1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு மாதத்தின் முதல் 15 நாட்கள் ஓஹோவென்று இருக்கும். பணவரவு செழிப்பு காணும். நினைத்த எல்லா விருப்பங்களும் நிறைவேறும். சொல்- கில்- அடிப்பீர்கள். ஆனால் 15-ஆம் தேதிக்குமேல் சற்று சரிவை சந்திக்கக்கூடும். எனோ மனதைரியம் குறைந்து தன்னம்பிக்கையின்றி இருப்பீர்கள். இந்த மாதம் வீடுவிற்கும் விஷயங்கள் வில்லங்கம் தரும். வீடு, வயல் சம்பந்தமான குத்தகை, ஒப்பந்தம் எண்ணியபடி நடக்காமல் இழுபறியாகலாம். இவை சம்பந்தமாக தடித்த பேச்சுவார்த்தை வரும். இளைய சகோதரியின் உடல்நிலை சற்று பாதிக்கப் படலாம். உங்கள் பெற்றோருடன் பணம் சம்பந்தமாக கடின வார்த்தை பேசும் நிலை யுண்டு. கலைத்தொழில் புரிவோர் சற்று குழப் பங்களை சந்திப்பர். பங்கு வர்த்தகம் சரிந்து பின்பு மீட்சிபெறும். சிலரது வாரிசுகள் சிறு ஆரோக்கியக் குறைவையடைந்து, பின்னர் குணமாகிவிடுவர். சில வாரிசுகளுக்கு எதிர் பாராதவிதமாக வேலை கிடைக்கும். தம்பதிகளுக்குள் ஊடலும் கூடலும் மாறிமாறி வரும். சில காதல் திருமணங் களில் பிரச்சினைகள் நிகழும். இந்த மாதத்தில் எதிர்பாராத நன்மைகளும் கிடைக்கப்பெறுவீர்கள். தொழில்துறையினர் சிலர் கள்ளக்கணக்குடன் விருத்தி பெறுவர். மூத்த சகோதரர்மூலம் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், மாடு, ஆடு போன்ற அசையும் சொத்துகள் வாங்குவீர்கள். சிலருக்கு கல்வியில் தடை ஏற்படலாம். சமையல் செய்யும்போது எச்சரிக்கை தேவை. அரசியல்வாதிகள், நிதித்துறை சார்ந்தவர்கள் பெரிய நன்மை காண்பர். விவசாயிகளுக்கு நன்மை- தீமை இரண்டுமுண்டு. அதிகம் படித்த மருமகன்- மருமகள் வருவர். அரசு வேலை செய்பவர்கள் மாத முற்பகுதியில் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர். முடிந்த வரை மாத முற்பகுதியில் உங்களுடைய முக்கியமான வேலைகளை முடித்துக்கொள் ளுங்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 8, 17, 26.
பரிகாரம்: கல்வி தடைப்படும் குழந்தை களுக்கு உதவவும். எந்த மதத்தைச் சேர்ந்த வராக இருப்பினும் உங்கள் வழிபாட்டில் தீபம், மெழுகுவர்த்தி ஏற்றுவதைக் கடைப் பிடியுங்கள். அது வாழ்க்கையின் வெளிச்சத் தைப் பெருக்கும்.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் மிக அதிகமாக செலவாகும். வரவு சுமாராக இருக்கும். அதிலும் மாதப் பிற்பகுதியில் பணவரவில் குறை காணப் படும். கைபேசி, டிவி., கம்ப்யூட்டர் போன்ற வற்றை வாங்குவது அல்லது பழுதுநீக்குவதன் மூலம் செலவு ஏற்படும். மனை, வயல் விஷய மாக விரயங்கள் ஏற்படும். உங்கள் இளைய சகோதரர் அவர் பங்குக்கு செலவைத் தரலாம். சிலருக்கு தொழி-ல் முதலீட்டுக்குத் தொகை தேவைப்படும். மூத்த சகோதரி விஷயமாக சற்று அல்லல்பட நேரிடும். உங்களில் சிலர் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு முன்பணம் கொடுப்பீர்கள். திரைப்படம், தொலைக் காட்சி சம்பந்தம் கொண்டவர்கள் தற்போது வேலை செய்யும் இடத்தி-ருந்து விலக நேரலாம் அல்லது மனஸ்தாபம் ஏற்படக் கூடும். அது உங்களது பேச்சின் மூலம் அமையும் என்பதால் கவனம் தேவை. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அனைவரும் மாதப் பிற்பகுதியில் வாக்கில் கவனமாக இருக்கவேண்டும். சிலசமயம் உங்களையும் அறியாமல் மிகத் தவறாகப் பேசிவிட வாய்ப்புள் ளது. தம்பதிகளுக்குள் ஒரு நன்மையும் ஒரு தீமையும் நடக்கும். பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை. சிலருக்கு நன்கு படித்த மருமகள் வருவார். கர்ப்பிணி கள் கவனமாக இருக்கவேண்டும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். சிலருக்கு காது சம்பந்தமான செலவுகள் வரலாம்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.
எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.
பரிகாரம்: வாய்பேச இயலாதவர்களுக்கு உதவவும். அம்பாளுக்கு அபிஷேகம், குடிதண்ணீர் உதவி, இளநீர் வியாபாரிகளுக்கு உதவி, குழாய் பழுதுபார்ப்பது போன்றவற்றை வாழ்நாள் முழுவதும் பின்பற்றுவது நன்று.
3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் முழுவதும் உங்களுக்குப் பணவரவு சீரான அளவில் இருக்கும். பேசும்போது உங்கள் சொற்கள் சற்று தடுமாறிப் பின் சரியாகும். உங்கள் குடும்பத் தினர் மற்றும் சொந்த பந்தங்களுடன் பழகும்போது மனநிலை தாழ்ந்து பின் சீராகும். இதுபோன்ற ஏற்றத் தாழ்வின்போது உங்கள் இளைய சகோதரர் உங்களுக்குக் கைகொடுத்து உதவுவார். வீடு, மனை, வாகன விற்பனை மற்றும் மறுமுதலீடு போன்றவை நடக்கும். உங்கள் வாரிசுகளுக்கு வேலை கிடைக்கும். சிலரது வேலையில் இடமாற்றம் உண்டு. சிலருக்குத் திருமணம் நிச்சயமாகும். வரும் வரனின் தாயார் மிக மேன்மையான நிலையுடையவராக இருப்பார். தொழில் ஆரம்பிக்க, வியாபாரம் தொடங்க எண்ணியிருப்பவர்கள் இந்த மாத முற்பகுதியில் ஆரம்பித்துவிடுங்கள். மிக நன்மையாக அமையும். பிற்பகுதியில் அரசு மற்றும் அரசியல்வாதிகளால் தடை ஏற்பட வாய்ப்புள்ளது. தந்தையின் நிலை கவனிக்கப்பட வேண்டும். அரசியல் வாதிகள் மாதப் பிற்பகுதியில் ஒரு சரிவை சந்திக்கக்கூடும். சில அரசு அதிகாரிகளின் பதவி உயர்வு கைநழுவிப் போகலாம். கலைத்துறையினர் அதிக அலைச்சல் காண்பர். இந்த மாதம் உங்களது அதிர்ஷ்டம் அல்லலுக்கு உள்ளாகும். எனவே உழைப்பில்லாத வருமானத்துக்கு ஆசைப்பட வேண்டாம். அது காலை வாரிவிடும். உங்களது மூத்த சகோதரி வேறிடம் செல்வார். மாணவர்களுக்கு கல்வி தடைப்படலாம். விவசாயிகள் சற்று தடுமாற்றம் காண்பர். சிலரது உடல்நலக் குறைவு இந்த மாதம் மறைந்து நன்கு சீராகும். எதிரிகள் மறைவர். உங்கள் கடனில் ஓரளவு அடைபடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 8, 17, 26.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: விவசாயிகள், செடி, விதை விற்பவர்களுக்கு உதவவும். மத குருமார்கள், கோவில் அர்ச்சகர்கள், கோவி-ல் வேலைசெய்வோர், சந்நியாசிகள் போன்றோ ருக்கு முடிந்த அளவு உதவவும்.
