மார்ச் மாத எண்ணியல் பலன்கள்! -ஆர். மாகலட்சுமி

/idhalgal/om/numerical-benefits-march

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதத்தின் முதலிரண்டு வாரங்களில் உங்களுக்கு நிறைய மனிதர்களின் அறிமுகம், தொடர்பு, உரையாடல் என வாழ்க்கை விறுவிறுப்பாக நகரும். சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பணவரவுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். உங்கள் வேலை அல்லது தொழிலில் வெளிநாட்டு சம்பந்தம் ஏற்படும். உங்கள் வாக்குத் திண்மை லாபம் ஈட்டித்தரும். பலர் சமையல் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவர். அது பெரும்பாலும் அரசு, அரசியல் சார்ந்தவையாக அமையும். இந்த எண்களைச் சேர்ந்த பலர் அரசியலில் பிரவேசிப்பர். உங்கள் அரசியல் பங்கேற்பை மாதத்தின் முதலிரண்டு வாரங்களுக்குள் தீர்மானம் செய்துவிடுங்கள். கடைசி இரு வாரங்கள் குழப்பமாக இருக்கும். திருமணப் பேச்சுகள் சற்று சச்சரவு தந்தாலும் பிறகு அமைந்துவிடும். மறுமணத்திற்குக் காத்துக்கொண்டிருப்பவர்கள் இந்த மாதத்தின் முதல் மூன்று வாரங்களுக்குள் எப்படியாவது பேசி முடித்துவிடுங்கள். சிலருக்கு அரசு சார்ந்த வேலை அல்லது அறநிலையத்துறை சார்ந்த பாதுகாப்புப் பணி அமையும். பத்திரிகை, தொலைக்காட்சித் துறையினர் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவர். வீடு மாறுதல், வீடு மறுசீரமைப்பு செய்தல், வீடு வாங்குதல், தோட்டம், வயல் என அனைத் திலும் பிற இன, மதத்தவர் சம்பந்தம் நிச்சயமாக இருக்கும். விவசாயிகள் இந்த மாதம் முழுவதும் வேறுவிதமாக செயல்படுவர். காவல்துறையினர் தீவிரவாத வழக்குகளைக் கண்காணிக்க வேண்டியிருக்கும். உங்கள் வாரிசுகளுக்கும் உங்களுக்கும் சற்று பிணக்கு வர வாய்ப்புண்டு. இரண்டாம் வாரத்தில் உங்களில் சிலரைப் பற்றிய அவதூறு, தவறாகப் புரிந்துகொள்ளுதல், பணத்தட்டுப்பாடு, எண்ணங்கள் நிறைவேறாமை, தொழிலில் சிறு சரிவு, அரசியலில் பெண்மூலம் அவமானம் என ஏற்படக்கூடும். எனவே கடைசி இரண்டு வாரங்களில் மிகவும் கவனமாக இருக்கவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.

எச்சரிக்கை எண்கள்: 8, 17, 26.

பரிகாரம்: உங்களுக்கு கூடுதல் அதிர்ஷ்டம் தரும் எண்கள் 1, 37, 73. கோதுமை சார்ந்த உணவுகளைப் பிறருக்குக் கொடுக்கவும்.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

முதலிரண்டு வாரங்கள் "தாங்கமுடியல சாமி' என்ற விதத்தில் இருக்கும். கடைசி இரண்டு வாரங்கள் மிகவும் நிம்மதி பெறுவீர்கள். வார்த்தைகளில் கவனமாக இருக்கவும். எதைத் தொட்டாலும் வீண்விரயம் ஏற்படக்கூடும். வீடு பழுதுபார்க்க நேரலாம். நீங்கள் செய்யும் காரியங்கள் சற்று எதிர்மறையாக நடக்கலாம். மூத்த சகோதரிக்கு சற்று உடல்நல பாதிப்பு ஏற்படும். உங்கள் தந்தை விஷயமாகவும் பணச்செலவு ஏற்படலாம்.

