அக்டோபர் மாத எண்ணியல் பலன்கள் -சிவ.சேதுபாண்டியன்

/idhalgal/om/october-numerical-benefits-sivasethupandian

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

மாதத்தின் முதல் இரண்டு வாரங்கள் அளப்பரிய யோகமும், அதிர்ஷ்டமும் கொண்டிருக் கும். உங்கள் திட்டங்கள், ஆசைகள் நிறைவேறும். முதல் இரண்டு வாரத்துக்குள் அனைத்து வேலைகளையும் முடித்துவிடுதல் நல்லது. அக் டோபர் மாதக் கடைசி இரண்டு வாரமும் சிரமம் தரும். பணவரவும் சற்று இழுத்தடிக்கும். உங்கள் மனவுறுதி சற்றே ஆட்டம் காணும். தொழிலிலில் விரயமும், அலைச்சலும் உண்டு. கலைத்தொழில் புரிவோர் தங்கள் வாய்ப்புகள் நழுவுவதுபோல் உணர்வர். எனினும், 1-ஆம் எண்ணில் பிறந்த அனைவருக்கும் வேலை, தொழில், கௌரவம், முன்னேற்றம் சற்று சறுக்கும் நிலை வரும்போது, உங்கள் சமயோசிதத்தால், இந்த கீழிறங்கு நிலையை சரிப்படுத்தி விடுவீர்கள். என்ன, நிறைய குறுக்குவழிகளைப் பின்பற்ற வேண்டியிருக்கும். உடல்நலனில் சற்று அக்கறை கொள்ளவும். தந்தையின் கண்டிப்பு, மகன்களுக்கு எரிச்சல் தரும். தம்பதிகளுக்கிடையே புரிந்துணர்வு குறையும். வீட்டில் பொருட்களைக் கண்ட இடத்தில் வைத்துவிட்டுத் தேடுவீர்கள். தொழில் பற்றி வெளிநாடு, வெளியூர் அல்லது பிற இனத்தவரிட மிருந்து செய்தி கிடைக்கும். இந்த மாதம் கடைசி இரண்டு வாரங்கள் எதிலும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட தேதி: 4, 13, 22, 31.

எச்சரிக்கை தேதி: 8, 17, 26.

பரிகாரம்: உங்கள் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு. சிவப்பான ஆடைகள், சிவந்த பழங்கள் தானம் நன்று.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

வீடு, மனை, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். அதுவும் அழகான- மாடர்னான வஸ்துகளை வாங்குவீர்கள். இதில் இன்னொரு சிறப்பு, அந்த வீடு, வாகனங்களை முதலிலீடாகக் கொண்டு பணம் சம்பாதிக்கத் தொடங்கி விடுவீர்கள். மனதில் அழகுணர்ச்சி மிகும். மாதத்தின் முதல் இரண்டு வாரங்கள் சிறப்பாக இருக்கும். பிற்பகுதியில் பணவரவு சற்று குறையும். பேசும்போது கவனம் தேவை. அரசு சார்ந்த விஷயங்களின்போது, எழுத்துப்பூர்வமாகக் கையாளுங்கள். உங்கள் சொற்கள் எடுபடாமல் போகலாம். சீருடைப் பணியாளர்கள் சற்று கவனமாக இருக்கவும். அதுவும் சில போலிலிச் சாமியார்களை ஜாக்கிரதையாக நடத்தவும். ஆன்மிகம், ஆசிரியர், தர்ம ஸ்தாபனப் பெருமக்கள் வேலை அதிகரிக்கப் பெறுவர். வாழ்க்கைத்துணைக்கு சிறு காயம் ஏற்படலாம். வேலை தேடுவோர் சற்று குழ

