1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் முதல் 15 நாட்களுக்குள் பண விஷயம் போன்ற முக்கிய விஷயங்களை முடித்துக்கொள்வது நல்லது. அடுத்த 15 நாட்களுக்கு எந்த விஷயமும் இழுபறியாக அமையும். பணவரவில் குறைவிருக்காது என்றாலும், கவனமாக செலவுசெய்வது நல்லது. பணியாளர்கள் சரியாக வேலைக்கு வராமல் உங்களை நெருக்கடிக்கு ஆளாக்குவர். உங்கள் தொழில் விஷயங்கள் அக்டோபர் 20-ஆம் தேதிக்குமேல் சற்று வெளிச்சம் தரும். அதுவரை நீங்கள் என்ன முயன்றா லும் சற்று இடையூறு செய்யும். முக்கியமாக அரசு வரி போன்ற இனங்கள் உங்களைக் கலங்கவைக்கக் கூடும். சிலர் லஞ்சம் கொடுக்க வேண்டியும் வரலாம். சிலரது இளைய சகோதரியின் காதல் விஷயங்கள் தெரிந்து வீடு களேபரமாகும். சிலருக்கு விளம்பரப்பட வாய்ப்பு கிடைக்கும். அரசு கட்டடம் சார்ந்த கான்ட்ராக்ட், ஒப்பந்தம், குத்தகை வாய்ப்பு தேடிவரும். அதனை நல்லமுறையில் பயன் படுத்திக்கொள்ளவும். வீடு, மனை, வாகன லாபமுண்டு. பெற்றோரின் அனுசரணையும் ஆதரவும் வருமானமும் கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் கவனமாக ஈடுபடவும். உங்களது வாரிசுகள் உங்கள்மீது குற்றம் கண்டுபிடிப்பர். விளையாட்டுத்துறை, கலைத்துறையினர் சிறு காயம் அடைய வாய்ப்புண்டு. வாழ்க்கைத் துணையோடு வரும் சண்டையில் உங்களது கை ஓங்கும். உங்களில் சிலருக்கு போக்குவரத்துத் துறை, தொலைக்காட்சி, அஞ்சல் துறை சம்பந்தமான வேலை கிடைக்கும். சிலர் விமானப்பயணம் மேற்கொள்வீர்கள். சிலருக்கு தொழில் செய்யுமிடத்தில் காதல் மலரும். அரசியல்வாதிகள் காட்டில் அடை மழை பெய்யும். விவசாயிகள் லாபம் காண்பர். மாணவர்களின் புத்தி கூர்மையடையும். நன்மையான வீடு மாற்றமுண்டு.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 3, 12, 21, 30.

Advertisment

பரிகாரம்: வயதான அர்ச்சகருக்கு ஆரோக்கியம் சம்பந்தமாக உதவவும். உங்கள் வீட்டில் வேலை செய்பவருக்கு உங்களால் முடிந்த அளவுக்கு சர்க்கரை வாங்கிக்கொடுங்கள். அரசு ஒப்பந்தம், சாலை ஒப்பந்த விஷயங்களில் ஏற்படும் தடைகளை இது நீக்கிவிடும்.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் உங்களுக்குப் பணவரவு எப்படியிருப்பினும் செலவு மட்டும் கட்டுக் கடங்காமல் செல்லும். அது உங்கள் அரசியல் சார்ந்ததாக அமையலாம். ஒப்பந்த முன்பணமாக இருக்கலாம். உங்கள் இளைய சகோதரத்தின் வெளிநாட்டுப் பயணமாக பயன்படலாம். சமையல் ஒப்பந்தமாக சமயத்தில் இருக்கலாம். வீடுவாங்க முன்பணம் கட்டலாம். தொழிலுக்கு முதல் போடலாம். ஏதோ ஒன்று- செலவு நிச்சயம். நல்லவேலையாக அது சுபச் செலவாகவே அமையும். இந்த செலவுகள் உங்களைக் கடன்வாங்கச் செய்யும். உங்களில் சிலரது வாரிசுகள் வெளிநாடு செல்வர். மனை முதலீடுண்டு. இந்தத் தேதிகளில் பிறந்த குழந்தைகளின் தந்தைக்கு வேலை வாய்ப்பு கிட்டும். தாயாருக்கு அரசு பதவி கிடைக்கும் வாய்ப்பு வரும். வாழ்க்கைத்துணை சில சங்கடங்களை சந்திக்கலாம். தொழில் மேன்மைக்கு சிலர் லஞ்சம் கொடுக்கவேண்டி இருக்கும். சிலர் வியாபாரக் கிளைகள் திறக்க முதலீடு செய்வர். பதவி உயர்வுண்டு. அதனை அடைய செலவுமுண்டு. உங்களின் மூத்த சகோதரி வீடு வாங்கும் யோகம் பெறுவார். அரசியல்வாதிகள் முதலில் சற்று அல்லாடி விட்டு பின்பு நிலைபெறுவர். அரசியல் வாதிகளின் மாற்றம் ஏமாற்றமாக இல்லாமல் ஏற்றமாகவே அமையும். பணியாளர்களுக்கு மாறுதல் இருக்கும். சில தொழிலாளர்கள் வேறு நிறுவனத்துக்குச் செல்வார்கள். பணவரவு, "வரும்; ஆனா வராது' என்னும் நிலையிலேயே இருக்கும். திரைப்படம், தொலைக்காட்சிக் கலைஞர்கள் தாங்கள் இருக்கும் இடம்விட்டு வேறிடம் மாறுவர். விவசாயிகள் பல விஷயங்களில் குழப்ப மடைவர். மாமியாரால் செலவுண்டு. தொழில் விஷயமாக வெளியூர், வெளிநாடு செல்லும் அலைச்சல் இருக்கும்.

