1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் உங்களுக்கு சோதனை நிறைந்த மாதமாகத் தோன்றும். ஆனால், உங்கள் திறமைகளை மதிப்பீடுசெய்யும் மாதம் என்பதை மனதில்கொண்டு செயல்பட்டால், சோதனைகள் அனைத்தையும் வெற்றியாக்க முடியும். சமுதாயத்தில் முக்கியப் பொறுப்பு வகிக்கின்றவர்களின் நட்பு கிடைக்கும். எல்லா வேலைகளையும் சுறுசுறுப்பாகச் செய்வீர்கள். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தபடி பலனை அடைவார்கள். தொழிலதிபர்கள் ஏற்றம் பெறும் மாதம். தொழிலாளர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரிகள் நினைத்தபடி வியாபாரம் பெருகும். பொதுவாக, உடல் நிலையை சற்று கவனமாக வைத்துக் கொள்ளவேண்டும். 50 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு வயிற்றுக்கோளாறு வர வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பு விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். மற்றவர்கள் பேச்சைக்கேட்டு நடந்தால் பள்ளி நிர்வாக நடவடிக்கை வரலாம். கணவன்- மனைவி உறவில் விரிசல் வராது. குடும்பச் செலவுகள் சுபச்செலவாக இருக்கும். பணம் தாராளமாகப் புரளும். பிள்ளை களுக்கு எதிர்பார்த்த சுபகாரியங் கள் நடக்கும். இளைஞர்களுக்கு வெளிமாநிலம் அல்லது வெளி நாட்டில் வேலைவாய்ப்பு கள் கைகூடும். சகோதரர் களிடையே நிலவும் நீண்ட நாள் பகை மாறும். அரசியல் வாதிகளுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 3; 4, 13, 22, 31; 8, 17, 26.

Advertisment

வணங்கவேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

பிள்ளைகளினால் பெருமையடையும் மாதம். பம்பரமாகச் சுழன்று வேலையைச் செய்வீர்கள். உங்களின் எந்த முயற்சியும், நீங்கள் கடைப்பிடிக்கும் நிதானத்தைப் பொருத்து வெற்றியைக் கொடுக்கும். வரன் தேடுவோருக்கு நல்ல வரன்கள் வந்து வீட்டுவாசலைத் தட்டும். மணமாகாத வர்களுக்கு திருமணம் கைகூடும் மாதம். தொழிலதிபர்கள் புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். வியாபாரிகளுக்கு இதுவரை தொல்லை கொடுத்துவரும் சக வியாபாரிகள் விலகிச்செல்வார்கள். மொத்தக் கொள்முதல் வியாபாரம் சூடு பிடிக்கும். வைத்தியச்செலவு குறையும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். அனுகூலமான கடிதத் தொடர்புகள் வரும். மாணவர்கள் கல்வி உயரும். உயர்வகுப்பு தொடர உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த அரசு நிதியுதவி கிடைக்கும். இளைஞர் களுக்கு இராணுவத்தில் வேலை கிடைக்கும். இதுவரை வீட்டிற்குத் தொல்லை கொடுத்த இளைஞர்கள் ஏதாவது ஒரு வேலைக்குச் சென்றுவிடுவார்கள். அரசியல்வாதிகள் சமூகத்தில் நல்ல அந்தஸ்தைப் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதல் அடைவார்கள்.

Advertisment

அதிர்ஷ்ட தேதி: 8; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 1; 2, 11, 20, 29; 7, 25.

