1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் முழுவதும் உங்கள் எண்ணமும் செயலும் ஊக்கமாக இருக்கும். இதுவரை உடல்நலக்குறைவுக்கு அதிகம் செலவுசெய்த உங்களுக்கு இனி மருத்துவச் செலவுகள் குறையும். எதிர்பார்த்த பணவரவுகள் தாமதமின்றி வந்துசேரும். அதேபோல வரவுக்குத் தகுந்த செலவும் ஏற்படும். வியாபாரிகள் நல்ல விற்பனையை அடைவார்கள். கொள்முதல் பொருட்கள் அனைத்தும் விற்பனையாகும். வராத கடன்தொகையும் வந்துசேரும். தொழிலதிபர்கள் தொழிலாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கனிவான பேச்சில் தொழிலாளர்களை வேலை வாங்க வேண்டும். புதிய தொழில் துவங்கும் திட்டங்களைத் தள்ளிவைக்க வேண்டும். அரசு ஊழியர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். இளைஞர்கள் காவல்துறை, ராணுவத்தில் சேரும் திட்டம் நிறைவேறும். மாணவர்கள் மந்த நிலைமாறி திட்டமிட்டுப் படித்து முன்னேறுவார்கள். அரசியல்வாதிகளின் பொதுவாழ்வில் ஏற்றம் பெறும் மாதம். தலைமையால் பாராட்டப்படுவார்கள். பொதுமக்களிடத்திலும் நல்ல பெயர் வந்துசேரும். ஒருசிலர் பெற்றோருக்காக மருத்துவச் செலவு செய்ய நேரலாம். கடிதத் தொடர்புகள் அனுகூலத்தைத் தரும். புதிய வீடு வாங்கும் எண்ணம் ஈடேறும்.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.
தவிர்க்கவேண்டிய தேதி: 3; 4, 13, 22, 31; 8, 17, 26.
வணங்கவேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு;
இந்த மாதம் முழுவதும் எதிலும் திட்டமிட்டு செயல்படவேண்டும். சென்ற மாதம் தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் இனிதே நடந்து முடியும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டு. உடன்பிறந்தவர்களால் ஏற்பட்ட சிரமம் விலகும். வழக்கு உங்களுக்கு சாதகமாகும். பிரித்துக் கிடைக்காத பூர்வீக சொத்துகள் பேச்சுவார்த்தைமூலம் வந்து சேரும். வியாபாரிகள் வியாபாரத்தை மும்முரமாகச் செய்வார்கள். லாபம் இருமடங்காகும். தொழிலதிபர்கள், வெளிநாடுகளில் தொழிலை விரிவாக்கும் திட்டம் நிறைவேறும். தொழிலாளர்கள் ஒற்றுமையால் லாபம் இருமடங்காகும். பெற்றோர்கள்வழியில் இருந்துவரும் மருத்துவச் செலவு குறையும். இதுவரை வராமல் பிரிந்துசென்ற பிள்ளைகள் வந்துசேர்வார்கள். நீண்டகாலமாக இழுபறியாக இருந்துவரும் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். கடிதத் தொடர்பில் நல்ல தவல்கள் வந்துசேரும். அரசு ஊழியர்கள் சக பணியாளர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர்களால் மேலதிகாரிகளிடம் பிரச்சினை வர வாய்ப்புள்ளது. மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண் பெற்று, பள்ளித் தலைமையின் பாராட்டைப் பெறுவார்கள். அரசியல்வாதிகள் திட்டமிட்டபடி வளர்ச்சி காண்பார்கள். பக்கத்தில் உள்ளவர்கள் செய்யும் உதவிகள் உங்களை மேன்மைப்படுத்தும்.
அதிர்ஷ்ட தேதி: 8; 9, 18, 27.
தவிர்க்கவேண்டிய தேதி: 1; 2, 11, 20, 29; 7, 25.
வழிபடவேண்டிய தெய்வம்: அம்மன் தெய்வங்கள்.
