1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் சூரியன். இந்த தை மாதத்தில் இதுவரை தடைப்பட்டுவந்த திருமணம் சுபமாக கைகூடும். திருமணமான தம்பதிகளின் வாழ்க்கைத் துணை வேலை கிடைக்கப்பெறுவார். அதுபோல் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு அரசுவேலை கிடைக்கும். சிலரது வாரிசுகளுக்குத் திருமண யோகம் அமையும். சிலர் குழந்தை பாக்கியம் பெறுவர். பங்கு வர்த்தகம் பணம் கொண்டுவரும். வாழ்க்கைத் துணை யின் ஒரு முயற்சி, முன்னெடுப்பு வெற்றியைத் தேடித்தரும். தொழில் சம்பந்தமான வாகனம் வாங்குவீர் கள். சில மாணவர்கள் உயர்கல்வி விஷயமாக வெளிநாடு செல்வர். வணிகப் பெருமக்கள் நிறுவனக் கிளை திறப்பர். திரைப்படம் போன்ற கலையுலகினர் புதிய வாய்ப்புகளையும், பழைய தொடர்புகளிலிருந்து லாபமும், பணப்பெருக்கமும் பெறுவர். சிலர் அமைச்சர் பதவி கிடைக்கப்பெறுவர். பூர்வீக நிலம் லாபம்தரும். நல்ல பெண் பணியாளர்கள் அமைவார்கள். வாழ்க்கைத் துணைக்கு காது ஆபரணம் வாங்கிக்கொடுப்பீர்கள்.

கவனம் தேவை: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த மாதம் கண்டிப்பாக தந்தை- மகன் பிரச்சினையை எதிர்கொள்ளவேண்டி இருக்கும். அரசு, அரசு அதிகாரிகள், அரசியல் வாதிகள் என இத்தகைய துறையில் இருப்பவர்கள் எதிர்மறை நிகழ்வுகளை சந்திக்கவேண்டி இருக்கும். தம்பதிகளுக்குள் அவ்வப்போது கருத்து வேற்றுமை வந்து விலகும். உங்களது பெற்றோர் நலனில் அக்கறை கொள்ளவேண்டி வரும். மூட்டுவலி அல்லது வாயுக் கோளாறு தொந்தரவுண்டு.

தை மாதம் 10, 11, 12-ஆம் தேதிகளில் அதிர்ஷ்டமான செய்தி கிடைக்கப்பெறுவீர்கள்.

Advertisment

5, 14, 23-ஆம் எண்கள் நல்லவை தரும்; 8, 17, 26-ஆம் எண்கள் அல்லவை கொடுக்கும்.

பரிகாரம்: திருவாரூர் சென்று வணங்குவது நல்லது. ஞாயிற்றுக்கிழமை கோவில் பயன்பாட்டிற்கு நல்லெண்ணெய் வாங்கிக்கொடுக்கவும். வயதாகியும் வேலைபார்க்கும் முதிய பணியாளர்களுக்கு வெளிச்சம் தரும் டார்ச் அல்லது மெழுகுவர்த்தி போன்றவற்றை வாங்கிக்கொடுங்கள்.

2, 11, 20, 29-ஆம் தேதிகளின் பிறந்தவர்களுக்கு:

