1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் உங்கள் தொழில் பெரும் முன்னேற்றம் காணும். பணப்புழக்கம் இருந்துகொண்டே இருக்கும். அதிக தொழில் விஸ்தரிப்பு, தன்னிச்சையாக உங்கள் கௌரவத்தை அதிகரிக்கும். வாக்கு- பலம், காத்திரம் பெறும். சொல்லுக்கு மதிப்புண்டு. வார்த்தைமூலம் தொழில் செய்யும் வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், ஜோதிடர்கள், பயிற்சி வகுப்பு எடுப்பவர்கள் என இவர்கள் கரைகாணா லாபம் பெறுவர். குடும்ப மேன்மையுண்டு. மருமகனால் ஏற்றம் வரும். மாத முற்பாதிவரை இளைய சகோதரிமேல் இருந்த மனக்கசப்பு, பிறகு நீங்கி ஒற்றுமை ஏற்படும். பெண் பணியாளர்கள் சற்று பிணக்கை ஏற்படுத்தி பிறகு சரியாவர். சிலரது கைபேசி சற்று பழுதாகி சரியாகும். சிலர் வெளிநாட்டுக் கைபேசியை எதிர்மறைத் தன்மையில் வாங்குவர். பெற்றோரின் உடல்நலன், மனநலன் சற்று கவலை தரும். உங்களுக்கும் பாதவ- ஏற்பட வாய்ப்புண்டு. பங்குப் பத்திர விஷயத்தை சற்று விலக்கி வைக்கவும். கலைத்துறையினர் நிலை, சிறிது கிசுகிசுப்பு மறைவுக்குப்பிறகு சரியாகும். பொதுவாக இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் பிற மத, இன ஆட்களுடன் பழக்கம் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. சில தம்பதிகளுக்கு சற்று மனஸ்தாபம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு சிறிது அலைச்சல் மிகுந்த வேலை கிடைக்கும். திருமண விஷயங்கள் மெதுவாக நடக்கும். இந்த மாதம் மனை விஷயமாக பிரச்சினை தொடரும். ஆலயங்களுக்குச் செல்லும்போது ஏதேனும் தடை ஏற்படும். வெளிநாடு சம்பந்தமான செய்தி கைபேசியில் வரும். திரைப்படத் தொழில் சார்ந்தவர்கள் சற்று லஞ்சம் கொடுக்கவேண்டி இருக்கும். அரசியல்வாதி கள் காட்டில் பண மழைதான்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.
பரிகாரம்: இந்த மாதம் கட்டடம் கட்டும் தொழிலாளர்களின் தேவையறிந்து உதவுங்கள். காலையில் எழுந்தவுடன் ஒரு ஸ்பூன் தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து அருந்துவது நன்று.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் "வரவு நிறைய வந்ததா- செலவு அதிகமாகிவிட்டதா' என்று பட்டி மன்றமே நடத்தலாம். வரவும் செலவும் போட்டிபோடும். சிலரது தொழிலாளர்கள் வேறிடம் சென்றுவிடுவார். உங்கள் இளைய சகோதரர் வெளிநாடு செல்வார். ஊடகத்துறையில் வேலைசெய்வோர் வேறிடம் மாறுவர். ரியல் எஸ்டேட் துறையினர் கொடுக்கவேண்டிய லஞ்சத்தைக் கொடுத்து, அதற்கு பதிலாக பன்மடங்கு லாபம் பெறுவர். வீடு, ஃபிளாட் வாங்கும் விஷயம் பலிதமாகும். வாரிசுகளுக்கு வேலை கிடைக்கும். பங்குப் பத்திரங்கள் நன்மை தரும். கலைத்தொழில் செய்வோர் நல்ல வேலை வாய்ப்பும் பணபலமும் பெறுவர். உங்களில் சிலர் பழைய வேலையில் மீண்டும் இணைவீர்கள். சிலருக்கு காதல் திருமணம் நடக்க வாய்ப்புண்டு. சிலருக்கு காதல் திருமணம் பிரச்சினையை