வணங்கவேண்டிய தெய்வம்: அம்மன் தெய்வங்கள்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் உங்கள் காரியங்களில் தீர ஆலோசித்து முடிவுக்கு வருவீர்கள். உங்களை நேசித்த ஒருவரைப் பிரியவேண்டிவரும். குடும்ப சீர்திருத்தம் செய்வீர்கள். பணம் சேரும். குழந்தைகள் படிப்பு எதிர்பார்த்தபடி அமையும். தொழிலதிபர்கள் புதிய தொழிலாளர் கள் வரவால் உற்பத்தியைப் பெருக்கு வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக் கும். வியாபாரிகள் நினைத்தபடி வியாபாரம் நடக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். சில்லரை வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார் கள். நகை வியாபாரம் செய்வோருக்கு எதிர்பாராத நஷ்டம் வரும் காலம். எனவே கொள்முதலிலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிரிந்துசென்ற தம்பதியர் வழக்கு சமாதானமாகி ஒன்றுகூடுவார்கள். அரசு ஊழியர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு வந்துசேரும். நினைத்த இடத்திற்கு மாறுதல் கிட்டும். உல்லாசப் பயணம் செல்வோர் கவனமாக இருக்கவேண்டும். எதிர்பாரா விபத்துகள் நடைபெறலாம். கோர்ட் விவகாரம் உள்ளவர்களுக்கு தீர்ப்பு சாதகமாக வரும். பெண்களுக்கு மகிழ்ச்சியான மாதம். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். இளைஞர்கள் வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். அரசியல்வாதிகள் சமூகத்தில் நல்ல அந்தஸ்தைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 3, 12, 21, 30; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31; 6; 17, 26; 29.

வணங்கவேண்டிய தெய்வம்: அங்காள பரமேஸ்வரி, அம்மன் தெய்வங்கள்.

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் முழுவதும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். புதிய பணி களைத் தொடங்காமல் பழைய வேலைகளை மட்டும் பார்ப்பது உத்தமம். அறிமுகமில்லாத வர்களுக்கு உதவிசெய்தால் உங்கள் கைப் பொருளை இழக்கநேரும். எனவே எச்சரிக்கை தேவை. நீண்டநாட்களாக வெளிநாட்டில் இருந்த சிலர் பெற்றோர்களைப் பார்க்க வந்துசேர்வார்கள். அரசாங் கப் பணியாளர்கள், தங்களுடன் வேலைசெய்யும் பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர்களால் வேண்டாத இடத்துக்கு மாறுதல் வரலாம். தொழிலதிபர்கள் வெளிநாட்டு ஒப்பந்தங்களால் கணிசமான லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரிகள் மறைமுக murugaஎதிர்ப்புகளைப் பெறுவார்கள். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். அரசியல்வாதிகள் நினைத்தபடி பெரிய பதவிகள் தேடிவரும். தலைமையின் நேரடிப் பார்வையால் நல்ல முன்னேற் றம் காணப்படும். இளைஞர்கள் எதிலும் நிதானமாக இருக்கவேண்டும். உடனிருக்கும் நண்பரே கெடுதல் செய்வார். காவல்துறை நடவடிக்கைக்கு ஆட்பட நேரிடலாம். இந்த எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சிக்கனத் தைக் கடைப்பிடித்தால் கடன்படாமல் தப்பிக்கலாம். விரிவான செலவுகளைத் தவிர்க்கவேண்டும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: சுப்பிரமணியர், துர்க்கையம்மன்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

மாதம் முழுவதும் பம்பரமாக வேலை செய்வீர்கள். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் இனிதே நடக்கும். பிரிந்துசென்ற உறவுகள் கூடும். வாகனம் வாங்கும் திட்டம் நிறைவேறும். விவசாய விளைச்சலுக்கான ரசாயன உரம் தட்டுப் பாடின்றிக் கிடைக்கும். ரசாயன உர விற்பனையாளர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். தொழிலதிபர்கள் மூடிய நிறுவனங்களை மீண்டும் நல்லமுறையில் இயக்கி லாபத்தைப் பெறுவார்கள். தொழிலாளர்கள் உற்பத்தியில் மட்டும் ஈடுபடுவார்கள். கனவுகள் நனவாகும் மாதம். அரசு ஊழியர்கள் நினைத்தபடி இடமாறுதலை அடைவார்கள். அரசியல்வாதி கள் புதிய பொறுப்புகளை அடைவார்கள். இதுவரை விற்பனையாகாத நிலங்கள் லாபத்தில் விற்கும். மருத்துவச் செலவுகள் குறையும். வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். வேலை கிடைக்காதவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். காவல்துறை வழக்குகளும், நீதித்துறை வழக்குகளும் சாதகமாகும். வாகனத்தில் பயணம் செய்யும்போது கவனம் தேவை. மாணவர்கள் திட்டமிட்டபடி உயர்கல்வி கிடைக்கும். சிலர் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று தரிசித்து வருவார்கள். கணவன்- மனைவி ஒற்றுமையுண்டு. குழந்தை இல்லாதவர்களுக்கு அதிர்ஷ்டவசமாக குழந்தை பாக்கியம் கிட்டும். ஆலயத் திருப்பணிகள் செய்யும் திட்டம் நிறைவேறும்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21.

