ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் எல்லாவற்றிலும் வெற்றிபெற வேண்டுமானால் பொறுமையான பேச்சு, நிதானமான செயல்களைக் கைக்கொள்ளவேண்டும். தொழிலதிபர்கள், தொழிற்சாலைகளில் உற்பத்தி பெருகி நல்ல லாபத்தைப் பெறுவார்கள். தொழிலாளர்களை அனுசரித்துச்செல்லும் தொழிலதிபர்கள் ஏற்றம் பெறுவார்கள். வியாபாரிகள் கொள்முதல் சம்பந்தமாக வெளியூர்ப் பயணம் செல்வர்; நல்ல லாபத்தையும் பெறுவர். அரசு ஊழியர்கள் உற்சாகத்துடன் தங்கள் கடமையைச் செய்வார்கள். மேலதிகாரிகளின் பாராட்டையும் பெறுவார்கள். இந்த மாதம் வரவு- செலவுகளில் பற்றாக்குறை வராது. ஆனால் மிச்சம் ஏற்படாது. கணவன்- மனைவி ஒற்றுமைக்குக் குறைவில்லை. பிள்ளைகளின் தேவைகளையும் படிப்புச் செலவுகளையும் சரிக்கட்ட, திட்டமிட்டு பொருளாதாரத்தைப் பெருக்கிக்கொள்வீர்கள். மாணவர்கள் சுற்றுலா செல்வதில் ஆர்வம் காட்டுவார்கள். உயர்படிப்புக்காக எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகாண்பார்கள். நண்பர்கள் சொல்வதை நம்பி செயல்படக்கூடாது. அவர் களோடு வாக்குவாதமும் செய்யக்கூடாது. அனைத்து செயல்களிலும் பொறுமையைக் கடைப்பிடித்து வெற்றிகாணும் மாதம். தூரதேசத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். எதிரிகள் தொல்லை விலகும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

Advertisment

தவிர்க்கவேண்டிய தேதி: 3; 4, 13, 22, 31; 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

Advertisment

இந்த தேதிகளில் பிறந்த நீங்கள் உடல்நிலையில் கவனம் கொள்ளவேண்டும். அரசு ஊழியர்கள் பழைய நிலுவைகளைப் பெறுவார்கள். வருமானத்திற்குக் குறைவில்லை. அதே சமயம் பிள்ளைகள்வழியில் கல்விச் செலவுகள் கூடும். குடும்பத்திற்குத் தேவையானவற்றைப் பூர்த்திசெய்வீர்கள். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமுகமாகத் தீரும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வந்துசேரும். உடன்பிறந்தவர்கள் தக்கசமயத்தில் தேடிவந்து உதவிசெய்வார்கள். அரசியல் பிரமுகர்கள் நினைத்தபடி வெற்றிபெறுவார்கள். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெற்று கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். ஊழியர்களின் ஒற்றுமையால் உற்பத்தி கூடும். வியாபாரிகள் அதிக லாபம் பெறுவார்கள். தொல்லை கொடுத்து வந்த வியாபாரிகள் விலகிச்செல்வார்கள். அரசு ஊழியர் கள் நினைத்த இடத்திற்கு மாறுதலைப் பெறுவார்கள். மாணவர்களுக்கு நண்பர்கள் வட்டம் விரிவடையும். வேலைதேடும் இளைஞர்கள் வேலை வாய்ப்பைப் பெறுவார்கள். கலைத்தொழில் செய்வோர் ஏற்றம் பெறும் மாதம்.

அதிர்ஷ்ட தேதி: 8; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 1; 2, 11, 20, 29; 7, 25.

வணங்கவேண்டிய தெய்வம்:

அம்மன் தெய்வங்கள்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இம்மாதம் உங்களுக்கு வருமானத்திற்குப் பஞ்சமில்லை. பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். நீண்டநாட்களாக எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியாகவும் சிறப்பாகவும் நடந்தேறும். உடல்நிலையில் சற்று கவனம் செலுத்தவேண்டும். மருத்துவச் செலவுகள் கூடும். குழந்தை பாக்கியமில்லாத சில தம்பதிகள் குழந்தை பாக்கியத்தைப் பெறுவார்கள். தடைப்பட்ட சுபகாரியப்பேச்சுகள் கைகூடும். நல்ல வரன்கள் அமைவர். தாய்- தந்தை வழியில் மருத்துவச்செலவுகள் ஏற்படக்கூடும். வேலைதேடும் இளைஞர் களுக்குத் தகுந்த அரசுப்பதவிகள் வரும். ஒருசிலருக்கு அரசு வேலைக்கான உத்தரவும் வந்துசேரும். வியாபாரிகள் புதிதாக வணிக வளாகம் தேர்வுசெய்வார்கள். வியாபார விருத்தியை யும் அடைவார்கள். தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். அரசியல் பிரமுகர்கள் பல விதத்திலும் சந்தோஷமான வெற்றிச் செய்திகளைக் கேட்பார்கள். திட்டமிட்டபடி காரியங்கள் கைகூடும். எதிரி கள்கூட உங்கள் நட்புறவைத் தேடிவந்து பெருமை சேர்ப்பார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 3, 12, 21, 30; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31; 6; 17, 26; 29.