ஏற்படுத்தும். இந்தத் தேதிகளில் பிறந்த குழந்தைகளின் தந்தை வேலைவாய்ப்பு அல்லது தொழில் முனைவு பெறுவார். சிலருக்கு வெளிநாட்டுத் தொழில்மூலம் லாப விருத்தியுண்டு. உங்களின் வாரிசுகள் வெளிநாட்டுத் தொழில் சம்பந்தமாக பரபரப்பு பெறுவர். வெளிநாட்டு வேலையை வீட்டிலிருந்தே செய்யும் வாய்ப்பும் வரும். அரசுவேலை பார்க்கும் மருமகள் வருவாள். அரசு சம்பந்தமான வீடு கிடைக்கும் வாய்ப்புண்டு. உங்கள் மனை விற்பனை பொருட்டு அரசு தரவேண்டிய தொகை கணிசமாக கைக்குக் கிடைக்கும். ஏதேனும் ஒருவகையில் வரி சம்பந்தம், அரசு கட்டண பாக்கி என்று அரசாங்கம் சார்ந்த செலவுண்டு. சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படும். அரசு அதிகாரிகள் இடமாற்றம் சம்பந்தமாக குடும்பத்தை நகர்த்துவர். தாயாரின் உடல்நலன் கவனிக்கப்படவேண்டும். சில கெட்ட பழக்கங்களைத் தவிர்க்க முயலவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: பிற இன, மத கட்டடத் தொழிலாளர் மற்றும் வேறு வேலை செய்பவருக்கு உதவவும். வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் வேலை தேடுபவர்களுக்குக் கண்டிப்பாக வேலை கிடைத்துவிடும். சிலருக்கு வெளிநாடு சம்பந்தமான வேலை அமையும். சிலர் அரசுசார்ந்த வேலைக்குச் செல்ல இயலும். உங்களின் சிலரது வாரிசுகள் வீட்டிற்கு முதலீடாக முன்பணம் கொடுப்பர். பணப்புழக்கம் ஏற்ற- இறக்கமாக இருக்கும். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மாதத்தின் முதல் மூன்று வாரங்களுக்குள் கண்டிப்பாக மனை அல்லது வாகனம் அல்லது வயல் வாங்குவீர்கள். குறைந்த பட்சம் வீட்டிற்கு, தோட்டத்துக்குரிய செடி யாவது வாங்கி வளர்ப்பீர்கள். வீட்டிற்கு மருமகள் வருவாள். பங்குப் பத்திரம் வாங்குவீர்கள். திரைப்படம், தொலைக் காட்சிக் கலைஞர்கள் வெளிநாடு சென்று கலைச்சேவை புரிவர். இந்த மாதம் அனைவருக்கும் பணிச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு திருமணம் நிச்சயமாகும். வரும் வரன் கணக்கியல், அரசு சார்ந்திருப்பார். இந்த தேதிகளில் பிறந்த குழந்தைகளின் தந்தைக்கு வேலை கிடைக்கும் அல்லது வியாபார விருத்தி ஏற்படும். அரசியல் சார்ந்தோருக்கு அதிக வேலையும், நிறைய மனிதர்களை சந்திக்கும் சூழலும் ஏற்படும். உங்கள் உடல்நலன் மற்றும் பெற்றோரின் உடல்நலனில் கவனம் தேவை. உங்கள் வாரிசுகள் வெளியூர், வெளிநாடு செல்வர். இந்த மாதம் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது கவனம் தேவை. பயணங்களில் சில அழகான பொருட்கள் களவுபோகும் வாய்ப்புண்டு. பெண் அரசியல் வாதிகள் ஸ்திரம் பெறுவர். உங்கள் பெற்றோர் ஆன்மிகப் பயணம் செல்லும் வாய்ப்புண்டு. சமையல் செய்யும்போது கவனம் தேவை. சமையல் கலைஞர்கள் நல்ல வேலைவாய்ப்பும், சிறு காயங்களும் பெறுவர். ஊடகத்துறையினர் நல்ல அலைச்சலும் சன்மானமும் ஒருங்கே பெறுவர்.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.
