1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

எல்லா நன்மைகளையும் தடையின்றி அடையும் மாதம் இது. மாணவர்கள் கல்வி யில் எண்ணியபடி முன்னேற்றம் காண்பார் கள். இதுவரை தொந்தரவு கொடுத்து வந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். கடன் தொந்தரவுகள் உபரி வருவாயால் நீங்கும். கடன்சுமையும் குறையும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி வரவுகள் வந்துசேரும். புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக் கும். பங்குதாரர்களைக் கொண்டு தொழில் நடத்திவரும் தொழிலதிபர்கள் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கணவன்- மனைவி ஒற்றுமை சுமுகமாக இருக்கும். மனைவி வழியில் வரவேண்டிய சொத்து கள் கிடைக்கும். வியாபாரிகள் எந்த கொள் முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாக இருப்பவர்கள் விலகிச்செல்வார்கள். அரசு ஊழியர்கள் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். வரவேண்டிய இனங்கள் அனைத்தும் வந்துசேரும். கேட்ட இடத்திற்கு மாறுதல் கிட்டும். மகான்களின் சந்திப்பு ஏற்ப டும். தங்கள் பிள்ளை களுக்கு வரன்தேடும் பெற்றோர்களுக்கு நல்ல வரன் அமை யும். அரசியல்வாதி கள் எடுக்கும் முடிவு கள் நல்ல வாய்ப்பு களைப் பெற்றுத் தரும். அரசியலிலில் உங்களை ஒதுக்கிய வர்கள் தற்போது தேடி வருவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 3; 4, 21,22, 31; 8, 17, 26.

Advertisment

வணங்கவேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

மாணவர்கள் இந்த மாதம் எச்சரிக்கை யாகப் படித்தால் மட்டுமே நல்ல மதிப் பெண்களைப் பெறமுடியும். உயர்கல்வியில் உள்ளவர்கள் ஈவ் டீசிங்கில் சிக்கிட வாய்ப்புகள் உண்டு. எனவே கல்விக் கூடத்தில் எச்சரிக்கை யாக இருக்கவேண்டும். தொழிலாளர்கள் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியது வரும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானமும் கிட்டும். தொழிலதிபர்கள் நினைத்த படி உற்பத்தி கூடும். புதிய ஒப்பந்தங்கள் வரும். லாபம் பெருகும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல்நிலையில் இருந்துவரும் சிரமங்கள் முற்றிலும் நீங்கும். நீண்டநாட்களாகத் தொல்லை கொடுத்து வரும் நோய் மருந்துக்குக் கட்டுப்பட்டுவிடும். அரசுப் பணியில் உள்ளவர்கள் உடன்பணி புரிகிறவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீண்பழிகள் வந்து சேரலாம். மேலதிகாரிகள் கோபத் திற்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடன்பிறந்த சகோதரர்கள் மனம் திருந்தி ஒன்று சேர்வார்கள். மண மாகாதவர்களுக்கு நல்ல வரன் வந்துசேரும். வெளிநாடு செல்ல நினைத்தவர்கள் திட்டமிட்டபடி வெளி நாடு செல்வார்கள். கொடுக்கல்- வாங்கல் செய்வோர் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய மாதம். அரசியல்வாதிகள் சமூகத் தில் நல்ல அந்தஸ்தைப் பெறுவார்கள்.

Advertisment

அதிர்ஷ்ட தேதி: 8; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 1; 2, 11, 20, 29; 7, 25.