4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் பலருக்கு கண்டிப்பாகத் திருமணம் நிச்சயமாகும். அதில் சற்று கலப்பு இருக்கும். பங்கு வர்த்தகம் இந்த மாதம் வாரிவழங்கப் போகிறது. மற்றவர்களுக்கும் பணவரவு அபரிமிதமாக அமையும். பூர்வீக நிலம் நன்மைதரும். பிள்ளைகள்மூலம் மிகப்பெரிய நன்மை கிடைக்கும். உங்களில் விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள் பெரிய வெற்றியடைவர். கலைத்துறையினர் மிகப்பழமையான விஷயம் சம்பந்தமாக பெரிய நன்மையடைவர். சிலருக்கு குழந்தைப்பேறு கிட்டும். அனேகமாக அது ஆண் குழந்தையாக இருக்கும். மாதப் பிற்பகுதியில் உங்களில் சிலர் சொந்த வீட்டைவிட்டு வாடகை வீட்டுக்குச் செல்வீர்கள். சிலரது வீடு பழுதுபார்க்கும் நிலைக்கு உள்ளாகும். வீடு, வாகன விஷயத்தில் கவனம் தேவை. சிலரது வாகனங் களை அரசு எடுத்துக்கொள்ளும் அல்லது வீடு, மனையை அரசு கையகப்படுத்தக் கூடும். சிலரது வியாபாரத்தில் வாரிசுகளின் தலையீட்டால் பெரும் நன்மை கிடைக்கும். தொழி-ல் சிலபல சட்டப்புறம்பான செயல்களைச் செய்வதன்மூலம் நல்ல லாபம் பெறுவீர்கள். வாரிசுகள் சிலர் வெளியூர் செல்வர். வெளிநாடு சம்பந்தமான வேலை கிடைக்கும். சிலரது மாமியாருக்கும் தந்தைக்கும் மனஸ்தாபம் ஏற்படலாம். அரசியல்வாதிகள் சிலர் சற்று குறுக்கு வழியில் மேன்மை பெறுவர். இந்த மாதம் சந்திக்கும் நபர்களிடம் கவனத்துடன் இருக்க வேண்டும். சில தம்பதிகளுக்கு குழந்தை களால் மனப்பிணக்கு ஏற்படலாம். உழைப் பில்லாத- எதிர்பாராத இனங்களின்மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். உங்கள் திறமை யும் பணவரவைத் தரும். முயன்று வெற்றி பெறுங்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.
பரிகாரம்: வீடு கட்டும் தொழிலாளர் களுக்கு உதவுங்கள். அடுத்த மதத்தினர், திருநங்கையர், குகை போன்ற இடத்தில் வேலை செய்வோர், சுவாசக்கோளாறு உடையவர்களுக்கு உதவுவது எப்போதும் நன்மைதரும்.
5 14 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் உங்களுக்கு ஓஹோவென்று இருக்கும். தொழி-ல் முதலீடு செய்ய பணம் கிடைக்கும். தொழில் ஆரம்பிக்க எண்ணியிருப்பவர்கள் இந்த மாதம் தொடங்கிவிடுவர். இதன்பொருட்டு செலவும் ஏற்படும். சிலரது கணக்கில் வராத தொகை உங்களுக்கு தொழில் முதலீடாகக் கிடைக்கும். சிலரது கௌரவம் உயரும். மாதப் பிற்பகுதியில் செலவுகளைக் கட்டுப்படுத்தவேண்டிய நிர்பந்தம் உண்டாகும். சிலர் ஊர்பேர் தெரியாதவரின் நிலத்தை விற்று பணப்புழக்கத்திற்கு வழி ஏற்படுத்திவிடுவர். சிலரது இளைய சகோதரர் ஏதேனும் பிரச்சினையில் அகப்பட்டு உங்களுடன் வந்து தங்கக்கூடும். பூர்வீக வீடு கைக்குக் கிடைக்கும். இதுவரையில் நிலவிய வில்லங்கம் தீர்ந்துவிடும். வயிற்று வ- அல்லது கால்வ- வந்து சரியாகும். குத்தகை, ஒப்பந்தம், இளைய சகோதரர், கைபேசி, டிவி., செய்தித்துறை போன்றவற்றின்மூலம் சிலர் அவமானப்பட நேரலாம்; எச்சரிக்கையாக செயல்படவும். தொழில் சம்பந்தமான முதலீடுகளை மாத முற்பகுதியில் மட்டும் கையாளவும். பிற்பகுதியில் முதலீடு செய்யும் பணம் பயன்தராமல் போக வாய்ப்புள்ளது. இந்த தேதிகளில் பிறந்த அரசியல்வாதிகள் மாதப் பிற்பகுதியில் "கையது கொண்டு மெய்யது பொத்தி' என்பதுபோல் இருக்கவும். மாமியார் நிலைமை பிரகாசமாகும். பெற்றோரை நன்கு கவனித்துக்கொள்ளவும். திருமணம் சற்று தாமதமாகும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.
