1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதத்தின் முதலிரண்டு வாரங்களும் வாழ்க்கை சுறுசுறுப்பில்லாமல் செல்லும். சமயங்களில் கவனக்குறைவாக அங்கங்கே இடிபட்டு அடிபட்டு அதுவேறு இம்சை தரும்.
இதுவன்றி சிலரது வாரிசுகள் ஆங்காங்கே ஏழரையைக் கூட்டிவந்து எரிச்சலைக் கூட்டுவார். மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் இவையனைத்தும் நீங்கி, ஏதோவொரு "மேஜிக்' நடந்ததுபோல புத்துணர்ச்சி வரும். வாரிசுகளுடன் புரிந்துணர்வு ஏற்படும். இதுவரை சுணங்கி வந்த யோசனைகள் விறுவிறுப்பு, சுறுசுறுப்பு கொள்ளும். "அட... இதுவரையில் இந்த யோசனை தோன்றாமல் போய்விட்டதே' என்று அங்கலாய்ப்பீர்கள். சிலரது வாழ்க்கைத் துணை உங்களை சற்று அவமானப்படுத்தும் சூழல் உருவாகும். வீடு மாற்றும் எண்ணம் செயல்வடிவம் பெறும். இந்த மாதம் வீடு மாற்றம், கடை மாற்றம் செய்பவர்கள், வாகன புரோக்கர்கள், ரியல் எஸ்டேட் துறையினர் செழிப்பு காண்பர். வீடு, வாகனம், கல்வி சார்ந்த விஷயங்களை சில தடைகளுடன் செயல்படுத்திவிடுவீர்கள். அறிவு மற்றும் கலைசார்ந்த தொழில் உடையவர்கள், தொழிலின் போக்கில் அவ்வப்போது சற்று இடையூறுகளைக் கடக்கவேண்டி வரும். பணவரவு ஓரளவு இயங்கும். சிலரது காதல் சிறு சண்டைக்குப்பிறகு திருமணத்தில் முடியும். உங்களது பெற்றோர் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வணங்கிவருவர். சிலர் சொந்த ஊரிலிருந்து பணியாட்களை அழைத்துவருவர். உங்களில் சிலருக்கு நிறைய ஆட்களை சந்திக்கும் வகையில் வேலை கிடைக்கும். நோய்த் தாக்கம் படிப்படியாகக் குறையும்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 8, 17, 26.
பரிகாரம்: இந்த மாதம் முடிந்த அளவு கோவிலில் விளக்கேற்றவும். அருகிலுள்ள கோவில்களுக்கு மின்சாரக் கட்டணம் செலுத்தலாம். மின்சார விளக்கு வாங்கிக் கொடுப்பதும் நன்று.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாத முற்பகுதியில் காசு என்னும் வஸ்து கைக்கு அகப்படாமல் ஆட்டம் காட்டும். "பணமே, நீ பக்கத்தில் வராமல் பாதாளத்துக்குப் போய்விட்டாயா?' என அல்லாடுவீர்கள். இந்த நிலையில் கைபேசியும் அதன் பங்குக்கு பழுதாகி எரிச்சலூட்டும். பணியாட்கள் அதிக பணம் கேட்டு நச்சரிப்பார்கள். பணப்புழக்கமின்றி பரிதவிக்க நேரும். ஒருவழியாக மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் இந்தப் பிரச்சினைகள் சரியாகிவிடும். கலைத் தொழில் சார்ந்தவர்கள் முதலீடு சம்பந்தமாக செலவுசெய்வீர்கள். விளையாட்டுத் துறையினருக்கு வெளியூர், வெளிநாட்டுப் பயணம் உண்டு. சிலரது வீட்டில் ஒரு பொருள் தொலைந்து பின்னர் திரும்பக் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் எதிர்பாராத ஒரு நல்ல விஷயம் வேலை சார்ந்து நடக்கும். கூடவே தந்தையின் மனஸ்தாபத்தையும் அல்லது அவரது உடல்நலக் குறைவையும் எதிர் கொள்ளவேண்டி வரும். கல்வி சம்பந்தமான கௌரவம் கிடைக்கும். விவசாயம், செங்கல் சார்ந்த தொழில்கள் அதிகரிக்கும். வாரிசு களுக்கு இடமாற்றம் உண்டு. மூத்த சகோதரி வேலை கிடைக்கப் பெறுவார். வாடகை வீட்டுப் பிரச்சினை ஓய்ந்துவிடும். உங்கள் எதிரிகள் வலிமையிழப்பர். நோய்த் தாக்கம் குறையும். மாத முற்பகுதி வீடு பழுதுபார்க்கும் செலவையும், பிற்
1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதத்தின் முதலிரண்டு வாரங்களும் வாழ்க்கை சுறுசுறுப்பில்லாமல் செல்லும். சமயங்களில் கவனக்குறைவாக அங்கங்கே இடிபட்டு அடிபட்டு அதுவேறு இம்சை தரும்.
