1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் முழுவதும் நீங்கள் முன்யோசனையுடன் செயல்பட வேண்டும். ஒரு காரியத்தை இருமுறை யோசித்துச் செய்தால் சிரமத்திலிருந்து மீள லாம். தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்கு வதோடு, புதிய ஒப்பந்தத் தையும் பெறுவார்கள். வியாபாரிகளின் லாபத்துக்குக் குறைவு வராது. ஒருசிலர் வீடுமாற்றம் செய்வார்கள். கணவன்- மனைவி ஒற்று மைக்குக் குறைவிருக் காது. உறவினர்கள் வருகையால் எதிர் பாராத செலவுகள் இருக்கும். அரசு ஊழியர் கள் கேட்ட மாறுதலை அடையலாம். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார் கள். மாதக்கடைசியில் உடல்நிலையில் பின்னடைவு வர வாய்ப்புள்ளது. உணவுப்பழக்கத்தில் எச்சரிக்கையாக இருந்தால் பின்னடைவைத் தவிர்க்கலாம். பிள்ளைகளின் படிப்பிலிருக்கும் மந்தநிலை மாறும். நீண்டநாட்களாக வரன் தேடியவர்களுக்கு நல்ல வரன் கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று, கல்வி நிறுவனத்தாரின் பாராட்டைப் பெறுவார்கள். இளைஞர்கள் வேலை தேடும் முயற்சியில் முன்னேற்றம் உண்டு. வயதான பெற்றோர் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவைப்படும். திடீர் வரவுகளால் குடும்பத்தேவைகளை சமாளிப்பீர்கள். பெண்கள் தங்கள் சகோதரர்களிடம் கேட்ட உதவி கிடைக்காமல் மனவருத்தம் வர வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.
தவிர்க்கவேண்டிய தேதி: 3; 4, 13, 22, 31; 8, 17, 26.
வணங்கவேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இதுவரை உங்களை வாட்டி வதைத்துவரும் பிணி, பீடைகள் விட்டுவிலகும். நீண்டநாள் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்றுகூடுவார்கள். குடும்பத்தில் இதுவரை தடைப்பட்டு வந்த சுபகாரியம் தடையின்றி நடக்கும். இந்த மாதம் முழுவதும் உறவினர் வருகை, சுபகாரியப் பேச்சுகள் என்று வீட்டில் கலகலப்பு நிலவும். தொழிலாளர்கள் ஒற்றுமையால் தொழிலதிபர்கள் இரண்டு பங்கு லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு கடன் பாக்கிகள் வசூலாகும்; வியாபாரமும் நல்ல முறையில் நடக்கும். எதிர்ப்புகள் விலகும். உடன்பிறந்த சகோதரர்கள் உங்கள் பேச்சை மீறி நடப்பார்கள். சொத்துப்பிரச்சினை வரலாம். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் செலுத்துவார்கள். சிலர் நீண்டநாள் நண்பரைப் பிரிய நேரலாம். அரசு ஊழியர்கள் அதிகாரிகளின் அரவணைப்பையும் பாராட் டையும் பெறுவார்கள். உடன்பணிபுரியும் பெண் ஊழியர்களால் பிரச்சினை வரலாம்; எச்சரிக்கை தேவை. சிலருக்கு உடன்பணி புரியும் பெண் ஊழியரைத் திருமணம் செய்ய வேண்டிய கட்டாயம் வரும். பணப்புழக்கம் கூடும். அரசியல் வாதிகள் பொது மக்களால் பாராட
1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் முழுவதும் நீங்கள் முன்யோசனையுடன் செயல்பட வேண்டும். ஒரு காரியத்தை இருமுறை யோசித்துச் செய்தால் சிரமத்திலிருந்து மீள லாம். தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்கு வதோடு, புதிய ஒப்பந்தத் தையும் பெறுவார்கள். வியாபாரிகளின் லாபத்துக்குக் குறைவு வராது. ஒருசிலர் வீடுமாற்றம் செய்வார்கள். கணவன்- மனைவி ஒற்று மைக்குக் குறைவிருக் காது. உறவினர்கள் வருகையால் எதிர் பாராத செலவுகள் இருக்கும். அரசு ஊழியர் கள் கேட்ட மாறுதலை அடையலாம். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார் கள். மாதக்கடைசியில் உடல்நிலையில் பின்னடைவு வர வாய்ப்புள்ளது. உணவுப்பழக்கத்தில் எச்சரிக்கையாக இருந்தால் பின்னடைவைத் தவிர்க்கலாம். பிள்ளைகளின் படிப்பிலிருக்கும் மந்தநிலை மாறும். நீண்டநாட்களாக வரன் தேடியவர்களுக்கு நல்ல வரன் கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று, கல்வி நிறுவனத்தாரின் பாராட்டைப் பெறுவார்கள். இளைஞர்கள் வேலை தேடும் முயற்சியில் முன்னேற்றம் உண்டு. வயதான பெற்றோர் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவைப்படும். திடீர் வரவுகளால் குடும்பத்தேவைகளை சமாளிப்பீர்கள். பெண்கள் தங்கள் சகோதரர்களிடம் கேட்ட உதவி கிடைக்காமல் மனவருத்தம் வர வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.
