1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் கம்பீரத் தன்மைகொண்ட சூரியனே உங்கள் எண்ணின் நாயகர். இந்த மாதம் உங்களின் புத்திக்கூர்மை பளிச்சிடும். பணவரவு செழிக்கும். முன்பு விரயச் செலவென முடிவுசெய்திருந்த பணமும் திரும்பக் கிடைக்கும். குலதெய்வச் சிந்தனை அதிகம் வருவதால், ஒருமுறை குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வருவீர்கள். உங்களில் பலர், வீடு, மனை சம்பந்த முதலீடுகளைச் செய்வீர்கள். வீட்டிற்குப் புதிய குழாய், தண்ணீர்த் தொட்டி, போர்குழாய் அமைப்பது, கிணற்றை தூர்வாருவது போன்ற வேலைகளை மேற்கொள்வீர்கள். கையில் பணமிருப்பதால் வீடு சம்பந்த வேலைகளைச் செய்ய இயலும். சிலர், முதலீடு கணக்கில் இரண்டாவது வீடு வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் வீடு மற்றும் தங்கள் அலுவல் விஷயமாக தனி இடமும் வாங்குவர். உங்கள் வாரிசுகள், தொழில் விஷயமாக வேறிடம் நகரக்கூடும். அரசியலில் உள்ளோர் சிலருக்கு மந்திரி பதவி கிடைக்கும் வாய்ப்புள்ளது. சினிமா, டி.வி. கலைஞர்கள் நிறைய வேலைவாய்ப்பும், நல்லதிர்ஷ்டமும் பெறுவர். பலர் வெளிநாடு செல்லும் யோகம் பெறுவர். இந்த எண் உயர்கல்வி மாணவர்கள், வெளிநாட்டுப் பயணத்தில் சிறு தடை ஏற்பட்டுப் பின் சரியாவர். இந்த மாதம் கிடைக்கும் வேலையில், தகவல் தொடர்பு கண்டிப் பாக இடம்பெறும். தம்பதி யர்களுக்குள், இளைய சகோதரியால் கொஞ்சம் சண்டைவரும். குடும்பத் துக்குள் அயல் மனிதரை அனுமதிக்கவேண்டாம். உங்கள் தொழிலிலும், பிற மதத்தவரால் இன்னல் ஏற்பட வாய்ப்புண்டு. உங்கள் முதலாளி பயணம் அல்லது வீடு விஷயமாக அனுசரணை தருவார். தொழிலில் வேலைப்பளு அதிகமிருக் கும். உங்கள் மூத்த சகோதரர் வீடு வாங்குவார்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

பரிகாரம்: பெருமாளுக்கும் கருடனுக்கும் நெய்விளக்கேற்றி வணங்கவும். பிற மத வயதானவரின் தேவையறிந்து உதவுங்கள்.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

