Advertisment

மார்கழி மாத எண்ணியல் பலன்கள்! - ஆர். மகாலட்சுமி

/idhalgal/om/numerical-results-month-march-r-mahalakshmi

17-12-2023 முதல் 16-1-2024 வரை

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சூரியனின் எண் நாயகனாக கொண்டவர் கள் நீங்கள். எனவே எப்போதும் எதிலும், முதன்மைத் தன்மையை விரும்புவீர்கள். இந்த மாதம் உங்களுக்கும், பெற்றொருக்கும் இடையே, இணக்கத்தன்மை அதிகம் உண்டாகும். நீங்கள் வெளிநாட்டில் இருப்பின், உங்கள் பெற்றோரைக் காண, தாய்நாடு அல்லது சொந்த ஊர் வருவீர்கள். பெற்றோருடன் குலத்தெய்வ தரிசனம் காண செல்வீர்கள். பூர்வீக சொத்து விஷயமாக முடிவு எடுக்கும் சூழ்நிலை உருவாகும். இந்த சொத்து பிரிவினை அல்லது விற்கும் நிலை வரும்போது, வார்த்தைகள் காயம் தந்து வலியும் கொடுக்கும். இது பணம் அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். இதில் உங்கள் இளைய சகோதரியின் பங்களிப்பு அதிகமிருக்கும். உங்கள் பெற்றோருக்கு உதவியாக, இளவயது வேலை செய்யும் பெண்ணை பணியமர்த்துவீர்கள். வீடு வாங்க நிலம் பற்றி விசாரிப்பீர்கள். இந்த எண்ணில் பிறந்தவர்கள். தந்தையாரும், தாயாரும் பாக்கியம் பெறுவர். அல்லது தாத்தா பாட்டியாகும் பெருமை கிடைக்கும். தம்பதிகளுக்குள் சிறு, சிறு சண்டை வருவது சகஜம். உங்களில் சிலர், லஞ்சப்பணம் கொடுக்கவும் கூடும். அல்லது கையூட்டுகள் தாராளமாக வரவும் செய்யும். அவை வீடு, மனை, வாகனம் சம்பந்த விஷயங்களுக்காக இருக்கும். இப்போது கிடைக்கும் வேலை, ஆரோக்கியம் அல்லது வீடு, வாகன சம்பந்தமாக, நிறைய மனிதர்களை தொடர்புகொள்ளும் வகையில் அமையும். இப்போது வரும் பண அதிர்ஷ்டம் சற்று கள்ளத் தனம் கலந்ததாக இருக்கும். படிக்கும் மாணவர்கள், படிக்கும்போதே வேலை செய்யும் அல்லது தொழில் தொடங்கும் வாய்ப்பு தேடிவரும்.

Advertisment

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: இந்த மாதம் பேசும்போது கவனமாக பேசவும். காதல் விஷயங்களில் கவனம் தேவை. துர்க்கையை, அரளி மலர் சரம்கொண்டு வணங்கவும். பிறமத மனிதர்களுக்கு அவசர பணத் தேவையறிந்து உதவுங்கள்.

Advertisment

dd

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சந்திரன் எண்ணின் நாயகனாகக் கொண்டவர்கள். எனவே தாயைப் போல் நிறையன்பு கொண்டவர்கள். இந்த குணமே, உங்களை, எல்லாரும் நேசிக்கத்தக்க மரியாதையான மனிதர் ஆக்கிவிடும். இந்த மாதம், உங்களில் சிலர், இதுவரையில் மாதச் சம்பளத்திற்கு உழைத்துக்கொண்டிருந்த வேலையை சொந்தத் தொழிலாக மாற்றிக்கொள்வீர்கள். அதற்கான சூழ்நிலை கனிந்து வரும். வேறு சிலர், உங்கள் சொந்தத் தொழிலில், உங்கள் வாரிசுகளை பங்கேற்கச் செய்வீர்கள். திருமண பேச்சு, சற்று மனத்தாங்கலோடு நடக்கும். சிலர் வியாபார விஷயமாக கடன் வாங்க நேரிடும். உங்களின் வாரிசுகள் சிலர் அரசு உத்தியோகத்தில் அமரவர். உங்களில் சிலருக்கு, வயிறு சம்பந்த பிரச்சினைக்கு, மருந்து எடுத்துக்கொள்வீர்கள். வேறு சிலர், வாரிசு அடிப்படையில் அரசு பணி பெறக்கூடும். பணியாளர்கள் மாறுவர். உங்கள் இளைய சகோதரன் வீடு மாறுவார். உங்கள் மாமியார், பணியில் இருப்பின் அவர் இடமாற்றம