தவிர்க்கவேண்டிய தேதி: 3; 4, 13, 22, 31; 8, 17, 26.
வணங்கவேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இதுவரை உங்களை வாட்டி வதைத்துவரும் பிணி, பீடைகள் விட்டுவிலகும். நீண்டநாள் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்றுகூடுவார்கள். குடும்பத்தில் இதுவரை தடைப்பட்டு வந்த சுபகாரியம் தடையின்றி நடக்கும். இந்த மாதம் முழுவதும் உறவினர் வருகை, சுபகாரியப் பேச்சுகள் என்று வீட்டில் கலகலப்பு நிலவும். தொழிலாளர்கள் ஒற்றுமையால் தொழிலதிபர்கள் இரண்டு பங்கு லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு கடன் பாக்கிகள் வசூலாகும்; வியாபாரமும் நல்ல முறையில் நடக்கும். எதிர்ப்புகள் விலகும். உடன்பிறந்த சகோதரர்கள் உங்கள் பேச்சை மீறி நடப்பார்கள். சொத்துப்பிரச்சினை வரலாம். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் செலுத்துவார்கள். சிலர் நீண்டநாள் நண்பரைப் பிரிய நேரலாம். அரசு ஊழியர்கள் அதிகாரிகளின் அரவணைப்பையும் பாராட் டையும் பெறுவார்கள். உடன்பணிபுரியும் பெண் ஊழியர்களால் பிரச்சினை வரலாம்; எச்சரிக்கை தேவை. சிலருக்கு உடன்பணி புரியும் பெண் ஊழியரைத் திருமணம் செய்ய வேண்டிய கட்டாயம் வரும். பணப்புழக்கம் கூடும். அரசியல் வாதிகள் பொது மக்களால் பாராட்டப்படுவார்கள்.
அதிர்ஷ்ட தேதி: 8; 9, 18, 27.
தவிர்க்கவேண்டிய தேதி: 1; 2, 11, 20, 29; 7, 25.
வணங்கவேண்டிய தெய்வம்: அம்மன் தெய்வங்கள்.
3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த தேதியில் பிறந்த ஆண்களைவிட பெண்கள் இந்த மாதம் முழுவதும் நல்ல பலன்களை அடைவார்கள். தங்கள் பெண் களுக்காக வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமையும். மனைவிக்கு கணவரின் பாராட்டுகள் அளவில்லா மகிழ்ச்சியைத் தரும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். பிள்ளைகளின் கல்வியில் இருந்துவரும் மந்தம் மாறும். புதிய வீடுகட்டும் திட்டம் நிறைவேறும். அரசு ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். நிலுவை பாக்கிகள் வந்துசேரும். பணியில் தடை ஏற்பட்டவர்கள் மீண்டும் வேலையில் சேர்வார்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். விலகியிருக்கும் பிள்ளைகள் வந்துசேர்வார்கள். காலங் காலமாய் இருந்துவரும் பங்காளிகள் சண்டை முடிவுக்கு வரும். விவசாயிகள் எதிர்பார்த்தபடி விவசாயத்தைத் தொடங்கி நல்ல மகசூலும் பெறுவார்கள். தொழிலதிபர்கள் தொழிற்சாலை நடவடிக்கைகளை நேரடியாக கவனித்தால் நஷ்டத்தைத் தவிர்க்கலாம். வியாபாரிகள் அதிக கொள்முதலை இந்த மாதம் செய்யாமல் இருப்பது நல்லது. அரசியல்வாதிகள் முக்கிய பிரச்சினை காரணமாக வெளியூர் சென்று வரவேண்டியிருக்கும். மாணவர்கள் கல்வியில் ஊக்கம் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட தேதி: 3, 12, 21, 30; 9, 18, 27.
தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31; 6; 17, 26; 29.
வணங்கவேண்டிய தெய்வம்: அங் காள பரமேஸ்வரி, அம்மன் தெய்வங்கள்.
4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் பெரும் முதலீடுகளைத் தவிர்க்கவேண்டும். வீடு, மனைகளை விருத்தி செய்யும் திட்டங்களைத் தள்ளிவைக்க வேண்டும். இல்லையேல் கடன்பட நேரிடும். அந்த கடனே பெரும் சிரமத்தைக் கொடுக்கும். எனவே நிதிநிலைகளில் அதிக கவனம் தேவை. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புள்ளது. பிள்ளைகளால் நன்மையுண்டு. பிள்ளை களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் தேடிவரும். வரன் தேடுவோருக்கு நல்ல வரன் கிட்டும். நல்ல வரனாகத் தெரிந்தாலும், நெஞ்சில் நஞ்சு வைத்துள்ளவர்கள் சம்பந்திகளாக வர வாய்ப்புள்ளது. எனவே எச்சரிக்கையாக முடிவு செய்யுங்கள். அரசு ஊழியர்களுக்கு பணிச்சுமை கூடும். மேலதிகாரிகளின் தயவுண்டு; பாராட்டும் உண்டு. தொழிலதிபர் களுக்கு வரவும் செலவும் சரிசமமாக இருக்கும். உற்பத்தி பெருகும். வியாபாரிகளுக்கு இருந்துவரும் போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். வியாபாரம் பெருகும். விவசாயிகள் எதிர்பார்க்கும் மகசூல் கிடைக்கும். குடும்பத்தில் ஆரோக்கியம் கூடுதலாகும். உங்களைப் பிரிந்திருக்கும் உறவு கள் வந்துசேர்வார்கள். இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். வெளிநாடு செல்வார்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் மந்தநிலை மாறும்.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.
தவிர்க்கவேண்டிய தேதி: 8, 17, 26.
வணங்கவேண்டிய தெய்வம்: சுப்பிரமணியர், துர்க்கையம்மன்.
5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இதுவரை உங்களை வாட்டி வதைத்துவரும் அனைத்து சங்கடங் களும் விலகி, இம்மாதம் முழுவதும் நல்லபலன்களை அடைவீர்கள். தொந்தரவு கொடுத்த எதிரிகள் விலகிச்செல்வார்கள். வாகனம் வாங்கும் திட்டம் நிறைவேறும். கணவன்- மனைவி ஒற்றுமையில் பிணக்குகள் வராது. சிலருக்கு புதிய வீடுகட்டும் திட்டம் நிறைவேறும். தடைப்பட்ட ஆலயத் திருப்பணிகள் தடையின்றி முடியும். வழக்குகள் சாதகமாகும். தொல்லை கொடுத்து வரும் பிள்ளைகள் நல்லவர்களாக மாறுவார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். அரசு ஊழியர்கள் உற்சாகமாகப் பணிபுரிவார்கள். தொழிலதிபர்கள் லாபத்தைப் பெறுவார்கள். புதிய ஆர்டர்கள் வந்துசேரும். அதற்காக சிலர் வெளிநாடு சென்று வருவார்கள். தொழிலாளர்கள் ஒத்துழைப்பு கூடும். வியாபாரிகள் எதிர்பார்த்தபடி விற்பனை பெருகி லாபமும் கிடைக்கும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். காளான் பயிர் செய்வோர், வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். மாணவர்கள் உற்சாகமாகப் படிப்பார்கள்.
அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9.
தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21.
வணங்கவேண்டிய தெய்வம்: விஷ்ணு, துர்க்கை, மகாலட்சுமி.
6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
புதிதாகத் திருமணமான தம்பதிகள் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். அவர்களுக்குள் இருந்துவரும் கருத்து வேறுபாடுகள் மாறும். மனதில் உற்சாகம் பெருகும். உதவி செய்யாத சகோதரர்கள் முன்வந்து உதவி செய்வார்கள். அதனால் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலக் கனவுகள், வேலைவாய்ப்பு, திருமணம் இனிதே நிறைவேறும். இதுவரை வாட்டிவதைத்த பிணி, பீடை நீங்கி உற்சாகமாக செயல்படுவீர்கள். தொழிலதிபர்களுக்கு புதிய தொழிற்சாலை நிறுவும் திட்டம் நிறைவேறும். உங்களை எதிர்த்துத் தொழில் செய்தவர்கள் உங்களைக் கண்டு மிரண்டு விலகுவார்கள். வெளிநாட்டில் தொழில் துவங்க இருந்த தடைகள் விலகும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். வீட்டிலுள்ள முதியோர்களால் வைத்தியச்செலவுகள் வரலாம். பிள்ளைகளின் உயர்கல்வி எண்ணம் ஈடேறும். அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வும், இட மாறுதலும் கிட்டும். வழக்குகள் சாதகமாக முடியும். வியாபாரிகள் இரட்டிப்பு லாபத்தைப் பெறுவார்கள். சிறுவியாபாரிகளும் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பெண்கள் விரும்பும் ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள். அடகுபோன நகைகளை மீட்பார்கள். விவசாயிகள், ரியல் எஸ்டேட் செய்வோர் நல்ல லாபம் பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் திறமையோடு இருப்பார்கள். அரசியல்வாதிகளின் மதிப்பு கூடும்.
அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24; 9, 18.
தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21, 30.
வணங்கவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வேங்கடாசலபதி.
7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் முழுவதும் உங்கள் உழைப்புக்கேற்ற லாபத்தைப் பெறுவீர் கள். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் நல்லமுறையில் முடியும். படித்த பிள்ளைகளுக்கு தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்கும். உடல்நிலையில் இருந்துவரும் தொந்தரவுகள் நீங்கும். புதிய வீடுகட்டும் திட்டம் நிறைவேறும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுகூடுவார் கள். நீண்டநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். தள்ளிப்போட்ட ஆலயத் திருப்பணிகள் தடையின்றி நடக்கும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி லாபம் பெருகும். வியாபாரிகளும் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். எதிர்பார்த்த வங்கிக் கடன் வந்துசேரும். சகோதரர்கள் சண்டை நீங்கி ஒன்றுகூடுவார்கள். அரசு ஊழியர்கள் இதுவரை பணிச்சுமையில் அவதிப்பட்டது மாறும். கேட்டபடி மாறுதல் கிடைக் கும். சிலர் விருப்ப ஓய்வில் செல்வார்கள். திட்டமிட்டபடி எதிர்காலத்தை அமைத்துக் கொள்வார்கள். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். உங்களுக்கு தொந்தரவு கொடுத்துவந்த நண்பர்களை அடையாளம் கண்டு விலகுவீர்கள். காவல்துறை நடவடிக்கைகளில் சாதகமான பலன் கிட்டும். அரசியல்வாதிகள் எதிர்பார்க் கும் பதவி வந்துசேரும். விவசாயிகள் லாபம் பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் நல்ல மதிப்பெண் பெற்று, பெற்றோர்களின் பாராட்டைப் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 2, 11, 20.
தவிர்க்கவேண்டிய தேதி: 7, 16,
வணங்கவேண்டிய தெய்வம்: கணபதி, சுப்பிரமணியர்.