வணங்கவேண்டிய தெய்வம்: விஷ்ணு, துர்க்கை, மகாலட்சுமி.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் குடும்பத்தில் நீண்டநாட்களாகப் பிரிந்திருந்த பிள்ளைகள் வந்துசேர்வார்கள். வயதான தாய்- தந்தையரை உடையவர்கள், அவர்களுக்கு சிறப்பு வைத்தியம் செய்யவேண்டிவரும். நீண்டநாட்களாகத் தள்ளிவைத்த ஆலய தரிசனம் நிறைவேறும். தொழிற்சாலைகளில் உற்பத்தி கூடும். தொழிலதிபர்களுக்கு லாபம் உயரும். தொழிலாளர்கள் ஒத்துழைப்பு கூடும். வியாபாரிகள் திட்டமிட்டபடி லாபம் பெறுவார்கள். நகை வியாபாரம் செய்வோரும் லாபம் பெறுவர். பழைய நகை வாங்கி விற்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காவல்துறை நடவடிக்கை வரலாம். மாணவர்கள் கல்வியில் உயர்வார்கள். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தபடி நிலுவைத் தொகை வந்துசேரும். வீடு வாங்கும் திட்டம் நிறைவேறும். ஒருசிலர் இரண்டாவது திருமணம்செய்து வழக்கில் சிக்குவார்கள். ஆண் வாரிசு இல்லாதவர்களுக்கு ஆண் வாரிசு உருவாகும். அரசியலிலில் உள்ளவர்கள் நல்ல பதவிகளைப் பெறுவார்கள். பெண் களால் குடும்பத் தலைவர்கள் நல்ல யோகத் தைப் பெறுவார்கள். இளைஞர்கள் திட்ட மிட்டபடி வெளிநாடு செல்வார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24; 9, 18.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21, 30.

வணங்கவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வேங்கடாசலபதி.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும் அளவில் பணநிலை உயரும். சிலர் அதிக வருவாய் பெறுவார்கள். உடன்பிறந் தோர்களின் நேசம் கூடும். அவர்களின் ஆதரவும் கிட்டும். பூர்வீக சொத்துகளில் இருந்துவரும் வில்லங்கங்கள் சுமுகமாகும். தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் இனிதே நடக்கும். மனதில் தேவையற்ற பயம் உண்டா கும். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்கள் செய்வார்கள். அது நல்ல லாபத்தைத் தரும். வியாபாரிகள் கொள்முதலை கவனமாகச் செய்யவேண்டும். அதிக கொள்முதல் நஷ்டத்தைத் தரும். சக வியாபாரிகள் மறைமுகத் தொல்லைகள் கொடுப்பார்கள். உயர் அரசுப் பணிகளுக்குத் தேர்வெழுதியவர்களில் சிலர் பணி உத்தரவுகளைப் பெறுவார்கள். கணவன்- மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். மனைவியின் பேச்சை மதிப்பவர்கள் லாபத் தைப் பெறுவார்கள். பிள்ளைகள் கல்வியில் உயர்வதைக் கண்டு பெற்றோர் மகிழ்ச்சி கொள்வர். சில்லரை வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவார்கள். அரசு ஊழியர்களுக்கு வேலைப்பளு கூடும். நினைத்த இடத்துக்கு மாறுதல் வரும். நீதிமன்ற வழக்குள்ளவர்கள் சாதகமான தீர்ப்பைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 2, 11, 20.

தவிர்க்கவேண்டிய தேதி: 7, 16.