இதுவன்றி சிலரது வாரிசுகள் ஆங்காங்கே ஏழரையைக் கூட்டிவந்து எரிச்சலைக் கூட்டுவார். மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் இவையனைத்தும் நீங்கி, ஏதோவொரு "மேஜிக்' நடந்ததுபோல புத்துணர்ச்சி வரும். வாரிசுகளுடன் புரிந்துணர்வு ஏற்படும். இதுவரை சுணங்கி வந்த யோசனைகள் விறுவிறுப்பு, சுறுசுறுப்பு கொள்ளும். "அட... இதுவரையில் இந்த யோசனை தோன்றாமல் போய்விட்டதே' என்று அங்கலாய்ப்பீர்கள். சிலரது வாழ்க்கைத் துணை உங்களை சற்று அவமானப்படுத்தும் சூழல் உருவாகும். வீடு மாற்றும் எண்ணம் செயல்வடிவம் பெறும். இந்த மாதம் வீடு மாற்றம், கடை மாற்றம் செய்பவர்கள், வாகன புரோக்கர்கள், ரியல் எஸ்டேட் துறையினர் செழிப்பு காண்பர். வீடு, வாகனம், கல்வி சார்ந்த விஷயங்களை சில தடைகளுடன் செயல்படுத்திவிடுவீர்கள். அறிவு மற்றும் கலைசார்ந்த தொழில் உடையவர்கள், தொழிலின் போக்கில் அவ்வப்போது சற்று இடையூறுகளைக் கடக்கவேண்டி வரும். பணவரவு ஓரளவு இயங்கும். சிலரது காதல் சிறு சண்டைக்குப்பிறகு திருமணத்தில் முடியும். உங்களது பெற்றோர் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வணங்கிவருவர். சிலர் சொந்த ஊரிலிருந்து பணியாட்களை அழைத்துவருவர். உங்களில் சிலருக்கு நிறைய ஆட்களை சந்திக்கும் வகையில் வேலை கிடைக்கும். நோய்த் தாக்கம் படிப்படியாகக் குறையும்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 8, 17, 26.