Advertisment

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 8, 17, 26.

பரிகாரம்: அருகிலுள்ள பள்ளி மாணவர் களுக்கு இனிப்பு வாங்கிக் கொடுங்கள். துப்புரவுத் தொழில் செய்யும் தம்பதிகளுக்கு, அவர்கள் வீட்டுத் திருமணத்திற்கு முடிந்த உதவிசெய்யுங்கள். உங்களுக்கு ஏற்படும் அதிக செலவுகள் மட்டுப்படும்; கட்டுப்படும்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் உங்களது வேலைக் கனவு நிறைவேறும். உங்களில் சிலருக்கு மாத முற்பகுதியில் அரசுவேலை, அரசு சார்ந்த வேலைக்கு வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணை கல்வி சார்ந்த வேலைபெறுவார். பணப்புழக்கம் ஓரளவு சீராக இருக்கும். புது வியாபாரம், தொழில் ஆரம்பிக்கும் எண்ணமுடையவர்கள் இந்த மாதம் ஆரம்பிக்க இயலும். அதிர்ஷ்டம் மாத முதல் பாதியில் சீராகவும், கடைசி பாதியில் தட்டுத் தடுமாறியும் வரும். உங்களில் சிலர் வேலையில் பதவி உயர்வு பெறுவீர்கள். அது சற்று அன்பளிப்புகள் தருவதன்மூலமே கிடைக்கும். மருமகள், மருமகன் வரும் நேரமிது. மூத்த சகோதரியின் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. இந்த தேதிகளில் பிறந்த அரசியல்வாதிகள் சற்றே திணறி பின்னர் நல்ல மேன்மையையும் உயர்வையும் அடைவர். புதிய பதவி கிடைக்கும். சமையல் கலைஞர்கள் நிறைய வாய்ப்பு கிடைக்கப்பெறுவர். கலைஞர்கள் நிற்க நேரமில்லாமல் ஓட வேண்டியதிருக்கும். அவ்வளவு வாய்ப்புகள் வரும். திரைப்படம், தொலைக்காட்சி போன்றவை வந்து கதவைத் தட்டும். பங்கு வர்த்தகத்தில் பிறரின் யோசனைப்படி நடக்க முனைவீர்கள். திருமண ஏற்பாடுகள் துரிதமாகும். மறுமணம் வேண்டுவோர் திருமணம் நடக்கப் பெறுவர். திருமண ஒப்பந்தம் சம்பந்தமாக தொழில்புரிபவர்கள் மிக மேன்மை காண்பர். உயர்கல்வி கற்போர் சிறு தடங்கலுக்குப்பிறகு உன்னதம் பெறுவர். ஆரோக்கிய விழிப்புணர்வின் பொருட்டு சந்திப்புகள் நிகழும். சிலரது மாமியார் மிகவும் "ஈகோ' பார்ப்பார். இந்த மாதம் எதையும் நிதானமாக யோசிக்கக்கூட நேரமின்றி ஒருவித அவசரகதியில் அலைய நேரிடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

பரிகாரம்: பிற மத, இனத்தவருக்கு ஆரோக்கியம் சம்பந்த உதவிசெய்யவும். உடன் பணிபுரியும் சகோதரி வயதுள்ளவர்களுக்கு இனிப்புகள் வாங்கிக் கொடுங்கள். சற்று நிதானமாக யோசித்து வேலைசெய்ய இது உதவும்.