march month

அதுபோல வாழ்க்கைத்துணையுடனும் சற்று மனக்கசப்பு ஏற்படக்கூடும். பொதுவாக முதலிரண்டு வாரங்களில் இவ்வாறு நடக்கும். இதில் உங்கள் வாரிசுகள் உங்களுக்கு நல்லதொரு தீர்வைச்சொல்லி ஆறுதல் தருவர். மார்ச் இரண்டாம் வாரத்திற்குப்பிறகு எல்லாமே சரியாகிவிடும். பணப்புழக்கம் ஆரம்பித்துவிடும். வீடு பழுதுபார்த்து முடிக்கப்படும். புதிய கைபேசி வாங்குவீர்கள். இந்த காலத்தில் நீங்கள் எண்ணியவையெல்லாம் ஈடேறும். வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்கள் நன்கு கூடிவரும். அரசியல்வாதிகள் முதலிரண்டு வாரங்களில் எந்த முடிவையும் எடுக்கவேண்டாம். கடைசி இரண்டு வாரங்களில் தீர்க்கமாக யோசித்து எடுக்கும் முடிவுகள் மிகவும் நன்மை தரும். வெற்றி, ஆதாயம், லாபம் எல்லாம் தரும். உடல்நிலையில் சற்று கவனமாக இருக்கவும். ஒழுக்கமாக இருக்கவும். தீய பழக்கங்கள் தேடிவரும்; கவனம் தேவை. தொழில், வேலை, விய

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதத்தின் முதலிரண்டு வாரங்களில் உங்களுக்கு நிறைய மனிதர்களின் அறிமுகம், தொடர்பு, உரையாடல் என வாழ்க்கை விறுவிறுப்பாக நகரும். சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பணவரவுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். உங்கள் வேலை அல்லது தொழிலில் வெளிநாட்டு சம்பந்தம் ஏற்படும். உங்கள் வாக்குத் திண்மை லாபம் ஈட்டித்தரும். பலர் சமையல் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவர். அது பெரும்பாலும் அரசு, அரசியல் சார்ந்தவையாக அமையும். இந்த எண்களைச் சேர்ந்த பலர் அரசியலில் பிரவேசிப்பர். உங்கள் அரசியல் பங்கேற்பை மாதத்தின் முதலிரண்டு வாரங்களுக்குள் தீர்மானம் செய்துவிடுங்கள். கடைசி இரு வாரங்கள் குழப்பமாக இருக்கும். திருமணப் பேச்சுகள் சற்று சச்சரவு தந்தாலும் பிறகு அமைந்துவிடும். மறுமணத்திற்குக் காத்துக்கொண்டிருப்பவர்கள் இந்த மாதத்தின் முதல் மூன்று வாரங்களுக்குள் எப்படியாவது பேசி முடித்துவிடுங்கள். சிலருக்கு அரசு சார்ந்த வேலை அல்லது அறநிலையத்துறை சார்ந்த பாதுகாப்புப் பணி அமையும். பத்திரிகை, தொலைக்காட்சித் துறையினர் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவர். வீடு மாறுதல், வீடு மறுசீரமைப்பு செய்தல், வீடு வாங்குதல், தோட்டம், வயல் என அனைத் திலும் பிற இன, மதத்தவர் சம்பந்தம் நிச்சயமாக இருக்கும். விவசாயிகள் இந்த மாதம் முழுவதும் வேறுவிதமாக செயல்படுவர். காவல்துறையினர் தீவிரவாத வழக்குகளைக் கண்காணிக்க வேண்டியிருக்கும். உங்கள் வாரிசுகளுக்கும் உங்களுக்கும் சற்று பிணக்கு வர வாய்ப்புண்டு. இரண்டாம் வாரத்தில் உங்களில் சிலரைப் பற்றிய அவதூறு, தவறாகப் புரிந்துகொள்ளுதல், பணத்தட்டுப்பாடு, எண்ணங்கள் நிறைவேறாமை, தொழிலில் சிறு சரிவு, அரசியலில் பெண்மூலம் அவமானம் என ஏற்படக்கூடும். எனவே கடைசி இரண்டு வாரங்களில் மிகவும் கவனமாக இருக்கவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.