பரிகாரம்: இந்த மாதம் முடிந்த அளவு கோவிலில் விளக்கேற்றவும். அருகிலுள்ள கோவில்களுக்கு மின்சாரக் கட்டணம் செலுத்தலாம். மின்சார விளக்கு வாங்கிக் கொடுப்பதும் நன்று.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாத முற்பகுதியில் காசு என்னும் வஸ்து கைக்கு அகப்படாமல் ஆட்டம் காட்டும். "பணமே, நீ பக்கத்தில் வராமல் பாதாளத்துக்குப் போய்விட்டாயா?' என அல்லாடுவீர்கள். இந்த நிலையில் கைபேசியும் அதன் பங்குக்கு பழுதாகி எரிச்சலூட்டும். பணியாட்கள் அதிக பணம் கேட்டு நச்சரிப்பார்கள். பணப்புழக்கமின்றி பரிதவிக்க நேரும். ஒருவழியாக மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் இந்தப் பிரச்சினைகள் சரியாகிவிடும். கலைத் தொழில் சார்ந்தவர்கள் முதலீடு சம்பந்தமாக செலவுசெய்வீர்கள். விளையாட்டுத் துறையினருக்கு வெளியூர், வெளிநாட்டுப் பயணம் உண்டு. சிலரது வீட்டில் ஒரு பொருள் தொலைந்து பின்னர் திரும்பக் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் எதிர்பாராத ஒரு நல்ல விஷயம் வேலை சார்ந்து நடக்கும். கூடவே தந்தையின் மனஸ்தாபத்தையும் அல்லது அவரது உடல்நலக் குறைவையும் எதிர் கொள்ளவேண்டி வரும். கல்வி சம்பந்தமான கௌரவம் கிடைக்கும். விவசாயம், செங்கல் சார்ந்த தொழில்கள் அதிகரிக்கும். வாரிசு களுக்கு இடமாற்றம் உண்டு. மூத்த சகோதரி வேலை கிடைக்கப் பெறுவார். வாடகை வீட்டுப் பிரச்சினை ஓய்ந்துவிடும். உங்கள் எதிரிகள் வலிமையிழப்பர். நோய்த் தாக்கம் குறையும். மாத முற்பகுதி வீடு பழுதுபார்க்கும் செலவையும், பிற்பகுதி வாரிசு மற்றும் ஆரோக்கிய செலவையும் தரும். சிலருக்கு கலப்புமணம் கூடிவரும். அரசியல்வாதிகள் குயுக்தியாக செயல்படுவர். சிலரது மாமியார் சொந்தவீட்டுக்கு இடம் மாறுவார். காவல் துறையினருக்கு தங்கள் சொந்த இடத்தில் வேலை செய்யும் அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் இதுவரையில் இருந்த கடன்கள் விலக ஆரம்பிக்கும். மாத முற்பகுதி யில் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட வேண்டாம்.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: பண விஷயத்தில் கவனமாக இருக்கவும். சிலருக்கு பயணத்தின்போது பணம் தொலைந்துவிடவோ விரயமாகவோ வாய்ப்புண்டு. வயதான பெரியவருக்கு உணவு வாங்கிக்கொடுங்கள். அது அசைவ உணவாகவும் இருக்கலாம்.
3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் ஓரளவு பணப்புழக்கம் நன்றாகவே இருக்கும். மாதப் பிற்பகுதியில் வீடு மாறும் எண்ணம் வரும். வேலை தேடுவோருக்கு இந்த மாதம் நிச்சயமாகக் கிடைக்கும். சிலரது வாரிசுகளின் சீருடை சார்ந்த வேலை முயற்சி பலிதமாகும். கலைஞர்கள் சிலருக்கு வேலை வாய்ப்புடன் அரசு சார்ந்த இடையூறும் உண்டு. திருமண விஷயங்களில் உங்கள் தந்தை தலையிட்டு வில்லங்கம் செய்வார். இந்த மாதத்தில் தந்தை மற்றும் அரசு சம்பந்தமான பிரச்சினை நிச்சய மாக வரக்கூடும். அதில் கவனமாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரம் சார்ந்த விஷயங்களில், சட்டப்பூர்வமான விதிகளைமீறி நடக்கவேண்டாம்; பெரிய சிக்கலைத் தரும். கலைத்துறையினர் அரசியல் வாதிகளின் சம்பந்தம் பெறுவர். அரசியல் வாதிகள் தங்கள் சொந்த இடத்தில் மேன்மை பெறுவர். சில அரசு அதிகாரிகள் ஆன்மிகம் சம்பந்தமான அல்லலை அனுபவிப்பர். இதனால் மாற்றமும் ஏற்படும். வியாபாரம், தொழிலில் அரசு சார்ந்த முதலீடு கிடைக்க மாதப் பிற்பகுதியில் வாய்ப்புண்டு. அதற்கு சற்று கையூட்டு கொடுக்கவேண்டி வரும். பரம்பரை விவசாயம் லாபம் தரும். ஒரு ஒப்பந்தத்தில்- அது பெரும்பாலும் வீடு அல்லது வேலை சார்ந்து கையெழுத்திடுவீர் கள். இதற்காக கொஞ்சம் கடன்வாங்க நேரும். அது சுபச்செலவாகவே இருக்கும். சீருடைப் பணியாளர்கள் தாங்கள் விரும்பிக்கேட்ட இடமாறுதல் கிடைக்கப்பெறுவர்.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: தந்தை உங்களிடம் எதைக் கேட்டாலும் சிரமப்பட்டாவது அதை நிறைவேற்றிவிடுங்கள். செலவானாலும் பரவாயில்லை. அல்லது வயதானவர்களின் தேவையறிந்து உதவிசெய்யவும்.
