1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் முழுவதும் உங்கள் சிந்தனை தொழில் பற்றியதாகவே அமையும். தொழிலி-ல் என்னவிதமான சூட்சுமங்களைச் செய்து விருத்திசெய்யலாம் அல்லது அரசிய-லில் எந்த பதவியை யார்மூலம் அடையலாமென ஓயாத சிந்தனை வந்துவந்து போகும். ஒருவழியாக இந்த மாதம் இரண்டாம் வாரத்திற்குப்பின் நினைத்ததை அடைந்து விடுவீர்கள். நீங்கள் விரும் பிய அரசியல் பதவி, அரசுப் பதவி, அரசு சார்ந்த பதவி என ஏதோவொன்றைத் தட்டிப் பறித்துவிடுவீர்கள். மாதம் முழுவதும் உங்கள் கைபேசி நல்ல தகவல்களை மட்டுமே கொண்டுவரும். அவை உங்கள் எண்ணம் ஈடேற மிகவும் துணைபுரியும். இளைய சகோதரி சார்ந்த விஷயம் நல்லமுறையில் நடக்கும். கலைத்துறையினர் தங்கள் துறைக் குள் ஒரு பரிவர்த்தனை முறையில் ஏற்றம் பெறுவர். சிலர் வீடு, மனை விற்க முயற்சி செய்துகொண்டிருந்தால் அது எவ்வித தடையுமின்றி ஈடேறும். பெற்றோர் நலன் சற்று பாதிக்கப்படுவதுபோல தோன்றினாலும் சரியாகிவிடும். உங்கள் பிள்ளைகள் நிலையும் அவர்களது கல்வி நிலையும் சற்று மாறு பாடாக இருக்கலாம். சிறுசிறு வைத்தியச் செலவுகள் ஏற்படும். பெரிய செலவுகள் வராது. தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. யாராவது ஒருவர் அமைதியாகச் செல்வது நல்லது. உங்கள் மூத்த சகோதரர் பணம் பெருக்கும் விஷயத்தில் ஜெகஜ்ஜால வேலை செய்வார். உங்கள் அலைச்சல்களும் செலவுகளும் வீணாகிவிட்டதோ என எண்ணும் வேளையில் அனைத்தும் பயனுள்ளதாக மாறும். திருமணப் பேச்சு ஆரம்பத்தில் தடையாக இருப்பினும் பின்னர் சுமுகமாக முடியும். சிலர் வேலை போய்விட்டதே என கவலையுடன் இருந்தால், இந்த மாதம் எதிர்பாராதவிதமாக நல்ல வேலை கிடைக்கும். மாமனார்- மாமியார்மூலம் பரிசு கிடைக்கும். வாழ்வில் ஒரு நம்பிக்கை வெளிச்சம் ஏற்படும். மறுமணம் செய்ய எண்ணுவோருக்கு அது நிச்சயமாக நிறைவேறும். 4, 8-ஆம் எண்களில் பிறந்தவர்களை மண முடித்தல் நன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 3, 12, 21, 30.
