அக்டோபர் மாத ராசிபலன்கள்

/idhalgal/om/october-month-horoscopes

மேஷம்

மேஷ ராசிநாதன் செவ்வாய் இம்மாதம் 23-ஆம் தேதிவரை ராசிக்கு 6-ல் மறைகிறார். என்றாலும் ராசியைப் பார்க்கிறார். செவ்வாய்க்கு 3, 6, 11-ஆமிடங்கள் நல்ல இடங்கள். அதனடிப்படையில் 6-ஆமிடத்து மறைவு தோஷம் பாதிக்காது. அவருடன் 6-க்குடைய புதனும் ஆட்சி, உச்சம். தேகநலனில் மருத்துவச் செலவுகள் ஏற்பட்டு விலகும். பெரிதளவு பாதிப்புக்கு இடமிருக்காது. 18-ஆம் தேதிமுதல் 5-க்குடைய சூரியன் (திரிகோணாதி பதி) 7-ல் கேந்திரம் பெற்று ராசியைப் பார்க்கி றார். உங்கள் மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். வீண் கற்பனை பயம் அகலும். கணவரால் மனைவிக்கும்- மனைவியால் கணவருக்கும் ஆதாயமும் ஆதரவும் பெருகும். மாத ஆரம்பத் தில் சுக்கிரன் 8-ல் மறைந்தாலும், சுக்கிரனுக்கு வீடுகொடுத்த செவ்வாயை குரு பார்க்கிறார். மனசஞ்சலம் மாறும். மகிழ்ச்சியான திட்டங்கள் செயல்படும். செலவுகளை சிக்கனமாகச் செய்து சேமிப்புக்கு வழிவகை செய்யலாம். திருஷ்டி தோஷப் பரிகாரம் செய்துகொள்ளவும்.

ரிஷபம்

இம்மாத ஆரம்பத்திலேயே ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 7-ல் மாறி ராசியைப் பார்க்கிறார். ஜென்மத்தில் ராகு நின்று உங்கள் காரியங்களில் குறுக்கீடுகளையும், தடை, தாமதங்களையும் ஏற்படுத்தினாலும், சுக்கிரன் ராசியைப் பார்ப்ப தால் தடைகளை உடைத்து வெற்றிபெறலாம். 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். அத்துடன் குரு சனியுடன் இணைந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் வெற்றி உறுதி என்று முன்னேறிச் செல்லலாம். கணவன்- மனைவிக்குள் சிறுசிறு சச்சரவுகள் வந்தாலும் பிரிவினைக்கு இடமில்லை. உறவினர்களாலும் சொந்த பந்தங்களாலும் அவ்வப் போது சில மனக்கசப்புகள் உண்டாகும். 4-க்குடைய சூரியன் 18-ஆம் தேதிமுதல் 6-ல் மறைவு, நீசம். எனவே, தகப்பனார் வகையில் சிலருக்கு வைத்தியச் செலவு கள் அல்லது கண்டங்கள் ஏற்படலாம். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் இழுபறி நிலை காணப்படலாம். பொறுமையுடனும் நிதானத்துடனும் அணுகி காரியத்தை சாதிக்கவேண்டும். 5-ல் புதன் ஆட்சி, உச்சம். எண்ணங்களில் புதிய சிந்தனை உண்டாகும்.

மிதுனம்

மிதுன ராசிநாதன் புதன் 4-ல் ஆட்சியாக இருக்கிறார். 4-ஆமிடம் கேந்திர ஸ்தானம். வீடு, மனை, வாகன யோகம் பற்றிய ஸ்தானம். இவை சம்பந்தப் பட்டவகையில் நற்பலன்களை எதிர் பார்க்கலாம். மேலும் 10-க்