4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதத்தின் முதலிரண்டு வாரங்களும் கொஞ்சம் சிரமம் தரும். உங்கள் யோசனைகள், வாரிசு, விளையாட்டு, பங்குவர்த்தகம் போன்றவையெல்லாம் கடனை இழுத்து விடும். சிலரது வீட்டில் மனைவியுடன் மனத் தாங்கல் நேரலாம். தந்தையும் தாயும் அவர் கள் பங்குக்கு பாடாய்ப்படுத்துவார்கள். வீட்டு உரிமையாளர் வாடகை விஷயமாக தகராறு செய்துவிட்டுப் போவார். ஆனால் இதற்கெல்லாம் அஞ்சுகிற ஆளா நீங்கள்! "ஜஸ்ட் லைக் தட்' என உதறிவிட்டுப் போய் விடுவீர்கள். அதற்கேற்றாற்போல் மாதத்தின் பிற்பாதி உங்களுக்கு எல்லாவிதத்திலும் கை கொடுக்கும். வாழ்க்கைத்துணை உதவிக்கரம் நீட்டுவார். நீங்கள் எப்போதோ யாருக்கோ கொடுத்த தொகை வந்துசேர்ந்து, கடன் பிரச்சினையை சமாளிக்கும். இந்த மாதம் எதிர்பாராத யோகங்கள் சிலபல வந்து, "ஹலோ... ஆர் யூ ஃபைன்?' என்று தட்டி, "ஆல் இஸ் வெல்' என பாராட்டிவிட்டுப் போகும். உங்களைச் சுற்றியுள்ளவர்கள், "இவர் எதற் குமே அசரமாட்டேன் என்கிறார். ஆனால் இவருக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கிறதே' என்று பொருமித் தீர்ப்பர். சிலரது சில பழக்கவழக்கங்கள் தெரிந்து, திருமண விஷயம் இழுபறியாகும். இந்த மாதத்தில் திருமணம் சார்ந்த விஷயங்களைத் தள்ளிப்போடுங்கள். பெற்றோர் வகையில் சற்று கவலை ஏற்பட லாம். அரசியல்வாதிகளின் குறுக்குவழிகள் இந்த மாதம் எடுபடாது. அரசு அதிகாரிகள் மருத்துவம், கடன் விஷயமாக சற்று விழி பிதுங்கும் நிலையுண்டு. கலைஞர்கள் கவன மாக இருக்கவேண்டும். சீருடைப் பணியாளர் களுக்கு தண்டனையாக இடமாற்றம் கிடைக் கக்கூடும். எனினும் சமாளித்துவிடுவீர்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 8, 17, 26.
எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.
பரிகாரம்: எந்த பிரச்சினை வந்தாலும் அமைதியாக இருக்கவும். இந்த மாதத்தின் அனைத்து பிரச்சினைகளும் உங்கள் அமைதி யால் அடிபட்டுப் போகும். கட்டட வேலை செய்பவர்களுக்குத் தேவைப்படும் மருந்து வாங்கிக் கொடுங்கள்.