எச்சரிக்கை எண்கள்: 6, 15, 24.
பரிகாரம்: கட்டட வேலைசெய்யும் பிற மாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் சார்ந்து ஏதேனும் கொடுங்கள். நெல்லிக்கனியை பச்சையாகவோ வற்றலாகவோ உபயோகித்தல் நலம் தரும்.
4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு;
இந்த மாதம் பயனுள்ள அலைச்சல் அதிகமாகும். அது வெளியூர், வெளிநாடு, குறைந்தபட்சம் பக்கத்து ஊர் என வியாபாரம், திருமணம் விஷயமாக அலைச்சலும் செலவும் இருந்துகொண்டே இருக்கும். பணம் கையில் புழங்கிக்கொண்டே இருக்கும். அது உங்கள் பணமாக மட்டுமல்ல; யாருடைய பணமும் புழக்கத்தில் இருக்கும். வார்த்தைகளில் கண்டிப்பும் இருக்கும். ஊடகத்துறைமூலம் உங்களுக்கு பலவிதப் பயன்கள் உண்டாகும். சில வீடுகளில் மாமனாருக்கும் மருமகளுக்கும் கருத்துவேறுபாடு உண்டாகும். வேலையில் இடமாறுதல் உண்டு. பழைய பொருட்களை அடிப்படையாகக் கொண்டு தொழில் செய்வோர் நிரந்தர வருமானம் பெறுவர். ஆன்மிக சுற்றுலாவுக்கு, செலவும் நேரமும் குறைந்த வழியைக் கண்டுபிடிப்பீர்கள். மனை விஷயமாக குயுக்தியைப் பயன்படுத்து வீர்கள். உங்களது சில விபரீத யோசனைகள் அளப்பரிய நிலையில் அமையும். பலதரப் பட்ட எண்ணங்கள் அலைக்கழிக்கும். அரசியல்வாதிகள் மறைமுகமாக லஞ்சம் பெறும் புதுவழியைக் கண்டுபிடித்து அசர வைப்பார்கள். கலைத்துறையினர் நிறைய வெளிமொழிப் படங்களில் வாய்ப்புப் பெறுவதோடு, சிலர் பலவித தீய பழக்கங் களுக்கும் ஆட்படக்கூடும். விவசாயிகள் மாற்றுமுறை வேளாண்மைக்கு முதலிடம் தருவர். இளைஞர்கள், இளம்பெண்கள் சிலர் போதை வஸ்து பயன்படுத்தத் தொடங்குவர்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.
எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.
பரிகாரம்: பிற மாநிலத் தம்பதிகளுக்கு இயன்றவரை உதவிசெய்யவும். வாயு, வயிற்றுப்புண் ஏற்படுத்தும் உணவுகளைத் தவிர்ப்பது நன்று. யோகப் பயிற்சி செய்வது நல்லது.