மேஷம்

மேஷ ராசிநாதன் செவ்வாய் இம்மாதம் 23-ஆம் தேதிவரை ராசிக்கு 6-ல் மறைகிறார். என்றாலும் ராசியைப் பார்க்கிறார். செவ்வாய்க்கு 3, 6, 11-ஆமிடங்கள் நல்ல இடங்கள். அதனடிப்படையில் 6-ஆமிடத்து மறைவு தோஷம் பாதிக்காது. அவருடன் 6-க்குடைய புதனும் ஆட்சி, உச்சம். தேகநலனில் மருத்துவச் செலவுகள் ஏற்பட்டு விலகும். பெரிதளவு பாதிப்புக்கு இடமிருக்காது. 18-ஆம் தேதிமுதல் 5-க்குடைய சூரியன் (திரிகோணாதி பதி) 7-ல் கேந்திரம் பெற்று ராசியைப் பார்க்கி றார். உங்கள் மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். வீண் கற்பனை பயம் அகலும். கணவரால் மனைவிக்கும்- மனைவியால் கணவருக்கும் ஆதாயமும் ஆதரவும் பெருகும். மாத ஆரம்பத் தில் சுக்கிரன் 8-ல் மறைந்தாலும், சுக்கிரனுக்கு வீடுகொடுத்த செவ்வாயை குரு பார்க்கிறார். மனசஞ்சலம் மாறும். மகிழ்ச்சியான திட்டங்கள் செயல்படும். செலவுகளை சிக்கனமாகச் செய்து சேமிப்புக்கு வழிவகை செய்யலாம். திருஷ்டி தோஷப் பரிகாரம் செய்துகொள்ளவும்.

ரிஷபம்

இம்மாத ஆரம்பத்திலேயே ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 7-ல் மாறி ராசியைப் பார்க்கிறார். ஜென்மத்தில் ராகு நின்று உங்கள் காரியங்களில் குறுக்கீடுகளையும், தடை, தாமதங்களையும் ஏற்படுத்தினாலும், சுக்கிரன் ராசியைப் பார்ப்ப தால் தடைகளை உடைத்து வெற்றிபெறலாம். 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். அத்துடன் குரு சனியுடன் இணைந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் வெற்றி உறுதி என்று முன்னேறிச் செல்லலாம். கணவன்- மனைவிக்குள் சிறுசிறு சச்சரவுகள் வந்தாலும் பிரிவினைக்கு இடமில்லை. உறவினர்களாலும் சொந்த பந்தங்களாலும் அவ்வப் போது சில மனக்கசப்புகள் உண்டாகும். 4-க்குடைய சூரியன் 18-ஆம் தேதிமுதல் 6-ல் மறைவு, நீசம். எனவே, தகப்பனார் வகையில் சிலருக்கு வைத்தியச் செலவு கள் அல்லது கண்டங்கள் ஏற்படலாம். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் இழுபறி நிலை காணப்படலாம். பொறுமையுடனும் நிதானத்துடனும் அணுகி காரியத்தை சாதிக்கவேண்டும். 5-ல் புதன் ஆட்சி, உச்சம். எண்ணங்களில் புதிய சிந்தனை உண்டாகும்.

மிதுனம்

மிதுன ராசிநாதன் புதன் 4-ல் ஆட்சியாக இருக்கிறார். 4-ஆமிடம் கேந்திர ஸ்தானம். வீடு, மனை, வாகன யோகம் பற்றிய ஸ்தானம். இவை சம்பந்தப் பட்டவகையில் நற்பலன்களை எதிர் பார்க்கலாம். மேலும் 10-க்குடைய குருவும், 9-க்குடைய சனியும் இணைந்திருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். அது உங்களை வழிநடத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 4-ஆமிடத்திற்கு குருபார்வை கிடைக்கிறது. வாகனம் அல்லது மனை வாங்கும்வகையில் கடனும் கிடைக்கும்; சுபவிரயமும் உண்டாகும். தொழில்வகையிலும் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் கைகூடிவரும். சிலர் தொழில் மாற்ற சிந்தனை செய்ய லாம். இடமாற்றமும் தொழில் மாற்றமும் நன்மையே தரும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அதுவும் கைகூடும். குரு 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். வரவும் நன்றாக இருக்கும்; புதிய திருப்பங் களும் ஏற்படக்கூடும்.