எச்சரிக்கை எண்கள்: 8, 17, 26.

பரிகாரம்: உங்களுக்கு கூடுதல் அதிர்ஷ்டம் தரும் எண்கள் 1, 37, 73. கோதுமை சார்ந்த உணவுகளைப் பிறருக்குக் கொடுக்கவும்.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

முதலிரண்டு வாரங்கள் "தாங்கமுடியல சாமி' என்ற விதத்தில் இருக்கும். கடைசி இரண்டு வாரங்கள் மிகவும் நிம்மதி பெறுவீர்கள். வார்த்தைகளில் கவனமாக இருக்கவும். எதைத் தொட்டாலும் வீண்விரயம் ஏற்படக்கூடும். வீடு பழுதுபார்க்க நேரலாம். நீங்கள் செய்யும் காரியங்கள் சற்று எதிர்மறையாக நடக்கலாம். மூத்த சகோதரிக்கு சற்று உடல்நல பாதிப்பு ஏற்படும். உங்கள் தந்தை விஷயமாகவும் பணச்செலவு ஏற்படலாம்.

march month

அதுபோல வாழ்க்கைத்துணையுடனும் சற்று மனக்கசப்பு ஏற்படக்கூடும். பொதுவாக முதலிரண்டு வாரங்களில் இவ்வாறு நடக்கும். இதில் உங்கள் வாரிசுகள் உங்களுக்கு நல்லதொரு தீர்வைச்சொல்லி ஆறுதல் தருவர். மார்ச் இரண்டாம் வாரத்திற்குப்பிறகு எல்லாமே சரியாகிவிடும். பணப்புழக்கம் ஆரம்பித்துவிடும். வீடு பழுதுபார்த்து முடிக்கப்படும். புதிய கைபேசி வாங்குவீர்கள். இந்த காலத்தில் நீங்கள் எண்ணியவையெல்லாம் ஈடேறும். வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்கள் நன்கு கூடிவரும். அரசியல்வாதிகள் முதலிரண்டு வாரங்களில் எந்த முடிவையும் எடுக்கவேண்டாம். கடைசி இரண்டு வாரங்களில் தீர்க்கமாக யோசித்து எடுக்கும் முடிவுகள் மிகவும் நன்மை தரும். வெற்றி, ஆதாயம், லாபம் எல்லாம் தரும். உடல்நிலையில் சற்று கவனமாக இருக்கவும். ஒழுக்கமாக இருக்கவும். தீய பழக்கங்கள் தேடிவரும்; கவனம் தேவை. தொழில், வேலை, வியாபாரம் எல்லாம் சற்று பின்னடைவை சந்தித்துப் பின் சரியாகும். திருமணப் பேச்சுவார்த்தைகள் நடக்கும். மருமகன், மருமகளிடம் கவனமாகப் பழகவும். அது போல மாமியாரிடம் மரியாதையுடன் நடந்து கொள்வதும் அவசியம்.

அதிர்ஷ்ட எண்கள்: 4, 13, 22, 31.

எச்சரிக்கை எண்கள், 7, 16, 25.

