மேற்கண்ட மாதத்தில் பிறந்தவர்கள் பிறப்பு எண் 9. மேஷ ராசியை சேர்ந்தவர்கள். ராசியாதிபதி செவ்வாய். உங்கள் ராசிக்குரிய சுவை துவர்ப்பு ஆகும். இந்த மாதம், உங்களின் திருமண ஏற்பாடுகள் வேகம் பெறும். கல்யாணச் செலவுக்குரிய பணமும் எளிதாக கிடைக்கும். சிலரின் இளைய சகோதரத்தின் திருமணம் கூடிவரும். இந்த நாட்களில் தைரியம், தன்னம்பிக்கை, மனஉறுதி, தீர்மானமாக செயல்களைச் செய்வது என அழுத்தமான எண்ண அலைகள் நிரம்பும். இதனால் சிலசமயம் பிறருடன் அல்லது வாரிசு சார்ந்து, நன்கு சண்டை போடுவீர்கள். பழைய ஊழியர்கள் திரும்ப பணிக்கு திரும்புவர். உங்களில் சிலர் அரசு பணியில் அமர இயலும். அதற்கு கொஞ்சம் செலவு செய்ய வேண்டியிருக்கும். கலைத் தொழிலில் உள்ளோர் உங்கள் தரப்பு நியாயத்தை நிரூபிக் ரொம்ப போராட வேண்டிவரும். அதிக நம்பிக்கை, அதிக சேதாரம் கொடுக்கும். கைபேசி, நல்ல செய்திதரும். கைபேசியைகொண்டு, வேலை பார்ப்போர் நல்ல மேன்மை பெறுவீர்கள். ஒப்பந்தம் குத்தகை பிரிவினர் மனநிறைவு காண்பர் சில முதலாளிகள், தொழிலாளர் களின் நலன் பேணுவர். பணியாளர்கள், உழைப்பாளி கள், மாச சம்பளம் வாங்குவோர் நன்மை அடையும் மாதமிது. அரசியல்வாதிகள் சில நன்மை களும், பல அவமானங்களும் அடைவர். உங்களில் பலர் வீடு மாற்றுவீர்கள். உங்கள் மாமனாரால் நன்மை யும், மாமியாரால் தொல்லையும் உண்டு. இந்த மாதம் ஞாபக சக்தி அதிகரிப்பதால், இந்த எண் மாணவர்கள் படிப்பில் நல்ல மதிப்பெண் பெறுவர். அருகி லுள்ள நடராஜர் சந்நிதிக்கு இளநீரும் குங்குமமும் வாங்கிக் கொடுங்கள்.
ஏப்ரல் 20 முதல் மே 20 வரை
உங்களின் பிறப்பு எண் 6 ஆகும். ராசி ரிஷபம். அதிபதி சுக்கிரன் ஆவார். உங்கள் ராசிக்குரிய சுவை இனிப்பு ஆகும். இந்த மாதம் உங்கள் வேலையில் மாற்றம் ஏற்படும். அது இடமாற்றம் அல்லது வேறு வேலையில் சேர்வது என்று அமையும். உங்களில் சிலர் வேலை விஷயமாக வெளிநாடு சென்று திரும்பலாம். உங்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும். அது பூர்வீகம், பங்கு வர்த்தகம், வாரிசு, கலை சார்ந்து, விளையாட்டு என அமையும். சில பொழுது போக்குகள்கூட பணம் தரும். அரசாங்கம் உங்கள் பூமி, மனையை சுவாதினப்படுத்தி இருப்பின், அது சார்ந்த தொகை கைக்கு கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் தொழிலில் சில மாற்றங்கள் உண்டாகும். சிலர் குழந்தை பாக்கியம் பெறுவீர்கள். காதல், கலப்பு மணம் நடக்கும். அரசியல்வாதி களின் சில சொற்கள், அவமானம் கொண்டுவரும். எனினும் பணத்தைக்கொண்டு, அதனை சரிபடுத்திவிடுவர். உங்கள் தொழிலில் ஒரு இலகுத் தன்மை, எளிதான முன்னேற்றம் காண்பீர்கள். ஏற்றுமதி- இறக்குமதி, கிரிமினல் வக்கில் என இவர்கள் சுளுவான வெற்றியும், அதிக பணவரவும் பெறுவர். உங்களின் வயல், தோட்டம் விற்க முயற்சித்தால், இப்போது விற்க முடியும். சில மனையில் முதலீடு செய்வர். அது மனை பிரிவாக அமையும். உங்கள் மாமியார் சண்டை போட்டு இடம் மாறும் வாய்ப்புண்டு. நடராஜர் அபிஷேகத்துக்கு நிறைய பழங்கள் வாங்கிக் கொடுத்து வணங்கவும்.
