மேஷம்

இந்த மாதம் 8-ஆம் தேதி ராகு- கேது பெயர்ச்சி. மேஷத்திலிருந்து மீன ராசிக்கு ராகுவும், துலாத்திலிருந்து கன்னி ராசிக்கு கேதுவும் மாறுகிறார்கள். அதன்படி இதுவரை உங்கள் ராசிக்கு ஜென்மத்தில் இருந்த ராகு 12-ஆமிடத்துக்கும், 7-ல் இருந்த கேது 6-ஆமிடத்துக்கும் மாறுகிறார்கள். ஜென்ம ராசியில் இருந்த ராகுவும் 7-ல் நின்ற கேதுவும் உடல்நலத்தில் வைத்தியச் செலவு, கணவன்- மனைவிக்குள் சச்சரவு, குடும்பத்தில் நிம்மதியற்ற நிலைகளைத் தந்தார்கள். மீன ராகு 10-ஆமிடம், 6-ஆமிடம், 2-ஆமிடங்களைப் பார்க்கிறார். கன்னி கேது 4-ஆமிடம், 12-ஆமிடம், 8-ஆமிடங்களைப் பார்க்கிறார். வெளிநாட்டுப் பயணம், வெளியூர் வேலை, இடமாற்றம் போன்றவற்றை 12-ல் உள்ள ராகுவும் அவரைப் பார்க்கும் கேதுவும் தருவார்கள். ராகு- கேது 6-ஆமிடத்தில் சம்பந்தப்படுவதால் பழைய கடன்கள் அடைபடும். புதிய கடன்கள் உண்டாகும். போட்டி, பொறாமைகள் விலகும். சத்ரு வகையில் தொல்லைகள் அகலும். தொழில், வாழ்க்கை, வேலை இவற்றில் முன்னேற்றம் உண்டாகும். பூமி, வீடு, வாகனம் சம்பந்தப்பட்ட வகையில் பிரச்சினைகள் தோன்றி மறையும். ஜாதகரீதியாக சாதகமான தசாபுக்திகள் நடந்தால் விபரீத ராஜயோகமாகவும், எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும் தரும் யோகமும் ஏற்படும்.

ரிஷபம்

இந்த மாதம் 8-ஆம் தேதி முக்கிய மூன்று பெயர்ச்சிகளில் ஒன்றான ராகு- கேது பெயர்ச்சி மாற்றம் ஏற்படுகிறது. அதன்படி உங்கள் ராசிக்கு 12-ல் இருந்த ராகு 11-ஆமிடத்துக்கும். 6-ல் இருந்த கேது 5-ஆமிடத்துக்கும் மாறுகிறார்கள். கடந்தகால 6-ஆமிடத்துக் கேது முழுமையான நற்பலனைச் செய்யவில்லை என்பதே பல ரிஷப ராசிக்காரர்களின் அனுபவரீதியான உண்மை. 12-ல் குரு நின்று பல வீண் விரயங்களைச் சந்தித்தீர்கள். 5-ல் கேது வந்திருப்பது சுமாரான இடம்தான் என்றாலும் அதுவும் பூர்வபுண்ணிய ஸ்தானம். ரிஷப ராசிக்கு 11-ல் ராகு நிற்க, கேது அவரைப் பார்க்கிறார். சாண் ஏற முழம் வழுக்க, ஒருபடி முன்னேகால் வைத்து நாலுபடி பின்னே இறக்கம் ஏற்பட எந்த சுகபோகமும் அனுபவிக்க மாட்டாமல் போராடியவர்களுக்கு இந்த ராகு- கேது பெயர்ச்சி திருப்பத்தைக் கொடுக்கும். ராகு ஜென்ம ராசி, 5-ஆமிடம், 9-ஆமிடங்களைப் பார்க்கிறார். கேது 3-ஆமிடம், 11-ஆமிடம், 7-ஆமிடங்களைப் பார்க்கிறார். பூர்வபுண்ணியத்தில் செய்த பாவங்களை விலகி விமோசனம் உண்டாகும். செல்வாக்குள்ள பிரமுகர்களின் தொடர்பு கிடைக்கும். ஆலயத் திருப்பணிக்கு வாய்ப்புகள் அமையும். சகோதர சகாயம், நண்பர்களினால் உதவி, திருமணயோகம் போன்றவை ஏற்படும். செல்வாக்கு, கீர்த்தி, பெருமை உண்டாகும். சிலர் மனைவி பெயரில் அல்லது மனைவிவகை உறவினர் பெயரில் சேர்ந்து கூட்டுத்தொழில் செய்யலாம். மே 1-ல் குரு ஜென்ம ராசிக்கு மாறியதும். பிள்ளைகள்வகையில் நன்மை உண்டாகும். கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். இந்த ராகு- கேது நற்பெயர்ச்சியாக அமையும்.