பரிகாரம்: உங்களுக்கு 2, 38, 74 ஆகிய எண்கள் கூடுதல் அதிர்ஷ்டம் தரும். அரிசி, காய்கறி, கிழங்குகள் சார்ந்த உணவுகளையும், மோர்போன்ற திரவ உணவையும் பிறருக்குக் கொடுக்கவும்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் பேச்சில் கவனம் தேவை. தவறாகப் பேசி மன்னிப்பு கேட்க நேரும். தேவைக்குப் பணம் கிடைக்காது. ஆனாலும் பண நடமாட்டம் இருக்கும். மாதம் தொடங்கிய வுடன் திருமணப் பேச்சுகள் வேகமாக நடக்கும். தொழில் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் ஆரம்பிக்கும். வேலைக் கான விண்ணப்பங்களை விரைவாக அனுப்புவீர்கள். வீடு, மனை வாங்க, வீடுகட்ட, வாகனம் வாங்க என எல்லா கடன்களுக் கும் விண்ணப்பிப்பீர்கள். கையில் பணமில்லா விட்டாலும் பெரும் தொகையைக் கடனாகக் கேட்கவும் மனதில் ஒரு தைரியம் வேண்டும். பாராட்டத்தக்க அந்த தைரியம் இந்த மாதம் முதல் பதினைந்து நாட்களில் பலமாக இருக்கும். அடுத்துவரும் நாட்களில் நீங்கள் கேட்ட கடன் கிடைக்கும். வேலைக்கான உத்தரவு வரும். தொழில் தொடங்க லைசன்ஸ் கிடைக்கும். இந்த வேலை விஷயங்களால் நீங்கள் அலைந்துகொண்டே இருப்பீர்கள். இதில் முக்கியமான விஷயம்- சிலருக்கு லஞ்சம் கொடுக்கவும் நேரும். ஆனால் இதில் ஆறுதல் என்னவென்றால் நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் மிக அற்புதமாக- நிறைவாக நடக்கும். வேலையும் நல்ல வருமானம் வரும் இடத்தில் அமையும். மறுமணத்திற்குக் காத்திருப் போர் நல்ல மனைவி கிடைக்கப்பெறுவர். மாதப் பிற்பகுதியில் திருமணம் நிச்சயமாகும். இளைய சகோதரரின் திருமணம் நடக்கும். பத்திரிகை, தொலைதொடர்புத்துறை பிரகாசிக்கும். அதுவும் மாதப் பிற்பகுதியில் பல திரைப்படம், தொலைக்காட்சி நட்சத்திரங்கள் புகழ் உயரப் பெறுவர். அனைவரும் உடல் நலனில் கவனமாக இருக்கவேண்டும். உணவு ஒவ்வாமை போன்ற விஷயங்களில் கவனம் தேவை. இந்த மாதம் எதிர்பாராத யோகம் வர வாய்ப்புள்ளது. காவல், நிலம், கட்டடம், பொழுதுபோக்கு, மருத்துவம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள் ஏதோ ஒரு நன்மையை அடையப் போகிறீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 2, 11, 20, 29.

பரிகாரம்: உங்களுக்கு 30-ஆம் எண் கூடுதல் அதிர்ஷ்டம் தரும். கடலை, கிழங்கு, மஞ்சள்நிறப் பழங்களை பிறருக்குக் கொடுங்கள்.