5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
தொழில் விஷயமாக வெளிநாட்டு வாய்ப்புண்டு. வெளிநாடு சம்பந்தமான தரவுகள் தேடிவரும். சிலர் புதிதாகத் தொழில் தொடங்க அரசுமூலம் முதலீட்டு சலுகை பெறுவர். சிலருக்கு நல்லநேரம் கூடிவரும்போது உங்கள் வார்த்தைகள் அதைக் கலைத்துவிடக்கூடும். மாதத்தின் முதலிரண்டு வாரங்கள் பணவரவு இறுக்கிப் பிடிக்கும். பின்னர் பணவரவு நிலை சீராகிவிடும். உங்கள் இளைய சகோதரர் மாதக்கடைசியில் சில தீவிர செயல்களைக் கடைப்பிடிப்பார். ஊடகத்துறையினர் சிலர் வில்லங்க செயல்களுக்கு ஆட்படுவர். வாழ்க்கைத் துணையின் பெயரில் வீடு, மனை வாங்கக்கூடும். உங்களில் சிலரது காதல் உங்களை அவமானப்படுத்தும். பங்குச்சந்தை சுமாரான நிலையில் இருக்கும். சிலருக்கு வாரிசுகள் அல்லது மருமகளோடு வாக்குவாதம் ஏற்படும் நிலையுண்டு. திருமண விஷயம் மிக மெதுவாக நகரும். மாதக்கடைசியில் வாகனங்களில் செல்லும்போதோ, பயணத்தின்போதோ, வீடு மாற்றும்போதோ மிகவும் கவனமாக இருக்கவேண்டும். உங்கள் தந்தை அல்லது மைத்துனி லேசாக காயம்பட நேரும். அரசு கௌரவம் கிடைக்கும். அரசியல்வாதிகள் தங்கள் புகழ் திக்கெட்டும் பரவ ஏராளமாக செலவுசெய்வர். சிலரது மாமியார் செலவை இழுத்துவிடுவார். அரசுப் பணிபுரிபவர்கள் இடமாறுதல் பெறுவர். அதிலும் அரசு கல்வித் துறையினருக்கு இடமாறுதல் நிச்சயமாக இருக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: பிற மாநில கட்டடத் தொழிலாளர்கள் காயம்பட்டு அவஸ்தைப் பட்டால் மருத்துவம் சார்ந்து இயன்ற உதவி செய்யுங்கள். நீங்கள் எண்ணெய்க்குளியல் செய்வது நன்று. நெய், பாதாம் பருப்பு சேர்த்துக்கொள்வது நல்லது.
6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் நீங்கள் சந்திக்கும் நபர் களிடமும், வீட்டில் உள்ளவர்களிடமும், வாழ்க்கைத்துணையிடமும் இனம்புரியாத சந்தேகமும் பயமும் தலைதூக்கும். இதனால் சற்று மன அமைதி குறையும். இதுபோல் வெளிநாட்டு வேலை, வர்த்தகம் சம்பந்தமும் சற்று படபடப்பைத் தரும். இந்த சூழ்நிலையில் வெளிநாட்டு வரன் வந்து, அதுவும் உங்களை மிகவும் யோசிக்க வைக்கும். உங்களில் சிலர் பத்திரிகைத்துறை, போக்குவரத்துத் துறையில் வேலை கிடைக்கப்பெறுவீர்கள். சிலருக்கு தொண்டை வலி வரக்கூடும். வீடு, வாகன விஷயம் கைகொடுக்கும். இப்போது நிச்சயமாகும் திருமணத்தில் சிறு பிரிவு, மாற்றம் போன்றவை வரலாம். வியாபாரத்தில் வெளியூர், வெளிநாட்டுப் பொருட்களை விற்பதன்மூலம் நல்ல பணப்பலன் பெறுவீர்கள். மாத முற்பகுதியில் நீங்கள் நினைத்த எதுவுமே நடக்காமல் போகும். பிற்பகுதியில் நல்லவை எல்லாம் நலமாக நடந்தேறும். அரசியல்வாதிகள் அளப்பரிய அதிர்ஷ்டமும் அளவில்லா அலைச்சலும் காண்பர். உயர்கல்வி சம்பந்தமான வெளிநாட்டுப் பயணமுண்டு. பயணங்களின்போதும் வியாபாரப் பண விஷயத்திலும் கவனம் தேவை. அதுவும் பிற இன மக்களிடம் சற்று விழிப்புடன் இருக்கவேண்டும். உங்கள் மாமனாரின் உடல்நலன் கவனிக்கப்பட வேண்டும். இந்தத் தேதிகளில் பிறந்த குழந்தைகளின் தந்தைக்கு அரசுப் பதவி, வேலை கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 8, 17, 26.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: வியாபார இடங்களில் வேலைபார்க்கும் பிற இன இளைஞர்களுக்கு முடிந்த உதவிசெய்யவும். நீங்கள் நிறைய பழங்களை உண்பது நல்லது.
