நவம்பர் மாத எண்ணியல் பலன்கள் - சிவ.சேதுபாண்டியன்

/idhalgal/om/numerical-benefits-november-siva-sethupandian

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதத்தின் முதலிரண்டு வாரங்கள் சுமாராக அமையும். மாதம் முழுவதும் பணவரவு நன்றா கவே இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். வராது என நினைத் திருந்த தொகை, ஆச்சரியமாக வந்துசேரும். தொழிலாளர்களின் அனுசரணை கிடைக்கும். மாதத்தின் முதலிரண்டு வாரங்கள் ஒரு வேலையும் ஓடாததுபோல, கட்டிப்போட்டாற்போல இருந்தா லும், உங்கள் இளைய உடன்பிறப்பு அல்லது வாழ்க்கைத்துணை உங்களைத் தாங்கிப்பிடிப்பார். மனை விஷயத்தில் இந்த மாதம் எந்த முடிவும் எடுக்காதீர்கள். சீருடைப் பணியாளர்கள் மிகுந்த கவனமாக இருக்கவேண்டும். லஞ்ச விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. பெற்றோர் உடல்நிலையில் கவனம் தேவை. காதல் காயம் தரும். மாத நடுவில், எதிர்பாராத நன்மை ஒன்று கிடைக்கும். திருமணம் பேசி முடிக்கப்படும். சிலருக்கு மருமகன், மருமகளோடு சற்று உஷ்ண மான உரையாடல் நிகழக்கூடும். தொழில் ஓட்டத்தில் சற்று கவனமாக இருக்கவேண்டும். மேலும், தொழில் நடத்துமிடத்தில் நெருப்பு பிடிக்காதவாறு எல்லாம் சரியாக உள்ளதா என கவனியுங்கள். பிற மதத்தவர் ஒருவரின் காழ்ப்புணர்ச்சி யால், தொழில், வியாபார இடம் சேதமடையும் வாய்ப்புள்ளது. மாதப் பிற்பகுதியில், மூத்த உடன்பிறப் பின்மீது கவனம் தேவைப்படும். சமையல் செய்யும்போது எச்சரிக்கை யாக இருக்கவும். அரசியல்வாதிகள் மிக கவனமாக இருக்கவேண்டிய காலகட்டமிது. உடனிருப்பவர்களே காலை வாரிவிடுவார்கள். கலைஞர் களுக்கு வாய்ப்பு நழுவுவதுபோல தோன்றினாலும், மீண்டும் கிடைத்து விடும். அரசாங்கம், அரசு அதிகாரி கள், அரசு நிர்வாகத்தில் இருப்பவர் கள் முதலிரண்டு வாரம் சற்று தடுமாறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24.

எச்சரிக்கை தேதி: 9, 18, 27.

பரிகாரம்: அதிர்ஷ்ட திசை கிழக்கு. எனவே, கிழக்கு நோக்கி சூரியன், தீபம், உதயம் போன்ற படங் களை மாட்டிவைக்கவும். யாருக்கா வது மின்சார பல்ப் வாங்கிக் கொடுங்கள்.

rasii

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் முதலிரண்டு வாரங்கள் பண விஷயம் மிக சுமாராக இருக்கும். பின் ஒருவாறு சரியாகிவிடும். பெண் வேலையாட் கள் விடுமுறை எடுத்து சற்று இம்சை கொடுப்பர். சகோதரிகள் சற்று தொல்லை கொடுப்பர். வாகனங்கள் பழுது பார்க்கும் செலவு தரும். காதல் குழப்பம் தரும். தம்பதிகளுக்குள் அவ்வப்போது பிணக்குண்டு. வாழ்க்கைத்துணையின் வேலை விஷயத்தில் எதிர்பாராத நன்மை யுண்டு. வரவிருக்கும் விபத்தும், அவமானமும் தடுக்கப்படும். சீருடைப் பணியாளர்கள் காசு கொடுத்து புகழ் வெளிச்சத்தில் நிற்பார்கள். சிலரின் தந்தை வேலையைவிட்டு நீங்கலாம். தொழில், வியாபாரத்தில் வேலை அதிகமாக இருக்குமேயொழிய, அதற்கேற்ற லாபம் வராது. அரசியல் வாதிகள் தங்கள் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வர். பழைய கைபேசியைக் கொடுத்து புதியது மாற