வணங்கவேண்டிய தெய்வம்: அம்மன் தெய்வங்கள்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப் பெண் பெறுவார்கள். கல்வி நிறுவனங்களின் பாராட்டைப் பெற்று பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தருவார்கள். இதுவரை தொல்லை கொடுத்து வந்த எதிரிகள் விலகிச் செல்வார் கள். தைரியமாக செயல்படும் மாதம். பொதுக் காரியத்தில் உள்ளவர்கள் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். குடும்பத்தில் இருந்துவரும் சண்டை நீங்கி தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். உடல் நிலை நன்றாக இருக்கும். நினைத்தபடி பண வரவுகளைப் பெறலாம். தொழிலாளர்கள் ஒற்றுமையால் தொழிலதிபர்கள் அதிக உற்பத்தியையும் லாபத்தையும் பெறுவார்கள். அரசால் நன்மைபெற, உதவிபெற பொறுமை யுடன் செயல்படவேண்டிய மாதம். வியாபாரிகள் மறைமுகப் போட்டிகளால் நஷ்டம் அடைய நேரலாம். அதிக விற்பனையை விட குறைந்த விற்பனையில் கூடுதல் லாபத்தைப் பெறலாம். குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருக்கும் பிள்ளைகள் வந்துசேர்வார்கள். அயல்நாட்டிலிலிருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். தந்தை- மகன் உறவு சுமுகமா கும். அரசு ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதல் பெறுவார்கள். தங்கநகை விற்பனை செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அதேநேரம் பணியாளர்களால் நஷ்டத்தையும் சந்திக்க நேரலாம். எச்சரிக்கை தேவை. அரசியல் வாதிகள் நல்ல நிலையை அடைவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 3, 12, 21, 30; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31; 6; 17, 26; 29.

வணங்கவேண்டிய தெய்வம்: அங்காள பரமேஸ்வரி அம்மன் தெய்வங்கள்.

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

மாணவர்கள் சாதனை படைக்கும் மாதம். படிப்போடு உயர்கல்வியில் உள்ளவர் கள் விளையாட்டுகளிலும் வெற்றி வாய்ப் பைப் பெறுவார்கள். இளைஞர்களுக்கு எதிர் பார்த்தபடி வேலைவாய்ப்புகள் கிட்டும். திருமணத்திற்கு வரன் தேடுவோர், வரக் கூடிய வரன்களை நன்கு ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். தொழிலதிபர்கள் வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். தொழிலா ளர் ஒற்றுமையால் லாபம் பெருகும். வியாபாரிகள் போட்டியின்றி வியாபாரத்தைச் செய்து லாபத்தைப் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் அதிகாரிகளின் கெடுபிடிக்கு ஆளாகலாம். லஞ்ச ஊழல் வழக்கு வர வாய்ப்புள்ளது. பொறுமையைக் கடைப் பிடிக்க வேண்டிய மாதம். குடும்பத் தேவை களைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் அதிகம் உண்டு. பிரிந்து சென்ற தம்பதியர், வழக்கு இருந்தாலும் சமாதானமாக ஒன்று சேர்வார்கள். மருத்துவத் தொழில் புரி வோருக்கு அதிக வருவாய் வரும் மாதம். அரசியல்வாதிகளுக்கு இந்த மாதம் சோதனையாக இருக்கும். ஆனாலும் அந்த சோதனைகள் வெற்றியாக மாறும். அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

pillaiyar

தவிர்க்கவேண்டிய தேதி: 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: சுப்பிர மணியர், துர்க்கையம்மன்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

நீங்கள் எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் கைகூடும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். மாணவர்கள் கல்வி நடுநிலையாக இருக்கும். உல்லாசப் பயணங் களில் நாட்டம் செல்லும். மனஅடக்கம் பெற தியானம் செய்யுங்கள். படிப்பில் நாட்டம் கூடும். பிள்ளைகள் விரும்பியதை பெற்றோர் கள் வாங்கிக் கொடுப்பார்கள். செலவுகளும் அலைச்சலும் கூடும் மாதம். திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் வந்துசேரும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வரும். காணாமல்போன பொருள், திருட்டுப்போன பொருள் கிடைக்கும். பெற்றோர்கள் உடல்நிலையில் கவனம் தேவை. தொழிலதிபர்கள் புதிதாகத் தொழில் துவங்கும் திட்டம் நிறைவேறும். நல்ல தொழிலாளர்கள் கிடைப்பார்கள். வியாபாரி கள் போட்டியை முறி யடித்து நல்ல லாபம் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் நினைத்த படி மாறுதலை அடை வார்கள். சிலருக்கு பதவி உயர்வுடன் மாறுதல் வரும். தற்காலிலிகப் பணி நீக்கம், பணிநீக்கம் உள்ளவர் கள் மீண்டும் பதவியில் அமர்த் தப்படும் காலம். வழக்குகள் வெற்றி தரும். இதுவரை தொல்லை கொடுத்த மேலதிகாரிகள் மாறுதலிலில் செல்வது ஆறுதலாகும். அரசியல்வாதிகள் தலைமை யின் பாராட்டைப் பெற்று புதிய பதவி யைப் பெறுவார்கள். இளைஞர்கள் எதிர் பார்த்தபடி வேலைவாய்ப்பு கிடைக்கும். குடும் பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21.