7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
பெண்கள் சம்பந்தமாக நன்மைகளும் தீமைகளும் கலந்துவரும். அதுபோல் பிற மாநில இளைஞர்களிடம் கவனமாகப் பழகவும். இளைய சகோதரருக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும். அரசுவகையில் கடன் தள்ளுபடி அல்லது வட்டிக் குறைப்புண்டு. ஊடகத்துறையினர்- அரசு சார்ந்தவர்கள், அரசியல்வாதிகள் பற்றிய செய்திகளை அதிகம் பரப்புரை செய்வர். கலைத்துறையி னர் அமானுஷ்யம் சம்பந்த படங்களில் நடிக்க வாய்ப்பு பெறுவர். மாதத்தின் முதல் பதினைந்து நாட்கள் இளம்பெண்களுக்கு நீசர்களின்மூலம் தொல்லைகள் வரக்கூடும். அடுத்த பதினைந்து நாட்களில் நிம்மதி பெறுவர். இந்த மாதம் இளைஞர்கள் போதைப் பொருட்களிலிருந்து கண்டிப்பாக விலகியிருக்க வேண்டும். இல்லையெனில் ஏதாவது விபத்தில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்புண்டு. சம்பளத்திற்கு வேலைசெய்யும் ஊழியர்களுக்கும், சொந்தத் தொழில் நடத்துபவர்களுக்கும் பணிச்சுமை அதிகரிக் கும். உங்கள் தாயார் கால்வலியால் அவதிப் படக்கூடும். ஆலயங்களில் பணிபுரிவோர் நிறைய காவல்துறை சார்ந்தவர்களை சந்திக்க வேண்டியிருக்கும். இதன்மூலம் சிலபல நன்மைகள் கிடைக்கப்பெறுவர். குடிப்பழக்கம் உடையவர்கள் அதில் அதிகமாக ஈடுபடுவர். இதனால் குடும்பம் அவ மானத்தை சந்திக்க நேரும். இதன்பொருட்டு சிலரது திருமண வாழ்க்கை சிதறும் நிலையும் ஏற்படும். சிலரது மாமனார்கள் மனை வாங்குவர். இந்த மாதக் கடைசியிலிருந்து எதிலும் சற்று பாதுகாப்பாக இருக்கவேண்டும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.
எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.
பரிகாரம்: மனநிலை பிறழ்ந்தோருக்கு இயன்ற உதவிசெய்யவும். நீங்கள் நீர்த்தன்மை யுள்ள காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் திருமண விஷயங்கள் வேகம் பெறும். பணவரவு அதிகமிருக்கும்; செலவு அதைவிட அதிகமாக இருக்கும். இளைய சகோதரரின் கல்வி விஷயமாக வெளிநாட்டுப் பயணமுண்டு. பணியாட்கள் இடம் மாறுவர். சிலர் கைபேசியை மாற்றுவீர்கள். வீடு மாறக் கூடும். சிலர் மனையை விற்பனை செய்ய முயற்சித்துக்கொண்டிருந்தால், அதன் விற்பனை தற்போது நடக்கும். உங்கள் பெண்கள் வெளிநாட்டில் இருப்பின் அங்கு வீடு வாங்குவார்கள். அல்லது புதுமையான முறையில் அமைந்த அடுக்குமாடிக் குடி யிருப்பை இங்கு வாங்குவார்கள். உங்களில் சிலர் மதுப்பழக்கத்திற்கு ஆளாகக்கூடும். கலைத்துறையினர் வேறு மாநிலத்தில் கலைச்சேவை செய்வதும், வீடு வாங்குவதும் நடக்கும். ரசாயனம் சம்பந்த பங்குகளை வாங்குவீர்கள். சிலருக்கு சற்று வயிற்றுப் பிரச்சினை ஏற்பட்டு பின்னர் சரியாகும். அரசு