பரிகாரம்: ஆன்மிகம் சார்ந்த வழி காட்டிக்கு உதவவும். குழந்தைகளின் படிப்பு சம்பந்தமாக எப்போதும் உதவுங்கள். நரம்புக் கோளாறு, கால்- கை வ-ப்புநோய் உள்ளவர் கள், தோட்டக்காரர்கள், சிறு வியாபாரிகள், கணக்குப் பாடத்தில் தடுமாறும் சிறுவர்கள் என உங்கள் உதவி இவர்கள் சார்ந்து அமையட்டும். வாழ்க்கை பசுமையாக செழிக்கும்.
6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் அதிக எதிர்பார்ப்பு, கனவுகள், லட்சியங்கள் போன்றவற்றை வைத்துக்கொள்ள வேண்டாம். இந்த மாதம் எதை நினைத்தாலும் காரியம் கைகூடி வராது எனும்போது எதற்காக வீணாக யோசிக்கவேண்டும்? என்றாலும் இந்த மாதம் தெய்வபக்தி வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடி, திறந்திருக்கும் கோவில்களில் சென்று வணங்கச்செய்யும். சிலருக்கு திருமணமாகி வெளியூர் செல்லும் வாய்ப்புண்டு. சில புண்ணியவான்களுக்கு, "என் மனைவி ஊருக்குப் போயிட்டா' என குதூக-க்கும் வாய்ப்புமுண்டு. சிலர் வீட்டை குத்தகைக்கு எடுப்பீர்கள். சிலருக்கு வீடு பழுதுபார்க்கும் செலவு வரும். வாரிசுகளின் உடல்நலம் சற்று பாதிக்கப்பட்டு பிறகு சரியாகிவிடும். உங்கள் பேச்சே உங்களுக்கு அவமானம் தேடித்தரும் என்பதால், பேச்சில் கவனம் தேவை. சிலருக்கு வேலை கிடைக்கும். பெற்றோருக்கு ஆன்மிகப் பயணம் ஏற்படும். மருமகனைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தை இம்மாதம் தள்ளிப்போடவும். சில அரசியல்வாதிகள் அலைச்சலையும் அவ மானத்தையும் சந்திக்க நேரும்; கவனம் தேவை. மிகச்சில அரசியல்வாதிகளுக்கு சிறைவாசம் கிட்டும் அமைப்பும் உள்ளது. மாணவர்கள் சிலருக்கு வெளிநாட்டுக் கல்வி கிடைக்கும். வீட்டிற்கு மின்விசிறி, குளிர்சாதனம், ஏர்கூலர் போன்று காற்று சார்ந்த மின்பொருட்களுக்காக செலவிடுவீர் கள். சில அரசு அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் சிறையில் ஏர்கூலர் வாங்கி வைத்து ஆசுவாசம் அடையும் நிலையும் உண்டு. இந்த மாதம் தர்மம் சார்ந்த செலவுகள் நிறைய உண்டு.
அதிர்ஷ்ட எண்கள்: 8, 17, 26.
எச்சரிக்கை எண்கள்: 5, 14, 23.
பரிகாரம்: இந்த மாதம் சமையல் கலைஞர்களுக்கு உதவவும். செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமியை எப்போதும் நெய், இனிப்புகள், வெள்ளைமலர் கொண்டு வணங்குவது சிறப்பு. இனிப்பு, அலங்காரப் பொருட்கள், ஆடைகள் தானம்செய்வது வாழ்வை இனிமையாக்கும்.