Advertisment

உங்கள் எண்ணின் நாயகன் சந்திரன். இந்த தை மாதத்தில் உங்களின் இளைய சகோதரம் வேலைகிடைத்து வெளியூர், வெளிநாடு செல்வார். உங்களில் சிலருக்கு தகவல் தொடர்பு சம்பந்தமான வேலை கிடைக்கும். கடன் அடைபடும். வீட்டில் திருமணப்பேச்சுகள் நடைபெறும். சிலர் பஞ்சாயத்துமூலம் பணம் கிடைக்கப்பெறுவர். வாடகை வீடு மாற்றமுண்டு. கருவுற்ற பெண்கள் மருத்துவக் கண்காணிப்பைத் தொடர்வர். பங்கு வர்த்தகம் சற்று தடுமாறி பின்னர் பலன் தரும். வணிகர்கள் அரசுத் தொடர்புகொள்ளும் நிலையுண்டு. உங்களில் சிலர் உயர்கல்வி படித்துக்கொண்டே பகுதிநேர வேலையிலும் சேர்வீர்கள் அல்லது கல்வியும் வேலையும் ஒருங்கே கிடைக்கும். இதன்பொருட்டு சிறுதூரப் பயணம் அதிகரிக்கும். உங்களில் சிலரின் மாமனார் வீடுமாற்ற அல்லது வேலை சம்பந்தமாக உதவிசெய்வார். சிலர் வெளிநாடு சார்ந்த வேலைகளை வீட்டிலிருந்து செய்யும் பணி கிடைக்கப்பெறுவர். சிலர் தங்கள் பணியாளர்களை மாற்றுவீர்கள்.

கவனம் தேவை: தாயார்நலன் கவனிக்கப் படவேண்டும். சிலரது தாய் அல்லது மனைவி கால்தவறி விழும் வாய்ப்புண்டு. சொந்தவீட்டைப் பழுதுநீக்கும் வேலை செய்யவேண்டிவரும். உங்கள் மருமகளுடன் மனப் பிணக்கு ஏற்படக்கூடும். இந்த தேதிகளில் பிறந்த பழைய அமைச்சர்கள் சிலர் பதவியிழப்பர். கலையுலகினர் எச்சரிக்கை யோடு இருக்கவேண்டும்; பழிச்சொற்கள் ஏற்படும். கணுக்கால் வலி உண்டாகும்.

தை மாதம் 11-ஆம் தேதி நல்ல விஷயம் நடக்கும்.

3, 12, 21, 30-ஆம் எண்கள் நல்லதும், 7, 16, 25-ஆம் எண்கள் அல்லதும் தரும்.

பரிகாரம்: அன்னபூரணியை வணங்குங் கள். திங்கட்கிழமை சுவாமி அபிஷேகத்திற்குப் பால் வாங்கிக்கொடுக்கவும். விபத்தில் சிக்கிய இளம்பெண்ணுக்கு தேவையைக் கேட்டறிந்து உதவிசெய்யவும். உங்கள் மூத்த சகோதரியிடம் பயணங்களில் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்துங்கள்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் குரு. இந்த தை மாதத்தில் சிலருக்குத் திருமணம் நிச்சயமாகும். புதிய தொழில் தொடங்குவீர்கள் அல்லது தொழிலை விரிவுபடுத்த புதிய பங்குதாரரை சேர்த்துக்கொள்வீர்கள். குயுக்தியான யோசனைகள் பிரவகிக்கும். பழைய வீட்டை விற்றுவிட்டு புதியவீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். இதுவரையில் விற்பனையாக சண்டித்தனம் செய்த வீடு தற்போது விற்பனையாகிவிடும். சிலருக்கு வீடு மாற்றம் உண்டு. சில அமைச்சர்கள் இலாக்கா மாறுவர்.

சில அரசியல்வாதிகள் பணம் சம்பந்தமான வாரியத்தில் சேர்வர். அரசு சம்பந்தமான பணியாளர் கிடைப்பர். இந்த மாதம் ஏதோவொருவகையில் பணம் கையில் புழங்கிக்கொண்டே இருக்கும். எனினும் குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு பிணக்குகள் வரும். புதியவகை இருசக்கர வாகனம் வாங்குவீர்கள். இந்த தேதிகளில் பிறந்த பெண்களுக்கு கட்டடம் சம்பந்தமான வேலை கிடைக்கும். அதில் கம்ப்யூட்டர் பயன் அதிகமாக இருக்கும். கலைத்துறையினர் "லைம் லைட்' வெளிச்சத்தில் பிரபலமடைவார்கள். சிலர் அரசு கான்ட்ராக்ட் கிடைக்கப்பெறுவர்.