சம்பந்தமான பிரச்சினை மறையும். அரசியல்வாதிகளால் ஏற்பட்ட இம்சை தீர்ந்துவிடும். அரசியல்வாதிகள் சிலர் நிறைய மறைமுக வேலைகளில் மூழ்கி முத்தெடுப்பர். தொழில் வளர்ச்சியின் பொருட்டு நிறைய மகளிரை சந்திக்க நேரும். நடக்கவிருந்த ஒரு விபத்து சிறு சிராய்ப்போடு போய்விடும். தந்தையின் உடல்நிலை கவனிக்கப்படவேண்டும். சிலருக்கு வேலை செய்யுமிடத்தில் தொல்லை கொடுத்த அதிகாரிகள் இடம்மாறி மறைவர். உங்களில் சிலர் முன்புசெய்த பழைய தொழிலை அல்லது குலத்தொழிலை மீண்டும் கையிலெடுக்கலாம். வியாபாரத்தின் கிளைகளைப் பல பகுதிகளில் திறப்பீர்கள். வேற்றின, மத மறுமணம் கூடிவரும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: சமையல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பிற மாநிலத் தொழிலாளர் களுக்கு இருப்பிட வசதி சம்பந்தமாக உதவுங்கள். உங்களுக்கு எலுமிச்சம்பழ பயன்பாடு நலம் தரும்.
9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் உங்களில் சிலர் வெளிநாடு செல்வீர்கள். மாதக்கடைசியில் வெளி நாட்டில் இருக்கும் சிலர் பிறந்த இடம் திரும்புவர். புனித ஆன்மிகப் பயணம் உண்டு. திருமண ஏற்பாடுகள் வேகம் பெறும். சிலருக்கு கலப்புத் திருமணம் நடக்கும். வெளிநாட்டுப் பணப்புழக்கம் உண்டு. வேலை தேடுவோர் வேலை கிடைக்கப்பெறுவர். தொழில் வேண்டுவோர் புதிய தொழில் பெறுவர். இரண்டிலுமே நல்ல சக தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் அமைவர். சிலர் தோள் வலி உணர்வர். கலைத்துறையில் பங்கெடுக்கும் வாய்ப்புண்டு. ஊடகத்துறை, கைபேசிக் கடையில் சிலருக்கு வேலை கிட்டும். தயவுசெய்து இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த மாதம் யாரிடமும் வம்புக்குச் செல்லவேண்டாம். வெற்றியும் தோல்வியும் சகஜமாகிவிடும். வெளிமாநில இளைஞர்களிடம் வம்பு வைத்துக்கொள்ளவேண்டாம். தொழிலில் லாபமும் கௌரவமும் கிடைக்கும். அரசியல் வாதிகள் பழமையான முறையில் நிதானமாக உழைத்துப் பெருமதிப்பு பெறுவர். சமையல் கலைஞர்கள் வேலைவாய்ப்பு தொடர்ந்து பெறுவர். ரியல் எஸ்டேட் துறையினர் பரபரப்பு பெறுவர். உங்களின் சிலரது மருமகன் சொந்தத் தொழில் ஆரம்பிக்கக்கூடும் உங்கள் மாமனார்- மாமியார் நன்றாக இருக்க, உங்களது பெற்றோர் சற்று திண்டாடுவர். உங்களில் சிலருக்கு பூர்வீக வீட்டில் பொருட்கள் களவு போகக்கூடும் பூர்வீக வீட்டை விற்கும் சிலரது முயற்சி பலிதமாகும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: யாரிடமும் வம்பு வைத்துக் கொள்ளவேண்டாம். உங்கள் எதிராளிகள் பலமான நிலையில் இருப்பதால் கவனம் தேவை. இஞ்சி, பூண்டு பயன்படுத்துவது மிக நல்லது.
செல்: 94449 61845