பரிகாரம்: ஆரோக்கிய விஷயமாக அலைந்து திரிந்து அல்லல்படும் முதியவர் களுக்கு உதவவும்.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் உங்களது அனைத்து காரியங்களும் முதலி-ல் தேக்கமாகி பின்னர் சரியாக ஓடும். மாத முற்பகுதியில் வர வேண்டிய பண வசூல், குத்தகைப் பணம் போன்றவை நன்கு வந்தாலும், பிற்பகுதியில் செலவுகள்தான் அதிகமாக இருக்கும். முதலி-ரண்டு வாரங்கள் பேச்சில் காரம் சற்று மிகையாக இருக்கும். கடைசி இரண்டு வாரங்களில் அது சாந்தமாகிவிடும். மாத இறுதியில் ஏதோவொரு சுபச்செலவுண்டு. உங்கள் இளைய சகோதரருக்கு வேலை கிடைக்கும். தாய் அல்லது மூத்த சகோதரி உங்களுக்குக் கைபேசி வாங்கித் தருவார். வீட்டில் முதலீடு செய்வீர்கள். உங்கள் வாகனத்தைப் பரிமாற்றம் செய்து புது வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளால் துன்பம் ஏற்பட்டு பின் சரியாகும். உங்கள் ஆரோக்கியம் குறித்து சற்று அச்சமும் சந்தேகமும் ஏற்பட்டு, பின் அவை சரியாகி நிம்மதி ஏற்படும். உங்கள் எதிரிகளின் நிலை பரிதாபத்திற்குள்ளாகும். கடன் மறையும். வேலையிலுள்ள தொல்லைகள் சரியாகும். எதிர்பாராதவிதத்தில் திருமணம் நிச்சயமாகும். தந்தைவகையில் செலவுண்டு. தொழில் சிற்சில அதிர்ச்சிகளைக் கொடுத்தா லும், உடனேயே அதி-லிருந்து வேறுவகை யில் மீண்டு புத்துயிர் பெறுவீர்கள். செலவுடன் கூடிய லாபமுண்டு. விரயத்துடன்கூடிய, செயல்கள் ஈடேறல் நடக்கும். உங்கள் எண்ணங்களில் நிறைய எதிர்மறைத் தன்மை ஏற்படலாம். அத்தனையையும் பணமாக மாற்றுவீர்கள். பெண் கொடுத்து பெண்ணெடுக்கும்விதத்தில் சிலருக்குத் திருமண
1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் முழுவதும் உங்கள் சிந்தனை தொழில் பற்றியதாகவே அமையும். தொழிலி-ல் என்னவிதமான சூட்சுமங்களைச் செய்து விருத்திசெய்யலாம் அல்லது அரசிய-லில் எந்த பதவியை யார்மூலம் அடையலாமென ஓயாத சிந்தனை வந்துவந்து போகும். ஒருவழியாக இந்த மாதம் இரண்டாம் வாரத்திற்குப்பின் நினைத்ததை அடைந்து விடுவீர்கள். நீங்கள் விரும் பிய அரசியல் பதவி, அரசுப் பதவி, அரசு சார்ந்த பதவி என ஏதோவொன்றைத் தட்டிப் பறித்துவிடுவீர்கள். மாதம் முழுவதும் உங்கள் கைபேசி நல்ல தகவல்களை மட்டுமே கொண்டுவரும். அவை உங்கள் எண்ணம் ஈடேற மிகவும் துணைபுரியும். இளைய சகோதரி சார்ந்த விஷயம் நல்லமுறையில் நடக்கும். கலைத்துறையினர் தங்கள் துறைக் குள் ஒரு பரிவர்த்தனை முறையில் ஏற்றம் பெறுவர். சிலர் வீடு, மனை விற்க முயற்சி செய்துகொண்டிருந்தால் அது எவ்வித தடையுமின்றி ஈடேறும். பெற்றோர் நலன் சற்று பாதிக்கப்படுவதுபோல தோன்றினாலும் சரியாகிவிடும். உங்கள் பிள்ளைகள் நிலையும் அவர்களது கல்வி நிலையும் சற்று மாறு பாடாக இருக்கலாம். சிறுசிறு வைத்தியச் செலவுகள் ஏற்படும். பெரிய செலவுகள் வராது. தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. யாராவது ஒருவர் அமைதியாகச் செல்வது நல்லது. உங்கள் மூத்த சகோதரர் பணம் பெருக்கும் விஷயத்தில் ஜெகஜ்ஜால வேலை செய்வார். உங்கள் அலைச்சல்களும் செலவுகளும் வீணாகிவிட்டதோ என எண்ணும் வேளையில் அனைத்தும் பயனுள்ளதாக மாறும். திருமணப் பேச்சு ஆரம்பத்தில் தடையாக இருப்பினும் பின்னர் சுமுகமாக முடியும். சிலர் வேலை போய்விட்டதே என கவலையுடன் இருந்தால், இந்த மாதம் எதிர்பாராதவிதமாக நல்ல வேலை கிடைக்கும். மாமனார்- மாமியார்மூலம் பரிசு கிடைக்கும். வாழ்வில் ஒரு நம்பிக்கை வெளிச்சம் ஏற்படும். மறுமணம் செய்ய எண்ணுவோருக்கு அது நிச்சயமாக நிறைவேறும். 4, 8-ஆம் எண்களில் பிறந்தவர்களை மண முடித்தல் நன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 3, 12, 21, 30.
பரிகாரம்: ஆரோக்கிய விஷயமாக அலைந்து திரிந்து அல்லல்படும் முதியவர் களுக்கு உதவவும்.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் உங்களது அனைத்து காரியங்களும் முதலி-ல் தேக்கமாகி பின்னர் சரியாக ஓடும். மாத முற்பகுதியில் வர வேண்டிய பண வசூல், குத்தகைப் பணம் போன்றவை நன்கு வந்தாலும், பிற்பகுதியில் செலவுகள்தான் அதிகமாக இருக்கும். முதலி-ரண்டு வாரங்கள் பேச்சில் காரம் சற்று மிகையாக இருக்கும். கடைசி இரண்டு வாரங்களில் அது சாந்தமாகிவிடும். மாத இறுதியில் ஏதோவொரு சுபச்செலவுண்டு. உங்கள் இளைய சகோதரருக்கு வேலை கிடைக்கும். தாய் அல்லது மூத்த சகோதரி உங்களுக்குக் கைபேசி வாங்கித் தருவார். வீட்டில் முதலீடு செய்வீர்கள். உங்கள் வாகனத்தைப் பரிமாற்றம் செய்து புது வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளால் துன்பம் ஏற்பட்டு பின் சரியாகும். உங்கள் ஆரோக்கியம் குறித்து சற்று அச்சமும் சந்தேகமும் ஏற்பட்டு, பின் அவை சரியாகி நிம்மதி ஏற்படும். உங்கள் எதிரிகளின் நிலை பரிதாபத்திற்குள்ளாகும். கடன் மறையும். வேலையிலுள்ள தொல்லைகள் சரியாகும். எதிர்பாராதவிதத்தில் திருமணம் நிச்சயமாகும். தந்தைவகையில் செலவுண்டு. தொழில் சிற்சில அதிர்ச்சிகளைக் கொடுத்தா லும், உடனேயே அதி-லிருந்து வேறுவகை யில் மீண்டு புத்துயிர் பெறுவீர்கள். செலவுடன் கூடிய லாபமுண்டு. விரயத்துடன்கூடிய, செயல்கள் ஈடேறல் நடக்கும். உங்கள் எண்ணங்களில் நிறைய எதிர்மறைத் தன்மை ஏற்படலாம். அத்தனையையும் பணமாக மாற்றுவீர்கள். பெண் கொடுத்து பெண்ணெடுக்கும்விதத்தில் சிலருக்குத் திருமணம் நடக்கும். வேற்றின, மத திருமணமும் நடக்கும் வாய்ப்புண்டு. உங்கள் வயல், தோட்டம், பண்ணைகளைப் பரிவர்த்தனை முறையில் மாற்றம் செய்வீர்கள். கலைஞர்கள் விழுந்துவிடுவோமோ என எண்ணும் நேரத்தில், உதவிக்கரம் கிடைத்து மீண்டுவிடுவார்கள். 3, 6, 7-ஆம் எண்களில் பிறந்தவர்களை மணத்தல் நலம்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: வயல், தோட்டம், பண்ணைகளில் வேலைசெய்பவர்கள் முன்னேற உதவிக்கரம் கொடுங்கள்.
3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் முழுவதும் நீங்கள் குழப்பங் களாலும் வேண்டாத கற்பனைகளாலும் அல்லல்படுவீர்கள். வருமென்று நினைத்த பணம் வந்துசேராது; வராதென நினைத்த தொகை வரும். இந்த மாதம் ஆரோக்கியத்தைப் பொருத்தவரை உங்கள் வீட்டில் யாரோ ஒருவர் மருத்துவமனைவரை சென்று, பின் மீண்டு வந்துவிடுவார். ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனம் தேவை. மனை விஷயம் முதலி-ல் தகராறாகிப் பின் சரியாகும். உங்கள் பிள்ளைகளின் செயல்கள் கவலை தரும். அதிக பணிச் சுமையும், அல்லாடும் மனமும் தம்பதிகளுக்கிடையே சண்டையை உருவாக்கும். திருமண விஷயத்தில் வேற்றின, மதப் பெண்ணால் பிரச்சினை வரலாம். வேலை தேடுவோருக்கு மாத முற்பகுதியில் அரசு, அரசு சார்ந்த வேலை கிடைக்கும். அரசியல்வாதிகள் மிகுந்த போராட்டத்திற்குப்பிறகு பதவி கிடைக்கப்பெறுவர். வாகனங்கள் பழுது செலவு தரும். நில விவகாரங்கள் கைவிட்டு நழுவும் நிலையில் இருந்து, பின் சரியாகும். எதிரிகளிடம் கவனம் தேவை. இந்த மாதம் உங்கள் தொழில், வேலை இரண்டும் மட்டும் ஏதோவொரு வகையில் ஓடும். மற்ற விஷயங்கள் சற்று பாடுபடுத்தும். சிலருக்கு வேலைபார்க்கும் மருமகள் கிடைப்பாள். இளைய சகோதரர் விஷயமாக மன அழுத்தம் உண்டாகி பின் சரியாகும். கலைத்துறையினர் ஒப்பந்தம் மற்றும் சந்திக்கும் நபர்களிடம் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். பெற்றோர், மாமனார்- மாமியார் விஷயங்களில் கவனம் தேவை. விவசாயிகள் நிலம் சம்பந்தமாக ஒரு போராட்டத்தைச் சந்தித்து பின் மீள்வர். 3, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணப்பது நல்லது.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.
எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.
பரிகாரம்: ஆரோக்கியம் விஷயமாக மருந்து தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவவும்.
4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் உங்கள் மூளையில் நிறைய வித்தியாசமான சிந்தனைகள் பீறிட்டுக் கிளம்பும். சிலருக்கு கோபுர கலசம் செய்து விற்கலாமா- அரசு நிலத்தை பட்டாபோட்டு விற்கலாமா போன்ற திட்டங்கள் அணிவகுத்து நிற்கும். பலர் இவர்கள் பேச்சில் மயங்கி, இவர்களைக் கூப்பிட்டு கேட்டதற்குமேல் போட்டுத் தருவார்கள். இவர்களும் என்னதான் செய்வார்கள்! சிலரது தொழில் ஓடவும் செய்யாது; ஒளியவும் செய்யாது. ஓரிடத்தில் நின்று பாடாய்ப்படுத்தும். காசு பணப் புழக்கத்திற்கு வானத்தை வில்லாக வளைத்துக் காட்டுவார்கள். இதுபோன்ற செயல்களால் வீட்டில் மனைவியுடன் மனக்கசப்பு ஏற்படலாம். ஆனால் இவர்களோ கலங்கமாட்டார்கள். வாழ்க்கையில் இவையெல்லாம் சகஜமென்று செல்வார்கள். சிலர் மனைவியையும் தங்கள் தொழி-லில் பங்குதாரராக்கிவிடுவார்கள். வாழ்க்கை தரும் நெருக்கடி மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றுகிறதென்று பாருங்கள். திருமணப் பேச்சு இளைய சகோதரரால் சற்று பின்னடைவை சந்திக்கும். பிள்ளைகள் அல்லது ஜாதகர்கள் ஏதேனும் ஒரு போதைப் பழக்கத்துக்கு ஆளாக நேரும்; கவனம் தேவை. மாத முற்பகுதியில் சிலரது தாயாரால் ஏற்படும் சங்கடங்கள் மாதப் பிற்பகுதியில் சரியாகிவிடும். சிலரது மாமனார் வில்லங்கமான செலவை இழுத்துவிடுவார். கைபேசிவகை செலவுண்டு. மாத முற்பகுதியில் செய்யும் மாறுபாடான விவசாயச் செயல்கள், மாதப் பிற்பகுதியில் பணப்பலனைத் தரும். நோய் வருவதுபோல் தோன்றினால் அதற்கு பயங்காட்டி விரட்டிவிடுவார்கள். வாகனலாபம் உண்டு. கலைஞர்கள் ஒருவித நோய் சார்ந்த பதட்டத்தில், உழைக்கும் ஒவ்வொரு மணித்துளியையும் பணமாக்க முயல்வர். இவர்கள் 4, 6, 8-ஆம் எண்களைச் சேர்ந்தவர் களைத் திருமணம் செய்வது நலம்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: அதிகமாக யோசித்து குதர்க்கமாகப் பேசுவதைக் குறையுங்கள். இதுவே பரிகாரம்.
5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்களில் சிலர் இந்த மாதம் அரசுத்துறை சம்பந்தமான நல்ல மாற்றத்தையும் ஏற்றத்தை யும் பெறுவீர்கள். சிலருக்கு மறைமுக வருமானம் செழிக்கும். இளைய சகோதரர் எதிர்பாராத இம்சை தருவார். வீடு அல்லது வாழ்க்கைத் துணையின் வேலைவிஷயமாக கடன்வாங்க நேரும். தொழில் துறையினர் தங்கள் தயாரிப்பில் ஒன்றைக் கொடுத்து இன்னொன்றைப் பெறுவர். சிலர் ஆன்மிக விஷயமாக பெரிய தொகையைக் காணிக்கை யாக செலுத்துவார்கள். உங்கள் பேச்சு மிகவும் காரியார்த்தமாக இருக்கும். குடும்பத்தில் சுபச்செலவுண்டு. வாரிசுகளின் திருமண விஷயத்தில் திடீரென சில திருப்பங்கள் ஏற்படும். சிலரது வாழ்க்கைத் துணைக்கு கா-லில் அடிபட வாய்ப்புண்டு. கடனில் வாகனம் வாங்குவீர்கள். உங்கள் திருமணம் சம்பந்தமாக சற்று சச்சரவு ஏற்படலாம். மருமகள் தொலைபேசி வழியாக பிரச்சினை தருவார். உங்கள் மாமனாரின் வேண்டாத செயலால் மாமியார் இடம் மாறக்கூடும். அரசியல்வாதிகள் சிலர் திடீர் அவமானங் களையும், சிலர் எதிர்பாராத வளமையையும் பெறுவர். சிலருக்கு மூத்த சகோதரர் அல்லது இளைய தாரம் பற்றிய வதந்தியைக் கேட்க நேரும். விவசாயிகளின் நிலை ஆரம்பத்தில் சற்று கலவரமாகி பின் சரியாகும். கலைத் துறையினர் அவசரகதியில் வேலைசெய்ய நேரும். மாதப் பிற்பகுதியில் வேலையில் விரயங்களை சந்திக்கலாம். இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் பற்றி சற்று பயம் ஏற்படும். ஆயினும் இறையருளால் உடல்நிலை சரியாகிவிடும். மாத முற்பகுதியில் அரசு ஆதரவும், மாதப் பிற்பகுதியில் தொல்லையும் அனுபவிக்க நேரும். ஆயினும் அரசுமூலம் தொழி-ல் முதலீடு செய்யும் நல்ல வாய்ப்பு கிடைக்கும். 3, 6, 9-ஆம் எண்களில் பிறந்தவர் களைத் திருமணம் செய்வது நல்லது.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.
பரிகாரம்: உங்கள் இளைய சகோதரர் வயதுடையவர்களுக்கு தேவையறிந்து உதவிசெய்யவும்.
6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு நல்ல விஷயங்களில் சில தீமையும், தீய விஷயங் களில் சில நன்மையும் நடைபெறும். மாத முற்பகுதியில் சிலருக்கு மூத்த சகோதரர் அல்லது வேண்டாத ரகசியத் தொடர்புகளி னால் இம்சையும் அவமானமும் ஏற்படக் கூடும். வியாபாரம், தொழில் ஆகியவற்றில் பணம் சற்று தேங்கிநிற்கும். அந்த தேக்கநிலை பிறகு சரியாகிவிடும். உங்கள் வீட்டில் அல்லது வேலை செய்யுமிடத்தில் உள்ள பணியாளர் களுக்கு உடல்நிலை சற்று தொல்லைதரும். சிலருக்கு வேலையில் மாறுதல் உண்டு. பண விஷயமாக வாழ்க்கைத்துணையுடன் சற்று மனஸ்தாபம் ஏற்படலாம். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. மாத முற்பகுதியில் அரசு சார்ந்த விஷயங்கள், அரசியல்வாதிகளால் சற்று இன்னல்கள் ஏற்படலாம். அரசியல்வாதிகள் எண்ணியது நிறைவேறாமல் வெறுப்படையக்கூடும். இந்த மாதம் சில எதிர்மறை விஷயங்கள் உங்களுக்கு யோகங்களை அழைத்துவரும். விவசாயத் தொழிலி-ல் வரவேண்டிய பணம் சற்று தாமதமாகக் கிடைக்கும். விவசாயத்தில் சில தடைக்கற்களே படிக்கற்களாகி உங்கள் நிலையை உயர்த்தும். இரண்டாவது திருமண விஷயத்தில் இந்த மாதம் இடர்ப்பாடுகள் நிறைந்து காணப்படும். கலைஞர்கள் சற்று பிரயாசைப்பட்டு பிறகு ஓரளவு நல்லநிலையை அடைவர். வியாபார பங்குதாரர்கள் சற்று முரண்டுபிடித்து பிறகு அமைதியாகி வழிக்கு வந்துவிடுவார்கள். பயணங்களில் கவனம் தேவை. இந்த மாதம் சற்று அலைச்சல் நிறைந்த மாதம்தான். இந்த தேதிகளில் பிறந்த வர்கள் 1, 4, 5, 6, 7, 8, 9 ஆகிய எண்களில் பிறந்த வர்களை மணம்புரிதல் நன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: நெருப்பை அடிப்படையாகக் கொண்டு வேலை செய்பவர்களுக்கு உதவவும்.
7, 14, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் நீங்கள் யாரைப் பார்த்தாலும், எவரை சந்தித்தாலும் அவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். வியாபார விஷயத்தில் உங்களில் சிலர் சற்று உள்ளடி வேலை செய்யக்கூடும். உங்கள் தொழில் வேலை உயர்வுக்காக சாம, தான, பேத, தண்டம் எனும் அத்தனை வழிகளையும் பயன்படுத்து வீர்கள். பூர்வீக நிலத்திலி-ருந்து கொஞ்சம் பணம் எதிர்பார்க்கலாம். சிலரது கைபேசி பழுதாகக்கூடும். பணியாளர்கள் தொல்லை தருவர். நோய்த் தாக்கம் குறையும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். புதிய தொழில், புதிய வியாபாரம் ஆரம்பிக்க கொஞ்சம் லஞ்ச லாவண்யம் கொடுத்து வெற்றிகரமாக அவற்றை செயல்படுத்திவிடுவீர்கள். திருமண விஷயத்தில் வரன் வந்து கேட்கும்போது நீங்கள் சற்று சுணக்கம் காட்டுவீர்கள். சிலருக்கு கலப்பு, காதல் மணம் நடக்க வாய்ப்புள்ளது. உங்களில் சிலரின் திருமண நேரத்தில் மாங்கல்யம் காரணமாக சச்சரவு வர வாய்ப்புள்ளது. மாதப் பிற்பகுதியில் தொழிலி-ல் அரசு சார்ந்த வில்லங்கம் உண்டாகக்கூடும். சிலருக்கு மருமகன் அல்லது மருமகளுடன் பிணக்கு ஏற்படலாம். பெற்றோர் கருத்து வேறுபாடு கொள்வர். இதற்கு உங்கள் மாமனார்- மாமியார் காரணமாவார்கள். கருவுற்ற பெண்கள் கவனமாக இருத்தல் அவசியம். விவசாயிகளுக்கு அலைச்சலும் உழைப்பும் அதிகரிக்கும். கலைஞர்கள் வாழ்வு சற்று ஏற்ற இறக்க மாகவே இருக்கும். அரசியல்வாதிகள் பல்வேறு குறுக்கு வேலைகள் செய்து ஒரு நாற்காலி-யில் அமர்ந்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பார்கள். வாகனத்தில் சிறுசிறு பழுது ஏற்படலாம். இந்த மாதம் நிலம் சம்பந்தமான விஷயங்களை நன்கு யோசித்து திட்டமிட்டு செயல்படுத்தவும். முடிவை அடுத்தமாதம் எடுக்கலாம். வாழ்க்கைத்துணையின் உடல்நலம் கவனிக்கப்பட வேண்டும். இந்த மாதம் உங்களில் சிலருக்கு காதல் கண் சிமிட்டும். 1, 2 ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணம்புரிந்து கொள்வது வாழ்வில் வளம் கூட்டும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.
பரிகாரம்: தொழில், வேலை, பதவி போன்ற எந்த விஷயங்களிலும் நேர்மையைக் கடைப்பிடித்தல் நன்று. இதுவே பரிகாரம்.
8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் வரவும் செலவும் சரியாக இருக்கும். உங்களது சீற்றமிகு சொந்தங்கள் சிலர் குடும்ப சினத்தைப் பெருக்கக்கூடும். சிலரது வேலையாட்கள் பணியைவிட்டு விலகுவர். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் களுக்கு முதலி-ல் வேலை தடைப்படுவதுபோல தோன்றினாலும் பின்பு நன்கு வேகமெடுக் கும். உங்களது தாயார் சற்று மனவருத்தம் கொள்ளக்கூடும். அதற்கு உங்கள் வாழ்க்கைத் துணை காரணமாக இருப்பார். வாகன பிராப்தி உண்டு. சிலரது வாரிசுகள் பிணக்கு கொள்வார்கள் அல்லது வாரிசுகளுக்கு ஏதேனும் சிறு தொந்தரவு ஏற்பட வாய்ப்புண்டு. உங்களில் சிலர் ஏதேனும் சில தீய பழக்கத்திற்கு ஆளாகும் சூழல் உருவாகும்; கவனமாக இருக்கவும். கலைத்துறையில் உள்ளவர்கள் வேறு மொழிப் படம், தொலைக்காட்சித் தொடர் போன்றவற்றுக்கு மாறக்கூடும். உங்கள் பூர்வீக சொத்தில் ஏற்படும் வில்லங்கம் மாதப் பிற்பகுதியில் சரியாகிவிடும். மாதப் பிற்பகுதி அரசு வேலை, அரசுப் பதவி போன்ற ஏதாவ தொரு அதிர்ஷ்ட வாய்ப்பைத் தரப்போகிறது. எதிரிகளும் நீங்களும் கைகுலுக்கிக் கொள்வீர்கள். சிலருக்கு காதல் திருமணத்திற்கு வாய்ப்புள்ளது. வேலை இழந்தவர்கள் தங்களது பழைய வேலையிலேயே அமரும் தகுதி ஏற்படும். இந்த மாதம் உங்களது வேலை, வியாபாரம், தொழில் போன்றவை சற்று இடர் தந்தாலும் பின்னர் நன்றாக வேகமெடுத்து செழிப்படையும். சிலரது தந்தை தீய பழக்கவழக்கத்திற்கு ஆட்பட்டிருந்தால் அவரது ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவேண்டும். சிலர் தங்கள் குலதெய்வத்திற்கு காணிக்கை செலுத்துவார் கள். பலரும் தங்களது வேலை, பதவிமூலம் கௌரவம் பெறுவார்கள். விவசாயிகள் விற்பனைப் பெருக்கத்தையும் லாபத்தையும் காண்பார்கள். மாமனார்- மாமியார் இடமாற்றம் செய்யக்கூடும். இந்த மாதம் கடன் வகையில் மாற்றம் செய்வீர்கள். 1, 4, 6 ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணம்புரிதல் நன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: மது அருந்துதல், போதைப் பழக்கம், மற்றவர்மீது அவதூறாக வதந்தி பரப்புவது போன்ற செயல்கள் தீங்கு தரும். எனவே இவற்றை விலக்கவும்.
9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் எல்லா செயல்களும் முதலி-ல் தடை தாமதமாகி பின் சரியாகிவிடும். பணப்பரிவர்த்தனை விஷயங்கள் சிறப்பு பெறும். உங்கள் குடும்பம் வெளிநாட்டு கரன்சிகளால் பணப்புழக்கம் பெறும். பூர்வீக சொத்தை மாற்றுவதால் நல்ல தொகை வந்துசேரும். உங்கள் பேச்சில் குயுக்தியும், சிலருக்கு குறும்புத்தனமும் நிறைந்து வழியும். வேலை விஷயத்தில், தம்பதிகளுள் ஒருவர் இதுவரையில் வேலைக்குச் செல்லாம-லிருந்தால் இப்போது அவர் வேலைக்குச் செல்வார். சிலர் கைபேசி மூலம் பணம் சம்பாதிக்கத் தொடங்குவார்கள். பிரிந்திருந்த சிலரது இளைய சகோதரி மீண்டும் குடும்பத்துடன் இணையும் வாய்ப்புண்டு. மனை, வீடு, தோட்டம், வயல், வாகன விஷயங்கள் ஓரடி பின்வாங்கி வங்கிக்குப் போய்விட்டு, பின் திரும்பவந்து சரியான பாதையில் வீறுகொண்டு ஓடும். வாழ்க்கைத் துணையின் வேலையில் ஒரு இடர்ப்பாடு உண்டாகி பின் சரியாகும். சிலரது வாரிசுகளின் நடத்தை சற்று கலவரம் தரும். மாதப் பிற்பகுதியில் தெளிவாகிவிடும். மாத முற்பகுதியில் பங்கு பத்திரங்கள் பணப் பெருக்கம் தரும். சிலருக்கு மதுப்பழக்கம் போன்ற விஷயங்கள் தலைதூக்கலாம். திரைப்படம், தொலைக்காட்சி நட்சத்திரங்கள் கைக்குக் கிடைத்த வாய்ப்பையெல்லாம் பணமாக்குவார்கள். மாதப் பிற்பகுதியில் அரசு வேலை வாய்ப்புண்டு. அரசுக் கடன் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. நடைப்பயிற்சி, யோகா, தியானம் ஆகியவற்றைப் பின்பற்றி ஆரோக்கியம் சம்பந்தமான கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தில் பெண் எடுத்து பெண் கொடுக்கும் நிலையுண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் பணம் கொடுக்கல்- வாங்கல் செய்வீர்கள். வாகனங் கள், டிராக்டர், உழவுமாடு போன்றவை சற்று இன்னலைத் தரலாம். சிலருக்கு வீட்டிற்கு வந்த மருமகன் கௌரவப் பிரச்சினையை ஏற்படுத்தலாம். தொழில் சம்பந்தமான ஒரு இடையூறு ஏற்பட்டு பிறகு சரியாகும். மூத்த சகோதரர், சமையல் வேலை போன்றவற்றில் முரண்பாடு தோன்றக்கூடும். செலவும் ஏற்படும். 3, 6, 9 ஆகிய எண்களில் பிறந்த வர்களைத் திருமணம் செய்தல் நன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.
எச்சரிக்கை எண்கள்: 3, 12, 21, 30.
பரிகாரம்: இந்த மாதம் எந்த செயலைத் தொடங்கினாலும் விநாயகரையும் முருகனையும் வழிபட்டுத் தொடங்கவும்.
செல்: 94449 61845