வணங்கவேண்டிய தெய்வம்: விஷ்ணு, துர்க்கை, மகாலட்சுமி.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவரும் மந்தநிலை மாறும். டியூஷன் இல்லாமலேயே படிக்கும் மாதம். தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் வியாபாரிகள் அனைவருமே எடுத்த காரியத்தில் வெற்றியைப் பெறுவார்கள். இதுவரை இருந்து வந்த மறைமுக எதிரிகள் விலகிச் செல்வார்கள். புகழ் சேரும். செல்வாக்கும் கூடும். குடும்பத்தில் ஒற்றுமை பெருகும். கணவன்- மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். விலகிச்சென்ற சொந்தங்கள் வந்துசேரும். பெற்றோர் கள் உடல்நிலையில் கவனமாக இருக்க வேண்டும். உடன்பிறந்த சகோதரர்கள் ஒற்றுமையுண்டு. ஆடை, ஆபரணச் சேர்க்கையால் பெண்கள் மகிழ்ச்சி பெறுவார்கள். பெண்வழி சொத்துகள் பேச்சுவார்த்தைமூலம் கிடைக்கும். பிறந்தவீட்டுப் பெருமையால் மகிழ்ச்சி கொள்வார்கள். திருமணம் செய்யவுள்ள வர்களுக்கு நல்ல வரன் வந்துசேரும். வெளியூரில் வேலைவாய்ப்பு தேடிக் காத்திருப்போருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளின் நல்ல செயல்களால் மக்களின் பாராட்டைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24; 9, 18.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21, 30.

வணங்கவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வேங்கடாசலபதி.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

மாணவர்களின் மந்தநிலை மாறும். கூட்டாகச் சேர்ந்து இரவில் படிக்கும் படிப்பு என்றும் நினைவுகளில் நிற்கும். தொழிலதிபர்கள் புதிதாகத் தொழில் துவங்கும் காலம். தொழிலாளர்கள் ஒற்றுமைக் குக் குறைவிருக்காது. வெளிநாட்டு வர்த்த கம் நல்ல லாபத்தைத் தரும். வியாபாரிகள் எதிர்பார்த்தபடி நல்ல லாபத்தைப் பெறுவார் கள். பணிபுரியும் ஊழியர்கள் பக்கபலமாக உழைப்பார்கள். சில வியாபாரிகள் புதிய கிளையும் துவங்குவார்கள். கணவன்- மனைவிக்குள் இருந்துவரும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். அரசு ஊழியர்கள் விழிப்புடனும் நேர்மையுடனும் பணியாற்றும் காலம். புதிய பொறுப்புகளையும் பதவி உயர்வுகளையும் பெறுவார்கள். எல்லாராலும் பாராட்டப்படுவார்கள். காவல்துறையினரின் பணிச்சுமை கூடும் மாதம். பொதுமக்களால் பாராட்டப்படுவார்கள். திருமணம் நினைத்தபடி நிறைவேறும். கலைத்துறை யில் உள்ளவர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். இந்த தேதிகளில் பிறந்து, கடவுளை நம்புபவர்கள் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவார்கள். குபேரன் ஏழைகளைப் பணக்காரர்களாக்கும் மாதம். சிந்திக்காமல் செயல்பட்ட காரியத்திலும் லாபத்தைப் பெறலாம். முன்னோர்கள் சமாதிக்குச் சென்றும், நினைத்தும் வழிபடுபவர்கள் முன்னேறும் மாதம். ஆண் வாரிசு இல்லை என்று ஏங்குவோருக்கு ஆண்வாரிசு கிட்டும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 2, 11, 20.