அன்பான தாயுள்ளம்கொண்ட சந்திரனே உங்கள் எண்ணின் நாயகன். இந்த மாதம் உங்கள் மனதில் அளப்பரிய தைரியமும், சிந்தனையும், யோசனையும் பீறிட்டு வரும். இந்த தைரியம் வார்த்தைகளில் வெளிப்படும். இந்த காத்ரமான வார்த்தைகள் சிலசமயம் லாபமும், சிலசமயம் துன்பத்தையும் வாங்கித் தரும். உங்களின் வீரதீர செயல்களால் சினிமா வாய்ப்பு, விளையாட்டுத் துறையில் மேன்மை, புதிய காதல், உங்கள் சமூகத்தில் பெருமை போன்றவை கிடைக்கும். வீடு வாங்கும் விஷயமாக பிற மனிதர்களை சந்திப்பீர்கள். உங்களில் சிலருக்கு, சில அரசியல்வாதிகள்மூலம் அரசு வேலை கிடைக்கும் வாய்ப்புண்டு. காதல் திருமணம் அல்லது மறுமணம் நடக்கும். உங்கள் தந்தையின் விஷயமாக, வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். நீங்கள் எத்தளத்தில் தொழில் செய்தாலும். அது மிக மேன்மையாக நடக்கும். கூடவே சிலபல அவமானங் களும் ஏற்படும். சில அரசியல்வாதிகளின் திருமணம் நடக்கும். சில அரசியல்வாதிகள் தங்கள் வாழ்க்கைத் துணையின் பெயரில் புதிய வீடு வாங்குவர் அல்லது புதிய தொழில், வியாபாரம் ஆரம்பித்துவிடுவர். வாரிசு களை சந்திக்க வெளியூர், வெளிநாடு செல்வீர்கள். நிறைய சினிமா கலைஞர் களின் காதல் திருமணம் நடக்கும். சிலருக்கு அது இரண்டாவது திருமணமாக அமையும். இந்த மாதம் உங்கள் கைபேசி தகவல் களில் மிக கவனமாக இருக்கவேண்டும். இத் தகவல்கள் வெகு கடனாளியாக மாற்றும் வாய்ப்புண்டு. உங்களிடம் பணிபுரிவோரிடம் சண்டை வரக்கூடும். தந்தையின் நலனில் அக்கறை தேவை. சிலருக்கு வாரிசு யோகம் கிடைக்கும். கருவுற்ற பெண்கள் கவனமாக இருக்கவேண்டும்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 8, 17, 26.

பரிகாரம்: பெருமாள் கோவிலின் அபிஷேகத்திற்குப் பன்னீர் போன்ற பொருட்களைக் காணிக்கை செலுத்தி வணங்கவும். வெளிமாநில, வேறு மொழி பேசும் பணியாளரிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள்.

ss

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

தர்மம், பக்தி ஆகியவையே உருக்கொண்ட குரு உங்கள் எண்ணின் நாயகன். உங்களில் சிலருக்கு வீடு வாங்க அரசு சார்ந்த கடன் கிடைக்கும். சிலருக்கு தந்தைவழியில் அரசுப்பணி கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைத்து, அதன்மூலம் வருமானம் அதிகரிக்கும். வெளிநாட்டிலிருந்து வரும் கைபேசித் தகவல்களில் கவனம் தேவை. இந்த மார்கழி மாதம் 3-ஆம் எண்காரர்கள் உடல்நிலையில் மிக கவனமாக இருக்கவேண்டும். சிறு நோய் அறிகுறி தெரிந்தாலும் உடனே மருத்துவரிடம் சென்றுவிடுங்கள். தசாபுக்தி மோசமாக நடப்பவர்களுக்கு கத்தி படும் வாய்ப்புண்டு. இதுசார்ந்து வீட்டில் உள்ளோர் அலையவேண்டியிருக்கும். சிலர் திருமணமாகி வெளிநாடு செல்வர். சிலர் வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொள்வர். தொழில்புரிவோர் தங்கள் தொழிலிடத்தை மாற்றவேண்டிய நிர்பந்தம் உண்டாகும். அரசியல்வாதிகள், தங்கள் பேச்சில் கவனமாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் உங்கள் நலம் விரும்பிகள் அல்லது தொண்டர்கள் கோபத்தில் உங்களைத் தாக்கும் நிலைகூட ஏற்படலாம்; கவனம் தேவை. கலைஞர்கள், டி.வியில் பணியாற்றுபவர்களும் கவனமாகப் பேசவும். இல்லையென்றால் வாய்ப்புகளை இழக்க நேரும். சிலரது. மாமியார் கோபித்துக்கொண்டு வேறிடம் செல்லக்கூடும். தாயாரின் நலன் கவனிக்கப்படவேண்டும். உங்களில் சிலரது கனவில் பாம்புகள் வரக்கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.