கடகம்

கடக ராசிக்கு 6, 9-க்குடைய குரு 7-ல் நீசபங்கம் பெற்று ஜென்ம ராசியைப் பார்ப்பது ஒருபலம். நினைத்த காரியத்தை முடிக்கும்வகையில் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் கைகொடுக்கும். தடைப் பட்டுவந்த காரியங்கள் இனி தானாகவே நடைபெறும். புதிய முயற்சிகள் கைகூடும். புதிய ஒப்பந்தங்களும் வந்துசேரும். பொருளா தாரத்தில் நிறைவு ஏற்படும். அரசியல் மற்றும் பொதுநலனில் இருப்பவர்களுக்கு மதிப்பு, மரியாதை, செல்வாக்கு உயரும். குரு பார்க்க கோடி நன்மை என்பதுபோல, அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு நல்ல காரியங்கள் செய்ய முனைவீர்கள். 4-க்குடைய சுக்கிரன் 5-ல் திரிகோணம் பெறுகிறார். கணவன் அல்லது மனைவி வகையில் நிலவிய வைத்தியச் செலவுகள் விலகி ஆரோக்கியம் உண்டாகும். உத்தியோகத்தில் இருக்கும் மனைவியென் றால் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. பயணங்கள் பலன்தரும். அரசுவழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சகோதர ஒற்றுமை நன்றாக விளங்கும்.

சிம்மம்

சிம்ம ராசிநாதன் சூரியன் மாத நடுப்பகுதி வரை 2-ல் 2-க்குடைய புதனோடு கூடியிருக்கி றார். புதன் ஆட்சி, உச்சம். 2-ஆமிடத்திற்கு குரு பார்வை. குரு 5-க்குடையவர். ஆகவே குடும்பம், பொருளாதாரம் இவற்றில் தொய்வுக்கும் இடமில்லை; தோல்விக்கும் இடமில்லை. சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். 10-க்குடைய சுக்கிரன் 4-ல் கேந்திரம் பெறுகிறார். தொழி-ல் சிலநேரம் தாமத செயல்பாடுகள் தோன்றினாலும் முயற்சிகளில் லாபம் உண்டாகும். 5-க்குடைய குரு 6-ல் மறைவதால் பிள்ளைகள்வகையில் சில தொல்லைகளும் பிரச்சினைகளும் உருவாகும் என்றாலும், 6-க்குடைய சனி ஆட்சிபெற்று குருவுடன் கூடியிருப்பதால் அவற்றையெல்லாம் சமாளிக்கும் ஆற்றலும் திறமையும் உருவாகும் என்பதில் சந்தேக மில்லை. புதிய சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும். துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வீண் விரயங்களைக் கட்டுக்குள் வைத்திருக்கப் பழகிக்கொள்ளுங்கள்.

கன்னி

கன்னி ராசிநாதன் புதன் ஆட்சி, உச்சம். அவருடன் 8-க்குடைய செவ்வாயும், 12-க்கு டைய சூரியனும் சேர்க்கை. ஜான் ஏற முழம் வழுக்கிய கதையாகத்தான் உங்கள் செயல்பாடு களும் திட்டங்களும் இருக்கும். "ஒன்று நினைக் கில் அது ஒழிந்து மற்றொன்றாகும். ஒன்று நினையாமல் முன்வந்து நிற்கும்; எனையாளும் ஈசன் செயல்' என்ற பாடலுக்கேற்ப எதிர்பாராத செயல்பாடுகளும் நடக்கும். என்றாலும் ராசிநாதன் ஆட்சி என்பதாலும், ராசிக்கும் ராசிநாதனுக்கும் குருபார்வை கிடைப்பதாலும் இவற்றையெல்லாம் சமாளித்து முன்னேறும் தைரியத்தைத் தரும். 3-ஆமிடத்துக் கேது அதற்கான துணிவைத் தரும். 2-க்குடைய சுக்கிரன் 3-ல் மறைவதால் பொருளாதாரத்தில் பற்றாக் குறை நிலை ஏற்படலாம். 5-ஆமிடத்து சனி பிள்ளைகளைப் பற்றிய கவலையும் சஞ்சல மும் அதிகப்படுத்தும். கொடுக்கல்- வாங்கலில் கவனமும் எச்சரிக்கையும் தேவை. சகோதர உறவில் விரிசல் இருக்கத்தான் செய்யும்.