தவிர்க்கவேண்டிய தேதி: 7, 16.

வணங்கவேண்டிய தெய்வம்: கணபதி, சுப்பிரமணியர்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற கூடுதலான நேரம் படிக்கவேண்டிய மாதம் இது. இதுவரை குடும்பத்தில் குழப்பம்செய்த உறவுகள் விலகிச்செல்லும். சுற்றித்திரிந்த பிள்ளைகள் பெற்றோர்களின் சொல்படி வேலைக்குச் செல்வார்கள். திருமணமாகி குழந்தையில்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். சிவபெருமான் அருளால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். தொழிலதிபர்கள் தொழிலை விரிவு செய்யும் திட்டம் நிறைவேறும். சுபகாரியப் பேச்சுகள் சுமுகமாக முடியும். வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். வியாபாரிகளுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் பெருகும். கால்நடை வளர்ப்போர் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இதுவரை வாட்டி வதைத்த பிணி, பீடைகள் விலகும். எதிரிகளும் நண்பர்களாகி விடுவார்கள். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தபடி மாறுதல் வரும். வழக்குகள் சாதகமாக முடியும். பிரிந்து சென்றவர்கள் வந்துசேர்வார்கள். வரவேண்டிய பாக்கிகள் சிறிய முயற்சியிலேயே வசூலாகிவிடும். திருட்டுப்போன பொருட்கள் கிடைத்துவிடும். அரசியலிலில் உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் தலைமையால் மாற்றப்பட்டு, புதிதாகப் பதவி வந்துசேரும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். வீடு வாங்கும் எண்ணம் ஈடேறும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31.

வணங்கவேண்டிய தெய்வம்: வேங்கடாசலபதி, திருச்செந்தூர் முருகன்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். பெற்றோர்களுக்கு அடங்கி நடப்பார்கள். இந்த தேதிகளில் பிறந்த பெண் களில் சிலர் மகாலட்சுமியின் அருளைப் பெறுவார்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபடும் பெண்கள் பேரும் புகழும் அடைவார்கள். கலைத்துறையில் வாய்ப்பு தேடும் பெண்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். காலம் கடந்துவந்த திருமணம் தடையின்றி நடக்கும். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபம் பெறுவார்கள். வெளிநாட்டில் கிளை துவங்கும் திட்டம் நிறைவேறும். நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். வியாபாரிகள் போட்டி வியாபாரம் செய்யாமல், எப்போதும்போல் செய்தால் நல்ல லாபம் பெறலாம். அரசு ஊழியர்கள் உடன்பணிபுரியும் பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். காவல் துறையில் உள்ளவர்கள் கடுமையாக உழைக்க வேண்டிவரும். சிலர் வேலைப்பளு காரணமாக விருப்ப ஓய்வு பெறுவார்கள். வழக்குகள் சாதகமாகும். சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வந்து பாகங்கள் சுமுகமாகக் கிடைக்கும். கடன் தொல்லைகள் குறையும். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். பிள்ளைகளால் நல்ல பலன்களைப் பெறுவார்கள். இளைஞர்களுக்கு எதிர்பார்த்த படி வேலைவாய்ப்பு கிட்டும். அரசியல் வாதிகள் எச்சரிக்கையாகப் பயணம் செய்ய வேண்டும். புதிய பதவி வரும் மாதம்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 2, 11, 20, 29.

வணங்கவேண்டிய தெய்வம்: திருச்செந் தூர் முருகன்.