17-12-2023 முதல் 16-1-2024 வரை

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சூரியனின் எண் நாயகனாக கொண்டவர் கள் நீங்கள். எனவே எப்போதும் எதிலும், முதன்மைத் தன்மையை விரும்புவீர்கள். இந்த மாதம் உங்களுக்கும், பெற்றொருக்கும் இடையே, இணக்கத்தன்மை அதிகம் உண்டாகும். நீங்கள் வெளிநாட்டில் இருப்பின், உங்கள் பெற்றோரைக் காண, தாய்நாடு அல்லது சொந்த ஊர் வருவீர்கள். பெற்றோருடன் குலத்தெய்வ தரிசனம் காண செல்வீர்கள். பூர்வீக சொத்து விஷயமாக முடிவு எடுக்கும் சூழ்நிலை உருவாகும். இந்த சொத்து பிரிவினை அல்லது விற்கும் நிலை வரும்போது, வார்த்தைகள் காயம் தந்து வலியும் கொடுக்கும். இது பணம் அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். இதில் உங்கள் இளைய சகோதரியின் பங்களிப்பு அதிகமிருக்கும். உங்கள் பெற்றோருக்கு உதவியாக, இளவயது வேலை செய்யும் பெண்ணை பணியமர்த்துவீர்கள். வீடு வாங்க நிலம் பற்றி விசாரிப்பீர்கள். இந்த எண்ணில் பிறந்தவர்கள். தந்தையாரும், தாயாரும் பாக்கியம் பெறுவர். அல்லது தாத்தா பாட்டியாகும் பெருமை கிடைக்கும். தம்பதிகளுக்குள் சிறு, சிறு சண்டை வருவது சகஜம். உங்களில் சிலர், லஞ்சப்பணம் கொடுக்கவும் கூடும். அல்லது கையூட்டுகள் தாராளமாக வரவும் செய்யும். அவை வீடு, மனை, வாகனம் சம்பந்த விஷயங்களுக்காக இருக்கும். இப்போது கிடைக்கும் வேலை, ஆரோக்கியம் அல்லது வீடு, வாகன சம்பந்தமாக, நிறைய மனிதர்களை தொடர்புகொள்ளும் வகையில் அமையும். இப்போது வரும் பண அதிர்ஷ்டம் சற்று கள்ளத் தனம் கலந்ததாக இருக்கும். படிக்கும் மாணவர்கள், படிக்கும்போதே வேலை செய்யும் அல்லது தொழில் தொடங்கும் வாய்ப்பு தேடிவரும்.

Advertisment

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: இந்த மாதம் பேசும்போது கவனமாக பேசவும். காதல் விஷயங்களில் கவனம் தேவை. துர்க்கையை, அரளி மலர் சரம்கொண்டு வணங்கவும். பிறமத மனிதர்களுக்கு அவசர பணத் தேவையறிந்து உதவுங்கள்.

Advertisment

dd

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சந்திரன் எண்ணின் நாயகனாகக் கொண்டவர்கள். எனவே தாயைப் போல் நிறையன்பு கொண்டவர்கள். இந்த குணமே, உங்களை, எல்லாரும் நேசிக்கத்தக்க மரியாதையான மனிதர் ஆக்கிவிடும். இந்த மாதம், உங்களில் சிலர், இதுவரையில் மாதச் சம்பளத்திற்கு உழைத்துக்கொண்டிருந்த வேலையை சொந்தத் தொழிலாக மாற்றிக்கொள்வீர்கள். அதற்கான சூழ்நிலை கனிந்து வரும். வேறு சிலர், உங்கள் சொந்தத் தொழிலில், உங்கள் வாரிசுகளை பங்கேற்கச் செய்வீர்கள். திருமண பேச்சு, சற்று மனத்தாங்கலோடு நடக்கும். சிலர் வியாபார விஷயமாக கடன் வாங்க நேரிடும். உங்களின் வாரிசுகள் சிலர் அரசு உத்தியோகத்தில் அமரவர். உங்களில் சிலருக்கு, வயிறு சம்பந்த பிரச்சினைக்கு, மருந்து எடுத்துக்கொள்வீர்கள். வேறு சிலர், வாரிசு அடிப்படையில் அரசு பணி பெறக்கூடும். பணியாளர்கள் மாறுவர். உங்கள் இளைய சகோதரன் வீடு மாறுவார். உங்கள் மாமியார், பணியில் இருப்பின் அவர் இடமாற்றம் பெறுவார்.

அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: இந்த மாதம் பண விஷயத்தில் கவனமாக இருக்கவும். புதிதாக தொழில் தொடங்குபவர்கள், திருச்செந்தூர் முருகனை வணங்கிட்டு, வேலையை ஆரம்பிக்கவும். கோவிலில் பணி செய்யும் பிறமொழி பேசுபவர்களுக்கு தேவை கேட்டறிந்து உதவுங்கள்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

குருவை உங்கள் எண்ணின் நாயகனாக கொண்டவர்கள். குரு என்பவர் அறிவுத் திறனைக் குறிப்பவர். இந்த அறிவே அனைவருடனும் நல்லிணக்கத்தைப் பெற்று, அனைவராலும் விரும்பத்தகுந்த நபர் ஆவீர்கள். இந்த எண்ணில் பிறந்த ஜாதகர்கள், நிறைய மாற்றங்களை இந்த மாதம் எதிர்கொள்வீர்கள். அது பணியிடை மாற்றமாக அமையும். வீடு மாறுதலுண்டு. வேலையை மாற்றுவீர்கள். திருமணமாகி, புகுந்த வீடு மாறுவீர்கள். வெளிநாட்டுக்கு செல்வதால் இடமாற்றமுண்டு. உயர்கல்வி கற்பவர்கள், கல்லூரி அல்லது ஆராய்ச்சி அமைப்பாளரை மாற்றும் சூழ்நிலை உருவாகும். இந்த எண்ணில் பிறந்த, குழந்தைகளின் தந்தை இடமாறுதல் பெறுவார். அரசுப் பணியாளர்கள். விரும்பிய இடமாற்றம் பெறுவர். அரசியல்வாதிகள், அவர்களே வேறு துறைக்கு, முரண்டு பிடித்து, மாறுதல் வாங்கிச் செல்வர். வேறு அரசியல் வாதிகள். இப்போ இருக்கிற கட்சி நமக்கு செட்டாகவில்லை என, வேறு கட்சிக்கு நகர்ந்துவிடுவர். உங்கள் மூத்த சகோதரி மற்றும் உங்கள் வாழ்க்கைத்துணை பணியிட மாறுதல் பெறுவர். காவல்துறையினர், தாங்கள் பணிபுரிந்த பழைய காவல் பணியை கேட்டுவாங்கி, மாறுவர். உங்கள் வீட்டில் அல்லது தொழில் இடத்தில் பணிபுரிபவர்கள் அவர்களாகவே மாறுவர். அல்லது நீங்கள் வேறு பணியாளர்களை மாற்றுவீர்கள். அட, இந்த மாதம் முழுவதும் உங்கள் வாழ்வியலுக்கு ஏற்ப மாற்றம் ஒன்றே நடந்துகொண்டிருக்கும். இந்த அழகில் வேறு பலனை என்ன சொல்ல இயலும்.

அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.v எச்சரிக்கை எண்கள்: 2, 11, 29.

பரிகாரம்: இந்த மாதம் நிறைய மாறுதல், அலைச்சல் ஏற்படும்போது, பணம், பொருட்களில் கவனம் தேவை. திருட்டு நடக்கும் அபாயம் உண்டு. துர்க்கைக்கு மருக்கொழுந்து சேர்ந்த கதம்ப மாலைகொண்டு வணங்கவும். உங்களுக்கு பழக்கமான பிற மத, பிற இன மனிதர்களின் வீடு, வாகனம் மாற்றம் சம்பந்த முடிந்த உதவி செய்யுங்கள்.