8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த எண்ணில் பிறந்த உங்களை மற்றவர்கள் ஒதுக்கிப் பார்த்தாலும் இறைவன் ஒதுக்கி வைப்பதில்லை. வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். போட்டி வியாபாரிகள் ஒதுங்கிப்போவார்கள். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். இதுவரை உங்களுக்கு எதிராக செயல் பட்டுவரும் பிள்ளைகளின் மனநிலை மாறும். அவர்கள் நல்ல வேலைவாய்ப்பை அடைவார்கள். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் முடிவுக்கு வரும். தொழிலதிபர்கள் புதிய தொழில் ஒப்பந்தம் போடும்முன் சகநண்பர்களைக் கலந்து செய்யும் முடிவு லாபத்தைத் தரும். எதிர்பார்த்தபடி வெளிநாடு செல்வீர்கள். கணவன்- மனைவி ஒற்றுமை உண்டு. பெண்களால் குடும்பத்தில் நன்மையுண்டு. கால்நடை வளர்ப்போர் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வழக்குகள் சாதகமாக அமையும். மகப்பேறு இல்லையே என்று ஏங்குவோர் முன்னோர்கள் அருளால் குழந்தை பாக்கியம் பெறுவார்கள். சேமிப்பு உயரும். இளைஞர்களுக்கு நல்ல வேலை அமையும். சில பெண்களுக்கு கணவரால் இருந்துவரும் தொந்தரவுகள் மாறும். அரசு ஊழியர்கள் விரும்பியவண்ணம் மாறுதல் வரும். உங்களை ஆட்டிப்படைத்து வரும் அதிகாரிகள் சிலர் லஞ்ச வழக்குக்கு ஆட்படுவார்கள். அதிகாரிகளாக உள்ளவர் கள் இந்த மாதம் முழுவதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மாணவர்களின் தொழிற் கல்வி உயரும். கல்விக்கடனும் தடையில்லாமல் கிடைக்கும். சிலர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வர். சங்கடங்கள் குறையும் மாதம்.
அதிர்ஷ்டதேதி: 1, 10, 19; 9, 18, 27.
தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31.
வணங்கவேண்டிய தெய்வம்: வேங்கடாசலபதி, திருச்செந்தூர் முருகன்.
9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் இளைஞர்கள் மிகவும் எச்சரிக்கையாக வாகனங்களைக் கையாள வேண்டும். வேகத்தை விவேகத்துடன் செயல்படுத்தினால் விபத்தைத் தடுக்கலாம். பிள்ளைகளுக்காக தேடும் வரன் நல்லபடியாக அமையும். தொழிலாளர் கள் ஒற்றுமையால் தொழிலதிபர்களுக்கு லாபம் கூடும். உற்பத்தி பெருகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வியாபாரிகளுக்கும் நல்ல லாபம் கிடைக்கும். கணவன்- மனைவி ஒற்றுமையில் குறைவு வராது. உறவினர் கள் வருகையினால் செலவுகள் கூடும். அரசு ஊழியர்களுக்குப் பணிச்சுமை கூடியபோதும் அதிகாரிகள் பாராட்டு தெம்பைக் கொடுக்கும். நல்ல தகவல்கள் தபாலில் வந்துசேரும். அரசியல்வாதிகள் தலைமையால் பாராட்டப்பட்டு புதிய பதவிகளை அடைவார்கள். உயரதிகாரி களாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், புதிய கௌரவப் பதவிகளை அடைவார்கள். காலங்காலமாய் வதைத்துவரும் கடன் தொல்லைகள் நீங்கும். சொத்துப் பிரச்சினையும் தீரும். பிரிந்துசென்ற பிள்ளைகள் வந்துசேர்வார்கள். கலைத்துறையைச் சேர்ந்த வர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். வருமானம் கூடும். மாணவர்கள் கல்வியில் உயர்ந்து பெற்றோரின் பாராட்டைப் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9, 18, 27.
தவிர்க்கவேண்டிய தேதி: 2, 11, 20, 29.
வணங்கவேண்டிய தெய்வம்: திருச்செந்தூர் முருகன்.
செல்: 94871 68174