அக்டோபர் மாத ராசி பலன்கள் ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

/idhalgal/om/october-month-rasi-palan

மேஷம்

மேஷ ராசிநாதன் செவ்வாய் ஆட்சியாக இருக்கிறார்; வக்ரகதியாகவும் செயல்படுகிறார். அட்டமாதிபதியாகவும் அவர் இருப்பதால், வக்ரகதியின்மூலம் சுபச்செலவுகள் உண்டாகும். 2-ல் உள்ள ராகு, குடும்பத்தில் அவ்வப்பொழுது குழப்பங்களையும் தர்க்கங்களையும் ஏற்படுத்தலாம். எனவே, நீங்கள் விட்டுக் கொடுத்துச் சென்றால் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காணலாம். குருவின் பார்வை ராசிக்குக் கிடைப்பதால் உங்களின் செயல்பாடுகள் முழுமையடையும்; தடையாகாது. 10-க்குரிய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். அது உங்களை வழிநடத்தும். பிள்ளைகள் வகையில் நன்மை ஏற்படும். 8-ஆம் தேதிமுதல் 6-க்குரிய புதன் 6-ல் ஆட்சி பெறுவதால் கடன் சுமைகள் சற்று இருக்கத்தான் செய்யும். என்றாலும், புதன் வக்ரகதியிலிருப்பதால் பாதிப்புகளை ஏற்படுத் தாது. உடன்பிறப்புகள் பற்றிய கவலை விலகும். சகோதர சகாயம் உண்டாகும். செவ்வாய்க்கிழமை முருக வழிபாடு சிறந்தது.

d

ரிஷபம்

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 4-ல் இருக்கிறார். சுக ஸ்தானத்திலிருக்கும் சுக்கிரன் நல்ல வாய்ப்புகளைத் தருவார். தொழில்துறையில் வளர்ச்சிகள் ஏற்படலாம். அட்டமத்துச்சனியின் பாதிப்பும் குறையும். ரிˆப ராசிக்கு சனி யோகாதிபதி என்பதால் பெரியளவில் கெடுதல்களை ஏற்படுத்தமாட்டார். ஜென்ம ராகு- சப்தமக் கேது காரணமாக, வாழ்க்கைத்துணையோடு பிரச்சினைகள் வந்து மோதும். என்றாலும், குடும்ப ஸ்தானத்தைப் பார்க்கும் குரு அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வும் தரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பெற்றோர் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவிபுரியலாம். சகோதர உறவுகள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் நடந்துகொள்வது அவசியமாகும். விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. வீடு மாற்றம், பணிபுரியும் இடமாற்றம் போன்றவை ஏற்படலாம். சனிக்கிழமை காலபைரவருக்கு மிளகு தீபமேற்றி வழிபடவும்.

மிதுனம்

மிதுன ராசிநாதன் புதன் 4-ல் ஆட்சியாக இருக்கி றார். (8-ஆம் தேதிமுதல் கன்னியில் ஆட்சிபெறுகிறார்). 20-ஆம் தேதிவரை வக்ர கதியில் செயல்படுகிறார். இந்த காலகட்டத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும். பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும். 12-ஆமிடத்து ராகு இடமாற்றம், தொழில் மாற்றம்,