Advertisment

மிதுனம்

இதுவரை உங்கள் ராசிக்கு 11-ல் இருந்த ராகு 10-ஆமிடத்திலும் 5-ல் இருந்த கேது 4-ஆமிடத்துக்கு மாறுகிறார்கள். பாவகிரகங்கள் கேந்திர ஸ்தானத் தில் பலம் பெறுவார்கள்; நலம் தருவார்கள். ஏற்கெனவே ராகு இருந்த இடம் நல்ல இடம் (11-ஆமிடம்) என்றாலும் அட்டமத்துச்சனி மிதுன ராசிக்காரர்களை பாடாய்ப்படுத்திவிட்டது எனலாம். மீன ராகு 8-ஆமிடம், 4-ஆமிடம், 12-ஆமிடத்தைப் பார்க்கிறார். கன்னி கேது 2-ஆமிடம், 10-ஆமிடம், 6-ஆமிடத்தைப் பார்க்கிறார். தொழில் ஸ்தானத் தில் இருக்கும் ராகு உத்தியோகம், வேலை, தொழில் இவற்றில் உன்னத நிலையைத் தருவார். அபகீர்த்தி, சஞ்சலம், பீடை, கவலை, அவமானம் போன்ற 8-ஆமிடத்துக் கெட்ட பலன்களை விரட்டியடிப்பார். பூமி, வீடு, வாகனவகையில் நற்பலன்களை சந்திக்கலாம். ஒருசிலர் ஒரு மனையை விற்று வேறொரு இடத்தில் மனை வாங்கும் முயற்சியை மேற்கொள்ளலாம். ஒன்றைக் கொடுத்து இன்னொன்றை வாங்குவது பரிவர்த்தனை! வெளியூர் அல்லது வெளிநாட்டு வேலைக்கு முயற்சிக்குப்போருக்கு பலன்கள் கைகூடும். கேது ஞானகாரகன் 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் வித்தை, தனம், குடும்பம் இவற்றில் மேன்மை உண்டாகும். தொழில்துறையில் புதிய முயற்சிகள் வெற்றியடையும். போட்டி, பொறாமைகளையும் விலக்குவார். எதிரி, கடன், நோய் ஆகியவற்றை ஏற்படுத்தினாலும் அவற்றைச் சமாளித்து வெற்றியையும் ஏற்படுத்தி தருவார். நற்பலன் தரும் பெயர்ச்சியாக அமையும்.