3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் உறவினர்கள் வருகை அதிகமாகும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். சகோதரர்கள்வழியில் பகை வரும் காலம். அடுத்தவர்களுக்காகப் பரிந்து பேசுவதைத் தவிர்க்கவேண்டும். சம்பந்தமில் லாத விஷயங்களில் தலையிட்டு அதனால் சிரமத்தை அடைய நேரிடலாம். நீங்கள் நேசித்த ஒருவரைப் பிரியவேண்டி வரலாம். உடல்நிலையில் அதிக கவனம் செலுத்தவேண்டும். வியாபாரிகள், வியாபாரம் காரணமாக தொலைதூரத்திற்குச் சென்றுவருவீர்கள். வியாபாரம் இருமடங்காகும். உடன்பிறந்தோர்களோடும், மற்றவர்களோடும் வாக்குவாதத்தைத் தவிர்க்கவேண்டும். பிரிவுகள் கூடிவருகின்ற மாதம். "நா' காத்து நன்மைகளை அடையலாம். அரசு ஊழியர்கள் தங்கள் வேலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களை நம்பி வேலைகளை ஒப்படைத்தால் மேலதிகாரிகளின் நடவடிக் கைக்கு ஆளாக நேரிடும். மாணவர்கள் படிப்பில் எதிர்பாராத முன்னேற்றம் உண்டு. சிலர் வெளிநாடு சென்று படிக்கும் திட்டம் நிறைவேறும். தந்தை- மகன் உறவுகளில் விரிசல் வரும் மாதம். சற்று பொறுமையுடன் வயதுக்குத் தகுந்தபடி சென்றால் பிரிவைத் தவிர்க்கலாம். அரசியல்வாதிகள் இந்த மாதம் முழுவதும் சற்று நிதானமாகச் செல்ல வேண்டும். ஒருசில அரசுப் பணியாளர்கள் அரசாங்கத்தால் கௌரவிக்கப்படுவார்கள்.
அதிர்ஷ்ட தேதி: 3, 12, 21, 30; 9, 18, 27.
தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31; 6; 17, 26; 29.
வணங்கவேண்டிய தெய்வம்: அங்காள பரமேஸ்வரி அம்மன் தெய்வங்கள்.
4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் முழுவதும் நீங்கள் திட்ட மிடாமல் செய்த காரியத்தில்கூட வெற்றி காண்பீர்கள். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். திருமணப் பேச்சுகள் கைகூடும். பூர்வீகச் சொத்துகளில் இருக்கும் வில்லங்கம் நீங்கும். மகான்களின் தரிசனம் கிட்டும். மருத்துவச்செலவுகள் குறையும். பிள்ளைகளின் வளர்ச்சி கூடும். கல்வியில் ஆர்வமுடன் இருப்பார்கள். வியாபாரிகள் நீண்டநாட்களாக வராமலிருக்கும் பாக்கிகளை வசூல்செய்யும் முயற்சிகள் கைகூடும். வியாபாரம் எதிர்பார்த்ததைவிட கூடுதலாகும். தொழிலதிபர்கள் திட்டமிட்டபடி புதிய தொழில் தொடங்குவர். வெளிநாட்டில் தொழில் தொடங்கும் திட்டத்தில் மாறுதல் செய்வார்கள். ஒருசிலர் பிள்ளைகள்வழியில் அதிக வரவுகளைப் பெறுவார்கள். கணவன்- மனைவி ஒற்றுமைக்குக் குறைவிருக்காது. அன்யோன்யம் அதிகரிக்கும். கலைஞர்கள் நல்ல வாய்ப்புகளைப் பெறுவார்கள். தாய்- தந்தையர் பிள்ளைகளுக்காகச் செய்யும் செலவுகளில் லாபம் உண்டு. ஒருசிலர் வெளிநாடு போகும் திட்டம் நிறைவேறும். அரசு ஊழியர்கள் வரவேண்டிய நிலுவைகளைத் தடையின்றி அடைவார்கள். அரசியல்வாதிகள் செய்யும் காரியங்களில் முன்னேற்றம் காண்பர். எதிரிகள் விலகிச்செல்வார்கள். பெண்களுக்கு தாய்வழியில் வரவேண்டிய சொத்துகள் வந்துசேரும்.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.
தவிர்க்கவேண்டிய தேதி: 8, 17, 26.
வணங்கவேண்டிய தெய்வம்: சுப்பிரமணியர், துர்க்கையம்மன்.
5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் கோபத்தை ஜெயிக்கவிடாதீர்கள். காரியங்கள் கெட்டுப் போகும். நிதானமான பேக்கால் பல நன்மைகளை அடைவீர்கள். தாங்கள் சிந்தித்த காரியங்கள் கைகூடிவரும். உடல்நிலை சீராக இருக்கும். எதிர்பார்த்த பணவரவுகள் தடையின்றிக் கிட்டும். அதற்கேற்றவாறு செலவுகளும் கூடும். மனைவிவழியில் அதிக செலவுகள் வந்துசேரும். வியாபாரிகள் கொள்முதல் சரக்குகள் முழுவதையும் விற்று இரட்டிப்பு லாபத்தைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் புதிய தொழில் தொடங்கும் திட்டம் தள்ளிப்போகும். ஆனால் கையிருப்புள்ள உற்பத்திப் பொருட்கள் முழுவதும் விற்றுவிடும். தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் பணிபுரிவார்கள். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் திட்டமிட்டபடி நடக்கும். காணாமல்போன பொருள் வந்துசேரும். பயணத்தில் மிகவும் எச்சரிக்கையாகச் செல்ல வேண்டும். கைப் பொருளை மற்றவர்கள் திருடிச்செல்லும் நிலை உள்ளது. காலம்காலமாய் இருந்துவரும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பை அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் அதிக மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர்களுக்குப் பெருமை சேர்ப்பார்கள். வேலை தேடும் இளைஞர்களுக்கு நல்ல வேலை கிட்டும். மகான்களின் தரிசனம் கிட்டும். அரசு ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதலைப் பெறுவார்கள். கணவன்- மனைவி ஒற்றுமைக் குக் குறைவிருக்காது. ஒருசிலருக்குக் குலதெய்வ கோவிலுக்குச் செல்லும் எண்ணம் ஈடேறும். அரசியல்வாதிகள் தலைமையின் பாராட்டையும் நினைத்தபடி பொறுப்புகளையும் அடைவார்கள்.
அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9.
தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21.
வணங்கவேண்டிய தெய்வம்: துர்க்கை, மகாலட்சுமி, விஷ்ணு.
6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் முழுவதும் பரபரப்புடன் செயல்படுவீர்கள். இதுவரை தடைப்பட்ட காரியங்கள் இனி உங்கள் எண்ணப்படி ஈடேறும். கணவன்- மனைவி ஒற்றுமையில் சற்று விவகாரம் வரும். அதனைத் தவிர்ப்பதற்கு, மனைவியின் செயல்பாடுகளைப் பெரிதுபடுத்தாமல் இருக்கவேண்டும். நீங்கள் நேசித்த ஒருவரைப் பிரிய வேண்டிவரலாம். பயணத்தின்போது விபத்துகள் வராமலிருக்க வேகத்தைக் குறைத்துச் செல்லுங்கள். பிள்ளைகளுக்கு நல்ல வரன்கள் வந்துசேரும். பூர்வீகச் சொத்துகளில் இருந்துவரும் வில்லங்கம் நீங்கும். சகோதரர்கள் ஒற்றுமை கூடும். ஒருசிலர் பெற்றோர் மருத்துவத்துக்காக கூடுதலாக செலவு செய்யலாம். அரசு ஊழியர்கள் அரசாங்க வழியில் எதிர்பார்த்த உதவிகள் வந்துசேரும். ஆன்மிக சுற்றுலா சென்று வருவீர்கள். வியாபாரிகளுக்கு இதுவரை தொல்லை கொடுத்துவந்த மறைமுக எதிரிகள் விலகிச் செல்வார்கள். வேலைதேடும் இளைஞர்கள் நல்ல வேலை வாய்ப்புகளைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் தங்கள் நிர்வாகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண்பார்கள். முதலாளிக்கு ஆதரவாக ஊழியர்கள் செயல்படுவார்கள். மாணவர்கள் மிகவும் கவனமுடன் படிக்க வேண்டும். மறதியால் மதிப்பெண் குறையும். அரசியல்வாதிகளுக்கு தொல்லை கொடுத்து வரும் எதிரிகள் விலகிச் செல்வார்கள். புதிய வண்டி வாங்கும் திட்டம் நிறைவேறும். புதிய பதவிகளும் வந்துசேரும்.
அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24; 9, 18.
தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21, 30.
வணங்கவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வேங்கடாசலபதி.
7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் நீங்கள் சிந்திக்காமல் செய்த காரியத்தில்கூட நல்ல வருவாயைப் பெறுவீர்கள். அதிக உழைப்புள்ள மாதம். அதற்கேற்ற வருவாயையும் பெறுவீர்கள். ஒருவர் செய்த உதவிக்காக தேடிச்சென்று உதவி செய்வீர்கள். கணவன்- மனைவி ஒற்றுமை மேலோங்கும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். பிள்ளைகள்வழியில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். குழந்தை பாக்கியம் இல்லையே என்று வருந்தி வருபவர்கள் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். பிரிந்துசென்ற பிள்ளைகள் வந்து சேர்வார்கள். மருத்துவச்செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்ததைவிட கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் திட்டமிட்டபடி புதிய தொழில் துவங்குவார்கள். உற்பத்தி பெருகும். தொழிலாளர்கள் கைகொடுப்பார்கள். ஒப்பந்தத் தொழில், தரகுத்தொழில் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவதோடு, புதிய ஒப்பந்தங்களையும் செய்வார்கள். அரசு ஊழியர்கள் நல்ல பெயரோடு, வரவேண்டிய நிலுவைகளையும் பெறுவார்கள். வேலையிழந்த அரசு ஊழியர்கள் மீண்டும் பதவியை அடைவார்கள். கல்விக்கூடம், தொழிற்கல்வி நிறுவனங்கள் நடத்துபவர்கள் தங்கள் நிறுவனங்களை மிகவும் கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். அரசியல்வாதிகள் பொதுமக்களால் பாராட்டப்படுவார்கள். புதிய பதவிகளையும் அடைவார்கள்.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 2, 11, 20.