மேஷம்

மேஷ ராசிநாதன் செவ்வாய் ஆட்சியாக இருக்கிறார்; வக்ரகதியாகவும் செயல்படுகிறார். அட்டமாதிபதியாகவும் அவர் இருப்பதால், வக்ரகதியின்மூலம் சுபச்செலவுகள் உண்டாகும். 2-ல் உள்ள ராகு, குடும்பத்தில் அவ்வப்பொழுது குழப்பங்களையும் தர்க்கங்களையும் ஏற்படுத்தலாம். எனவே, நீங்கள் விட்டுக் கொடுத்துச் சென்றால் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காணலாம். குருவின் பார்வை ராசிக்குக் கிடைப்பதால் உங்களின் செயல்பாடுகள் முழுமையடையும்; தடையாகாது. 10-க்குரிய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். அது உங்களை வழிநடத்தும். பிள்ளைகள் வகையில் நன்மை ஏற்படும். 8-ஆம் தேதிமுதல் 6-க்குரிய புதன் 6-ல் ஆட்சி பெறுவதால் கடன் சுமைகள் சற்று இருக்கத்தான் செய்யும். என்றாலும், புதன் வக்ரகதியிலிருப்பதால் பாதிப்புகளை ஏற்படுத் தாது. உடன்பிறப்புகள் பற்றிய கவலை விலகும். சகோதர சகாயம் உண்டாகும். செவ்வாய்க்கிழமை முருக வழிபாடு சிறந்தது.

d

ரிஷபம்

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 4-ல் இருக்கிறார். சுக ஸ்தானத்திலிருக்கும் சுக்கிரன் நல்ல வாய்ப்புகளைத் தருவார். தொழில்துறையில் வளர்ச்சிகள் ஏற்படலாம். அட்டமத்துச்சனியின் பாதிப்பும் குறையும். ரிˆப ராசிக்கு சனி யோகாதிபதி என்பதால் பெரியளவில் கெடுதல்களை ஏற்படுத்தமாட்டார். ஜென்ம ராகு- சப்தமக் கேது காரணமாக, வாழ்க்கைத்துணையோடு பிரச்சினைகள் வந்து மோதும். என்றாலும், குடும்ப ஸ்தானத்தைப் பார்க்கும் குரு அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வும் தரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பெற்றோர் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவிபுரியலாம். சகோதர உறவுகள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் நடந்துகொள்வது அவசியமாகும். விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. வீடு மாற்றம், பணிபுரியும் இடமாற்றம் போன்றவை ஏற்படலாம். சனிக்கிழமை காலபைரவருக்கு மிளகு தீபமேற்றி வழிபடவும்.

மிதுனம்

மிதுன ராசிநாதன் புதன் 4-ல் ஆட்சியாக இருக்கி றார். (8-ஆம் தேதிமுதல் கன்னியில் ஆட்சிபெறுகிறார்). 20-ஆம் தேதிவரை வக்ர கதியில் செயல்படுகிறார். இந்த காலகட்டத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும். பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும். 12-ஆமிடத்து ராகு இடமாற்றம், தொழில் மாற்றம், குடியிருப்பு மாற்றம் ஆகியவற்றை ஏற்படுத்தலாம். ஜனன ஜாதகத்தில் சாதகமான தசாபுக்திகள் நடந்தால் அவற்றை சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். உத்தியோகத்துறையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுண்டாகும். தேக ஆரோக்கியத்தில் தங்களுக்கோ, மனைவிக்கோ, பெண் ஜாதகமாக இருந்தால் கணவருக்கோ வைத்தியச் செலவுகள் ஏற்படும். பாகப்பிரிவினை சம்பந்தமாக சுமுகத் தீர்வு கிடைக்கும். உறவினர் வழியில் உள்ள மனவருத்தம், விரோதம் விலகும். குரு ராசியைப் பார்ப்பதால் கெடுபலனெல்லாம் நற்பலனாக மாறும். சக்கரத்தாழ்வாரையும் லட்சுமி நரசிம்மரையும் வழிபடவும்.