மே 21 முதல் ஜூன் 20 வரை
உங்கள் பிறப்பு எண் 5 ஆகும். உங்கள் ராசி மிதுனம். ராசிநாதன் புதன் ஆவார். உங்கள் ராசிக்குரிய சுவை உப்பு ஆகும். இந்த மாதம் திருமணத்திற்கு பார்த்துக்கொண்டு இருப்பவர் களுக்கு கண்டிப்பாக திருமணம் நடக்கும். அது போல் சரியான வேலை அமையவில்லையே எனக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு, வேலை கிடைக்கும். அது கம்ப்யூட்டர், தகவல் தொடர்பு, மனை ஒப்பந்தம் ரியல் எஸ்டேட் தொடர்பு என இவை சார்ந்த வேலை அமையும். நிறைய பேர் வீடு மாறுவீர்கள். வீடு விற்பீர்கள். வாகனம் மனை வாங்குவதும், விற்பதும் நடக்கும். சிலரின் வாழ்க்கைத் துணை, அரசு சார்ந்த வேலை கிடைக்கும். சிலருக்கு மருமகள் வருவாள். உங்கள் தொழில் சார்ந்து, அரசுக்கு வரி கட்டணம், பைன் இவை கட்ட வேண்டிவரும். உங்கள் சிலரின் வாகனம் அரசு கட்ட ணம் செலுத்த வேண்டியிருக்கும். பெண் அரசியல்வாதிகள் மந்திரி பதவியும், இடமாற்றமும் கிடைக்கப்பெறுவர். சிலரின் மூத்த சகோதரி கள், வாரிசு விஷயமாக வெளிநாடு செல்வர். நிறைய அரசியல் வாதிகள் கட்சி மாறுவர். உங்கள் இளைய சகோத ரன் காதல் திருமணத்துக்கு வழி காண்பார். நடராஜ ருக்கு அபிஷேக அலங்காரத் துக்கு நிறைய பூக்கள், பன்னீர், கற்பூரம் வாங்கிக் கொடுத்து வணங்குங்கள்.
ஜூன் 21 முதல் ஜூலை 20 வர

ஜூன் 21 முதல் ஜூலை 20 வரை
உங்களின் பிறப்பு எண் 2 ஆகும். ராசி கடகம். ராசிநாதன் சந்திரன். உங்கள் ராசியின் சுவை இனிப்பு ஆகும். இந்த மாதம் பணவரவு வந்து கொண்டே இருந்தாலும், வரவை மீறின செலவும் இருந்துகொண்டே இருக்கும். குறிப்பாக, அரசுவகை வரி பாக்கி, கட்டணம் என இவைபோன்ற செலவுகள் வந்துகொண்டேயிருக்கும். வேலையில் இருப்போர், அரசு பணியாளர்கள் இடமாற்றம் பெறுவர். சொந்தத் தொழில் செய்வோர், அரசு விதிகளுக்கு பணிந்து சில மாற்றம் செய்ய வேண்டியிருக்கும். உங்கள் வாழ்க்கைத்துணையின் தொழிலில், ஒரு பெண் அரசியல்வாதியின் பங்கீடு, தலையீடு இருக்கும். அரசியல்வாதியின் பணவரவு முன்னே, பின்னே இருந்தாலும், வெகு கௌரவத்திற்கு குறை இருக்காது. கலை உலகினர் நிறைய வாய்ப்பு பெறும்போது, சில பல செல்லா காசுகளும் பெறுவர். உங்களில் சிலர் சில செலவுகள் செய்து ஒரு அரசு பணி வாங்கிவிடுவீர்கள். தம்பதிகளுக்குள் ஈகோ யுத்தம் ஏற்படும். உங்கள் தந்தை, வெகுதூர ஆன்மிக பயணம் கண்டிப்பாக செல்வார். அது சம்பந்தமான செலவு அதிக முண்டு. சிலரின் மாமனாரும் அவருடன் செல்வர். மாமியார் பண விஷயமாக வம்பு வளர்ப்பார். நடராஜர் அபிஷேகத்திற்கு, வேண்டிய திரவ பூஜை பொருட்களை, வாங்கி, சமர்ப்பித்து வணங்குங்கள்.
ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 20 வரை
மேற்கண்ட மாதத்தில் பிறந்தவர் களின் எண் 1 ஆகும். ராசி சிம்மம். அதிபதி சூரியன் ஆவார். உங்களின் சுவை காரம் ஆகும். இந்த மாதம் பண வரவு பெரும் செழிப்பாக வரும். அது நேர் வழியில் மட்டுமின்றி, எதிர்மறை வழியிலும் வந்து கொட்டும். அரசியல் வாதிகள் காட்டில் பண மழை கொட்டும். கலைத்தொழிலில் உள்ளோர், செல்வசெழிப்பு பெறுவர். பங்கு வர்த்தகம் நல்ல பலன் தரும். வாரிசு களால் மிக மேன்மை கிடைக்கும். பொழுது போக்குவகைகள் நல்ல லாபம் தரும். உங்களில் சிலர் இன்னொரு ரேஷன் அட்டையில் இடம் பெற்று, குடும்ப பெருக்கம் காண்பீர்கள். அறிவுகொண்டு தொழில் புரிபவர் கள் மற்றும் ஏற்றுமதி- இறக்குமதி செய்வோர் இவர்கள் செல்வ உயர்வு காண்பார்கள். எல்லாவற்றையும்விட, உங்கள் நம்பிக்கை பெருகும். சிலருக்கு வீடு மாற்றம் உண்டு. நல்ல பெண் பணியாளர் கிடைப்பர். வீடு, அடுக்கு மாடி கட்டும் ஒப்பந்தம் கையெழுத்து ஆகும். உங்கள் இளைய சகோதரி திருமணம் நடக்கும். உங்கள் பெற்றோர் பெயரிலுள்ள மனையில், பிரிவு பத்திரம் உண்டாகும். தம்பதியருக்குள் பிற இன மனிதரால், சண்டை வரும். அழகிய கைபேசி வாங்குவீர்கள். உயர் கல்வி, ட.ட்க் படிப்போர், எளிதான நன்மை காண்பர். வேளாண்மை கல்வி, கார், பைக் பற்றிய கல்வி, அலங்கரித்தல் சார்ந்த கல்வி இவை மிக மேன்மை தரும். நடராஜருக்கு தீபமேற்றியும், தீபத்திற்கு நெய்யும் வாங்கிக் கொடுங்கள்.
ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20 வரை
இந்த மாதம் பிறந்த உங்கள் எண் 5. ராசி கன்னி. அதிபர் புதன் ஆவார். உங்கள் சுவை உப்பு ஆகும். இந்த மாதம் தொழில் முதலீடுகள் செய்வீர்கள். அல்லது தொழில் தொடங்க, அரசு விற்பனை செய்யும் மனை, தொழில்கூடம் என இதுமாதிரி வாங்கமுடியும். இதனால் பணம் நிறைய செலவழியும். மேலும் லஞ்சமாக நிறைய பணம் கொடுக்க வேண்டியிருக்கும். சிலருக்கு வரவேண்டிய தொகை தடை, தாமதமாக வரும். உங்கள் மனை சார்ந்த குத்தகை மாற்றம் பெறும். உங்கள் பணியாளர்கள் ஓடிவிட வாய்ப்புண்டு. உங்கள் இளைய சகோதரன், ஒரு பெண் விஷயமாக எங்காவது ஓடிப்போய் மறைந்துகொள்வார். வீடு மாற்றம் அல்லது வீட்டு முதலீடு உண்டு. இப்போது முடிவாகும் திருமணத்தில் வரும் வரன் அரசு சம்பந்தம் பணியில் இருப்பார். உங்கள் தந்தையின் உடல்நிலை சிறிது சீர்கெட்டு பின் சரியாகும். உயர்கல்வி சிறிது தடுமாறி பின் சரியாகும். உயர்கல்வி சிறிது தடுமாறி பின் நேரடையும். தொழில் தொடங்க விரும்புவோர், இந்த மாதத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அரசு உதவி கிடைக்கும். நடராஜருக்கு வில்வமாலை வாங்கிக் கொடுத்து வணங்குங்கள்.
செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 20 வரை
மேற்கண்ட மாதத்தில் பிறந்தவர்களின் எண் 6 ஆகும். ராசி துலாம். அதிபதி சுக்கிரன். இந்த ராசியின் சுவை இனிப்பு ஆகும். இந்த மாதம் திருமண ப்ராப்தம் உண்டு. சிலர் மாங்கல்யத்தில் காசு அல்லது குழல் சேர்த்துக்கொள்வர். கலப்பு காதல் திருமணம் நடக்கும். சிலர் ரகசியமாக 2-ஆவது திருமணம் செய்துகொள்வர். சிலருக்கு மருமகன் வருவார். சில அரசியல்வாதிகள், காதல் திருமணத்தை அறிவிப்பார்கள். அது அவர்களுக்கு எத்தனையாவது திருமணம் என்று யாரும் கேட்கமுடியாது. சினிமா துறையில் உள்ளவர்களும் இஷ்டப்படி கல்யாணம் செய்துகொள்வார்கள். அரசு வேலை கிடைக்கும். அரசு ஒப்பந்தம் கைகூடும். அரசு பணியாளர்கள் கிடைப்பர். வீட்டுக்கடன் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, நிறைய கூட்டணிக் கட்சி ஆட்களுடன் தொடர்பு, சந்திப்பு நடக்கும். நிறைய சுபச் செலவுகள் உண்டு. சீருடை, காவல்துறை பணியாளர்கள், அரசு அதிகாரிகள் பதவி உயர்வு பெறுவார்கள். பங்கு வர்த்தகம் நன்மை தரும். நடராஜருக்கு, நிறைய பழங்கள்கொண்டு வணங்குங் கள். கூடவே கல்கண்டு, கருப்பஞ்சாரும் கொடுக் கலாம்.
அக்டோபர் 21 முதல் நவம்பர் 20 வரை
உங்களின் எண்ணியல் எண் 9 ஆகும். ராசி விருச்சிகம். அதிபதி செவ்வாய். உங்கள் ராசி காரம் மற்றும் துவர்ப்பு ஆகும். இந்த மாதம் வேலை கிடைக்கும். அல்லது வேலை சார்ந்த தொழில் தொடங்குவீர்கள். தொழில் தொடங் கும்போது, ஒரு அரசியல்வாதிக்கு மறைமுக அன்பளிப்பு கட்டாயம் கொடுக்க வேண்டியிருக்கும். நீங்கள் தொடங்கும் தொழிலும், ஏற்கெனவே உங்கள் வாழ்க்கைத்துணை நடத்திக்கொண்டிருக்கும் தொழிலும், கொஞ்சம் எதிர்மறை சிந்தனை கொடுக்கும். உங்கள் தாயார் உடல்நலனில் கவனம் செலுத்தவேண்டும். உங்கள் ஒப்பந்த, குத்தகை விஷயங்களில் வெகு கவனம் தேவை. பணியாளர்கள் கடன் கேட்க கூடும். உங்கள் இளைய சகோதரர் முறைத்துக்கொள்ளும் நிலை ஏற்படும். உங்கள் வாரிசுகள் பண விஷயமாக நெருக்கடி தருவர். பங்கு வர்த்தகம் சுமாரான பலன் தரும். சினிமா கலைஞர்கள், மனச்சங்கடத்துக்கு ஆளாவார்கள். தம்பதிகளுக்குள் அவ்வப்போது மன பேதம் வரும். ஏற்றுமதி- இறக்குமதி தொழில் செய்வோர், பூமியை தோண்டி பணிபுரிவோர் இவர்கள் பணபலமும், பதவி உயர்வும் பெறுவர். மற்றவர்களுக்கு பதவி உயர்வு கனவுதான். சிலருக்கு தாய்மாமன்வகையில் அல்லது சண்டையில் திருமணம் நிச்சயமாக வாய்ப்புள்ளது. மாமனார்- மாமியார் செம சண்டை போட்டுக்கொள்வர். நடராஜருக்கு சந்தணம் வழங்கியும், தீபமேற்றியும் வழிபடவும்.