தவிர்க்கவேண்டிய தேதி: 7, 16.
வணங்கவேண்டிய தெய்வம்: கணபதி, சுப்பிரமணியர்.
8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் அமைதியும், ஆனந்தமும் நிலவும். உடல்நிலை சீராகும். கணவன்- மனைவி ஒற்றுமைக்குக் குறைவிருக்காது. பிள்ளைகள் பற்றிய கவலைகள் மாறும். பிள்ளைகள் நல்லவழிக்குச் செல்வார்கள். திருமணமாகாத பிள்ளைகளுக்கு திருமணப் பேச்சுகள் கைகூடிவரும். கடல்கடந்து நல்ல செய்திகள் வந்துசேரும். தொழிலதிபர்களுக்கு தொல்லை கொடுத்துவரும் எதிரிகள் விலகிச்செல்வார்கள். உற்பத்தி, லாபங்கள் பெருகும். நல்ல தொழிலாளர்கள் வந்துசேர்வார்கள். வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். பிரிந்துசென்ற உறவுகள் வந்துசேரும். உங்களை உதாசீனம் செய்தவர்கள், உங்கள் வளர்ச்சியைக் கண்டு வியப்பார்கள். நயவஞ்சகம் செய்த நண்பர்கள் சிரமத்தை அடைவார்கள். வியாபாரிகள் எடுத்த காரியத்தை நல்ல முறையில் முடிப்பார்கள். ஒருசிலருக்கு புதிய வீடு, வண்டி வந்துசேரும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் சாதகமாக முடியும். குழந்தையில்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். அரசு ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதல் பெறுவார்கள். உயரதிகாரிகளின் பாராட்டையும் பெறுவார்கள். வரவேண்டிய நிலுவைகள் வந்துசேரும். உங்கள் உயர்வு மற்றவர்களுக்கு லாபத்தைத் தரும். மாணவர்கள் கல்வியில் உயர்வார்கள். கடிதப் போக்குவரத்துகள் அனுகூலமான பலனைக் கொண்டுவரும். அரசியல்வாதிகள் தலைமையால் பாராட்டப்பட்டு புதிய பதவிகளை அடைவார்கள்.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 9, 18, 27.
தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31.
வணங்கவேண்டிய தெய்வம்: வேங்கடாசலபதி, திருச்செந்தூர் முருகன்.
9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இது உங்களுக்கு அதிர்ஷ்டமான மாதம். பொருளாதாரத்தில் மிகவும் கீழ்மட்டத்திலிருந்த சிலர் திடீர் பணக்காரர்களாகிவிடுவார்கள். காணாமல்போன- திருட்டுப்போன பொருட்கள் கிடைக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். இருவர்வழியிலும் வரவேண்டிய சொத்துகள் வந்துசேரும். வியாபாரிகள் ஏற்றம் பெறும் மாதம். புதிதாக வியாபாரம் தொடங்குவார்கள். புதிய வீடு வாங்கும் திட்டம் நிறைவேறும். உங்களைப் பிரிந்துசென்ற பிள்ளைகள் வந்துசேர்வார்கள். உடல்நிலையில் சற்று கவனமாக இருக்கவேண்டும். உணவுக் கட்டுப்பாடு மருத்துவச் செலவைக் குறைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். கைமாற்றாகக் கொடுத்த பணம் முழுவதும் வந்துசேரும். இளைஞர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் வந்துசேரும். தாய்- தந்தைவழியில் ஒரு சிலருக்கு மருத்துவச் செலவுகள் வரலாம். தொழிலதிபர்கள் வெளிநாட்டில் புதிய தொழில் தொடங்குவார்கள். புதிய ஒப்பந்தங் கள் கிட்டும். சகோதரர்கள் ஒற்றுமை மேலோங்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண் பெற்று பெற்றோருக்குப் பெருமை சேர்ப்பார்கள். ஒருசில குடும்பத்தில் இருந்துவரும் குழப்பம் நீங்கி சொத்துப் பிரிவினை சுமுகமாக நிறைவேறும். அரசியல் பிரமுகர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு புதிய பொறுப்புகளை அடைவார்கள். பொதுமக்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும்.
அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9, 18, 17.
தவிர்க்கவேண்டிய தேதி: 2, 11, 20, 29.
வணங்கவேண்டிய தெய்வம்: திருச்செந்தூர் முருகன்.
செல்: 94871 68174