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

மாதத்தின் முதல் இரண்டு வாரங்கள் அளப்பரிய யோகமும், அதிர்ஷ்டமும் கொண்டிருக் கும். உங்கள் திட்டங்கள், ஆசைகள் நிறைவேறும். முதல் இரண்டு வாரத்துக்குள் அனைத்து வேலைகளையும் முடித்துவிடுதல் நல்லது. அக் டோபர் மாதக் கடைசி இரண்டு வாரமும் சிரமம் தரும். பணவரவும் சற்று இழுத்தடிக்கும். உங்கள் மனவுறுதி சற்றே ஆட்டம் காணும். தொழிலிலில் விரயமும், அலைச்சலும் உண்டு. கலைத்தொழில் புரிவோர் தங்கள் வாய்ப்புகள் நழுவுவதுபோல் உணர்வர். எனினும், 1-ஆம் எண்ணில் பிறந்த அனைவருக்கும் வேலை, தொழில், கௌரவம், முன்னேற்றம் சற்று சறுக்கும் நிலை வரும்போது, உங்கள் சமயோசிதத்தால், இந்த கீழிறங்கு நிலையை சரிப்படுத்தி விடுவீர்கள். என்ன, நிறைய குறுக்குவழிகளைப் பின்பற்ற வேண்டியிருக்கும். உடல்நலனில் சற்று அக்கறை கொள்ளவும். தந்தையின் கண்டிப்பு, மகன்களுக்கு எரிச்சல் தரும். தம்பதிகளுக்கிடையே புரிந்துணர்வு குறையும். வீட்டில் பொருட்களைக் கண்ட இடத்தில் வைத்துவிட்டுத் தேடுவீர்கள். தொழில் பற்றி வெளிநாடு, வெளியூர் அல்லது பிற இனத்தவரிட மிருந்து செய்தி கிடைக்கும். இந்த மாதம் கடைசி இரண்டு வாரங்கள் எதிலும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட தேதி: 4, 13, 22, 31.

எச்சரிக்கை தேதி: 8, 17, 26.

பரிகாரம்: உங்கள் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு. சிவப்பான ஆடைகள், சிவந்த பழங்கள் தானம் நன்று.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

வீடு, மனை, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். அதுவும் அழகான- மாடர்னான வஸ்துகளை வாங்குவீர்கள். இதில் இன்னொரு சிறப்பு, அந்த வீடு, வாகனங்களை முதலிலீடாகக் கொண்டு பணம் சம்பாதிக்கத் தொடங்கி விடுவீர்கள். மனதில் அழகுணர்ச்சி மிகும். மாதத்தின் முதல் இரண்டு வாரங்கள் சிறப்பாக இருக்கும். பிற்பகுதியில் பணவரவு சற்று குறையும். பேசும்போது கவனம் தேவை. அரசு சார்ந்த விஷயங்களின்போது, எழுத்துப்பூர்வமாகக் கையாளுங்கள். உங்கள் சொற்கள் எடுபடாமல் போகலாம். சீருடைப் பணியாளர்கள் சற்று கவனமாக இருக்கவும். அதுவும் சில போலிலிச் சாமியார்களை ஜாக்கிரதையாக நடத்தவும். ஆன்மிகம், ஆசிரியர், தர்ம ஸ்தாபனப் பெருமக்கள் வேலை அதிகரிக்கப் பெறுவர். வாழ்க்கைத்துணைக்கு சிறு காயம் ஏற்படலாம். வேலை தேடுவோர் சற்று குழப்பத்திற்குப் பிறகு வேலை கிடைக்கப்பெறுவர். பயணங் கள் பதட்டமும் எரிச்சலும் தரும். செய்தி, பொதுஜனத் தொடர்பாளர்களுக்கு எச்சரிக்கை அவசியம். தந்தை நலனில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24.

எச்சரிக்கை தேதி: 8, 17, 26.

பரிகாரம்: அதிர்ஷ்ட நிறம் வெண்மை. வெண்ணிற மலர்களால் தெய்வ வழிபாடு, வெண்மையான உணவு தானம் நன்மை தரும்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

வரவும் செலவும் சரியாக இருக்கும். எண்ணங்களில் தடுமாற்றம் ஏற்படும். தேவையற்ற கோபம் வரும். மருத்துவம், சீருடை, கலை சம்பந்தம், அவை சார்ந்த கல்வி உடையவர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்கவும். சிலருக்கு அரசு சார்ந்த வேலை அல்லது பகுதிநேர வேலை கிடைக்கும். உங்களில் சிலரது மூத்த சகோதரி வேலையில் சேர்வார். திருமண விஷயங்களின்போது, மாமியார் ஏதேனும் பிரச்சினை தரக்கூடும். கவனமாக இருத்தல் அவசியம். அரசு வேலையில் உள்ளோருக்கு சற்று இடறல் உண்டு. இந்த எண்ணில் பிறந்த பெண்களுக்கு, ஏதோ ஒரு நன்மை கிடைக்கும். அரசியல்வாதிகள் முதலிலில் கால் இடறி, பின் சமாளித்து பதவியைத் தொடரலாம். குலதெய்வ ஆலயப் பயணமும், ஆன்மிகச் செலவும் உண்டு. சித்தரை வழிபடுவீர்கள். வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனம் எடுத்துக்கொள்ளுங்கள். சித்த மருத்துவச் செலவுண்டு. அது ஆரோக்கியம், முன்னெச் சரிக்கை காரணமாக இருக்கலாம்.

அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24.

எச்சரிக்கை தேதி: 5, 14, 23.

பரிகாரம்: அதிர்ஷ்ட நிறம் மஞ்சள். அந்த ணருக்கு மஞ்சள் வேட்டி வழங்கலாம்.

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சிலர் கடன் வாங்கி அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்குவீர்கள். பணம், குடும்பம் பற்றிய திட்டங்கள் நன்றாகக் கூடிவரும் நேரத்தில் கொஞ்சம் விலில்லங்கம் வரும். உங்களுடைய முழு சிந்தனைகளையும் வார்த்தைகளால் வெளிப்படுத்தமுடியாது. கேட்ட இடத்துக்கு இடமாற்றம் கிடைக்காது. பண விஷயமாக பிள்ளைகள் மனவேற்றுமை கொள்வர். இந்த மாதம் முழுவதுமே உடல் நலன் சார்ந்த பிரச்சினை வந்துகொண்டே இருக்கும். வாழ்க்கைத்துணை, வேலை அல்லது வியாபார மாற்றத்தை சந்திக்கக் கூடும். எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். மூத்த உடன்பிறப்பு ஏதோவொரு சிக்கலிலில் சிக்கக்கூடும். தொழில் நிலை ஒருசமயம் விறு விறுப்பாகவும், ஒருசமயம் மந்தமாகவும் அமையும். சில பயணங்கள் பயனற்றவையாகும். தொழில், வியாபாரத்தில் முதலிலீட்டைச் செய்துவிட்டு, "இது சரியாக வருமா?' என பின்னர் யோசிப்பீர்கள். மனதில் எண்ணப் பிறழ்வு இருந்துகொண்டே இருப்பதால், உங்களின் முடிவுகள் உங்களுக்கே ஆயாசத்தைத் தரக்கூடும்.

அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24.

எச்சரிக்கை தேதி: 5, 14, 23.

பரிகாரம்: அதிர்ஷ்ட நிறம் சாம்பல் நிறம். இந்த நிறப் பொருட்களை வேற்று இனம், மதம் சார்ந்தவருக்குப் பரிசளியுங்கள்.

n

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு வேலை மாற்றம் உண்டு. அது விரும்பத்தகாததாக அமையும். தொழிலில் அலைச்சல் அதிகமுண்டு. பணம் சீராக வராமல் இழுத் தடிக்கொண்டு வரும். இளைய சகோதரர் ஏதாவது ஒரு பிரச்சினையைக் கொண்டு வருவார். வீடு, வாகனம் செலவு வைக்கும். உங்களுக்கு வயிற்றுப் பிரச்சினை வரலாம். சிலரது வாரிசுகள் சண்டைக்குக் காத்திருப்பர். குடும்பத்தில் பணச் செலவுகள், கணக்கு விஷயமாக மனக்கசப்பு வரும். திருமணம் நிச்சயமாகும். காவல்துறையில் வேலை செய்வோர் ஒருவிதமாக யோசித்துச் செயலாற்ற, அது வேறுவிதமாக இம்சை தரும். சிறு தூரப் பயணத்தில் கவனம் தேவை. இந்த மாதம் உங்கள் தந்தை செய்யும் சில செயல்கள் எல்லை மீறும். எங்காவது கொண்டுபோய் விட்டுவிடலாமா என்னும் அளவிற்குத் துன்பம் தருவார். சிலருக்கு மருமகள் தொல்லையும் இருக்கும். அல்லது மூத்த சகோதரிமூலம் சற்று மண்டைக் குடைச்சல் உண்டு. மறுமண விஷயம் சற்று தாமதமாகும். இந்த மாதம் சற்று பதட்டமாகவே உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட தேதி: 4, 13, 22, 31.