5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் மட்டும் பணப்புழக்கத்தை, கொடுக்கல்- வாங்கலை நீங்கள் மேற்கொள்ள வேண்டாம். ஏனெனில் இந்த மாதம் உங்கள் பிறந்த எண்ணின் கணக்கீடுபடி பணம் தொலைந்து விடக்கூடும் அல்லது ஏதாவது குறுஞ்செய்திமூலம் ஏமாந்துவிடவும் நேரலாம். கைபேசிமூலம் பணம் அனுப்பும் போது மிக கவனம் தேவை. அதுமட்டுமல் லாது உங்கள் பேச்சே உங்களுக்குத் துன்பத்தைத் தேடித்தரும். பேச்சில் கோபம் மிகுந்திருக்கும். சிலருக்கு தந்தையின் வீடு கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் பணியாளர்கள் சற்று பொய்கூறி செலவை இழுத்துவிடுவர். நீங்கள் பேசும் சாமர்த்திய சொற்கள் குத்தகை, ஒப்பந்தம், தரகு போன்றவற்றை நீட்டிக்கச் செய்யும். வீடு, வாகனம் விஷயமாக குடும்பத்தில் கருத்து வேற்றுமை ஏற்படும். சீருடைப் பணியாளர்களுக்கு அதிகப் படியான பேச்சு இன்னலை ஏற்படுத்தும். மாத முற்பகுதியில் உங்கள் தொழிலில் அரசின் தலையீட்டால் அதிக செலவு ஏற்படும். திருமண விஷயங்களை மாத முற்பகுதியில் அமைத்துக்கொள்ளவும். கலைஞர்கள் பயணம் மேற்கொள்வர். சிலர் வாகனம், சொந்த பிளாட் வாங்க கடனுக்கு முயற்சிசெய்வீர்கள். சிலருக்கு காது சார்ந்த பிரச்சினை செலவு தரும். மாதப் பிற்பகுதியில் சிலருக்கு சட்டப் புறம்பாக நடக்குமளவுக்கு ஒரு பெரிய தைரியம் வரும். அதன்மூலம் அரசு செலவுகளைக் குறைத்து, அதிகாரிகளைக் குளிர்விக்கும் விஷயங்களை தரவுமூலம் அனுப்புவீர்கள். மாத முற்பகுதியில் அரசு சார்ந்த விஷயங் களைத் தள்ளிப்போடுங்கள். வாழ்க்கைத் துணையின் வேலை- பணம், கடன் இரண்டை யும் தரும்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.
பரிகாரம்: இந்த மாதம் அரசு சார்ந்த வரிகட்டுதல் போன்ற விஷயங்களில் கவனமாக இருக்கவும். பண விஷயத்தில் எச்சரிக்கை அவசியம். வாய்பேச இயலாதவர்களுக்கு உதவி செய்யவும்.
6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
மாத முற்பகுதியில் இடமாற்றம், செலவு, விரயம் உண்டு. அது சிலரது அளவுக்கு மீறிய பேச்சால் அல்லது அணுகுமுறையால் என ஏதோ ஒரு காரணத்தால் இருக்கும். சிலசமயம் உங்களது அளப்பரிய யோசனைகள் உங்களுக்கு வேற்றுமையைக் கொடுத்து தொல்லை தரும். சில அரசியல்வாதிகள் தங்களது திறமையின்மை, அதிர்ஷ்டக் குறைவு மற்றும் வீண்பேச்சால் தற்போதுள்ள பதவியை இழக்கநேரும்; கவனம் தேவை. மாதப் பிற்பகுதியில் ஓரளவு நிலைமை சரியாகும். மாணவர்களுக்கு கல்வியில் தடை உண்டாகக்கூடும். உயர்கல்வி மாணவர்கள் சிலர் அரசு சம்பந்தமான தண்டனை பெறக் கூடும் அல்லது காவல்துறை நடவடிக்கைக்கு ஆளாக நேரலாம்; கவனம் தேவை. இந்த மாதம் "கார்டு இருந்தால் பணமில்லை; பணமிருந்தால் கார்டு இல்லை' என, கையில் பணம் உள்ளதா என்பதே பெரும் சந்தேகமாக அமையும். அதிக எதிர்பார்ப்புகள் எதையும் இம்மாதத்தில் வளர்த்துக்கொள்ள வேண்டாம். ஏனென்றால் ஆசைப்படும் எதுவும் கிடைக்காது. பேச்சில் பொறுமை அவசியம். வாழ்க்கைத் துணைக்கு வேண்டாத சிறு பிரச்சினையால் வேலையில் இடமாற்றம் ஏற்படலாம். அது முதல் மாடியிலிருந்து இரண்டாவது மாடிக்குக்கூட இருக்கும். சிலருக்கு வீட்டுக்கடன் பிரச்சினை தீரும் அறிகுறி தென்படும். காவல் துறையினர் சிலர் அரசு மற்றும் அரசியல்வாதிகளால் அவமானப்பட நேரிடும். திருமணப் பேச்சின்போது தந்தை எதையாவது செய்து இடையூறை ஏற்படுத்துவார். இந்த மாதம் அரசு மற்றும் தந்தை விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.
எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.
பரிகாரம்: இந்த மாதம் பணம், அரசு, அரசியல், அதிகாரிகள் விஷயத்தில் மிக கவனமாக நடந்துகொள்ளுங்கள். பணத்தை பார்த்து செலவு செய்யவும். மூத்த சகோதரர் வயதில் உள்ளவர்களுக்கு பயணச்சீட்டு வாங்கிக் கொடுக்கவும்.
7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் பிரச்சினைகள் வரிசையாக வந்து உங்களுக்கு இன்னல்களைத் தரும். நீங்களோ எதனைக் கண்டும் கொஞ்சமும் அயராமல் அவற்றை எதிர்கொண்டு, அந்தப் பிரச்சினைகளை "சென்று வா' என்று வழியனுப்பி வைத்துவிடுவீர்கள். மாத முற்பகுதியில் அரசு அதிகாரிகள், அரசுத் துறையில் வேலை செய்வோர், அரசியல் வாதிகள், சீருடைப் பணியாளர்கள் ஆகியோருக்கு அவமானம், இடமாற்றம், விரயம், கௌரவ பாதிப்பு போன்றவை ஏற்படக்கூடும். ஆனாலும் நீங்கள் அதற்கெல் லாம் கலங்காமல், அவற்றை துடைத்தெறிந்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விடுவீர்கள். மாதப் பிற்பகுதியில்தான் இதனை சற்று யோசித்து, அதற்கான வழிகளைத்தேடி சரிசெய்ய முயற்சிப்பீர்கள். சிலர் இதுவரை யில் வெளியே தெரியாமல் மறைத்து வைத்த கெட்ட பழக்கத்தை விட்டொழித்து விடுவீர்கள். வேலை மாற்றம் வேண்டுவோர் கடைசி வாரத்தில் கிடைக்கப்பெறுவர். சொந்தத் தொழில் சார்ந்த விஷயங்களை இந்த மாதம் கவனமாகக் கையாளவேண்டும். புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். வேலையின் போது அடிபடாமல் கவனமாக இருக்கவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 5, 17, 23.
பரிகாரம்: தொழிற்சாலைப் பணியாளர் களுக்கு கண்ணாடி சம்பந்தமாக உதவவும்.
