கள் விண்ணப்பித்த கோரிக்கைகள் நிறைவேறும். அரசுவகையில் எதிர்பார்த்த கடனுதவியும் எளிதில் கிடைக்கும். 5-ல் உள்ள சனி, கேதுவால் பிள்ளைகளைப் பற்றிய கவலை அல்லது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய பயம், பிள்ளைகளுக்கு வருமானமற்ற நிலை மனதை வாட்டலாம். திருமணமான சிலருக்கு வாரிசு தாமதம் உண்டாகும்.

கன்னி

கன்னி ராசிநாதன் புதன் 2-ல் இருக்கிறார். அவருடன் 2-க்குடைய சுக்கிரன் ஆட்சி பெற்று சேர்க்கையாகிறார். கடந்த மாதம் காணப்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகள் அகலும். கொடுக்கல்- வாங்கலிலுள்ள சிக்கல்கள் தீரும். கணவர்களுக்கு மனைவியால் நன்மையும் ஆதாயமும் உண்டாகும். அவர்களால் பொன், பொருள் சேர்க்கை நிகழும். கணவன்- மனைவியிடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு தோன்றினாலும் ஒற்றுமையில் பிரிவு, பிளவு ஏற்படாது. உறவினர் களிடையே ஏற்பட்ட மனவருத்தம் மாறி உறவு மீண்டும் ஒன்றுசேரும். உத்தியோகத்துறையில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகமாகக் காணப் படும். கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும் என்றா லும், உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். வீண் அலைச்சல் அதிகரிப்பதால் உடல்நலத்தில் சோர்வு, அசதி உண்டாகும். பிள்ளைகளைப் பற்றிய கவலையும் மனபயமும் மாறும். உங்கள் பேச்சு கேட்டு அவர்களின் நடவடிக்கை அமையும்.

துலாம்

Advertisment

இந்த மாதம் துலா ராசி நாதன் சுக்கிரன் ஆட்சியாக இருக்கிறார். 7-ஆம் இடத் தைப் பார்க்கிறார். கணவன்- மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை ஒட்டிய ஆண்- பெண்களுக் குத் திருமண யோகம் உண்டா கும். 7-க்குடைய செவ்வாய் 12-ல் மறைகிறார். 11-க்குடைய சூரியனும் அவருடன் மறைகிறார். தொழில்துறையில் சில சங்கடங்கள் உண்டாகலாம். சகோதரவழியில் நிலவும் கருத்து வேறுபாடுகளும் மனக்கிலேசமும் மாறுவதற்கு இடமில்லை. 2-ல் இருக்கும் குரு பொருளாதாரப் பிரச்சினைகள் இல்லாத வகையில் மாற்றுவார். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். செயலில் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மதிப்பு, மரியாதைக்குக் குறைவிருக்காது. தனியார்துறையில் பணி புரிபவர்களுக்கு திடீர் இடமாற்றம் உண்டாக லாம். எனினும் அது நல்ல மாற்றமாகத் திகழும். 12-க்குடைய புதன் ஜென்ம ராசியில் இருக்கிறார். தாய்மாமன் வகையில் சுபச்செலவுகள் ஏற்படும். அவரால் ஆதாயமும் உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு 11-ல் சூரியன் இருக்கிறார். தொழில்துறையில், உத்தியோகத்தில் அல்லது வேலையில் லாபகரமான சூழல் தென்படும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். எந்த ஒரு செயலையும் செவ்வனே செய்து முடிக்கும் வல்லமை உருவாகும். குடும்பத்தில் மரியாதை அதிகரிக்கும். ஏழரைச்சனி நடப்பதால் அலைச்சல் உண்டாகும். சிலருக்கு ஊர்விட்டு ஊர் மாறும் வாய்ப்புகள் ஏற்படும். தாயைப் பிரியும் சூழலும் அமையும். 2-ல் சனி, கேது- அவர்களைப் பார்க்கும் ராகுவால் குடும்பத்தில் அவ்வப்போது சிற்சில சலசலப்புகள் தோன்றி மறையும். சகோதர வழியில் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். அரசுத்துறையில் பணிபுரிவோருக்குப் பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம். சக ஊழியர்களால் ஒத்துழைப்பும் அனுசரணையும் அமையும். அரசுவகையில் எதிர்பார்த்த கடனுதவி தாமதப்படும். மாணவர்களுக்கு படிப்பில் மறதியும் மந்தத்தன்மையும் நிலவும். லட்சுமி ஹயக்ரீவரை வழிபடுவதன்மூலம் மறதித்தன்மை மாறலாம்.