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதத்தின் முதலிரண்டு வாரங்கள் சுமாராக அமையும். மாதம் முழுவதும் பணவரவு நன்றா கவே இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். வராது என நினைத் திருந்த தொகை, ஆச்சரியமாக வந்துசேரும். தொழிலாளர்களின் அனுசரணை கிடைக்கும். மாதத்தின் முதலிரண்டு வாரங்கள் ஒரு வேலையும் ஓடாததுபோல, கட்டிப்போட்டாற்போல இருந்தா லும், உங்கள் இளைய உடன்பிறப்பு அல்லது வாழ்க்கைத்துணை உங்களைத் தாங்கிப்பிடிப்பார். மனை விஷயத்தில் இந்த மாதம் எந்த முடிவும் எடுக்காதீர்கள். சீருடைப் பணியாளர்கள் மிகுந்த கவனமாக இருக்கவேண்டும். லஞ்ச விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. பெற்றோர் உடல்நிலையில் கவனம் தேவை. காதல் காயம் தரும். மாத நடுவில், எதிர்பாராத நன்மை ஒன்று கிடைக்கும். திருமணம் பேசி முடிக்கப்படும். சிலருக்கு மருமகன், மருமகளோடு சற்று உஷ்ண மான உரையாடல் நிகழக்கூடும். தொழில் ஓட்டத்தில் சற்று கவனமாக இருக்கவேண்டும். மேலும், தொழில் நடத்துமிடத்தில் நெருப்பு பிடிக்காதவாறு எல்லாம் சரியாக உள்ளதா என கவனியுங்கள். பிற மதத்தவர் ஒருவரின் காழ்ப்புணர்ச்சி யால், தொழில், வியாபார இடம் சேதமடையும் வாய்ப்புள்ளது. மாதப் பிற்பகுதியில், மூத்த உடன்பிறப் பின்மீது கவனம் தேவைப்படும். சமையல் செய்யும்போது எச்சரிக்கை யாக இருக்கவும். அரசியல்வாதிகள் மிக கவனமாக இருக்கவேண்டிய காலகட்டமிது. உடனிருப்பவர்களே காலை வாரிவிடுவார்கள். கலைஞர் களுக்கு வாய்ப்பு நழுவுவதுபோல தோன்றினாலும், மீண்டும் கிடைத்து விடும். அரசாங்கம், அரசு அதிகாரி கள், அரசு நிர்வாகத்தில் இருப்பவர் கள் முதலிரண்டு வாரம் சற்று தடுமாறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24.

எச்சரிக்கை தேதி: 9, 18, 27.

பரிகாரம்: அதிர்ஷ்ட திசை கிழக்கு. எனவே, கிழக்கு நோக்கி சூரியன், தீபம், உதயம் போன்ற படங் களை மாட்டிவைக்கவும். யாருக்கா வது மின்சார பல்ப் வாங்கிக் கொடுங்கள்.

rasii

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் முதலிரண்டு வாரங்கள் பண விஷயம் மிக சுமாராக இருக்கும். பின் ஒருவாறு சரியாகிவிடும். பெண் வேலையாட் கள் விடுமுறை எடுத்து சற்று இம்சை கொடுப்பர். சகோதரிகள் சற்று தொல்லை கொடுப்பர். வாகனங்கள் பழுது பார்க்கும் செலவு தரும். காதல் குழப்பம் தரும். தம்பதிகளுக்குள் அவ்வப்போது பிணக்குண்டு. வாழ்க்கைத்துணையின் வேலை விஷயத்தில் எதிர்பாராத நன்மை யுண்டு. வரவிருக்கும் விபத்தும், அவமானமும் தடுக்கப்படும். சீருடைப் பணியாளர்கள் காசு கொடுத்து புகழ் வெளிச்சத்தில் நிற்பார்கள். சிலரின் தந்தை வேலையைவிட்டு நீங்கலாம். தொழில், வியாபாரத்தில் வேலை அதிகமாக இருக்குமேயொழிய, அதற்கேற்ற லாபம் வராது. அரசியல் வாதிகள் தங்கள் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வர். பழைய கைபேசியைக் கொடுத்து புதியது மாற்றுவீர்கள். சிலர் வாகனம், வயல் வாங்கும் வாய்ப்புண்டு. கலைஞர்கள், விளம்பரங்கள்மூலம் லாபம் பெறுவார்கள். திருமணப்பேச்சு இழுத்துக்கொண்டே இருக்கும். அல்லது திருமணம் நடக்கும்போது தந்தை ஏதேனும் சண்டை இழுப்பார். சில காதலர்கள் தாங்களாகவே திருமணம் முடித்துக்கொள்வர். சிலரின் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்படலாம். சிலர் மகப்பேறு பெறும் நற்செய்தி கேட்கலாம். தொழில் சம்பந்தமாக, மனை வாங்க முதலீடு செய்வீர்கள். பங்கு வர்த்தகம் ஏற்ற- இறக்கத்தைச் சந்திக்கும். பிற இன, மத மருமகன், மருமகள் வரக்கூடும். பத்திரிகை, டி.வி.யில் பணிபுரிவோர் பெண் ஊழியர்கள்மூலம் வாய்ப்பை, செய்திகளைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 4, 13, 22, 31.