பரிகாரம்: பெருமாள் கோவிலுக்கு வஸ்திரம் வாங்கிக் காணிக்கை செலுத்தவும். வயதான பெண்களின் தேவையைக் கேட்டறிந்து மருந்து வாங்கிக்கொடுங்கள்.

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

புதுமையான லட்சியப் பாதைகொண்ட ராகு உங்கள் எண்ணின் நாயகன் ஆவார். பணம் என்பதைக் கண்ணால் பார்க்க இயலுமா என தவித்துகொண்டிருந்தவர்களுக்கு, இந்த மாதம் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக, பணவரவு வந்துகொண்டே இருக்கும். உங்கள் மனதைரியம் அதிகமாகும். இந்த தைரியம் நிறைய எண்ணங்களைத் தரும். இந்த எண்ணங்களின்மூலம் பழமையான வழியைக் கடைப்பிடித்து, தொழிலில் ஒரு மாற்றத் தைக் கொண்டுவருவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் தாயாருக்கும் கடுமையான மனபேதம் ஏற்பட்டு, பின் அது நல்ல முடிவைத் தரும். சிலரின் வாழ்க்கைத்துணைக்கு நல்ல பணி கிடைக்கும். தொழில், வேலை செய்யும் இடம்மூலம் கடன் கிடைக்கும். ஏனோ உங்கள் வாழ்க்கைத்துணை எப்போதும் சண்டை போடும் மனநிலையில் இருப்பார். மூத்த சகோதரி ஒரு ஏழரையை இழுத்துவிடக்கூடும். அரசியல்வாதிகள் மிக கவனமாக இருக்கவேண்டிய நேரமிது. எப்போது, யாரிடம் பிரச்சினைகள் வருமோ என புரிபடாமல் இருக்கும். சினிமா கலைஞர்கள், பெரும் குழப்பத்தில் இருப்பர். வரும் வாய்ப்புகள் நன்மை தருமா அல்லது காலை வாரிவிடுமா எனும் மன அல்லாட்டம் உண்டு. சீருடைப் பணியாளர்கள் இதுவரையில் இருந்த சுணக்கம் நீங்கி சுறுசுறுப்பு பெறுவர். எதிர்பாராதவிதமாக அதிர்ஷ்டம் வரும். வெளிநாட்டு விஷயங்கள் சற்று இழுபறி யாகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.

எச்சரிக்கை எண்கள்: 8, 17, 26.

பரிகாரம்: மார்கழி மாத பஜனையின்போது, பிரசாதம் விநியோகிக்க முடிந்த கைங்கர்யம் செய்யவும். வயதான கீழ்நிலை மக்களின் தேவையறிந்து உதவுங்கள்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