வணங்கவேண்டிய தெய்வம்: அங்காள பரமேஸ்வரி மற்றும் அம்மன் தெய்வங்கள்.

numberasi

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் குடும்பத்தில் குதூகலம் நிறைந்து விளங்கும் மாதம். கைவிட்டுப்போன பாக்கிகள், பொருள்கள் வந்துசேரும். இதுவரை இழுபறியாக இருந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். சகோதரரிடையே இருந்துவந்த ஒற்றுமையில்லாத நிலை சீராகும். உடன்பிறந்த இளைய சகோதரர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். அரசு ஊழியர்கள் திட்டமிட்டபடி மாறுதலைக் காண்பார்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நீடிக்கும். மாணவர்கள் உயர்படிப்புக்காக எடுக்கும் முயற்சிகளில் வெற்றிபெறுவார்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். தொழிலதிபர்கள் புதிய பங்குகளை வாங்கிச் சேர்ப்பார்கள்; லாபத்தையும் பெறுவார்கள். வியாபாரிகள் செய்த கொள்முதல் அத்தனையும் விற்பனையாகும். கல்வி நிறுவனம் நடத்துபவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமையும். தாய்- தந்தையருக்கு மருத்துவச்செலவு செய்யவேண்டி வரலாம். பெண்கள் விரும்பியபடி ஆன்மிகச் சுற்றுலா சென்றுவருவார்கள். எப்போதும் இருந்துவந்த பணத்தொல்லை நீங்கும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: சுப்பிரமணியர், துர்க்கையம்மன்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் குடும்பச்செலவுகள் கூடும். அதற்கேற்ற வரவுகளும் வந்து சேரும். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்களைப் போடுவார்கள். புதிய தொழில் நிறுவனம் கட்ட முற்படுவார்கள். தொழிலாளர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். இதுவரை உங்களை வாட்டி வதைத்து வந்த மருத்துவச் செலவுகள் நீங்கும். பூர்வீகச் சொத்துகளில் இருந்துவந்த வில்லங்கங்கள் நீங்கும். பழைய நண்பர்களை எதிர்பாராதவிதமாக சந்தித்து மகிழ்வீர்கள். இதுவரை பிள்ளைகளுக்குத் திருமண விஷயத்தில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் நீங்கும். நல்ல வரன்கள் அமைவர். சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். மாணவர்கள் உயர்படிப்புக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். இதுவரை குழந்தை பாக்கியமில்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். அரசு ஊழியர்கள் மேலதிகாரிகளின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெறுவார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் திட்டம் நிறைவேறும். எதிர்பார்த்த பணவரவுகள் வந்துசேரும். வியாபாரிகள் விற்பனையில் புதிய அணுகுமுறையைக் கையாள்வார்கள். அரசியல்வாதிகள் நினைத்தபடி வெற்றி காண்பார்கள். தூர தேசத்திலிருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். மகான்களின் தரிசனம் கிட்டும்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21.

வணங்கவேண்டிய தெய்வம்: துர்க்கை, மகாலட்சுமி, விஷ்ணு.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் வரவு- செலவுகளில் கவனத்துடன் செயல்பட்டால் கடன் தொல்லைகள் வராமல் தவிர்க்கலாம். இதுவரை உங்களைப் பிரிந்து வெளிநாட்டில் வாழ்ந்துவந்த மகன் வந்து சேர்வார். வியாபாரிகள் போட்டி வியாபாரிகளை சமாளிக்கவேண்டி வரும். அவர்களின் சதித்திட்டத்தில் அகப்பட்டுக்கொள்ளாமல் தப்பிக்கவேண்டும். தொழிலதிபர்கள் மிகுந்த கவனத்துடன் தொழிலாளர் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். தொழிலாளி- முதலாளி பேதம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். புதிய வாகனம் வாங்கும் திட்டம் நிறைவேறும். திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன்கள் வந்துசேரும். வேலைதேடும் இளைஞர்கள் தகுதிக்கேற்ப நல்ல வேலையைப் பெறுவார்கள். ஒருசிலருக்கு கண் சம்பந்தமான நோய் வந்து நீங்கும். பிள்ளைகள்வழியில் கூடுதல் செலவுகள் வரலாம். அரசு ஊழியர்கள் திட்டமிட்டபடி மாறுதலை அடையலாம். கடிதத்தொடர்புகள் நல்ல செய்திகளைக் கொண்டுவரும்.

அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24; 9, 18.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21, 30.