கடகம்

கடக ராசிக்கு 11-க்குரிய சுக்கிரன் 2-ல் இருக்கிறார். பொருளாதாரப் பிரச்சினைக்கு இடமிருக்காது. என்றாலும் தேவைகள் நிறைவேறுவதில் தாமதங்களை சந்திக்கத்தான் நேரும். 2-க்குரிய சூரியன் 3-ல் மறைவதும் இதற்கொரு காரணம். 6-ல் இருக்கும் குரு காரணமாக சொந்தம், சுற்றம், நண்பர் கள் என அனைத்திலும் எதிர்ப்புகள் இருந்து கொண்டே இருக்கும். சிலருக்கு இடமாற்றம், ஊர்மாற்றம், உத்தியோக மாற்றங்கள் உண்டாகலாம். 9-ல் செவ்வாய் ஆட்சி; வக்ரத்தில் உக்ர பலம். பூமி சம்பந்தமான யோகங்களும் ஏற்படும். பூர்வீக சொத்து சம்பந்தமான வில்லங்கம், வியாஜ்ஜியம், வழக்கு ஆகியவற்றில் சாதகமான முடிவுகளை எதிர்பார்க்கலாம். நண்பர்களால் ஏமாற்றங் களை சந்தித்தாலும், முடிவில் அதுவும் ஒரு நன்மையைத் தரும். தொழில் துறையில் முன்னேற்றகரமான சூழ்நிலை தென்படும். பௌர்ணமி கிரிவல வழிபாடு சிறந்தது.

சிம்மம்

சிம்ம ராசிநாதன் சூரியன் 2-ல் இருக்கிறார். 10-க்குரிய சுக்கிரன் ஜென்ம ராசியில் சஞ்சாரம். அவருக்கு குரு பார்வை கிடைக்கிறது. தொழில்துறையில் இருந்துவரும் சிக்கல், சிரமங்கள் விலகும். 8-ஆம் தேதிமுதல் 2-ல் புதன் ஆட்சி, வக்ரம். பொருளாதாரத்தில் தாராள வரவு- செலவுகள் காணப்படும். சேமிப்புக்கு இடமுண்டு. புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். தடைப்பட்ட காரியங்கள் நடைபெறும். உத்தியோகத்திலிருப்பவர்கள் விருப்ப ஓய்வு பெற்று, நண்பர்களுடன் இணைந்து தொழில்புரியும் சந்தர்ப்பங்கள் அமையும். அது முன்னேற்றகரமாகவும் இருக்கும். 17-ஆம் தேதிமுதல் சூரியன் துலா ராசியில் நீசம்பெறுகிறார். அவ்வப்பொழுது சிறுசிறு தாமதங்கள் ஏற்பட்டாலும் செயல்பாடுகள் தடையாகாது. வீடுகட்டும் அல்லது மனை சம்பந்தமான தொழில் புரிவோருக்கு முன் னேற்றம் உண்டாகும். தேக சுகத்தில் சற்று கவனம் தேவை. தாய் சுகத்தில் வைத்தியச் செலவுகள் வந்து விலகும். ஞாயிறன்று விநாயகருக்கு செம்பருத்திப்பூ மாலை சாற்றி வழிபடவும்.

கன்னி

கன்னி ராசிநாதன் புதன் மாதத்தில் முதல் வாரம்வரை துலா ராசியில் சஞ்சரிக்கிறார். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். தொழில் தொடங்கவேண்டுமென்னும் எண்ணம் தோன்றும். களத்திரகாரகன் சுக்கிரன் 12-ல் மறைவதால் கணவருக்கோ மனைவிக்கோ ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்படலாம். ஒருவரைவிட்டு ஒருவர் பணிநிமித்தமாகவோ, வேலை நிமித்தமா கவோ விலகியிருக்கலாம். சிலர் கருத்து வேறுபாடுகள் காரணமாகவும் பிரிந்திருக்க லாம். 23-ஆம் தேதிமுதல் சுக்கிரன் கன்னி ராசியில் சஞ்சாரம் பெற்று புதனுடன் இணைகிறார். புதன் ஆட்சி. எனவே, மேற்கண்ட பலன்களில் சிறுசிறு மாற்றங்கள் நிகழும். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருப்பவர்களுக்கு, குடும்பத்திலுள்ளவர்களே விரோதிபோல் செயல்படுவர். சொத்து வகையில் பிரச்சினைகளை சந்திக்கலாம். தாயின் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்து வது நல்லது. புதன்கிழமை தன்வந்திரியையும், லட்சுமி நாராயணரையும் வழிபடவும்.