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் வருமானம் நேர்மையான வழியில் மட்டுமல்லாது எதிர்மறைத் தன்மையிலும் வரும். வருமானம் வந்தாலும் குடும்பத்தில் சச்சரவு இருந்துகொண்டே இருக்கும். திருமணமாகாதவர்களுக்குத் திருமணப் பேச்சு சற்று பின்னடைவைக் கண்டு, பிறகு சுபமாகும். இந்த விஷயத்தினா லும் குடும்பத்தாரோடு சற்று மனத்தாங்கல் ஏற்பட்டு பின் சரியாகும். உங்கள் இளைய சகோதரர் அல்லது தாய்மாமனுக்கு மிக நல்ல வேலை கிடைக்கும். இந்த தேதிகளில் பிறந்த சில பள்ளி மாணவர்கள் ஆசிரியரோடு சண்டையிடும் நிலை வரும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்கள் சற்று செலவுக்குப்பிறகு பலன் காண்பர். பதவி உயர்வுண்டு. நகைகள் வாங்கும் யோகமுண்டு. சிலர் அரசு சார்ந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கு முன்பணம் கொடுப்பர். மாணவர்கள் உயர்கல்வி- அது பொறியியல், மருத்துவம் போன்ற நுழைவுத் தேர்வில் வெற்றிபெறுவர். மேலும் அரசுசார்ந்த கல்லூரியில் பயிலும் யோகமும் கிடைக்கும். இதன்பொருட்டு பணச்செலவு வரும். இந்த தேதிகளில் பிறந்த அரசியல்வாதிகள் மிக அதிகமான அறிவுக் கூர்மையுடன், மிகப்பெரிய பதவி மற்றும் பண லாபத்தையும் அள்ளிச் செல்வார்கள். இவர்களது அரிய அறிவைக்கண்டு எதிரிகள் அஞ்சி நடுங்குவர். தனது கூட்டாளிகளை அன்பாக மிரட்டி வேலை வாங்கிவிடுவார்கள். அதற்குப் பரிகாரமாக கோவிலுக்கு அன்னதானம் மற்றும் காணிக்கை செலுத்துவர். இந்த மாதம் பலதரப்பட்ட மனிதர்களிடமும் பழகும் வாய்ப்பு கிடைக்கும். அத்தனையிலும் இவர்களே வெற்றிபெறுவர். இவர்களது வெற்றியானது சிலரைப் பிரித்தும், சிலரை இணைத்து வைக்கும் வழியிலும் அமையும்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: யாருமற்று சந்நியாசிபோல வாழ்பவர்களுக்கு உதவுங்கள். உங்களை சந்திக்க வருபவர்களை இனிப்பான வார்த்தை களால் ஏமாற்றாமல், உண்மையாகவே உள்ளம் இனிக்குமாறு உதவுங்கள். போலியான வெற்றி அல்லாது, நிஜமான வெற்றி கிடைக்கும்.