கவனம் தேவை: முதியவர்களின் சொற்கள் வீட்டில் உள்ளவர்களை சங்கடப் படுத்தும். உங்கள் மாமியார் உங்களுடன் வந்து தங்குவார். மேலும் உங்கள் பெற்றோர் களுக்கிடையே வாக்குவாதம் ஏற்படும். மூத்த சகோதரிக்கு வீட்டு முதலீடு சம்பந்தமாக கடன் கொடுக்கவேண்டிவரும். உங்கள் வாரிசுகள் சற்று இம்சை தருவர். இளைய சகோதரர் சற்று கடுமை காட்டுவார். விளையாட்டு வீரர்கள், கலைஞர்களுக்கு சிறு காயங்கள் ஏற்படும்.

இந்த மாதம் 21, 22, 23-ஆம் தேதிகளில் நல்லவை நடக்கும்.

5, 14, 23-ஆம் எண்கள் நல்லதும், 4, 13, 22, 31-ஆம் எண்கள் கெடுதலும் தரும்.

பரிகாரம்: சிதம்பரம் நடராஜரை வணங்கவும். வியாழக்கிழமை சிவன் கோவிலுக்கு விளக்கெரிய எண்ணெய் வாங்கிக்கொடுக்கவும். வேலை செய்வோரின் சிறு கடன்களை அடைக்க உதவுங்கள்.

ff

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் ராகு. இந்த தை மாதத்தில் உங்களது திருமண விஷயம் வேகமெடுக்கும். எதிர்பாராத பண வரவுண்டு. உயர்கல்வி மேன்மையும், வெளியூர், வெளிநாட்டுப் பயணமும் தரும். மாணவர்கள் கணக்கு, வணிகவியல் சம்பந்தமான கல்வியில் முதன்மை பெறுவர். வியாபாரிகள் அரசுடன் கருத்து வேற்றுமை கொள்வர். அரசு சார்ந்தோர், கீழ்நிலை வேலைசெய்யும் பணியாளர்களுடன் அல்லாடவேண்டியிருக்கும். பழமையான கலைஞர்கள் சுறுசுறுப்படைவர். புதுமையான கலைஞர்கள் தொழிலில் சுணக்கம் காண்பர் கீழ்மட்டத் தொண்டர்களுடன் நல்ல நட்பிலுள்ள அரசியல்வாதிகள் சமாளித்துக்கொள்வார்கள். புதிய நட்புகள் ஏற்படும். நண்பர்களால் நன்மை விளையும். உங்களில் சிலரது மனைவிக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் வாகனம் வாங்குவர். சிலர் பணியிட மாற்றம் பெறுவர். தொழில் விரிவாக்கத்தின் பொருட்டு நிறைய முதலீடு செய்வீர்கள்.

கவனம் தேவை: உயரதிகாரிகளுடன் கருத்து வேற்றுமை ஏற்படும். சில அரசியல் வாதிகளின் அடிப்பொடித் தொண்டர்கள் நல்ல சமயத்தில் காலை வாரிவிடுவர். கண் சம்பந்தமான பிரச்சனையை சந்திப்பீர்கள். உங்களின் சில முயற்சிகள் வெற்றிக்கு அருகேவந்து, பின் கைக்கெட்டாமல் போய்விடும். சிலர் காவல் துறைக்கு ஃபைன் கட்டவேண்டிவரும்.

இந்த தை மாதம் 9-ஆம் தேதி ஏதேனும் ஒரு நற்செய்தி கிடைக்கும்.

6, 15, 24-ஆம் எண்கள் நல்லதும், 9, 18, 27-ஆம் எண்கள் அல்லதும் தரும்.