துலாம்

துலா ராசிநாதன் சுக்கிரன் 11-ல் இருக்கி றார். 1, 8-க்குரிய சுக்கிரன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் பொருளாதாரத் தேக்கம் விலகும்; வளர்ச்சி பெறும். ஆரோக்கியம் சீராகும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டலாம். கல்வி சம்பந்தமான பணிகளில் வெற்றி கிடைக்கும். 12-க்குரிய புதன் 12-ல் ஆட்சி. விரயங்களை சுபவிரயமாக மாற்றிக்கொள்வது நல்லது. வீடு, மனை, வாகனம் போன்ற வகையில் சுபவிரயங்களை ஏற்படுத்திக்கொள்ளலாம். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கும் அமைப்பும் ஏற்படும். அது அத்தி யாவசியமான பொருளாகவும் இருக்கலாம்; ஆடம்பரப் பொருளாகவும் இருக்கலாம். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுக்கும் முயற்சிகள் பலன் தரும். அவர்களின் எதிர்காலத் தேவைக்காக சிறுசேமிப்பும் தொடங்கலாம் அல்லது வைப்பு நிதியும் வைக்கலாம். 7-ஆமிடத்தைப் பார்க்கும் குரு கணவன்- மனைவிக்குள் ஒற்றுமையையும் அன்யோன்யத்தையும் தருவார். வெள்ளிக் கிழமை மகாலட்சுமி வழிபாடு சிறந்தது.

விருச்சிகம்

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 6-ல் மறைவு பெற்றாலும் ஆட்சி என்பதால் மறைவு தோˆம் பாதிக்காது. 2-ல் உள்ள குரு செவ்வாயைப் பார்க்கிறார். அதிகாரப் பதவியிலுள்ளவர்களின் நட்பு கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடிவரும். திருமணத்தை எதிர்பார்த்துக் காத்திருப் போருக்குத் திருமண முயற்சிகள் கைகூடும். திட்டமிட்ட செயல்பாடுகள் திட்டமிட்டபடி நிறைவேறும். ஏழரைச்சனி நடந்தாலும், சனி குருவோடு கூடியதால் பொங்கு சனியின் பலனாகவே செயல்படும். 17-ஆம் தேதிமுதல் சூரியன் துலாத்தில் நீசமடைகிறார். திடீர்ப் பயணங்கள் உண்டாகும். அதனால் உடல் சோர்வும் அசதியும் ஏற்படும். தொழில்துறையில் சில நல்ல மாற்றங்கள் நிகழும். வெளிமாநிலங்களில் எதிர்பார்த்த நல்ல தகவல் வந்துசேரும். மூத்த சகோதர வழியில் நன்மை கிடைக்கும். சனிக்கிழமை ஆஞ்சனேயரை வழிபடவும்.

தனுசு

தனுசு ராசிநாதன் குரு ஜென்மத்தில் ஆட்சியாக இருக்கிறார். அவருடன் சனி இணைகிறார். ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடக்கிறது. குரு, சனி கூடினால் "சண்டாள யோகம்' என்பது பொதுவிதி. ஆனால், குரு ஆட்சிபலம் பெறுவதால் அந்த தோˆம் பாதிக்காது. செவ்வாய் 5-ல் ஆட்சி- வக்ர பலம். அவருக்கு ஜென்ம குருவின் பார்வை. குடும்பத்தில் மங்களகரமான நிகழ்வுகள் உண்டாகும். கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை நிலவும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 6-ல் உள்ள ராகு- கடன், நோய், எதிரி, பீடைகளை விலக்குவார். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வுடன் கூடிய இட மாற்றம் ஏற்படலாம். அரசு வேலையை எதிர் பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு தாமதம் உண்டாகலாம். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தந்தைவழி உறவில் விரிசல் அகலும். தன்வந்திரி பகவானை வழிபடவும்.