ff

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் சொந்தத் தொழில் தொடங்கு வீர்கள். அது கல்வித்துறை அல்லது கலைத்துறை என ஏதோவொரு முதலீடாக அமையும். இதற்கு அரசின் உதவியும் கிடைக்கும். இதன்பொருட்டு அரசு அதிகாரிக்குக் கையூட்டு கொடுக்கும் நிலை ஏற்படலாம். ஆக, இந்த மாதம் லஞ்சம் கொடுப்பது, அன்பளிப்பு வாங்குவதென மிகவும் பிசியாக இருப்பீர்கள். குடும்ப சொந்த பந்தங்களிடையே சிலருக்கு காதல் மலரும். சிலர் வீட்டைவிட்டு வேறிடம் செல்வர். வேலை செய்யுமிடத்தில் சிலருக்கு பணியாளர்களிடம் கருத்து வேறுபாடு கொள்ளும் நிலை ஏற்படும். திருமணப் பேச்சுகள் கைகூடும். வெகுசிலருக்கு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உங்களைச் சுற்றிநின்று அவமானப்படுத்தும் சூழ்நிலையும் ஏற்படலாம்; கவனம் தேவை. அல்லது சிலரது தந்தை தேவையற்ற விஷயத்தை செய்துவைப்பார். அதனால் நீங்கள் அவமானம்கொள்ள நேரிடலாம். மேலும் இந்த தேதிகளில் பிறந்த அனைவருமே இந்த மாதம் சற்று எச்சரிக்கையாக இருங்கள். ஏனென்றால் சிலருக்கு மிகப்பெரிய அவமானம் காத்துக்கொண்டிருக்கிறது. திரைப்படக் கலைஞர்கள், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், இளம்பெண்கள் போன்றோர் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம். வெளிநாட்டுப் பயணம் சில தடைகளை சந்திக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.

எச்சரிக்கை எண்கள்: எல்லா எண்களுமே.

பரிகாரம்: இந்த தேதிகளில் பிறந்தவர் களுக்கு இந்த மாதம் எந்த நேரம் என்னவித பிரச்சினை ஏற்படும் என்பதே தெரியாது. இதற்கு அன்னதானம் சிறந்த பரிகாரம். இதன் பலனாக உங்களின் எதிர்பாராத இன்னல் மறையும். கோளறு பதிகப் பாராயணமும் கோவில், சர்ச்சுகளில் விளக்கேற்றுவதும் நன்று. கிறிஸ்துவ, முஸ்லிம் நண்பர், அன்பர் களின் தேவையைக் கேட்டறிந்து உதவவும்.

6, 15, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

மாத முற்பாதியில் எதிர்பாராத செயல் கள் நடக்கும்; பிற்பகுதியில் எதிர்பார்த்த செயல்கள் நடக்கும் சாத்தியம் உண்டு. அரசுவகையில் சில இன்னல்கள் ஏற்பட்டு பின் சரியாகும். அரசியல்வாதிகள் வில்லங் கத்தை இழுத்துவிடுவர். செலவுக்குப்பின் அவர்கள் சமாதானமாவார்கள். சமையல் கலைஞர்கள் அதிக போட்டியை சமாளிக்க வேண்டியிருக்கும். ஆன்மிகப் பயணமுண்டு. அல்லது உங்கள் பெற்றோரின் ஆன்மிகப் பயணத்துக்கான செலவுண்டு. இந்த மாத ஆரம்பத்தில் சற்று பணக்கஷ்டம் ஏற்பட்டாலும், பின் பணவரவு ஒழுங்காக, சீராக வர ஆரம்பித்துவிடும். உங்களது தந்தையின் கண்டிப்பால் உங்கள் வார்த்தை யின் கடுமை சீர்படுத்தப்படும். இளைய சகோதர னால் கடன் வாங்கும் நிலை ஏற்படலாம். சிலருக்கு காது வ- மருத்துவரை நாடச் செய்யும். உங்களது சொந்தபந்த அனுசரணை யால் உங்களது எதிரி அமைதியாகிவிடுவார். வாழ்க்கைத் துணையின் எதிர்மறைச் செயல்கள்கூட உங்களுக்கு லாபமாகவே அமையும். மாத ஆரம்பத்தில் சற்று ஞாபக மறதியால் இன்னல் ஏற்படும். ஆனாலும் பின்னர் சரியாகிவிடும். பணியாளர்களுடன் சண்டையிடும் வாய்ப்பு வரும். உங்களது ஒப்பந்தப் படிவத்தில் குறை கண்டு பிடிக்கப்படும். கலைஞர்கள் எந்தவித எதிர்ப்பையும் சவால்களையும் கண்டு அஞ்சாமல் தைரியமாக அதனை எதிர் கொள்வார்கள். மாறுபட்ட வாய்ப்புகளைக் கையாள இயலும். திருமணத்தடை நீங்கும். கொஞ்சம் இனப்பிரிவு மாறுபட்ட பெண் ணுடன் திருமணம் நடக்கும். ரியல் எஸ்டேட், மனைப் பிரிவு தொழில் நன்கு நடக்கும். காவல்துறையினர் சிறு இடைஞ்சலுக்குப் பிறகு நல்ல இடமாற்றம் காண்பர். அரசியல் வாதிகள் சற்று ஆட்டம்காட்டி உடனிருப்ப வர்களை அழவைத்து தாங்கள் நினைத்ததை சாதித்துக்கொள்வார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: உங்களால் முடிந்த அளவு அன்னதானம் செய்யவும். உழவாரப் பணி செய்பவர்களுக்கு உதவவும். சிறுசிறு தடைகளும் அகன்றுவிடும்.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