புத்திசாலியான புதன் உங்கள் எண்ணின் நாயகன் ஆவார். இந்த மாதம் பணவரவு நன்றாக இருக்கும். பூர்வீக இடத்திலிருந்தும் பணம் வரும் வாய்ப்புண்டு. உங்கள் குடும்பத்தில் ஒரு பேத்தியின் வருகை இருக்கும். இந்த மாதம் உங்களுக்கு தாறுமாறான, தறிகெட்ட சிந்தனைகள் பொங்கி வழியும். இந்த சிந்தனைகள் "ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்தாத்தான ஆச்சு' என அடம்பிடிக்கும். உடனே, ஏதாவது குறுக்குவழியைக் கையாண்டு அரசியலில் ஒரு சிறு பதவியைப் பிடித்துவிடுவீர்கள். உங்கள் இந்த செயல் தெரிந்தவுடன் யாராவது உங்களை இன்னுலுக்கு ஆட்படுத்துவார் என்பதையும் கருத்தில் கொள்ளவும். சிலரின் தந்தை தன் வீட்டை, உங்கள் பெயருக்கு மாற்றி ரிஜிஸ்தர் செய்வார். சில பெண்களுக்கு மருத்துவ அனுசரணையால் கர்ப்பம் உண்டாகும் வாய்ப்பு வரும். சினிமா கலைஞர்கள் தங்களின் வாய்ப்புக்காக நிறைய மனிதர்களை சந்திக்க நேரும். அதில் சிலர் சட்டப்புறம்பான வேலைகளைச் செய்பவராக இருக்கக்கூடும். பங்கு வர்த்தகம் சற்று கண்ணைக்கட்டும். அகலக்கால் வைக்கவேண்டாம். விளையாட்டு வீரர்கள் சற்று காயப்படக்கூடும். ஆரோக்கியத்தில், முன் கவனம் எடுப்பது சாலச் சிறந்தது. அரசியல்வாதிகள் மேடை ஏறும்போது விழுவதற்கோ சில பத்திரிகைச் செய்திகளில் சிக்கி அல்லல்படுவதற்கோ வாய்ப்பு பலமாக உள்ளது. மாமியார்- மாமனார் இடம் மாறுவர். தொழில் செய்யுமிடத்தை மாற்றுவீர்கள். நிறைய பணியாளர்களின் சேர்க்கை இருக்கும். தொழில் சார்ந்த ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்கள். உங்கள் மூத்த சகோதரரிடம் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் சூழல் ஏற்படலாம். வீடு, மனை விஷயமாக செலவு, அலைச்சலுண்டு.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

பரிகாரம்: பெருமாள் கோவிலில் நல்ல துளசிமாலை கொண்டு சேவிக்கவும். உங்கள் வீட்டிலோ அல்லது பிற குடும்பத்தினரோ ஏதாவது வம்புக்கு ஆளாகித் தவிக்கும்போது உரிய உதவி செய்யவும்.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

அழகியல், நேர்த்தி, கவர்ச்சி, இனிமைகொண்ட சுக்கிரன் உங்கள் எண்ணின் நாயகன் ஆவார். இந்த மாதம் பணவரவுக்குக் குறைவிருக்காது. அதேநேரம் செலவுக்கும் பஞ்சமிருக்காது. செலவுகள் முழுமையான சுபச்செலவுகளாக இல்லாமல், கொஞ்சம் வீண் செலவாக இருக்கும். குடும்பத்தில் அவ்வப்போது சண்டை வரும். அதற்கு உங்களின் குதர்க்கமான பேச்சு காரணமாக அமையும். அரசு சார்ந்த தகவல் தொடர்புத் துறையில் இருப்பவர்களுக்கு, பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் சில பணியாளர்கள் தொல்லை தருவர். உங்களுக்கு சில அரசு ஒப்பந்தம் கிடைத்தபிறகு, அதிலுள்ள குறைபாடு தெரிந்து விசனப் படுவீர்கள். வாழ்க்கைத்துணை, உங்களின் மறைமுக அனுசரணையால் சீருடைப்பணி கிடைக்கப்பெறுவார். உங்கள் வீட்டில் திருட்டுப் போகவிருந்து தடுக்கப்படும். வாரிசுகளுக்கும் உங்களுக்கும் ஒத்துப்போகாது. அவர்கள் சார்பில் கடன் வாங்க வேண்டியிருக்கும். பாதங்களில் வலி வேதனைப்படுத்தும். பங்கு வர்த்தகத்தில் கவனம் தேவை. சினிமா கலைஞர்கள் சில பிரச்சினைகளுக்காக, ரௌடிகள் போன்ற தாதாக்களை சந்திக்க வேண்டியிருக் கும். அது அனேகமாக தொழில் சார்ந்த பணப் பிரச்சினையாக அமையும். உங்களில் சிலருக்குத் திருமணம் நடக்கும். அது சற்று வித்தியாசமான காதல் திருமணமாகவோ அல்லது கொஞ்சம் வேறுபாடான கல்யாணமாகவோ அமையும். சிலரின் வீடு, வாகனம் இம்சை தரும். தந்தையால் ஏற்படும் ஒரு செலவு கடும் எரிச்சலைத் தரும். சில அரசியல்வாதிகள் தங்கள் பெயர் பிரபலமாக வேண்டுமெனும் நோக்கில், பத்திரிகை, ஊடகத் துறையில் குறுக்கு வழியில் செயல்புரிவர். மாமியாருக்கு அவ்வப்போது டென்ஷன் அதிகமாகிக் கத்துவார். இதனால் உங்கள் மாமனாருக்கு உடம்பு சரியில்லாமல் போகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