எச்சரிக்கை தேதி: 9, 18, 27.

பரிகாரம்: அதிர்ஷ்ட நிறம் பச்சை. முதியோர் இல்லங்களுக்கு பசுமையான காய்கறிகள் வாங்கிக் கொடுக்கவும்.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் யோசனைகள் ஏராளமாகப் பெருகும். சிலர் தெருவிலுள்ள வீட்டை வாங்கலாமா, தெருவை வாங்கலாமா, அட நாட்டையே வாங்கிப் போட்டுவிடலாமா என பரபரவென ஆசைப்படுவார்கள். இந்தப் போக்கு மாதத்தின் முதல் மூன்று வாரங்கள் இருக்கும். மாதக் கடைசியில்தான் உண்மை தெரியவரும். "நாம இதுக்கெல்லாம் சரிப்பட்டு வர்ற ஆள் இல்லை' என்பது புரியவரும். நிதி நிலைமை திருப்தியாக இருக்காது. உள்ளுக்குள் பயம் இருந்தாலும், வெளியே தைரியம் உள்ளவர்போல நடிக்க நேரும். சிலர் வாகனம் ஓட்டும் பயிற்சி எடுத்துக் கொள்வார்கள். அது இரு சக்கர வாகனமாக இருக்கும். ‘நமது வாரிசுதான் உலகிலேயே ஆகச்சிறந்த புத்திசாலிலி’ என்று நினைத்திருக்க, அவர் அந்த எண்ணத்தை மறுபரிசீலனை செய்யவைப்பார். வாடகைவீட்டுப் பிரச்சினை தலைதூக்கும். சுற்றியுள்ள அனைவரையும் சந்தேகப்பட நேரும். இந்த எண்ணில் பிறந்த அரசியல் வாதிகளின் நிலைமை சற்று கடினம்தான். சிலரின் தொழில் சுமாராகவும், சிலருக்கு மந்தமாகவும் அமையும். காவல்துறையினருக்கு, பயணங்களில் கவனம் தேவை. சிலரது வாகனம் பாதிப்புக்குள்ளாக வாய்ப்புண்டு.

அதிர்ஷ்ட தேதி: 8, 17, 26.

எச்சரிக்கை தேதி: 1, 10, 19, 28; 5, 14, 23.

பரிகாரம்: "ஹஃப் ஒயிட்' எனப்படும் வெள்ளை நிறம் அதிர்ஷ்டமானது. பள்ளி மாணவர்களுக்கு, இந்த நிறச் சீருடை இருப்பின் வாங்கிக் கொடுங்கள்.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் முழுவதும், உடம்புக்கு ஏதோ நோய் வந்துவிட்டதோ எனும் கவலை தோன்றலாம். ஆனால் அது கற்பனை பயம்தான். அறிவின்மூலம் வரக்கூடிய பணவரவு வந்துகொண்டே இருக்கும். வீடு சம்பந்தமான மாற்றம் உண்டு. எதிரிகள் தொல்லை கொடுப்பதுபோல் தோன்றும். கலப்புமணம் நிச்சயமாகும். தம்பதிகளுக்குள் "ஈகோ' தோன்றும். வெளிநாட்டுச் செய்தி கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் தொழிலிலில் முதலீட்டுத் தொகைக்குப் பிரச்சினை வரும். சில அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் தங்கள் துறை சார்ந்த செலவினங்கள் வழியில் அவமானப்பட நேரிடும். சிலரது வேலை தள்ளாடலாம். உங்கள் யோசனைகள் செயல் வடிவம் பெறும்போது, ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செயலாற்றவும். மறுமண விஷயங்களை இந்த மாதத்தில் முடிவெடுக்க வேண்டாம். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்திலும், பயணத்தின்போதும் கவனமாக இருக்கவும். அரசு வரி போன்ற செலவுண்டு.

அதிர்ஷ்ட தேதி: 3, 12, 21, 30.

எச்சரிக்கை தேதி: 5, 14, 23.