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

ராகுவை எண்ணின் நாயகனாக கொண்டவர்கள். நீங்கள் எதைச் செய்தாலும், எதைச் சொன்னாலும், பூதாகாரமாக்கிக் கூறுவீர்கள். இந்த பெரும் போக்குத் தன்மையே, அனைவரையும் உங்களை நோக்கி ஆகர்ஷிக்கச் செய்யும். திருமண வயதில் உள்ளோருக்கு, கல்யாண பேச்சுக்கள் முனைப்டையும். இப்போது வேலை தேடுவோருககு, அரசுப்பணி அல்லது அரசு சார்ந்த பணி கண்டிப்பாக கிடைக்கும். அரசு பேச்சுத் திறமை அல்லது பணம் சம்பந்த வேலையாக அமையும் இந்த பணி, இடமாற்றத்தைக் கொடுக்கும். உங்கள் இளைய சகோதரனும், உங்கள் தாயாரும் சேர்ந்து ஆன்மிக பயணம் செய்வர். அல்லது உங்கள் மனைவியும், மாமியாரும் சேர்ந்து கோவில் தரிசனம் செய்வர். தொழில் விஷயமாக, உங்கள் தந்தை கடன் வாங்க உதவி செய்வார். உங்களின் சிலரின் தந்தை, எங்காவது விழ வாய்ப்புண்டு. ரொம்ப நாளாக எதிர்பார்த்த, அரசு ஆசிரியப் பணி, மருத்துவப் பணி என இவை கிடைக்க வாய்ப்புள்ளது. அதுபோல, மருத்துவ கல்வியில் சேர, சில மாணவர்கள் இடமாற்றம், தகுதி மாற்றம் எனும் அடிப்படையில் சேர வாய்ப்புக் கிடைக்கும். உங்களில் சிலர் பண லேவாதேவி எனும் வட்டுக்கு விடும் தொழிலை தொடங்குவீர்கள். சிலரின் பதவி உயர்வு, இடமாற்றம் தரும். அரசியல்வாதிகள், வேறு துறைக்கு மாற்றப் படுவர். அல்லது பதவியே இல்லாமல் போகவும் வாய்ப்புண்டு. உங்கள் மாமியார் வீட்டில் மாற்றங்களைச் செய்வார்.

அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.

எச்சரிக்கை எண்கள்: 6, 15, 24.

பரிகாரம்: இந்த மாதம் வேலை, தொழில் விஷயமாக பிறரிடம் பழகும்போது, சற்று கவனமாக இருக்கவும். திருச்செந்தூர் முருகனை வணங்கவும். துர்க்கையை குங்குமம்கொண்டு அர்ச்சிக்கவும். பிற மத, இனத்தவரின் திருமணத்திற்கு முடிந்த உதவிகளைச் செய்யவும்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

புதனை எண்ணின் நாயகனாகக் கொண்டவர்கள். உங்களின் குயுக்தியை அனைவரும் வியந்து ரசிப்பார்கள். அளவு கடந்த புத்திசாலித்தனம். அளவுக்கதிகமான ரசிகர்களை, நண்பர்களை கொணர்ந்து சேர்க்கும். இந்த மாதம் உங்கள் தொழில், பணம், சம்பந்தமான, நிறைய தரவுகள் வந்துசேரும். மேலும் வரும் தகவல்கள் அதிர்ஷ்ட நிகழ்வுகளுக்கு அஸ்திவாரமாக அமையும். பணிபுரிய நல்ல வேலையாட்கள் கிடைப்பர். இந்த மாதம் நீங்கள் வீடு, வாகனம், மனை விற்கும்போது, ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். பத்திரம் பதியும் நேரம் சில சிக்கல் உண்டாகக்கூடும். அல்லது அந்த தரகர் கொஞ்சம் தகராறு செய்வார். அல்லது அந்த சொத்து, வில்லங்கமானது எனக் கூறிவிடுவர். எனவே இந்த மாதம் வீடு, வாகனங்களைப் பார்த்து தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். பத்திரப் பதிவை அடுத்த மாதம் வைத்துக்கொள்ளவும். உங்கள் தாயார் அல்லது வாழ்க்கைத்துணை சற்று சிராய்ப்புகளை சந்திப்பர். பாதம் அதிக வலி தரும். வீடு பழுது பார்க்கும் செலவுண்டு. வேலை தேடுவோர், வேலை பெறுவதற்கு சற்று செலவழிக்க வேண்டியிருக்கும். அது சரியான நபரிடம் சென்று சேருமா என்பது சந்தேகமே. அரசியல்வாதிகள் வரி, வட்டி போன்ற இன்னல்களுக்கு ஆளாவார்கள். அரசு அதிகாரிகள் தேவைற்ற, விரும்பாத இடமாற்றம் கிடைக்கப் பெறுவர்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.