வணங்கவேண்டிய தெய்வம்: கணபதி, சுப்பிரமணியர்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்களை இதுவரை ஆட்டிப்படைத்து வந்த பெற்றோர் சாபம் நீங்கும். உடன்பிறந் தோர் உங்களோடு சுமுக உறவு கொள்வார்கள். உங்களுக்கு போட்டியாக உள்ள வியாபாரி கள் நஷ்டத்தை அடைவார்கள். உங்கள் வியாபாரம் நஷ்டமின்றி நடக்கும். சிறு வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார் கள். இதுவரை உங்கள் பேச்சைக் கேட்காமலிலிருந்த பிள்ளைகள், இனி உங்கள் யோசனையைக்கேட்டு நடப்பார்கள். தடைப்பட்டு வந்த பிள்ளைகளின் திருமணம் இனிதே நடக்கும். தொழிலதிபர்கள் புதிய தொழில்களைத் துவங்குவார்கள். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் லாபத்தைப் பெறுவார்கள். கொடுக்கல்- வாங்கல் தொழில் செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். எதிரிகள் தொல்லை உருவாகும். அரசு ஊழியர்கள் இழந்த வேலையை மீண்டும் பெறுவார்கள். இரண்டு மனைவி உள்ளவர்கள் ஒரு மனைவியைப் பிரியவேண்டி வரலாம். அவர்களால் அவப்பெயர் ஏற்படலாம். வெளிநாடு, வெளியூர் செல்லும் திட்டம் நிறைவேறும். இதுவரை தொல்லை கொடுத்துவந்த உடல்நிலை சீராகும். காவல்துறையினர் பதவி உயர்வு பெறுவார்கள். குடும்பத்தில் பெண்களால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். அரசியலிலில் உள்ளவர்களின் எண்ணம் நிறை வேறும். இந்த எண் ஆதிக்கத்தில் பிறந்த சிலர், இந்த மாதம் திடீரென அதிர்ஷ்டத்தைப் பெற்று கோடீஸ்வரராக உயர்வார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31.

வணங்கவேண்டிய தெய்வம்: வேங்கடாசலபதி, திருச்செந்தூர் முருகன்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் முழுவதும் நல்ல பலன் களைப் பெறுவீர்கள். மாணவர்களின் உயர்கல்வி திட்டம் நிறைவேறும். வாழ்க்கையில் மறக்கமுடியாத மகிழ்ச்சி தரும் மாதம் இது. உயர் அரசு வேலைகள் வீடு வந்துசேரும். பெற்றோர்கள் எண்ணப்படி பிள்ளைகள் நடப்பார்கள். குடும்பத்தில் தடைப்பட்டுவந்த சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். பிரிந்துசென்ற கணவன்- மனைவி ஒன்றுசேர்வார்கள். தொழிலாளர்கள் ஒற்றுமையால் தொழிலதிபர்கள் அதிக லாபம் பெறுவார்கள். புதிய ஒப்பந்தங்கள் கிட்டும். வியாபாரிகள் நல்ல வருமானத்தைப் பெறுவார்கள். இதுவரை வசூலாகாத கடன்பாக்கிகள் கேட்காமலே வசூலாகும். பிரிந்துசென்ற சகோதரர்கள் ஒன்றுசேர்வார்கள். பூர்வீக சொத்துப் பிரிவினை சுமுகமாக முடியும். சினிமாத் துறைக்கு மகிழ்ச்சியான மாதம். இந்த மாதம் துவங்கும் படங்கள் வெற்றியைத் தரும். கலைஞர்கள் ஒத்துழைப்பு கூடும். ஆடம்பரச் செலவுகள் கூடும். கணவன்- மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதோருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். மாணவர்கள் கல்வியில் உயர்வார்கள். அரசியல்வாதிகள் சமூகத்தில நல்ல அந்தஸ்தைப் பெறுவார்கள். அரசு ஊழியர்களுக்கு கேட்டபடி இடமாற்றம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 2, 11, 20, 29.

வணங்கவேண்டிய தெய்வம்: திருச்செந்தூர் முருகன்.

செல்: 94871 68174