நவம்பர் 21 முதல் டிசம்பர் 20 வரை
உங்கள் எண் 3 ஆகும். ராசி தனுசு. அதிபதி குரு ஆவார். உங்கள் ராசியின் சுவை இனிப்பு ஆகும். இந்த மாதம் திருமண வயதில் உள்ளோருக்கு, கண்டிப்பாக கல்யாணம் நடக்கும். பணவரவு பற்றிய தகவல்கள் கிடைக்கும். மருத்துவ உதவியுடன், வாரிசு யோகம் கிடைக்கும். உங்களில் சிலருக்கு, உங்கள் பிஸினஸ் பார்டனர் களுடன், திருமண சம்பந்தம் உண்டாகும். புதிதாக வணிகம் தொடங்கு வீர்கள். வணிகத்துக் கான இடம் வாங்குவீர் கள். சிலர் புது வீடு வாங்க முனைவீர்கள். புது தொழில் அல்லது தொழில் விரிவு சம்பந்தமாக இடம் வாங்கி கௌரவம் பெறுவீர்கள். குல தெய்வ வழிபாடு உண்டு. பெண் அரசியல் வாதிகள், மந்திரி பதவி பெறுவர். சிலருக்கு ஆரோக்கிய வேலை சம்பந்த மருமகள் வருவாள். உங்களில் சிலரின் வாழ்க்கைத் துணை அரசு உத்தியோகம் பெறுவார். உங்கள் குடும்பத்துடன், மலைமீதுள்ள தெய்வத்தை வணங்க, ஆன்மிக பயணம் செய்வீர்கள். நடராஜருக்கு மஞ்சள் வஸ்திரம், மஞ்சள் பொடி, முல்லை மலர் என காணிக்கை கொடுத்து வணங்கவும்.
டிசம்பர் 21 முதல் ஜனவரி 20 வரை
உங்களின் எண் 8 ஆகும். ராசி மகரம். அதிபதி சனி ஆவார். உங்களின் சுவை காரம் அல்லது துவர்ப்பு ஆகும். இந்த மாதம், உங்களுக்கு வெளிநாட்டு பணத்தை கையாளும் யோகமுண்டு. அது உங்கள் வேலை சார்பாக இருக்கும். இந்த மாதத்தில் பிறந்த வர்கள், நீங்கள் அரசனாக இருந்தாலும் சரி, ஆண்டியா இருந்தாலும் சரி, மாங்கு மாங்கென்று அலைவீர்கள். வேறு வழியே இல்லை. அலைந்துதான் தீர வேண்டும். உங்கள் தாயாரின் உடல்நலன் பாதிக்கப்படும். அல்லது வீடு மிகவும் பழுதாகி இடிந்துவிழும். பயணங்களில் கவனம் தேவை. உங்களில் பலர், எதிர்பாராதவிதமாக அரசு வேலை பெறுவீர்கள். சிலருக்கு அரசாங்கம் கொடுத்து வந்த இன்னல் தீரும். உயர்கல்வி பயில்வோர், வேலை கிடைக்கப்பெறுவர். இந்த மாதம் இரு விதங்களில் சற்றும் நினைத்ததறியா நற்செய்தி கிடைக்கும். நடராஜருக்கு தீபமேற்றி வழிபடவும். தீபமேற்ற நெய் வாங்கிக் கொடுக்கவும்.
ஜனவரி 21 முதல் பிப்ரவரி 9 வரை
உங்கள் பிறந்த மாதத்துக்குரிய எண் 8 ஆகும். ராசி கும்பம். அதிபதி சனி. உங்கள் ராசியின் சுவை காரம் மற்றும் துவர்ப்பு ஆகும். இந்த மாதம் உங்களில் நிறைய பேர் காதல் கல்யாணம் செய்து கொள்வீர்கள். அல்லது காதல் விஷயம் ஓடிவந்து கையை பிடித்துக் கொள் ளும். உங்களில் அனேகம் பேருக்கு மருமகன் வருவார். அல்லது உங்கள் இளைய சகோதரிக்கு திருமணமாகும். கலைத் துறையினர் பண லாபமான ஒப்பந்தம் பெறுவார்கள். பங்கு வர்த்தகம் நல்ல லாபம் தரும். வாரிசுகள் வகையில் பணவரவு வரும். பூர்வீக சொத்து சம்பந்த பணம் கைக்கு கிடைக்கும். வீட்டிலேயே தங்கி பணிபுரியும் வேலையாட்களை ஏற்பாடு செய்துகொள்வீர்கள். உங்களில் சிலர், அடுக்குமாடி வீட்டை விற்றுவிடுவீர்கள். மறுமணம் ஏற்பாடு பலிதமாகும். அரசியல்வாதிகள் மந்திரி பதவி பெறுவர். சில அரசு அதிகாரிகள், பதவி உயர்வு பெறுவார்கள். நிறைய பணம் வருவதால், பந்தாவுக்காக நிறைய செலவழிக்கவும் செய்வீர்கள். நடராஜருக்கு, எண்ணெய் தீபமுடன் வணங்கவும்.