பரிகாரம்: கொடுமுடி சென்று தரிசிப்பது நலம். அருகிலுள்ள கோவிலின் அரச மரத்தடியில், இரு பாம்புகள் இணைவாக உள்ள நாகருக்கு பாலாபிஷேகம் செய்யவும். பிற மத, இன திருமணத்திற்கு முடிந்த உதவிசெய்யவும்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் புதன். இந்த தை மாதம் ரியல் எஸ்டேட் துறையினர் தொழிலில் முன்னேற்றம் காண்பர். அதிலும் மனை விற்பவர்கள் சற்று தடங்கலுடன் தொழிலில் சுறுசுறுப்பு காண்பர். அயல்நாட்டு பணப்புழக்கமுண்டு. உங்கள் இளைய சகோதரர் நடப்பு வேலையை விட்டு வேறுவேலை தேடுவார். உங்கள் பணியாளர்கள் அடிக்கடி விடுமுறை எடுப்பர். வாழ்க்கைத் துணை கல்வி, வணிகம் தொடர்புடைய வேலை கிடைக்கப்பெறுவார். உங்கள் குடும்பப் பெண் ஒருவர் வங்கி அல்லது நிதி சார்ந்த வேலைபெறுவார். சொந்தத்தில் திருமணம் அமையும். தெரிந்த நபர் வியாபார பங்குதாரராக உதவிசெய்வார். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். ஆன்மிகம், கலை சம்பந்த விஷயமாக கலைஞர்கள் முன்னேற்றமடைவர். வியாபாரம் சம்பந்தப்பட்ட இடம் வாங்குவீர்கள். நீண்டநாள் கடன் ஒன்று அடைபடும். இதன்பொருட்டு புதுக்கடன் வாங்குவீர்கள். சிலர் பிளாட் வாங்க முன் நடவடிக்கைகள் எடுப்பீர்கள்.

கவனம் தேவை: இந்த தை மாதம் உங்கள் சொற்களில் கவனமாக இருக்கவும். சிலசமயம் உங்கள் வாக்கே உங்களைப் புண்ணாக்கிவிடும். உங்களது மகன் உங்களுடன் கருத்து வேறுபாடு கொள்வார். சிலரின் தந்தை சுகவீனமடைவார். சிலரது மாமனார் ஏதோவொரு தேவையற்ற வேலையைச் செய்துவிடுவார். நீண்டதூரப் பயணங்களில் கவனம் தேவை. சிலர் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்படுவர். உணவில் கவனம் தேவை. தை மாதம் 26, 27, 28-ஆம் தேதிகளில் நன்மைகளை எதிர்பார்க்கலாம்.

6, 15, 24-ஆம் எண்கள் சுபமும், 7, 16, 25-ஆம் எண்கள் அல்லாட்டமும் தரும்.

பரிகாரம்: திருநாவலூர் சென்று வழிபடலாம். அருகிலுள்ள ரங்கநாதரை சேவிப்பது நலம். குலதெய்வக் கோவிலுக்கு விளக்கெரியத் தேவையான நெய், எண்ணெய், ஐந்து வகை கலவையான எண்ணெய் வாங்கிக் கொடுக்கவும். சரியாக வாய் பேசமுடியாத பிற மதத்தவரின் தேவையறிந்து உதவவும். முக்கியமான ஒன்று- தந்தையுடன் பிணக்கு வரும்போது கவனமாக இருக்கவும். அதிக கோபம் வேண்டாம்.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் சுக்கிரன். இந்த மாதம் உங்கள் குலதெய்வத்தை வணங்கச் செல்வீர்கள். லஞ்சப்பணம் கொடுக்கல்- வாங்கல் உண்டு. உங்களது பணியாட்கள் பெருந்தொகை கடன்கேட்டு, நீங்கள் மறுத்துவிடுவதால், அவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறிவிடுவார்கள். இதனால் புதிய வேலையாட்களைத் தேடிப்பிடிக்க வேண்டி வரும். உங்கள் இளைய சகோதரரின் திருமணச் செலவு கைமீறி, கடன் வாங்கவேண்டி இருக்கும்.