வணங்கவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வேங்கடாசலபதி.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்த வர்களுக்கு:

இது பெண்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய மாதம். இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் பெயரில் புதிய சொத்துகள் வாங்கமுடியும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்ணைப் பெறுவார் கள். உயர்படிப்பிற்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள். ஒருசிலருக்கு இதுவரை கிடைக்காமலிருந்த குலதெய்வ அருள் கிட்டும். மாமன், மைத்துனர் வழிகளில் இருந்துவந்த சிக்கல்கள் தீரும். "வீட்டிற்கு அடங்காத பிள்ளைகளைப் பெற்றோமே' என்று வருத்தம் கொண்டுள்ள பெற்றோர் களின் கவலை தீரும். பிள்ளைகள் தாய்- தந்தையர் சொல்கேட்டு நடப்பார்கள். காவல்துறை நடவடிக்கைகள் சாதகமாக அமையும்.

வியாபாரிகள் மத்தியில் போட்டி அதிகம் இருந்தாலும், லாபத்தில் குறைவு வராது. தொழிலதிபர்கள் வெளிமாநிலம், வெளிநாட்டில் புதிய ஒப்பந்தங்களைப் பெற்று நல்ல லாபத்தையும் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவார்கள். பணிச்சுமை குறையும். இந்த மாதம் தெய்வபக்தியும் கூடி, அதிர்ஷ்டத்தையும் பெறுவார்கள். எதிர்பார்த்த வேலை உத்தரவுகளை கடிதத்தொடர்பில் பெறலாம். வெளிநாட்டுத் தொடர்புகள் வந்துசேரும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் நடக்கும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 2, 11, 20.

தவிர்க்கவேண்டிய தேதி: 7, 16.

வணங்கவேண்டிய தெய்வம்: கணபதி, சுப்பிரமணியர்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த தேதிகளில் பிறந்த நீங்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் செயல் படுவீர்கள். வரவேண்டிய பாக்கிகள் வந்துசேரும். உங்களைப் பிரிந்துசென்ற தொழில் கூட்டாளிகள் வருந்தி, திருந்தி வந்துசேர்வார்கள். இதுவரை உங்கள் தொழிலுக்கு எதிராக செயல்பட்டு வந்தவர்கள் இருக்குமிடம் தெரியாமல் விலகிச்செல்வார்கள். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். பிள்ளைகள் வழியில் தடைப்பட்டு வந்த திருமணம் இனிதே நடக்கும். நல்ல வரனாக அமையும். வரவு- செலவில் நிதானமாகச் செயல்படவேண்டும். மாணவர்களின் உயர்படிப்புக்கான செலவுகள் கூடும். அரசு ஊழியர்களின் கனவு நனவாகும். கேட்ட இடத்திற்கு மாறுதல் கிட்டும். ஒருசிலருக்குத் தடைப்பட்ட வேலை மீண்டும் வந்துசேரும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவார்கள். தொல்லை கொடுத்துவந்த வியாபாரிகள் விலகிச்செல்வார்கள். மருத்துவச் செலவுகள் குறையும். அரசியல் பிரமுகர்கள் வெற்றி பெற்று, தலைமையின் பாராட்டைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31.

வணங்கவேண்டிய தெய்வம்: வேங்கடாசலபதி, திருச்செந்தூர் முருகன்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் நீங்கள் முக்கியமான நபர்களை சந்திப்பீர்கள். அதன்மூலம் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் புதிய பங்குகளை வாங்குவார்கள். வெளிநாட்டுத் தொடர்புகள்மூலம் புதிய ஒப்பந்தங்களைப் பெற்று நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு இதுவரை வசூலாகாத பழைய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். வியாபாரமும் பெருகி லாபத்தைப் பெறுவார் கள். இதுவரை பிரிந்து வாழ்ந்த உறவினர்கள் வந்துசேர்வார்கள். மனதில் குதூகலமும் மகிழ்ச்சியும் உண்டாகும். அரசு ஊழியர்கள் நினைத்த இடத்துக்கு எதிர்பார்த்தபடி மாறுத லைப் பெறுவார்கள். வரவேண்டிய பழைய நிலுவைகள் தாமதமின்றி வந்துசேரும். அதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். திருமணம் தடைப்பட்டுவந்த பிள்ளைகளுக்கு நல்ல வரன்கள் வந்துசேரும். வயதான பெற்றோர்கள்வழியில் மருத்துவச்செலவுகள் ஏற்படலாம். பெண்கள் ஆன்மிகச் சுற்றுலா சென்று வருவார்கள். தொல்லை கொடுத்து வந்த எதிரிகள் விலகிச்செல்வார்கள். பெண்களால் அதிக நன்மைகளை அடையலாம். அரசியல் பிரமுகர்கள் எதிர்பார்த்த பலனை அடைவார்கள். தெய்வபக்தியால் அனைத்து நன்மைகளையும் அடைவீர்கள்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 2, 11, 20, 29.

வணங்கவேண்டிய தெய்வம்: திருச்செந் தூர் முருகன்

செல்: 94871 68174