மகரம்

மகர ராசிக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி நடக்கிறது. குரு அவருடன் இருப்பதால் சுபவிரயச்சனியாக செயல்படுவார். இரண்டாம் சுற்று நடப்பவர்களுக்கு இது பொங்குசனியாகும். எதிர்கால முன்னேற்றத் திற்கு அடித்தளம் அமைத்துக்கொடுக்கும் விதத்தில் பொங்குசனியின் சஞ்சாரம் அமையும். 4-ல் ஆட்சிபெற்ற செவ்வாய் பூமி, வீடு, வாகனவகையில் சுபமுதலீடு செய்யும் பலனாக அமைத்துத் தருவார். 9-ல் உள்ள சூரியன் தகப்பனார்வகையில் கருத்து வேறுபாடுகளை உருவாக்குவார். கோபத்தைக் குறைத்துக்கொண்டு செயல்படுவது நல்லது. முக்கியப் பொறுப்புகளும் வந்துசேரும். உயரதிகாரிகளிடம் பாராட்டும் நன்மதிப்பும் பெறலாம். அரசு சார்ந்த துறைப் பணியாளர்களுக்கு இடமாற்றம், ஊர்மாற்றம் ஏற்படும். சனிக்கிழமைதோறும் காலபைரவரை வழிபடவும்.

கும்பம்

கும்ப ராசிநாதன் சனி 11-ல் பலம்பெற்று ராசியைப் பார்க்கிறார். ராசிநாதன் ராசியைப் பார்ப்பது ஒருவகையில் சிறப்பு. உங்களது செயல்பாடுகளில் வெற்றியும், திட்டமிட்ட காரியங்களில் முன்னேற்றமும் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். 4-ஆமிடத்து ராகுவும், 10-ஆமிடத்துக் கேதுவும் தொழில்துறையில் வளர்ச்சியை உண்டாக்கும். 8-ஆம் தேதிமுதல் 8-ல் புதன் (கன்னியில்) ஆட்சி. "மறைந்த புதன் நிறைந்த தனம்' என்பதற்கிணங்க தனலாபம் கிடைக்கும். சிலருக்கு தகப்பனார்வகையில் அல்லது தகப்பனாரால் சங்கடமும் வருத்தமும் ஏற்படலாம். பதவி, தொழில், வாழ்க்கை ஆகியவற்றில் பிரச்சினைக்கு இடமில்லை. சிலருக்கு ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் வரலாம். ஜாதக தசாபுக்திப் பலன்களை அனுசரித்துப் பரிகாரம் தேடிக்கொள்ளவும். கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு நிலவலாம். ஆனால் ஒற்றுமை பாதிக்காது. சனிக்கிழமைதோறும் ஆஞ்சனேயரை வழிபடவும்.

மீனம்

மீன ராசிநாதன் குரு 10-ல் ஆட்சி. அவருடன் 11-க்குரிய சனி இணைந்திருக்கி றார். தொழில்துறையில் வளர்ச்சி உண்டு. சுபமுதலீட்டிற்கும் இடமுண்டு. எண்ணங்கள் செயல்வடிவம் பெறும். 2-ல் செவ்வாய் ஆட்சி. பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். கேட்ட இடத்தில் கேட்ட உதவி கிடைக்கும். 10-ல் சனி இருந்து கர்ம ஸ்தானம் வலுவடைவதால், பெற்றோரின் உடல்நலத்தில் மிகுந்த கவனம் தேவை. 10-ஆமிடத்து குரு பதவி மாற்றத்தையும் தரலாம். அது நன்மையே செய்யும். 3-ல் இருக்கும் ராகு தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகப்படுத்துவார். 9-ல் கேது ஆன்மிக நாட்டத்தை ஏற்படுத்துவார். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம். தெய்வத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பணிபுரிவோரால் ஏற்பட்ட தொல்லை அகலும். உற்றார்- உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியப்படுவர். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

om011020
இதையும் படியுங்கள்
Subscribe