அரசுசார்ந்த பழைய வீடொன்று லாபம் தரும். பூர்வீக வீட்டை விற்க இயலும். சுபக்கடன் ஒன்று வாங்குவீர்கள். திருமணப் பேச்சுகள் முன்னும் பின்னும் அலைக்கழிக்கும். புதிய கான்ட்ராக்ட், குத்தகை விஷயமாக முதலீடு செய்வீர்கள். நீண்டநாள் கோபித்துக்கொண்டு வீட்டுக்கு வராத மருமகன் அல்லது உங்கள் தந்தை உங்கள் வீட்டுக்கு வருவார்கள். உங்களது இளைய சகோதரம் இடம் மாறுவார். உயர்கல்வி, ஆராய்ச்சிக் கல்வி போன்றவற்றில் ஏதோவொரு மாற்றம் காண்பீர்கள். இந்த தேதிகளில் பிறந்த சில பெண்களுக்கு வாரிசு யோகம் உண்டாகும்.

கவனம் தேவை: இந்த மாதம் குலதெய்வத்தை வணங்கச் செல்லும்போது ஒரு வில்லங்கத்தை சந்திப்பீர்கள். உங்களில் சில பெண்கள் கர்ப்பப்பை கோளாறுகளுக்கு மருத்துவரை நாடவேண்டிவரும். சிலரது பல்லை நீக்க வேண்டி நேரலாம். தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு தவிர்க்க இயலாதது. சிலரது வாழ்க்கைத் துணை வீட்டிற்குள்ளேயே தவறி விழுந்துவிடக்கூடும். சுபக்கடன் என்றாலும், அளவு அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சமையல் செய்யும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.

தை மாதம் 11, 12, 13-ஆம் தேதிகள் நற்செய்தியைக் கொண்டுவரக்கூடும்.

5, 14, 23-ஆம் எண்கள் நன்மையும், 9, 18, 27-ஆம் எண்கள் தீமையும் தரும்.

பரிகாரம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளை வணங்கவும். அருகிலுள்ள பெருமாளையும் தாயாரையும் சேவிக்கலாம். கருவுற்ற பெண்களின் தேவையறிந்து உதவுங்கள். பிற மத மனிதர்கள் நோய் சார்ந்து மருந்து, பணம் என எது இயலுமோ அதைச் செய்யுங்கள்.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் கேது. இந்த தை மாதம் உங்களது சிந்தனைகள் கொடிகட்டிப் பறக்கும். ஆனால் அதனை செயல்படுத்த முனையும்போது மிகவும் யோசிப் பீர்கள். அதற்குக் காரணம் உங்களது நண்பர்கள் எடுத்துரைப்பதும் இடித் துரைப்பதுமாகும். ஆனாலும் யோசனை சொல்கிறேன் என்று, சுற்றியிருப்பவர்களைப் பாடாய்ப் படுத்திவிடுவீர்கள். எழுத்தார்வம் உள்ளவர்கள் இந்த மாதம் பத்திரிகைக்கு எழுதிக் குவிப்பீர்கள். இந்த தேதிகளில் பிறந்த விவசாயிகள் ஏதோவொரு வலுவான காரணம் பொருட்டு அரசை எதிர்த்துப் போராட்டம் செய்வர். வியாபாரத்தில் பழைய பங்குதாரரே மறுபடியும் கூட்டணி சேர்வார். இது அரசியலுக்கும் பொருந்தும். சில மாணவர்கள் வழக்கறிஞர் கல்வியில் நாட்டம் கொள்வர். சில வழக்கறிஞர்கள் நல்ல சீனியரிடம் ஜூனியராகும் வாய்ப்பு பெறுவர். உங்களில் சில எதிரிகள் இப்போது நண்பர்களாவார்கள். உங்கள் திருமண ஏற்பாட்டின்போது நீங்களே அதனைத் தடைசெய்யும் விதத்தில் நடந்துகொள்வீர்கள். ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடக் கூடும்.