எச்சரிக்கை தேதி: 3, 12, 21, 30.

பரிகாரம்: அதிர்ஷ்ட திசை வடமேற்கு. உங்கள் வீட்டில் அல்லது தொழில், வியாபார இடத்தில் அம்பாள் படம் அல்லது சந்திரன், நீர்நிலை சார்ந்த படத்தை மாட்ட லாம். வயதானவர்களுக்கு தண்ணீர் கேன் வாங்கிக் கொடுங்கள்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதத்தின் முதலிரண்டு வாரங்கள் பணவிஷயம் ஓரளவு நன்றாக இருக்கும். நீங்களும் தெளிவாக யோசிப்பீர்கள். கடைசி இரண்டு வாரங்கள் பணவரவு சற்று குறைந்து, கொஞ்சம் வறண்ட வானிலையில் இருப்பீர்கள். எனினும் உங்கள் வாழ்க்கைத்துணையால் அனுசரணை உண்டு. அவரது வேலை, தொழில் நன்மையான மாற்றம் பெறும். சிலர் தங்களது வேலையில், லஞ்சமாக மனையைப் பெறும் யோகம் உண்டு. சீருடைப் பணியாளர்களுக்குப் பணியிட மாற்றம் பற்றிய தகவல்கள் வரும். முறையான ஆர்டர் கிடைக்காது. முதலிரண்டு வாரத்தில் ஆன்மிகம் சம்பந்தமான எண்ணம் பின்னடைவாகும். தந்தையிடமிருந்து வருமென நினைத்த சொத்து வராது. தொழில், வியாபாரத்தில் வரும் வருமானம் சற்று சுணங்கி பின் கிடைக்கும். சிலருக்கு வரவேண்டிய பணவரவு, வேறுவகையில் தொழில் வாய்ப்பைக் கொண்டுவரும். வேலை கிடைக்கும் சூழ்நிலை உருவாகும். சிலர் முதலிலில் இருந்த வீட்டுக்கே மாறுவார்கள். மறுமணம் சிறு குழப்பத்திற்குப் பிறகு நடக்கும். அரசியல்வாதிகள் முதலிரண்டு வாரத்துக்குள் எந்த முடிவும் எடுக்கவேண்டும். கலைஞர்கள் மாற்றத்தை சந்திப்பார்கள். கடன் குறைய ஆரம்பிக்கும்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23.

எச்சரிக்கை தேதி: 1, 10, 19, 28.

பரிகாரம்: அதிர்ஷ்ட திசை வடகிழக்கு. இந்த திசையில், வீடு, தொழில், வியாபார இடத்தில் சித்தர்கள் படத்தை மாட்டவும். சித்தர், மகான், குரு பீடங்களுக்கு காணிக்கை செலுத்தி வணங்கவும்.