8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதத்தை செலவுகள் மாதமென்று சொல்லலாம். ஒன்று மாற்றி ஒன்றென செலவுகள் வரிசைகட்டி நிற்கும். கைபேசி அல்லது கைபேசியில் வரும் குறுஞ்செய்தி செலவைக் கொண்டுவரும். கொஞ்சம் அப்படி இப்படி என மகிழ்ச்சிக்காக செலவுண்டு. வேலை, தொழிலில் சிலர் சற்று அவமானத்தை சந்திக்கக்கூடும். அதனை சரிக்கட்ட சிறிது செலவுசெய்ய நேரும். இவ்வகையில் இருக்கும் பணவிரயம் போதாதென்று நட்பு வட்டாரத்திலும் செலவுகள் உண்டாகும். சிலர் அரசு அதிகாரிகள், காவல் துறையினரிடம் அல்லல்பட நேரிடும். இந்த மாதத்தில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், பூமி சம்பந்தமானவை சற்று கருணை காட்டும். விவசாயம் நல்ல முறையில் இருக்கும். மனை வாங்குவதில் முதலீடு செய்வீர்கள். கொஞ்சம் "கவனித்தால்' அரசுக் கடன் கிடைக்கும். உங்கள் வீட்டுப் பெண்பிள்ளைகள் விலை அதிகமுள்ள பொருட்களை வாங்கிவிடுவர். அரசியல்வாதிகளில் சிலர் பெரும் சரிவை சந்திக்கக்கூடும். ஒருவழியாக உங்கள் பணப்பரிமாற்ற அட்டை இம்மாதத்தில் காலியாகிவிடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.
எச்சரிக்கை எண்கள்: 3, 12, 21, 30.
பரிகாரம்: பேச்சில் கவனம் தேவை. தொழில், வேலை செய்யுமிடத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருந்தால் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.
9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் வார்த்தைகளில் கவனம் தேவை. திருமண விஷயங்கள் பரபரவென்று வேகம்பிடித்த நிலையில், சிலரது ஒரு கெட்ட பழக்கம் பற்றிய தகவல் வெளிவந்து பிரச்சினை ஏற்படக்கூடும். சிலரது கூடாத நட்பு பற்றிய உண்மை வெளிவந்து அதிர்ச்சியூட்டும். எது எவ்வாறிருப்பினும் திருமணம் விஷயமாக இந்த மாதம் முக்கிய முடிவுகளைத் தவிர்க்கவும். பங்கு வர்த்தகம் பக்கத்திலும் செல்லக்கூடாது. உங்கள் இளைய சகோதரர் இம்சை தருவார். பணியாளர்களிடம் பதவிசாக நடந்துகொள்ளவும். வாடகைவீடு பற்றிய ஒப்பந்தங்கள் சிலருக்கு கவலையூட்டும். உங்கள் தாய்மாமன் அவர் பங்குக்கு தொல்லை தருவார். உங்களுக்கும் அடிக்கடி ஞாபகமறதி ஏற்பட்டு அதுவேறு இம்சை தரும். மாதப் பிற்பகுதி உங்களுக்கு நல்ல ஆறுதலையும் மகிழ்வையும் கொடுக்கும். சில சுபச்செலவுகள் கூடிவரும். திருமண விஷயங்களில் முதல் பதினைந்து நாட்களில் விட்டதை அடுத்த பதினைந்து நாட்களில் பிடிக்க முயல்வீர்கள். நீங்கள் நம்பமுடியாத- எதிர்பாராத சில நன்மைகளும் வேகமாக நடைபெறும். அரசியல்வாதிகள் பணமுள்ள- பலமுள்ள இடமாற்றம் பெறுவர். கலைஞர்கள் அதிர்ஷ்டத்தையும் அவமானத் தையும் ஒருங்கே பெறுவர். இந்த தேதிகளில் பிறந்த அரசு அதிகாரிகள் சற்று கவனத் துடன் இருத்தல் நலம். கண் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். மாணவர்கள் அரசுமூலம் சற்று அலைபாயவேண்டி வரும். வியாபாரம் சுமாராக இருக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 8, 17, 26.
எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.
பரிகாரம்: இந்த மாதத்தின் முதலிரண்டு வாரங்களுக்கு வாழ்க்கையின் முக்கிய முடிவு களை எடுக்கவேண்டாம். அடுத்த இரண்டு வாரங்கள் நிறைய விஷயங்கள் இயல்பாகவே நன்றாக நடக்கும். மாணவர்கள் படிக்க பயனுள்ள கைபேசியைத் தரலாம் அல்லது பழுதுபார்த்துக் கொடுங்கள்.
செல்: 94449 61845