பிப்ரவரி 20 முதல் மார்ச் 20 வரை
உங்களின் எண் 3 ஆகும். ராசி மீனம். அதிபர் குரு ஆவார். சுவை இனிப்பு ஆகும். இந்த மாதம் உங்களில் நிறைய பேர் வீடு வாங்க ஆவன செய்வீர்கள். அதன் பொருட்டு, அரசுமூலம் கடனும் வாங்குவீர்கள். உங்கள் தந்தையின் உடல்நிலையில் சற்று சறுக்கல் ஏற்படும். அதனால் பணக்குறைவு உண்டாகும். உங்கள் பணியாளர் கள்மூலம் பணம் திருட்டுப்போக வாய்ப்புண்டு. அல்லது உங்கள் இளைய சகோதரியின் வேலைக்காக பண செலவு செய்ய வேண்டியிருக்கும். கைபேசி பழுதாக கூடும். உங்கள் வாழ்க்கைத் துணையின், தொழில் சார்ந்து முன்னெடுப்பு வேலைகள் தொடங்குவீர்கள். உங்களில் சிலருக்கு தொழில் முதலீடு உண்டு. ஏற்றுமதி- இறக்குமதியாளர்களுக்கு பணவரவு தகவல்கள் வரும். கலைஞர்கள், பணம் வரும் தரவுகள் பெறுவார்களே தவிர பணம் தாமதமாகத் தான் கிடைக்கும். அரசியல்வாதிகள் வெகு அலைச்சல் பெறுவர். மேலும் வீடு, சொத்து சம்பந்தமான ஒரு வழக்கை எதிர் கொள்ளவேண்டியிருக்கும். உங்கள் மாமியாரால், வீட்டில் சண்டை உண்டா கும். நடராஜருக்கு மஞ்சள் மலர்களை காணிக்கை யாக்கி வணங்கவும்.
_________________
ஆனி மாத கிரக நிலைகள்!
சூரியன்
ஆனி மாதம், சூரியன் எப்போதும் மிதுன ராசியில்தான் இருப்பார். கூடவே புதனும், குருவும் அமர்ந்துள்ளனர். சூரியன் அரசாங்கத்தைக் குறிப்பார். அதுவும் காலபுருசனின் 3-ஆமிடத்தில், அதன் அதிபதி புதனுடன் அமர்ந்துள்ளார். எனவே, இந்த மாதம், அரசாங்கம், பள்ளி, கல்லூரி, தகவல் தொடர்பு இவற்றில் முழு கவனமும் செலுத்தும். மேலும் மனை விற்பனை, தொழில் சார்ந்த இடங்களின் விற்பனையை முழுமூச்சாக பெருக்கும். வேலை வாய்ப்புகள் பெருகும். நிறைய கல்வி கற்றவர்களை, உயர்பதவிக்கு, மந்திரி பதவிக்கு இணையான பதவிக்கு நியமனம் செய்யும். கூடவே இருக்கும் எதிர்கட்சியை குறிக்கும். புதன், அரசாங்கத்தை எதிர்க்காமல், மிக தன்மையாக, அனுசரணையாக செல்லும். இதற்கு ஒரு மதப் பெரியவர் காரணமாக இருக்கக்கூடும். அரசாங்கம், அரசு வேலைகள் சார்ந்து நிறைய தகவல்கள் வெளிவரும். ஒரு காற்று மூலம் பரவும் நோயின் அறிகுறி தெரியவருவதால், அரசாங்கம் ஆரோக்கியம் சார்ந்த முன்னெடுப்பை விரைவுபடுத்தும்.