"நல்ல காலத்திலேயே நாழி கறக்கும்' என்னும் கதையாக, பொதுவாகவே மிகமிக யோசனை செய்வீர்கள். இந்த மாதம் கேட்கவேவேண்டாம். அளவுக்கு அதிகமாக சிந்தனை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். திருமண விஷயத்தில் சற்று நிதானித்து, பின் நல்லதொரு முடிவெடுப்பீர்கள். குறைந்த வட்டியில் கடன்தரும் இடமாகத் தேடியலைந்து கொஞ்சமாகக் கடன் வாங்குவீர்கள். வீட்டுத் தரகர் கமிஷன் கொடுக்காமல், நீங்களே வாடகைவீடு தேடிப் பிடித்துவிடுவீர்கள். உங்களில் சிலர் பழைய வீட்டுக்கு முதலீடு செய்வீர்கள். சிலர் வீரப்பாக சண்டையை ஆரம்பித்து விட்டு, பிறகு சமாதானமாக சபையைக் கலைத்துவிடுவீர்கள். பள்ளிக் குழந்தைகள் டியூஷனுக்கும், உயர்கல்வி ஆராய்ச்சியாளர்கள் தரவுகள் சேகரிக்கவும் அலையவேண்டியிருக்கும். அரசியல்வாதிகள் எல்லாரையும்விட புதுமையான வழியில் பணம்வாங்கும் வழியைக் கண்டுபிடித்து விடுவர். சில அரசு ஊழியர்கள் இடமாற்றம் பெறுவர். உங்களில் பலருக்கு வேலை கிடைக்கும். அதன்பொருட்டு வீடு, இடம், வாகன மாற்றம் வரும். உங்கள் இளைய சகோதரன் பொருட்டு காவல் அதிகாரிகளை சந்திக்கும் நிலை வரலாம். ஆன்மிக அன்பர் களிடம் சற்று கருத்து வேறுபாடு ஏற்படும். உங்களது வாரிசுகள் வேலை கிடைத்து இடம்மாறுவர்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

பரிகாரம்: கோவில்களுக்கு வெளிச்சம் தரத்தக்க அளவில் டியூப் லைட், பல்புகள் அல்லது விளக்கு, நல்லெண்ணெய் என வெளிச்சம் சார்ந்து உதவுங்கள். இது உங்கள் சிந்தனையை சீராக்கும்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

மாத முற்பகுதி ஆமைபோல மிக மெதுவாக நகரும். பிற்பகுதியில் ஏதோ ஒருவித பரபரப்பு தொற்றிக்கொள்ளும். அது உங்களுக்கும் உங்கள் தந்தைக்கும் ஏற்படும் கருத்து வேறுபாடு காரணமாக அமையலாம். அல்லது அரசுத்துறை அதிகாரிகளுடன் ஏற்படும் சட்டப் பிரச்சினையாக இருக்கலாம். சிலருக்கு அரசியல்வாதிகளின் கோபம் தொல்லை தரலாம். சிலரது மாமியார்கள் எரிச்சல் மூட்டுவார்கள். கடன்காரர்கள், "இந்த நிமிடமே என் கடனைத் தா' என்று கேட்கக்கூடும். தொழில்புரியுமிடத்தில் தொழிலாளர்கள் பணப் பிரச்சினையை உண்டாக்கலாம். பங்குதாரர் பாடாய்படுத்தக் கூடும். கலைத்துறையில் உள்ளவர்கள் சில தடைகளுக்குப்பிறகு நல்ல வாய்ப்பு பெறுவார்கள். வாரிசுகளின் தொழில், கடை தொடங்க முனைப்பு காட்ட ஆரம்பிக்க லாம். பங்குப் பத்திரம் பல யோசனைகள் தரும். இவ்வாறு இந்த மாதம் உங்களுக்குப் பலவித நெருக்கடிகள் ஏற்பட்டாலும், அத்தனை யையும் நீங்கள் அருமையாக சமாளித்து விடுவீர்கள். பல ரகசிய வேலைகளைச் செய்து உங்களுக்கு ஏற்படும் இன்னல்களை அகற்றித் தள்ளிவிடுவீர்கள். பிரித்தாளும் சூழ்ச்சிமூலம் அரசியல்வாதிகள் தங்கள் லட்சியத்தை அடைந்துவிடுவர். ஆக, இந்த மாதம் உங்களுக்கு ஏற்படும் இன்னல்களை உங்களின் வெற்றிப்பாதையாக மாற்றி விடுவீர்கள். உங்கள்மீது வீசப்படும் கற்களைப் படிக்கட்டுகளாக அமைத்துவிடுவீர்கள். இந்த மாதம் அதிர்ஷ்டத்தின் அனுசரணை இருப்பதால், எதையும் சமாளிக்கும் ஆற்றல் இயைந்து அமையும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