dd

துலாம்

துலா ராசிநாதன் சுக்கிரன் 2-ல் (3-ஆம் தேதிமுதல்) மாறுகிறார். 2-ஆமிடம் தன ஸ்தானம். அங்கு சுக்கிரன் சஞ்சரிக்கும் காலம் தனவரவிற்குப் பஞ்சமிருக்காது. கணவ ரால் மனைவிக்கும் அல்லது மனைவியால் கணவருக்கும் ஆதாயம் உண்டு. சில மனைவி மார்கள் குடும்பத்தைத் தாங்கிப் பிடிக்கும் தூணாக விளங்கி பாரங்களை சுமப்பர். இனத் தார் பகை மாறும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். ஒருசிலருக்கு தொழில்வகையில் இடமாற்றம் அல்லது தொழில் மாற்றம் உண்டாகலாம். 9-க்குடைய புதன் 12-ல் மறைந் தாலும் ஆட்சி, உச்சம். 11-க்குடைய சூரியனும் 12-ல் மறைவு. தகப்பனாருக்கும் பிள்ளை களுக்குமிடையே பனிப்போர் போன்ற சூழ்நிலை நிலவலாம். தந்தைவழியில் சில பிரச்சினைகளும் ஏற்படும். பூர்வீக சொத்து சம்பந்தமான வில்லங்க, விவகாரங்கள் உண்டாகும். 4-ல் சனி- தேகநலனில் கவனம் தேவை. கால் நரம்பு அல்லது மூட்டு சம்பந்தப் பிரச்சினைகள் ஏற்பட இடமுண்டு.

விருச்சிகம்

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 11-ஆமிட மான ஜெய ஸ்தானத்தில் இருக்கிறார். 11-க்குடைய புதன் ஆட்சி. 10-க்குடைய சூரியன் சேர்க்கை. ஆக, எடுத்த காரியத்தில் எல்லாம் வெற்றிவாகை சூடலாம். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். துணிவும் தன்னம் பிக்கையும் கூடும். புதிய திட்டங்கள், ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆதாயம் தரும் தகவல்கள் அதிகமாகும். தொழில்வகைக் கூட்டுக்கு உறவினர்களே வந்தமையலாம். முதலீடு செய்வதற்கும் உதவி செய்யலாம். 11-ஆமிடத்தை குரு பார்ப்பதால் போட்டி, பொறாமைகளை எளிதாக வெற்றிகொண்டு பலனடையலாம். 4-ஆமிடத்து அதிபதி 3-ல் மறைவதால் வீடு பழுதுபார்ப்பது அல்லது வீட்டை விரிவுசெய்வது போன்ற முயற்சி களில் இறங்கலாம். 3-ஆமிடம் சனிக்கு மிகமிக நல்ல இடம். அதுவும் அவர் அங்கு ஆட்சி. ஆகவே, உடன்பிறப்புக்களால் நிலவிய மனவருத்தம் விலகும்; ஒற்றுமை உண்டாகும்; தனவரவும் தாராளமாக அமையும்.

தனுசு

தனுசு ராசிநாதன் குரு 2-ல் நீசம் பெறுகிறார். 2-க்குடைய சனி ஆட்சிபெற்று, குரு அவருடன் இணைவதால் குருவுக்கு நீசபங்க ராஜயோகம் கிடைக்கிறது. தனவரவு நன்றாக இருக்கும். எதிர்பாராத நல்ல திருப்பங்கள் உண்டாகும். தொழில் வளர்ச்சியும் சீராக இயங்கும். 9-க்குடைய சூரியன் 10-ல், 10-க்குடைய புதனோடு சேர்வது தர்மகர்மாதிபதி யோகமாகும். எனவே வாழ்க்கை, தொழில் இவற்றில் தோல்வி, தொய்வுக்கு இடமில்லை. 10-ல் உள்ள செவ்வாயையும் 10-ஆமிடத்தையும் குரு பார்க்கிறார். கட்டடம், ரியல் எஸ்டேட் தொழில்புரிகிறவர்களுக்கு நற்காலமாக விளங்கும். தொழில் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படாது. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கும் உயர்வு உண்டாகும். சிலர் பதவி உயர்வுடன்கூடிய இடமாற்றத்தை எதிர்கொள்ள நேரும். தாய்சுகம், தன்சுகம் இவற்றில் கவனம் தேவை. மருத்துவச் செலவுகள் ஏற்பட்டு விலகும்.