செவ்வாய்
செவ்வாய் காலபுருசனின் 5-ஆம் வீட்டில் கேதுவுடன் உள்ளார். சில மந்திரிகளால், காவல்துறை அதிகாரிகளுக்கு துன்பம் ஏற்படும். அதுபோல சில காவல்துறை அதிகாரிகளால், சில மந்திரிகள் இம்சைபட நேரிடும். செவ்வாய் காலபுருசனின் எட்டாம் அதிபதி. அவர் ஒரு ஆரோக்கிய ஸ்தானத்தில் செல்லும்போது, பொது மக்களுக்கு, ஆரோக்கியம் சார்ந்த வதந்தியும், பதட்டமும், கவலையும் அதிகரிக்கும். கூடவே இருக்கும் கேது, அதனை அதிகப்படுத்துவார். கலைத்துறை, அரசியல் இவை சார்ந்த புகழ்பெற்ற பெண் ஒருவர் கவனமாக இருப்பது அவசியம். பொது ஜனங்கள் அங்காரக சதுர்த்தியன்று விநாயகரை வணங்கவேண்டும். செவ்வாய் ஆளும் கட்சியைக் குறிப்பார். இவர் காலபுருசனின் 5-ஆமிடத்தில், சூரியனின் வீட்டில் அமர்ந்துள்ளார். எனவே, ஆளுங்கட்சி, அரசாங்கத்தை கண்டிப்பு மனப்பான்மையுடன் நடத்தும். அரசு நிர்வாகத்தை, நிறைய பிரிவாக பிரித்து செயல்படுத்தும். இதன்மூலம் மக்களின் நம்பிக்கையை, ஆளுங்கட்சி, அதிகரிக்க வெகு முயற்சிகொள்ளும். அதுமட்டுமல்ல; ஆளுங்கட்சி, வெகு தன்னம்பிக்கையுடன் செயல்படும்.
புதன்
இவர் எதிர்கட்சியைக் குறிப்பார். இவர் மிதுன ராசியில் ஆட்சியாக உள்ளார். எனவே தனது முழு பலத்துடன் எதிர்கட்சிகள் செயலாற்றும். மேலும் கூட்டணி கட்சிகளின், இம்சையும் நீங்கி விடுவதால், எதிர்கட்சிகள் ரொம்ப நிம்மதியாக இருப்பார். இவருடன்கூட சூரியனும், குருவும் உள்ளனர். எனவே, யாரோ ஒரு மதப்பெரியவர் அல்லது உயர் அதிகாரிமூலம், அரசாங்கத்தில் நிறைய காரியம் சாதித்துக்கொள்வர். எதிர்கட்சிகள் பற்றிய நல்ல விதமான தரவுகள் வெளிவரும். எதிர்கட்சியினர் செம ஜா- மூடில் குதூக-ப்பர்.
குரு
குருபகவான், அரசாங்கத்தைக் குறிக்கும் சூரியனுடனும், கல்வியைக் குறிக்கும் புதனுடனும் செல்வதால், கல்வி சார்ந்து நல்ல மாற்றங்களை கொண்டு வருவார். உயர்கல்வி சார்ந்த, வேலைகள் சார்ந்த, ஒரு நல்ல அரசாணை வருவதற்கு குரு ரொம்ப மெனக்கெடுவார். கல்வியின் கஷ்டத்தை நீக்குவது சம்பந்தமாக, நீதித் துறை, ஒரு நல்ல தீர்ப்பு வழங்கப்போகிறது. அதுபோல மனையை, அரசு கையகப்படுத்துவது, அதன் விற்பனை சார்ந்தும், நீதிமன்றம் ஒரு நல்ல நம்பிக்கையான, தீர்ப்பை வெளியிடும். நிஜமாகவே, நீதித்துறை, வெகு சுறுசுறுப்பாக செயல்பட்டு, நிறைய நல்ல தீர்ப்பு ஆணைகள் வழங்கும்.
சுக்கிரன்
இது கூட்டணிக் கட்சிகளைக் குறிக்கும். இவ்வளவு நாளும் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்த கூட்டணி கட்சிகள், ஏனோ சைலண்ட் மூடுக்கு போய், பேசாமல், கொள்ளாமல் நல்ல பிள்ளையாகிவிடும். இதற்கு ஆளுங்கட்சியின் மிரட்டலும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். எது எப்படியோ, இவ்வளவு நாளும் கூட்டணி கட்சிகளின் இம்சையில் தவித்த எதிர்கட்சிகள் நிம்மதியாக இருக்கும்.