கவனம் தேவை: பெண்கள் விஷயமாக இன்னல் ஏற்படும். அரசுடன் மோதல் ஏற்படுமென்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். பண விஷயத்தில் பக்குவமாக நடக்கவேண்டும். வாடகை வீடு மாறும்போது சற்று கவனம் தேவை. காலில் சுளுக்கு போன்ற பாதிப்பு ஏற்பட இடமுண்டு. இந்த மாதம் பேச்சைக் குறைக்கவும். உடலுக்கும் உள்ளத்துக்கும் பணத்துக்கும் நல்லது.

தை மாதம் 18, 19, 20-ஆம் தேதிகள் நற்செய்தி கொண்டுவரக்கூடும்.

5, 14, 23-ஆம் எண்கள் சுபமும், 9, 18, 27-ஆம் எண்கள் பின்னடைவையும் தரும்.

பரிகாரம்: வினைதீர்த்த விநாயகரை வழிபடலாம். அருகிலுள்ள விநாயகரை இனிப்பு நிவேதனம் செய்து வழிபடலாம்.

அரச மரத்தடியில் இரு நாகர் இணைந்துள்ள அமைப்பை வழிபடவும். வயதான பிற மதத்தவருக்கு உதவுங்கள். யாருக்காவது கூடை போன்ற பொருட்களை வாங்கிக்கொடுங்கள்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த எண்ணின் நாயகன் சனிபகவான். இந்த தை மாதத்தில், இந்தத் தேதிகளில் பிறந்த சிலர் வாரிசு யோகம் கிடைக்கப்பெறுவர். கடன் அடைபடும். அது உங்களின் ஷேர்கள் நல்ல பணமதிப்பை வழங்குவதன் மூலமாகவும் இருக்கலாம். சிலர் கல்வி சார்ந்த வேலையின் பொருட்டு இடம்மாறுவர். மருமகன் வருவார். அரசியல்வாதிகள் வயதான பெண்களை ஏதோவொரு காரணத்தின் பொருட்டு சந்திப்பர். இந்த மாதம் உங்களது திருமணம் சற்று பிரச்சினையுடன் நடைபெறும். சிலரது திருமணத்தை தந்தையே தடைசெய்யக்கூடும். மிகக் குளிர்ச்சியான திரவப் பொருள் விற்பனை அதிகரிக்கும். அரசு ஒப்பந்தத்திற்கு சிலருக்குக் கையூட்டு கொடுக்க நேரும். கோபித்துக் கொண்டு சென்ற பழைய பணியாட்கள் மீண்டும் பணிக்குத் திரும்புவர். இந்த மாதம் கலைத்துறையினர் நல்ல பணவரவு காண்பர். விளையாட்டு வீரர்கள் நன்மதிப்பு பெறுவர். உங்களது பெற்றோர் இடமாறுதல் காண்பர். ஏற்றுமதி- இறக்குமதி செய்வோர் அனுமதி விஷயமாக அரசுப் பணியாளர்களுடன் அல்லல்பட வேண்டியிருக்கும்.

கவனம் தேவை: இந்த மாதம் சிலருக்கு அரசுசார்ந்த தண்டனை கிடைக்கக்கூடும்.

அரசு ஒப்பந்தங்கள் சற்று இழுபறி நிலையைத் தரும். உங்கள் தந்தைக்கு மாத்திரை, மருந்து செலவும், அலைச்சலும் உண்டு. உங்களுக்கும் உங்கள் இளைய சகோதரத்துக்கும் உங்கள் குடும்பத்தினருக்குமிடையே மனப் பிணக்கு உண்டாகலாம். சிலரது பாதத்தில் நரம்பு பிடித்து இழுப்பதுபோன்று தோன்றும். போக்குவரத்தின்போது சற்று கவனமாக இருத்தல் அவசியம். செய்த விஷயங்களையே மீண்டும் செய்யும் நிலையுண்டு.