பரிகாரம்: பயணங்களிலும், உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. சிறுவாபுரி முருகனை வணங்கவும். பிற மதத்தவர் தொழில்புரிய சிறுசிறு உதவிகளைச் செய்யுங்கள்.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சுக்கிரன் உங்கள் எண்ணின் நாயகன் ஆவார். உங்களின் அருமையான கலை நயமும், அழகுணர்ச்சியும் அனைவரையும், உங்கள் அருகே ஈர்த்துவிடும். இந்த மாதம் மறைமுக வருமானம் அதிகரிக்கும். அதுபோல் சில செயல்களின் தடையெற்ற போக்கிற்கு, லஞ்சப் பணம் கொடுக்கவும் வேண்டியிருக்கும். உங்கள் குடும்பத்தில் உங்களின் இளைய சகோதரர் அரசுப் பணி கிடைக்கப் பெறுவார். உங்களின் மூத்த சகோதரர், தகவல் நுட்ப பிரிவில் சேவையாற்றும் வேலை கிடைக்கப்பெறுவார். இளைய சகோதரரின் திருமண பேச்சு ஆரம்பிக்கும். உங்களின் சிலருக்கு பெண் கொடுத்து, பெண் எடுக்கும் வாய்ப்பு நடக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவர்கள், அதற்கான தகவல் பெறுவீர்கள். சிலரின் குதர்க்கப் பேச்சு, குடும்பத்தை கும்மி அடிக்க வைத்துவிடும். உங்களின் சிலர் பணிநிமித்தமாக, வீட்டை, குடும்பத்தை விட்டு பிரிய நேரிடும். உங்களின் சிலரின் தந்தைக்கு வாய் குளறல் குறை உண்டாகும். சில அரசியல்வாதிகள், செய்தி, கலை, தொழில்நுட்ப துறைக்கு மாறுவர். அரசு அதிகாரிகள் நல்ல வருமானம் வரும் இடம் நோக்கி நகர்வர். உங்களில் பலர் மலை சார்ந்த கனவுகள் காண்பீர்கள். காவல் துறையில் பணிபுரிபவர்கள் பதவி உயர்வு பெறுவீர்கள். உங்களில் சிலர் காதல் சம்பந்தமான மெஸேஜ் கிடைக்கப் பெறுவீர்கள். கலைஞர்கள், நிறைய காசு புழங்குவதால் மனையில் முதலீடு செய்வீர்கள். இந்த மாதம், உங்கள் மனையை விற்பதாக இருப்பின், நல்ல லாபம் கிடைக்கும். சிலரின் மனை, அரசாங்கத்தால், கையகப்படுத்த இருப்பின். அதற்கு நல்ல பணம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.

எச்சரிக்கை எண்கள்: 7, 14, 25.

பரிகாரம்: இந்த மாதம் பேச்சில் கவனம் தேவை. மற்றும் பணம் விஷயங்கள், கொடுக்கல்- வாங்கலில் கணக்காக இருப்பது அவசியம். லட்சுமி நாராயணரை வணங்கவும். வேலை செய்யும். பிற மத, பிற இனத்தவர்களுக்கு பயணச் செலவுக்கு கொடுத்து உதவவும்.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

கேது பகவான் உங்கள் எண்ணின் நாயகன் ஆவார். அமைதியாகவும் ஆழ்ந்து யோசிக்கும் தன்மையும் கொண்டவர்கள். எனவே இந்த குணம், சில சமயம், பலரை வியக்கச் செய்யும், சில சமயம் சிலரை பங்குகொள்ளச் செய்யும். நீங்கள் சொந்தத் தொழில் செய்துகொண்டிருந்தால், இந்த மாதம், அருமையான பணியாளர்கள் கிடைப்பர். தொழிலாளர்களின், அயரா உழைப்பு, அபிரிமிதமான பண சேர்க்கைத் தரும். மாணவர்கள், எதிர்பாராத விதமாக, மருத்துவம் போன்று, உயரிய கல்வியில் இடம் கிடைத்து, வேறிடம் செல்வர். அரசு மனைப் பிரிவில், மனை வாங்குவீர்கள். உங்களில் சிலர் அரசின், ஆன்மிகத் துறைக்கு மாற்றம் பெறுவீர்கள். சிலர், வாரிசுகளுடன் மனத்தாங்கல் பெறுவர். கலப்பு மணம் நிச்சயமாகும். நிச்சயத்தார்த்தில், சற்று மனக் கசப்பு ஏற்படும். அரசியல்வாதிகள், சற்று வில்லங்கம் ஏற்படக் காண்பர். கலைஞர்கள் பற்றிய வதந்தி செய்தி, பரவும். உங்கள் தந்தை, வெகுகோபம் கொள்ளும் அளவில் சில செயல்கள் நடக்கும். இதற்கு உங்களின் மாமனார் காரணமாக இருப்பார்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 3, 12, 21, 30.