சனி
காலபுருச தத்துவப்படி, அரசியலை குறிக்கும் இட அதிபதியான சனிபகவான் இவர் வாக்கியப்படி கும்பத்தில், ராகுவுடன் செவ்வாய் பார்வையில் இருப்பார். திருக்கணிதப்படி, விரய வீட்டில், மீனத்தில் செவ்வா யின் 8-ஆம் பார்வையில் இருப்பார். எந்த வகை கணிதத் தில் இருப்பினும் சனி, செவ்வாய் பார்வையில்தான் உள்ளார். இதனால் நம் நாட்டு அரசியல் மட்டுமல்ல, உலக அரசியலும் ஒருவித பதட்டத்தில் இருக்கும். ஒரு நிச்சயமற்ற, ஸ்திரமில்லாத அவநம்பிக்கை நிலை எங்கும் பரவும்.
ராகு
இவர் கும்பத்தில், குரு சாரத்தில் ஓடுகிறார். குருவின் 9-ஆம் பார்வையிலும் உள்ளார். எனவே ராகுவின் அனைத்து அடாவடிச் செயல்களும் கட்டுக்குள் இருக்கும். எனினும் செவ்வாயின் பார்வையை பெறுவதால் அவ்வப்போது சீருவார். இருப்பது அரசியலுக்குரிய இடத்தில். எனவே அரசியல் அலைபாயும்.
கேது
இவர் சிம்மத்தில், செவ்வாயுடன் உள்ளார். இவர் ஒரு கிருமி காரகர். இவர் காலபுருஷனின் 5-ஆம் வீடு எனும் ஆரோக்கிய ஸ்தானத்தில் 8-ஆம் அதிபதி எனும் பயங்கர செவ்வாயுடன் செல்லும்போது, ஆரோக்கியம் சம்பந்தமான வதந்திகளை எவரும் பரப்புவார். குழந்தை களின், ஜீரண சம்பந்தமான தொல்லைகளை உண்டாக்கு வார். தொப்புள் அருகே வ-க்கிறது என்பர். கண்ட இடத்தில் சாப்பிடாமல் வீட்டில் உண்ணவும். முண்டேன் அஸ்டாரலஜி உலகியல் ஜோதிடம் சார்ந்து, எப்போது எல்லாம், சனி, செவ்வாய், ராகு- கேது, குரு இவர்களின் சம்பந்தம் ஏற்படும்போது, பூமி அதிர்ச்சி அல்லது போர் ஏற்படும் எனக் கூறப்பட்டுள்ளது. எனினும் குருபகவான், ராகுவைப் பார்ப்பதால், இவை தவிர்க்கப்படும் என்றே தோன்று கிறது. மற்றவை இறைவனின் விருப்பம் அல்லவா.
சந்திரன்
ஆனி 2, 3, 4 ஜூன் 16, 17, 18 அன்று, சந்திரன் கும்ப ராசியில் நகர்வார். அங்கு ராகு உள்ளார். இவர்களை செவ்வாயும், கேதுவும் பார்க்கிறார்கள். ஒரு காற்று ராசியில் ஒரு நீர் கிரகமும், காற்றுக் கிரகமும் சேர்கிறது. எனவே, இந்நாட்களில் ஈரப்பதமான காற்று வீசும். ஆனி 4, 5, 6-ஆம் தேதிகளில் ஜூன் 18, 19, 20-ஆம் தேதிகளில் மீனத்தில் சனியுடன் சஞ்சாரம். ஒரு நீர் ராசியில், நீர் கிரகமான சந்திரனும், காற்று கிரகமான சனியும் செல்லும்போது, தென்றல் காற்று வீசும். ஆனி 7, 8, 9 (ஜூன் 21, 22, 23) ஆம் தேதிகளில் மேஷத்தில் உள்ள சுக்கிரனோடு சந்திரன் செல்லல். ஒரு நெருப்பு ராசியில், இரண்டு நீர் கிரகங்கள் செல்லல். எனவே வெப்பம் தணிந்து, குளிர் அதிகமிருக்கும். ஆனி 11, 12, 13 (ஜூன் 25, 26, 27) வரை சந்திரன் மிதுனத்தில் ரன்னிங். இங்கு சூரியன், புதன், குரு எனும் கிரகங்கள் உள்ளனர். காற்றில் ஈரப்பதம் அதிகமாகும். சிலசமயம் சிறு மழை பொழிய வாய்ப்புண்டு. ஆனி 16, 17, 18 (ஜூன் 30, ஜூலை 1, 2) சிம்ம ராசியில், செவ்வாய் மற்றும் கேதுவுடன் பயணம். வெப்பம் அதிகமாகும். வெப்பக் காற்று வீசும். இந்த ஆனி மாதம் மிதமான, ஈரப்பதமான காற்று அடிக்கும்.