பரிகாரம்: உங்கள் இஷ்ட தெய்வத்துக்கு கற்கண்டு போன்று இனிப்பு வைத்து வணங்கி அனைவருக்கும் கொடுங்கள். கிறிஸ்துவ தேவாலயங்களுக்கும், கிறிஸ்துவ நண்பர்களுக்கும் முடிந்த உதவியைச் செய்யவும். உங்களின் மனப்பதட்டம் மறையும்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் உங்களது சொற்கள் கடுமையாக இருக்கும். இதனால் உங்களிடம் வேலைசெய்யும் பணியாளர்களிடம் மன வேற்றுமை உண்டாகும். சிலர் கோபத்தில் கைபேசியைக் கீழேபோட்டு உடைத்து விடுவீர்கள். பின்னர் கடனில் புது கைபேசி வாங்குவீர்கள். சிலருக்கு அரசுப்பணி கிடைக்க வாய்ப்புண்டு. இந்தத் தேதிகளில் பிறந்த பலருக்கு ஏதாவதொரு வேலை கிடைத்துவிடும். அது பகுதிநேர வேலையாகவும் இருக்கக்கூடும். இதுவரை வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்த பெண்களும் இப்போது வேலைக்குச் சென்று நான்கு பேரை சந்தித்து மகிழ்வர். சிலரது வாரிசுகள் அவ்வப்போது முரண்டு பிடித்து பிறகு சரியாகிவிடுவார்கள். சேவைத் தொழில் சம்பந்தமான பங்குப் பத்திரம் வாங்குவீர்கள். உங்களில் சிலர் பங்குதாரர்களை சேர்த்து தொழில் அல்லது வியாபாரம் தொடங்குவீர்கள். சிலரது வணிகம் வெளிநாட்டுத் தொடர்பு பெறும். கலைஞர்கள் தொழில் மேன்மை பெறுவர். நிறைய பேட்டிகள் கொடுப்பார்கள். தொலைக்காட்சியில் பணிபுரிவோர் ஏதோவொரு சிறந்த நன்மை பெறுவர். அரசு சார்ந்த ஒப்பந்தம் கிடைக்கும். உங்கள் தந்தை இடம் மாறுவார். இந்த மாதம் உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். இது அனைத்துவித தளங்களில் இருப்போருக்கும் ஏற்படும். இதன்பொருட்டு நிறைய மனிதர்களை சந்திக்கவேண்டி இருக்கும். இதனால் இவர்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள இயலும். தங்களது வாழ்வை அடுத்த மேன்மையான கட்டத்துக்கு நகர்த்த இயலும். மாதத்தின் முதல் பத்து நாட்களுக்கு மட்டும் அதிக கோபம் ஏற்படும். அடுத்து வரும் நாட்களில் வேலைச் சுமையினால் சமமாகிவிடுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

பரிகாரம்: இந்த மாதம் நிறைய நபர்களுடன் பழகும் வாய்ப்பு ஏற்படுவ தால், முடிந்தால் ஒரு குவளை காப்பி யாவது வாங்கிக்கொடுங்கள். அல்லது கீழ்நிலைப் பணியாளர்களுக்கு உணவு வாங்கிக்கொடுங்கள். இது உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தி சந்திப்புகளை இனிமையாக்கும்.

செல்: 94449 61845