தனுசு

தனுசு ராசிக்கு 10-ஆம் இடமான தொழில் ஸ்தானத்தில் சூரியன் மாத முற்பகுதிவரை இருக்கிறார். அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்கள் நன்மையாக முடியும். 5-க்குடைய செவ்வாய் 10-ல் கேந்திரம் பெறுகிறார். திரிகோணாதிபதி கேந்திரம் ஏறுவது நல்லதுதான். தனியார்துறை அல்லது சுயதொழில் புரிவோருக்கு ஏற்ற மாதமாக இம்மாதம் அமையும். 5-ஆம் தேதிமுதல் 11-க்குடைய சுக்கிரன் 11-ல் ஆட்சிபெறுகிறார். 9-க்குடைய சூரியன் 10-ல் இருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் செயல்படுகிறது. குடும்பத்தில் மங்களகரமான சூழ்நிலை உருவாகும். சுபநிகழ்ச்சி குறித்த பேச்சு வார்த்தை நடைபெறும். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இருந்த மனவருத்தங்கள் மாறி ஒற்றுமையுணர்வு மேலோங்கும். ஜென்மத்தில் சனியும் கேதுவும் இருப்ப தால், உடல்நலத்தில் அவ்வப்போது தொந்தரவுகளும் வைத்தியச்செலவுகளும் வந்து விலகும். கண் சம்பந்தப்பட்ட நோயால் அவதிப்படுவோருக்கு நோய்நிவர்த்தி உண்டாகும். எண்ணிய செயல் இனிதே நிறைவேறும்.

மகரம்

மகர ராசிக்கு 12-ல் சனியும் கேதுவும் இருக்கிறார்கள். தற்போது ஏழரைச்சனியில் விரயச்சனி நடக்கிறது. முதல் சுற்று நடப்பவர்களுக்கு மங்குசனியும், இரண்டா வது சுற்று நடப்பவர்களுக்கு பொங்குசனியும், மூன்றாவது சுற்று நடப்பவர்களுக்கு மரணச்சனியும் நடக்கும். மரணச்சனி என்றவுடன் மாரகம் என்று அர்த்தமல்ல. வேதனைகளையும் உடல் உபாதைகளையும் சந்திக்கநேரலாம் என்றும் அர்த்தமாகும். 6-ல் உள்ள ராகு உங்களுக்கு நன்மைகளைத் தருவார். 6-ஆமிடமான நோய், கடன், சத்ரு ஆகியவற்றைப் பொருத்தளவில் சாதகமான பலனைச் சந்திக்கலாம். "கெட்டவன் கெட்டி டில் கிட்டிடும் யோகம்' என்பது ஜோதிட மொழி. ராகு கெட்ட கிரகம். அவர் கெட்ட இடத்தில் இருப்பதால் அந்த இடத்துப் பலனைக் கெடுப்பார். கடன் நிவர்த்தியடையும். நோய் குணமாகும். சத்ரு ஜெயம் உண்டாகும். இந்த மாதம் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். 9-ல் சூரியன் இருப்பதால் சிலர் தகப்பனார்வகையில் இழப்பு, சங்கடம் போன்றவற்றை சந்திக்கநேரும்.

கும்பம்

கும்ப ராசிக்கு 9-க்குடைய சுக்கிரன் 9-ல் ஆட்சி. 10-ல் குரு நின்று 2-ஆம் இடத் தைப் பார்க்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியடையும். ஆடம்பர வாழ்க்கை, வசதி போன்ற சௌகரியங்களுக்குக் குறைவிருக்காது. முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆடை, அணிகலன்கள் வாங்கலாம். உறவினர் களுக்கிடையே மனவருத்தம் மாறி இணக்கம் ஏற்படும். பிணக்குகள் நீங்கும். 3-க்குடைய செவ்வாய் 8-ல் மறைகிறார். உடன்பிறந்த சகோதர- சகோதரிகளுக்குள் மனவருத்தம் உண்டாகும். தந்தைவழியிலும் சில வருத்தப்படும்படியான நிகழ்வுகள் அமையலாம். ராசிநாதன் சனி 11-ல் இருப்பது ஒருவகையில் ஆறுதல்தான். என்றாலும் அவருடன் இணையும் கேதுவும், அவர்களைப் பார்க்கும் ராகுவும் சங்கடங்களைத் தரலாம். பிள்ளைகள்வகையில் சற்று கவனமுடன் நடந்துகொள்வது அவசியம்.

மீனம்

மீன ராசிநாதன் குரு 9-ல் நின்று உங்கள் ராசியைப் பார்ப்பது மிகச் சிறப்பு. கழுவின மீனில் நழுவின மீன்போல உங்கள் செயல்பாடுகள் அமையும். திறமை, மதிப்பு, மரியாதை, செல்வாக்கு எல்லாம் உயரும். மனதில் உற்சாகம் பிறக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களைப் புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மையறிந்து உங்களுடன் வந்து இணைந்துகொள்வர். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடந்தேறும். பிள்ளைகளுக்கு தட்டிக்கழித்துக்கொண்டிருந்த நல்லவை யாவும் தானாகத் தேடிவரும். சிலர் தொழில்துறையில் புதிய ஒப்பந்தங்கள் போடலாம். கட்டடம், மனை சம்பந்த மான துறையிலும் ஆர்வம் காட்டலாம். அனுகூலமாகவும் அமையும். 7-ல் உள்ள செவ்வாய் கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாட்டை நிகழ்த்துவார். அதற்கு இடம் தராதவகையில் நீங்களும் உங்கள் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்வது நல்லது. பொறுமையையும் அனுசரிப் புத் தன்மையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். விட்டுக்கொடுத்துச் செல்லும் பழக்கத்தையும் கடைப்பிடிப்பது நல்லது.