கடகம்

Advertisment

இதுவரை உங்கள் ராசிக்கு 10-ல் இருந்த ராகு 9-ஆமிடத்திலும், 4-ல் இருந்த கேது 3-ஆமிடத்திலும் மாறுகிறார்கள். ஏற்கெனவே ராகு- கேது இருந்த இடங்கள் நல்ல இடங்கள். அதேசமயம் 9-க்குடைய குரு 10-ல் இருந்தது தர்மகர்மாதிபதி யோகம். எனவே நன்மைகளை அனுபவித்தீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஓரிரு விஷயங்களில் தொய்வு, சிரமம் இருந்தாலும் அவற்றை சமாளித்து வெளிவந்தது மறுக்கமுடியாத உண்மை! ராகு 11-ஆமிடம் 3-ஆமிடம், 7-ஆமிடங்களைப் பார்க்கிறார். கேது 1-ஆமிடம், 9-ஆமிடம், 5-ஆமிடங்களைப் பார்க்கிறார். 11-ஆமிடம் மூத்த சகோதரரைக் குறிக்கும். உபயகளஸ்திர ஸ்தானத்தையும் குறிக்கும். மூத்தவர்களால் உதவி, ஒத்தாசை அமையும். தொழில்துறையிலும் முன்னேற்றமும் லாபமும் காரிய அனுகூலமும் எதிர்பார்க்கலாம். சிலருக்கு அந்நிய இனத்து சிநேகம் ஏற்படலாம். அது நாணயமான நல்ல நட்பாகவும் அமையலாம். திருமணத்தடை விலகும். ஆண்- பெண்களுக்கு திருமண யோகம் கைகூடும். 7-ல் ராகு- கேது நிற்பது தோஷம். பார்ப்பது விசேஷம். இளைய சகோதர- சகோதரிகளால் சங்கடங் கள் மனக்கசப்புகள் ஏற்பட்டு விலகும். ராகு பார்ப்பதால் ஒற்றுமை குறையாது. கௌரவம், அந்தஸ்து, மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். பூர்வபுண்ணிய பாக்கியமும் நன்மைபெறும். பாதகமான தசாபுக்தி நடந்தால் தகப்பனாருக்கு வைத்தியச் செலவு அல்லது கண்டம் ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்கு ஆன்மிக சிந்தனை உண்டாகும். ஜோதிட ஞானத் தெளிவு பிறக்கும். ராகு- கேது மத்திம பலனைத் தரும்.

சிம்மம்

உங்கள் ராசிக்கு இதுவரை 9-ல் இருந்த ராகு 8-ஆமிடத்துக்கும், 3-ல் இருந்த கேது 2-ஆமிடத்துக்கும் மாறுகிறார்கள். ஏற்கெனவே ராகு- கேது இருந்த இடம் ஓரளவுக்கு பரவாயில்லை என்றாலும் குரு ராசியைப் பார்த்த பெருமையால் சில நன்மைகளும் நடந்தன என்று சொல்லலாம். ராகு 8-ல் வருவதால் 8-ஆமிடத்துக் கெடுபலன்களைக் கெடுப்பார். 2-ல் வரும் கேது குடும்பத்தில் சச்சரவு, நிம்மதிக்குறைவு போன்றவற்றைத் தரலாம். ராகு 10-ஆமிடம், 2-ஆமிடம், 6-ஆமிடங்களைப் பார்க்கிறார். கேது 12-ஆமிடம், 8-ஆமிடம், 4-ஆமிடங்களைப் பார்க்கிறார். 6-ஆமிடத்தை ராகு பார்ப்பதால் ருணம், ரோகம், சத்ருக்களை கெடுப்பார். அதனால் நற்பலன் உண்டாகும். போட்டியாளர்களும் பொறாமைக் காரர்களும் தாமாகவே விலகிப்போய் விடுவார்கள். 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் தொழில்துறையில் நல்ல திருப்பம் உண்டாகும். உத்தியோக உயர்வும் ஏற்படும். 2-ஆமிடம், வாக்கு, தனம் குடும்பம் இவற்றைக் குறிக்கும். கேது 2-ல் நின்று 2-ஆமிடத் துப் பலனைக் கெடுத்தாலும் ராகு பார்ப்பதால் கெட்டத்திலும் ஒரு நல்லது என்ற அடிப்படை யில் நன்மையும் ஏற்படும். கேது 12-ஆமிடத்தைப் பார்ப்பதால் சுப விரயமும் உண்டாகும். நினைத்தோம் முடித்தோம் என்றில்லாமல் தடைகளையும் இடையூறுகளையும் சந்திக்க நேரும். ஒருசிலருக்கு வீண் அலைச்சல்கள் ஏற்படலாம். பூமி, வீடு, வாகனவகையில் சுபச்செலவுகளுக்கு இடமுண்டு. தாயார் உடல்நலனில் அக்கறை தேவை. வைத்தியச்செலவு ஏற்படும். ராகு- கேது கண்டிப்பான வாத்தியாரைப்போல் வழிநடத்துவர்.