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் திருமணம் இடமாற்றம் தரும். காதல் கல்யாணம் எண்ணம்போல நிறைவேறும். வீட்டுக்கடன் கிடைப்பதில் கொஞ்சம் தடங்கல் ஏற்பட்டு, பின் கிடைக்கும். வாடகைவீடு பார்ப்பதில் சிரமம் உண்டு. வேலை தேடும்போதும், புது வேலை மாறும்போதும் கொஞ்சம் குழப்பம் ஏற்படும். இந்த மாதம் வியாபாரம், வேலை, தொழில் எல்லாமே சற்று குளறுபடி காண்பித்து பின்தான் சரியாகும். சிலசமயம் உங்கள் அருமையான யோசனைகளே அதகளமாக்கிவிடும். இந்த மாதம் தடாலடியாக எதையும் செய்யவேண்டாம். பொறுமையாகக் கைக்கொள்ளவும். காதல், திருமணத்தில் முடிந்தாலும், அதனால் ஏற்படும் பின்விளைவுகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். இந்த மாதம் நிறைய வீண்செலவுகள் வரும். மகள்களுடன் மனஸ்தாபம் வரும். சிலர் பெண்களுக்காக கடன் வாங்க நேரிடும். குழந்தைகளின் கல்வி சற்று தடுமாறி பின் சரியாகும். சிலரின் வாழ்க்கைத்துணைக்கு சற்று உடல்நிலை பாதிக்கப்படலாம். சீருடைப் பணியாளர்களுக்கு இடமாற்றம் குழப்பம் தரும். அரசியல்வாதிகள் நன்றாக யோசித்து எடுக்கும் முடிவுகளும் திடீரென்று எதிர்மறையாகும். வீண் செலவாகிவிடும். கலை, சினிமா தொழிலாளர்களின் மைனஸ் பாயிண்டுகளே ப்ளஸ்ஸாகிவிடும். விவசாயிகள் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருத்தல் அவசியம். வேளாண் பொருளின் அதிக லாபத்துக்காகக் காத்திருக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24.

எச்சரிக்கை தேதி: 3, 12, 21, 30.

பரிகாரம்: அதிர்ஷ்ட திசை தென்மேற்கு. உங்களின் கடை, தொழில் இடம், வீடு போன்றவற்றில் தென்மேற்கு திசையில் கருமாரியம்மன் அல்லது நாகத்துடன் கூடிய சிவன் படத்தை மாட்டவும். பிற இனத் தவரின் திருமணத்திற்கு உதவவும்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் உங்கள் சொற்கள், யோசனைகள் முதலில் நிராகரிக்கப்பட்டு, பின் நடைமுறைக்கு உகந்ததாக அமையும். சில வேண்டாத, விரும்பத்தகாத செலவுகள் வரும். வேலையாட்கள் சற்று முரண்டு பிடிப்பர். தம்பதிகளுக்கிடையே இளைய சகோதரனால் மனபேதம் உண்டாகும். வீட்டில் பழுதுபார்க்கும் செலவுண்டு. தாயாருக்கு கொஞ்சம் உடம்பு கெடும். அல்லது தாயாருக்கும், வாழ்க்கைத்துணைக்குமிடையே சச்சரவு வரும். பங்கு வர்த்தகத்தைப் பார்த்துச் செய்யவும். காதல் ரகசியம் வீட்டுக்குத் தெரியவரும். தொழில் பங்குதாரர் கொஞ்சம் பிரச்சினை செய்வார். தொழில் முன்னேற்றத்துக்கு எதிர்மறை சங்கதிகளைச் செய்யும்போது கவனமாக இருக்கவேண்டும். கூட இருப்பவர்கள் குழிபறிக்கப் பார்ப்பார்கள். அரசியல் தொழில் செய்வோர் பணம், வாக்கு விஷயத்தில் ஏமாந்துபோக வாய்ப்புள்ளது. சில மோசமான வதந்திகள் ஊடகங்களில் வெளியாகி சினிமா, கலைஞர்கள் சற்று மன இறுக்கம் அடைவர். எதிர்மறை சக்திகளை வணங்கலாமா அல்லது மதம் தாவிவிடலாமா என்ற யோசனை உதிக்கும். அரசு வரி, வருமான வரி என அரசு சார்ந்த செலவினம் வரும்.

அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24.

எச்சரிக்கை தேதி: 9, 18, 27.