பரிகாரம்: பலவண்ண நிறம் அதிர்ஷ்ட மானது. ஆன்மிகம் சார்ந்தவர்களுக்கு பலவண்ணக் குடைகள் வாங்கிக்கொடுங்கள்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் பணவரவும் செலவும் வந்துபோகும் வண்ணம் இருக்கும். கைபேசியை கவனமாக வைத்திருக்கவும். உடல்நலம் சற்று தொல்லை தரும். வீடு, வாகன விஷயங்கள் கண்ணைக் கட்டும். காவல்துறையினருக்குப் பணிச்சுமை அதிகரிக்கும். கலைத்துறையினரின் போக்கு, எதிர்மறையாக இருக்கும். வேலை விஷயமாக ஒருவித பதைபதைப்பு இருக்கும். வாழ்க்கைத்துணையாலும் சற்று மனக்கசப்பு ஏற்படும். சிலருக்கு போதைப் பழக்கம் அதிகரிக்கும். "டாஸ்மாக்’கின் வருமானத் தைப் பெருக்க பெரும் உதவிசெய்வார்கள். தொழிலிலில் அரசு தலையீடு ஏற்படலாம். அதனால் டென்ஷன் வரும். சிலர் எதிர் மறை வழியில், லஞ்சம் கொடுத்துத் தொழிலை ஒப்பேற்றி விடுவார்கள். சிலரது மூத்த சகோதரர் குழப்பம் கொடுப்பார். ஆன்மிகச் செலவுகள் உண்டு. காது குத்தும் சுபச்செலவு கள் உண்டு. சிலர் கம்மல் வாங்குவர். சிலர் கம்மலைத் தொலைப்பர். இந்த மாதம் அரசு அல்லது தந்தை சார்ந்து கவலைகள் வரும்.

அதிர்ஷ்ட தேதி: 3, 12, 21, 30.

எச்சரிக்கை தேதி: 6, 15, 24.

பரிகாரம்: கறுப்பு அதிர்ஷ்ட நிறம். வேலை செய்யும் முதியவர்களுக்கு, உளுந்து வடை, உளுந்து கஞ்சி, சாதம் போன்றவற்றைக் கொடுக்கலாம்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

வேலையில் மாற்றம் வருமா என ஒரு எதிர்பார்ப்பு இருந்துகொண்டே இருக்கும். எதிர்மறை வழியில் பணவரவுண்டு. சிலரது இளைய சகோதரர் வேலையிழப்பை சந்திக்க நேரலாம். டி.வி., செய்தித்துறையினர் சிலர் அரசின் கண்டிப்புக்கு ஆளாக நேரும். கைபேசி பழுது பார்க்கவேண்டும். தாயார் உடலில் நிலையில் கவனம் தேவை. பங்குவர்த்தகம் லாபம் தராது. கலைத்தொழிலில் உள்ளோர் சிலர் அரசு தண்டனைக்கு ஆளாகும் நிலை ஏற்படும். சிலர் ஜாமின்மூலம் வெளியே நடமாடமுடியும். சிலரது சேவை மனப்பான்மை பரிகசிக்கப்படும். இந்த எண்ணில் பிறந்த சில மருத்துவர்கள் தங்கள் உடல்நலனிலும் கவனம் செலுத்தவேண்டும். தம்பதிகளுக்குள் கருத்து வேற்றுமை வந்து நீங்கும். சிலரின் மனைவி, வாரிசுகள் பொருட்டு இடம் மாறுவார். உங்களின் சில பயமும் அவமானமும் இல்லாமல் போகும். தாத்தாவின் நிலை கவலைக்குள்ளாகலாம். ஆன்மிகப் பயணமும் செலவும் உண்டு. தொழில் லாபமும், மாற்றமும் பெறும். இந்த எண்ணில் பிறந்த குழந்தைகளின் தந்தை வெளியூர், வெளிநாடு செல்வார்.

அதிர்ஷ்ட தேதி: 3, 12, 21, 30.

எச்சரிக்கை தேதி: 1, 10, 19, 28.

பரிகாரம்: அடர்த்தியான சிவப்பு நிறம் அதிர்ஷ்டமானது. இளம் வயதுப் பையன்களுக்கு நல்ல சிவப்பு நிற உடைகள் வாங்கிக்கொடுங்கள்.

செல்: 94449 61845

இதையும் படியுங்கள்
Subscribe