கன்னி

இதுவரை உங்கள் ராசிக்கு 8-ல் இருந்த ராகு இப்போது 7-ஆமிடத்துக்கும், 2-ல் இருந்த கேது ஜென்ம ராசிக்கும், இம்மாதம் 8-ஆம் தேதி பெயர்ச்சியாகிறார்கள். ஏற்கெனவே ராகு- கேது இருந்த இடம் நல்ல இடங்கள் இல்லையென்றாலும் கெட்ட கிரகம் கெட்ட இடத்தில் இருந்து அந்தக் கெடுதலைக் கெடுத்த காரணத்தால் ஒருசில நன்மைகள் நடந்தன. 7-ல் வந்திருக்கும் ராகு திருமணத் தடைகளை ஏற்படுத்தலாம். கணவன்- மனைவிக்குள் கருத்து வேற்றுமையைத் தரலாம். மீன ராகு 9-ஆமிடம், 1-ஆமிடம், 5-ஆமிடங்களைப் பார்க்கிறார். கன்னி கேது 11-ஆமிடம், 7-ஆமிடம், 3-ஆமிடங்களைப் பார்க்கிறார். ஜென்மத்தில் கேது நிற்பது தோஷம் என்றாலும் ராகு பார்ப்பதால் முயற்சியில் முன்னேற்றம், கீர்த்தி, செல்வாக்கு, பாராட்டும் உண்டாகும். கௌரவப் பதவிகளும் சமூக சேவைப் பணிகளும் ஏற்படும். ராகு 7-ஆம் பார்வையாக ஜென்ம ராசியைப் பார்ப்பது, கேது 7-ஆம் பார்வையாக 7-ஆமிடத்தைப் பார்ப்பது உங்கள் செல்வாக்கு பெருமையில் உங்கள் மனைவிக்கும் அல்லது கணவருக்கும் பங்கு கிடைக்கும். மனைவி பேரிலும் கணவர் தொழில் ஆரம்பிக்கலாம். தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் ஒருசில தம்பதிகளுக் குள் பிரிவினைக்கும் இடமுண்டு. பிள்ளைகள்வகையில் பாராட்டு உண்டாகும். நன்மதிப்பு ஏற்படும். காரிய வெற்றியும், மூத்த சகோதர- சகோதரிகளால் நன்மையும் உண்டாகும். ஒருசிலருக்கு குரு உபதேசம், தீட்சை கிடைத்தல் போன்ற நற்பலனும் அமையும். நன்மை- தீமை கலந்த பலனாக அமையும்.

துலாம்

இம்மாதம் 8-ஆம் தேதி ராகு- கேது பெயர்ச்சி. உங்கள் ராசிக்கு 7-ல் இருந்த ராகு 6-ஆமிடத்துக்கும் ஜென்ம ராசியில் இருந்த கேது 12-ஆமிடத்துக்கும் மாறுகிறார்கள். ஏற்கெனவே ராகு- கேது இருந்த இடம் சாதகமான இடம் இல்லை. 6-ல் வந்திருக்கும் ராகு 12-ல் வந்திருக்கும் கேது பாவ கிரகங்கள். அந்த இடத்துக் கெட்ட பலன்களைக் கெடுப்பார்கள். மீன ராகு 4-ஆமிடம், 12-ஆமிடம், 8-ஆமிடத்தைப் பார்க்கிறார். கன்னி கேது 10-ஆமிடம், 6-ஆமிடம், 2-ஆமிடத்தை பார்க்கிறார். 4-ஆமிடத்தையும் 12-ஆமிடத்தையும் பார்க்கும் ராகு விரயம், செலவை ஏற்படுத்தினாலும், பூமி, வீடு, வாகன சுகம் சம்பந்தப்பட்ட செலவுகளாக எடுத்துக்கொள்ளலாம். இடமாற்றத்தையும் சந்திக்கலாம். 8-ஆமிடம் விபத்து, வேதனை, இழப்பு, ஏமாற்றம், கௌரவப் பிரச்சினை ஆகியவற்றைக் குறிக்கும். ராகு அதைப் பார்ப்பதால் கெடுப்பார். சிலருக்கு தாய்வழியில் நோய், உடல்நலக்குறைவு, கல்வியில் மந்தம் போன்ற பலன்கள் ஏற்படலாம். தொழில் ஸ்தானத்துக்கு சகாய ஸ்தானத்தில் கேது இருப்பதும், பாக்கியத்தில் ராகு இருப்பதும் முன்னேற்றத்தைத் தரும். வெற்றியையும் தரும். வேலையில்லாதவருக்கு வேலையும் அமையும். தொழில் சம்பந்தமான புதுக்கடன் உருவாகும். பொறாமை, எதிர்ப்பு உண்டாகும் என்றாலும் அவற்றை ஜெயிக்கலாம். தனவரவுக்கும் இடம் உண்டு. ராகு- கேது நற்பலன்களைத் தருவர்.