பரிகாரம்: அதிர்ஷ்ட திசை வடக்கு. கடை, வீடு, தொழில் இடங்களில் வடக்கு திசையில் பெருமாள், தாயார் படம் வைத்திருக்கவும். யாருக்காவது பச்சைநிற வஸ்திரம் வாங்கிக்கொடுங்கள்.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

நன்மையும் தீமையும் கலந்த மாதம். எதிர்பாராத நல்லதும் நடக்கும். அதற் கேற்ற விரயமும் இருக்கும். நீங்கள் கோட்டைகட்டி வைத்த லட்சியங்கள் சிலசமயம் சரிந்துவிடக்கூடும். சிலசமயம் நீங்கள் நினைக்காத ஒரு விஷயம் மிக நல்லபடியாக நிறைவேறும். பணவரவும் செலவும் சரியாக இருக்கும். சிலருக்கு கடன் வாங்க நேரிடும். சிலர் வேலையின் பொருட்டு குடும்பத்தைவிட்டு வேறிடம் செலவார்கள். தொழிலாளர்கள் சகாயம் உண்டு. சீருடைப் பணியாளர்களுக்குப் பணிச்சுமை அதிகரிக்கும். அரசியல்வாதிகள் இங்கே வாங்கி அங்கே கொடுத்து என ஒருமாதிரியாக செலவை சரிக்கட்டிவிடுவர். கலைத்துறையினர் எதிர்பாராத வருமானம் பெறுவர். ஊடகத்துறை, செய்தித்துறையினர் நல்ல வேலையும் யோகமும் பெறுவர். பங்கு வர்த்தகர், தகவல் கொடுப்பவர்கள், தரவு தயாரிப்பவர்கள் நல்ல மேன்மை பெறுவர். வாழ்க்கைத்துணைக்கு வேலை கிடைக்கும். கல்யாணப் பேச்சில் தடை வரும். சிலருக்கு வெளிநாட்டு தற்காலிலிகப் பயணம் அமையும். தந்தையின் நிலை கவனிக்கப்பட வேண்டும். ஆன்மிக விஷயம் ஆறப்போடப்படும்.

அதிர்ஷ்ட தேதி: 8, 17, 26.

எச்சரிக்கை தேதி: 1, 10, 19, 28.

பரிகாரம்: அதிர்ஷ்ட திசை தென்கிழக்கு. உங்கள் வீட்டில், கடையில் தென்கிழக்கு திசையில் கஜலட்சுமி படத்தை மாட்டவும். சிறு குழந்தைகளுக்கு இனிப்பு வாங்கிக்கொடுக்கலாம்.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் எண்ணக்குழப்பம் இருப்பினும், பணக்குழப்பம் இராது. பண விஷயம் சரளமாக இருக்கும். சிலருக்கு வாகனம் பணம் சம்பாதித்துத் தரும். விவசாயிகளுக்கு கையில் பணம் நடமாடும் நேரமிது. சொற்களுக்கு மதிப்பிருக்கும். சிலருக்கு ஆரோக்கியம் சம்பந்தமாக சிறிது செலவுண்டு. கலப்புத் திருமணம் நடக்கக்கூடும். மருமகள்மூலம் எதிர்பாராத, ஆச்சரியமான நன்மை கிடைக்கும். தொழிலில் விரயம் உண்டு. வேறுவழியில்லாமலோ அரசு ஆணைக்குட்பட்டோ தொழில் செய்யுமிடத்தை மாற்ற நேரலாம். தொழில், வேலை, வியாபாரத்தில் லாபத்தில் நஷ்டம்- நஷ்டத்தில் லாபம் என அமையும். சிலர் மறுமணம் நடந்து வேறிடம் செல்வர். வீட்டு வேலையாட்கள் உங்கள் பணப்பெருக்கத்துக்கு உறுதுணையாக வேலை செய்வர். பங்கு வர்த்தகம் பணம் தரும். சிலர் கலைத்தொழிலில் பணிபுரிவர். விளையாட்டுத்துறை, உடற்பயிற்சித்துறை, சீருடைப்பணியில் உள்ளோர் எதிர்பாராத மேன்மை பெறுவர். சிலரின் பிள்ளைகள் கடன் வாங்கித் தந்து உதவுவர்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23.

எச்சரிக்கை தேதி: 1, 10, 19, 28.