4 13 22 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாத முற்பகுதியில் விதை விதைத்து, மாதப் பிற்பகுதியில் அறுவடை செய்வீர்கள். ஆம்; முற்பகுதியில் அதிகமான வேலை இருக்கும். பிற்பகுதியில் அதன் லாபம் கிடைக்கும். இந்த அதீத உழைப்பு, அலைச்சல் உங்களுக்கு சற்று கோபத்தையும் டென்ஷனையும் உருவாக்கலாம். மாதம் முழுவதுமே பணவரவு இருந்துகொண்டே இருக்கும். வாக்கினால் தொழில் செய்பவர்கள் நிறைய வெகுமதி கிடைக்கப்பெறுவர். வீடு, வாகனம் வாங்க உங்கள் அலுவலகத்திலேயே கடன் கிடைக்கும். அரசு வேலைக்கும் வாய்ப்புண்டு. நிறைய பேர் உங்களை சந்திக்க வருவார்கள். உங்களில் சிலருக்கு "சைடு இன்கம்' நிறைய கிடைக்கும். திருமண விஷயங்கள் கூடிவரும். உங்களது தந்தை உடல்நலத்தில் சற்று கவனம் தேவை. அவருக்குப் பணிவிடை செய்வதால் தாயாருக்கு சிரமம் ஏற்படக்கூடும். இந்த மாதம் உங்களுக்கு வரும் மருமகன் அல்லது மருமகள் நல்ல பணவசதி, செல்வாக்கு, அரசு வேலையோடு அமைவார். அரசியல்வாதிகள் தங்கள் சொந்தத் தொகுதி அல்லது பிறந்த இடத்தில் போட்டியிட்டு வெற்றிபெறும் வாய்ப்புண்டு. பலருக்கு அரசு சம்பந்தமான ஒப்பந்தம் கிடைக்கும். மறுமணத்திற்குக் காத்திருப்போருக்கு அதேவகை ஜோடி சேரும். இந்த மாதம் வாழ்க்கைத்துணை மிக இணக்கமாக இருப்பார். ஆனால் இடையிடையே சண்டைக்கும் இடமுண்டு. அதுபோன்ற சமயங்களில் தம்பதிகள் பொறுமையாக இருக்கவும். இந்த மாதம் பங்கு வர்த்தகம் ஆச்சரியப்படுமளவுக்கு லாபம் தரும். விவசாயிகள், மீனவர்கள் எதிர்மறையாக செயல்பட்டு மேன்மையடையப் போகிறார் கள். சிறு வியாபாரம் செய்பவர்கள் இந்த மாதத்தில் முன்னேற்றப் பாதையின் முதல் அடியை வைத்து மேன்மையடைய முயற்சி செய்யுங்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 3, 12, 21, 30.

பரிகாரம்: கூடுதல் அதிர்ஷ்ட எண் 67 ஆகும். அசைவ உணவு, முட்டை சேர்த்த கேக்கை பிறருக்குக் கொடுக்கவும்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் நீங்கள் எதிர்பார்த்த நன்மைகள் தாமதமாகவும், எதிர்பாராத விஷயங்கள் நன்கு நடக்கவும் கூடும். முக்கியமாக அரசு, அரசியல் சார்ந்த செயல்கள் நீங்கள் முற்றிலும் எதிர்பாராத விதத்தில் நடக்கும். வேலை தேடுவோர் சற்று செலவு, அலைச்சலுக்குப்பிறகு கிடைக்கப்பெறுவர். திருமண விஷயங்கள் சற்று குளறுபடியாகும். நீங்கள் நன்கு முயன்றால் திருமணம் கூடிவரும். சிலருக்கு வேலையில் இடமாற்றம் உண்டு. கொஞ்சம் மருத்துவச் செலவும் வரலாம். நீங்கள் சந்திக்கும் நபர்கள் சற்று குதர்க்கமாக- மிகவும் புத்திசாலித்தனமாகப் பேசுவர். உங்களுக்கு அவர்களால் வேலை நடக்கவேண்டுமென்ப தால், வேறு வழியில்லாமல் சகித்துக் கொள்வீர்கள். சிலர் "தர்ம ஸ்தாபனங்களுக்கு பணம் வசூலிக்கிறேன்' என்ற பெயரில் தாங்கள் லாபம் ஈட்டுவார்கள். சிலர் தர்மம் செய்ததுபோல் பெயர் வாங்கிவிடுவார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன்- மனைவிக்குள் ஊடலும் கூடலும் கலந்தே வரும். பலருக்கு மாற்றங்கள் நடக்கும். பிள்ளைகளின் பொருட்டு வீடுமாற்றம், தொழிலில் இடமாற்றம், தந்தை அல்லது பேரன்- பேத்திகள் வசதிக்காக மாறுதல், பணப்பரிவர்த்தனை மாறுதல், உயர்பதவியில் பெயர்ச்சி, அதிர்ஷ்டம் தரும் நிகழ்வுகள் என நிறைய மாற்றங்கள் உண்டு. இந்த மாதம் உங்கள் வேலை அல்லது தொழிலில் சற்று பின்னடைவு ஏற்படுவது போல தோன்றினால் கவலை வேண்டாம். அது வேறொரு அதிர்ஷ்டத்தை அழைத்துவரும். மாதப் பிற்பகுதி மிகவும் நன்றாக அமையும். இளைய சகோதரர், பத்திரிகை, தொலைக்காட்சித்துறை, கைபேசி, குறுந்தகவல் என இவை சார்ந்த இன்னல்கள் தீர்ந்துவிடும். விவசாயிகள் நல்ல நன்மை கிடைக்கப் பெறுவர். அரசு சந்திப்பின்மூலம் மீனவர்கள் சில நன்மைகளைப் பெறுவர். வீடு, வாகனப் பழுதுச் செலவுண்டு.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: 50-ஆம் எண் கூடுதல் அதிர்ஷ்டம் தரும். பச்சைக் காய்கறிகள், பச்சைப் பழம் ஆகியவற்றை பிறருக்குக் கொடுங்கள்.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இவர்களுக்கு மாதம் முழுவதுமே யோகம்தான். அதிர்ஷ்டம் அன்புடன் அரவணைக்கும். எதிர்பாராத நல்ல யோகங் களும் உண்டு. மாத முற்பகுதியில் சில எரிச்ச லான நிகழ்வுகள், பிள்ளைகளுடன் கருத்து வேற்றுமை, கலைத்துறையில் இடர், பயணம் என சிறுசிறு சம்பவங்கள் வந்து விலகும். உங்களுக்கும் வாழ்க்கைத் துணைக்குமிடையே ஏதோ ஒரு மனஸ்தாபம் ஏற்படலாம். வாய்ப்பு டைய சிலர் தற்காலிகமாக தாய்வீட்டுக்கு செல்லக்கூடும். வாய்ப்பில்லாதவர்கள் வீட்டுக்குள் அமரமுடியாமல் திண்ணை அல்லது பூங்காவில்போய் அமரவேண்டியது தான். இவ்விதம் கருத்துவேறுபாடு வரா விட்டால் உடல்நிலையில் சற்று பாதிப்பு ஏற்படக்கூடும். பேசுவதைக் குறைக்கவேண்டும். எல்லாம் நல்லபடியாக இருக்கும். அரசியல் வாதிகள் தாங்களே நினைத்துப் பார்த்திராத தொகுதி கிடைக்கப்பெறுவர். இந்த எண்களைச் சேர்ந்த பெண் அரசியல்வாதிகள் நல்ல யோகம் பெறுவார்கள். இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் அனைவருக்குமே எல்லா வகையிலும் பெருமை, யோகம், கௌரவம், வேலை என நன்மைகள் அனைத்தும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

பரிகாரம்: 24, 60, 96 ஆகியவை கூடுதல் அதிர்ஷ்டம் தரும். பிறருக்கு இனிப்பு உணவு களை வழங்கவும்.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் நட்பு வட்டாரம் பெருகும். அதில் பெரும்பாலும் பிற மத, இனத்தவர்களின் நட்பு அதிகமிருக்கும். சிலரது காதல் முயற்சிகள் மாதப் பிற்பகுதியில் வெற்றியடையும். சற்று போராட்டத்துக்குப்பின் திருமணம் நடக்கும். தம்பதிகளிடையே பிணக்குகள் வரக்கூடும். வாரிசுகள் கல்வி விஷயமாக புதிய கைபேசி கேட்பர். பணம் சம்பந்தமாக வரும் குறுந்தகவல்களை நன்கு பரிசீலிக்கவும். வீடு மாற்றம் உண்டு. இந்த மாதம் கலைத்துறையினர் மிக நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கப்பெறுவர். சிலருக்கு வெளிநாடு சம்பந்தமான வேலை கிடைக்கும். உங்கள் வாரிசுகள் சிலர் பொழுதுபோக்கு, தகவல் துறையில் வேலை கிடைக்கப்பெறுவர். சிலருக்கு வீடு அல்லது கல்வி அல்லது தாய் விஷயமாக கவலைகொள்ளும் செய்தியைக் கேட்க நேரும். ஒருசில குழந்தைகளுக்கு பள்ளிக்குச் செல்ல இயலாத அல்லது கல்விகற்க முடியாத சூழல் உண்டாகும். விருப்பத் திருமணங்கள் நிறைய நடக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. அரசு வேலை கிடைக்கும் சமயத்தில் தடை, தாமதம் ஏற்படலாம். அதுபோல் அரசு, அரசியல் சம்பந்தமாகவும் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கக்கூடும். வாழ்க்கைத் துணைக்கு இடமாறுதலுடன் வேலை கிடைக்கும். உங்கள் வீடு அல்லது கிணறு சம்பந்தமாக மாமியாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு பெற்றோர்களுடன் மனக்கசப்பு நேரலாம். பணவரவு ஒரே நிலையில் இருக்காது. அரசியல்வாதிகளுக்கு பெரும்பாலும் பரிச்சயமான இடங்களில் சேவைசெய்ய வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு ஏற்கெனவே அறிமுகமானவருடன் மறுமணம் நடக்கும். பத்திரிகை, தகவல் தொடர்பு, கைபேசி சம்பந்த வியாபாரம் நன்கு நடக்கும். பொதுவாக உங்கள் வேலை, தொழில், சேவை என அத்தனையும் நன்றாகவே நடக்கும். ஆனால் பணவரவு மட்டும் சற்று குறையக்கூடும். மாதக்கடைசியில் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்கவும். பொழுதுபோக்கு செலவு அதிகரிக்கும். மருமகன், மருமகள் அறிவுப்பூர்வமாக உதவுவர். பங்குவர்த்தகம் சற்று குறைந்து பிறகு லாபம் தரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 11, 20, 29.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

பரிகாரம்: 70-ஆம் என் கூடுதல் அதிர்ஷ்டம் தரும். விதைகளுடன்கூடிய பழங்கள், காய்கறிகளைப் பிறருக்குக் கொடுக்கவும்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் உங்களுக்குப் பணவரவு ஒருவழியில் மட்டுமல்ல; பலவழிகளிலும் வந்து கொட்டும். வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு, பணபாக்கி மொத்தமாகக் கிடைப்பது, கொடுத்த கடன்தொகை வருவது, அதிர்ஷ்டம்மூலம் தனலாபம், தொழில் மேன்மை அடைவதால் கிடைக்கும் நன்மை, வாரிசுகள்மூலம் வரவு என அனைத்து வழிகளும் பணவரவை நோக்கியே நகரும். சிலரோ பணம் அதிகரித்த மகிழ்ச்சியில் நன்றாக செலவு செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். புதிய கைபேசி என்ன- புதிய டி.வி என்ன- புதிய ஆடை அணிகலன்கள் என்ன என நன்றாக செலவு செய்வார்கள். இந்த செலவுகளுக்கு முக்கியக் காரணம் கைபேசியில் வரும் குறுஞ்செய்திகளாகும். பொழுதுபோக்கு சார்ந்த தொழில் நன்கு நடக்கும். அதுபோல திரைப்படம், தொலைக்காட்சிக் கலைஞர்களும் தங்களைப் பற்றிய செய்திகளை பரவச் செய்து முதலிடம் பெற்றுவிடுவர். உங்களில் சிலரது வாரிசுகள் தொலைக்காட்சியில் தோன்ற வாய்ப்புள்ளது. தரகு, ஒப்பந்தம் போன்ற வேலைகள் மிக மேன்மையாக செயல்படும். மாதப் பிற்பகுதியில் இளைய சகோதரர் அல்லது அரசு சார்ந்த வரி என சற்று இம்சை தரலாம். சிலருக்கு பெற்றோர் சம்பந்தமாக கருத்து வேறுபாடு வரும். மாதப் பிற்பகுதியில் மாமியார் அற்புதமான தகவல்களையும் அதிர்ஷ்டச் செய்திகளையும் தருவார். திருமண ஏற்பாடு சம்பந்தமான செலவும் அலைச்சலும் உண்டு. சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களது மருமகன், மருமகள் பூர்வீக சொத்துப் பிரிவினை பற்றிய பேச்சைத் தொடங்குவார்கள். அரசியல்வாதிகள் மிக கவனமாக இருக்கவேண்டும். பொழுதுபோக்கு சம்பந்தமான ரகசிய செய்திகள் வெளிவந்து அவமானப்பட வைக்கக்கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