விருச்சிகம்

இதுவரை உங்கள் ராசிக்கு 6-ல் இருந்த ராகு இப்போது 5-ஆமிடத்திலும், 12-ல் இருந்த கேது 11-ஆமிடத்திலும் மாறுகிறார்கள். ஏற்கெனவே ராகு- கேது இருந்த இடங்கள் நல்ல இடங்கள்தான்! இப்போது மாறியுள்ள இடமும் நல்ல இடம்தான்! ராகுவைவிட கேது மாறியுள்ள இடம் யோகமான இடம்! 5-ஆமிடம் மக்கள், திட்டம், மனது, உபதேசம், தாய்மாமன், பாட்டனார் முதவியவற்றைக் குறிக்கும். பிள்ளைகள்வகையில் நல்லவைகளும் உண்டாகும். சங்கடங்களும் ஏற்படும். அவர்கள் சம்பந்தப்பட்ட திட்டங்களுக்காக செலவு செய்யும் யோகம் அமையும். மீன ராகு 3-ஆமிடம், 11-ஆமிடம், 7-ஆமிடங் களைப் பார்க்கிறார். கன்னி கேது 9-ஆமிடம், 5-ஆமிடம், 1-ஆமிடத்தை சகோதர- சகோதரி வகையில் சகாயங்களும் ஒற்றுமையும் உண்டாகும். தசாபுக்திகளையும் அனுசரித்து நடந்து கொள்ளவும். திருமணத்தடைகளை ராகு நிவர்த்தி செய்வார். ராகுவுக்கு ஆதரவாகவும் உதவியாகவும் தொழில் பாதிப்படையாமல் காப்பாற்றிக் கைகொடுத்து 11-ஆமிடத்துக் கேது துணை நிற்பார். உங்களது செல்வாக்கு, மதிப்பு, மரியாதை பலம்பெறும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகமாகும். சிலர் ஆன்மிக யாத்திரை செல்லலாம். அந்நிய இனத்து நண்பர்களால் உதவியும் கிடைக்கும். அம்மா அடித்தால் அப்பா அரவணைப்பதும், அப்பா கண்டித்தால் அம்மா அடைக்கலம் தருவதும் மாதிரி ராகுவால் வரும் துன்பத்தைக் கேது துடைப்பார். கேது ஏற்படுத்தும் கெடுதலை ராகு போக்குவார்.

தனுசு

இதுவரை உங்கள் ராசிக்கு 5-ல் இருந்த ராகு 4-ஆமிடத்துக்கும், 11-ல் இருந்த கேது 10-ஆமிடத்துக் கும் மாறுகிறார்கள். ஏழரைச்சனி நடைபெற்ற காரணத்தினால் கேது நல்ல இடத்தில் இருந்த பலனை அனுபவிக்க முடியவில்லை. இப்போது மாறியிருக்கும் கேந்திர ஸ்தானங்கள் நற்பலனைத் தரும். 4-ஆமிடத்து ராகு பூமி, வீடு, வாகனவழியில் சங்கடத்தை ஏற்படுத்தினாலும் கேது பார்வையால் அவை நன்மையாக அமையும். 10-ஆமிடத்து கேது உத்தியோகம், தொழி-ல் மாற்றத்தை தந்தாலும் ராகு பார்வையால் முன்னேற்றமான மாற்றமாகவும் மாறும். மீன ராகு 2-ஆமிடம், 10-ஆமிடம், 6-ஆமிடங்களையும், கன்னி கேது 8-ஆமிடம், 4-ஆமிடம், 12-ஆமிடங்களை யும் பார்க்கிறார்கள். தனவரவுக்கு இடமுண்டு. செலவுக்கும் குறைவில்லை. குடும்பத்தில் ஒருசில நேரம் சச்சரவும் வாக்குவாதமும் ஏற்படலாம். பிரிவு நேராது. 6-ஆமிடத்தை ராகு பார்ப்பதால் எதிரி, கடன் போட்டி, வைத்தியச்செலவு போன்ற தொல்லைகள் விலகும். புதியக் கடனும் உருவாகும். அது தொழில் சம்பந்தமாகவும் அமையும். 8-ஆமிடத்தைப் பார்க்கும் கேது மனக்கவலை, விபத்து, சஞ்சலம் இவற்றை விலக்கி நன்மை தருவார். வீடு, வாகனவகையிலும் நற்பலன் உண்டாகும். வெளியூர் வர்த்தக தொடர்புடையவர்களுக்கு நன்மை தரும்விதமான பலன்கள் ஏற்படும். ராகு- கேது எந்த இடத்துக்கு கெடுதல் செய்கிறார்களோ அந்த இடத்துக்கு நல்லதையும் செய்வார்கள்.

மகரம்

இதுவரை உங்கள் ராசிக்கு 4-ல் இருந்த ராகு 3-ஆமிடத்துக்கும், 10-ல் இருந்த கேது 9-ஆமிடத்துக்கும் மாறுகிறார்கள். ஏற்கெனவே ராகு- கேது நல்ல இடத்தில் இருந்தும் ஏழரைச்சனி நடக்கும் காரணத்தால் நற்பலன்கள் நடக்கவில்லை என்பதுதான் உண்மை! ஒரு சிலருக்கு ஏதோ ஒருசில நன்மைகள் நடந்திருக்கலாம்! 3-ல் வந்திருக்கும் ராகு உடன் பிறந்தவகையில் சங்கடத்தைத் தரலாம். உற்றார்- உறவினரும் உங்களை புறக்கணிக்கலாம். 9-ஆமிடத்துக் கேது ஆன்மிக ஞானத்தை ஏற்படுத்துவார். மீன ராகு 5-ஆமிடம், 9-ஆமிடம், 1-ஆமிடங்களைப் பார்க்கிறார். கன்னி கேது 7-ஆமிடம், 3-ஆமிடம், 11-ஆமிடங்களைப் பார்க்கிறார். பூர்வ புண்ணிய பாக்கியம் விருத்தியாகும். ஆன்மிக வழிபாடு, தியானம், மந்திர உபதேசம் போன்றவை சம்பந்தமான பலன் நடைபெறும். வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு யோகத்தைத் தரும். வாரிசுகளுக்கு, படிப்பு, வேலை சம்பந்தமான நல்ல பலனும் அமையும். உங்களை ஏளனமாக பேசியவர்கள் உங்கள் மதிப்பை உணர்ந்து மரியாதை தருவார்கள். சகோதர சகாயம் உண்டு. தைரியம், தன்னம்பிக்கை பெருகும். ஆண் அல்லது பெண்களுக்குத் திருமண யோகம் கைகூடும். நுட்பகமான தொழி-ல் முதலீடு செய்யலாம். ஷேர்மார்க்கெட்டில் இன்வெஸ்ட்மென்ட் செய்யலாம். ராகு- கேது பெயர்ச்சி நன்மைகளையும் யோகத்தையும் தரும் என்று நம்பலாம்.

கும்பம்

இதுவரை உங்கள் ராசிக்கு 3-ல் இருந்த ராகு இப்போது 2-ஆமிடத்துக்கும், 9-ல் இருந்த கேது 8-ஆமிடத்துக்கும் மாறுகிறார்கள். கடந்த காலத்தில் இருந்த இடங்கள் சிறப்பானதென்று கூறமுடியாது. இப்போது மாறியுள்ள இடமும் சுமாரான இடம்தான். தற்போது ஏழரைச்சனியும் நடந்துகொண்டிருக்கிறது. 2-ல் ராகு ஏற்படுத்தும் சங்கடங்களை 8-ல் உள்ள கேது 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் சங்கட நிவர்த்திக்கும் இடமுண்டு. மீன ராகு 12-ஆமிடம், 8-ஆமிடம், 4-ஆமிடங்களைப் பார்க்கிறார். கன்னி கேது 6-ஆமிடம், 2-ஆமிடம், 10-ஆமிடங்களைப் பார்க்கி றார். புதுமுயற்சிகள் சம்பந்தமான செலவுகளும் அல்லது புது வேலைக்காகவும் செலவுகள் ஏற்படலாம். ஒருசிலருக்கு வேலைரீதியாக இடமாற்றமும் உண்டாகும். குடும்பத்துவகையிலும் செலவுக்கு இடமுண்டு. பூமி, வீடு, வாகனம் சம்பந்த மான செலவுகளும் வரலாம். சகோதர- சகோதரிவகையில் ஏற்பட்ட கடன் பாக்கிகளை நீங்கள் பொறுப்பேற்று கட்டவேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம். அதனால் மனக்கவலைக்கும் சங்கடத்திற்கும் ஆளாக நேரிடும். 6-ஆமிடத்தைப் பார்க்கும் கேது போட்டி, பொறாமைகளை உருவாக்கி சமாளிக்கச் செய்வார். ஜனன ஜாதகத்தில் ராகு- கேது தசாபுக்திகள் நடைபெற்றால் அறுவை சிகிச்சைக்கு இடம் ஏற்படும். தொழில்துறையில் முன்னேற்றம் உண்டாகும். தனவரவுக்கும் வழிவகை உண்டு. தாராளமான செலவுகளும் ஏற்படும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விவகாரமும் உருவாகும். ராகு- கேது பெயர்ச்சி மத்திமமான பலன்களைத் தரும்.

மீனம்

இதுவரை உங்கள் ராசிக்கு 2-ல் இருந்த ராகு இப்போது ஜென்ம ராசிக்கும், 8-ல் இருந்த கேது 7-ஆமிடத்துக்கும் மாறுகிறார்கள். ஜென்ம ராசி என்பது லக்னம் மாதிரி- கௌரவம், செயல் தன்மை, ஆற்றல் ஆகிய வற்றைக் குறிக்குமிடம். இங்கு ராகு நிற்பது குற்றம் என்றாலும் கேது பார்வை ஏற்படுகிறதல்லவா? எனவே இவற்றில் மதிப்பு, மரியாதை குறையாமல் காப்பாற்றுவார். மீன ராகு 3-ஆமிடம், 7-ஆமிடம், 11-ஆமிடங்களைப் பார்க்கிறார். கன்னி கேது 5-ஆமிடம், 1-ஆமிடம், 9-ஆமிடங் களைப் பார்க்கிறார். 7-ல் உள்ள கேது திருமணத் தடைகளை ஏற்படுத்தினா லும், 7-ஆமிடத்தைப் பார்க்கும் ராகு தடைகளை தகர்த்திவிடுவார். என்றா லும் திருமணம் தாமதத் திருமணமாக நடக்கும். 11-ஆமிடத்தைப் பார்க்கும் ராகு லாபம், காரிய ஜெயம், விவகாரத்தில் வெற்றி, அனுகூலம், உபய களத்திர யோகம் ஆகிய பலன்களை அனுபவிக்கலாம். இளைய சகோதர- சகோதரிவகையில் சுபச் செலவுகள் உண்டாகும். 5-ஆமிடம் புத்திர ஸ்தானம், மனது, திட்டம் இவற்றைக் குறிக்கும். பிள்ளைகள்வகையில் நன்மைகள், உத்தியோகரீதியான மாற்றங்களைத் தரலாம். சுபவிரயச் செலவுகளும் ஏற்படலாம். ஜென்ம ராசியைப் பார்க்கும் கேது நன்மதிப்பை வழங்குவார். அதேசமயம் நமது நடவடிக்கைதான் பிறர் நம்மை மதிக்குமாறு செய்யும். ஒழுக்கம் மிக முக்கியம். மந்திர உபதேசம், தெய்வ தலயாத்திரை மேற்கொள்ளும் அமைப்பு உண்டு. கோவில் கௌரவ பதவியும் வந்துசேரும். ராகு செய்யும் சோதனைகளுக்கு கேது மருந்திட்டு சாதனை புரியவைப்பார்.

அலைபேசி: 99440 02365