பரிகாரம்: உறவினர்களிடம் சற்று பொறுமையாக நடந்துகொள்ளவும். விநாயகரை வணங்கவும். இஸ்லாமியரின் திருமணத்திற்கு உதவவுங்கள்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சனிபகவான் உங்கள் எண்ணின் நாயகர் ஆவார். உங்களின் உடலுழைப்பு அளப்பறிய தாக இருக்கும். நீங்கள், ஆண் அல்லது யாராக இருப்பினும், உங்கள் உழைப்பு, உங்களுக்கு மதிப்பும் மரியாதையையும் தேடித்தரும். இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு மனை, வீடு, வாகனம் பற்றிய தேடலும், முதலீடும், முடிவு செய்தாலும், அதன் பொருட்டு அலைச்சலும் அளவிட முடியாததாக இருக்கும். உங்களில் சிலர், மனையை விற்று, வீடு வாங்குவீர்கள். அல்லது தங்க நகைகள் வாங்க முதலீடு செய்வீர்கள். ஆக, இந்த மாதம் பணம் வருவதும், செலவாவதுமாக இருக்கும். உங்களில் சிலர், மருமகள் கிடைக்கப் பெறுவீர்கள். இந்த எண்ணில் பிறந்த குழந்தைகள், சிலரின் தந்தை வேலை கிடைக்கப் பெறுவர். ஆன்மிக வழிபாடு சிறக்கும். பூர்வீக நன்மை ஒன்று கிடைக்கும். அரசுவகையில், எதிர்பாராத நன்மை உண்டு. அரசியல்வாதிகள் எதிர்கொள்ளும் மாறுதல், முதலில் மன உளைச்சல் கொடுத்தாலும், பின் அதுவே வெகு லாபமானதாக இருக்கும். சினிமா டி.வி. கலைஞர்கள், தங்கள் தொழிலில் லாபமும், ஒரு படி முன்னேற்றமும் பெறுவர். உங்கள் மாமியார், மாமனார்மூலம் ஒரு நல்லது நடக்கும். உங்கள் வாரிசுகள் சிலர் வேலை கிடைக்கப் பெறுவர். சில மாணவர்கள், கல்வியில் ஒரு நன்மையான மாற்றம் காண்பர். விவசாயிகள், தங்கள் வயல், தோட்டம் இவற்றை, வேறுவிதமாக மாற்றிக்கொள்ளவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

பரிகாரம்: இந்த மாதம் உங்களுக்கு வரும், கடன் பற்றிய அலைபேசி தகவல்களில் வெகு கவனம் தேவை. ஐயப்பன் வழிபாடு நல்லது. பிறமத, கூரியர் மனிதர்களுக்கு முடிந்த உதவிச் செய்யவும்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

செவ்வாய் உங்கள் எண்ணின் நாயகன் ஆவார். நேர்மையான துணிச்சல் உடையவர். எனவே இத்துணிச்சல், உங்களை எல்லாராலும் விரும்பும் நபராக மாற்றும். இந்த மாதம் அலைச்சலும் செலவும் மிகுந்த மாதமாக இருக்கும். உங்கள் சொந்த, பயனுள்ள அலைச்சல் என்றாலும் பரவாயில்லை. வேண்டாத அலைச்சலும், வெட்டி செலவுமாக இந்த மாதம் ஓடும். இந்த மாதம், உங்கள் வீட்டு பணியாளர்கள் அவர்கள் பங்குக்கு இம்சை தருவர். வாரிசுகள் ஒரு நன்மை தரும்போது, அதோடு ஒரு இன்னமும் சேர்ந்துவரும். மாத சம்பளம் வாங்குவோர். ஒரு எதிர்பாராத பண பெருக்கும் பெறுவர். தம்பதிகளுக்குள் வேலை விஷயமாக வாக்குவாதம் நடக்கும். இப்போது நடக்கும். இந்த எண்காரர்களின் பிரசவம், அனேகமாக அறுவை சிகிச்சைமூலம் நடக்கும். தொழில் சற்று சிரமத்தோடு லாபம் தரும். அரசியல்வாதிகள், நாலு காசு பார்ப்பதற்குள் முழி பிதுங்கி போய்விடுவர். கலைஞர்கள் முன்னேற்றம் காண வெகு ப்ராயாசை படவேண்டியிருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: உங்கள் அலைச்சலின்போது, சற்று கவனமாக இருக்கவும். திருச்செந்தூர் முருகனை வழிபடவும். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் நபர்களுக்கு உதவும்.ஜ்

செல்: 94449 61845

om011223
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe