ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்
1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
நீங்கள் பார்ப்பதற்கு மிகவும் எளிமையானவர். ஆனால் செயலில் மிகவும் வேகமாக இருப்பீர்கள். இந்த மாதம் உங்களுக்கு நல்ல பலன்களையே தரும். கணவன்- மனைவிக்குள் கருத்து வேறு பாடுகள் விலகும். இதுவரை உங்களுக்கு தொல்லை கொடுத்து வரும் மருத்துவச் செலவுகள் குறையும். உடல்நலன் தேறும். வியா பாரிகளுக்கு கொடுக்கல்- வாங்கலில் எவ்வித இடையூறும் வராது. கொள் முதல் அனைத்தும் விற்றுவிடும். தொழிலதிபர்கள் புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும்.
ஒருசிலர் புதிய வீடுகட்டிக் குடிபோ வார்கள். வெளிநாடு சென்று இதுவரை திரும்பி வராதவர்கள் வந்து சேர்வார்கள். அரசு ஊழி யர்கள் பணிபுரியும் இடத்தில் இதுவரை இருந்துவரும் பிரச்சினைகள் விலகும். வேலையில் இடையில் நின்ற பணியாளர்கள் மீண்டும் வேலைக்குச் செல்வார்கள். மாதம் முழுவதும் நல்ல வருமானத்தைப் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் அதிக ஊக்கம் செலுத்த வேண்டிய மாதம். அரசியல் வாதிகள் சமூகத்தில் நல்ல பெயர் வாங்குவார்கள். அவர்கள் எண்ணப் படி அனைத்தும் நிறைவேறும்.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.
தவிர்க்கவேண்டிய தேதி: 3; 4, 13, 22, 31; 8, 17, 26.
வணங்கவேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு;
இந்த மாதம் வரவும் செலவும் சரிசமமாக இருக்கும். வீட்டில் இதுவரை தடைப்பட்டு வந்த சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். இளைஞர்கள் வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். உங்களைப் பிரியமாக நேசித்த ஒருவரைப் பிரிய வேண்டி வரலாம். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். குலதெய்வ ஆலயத்துக்குச் சென்று வணங்கி வருவீர்கள். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். மனைவி கேட்ட சமையல் கருவிகளை வாங்கிக் கொடுப்பீர்கள். அரசு ஊழியர்கள் தடைப் பட்ட பதவி உயர்வை அடைவார்கள். வழக்குகள் சாதகமாகும். தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் ஒற்றுமையால் கூடுதல் லாபம் பெறுவார்கள். இதுவரை இருந்து வரும் பங்காளிச்சண்டை முடிவுக்கு வரும். பூர்வீகச் சொத்துகளிலிருந்து நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். கம்ப்யூட்டர்து றையில் பணிபுரிபவர்கள், புதிய கம்பெனிகளில் சேரும் திட்டம் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் உயர்வார்கள். இந்த மாதம் முழுவதும் சொந்த பந்தங்களால் நல்ல பலனை அடைவீர்கள். அரசியல் பிரமுகர்கள் எண்ணம்போல் அரசியலில் நல்ல பதவிகள் வரும்.
அதிர்ஷ்ட தேதி: 8; 9, 18, 27.
தவிர்க்கவேண்டிய தேதி: 1; 2, 11, 20, 29; 7, 25.
வணங்கவேண்டிய தெய்வம்: அம்மன் தெய்வங்கள்.
3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் உங்கள் செயல்பாடுகள் சுறுசுறுப்பாக இருக்கும். அன்றாட வேலைகளை விரைவாகவும் சிறப்பாகவும் செய்வீர்கள். உங்களைச் சுற்றியுள்ள நண்பர்கள் நல்ல நேரத்தில் கைகொடுப்பார்கள். பண நிலையில் இருந்துவரும் மந்தம் மாறி நல்ல வருவாயைப் பெறுவீர்கள். கணவன்- மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். வேலைதேடும் இளைஞர்களுக்கு தூரதேசத்தில் நல்ல வேலைவாய்ப் புகள் கிட்டும். வராக்கடன்கள் வசூலாகும். சொத்துப் பிரிவினையில் இருந்து வரும் தகராறுகள் நீங்கும். மனைவிவழியில் இருந்து வரும் பகை மாறும். வீடு வாங்கும் திட்டம் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் உயர்வார்கள். வியாபாரிகள் கொள்முதல் செய்த சரக்குகள் விற்றுத் தீரும். தொல்லை கொடுத்து வரும் வியாபாரிகள் விலகிச்செல்வார்கள். தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்கும் திட்டத்தில் தாமதம் ஏற்படும். அரசியல்வா திகளுக்கு நல்ல திருப்பங்கள் ஏற்படும். பொதுமக்கள் மத்தியில் இழந்த செல் வாக்கை மீண்டும் பெறுவார்கள். தலைமை யிலிருந்து திடீர் அழைப்புகள் வரும். அது சாதகமாகவே இருக்கும்.
அதிர்ஷ்ட தேதி: 3, 12, 21, 30; 9, 18, 27.
தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31; 6; 17, 26; 29.
வணங்கவேண்டிய தெய்வம்: அங்காள பரமேஸ்வரி, அம்மன் தெய்வங்கள்.
4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் நீங்கள் சற்று கவனத்துடன் செய்யும் காரியங் களில் வெற்றி காண்பீர்கள். புத்தி சாதுர்யத்துடன் செயல்பட்டால் பிரச்சினைகள் வராமல் தவிர்க் கலாம். வீடு, வாகனம் வாங்கும் திட்டம் மாத முடிவில் நிறைவேறும். பிறருக்கு ஜாமீன் கொடுத் தீர்களானால் அதற்கான சிரமத்தை நீங்கள் அடைவீர்கள். எனவே எதிலும் எச்சரிக்கை தேவை. பிரிந்து சென்ற கணவன்- மனைவி ஒன்றுசேர்வார்கள். குழந்தைப்பேறு இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். இதுவரை தடைப்பட்டு வந்த சுபகாரியப் பேச்சுகள் தடையின்றி நடக்கும். வியாபாரிகள் கொள்முதல் அதிகம் செய்துவைத்து நல்ல லாபத்தை அடையலாம். கொடுக்கல்- வாங்கல் தொழில் செய்வோர் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் ஒற்றுமையால் கூடுதல் உற்பத்தியை அடைவார்கள். அரசுப் பணியாளர்களுக்கு திடீரென இடமாற்றம் ஏற்படலாம். தூரதேசத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். உங்களை நேசித்த ஒருவர் உங்களைப் பிரிந்து செல்லக்கூடும். பெற்றோர் வழியில் செலவுகள் வரும். அரசியல்வா திகள் நினைத்தபடி காரியங்கள் நடக்கும். மாணவர்கள் கல்வியில் உயர் வார்கள்.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.
தவிர்க்கவேண்டிய தேதி: 8, 17, 26.
வணங்கவேண்டிய தெய்வம்: சுப்பிரமணியர், துர்க்கையம்மன்.
5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் உங்கள் வாழ்க்கையில் வசந்தத்தை ஏற்படுத்தும். தொல்லை கொடுத்த வரும் பிரச்சினைகள் யாவும் ஓடிவிடும். பிள்ளைகள்வழியில் ஏற்பட்ட மனவருத் தங்கள் மாறும். கணவன்- மனைவி ஒற்றுமைக்குக் குறை விருக்காது. வருமானம் அளவோடு இருக்கும். சிக்கனமாக வாழ்வீர்கள். கண்களில் நோய்வந்து நீங்கும். மாணவர்கள் எதிர்வரும் தேர்வில் வெற்றிபெற கடுமையாகப் படிக் கவேண்டி வரும். பெற்றோர்கள் கடுமை காட்டாமல் படிக்கச் சொல்ல வேண்டும். இல்லையெனில் சிலர் வீட்டைவிட்டு ஓடிவிடும் நிலை உள்ளது. எச்சரிக்கை தேவை. வியாபாரிகள் போட்டிகளை சமாளித்து நல்ல லாபத்தைப் பெறு வார்கள். தொழிலதிபர்கள் வெளிநாடு களில் புதிய கிளை துவக்கும் திட்டம் நிறைவேறும். பெற்றோர்களுக்காக நீங்கள் செய்துவரும் மருத்துவச்செலவுகள் குறையும். புதிய வீடு, வாகனம் வாங்கும் திட்டம் நீண்ட இழுபறிக்குப் பிறகு முடிவ டையும். வெளிநாடு போகும் திட்டம் சிலருக்கு ஈடேறும். அரசியல்வாதி களுக்கு இதுவரை இருந்துவரும் தடை, தாமதங்கள் நீங்கும். சகோதரர்கள் மத்தியில் இருந்துவரும் பிரச்சினைகள் நீங்கி ஒன்றுபடுவார்கள்.
அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9.
தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21.
வணங்கவேண்டிய தெய்வம்: துர்க்கை, மகாலட்சுமி, விஷ்ணு.
6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் முழுவதும் நீங்கள் சிந்திக்காமல் செய்யும் காரியங்களில்கூட நல்ல பலன்களைப் பெறுவீர்கள். பெற்றோர்களுக்காக மருத்துவச்செலவு செய்ய நேரும். கணவன்- மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். கடலில் மீன்பிடித் தொழில் செய்பவர்கள் அபரிமிதமான வருவாயைப் பெறு வார்கள். திருமணப்பேச்சுகள் தள்ளிச் செல்கிறதே என்ற கவலைக்கு நல்ல தீர்வு வரும். விலகிச்சென்ற சொந்தங்கள் வந்துசேரும். சுபகாரியப் பேச்சுகள் சுமுகமாக முடியும். பிள்ளைகளால் பெருமைகள் வந்துசேரும். வருத்தத்தைக் கொடுத்த பிள்ளைகள் திருந்தி வரு வார்கள். மாணவர்கள் கல்வி உயரும். தொழிலதிபர்கள் வியாபாரப் போட்டியை சந்திக்கவேண்டி வரும். புதிய ஒப்பந் தங்களை யோசித்துச் செய்யவேண்டும். வியாபாரிகளுக்கு விற்பனையில் நிலவிய மந்தநிலை மாறும். பூமி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரலாம். எனவே ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் பொறு மையைக் கடைப்பிடிக்க வேண்டும். சகோதரர்கள் பகைவராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இளைஞர்கள் திடீர் வேலைவாய்ப்புகளைப் பெறு வார்கள். ஒருசிலருக்கு ராணுவத்தில் சேரும் வாய்ப்புகள் வரும். அரசியல் பிரமுகர்கள் மனதிலிருந்து வரும் கவலைகள் மாறும். புதிய வாய்ப்புகள் வந்துசேரும்.
அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24; 9, 18.
தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21, 30.
வணங்கவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வேங்கடாசலபதி.
7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் நீங்கள் புதிய பொருட்கள் வாங்கும் திட்டம் நிறைவேறும். உறவுகளுக்குள் திருமணம் நடப்பதில் இருந்துவரும் தடைகள் நீங்கும். பெற்றோர்கள் வழியில் மருத்துவச் செலவுகள் கூடும். வருவாய் இரட்டிப்பாக இருக்கும். இதுவரை தொல்லை கொடுத்துவரும் எதிரிகள் விலகிச்செல்வார்கள். பிரிந்து வாழ்ந்துவரும் தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். வியாபாரிகள் நல்ல விற்பனையைப் பெறுவார்கள். கலைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் உயர்வுபெற்று பெற்றோர்களுக்குப் பெருமை சேர்ப்பார்கள். அரசு ஊழியர்களுக்கு பணிச்சுமை கூடும். சக ஊழியர் களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாகப் பெண் ஊழியர் களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். தொழிலதிபர்கள் உற்பத்தி பெருகி, நல்ல வருவாயையும் பெறுவார்கள். அரசியல் பிரமுகர்கள் திட்டமிட்டபடி காரியங்கள் சாதகமாக சுணக்கமின்றி நடக்கும்.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 2, 11, 20.
தவிர்க்கவேண்டிய தேதி: 7, 16.
வணங்கவேண்டிய தெய்வம்: கணபதி, சுப்பிரமணியர்.
8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் தடைப்பட்டு வரும் காரியங்கள் அனைத்தும் இனிதே நடந்தேறும். தொழிலில் போட்டியாக இருந்து வீண் இடையூறு செய்த வர்கள் பலமிழந்து ஓடிவிடுவார்கள். புதிய வீடு வாங்கும் திட்டம் நிறை வேறும். மாமன்- மைத்துனர் வழியில் இருந்துவரும் தொடர்பகை நீங்கும். தாய்- தந்தையருக்கு மருத்துவச் செலவுகள் வரலாம். வாகனம் வாங்கும் திட்டம் ஈடேறும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். தடைப்பட்டு வரும் சுபகாரியப் பேச்சுகள் நல்ல முறையில் உறுதியாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கிம் கிட்டும். சில்லரை வியாபாரிகள் இரட்டிப்பு லாபத்தைப் பெறுவார்கள். திடீர் அதிர்ஷ்டம் வந்துசேரும். மாணவர்கள் எதிர்வரும் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். கடந்த காலத்தில் உங்களிடம் உதவி பெற்று நன்றி மறந்தவர்கள் மீண்டும் வருவார்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். கம்ப்யூட்டர் தொழில் படித்தவர்கள் புதிய வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதல் அடைவார்கள். அரசியல் பிரமுகர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். தலைமையால் பாராட்டப் படுவார்கள்.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 9, 18, 27.
தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31.
வணங்கவேண்டிய தெய்வம்: வேங்கடாசலபதி, திருச்செந்தூர் முருகன்.
9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த தேதிகளில் பிறந்தவர் களுக்கு இந்த மாதம் எல்லா வகையிலும் நன்மையைத் தரும். கண்ணியம் கொண்ட வர்கள் நல்ல பொருளாதாரத்தை அடை வார்கள். நயவஞ்சகத் தன்மையுள்ள ஒருசிலர் மட்டும் சிரமத்தை அடை வார்கள். பிள்ளைகள்வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். தூர தேசத் திலிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். கலைஞர்கள் புதிய வாய்ப்பு களைப் பெறுவார்கள். வழக்குகள் சாதகமாகும். வேலைதேடும் இளைஞர்கள் சிரமத்திற்குப் பின்பு புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். மாணவர்களின் கல்வியில் மந்தநிலை உள்ளதால், கடுமையாகப் படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண் களைப் பெறமுடியும். வியாபாரிகள் புதிய வியாபாரிகளின் வருகையால் நெருக்கடியை சந்திப்பார்கள். தொழில திபர்கள், தொழிலாளர்கள் ஒற்றுமை யால் கூடுதல் உற்பத்தியைப் பெறு வார்கள். உற்பத்திப் பொருள் சந்தையில் நல்ல லாபத்தைத் தரும். ஷேர்மார்க் கெட், ஸ்பெகுலேஷன் தொழில் செய்வோர் எதிர்பார்க்கும் லாபத்தை அடைவார்கள். பெற்றோர்கள் வழியில் மருத்துவச்செலவுகள் வரலாம். இணைபிரியாமல் இருந்துவரும் நண்ப ரைப் பிரியவேண்டி வரும். கல்லூரி நடத்துபவர்கள் சிலர் வழக்குகளை சந்திக்கக்கூடும். அரசியல் பிரமுகர்கள் புத்துணர்வோடு செயல்பட்டு தலைமை யால் பாராட்டப்படுவார்கள்.
அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9, 18, 27.
தவிர்க்கவேண்டிய தேதி: 2, 11, 20, 29.
வணங்கவேண்டிய தெய்வம்: திருச்செந்தூர் முருகன்.
செல்: 94871 68174