பரிகாரம்: கூடுதல் அதிர்ஷ்டம் தரும் எண் 62. சற்று காரமான, மசாலா சேர்த்த அசைவ உணவுகளைப் பிறருக்குக் கொடுக்கவும்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் உங்களது உயர்வுக்கும் தாழ்வுக்கும் நீங்களும் உங்கள் பேச்சுமே முழுப் பொறுப்பாகும். மாத முற்பகுதியானது நிறைய லாப வருமானங்களை அள்ளியள்ளித் தரப்போகிறது. பிற்பகுதி நிறைய செலவுகளைத் தரும். சிலருக்கு இந்த மாதம் விபரீத சிந்தனைகள் பல தோன்றும். வித்தியாசமான இந்த சிந்தனைகள் நீங்கள் எண்ணிய செயல்களையெல்லாம் வெற்றிகரமாக முடித்துக்கொடுக்கும். கைபேசி வேண்டுமா? கிடைக்கும். பங்குப் பத்திர லாபம்? அதுவும் கிடைக்கும். குழந்தைகளால் பெருமை? அதுவும் உண்டு. திரைப்படம், தொலைக்காட்சி வாய்ப்பு? இரட்டிப்பாக உண்டு. வேலை கிட்டும். சிலருக்கு திருமணம் கூடிவரும். தொழிலில் விருத்தியுண்டு. ஆக, நீங்கள் எண்ணியவை எல்லாம் நன்றாக நடக்கும். இவ்வளவு நன்றாக நடந்தபிறகு வாய் சும்மா இருக்குமா? இதன் காரணமாக மாதப் பிற்பகுதி சற்று அலைச்சல் கொடுக்கும். கைபேசியால் பணம் விரயமாகும். வேலைப்பளு கூடும். ஆக, கிடைத்த எல்லா வற்றிலும் சற்று செலவுகளும் அலைச்சலும் உண்டு. எனவே, முற்பகுதியில் வாயைக் கட்டுப் படுத்துவது அவசியம். உணவுகூட கண்டதை உண்ணாமல் அளவாக சாப்பிடவேண்டும். தொழில் முதலீடு உண்டு. வியாபாரிகள் கிடைக்கும் லாபத்தை முதலீடு செய்துவிடுங்கள். இல்லையெனில் வீண் விரயமாகிவிடும். வாரிசுகள் வேலை காரணமாக வெளியூர் செல்ல லாம். அரசுப் பணிபுரிவோருக்கு பதவி உயர்வு டன் இடமாற்றம் உண்டு. தந்தை உடல்நலனில் கவனம் தேவை. சிலர் சொந்தத் தொழில் தொடங்குவர். மாமியாரால் செலவுண்டு. சகோதரர்களால் செலவும் வரவும் உண்டு. திருமணம், மறுமணம், சமையல் போட்டி, அரசியல் ஆகிய விஷயங்களை மாத முற்பகுதி யில் முடிவெடுத்தால் நற்பலன் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு தொகுதி கிடைத்தாலும் செலவும் அதிகரிக்கும். வேலை பற்றிய தகவல் எதிர்பாராத நன்மை தரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.

பரிகாரம்: 90-ஆம் என் கூடுதல் அதிர்ஷ்டம் தரும். அசைவ உணவு, வெளியூர், வெளிநாட்டு உணவுகளை சூடாக பிறருக்குக் கொடுங்கள்.

செல்: 94449 61845

om010321
இதையும் படியுங்கள்
Subscribe