பரிகாரம்: 7, 19, 25 எண்ணில் பிறந்த வர்களுக்கு அதிர்ஷ்ட திசையாக, உங்கள் ஜாதகத்தில் கேது எந்த ராசியில் உள்ளாரோ, அந்த ராசி அதிபதியின் திசையைக் குறித்துக் கொள்ளவும். விநாயகர் படத்தை அந்த இடத்தில் வைத்துக்கொள்ளலாம். யானைக்கு கரும்பு போன்றவற்றை வாங்கிக் கொடுக்கவும்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் சிறு அலைச்சல் நிறைய இருக்கும். செலவும் அதிகமாக இருக்கும். வீட்டில் பணியாட்களின் ஒத்துழைப்பு மறுபடியும் கிடைக்கும். சிலர் வீடு மாறுவர். அரசியல் துறையினர் அநியாய விளம்பரங்களில் தங்கள் முகத்தைப் பதியச் செய்து வெளியிடுவர். வாகன மாற்றம் நன்மை தரும். சிலர் கெட்ட பழக்கங்களை விடாமல் தொடர்வர். பெண் வாரிசுகளின் வேலை விஷயத்தில் தடுமாற்றம் வந்து, பின் சரியாகும். வேலை செய்யுமிடத்தில் உங்கள்மீது ஒரு தவறான அவதூறு உருவாக வாய்ப்புள்ளது. சிலரின் தொழிற்சாலைகளில் அரசு அதிகாரிகள் கெடுபிடி காட்டி, சற்று பிரச்சினை தருவர். ஆயினும், நீங்கள் சாதுர்யமாக அதை சரிசெய்துவிடுவீர்கள். சிலசமயம் இதற்கான குறுக்கு யோசனைகளை உங்கள் வாரிசுகளே தருவர். கைபேசி மூலம் நிறைய வேலைகளை, சொந்தத் தயாரிப்புகளை வெற்றிகரமாக வெளியிட்டு லாபமடைவீர்கள். சிலர் மருத்துவத்தால் கர்ப்பமடையும் பாக்கியம் பெறுவர். பங்கு வர்த்தகம் சிலபல தடுமாற்றத்துக்குப்பின் சீராக அமையும். கலைஞர்கள் எதிர்மறைச் செயல்கள்மூலம் நிறைய வாய்ப்பு பெறுவர். உங்களில் சிலர் பத்திரிகைத்துறை சார்ந்த முதலீடு செய்வர். அல்லது நிறைய புத்தகமாவது வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட தேதி: 9, 18, 27.

எச்சரிக்கை தேதி: 1, 10, 19, 28.

பரிகாரம்: அதிர்ஷ்ட திசை மேற்கு. உங்கள் கடை, தொழில் இடங்களில் மேற்கு திசையில் நந்தி, அனுமன் படம் மாட்டவும். அந்தணருக்கு உதவவும்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் அலைச்சல் இருக்கும். ஆனால் அதில் ஒரு எதிர்பாராத நன்மையும் இருக்கும். சீருடைப் பணியாளர்மீதிருந்த ஒரு பழி நீக்கப்படும். வெளிநாட்டுப் பணப்புழக்கம் கிடைக்கும். காதலில் சிலர் ஆளை மாற்றுவார்கள். பத்திரிகை, ஊடகத்துறையினர் காதல் விஷயத்தில் மாட்டிக்கொண்ட அரசியல்வாதிகளைப் பேட்டி எடுப்பார்கள். தம்பதிகளுக்குள் சண்டை வந்து பின் சரியாகும். சிலரது கெட்ட பழக்கத்தால் சமூகத்தில் அந்தஸ்து கீழிறங்கும். ஆன்மிகத்துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு நல்ல வேலையும், லாபமும் கிடைக்கும். மூத்த சகோதரத்தால் செலவுண்டு. பங்கு வர்த்தகம் பக்கம் தலைவைத்துப் படுக்க வேண்டாம். கலைத்துறையினர் அமைதியாக இருத்தல் நலம். உங்கள் இளைய சகோதரியுடன் உங்களுக்கோ உங்கள் மளைவிக்கோ மனஸ்தாபம் ஏற்படும். இந்த மாதம் நீங்கள் பழகும், சந்திக்கும் நபர்களிடம் மிக கவனமாக இருத்தல் அவசியம்.

அதிர்ஷ்ட தேதி: 8, 17, 26.

எச்சரிக்கை தேதி: 7, 16, 25.

பரிகாரம்: அதிர்ஷ்ட திசை தெற்கு. தெற்கு திசை நோக்கி எந்த சுவாமி படமும் வைக்கக்கூடாது. ஆனால், தெற்கு திசையில் வேல், சுப்பிரமணியர் படங்கள் வைக்கலாம். இளைஞர்களுக்கு உதவுங்கள்.

செல்: 94449 61845

om011120
இதையும் படியுங்கள்
Subscribe