மகரம்

மகர ராசிநாதன் சனி ஆட்சி. 12-க்குடைய குரு ஜென்ம ராசியில் நீசம் பெற்றாலும் நீசபங்க ராஜயோகத்துடன் சஞ்சாரம். எதிர்பார்த்த நற்பலன்கள் படிப்படியாக நடைபெறும். வருமானப் பற்றாக்குறை அகலும். 10-க்குடைய சுக்கிரன் 11-ல் மாறுகிறார். தொழில் முயற்சியில் அனுகூலம் கிட்டும். குரு 3-க்குடையவர். அவர் ராசிநாதனோடு இணைந்திருப்பதால் தன்னம்பிக்கை, துணிவு, தைரியம் இவற்றிற்கு குறையில்லை. சனியின் வக்ரநிவர்த்திக்குப்பிறகு கொடுக்கல்- வாங்கல் சீராக இருக்கும். குடும்ப முன்னேற் றம் கூடும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத் தில் செய்துமுடித்து நற்பெயர் எடுக்கலாம். 9-ல் புதன் ஆட்சி, உச்சம்; சூரியன் சேர்க்கை. பிதுரார்ஜித சொத்துகள் மூலம் நிலவிய வழக்கு வியாஜ்ஜியங்களில் சுமூக தீர்வுண்டாகும். பங்காளி, பகையாளிப் பகை விலகும். விட்டுக் கொடுக்கும் தன்மையும் அதிகமாகும்.

கும்பம்

கும்ப ராசிக்கு ராசிநாதனும் சனிதான்; விரயாதிபதியும் சனிதான். அவர் விரய ஸ்தானத் தில் ஆட்சி. அவருடன் 2-க்குடைய குருவும் சேர்க்கை. ஆக, விரயத்திற்குப் பஞ்சமிருக்காது. வரவுக்கு மீறிய செலவுகளால் சேமிப்புக்கும் இடமிருக்காது. எந்த ஒரு செயலையும் திட்ட மிட்டுச் செய்ய இயலாது. அவ்வாறு திட்ட மிட்டாலும் நடைபெறாமல் ஏமாற்ற நிலையே காணப்படும். எனவே, முன்னெச்சரிக்கையும் கவனமும் அவசியமான ஒன்றாகும். பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். ஒருசிலருக்கு குடும்பத்தில் நிம்மதியின்மையும் ஒற்றுமைக் குறைபாடும் ஏற்படலாம். அது மனவருத்தத்தை உண்டு செய்யும். சிலர் குடும்பம், மனைவி, மக்களைவிட்டு பிரிந்து வாழும் சூழலுக்குத் தள்ளப்படலாம். வீடு, கட்டடம் சம்பந்தபட்டவகையில் வங்கிக்கடன் அல்லது தனியார்க்கடன் கிடைக்கும். உத்தியோகம், வேலை சம்பந்தமாக வெளிநாட்டு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நற்பலன்கள் உண்டாகும்.

மீனம்

மீன ராசிநாதன் குரு 11-ஆமிடமான லாபஸ்தானத்தில் நீசம்பெற்றாலும் நீசபங்க ராஜயோகமடைகிறார். 11-ல் சனி ஆட்சி; 7-ல் புதன் ஆட்சி. சனிக்கு 3, 6, 11 யோகமான இடங்கள். உங்கள் முயற்சிகள், திட்டங்களில் தோல்வி இல்லையென்றாலும் காரியசித்தி என்பதில் சிற்சில தாமதங்களை சந்திக்க வேண்டிவரும். 2-க்குடைய தன ஸ்தானாதி பதி 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். பொருளாதார வரவு நன்றாக இருந்தாலும் அந்த வரவுக்கேற்ற செலவுகள் முன்னாடியே வந்து நிற்கும். என்றாலும் 9-க்குடைய செவ்வாயை 10-க்குடைய குரு பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். எனவே, அது உங்களுக்கு பக்கபலமாக துணைநின்று வழிநடத்தும். மாதப் பிற்பாதியில் 6-க்குடைய சூரியன் 8-ல் மறைவது, "கெட்டவன் கெட்டி டில் கிட்டிடும் யோகம்' என்பதுபோல தகப் பனார்வகையில் சில ஆதாயங்களும் நிகழும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் நற்பலன்கள் ஏற்படும். ப்

om011021
இதையும் படியுங்கள்
Subscribe