7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் நினைத்தவையெல்லாம் நடக்கும். ஆனால் அத்தனை விஷயங்களுக் கும் செலவும் ஆகும். சிலர் அதிகப்படியான லஞ்சம் கொடுக்கும் நிலை வரும் அல்லது நிறைய செலவு செய்வீர்கள். அலைச்சலும் அதிகமாக இருக்கும். திருமணச் செலவு வரும். பூர்வீகசொத்து பணம் கொண்டு வரும். பங்கு வர்த்தகம் செழிப்பு தரும். சிலருக்கு லஞ்சம் கொடுத்து அதன்மூலம் அரசுவேலை கிடைக்கும். வேறுசிலர் அரசு வேலைக்கு லஞ்சம் கொடுத்து ஏமாறும் நிலையும் உண்டு. எனவே இந்த மாதம் தனியார் வேலை என்றால் சரிதான். அரசுவேலை என்றால் யோசியுங்கள். உங்களில் சிலருக்கு பதவி உயர்வு கையூட்டு மூலமாகக் கிடைக்கக்கூடும். அதி-ருந்து அதிக பணம் வந்து, போட்ட முதலை எடுத்து விடலாம். சில அரசு அதிகாரிகள், அரசியல் வாதிகள் தங்கள் கௌரவத்தைத் தொலைத்து இடம் மாறும் சூழ்நிலை ஏற்படும். தொலைக்காட்சி செய்தி சம்பந்தமாகப் பேசுபவர்கள் புகழ் பெறுவர். வீட்டுத் தரகர்களுக்கு பண வரவுண்டு. உங்களில் சிலர் வீடு மாறுவீர்கள் அல்லது வீட்டை விற்க நேரிடும். மூத்த சகோதரர்களால் நன்மையும், சற்று வருத்தமும் உண்டாகும். சிலரது மருமகன் பெரிய அவமானத்தையும் துன்பத்தையும் தரக்கூடும். தந்தையை நன்கு கவனித்துக்கொள்ளுங்கள். மாமியாருக்கு சிறு காயம் ஏற்பட நேரலாம். மனைவியால் செலவு, அலைச்சல் ஏற்பட்டாலும், அவரது அனுசரணையால் அதை சரிப்படுத்தியும் விடுவார். மறுமணம் புரிய நினைப்பவர்கள் சற்று விசாரித்து முடிவெடுக்கவும். கலைஞர்கள் ஏற்ற- இறக்கம் காண்பர்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: விவசாயிகளுக்கு களை யெடுக்கும் உபகரணம் அல்லது அதற்கான மருந்து வாங்கித் தரவும். எப்போதும் விநாயகரை வணங்குவதும், அறுகம்புல் வளர்ப்பதும், மாற்றுத்திறனாளிகளுக்கு மருந்து வாங்கிக் கொடுப்பதும், வேர்சார்ந்த மருத்துவச் செடிகளைப் பேணுவதும் வாழ்வில் தடைகளை நீக்கி வேகம் கொடுக்கும்.