பரிகாரம்: பெருமாளுக்கு காணிக்கை செலுத்துவதும், தாயாருக்கு நெய்விளக்கேற்றி வழிபாடு செய்வதும் சிறப்பு. கோவில் அர்ச்சகரின் கைபேசி சம்பந்தமாக உதவி செய்யவும்.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

ஆழ்ந்த ஞானமும், பக்தியும்கொண்ட கேது உங்கள் எண்ணின் நாயகன் ஆவார். இந்த மாதம் பணவரவு தாராளமாகப் பொழியும். வாக்கில் இனிமையும், தண்மையும் கூடும். சொற்களின் இனிமையான அழுத்தம் எதிரிகளைப் பணியச் செய்யும். மனதைரியம் அதிகரிக்கும். இந்த தைரியம் தரும் தெளிவு, கௌரவத்தைத் தேடித் தரும். வீடு விற்பது சம்பந்தமான விஷயங்களில் உங்கள் தந்தை ஆலோசனை வழங்குவார். அல்லது அரசு வகை வாகனம் கிடைக்கும். கலைஞர்கள், பிறமொழி சார்ந்த திரைப்படங்கள்மூலம் நல்ல பணவசதி பெறுவர். பங்கு வர்த்தகம், வெளிமாநில சம்பந்தம் பெறும். விளையாட்டு வீரர்கள் வேறிடம் சென்று வெற்றியடைவர். உங்கள் எதிரிகள் உங்களிடம் நன்றாகப் பழகி வெறுப்படையச் செய்வர். உங்கள் தொழில் பற்றிய ஒரு விரும்பத்தகாத செய்தி எங்கும் பரவும். அரசியல்வாதிகள் ஒரு எதிர்மறைச் செய்தியின் வீரியத்தால் வெகு பிரபலமடைவர். உங்கள் வீடு, வாகனம் சம்பந்தமான அரசு வரிச் செலவுண்டு.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 8, 17, 26.

பரிகாரம்: பெருமாள் கோவில் கருடனுக்கு நெய்விளக்கேற்றி வணங்கவும். பெருமாளை துளசிகொண்டு வணங்கவும். விளையாட்டு ஆர்வமுடைய ஒரு இளைஞரின் தேவையைக் கேட்டு உதவவும்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