தை மாதம் 28, 29-ஆம் தேதிகள் நல்லன எல்லாம் தரக்கூடும்.

3, 12, 21, 30-ஆம் எண்கள் முன்னேற்றமும், 1, 10, 19, 28-ஆம் எண்கள் பின்னடைவையும் தரும்.

பரிகாரம்: மதுரை சொக்கநாதர், மீனாட்சியை தரிசிப்பது நன்று. குலதெய்வம் மற்றும் சனீஸ்வரர் வழிபாடு நன்மை தரும். எங்காவது காயப்பட்டு படுத்துக் கிடக்கும் கீழ்நிலை மனிதர்களுக்கு உதவிசெய்யுங்கள். விளையாடும் இளைஞர்களின் தேவையறிந்து உதவுங்கள்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் செவ்வாய். இந்த மாதம் உங்களது சொற்கள் மிகவும் காத்திரமாக இருக்கும். எதிர்பாராத பண வரவுண்டு. இளைய சகோதரத்தின் திருமணம் நடக்கும். குத்தகை அதிர்ஷ்டம் தரும். கைபேசி நற்செய்தி கொண்டுவரும். மருமகள் வருவாள். கலையுலகினர் நல்ல முன்னேற்றமும், எண்ணிய எண்ணம் நிறைவேறவும் காண்பர். வேலை கிடைக்கும். திருமண வேலைகள் வேகமெடுக்கும். சுபச் செலவுகள் உண்டு. தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். அதற்கான பயணச் செலவு செய்வீர்கள். தொழிலில் அரசின் தலையீடு இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். புதிய பிளாட் வாங்க இயலும். சில மாணவர்கள் கல்வியின் பொருட்டு வெளியூர், வெளிநாடு செல்வர். பரம்பரை பெண் அரசியல்வாதிகள் ஏற்றம் காண்பர். வியாபாரிகள் புதிய கிளைகள் திறக்க ஏற்பாடு செய்வர். வீட்டு முதலீட்டுக்கு கடன் கிடைக்கும். பக்தியுள்ள, நன்றாக வேலை செய்யும் பணியாட்கள் கிடைப்பார்கள்.

கவனம் தேவை: பரம்பரைத் தொழில் களில் அரசியல்வாதிகள் தலையிட்டு தொல்லை தரக்கூடும். சிலரது மந்திரி பதவி ஆட்டம் காணும். பல்வலி வர வாய்ப்புண்டு. தம்பதிகளுக்குள் மூன்றாம் நபரை அனுமதிக் காதீர்கள். உங்களில் சிலர் வேலை செய்யுமிடத் தில் அவமானப்பட நேரலாம். சிலருக்கு வெளியில் தெரியாத, வேண்டாத தொடர்புகள்மூலம் நெருக்கடி ஏற்படும்.

தை மாதம் 7, 8, 9-ஆம் தேதிகள் நன்மைதரக் கூடும்.

3, 12, 21, 30-ஆம் எண்கள் நன்மையும், 7, 16, 25-ஆம் எண்கள் தீமையும் தரும்.

பரிகாரம்: திருப்பரங்குன்றம் முருகனை வணங்கவும். அருகிலுள்ள வள்ளி, தெய்வானை யுடனான முருகனை வணங்கவும். காளி போன்ற தெய்வத்தை வணங்கலாம். வயல், தோட்டம் போன்றவற்றில் வேலைசெய்யும் வயதான பெண்களுக்கு உணவுவாங்கிக் கொடுக்கவும். அல்லது அவர்களது பல், கண் சம்பந்தமான சிகிச்சைக்கு மருத்துவ உதவிசெய்யுங்கள்.

செல்: 94449 61845