8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் வரவு எட்டணா; செலவும் எட்டணாதான். வரவும் செலவும் சரியாக இருக்கும். கைபேசி பழுது நீக்குவீர்கள் அல்லது புதிது வாங்குவீர்கள். வீட்டில் பெரிய அளவில் பழுதுபார்க்கும் நிலை சிலருக்கு நேரிடும். அது உங்கள் பெற்றோர் வீடாகவும் இருக்கலாம். வேளாண்மை அதிக உழைப்பைக் கொடுக்கும். இருப்பினும் விளைச்சலும் லாபமும் அதிகமாகும். கலைத்துறையினர் வேறு மொழிகளில் பிரபலமடைவர். தொழில் மேன்மையும் கிடைக்கும். இந்த தேதிகளில் பிறந்த குழந்தைகளின் தந்தைக்கு நல்லவேலை கிடைக்கும். அது சீருடைப் பணியாக இருக்க வாய்ப்புண்டு. சில அரசு அதிகாரிகள் வாகனத்தில் செல்லும்போது காயம்பட வாய்ப்புள்ளது. சிலரது தொழிற்சாலைகள் அரசு உத்தரவால் அவமானப்பட நேரலாம். வாரிசுகளின் திருமண ஏற்பாடுகள் நடக்கும். கர்ப்பிணிகளுக்கு சற்று மருத்துவக் கண்காணிப்பு தேவைப்படும். சிலரது மருமகள் கௌரவக்குறை உண்டாகிவிட்டதென்று புலம்பக்கூடும். சிலரது மருமகனுக்கு கல்விசார்ந்த நல்ல வேலை கிடைக்கும். தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த மாதம் அதனை செயல்படுத்த வேண்டாம். ஒருசிலரது தாயாருக்கு அதிர்ஷ்ட சேவை காத்திருக்கிறது. மூத்த சகோதரர் வேலை கிடைக்கப் பெறுவார். அரசு சார்ந்த வீட்டு வரி, தண்ணீர் வரி, சொத்து வரி போன்றவற்றை மறக்காமல் செலுத்திவிடவும். இல்லையென்றால் வில்லங்கம் வந்து தொல்லை தரும்.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: குழந்தைகள் விரும்பியதை வாங்கிக் கொடுங்கள். வயதானவர்கள், ஊனமுற்றோர், கடைநிலை ஊழியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு, அவர்களது சிறுசிறு விருப்பத்தை நிறைவேற்றுதல், கூ-யைக் குறைக்காமல் கொடுத்தல், மந்த புத்தி உடையவர்களை ஏளனம் செய்யாமல் இருத்தல் போன்றவற்றை மேற்கொண்டால் வாழ்வு சுபிட்சம் பெறும்.
9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
சிலருக்கு நிச்சயமாக கைபேசித் துறை, தொலைக்காட்சி, போக்குவரத்து போன்ற துறைகளில் நல்ல வேலை கிடைக்கும். உங்கள் அலுவலகத்தில் வேலைசெய்ய நல்ல தொழிலாளர்கள் கிடைப்பார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் திருமணம் கூடிவரும். உங்களுக்குள் திடீரென்று ஒரு வீரம், சுறுசுறுப்பு, "அஞ்சாநெஞ்சன்' என்னும் பட்டம் எல்லாமே கிடைக்கும். சீருடைப் பணியாளர் களுக்கு இதுவரை இருந்துவந்த அவ மானம் அகன்றுவிடும். உங்களில் சிலர் பங்குதாரரின் தூண்டுதலால் ஒரு தீய பழக்கத் திற்கு ஆளாக நேரும். இதனால் மனைவி யுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். எனவே கவனமாக இருக்கவும். சிலர் சிறிது தயக்கம், யோசனைக்குப்பிறகு தொழி-ல் முதலீடு செய்வீர்கள். தந்தையின் உடல் நிலை சற்று பாதிக்கப்பட்டு பிறகு சரியாகி விடும். இளைய சகோதரருக்கு வேலை கிடைக்கும். சிலர் வெளிநாட்டுப் பணத்தைக் கையாளமுடியும். பேசும்போது கவனம் தேவை. குறிப்பாக இளம்பெண்களிடம் அளந்து பேசவும். இல்லையெனில் தேவை யற்ற வம்பு வரும். விவசாயிகள் எதிர்பாராத திருப்புமுனை காண்பார்கள். கலைஞர்கள் மிக கவனமாக இருக்கவேண்டிய கால கட்டம் இது. தம்பதிகள் சற்று விட்டுக் கொடுத்து நடந்துகொள்வது அவசியம். வாரிசுகளின் நலனில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.
எச்சரிக்கை எண்கள்: 6, 15, 24.
பரிகாரம்: ஆரோக்கியம் சம்பந்த மாக உதவுங்கள். இளம் வயது சிறுவர் களுக்கு விளையாட்டுக் கருவிகள் வாங்கிக் கொடுப்பது, செம்புப் பொருட்கள் தானமளிப்பது, விவசாயிகளுக்கு உதவுவது, நில மேம்பாடு பற்றி கவனமாக இருப்பது, தீயணைப்புத் துறையினருக்கு உதவுவது போன்றவை வாழ்வைப் பிரகாசமாகும்.
செல்: 94449 61845