அதிக உழைப்புக்குரிய சனியே உங்கள் எண்ணின் நாயகன் ஆவார். இந்த மாதம் தொழில் சார்ந்த யோசனைகள் அலையடிக்கும். இந்த யோசனைகளை கைபேசிமூலம் நடைமுறைப்படுத்துவீர்கள். கைபேசி உங்களுக்குப் பணவரவைக் கொண்டுவரும். உங்களில் நிறைய மனிதர்களுக்கு, சினிமா, டி.வியில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டுமென மனம் அரித்தெடுக்கும். இந்த மன அரிப்பு தாங்காமல், சிலர் வீட்டைவிட்டு ஒடிப்போக நேரிடும். இன்னும் சிலர், தங்கள் காதலுக்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்புவதால், வீட்டைவிட்டு ஓடிப்போய், காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரியை அர்ச்சகராக மாற்றி திருமணம் செய்துகொள்வர். இந்த செயலால், உங்கள் தாய்- தந்தை, தாய்மாமன் மிகுந்த அவமானத் தைச் சந்திப்பார்கள். ஊரிலிருந்து வந்து வேலைசெய்யும் பணியாளர்கள் ஊர் திரும்பக்கூடும். உங்களில் சிலரது வாழ்க்கைத் துணை சீருடைப்பணியில் பதவி உயர்வு காண்பார். இப்போது திருமணமாகும் ஜோடிகளில் ஒருவர் அரசியல் சார்ந்திருப்பார். அரசாங்கம் சம்பந்தமாக, இதுவரையில் இருந்துவந்த இம்சைகள் தீர்ந்துவிடும். இந்த மாதம் ஏதோவொரு அதிர்ஷ்ட செய்தியை கைபேசிமூலம் கிடைக்கப்பெறுவீர்கள். உங்களில் சிலர் பெற்றோராகும் வாரிசு வாய்ப்பு கிடைக்கப்பெறுவீர்கள். அரசியல்வாதிகள் தங்களின் பிறந்த இடத்து சந்திப்புகளின்மூலம் மிக மேன்மை பெறுவீர்கள். மாமியார் உங்களுடன் வந்து தங்குவார். அப்போது உங்கள் தாயார் தனது இறுமாப்பைக் காட்டி நோகடிப்பார். தாயார் சற்று ஆர்ப்பாட்டமாக இருக்கும் மாதமிது.

அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

பரிகாரம்: பெருமாளுக்கு துளசி மற்றும் மருக்கொழுந்து சாற்றி வணங்கவும். பிறமொழி பேசும் பணியாளர்களின ஆரோôக்கியம் சார்ந்து செலவுசெய்யவும்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

வீரமும் ஆற்றலும்கொண்ட செவ்வாய் உங்கள் எண்ணின் நாயகன் ஆவார். இந்த மாதம் பணவரவு நன்றாக இருக்கும். செலவு அதைவிட அதிகமாக அமையும். ரியல் எஸ்டேட் சம்பந்தம் கொண்டவர்கள் மிகப்பெரிய நன்மையையும், அதேசமயம் மிகப்பெரிய அவமானத்தையும் சந்திப்பார்கள். இந்த அவமானம் உங்கள் பணியாளர்கள், ஊழியர்களால் ஏற்படும்; கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. கைபேசியில் தவறான செய்தி பரவும். சினிமா கலைஞர்கள் சிலபல அதிர்ஷ்ட வாய்ப்பு பணவரவையும், சிலபல எரிச்சல்களையும் ஒருங்கே பெறுவர். நோய்த்தாக்கம் குறையும். திருமணத்திற்குக் காத்திருக்கும் இந்த எண்காரர்கள், சிறு முயற்சி செய்தாலும் திருமணம் நடந்துவிடும். பெண் தொழில் முனைவோர்களுடன் சந்திப்பு உண்டு. புதுத்தொழில் தொடங்க எண்ணமுள்ளவர்கள், அது சார்ந்த மனிதர்களிடம் உரையாடுவதால், நன்மை பல கிடைக்கும். இந்த மாதம் அரசியல்வாதிகள், தங்களின் சொந்தத் தொழில் விஷயமாக வெளிநாடு செல்வர். அது அனேகமாக பண முதலீடாக இருக்கும். இந்த மாதம் மறதி, கெட்ட கனவுகள் வர வாய்ப்புள்ளது. சொந்தத் தொழில் செய்யும் மாமனார் உடல்நலம் குன்றுவதால், உங்கள் மாமியார் அதனை மேற்பார்வை செய்யவேண்டி வரும். உங்களின் அருமையான வீடு, கம்பீரமான வாகனம் சற்றே பழுதாகும் நிலை ஏற்படும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: பெருமாள் கோவிலில் விளக்கேற்றியும், ஆஞ்சனேயருக்கு செந்தூரம் சாற்றியும் வழிபடவும். உங்களிடம் பணிபுரியும் வேலையாட்களின் நலனில் கவனம் தேவை.