1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த புத்தாண்டு பிறக்கும்போதே உங்கள் எண்ணின் நாயகன் மிக நல்ல இடத்தில் அமர்ந்துள்ளார். கூடவே பணம் தரும் அதிபதியும் உள்ளார். எனவே இந்த வருடம் நீங்கள் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். ஆசைகள் அரங்கேறும். எல்லாவற்றுக்கும் மேலாக செலவழிக்க நல்ல பணப்புழக்கம் இருந்துகொண்டே இருக்கும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்திருப்போர் மகவைக் கையிலேந்துவர். பூர்வீக சொத்து கிடைக்கும். வேலை தேடுவோர் இந்த மாதம் முழு முயற்சியெடுத்து, எதிரிகள் காலில் விழுந்தாவது ஒரு வேலைக்கான உத்தரவைக் கையில் வாங்கிவிட்டுதான் மறுவேலை பார்ப்பார்கள். சிலரது வேலையில் வெளி நாட்டு சம்பந்தம் இருக்கும். உங்களில் சிலருக்கு ஒருதலைக்காதல் துளிர்க்கும். திருமண விஷயங்களை மாத முற்பகுதியில் பேசி முடிவெடுத்துவிடுங்கள். மாதப் பிற்பகுதியில் உங்கள் தகப்பனார் எதிர்ப்பை உண்டாக்கக்கூடும். இந்த தேதிகளில் பிறந்த தம்பதிகளுக்குள் கருத்து வேற்றுமை உண்டாகக்கூடும். பெற்றோருக்கிடையே சிறுசிறு சச்சரவுகள் உண்டாகி பின் சரியாகும். அறிவு சார்ந்த ஒரு அதிர்ஷ்ட நிகழ்வுண்டு. உங்களில் சிலர் பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு வாங்குவீர்கள். கலைத்துறை சார்ந்தவர்கள் நிறைய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவர். விளையாட்டுத் துறையினர் வேலை கிடைக்கும் முயற்சியில் வெற்றிகாண்பர். உயர்கல்வி சற்று தடங்கலாகி பின் சரியாகும். உங்கள் மருமகன்- மருமகளின் அனுசரணை அதிகம் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு உண்டு. அரசியல் வாதிகள் சொந்தத் தொகுதியில் ஆதாயம் பெறுவர். விவசாயிகள் இழப்பீட்டுத் தொகை கிடைக்கப்பெறுவர். தொழில் செய்யுமிடத்தில் வேலையாட் களைக்கொண்டு சீர்படுத்தும் வேலையைத் தொடங்குவீர்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: நீங்கள் எப்போதுமே வெளிச்சம் தரத்தக்க வகையில் உதவி செய்யுங்கள். நீங்கள் பிறந்த ஊர் கோவில், குலதெய்வக் கோவில் ஆகியவற்றுக்கு மின்சார விளக்கு, பித்தளை விளக்கு போன்றவை சார்ந்து உதவி செய்வது நன்று.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
நீங்கள் வெகுநாட்களாக அரசு சார்ந்த வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருந்தால் இந்த வருடம் கண்டிப்பாகக் கிடைத்துவிடும். அதுபோல் வீடு வாங்கவும் கடன்வசதி கைகூடும். மேலும் அரசு சார்ந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்கும் எண்ணமும் நிறைவேறும். இளைய சகோதரம் வேலைவாய்ப்பு பெறுவார். கடன்தீரும் வாய்ப்பு கண்டிப்பாக உண்டு. உங்கள் நீண்டநாள் வயிற்றுப் பிரச்சினைகளுக்கு அருமையான மருந்து கிடைக்கும். வாழ்க்கைத் துணைக்கும் உங்கள் தந்தைக்குமிடையே வாய் வார்த்தை முற்றும். தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சரியாகும். காவல்துறையினர் பழைய இடம் அல்லது சொந்த ஊர் அருகே மாறுதல் பெறுவர். சிலர் தங்களது ஆசைகளை எதிர்மறையான விதத்தில் நிறைவேற்றிக்கொள்வீர்கள். உங்களின் எதிரிகள் வேறிடம் செல்வர். சிலர் அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்வீர்கள். பேச்சில் கவனம் தேவை. குடும்பத்தில் சிலரது வம்புகளால் சற்று சலசலப்பு ஏற்படும். வீடு பழுதுபார்த்தல், வாகனங்கள் பழுதுபார்த்தல் போன்ற செலவுகள் ஏற்படும். உங்கள் மூத்த சகோதரியும் இளைய சகோதரரும் சேர்ந்துகொண்டு சற்று பிரச்சினை தரக்கூடும். மாத முற்பகுதியில் அரும்பும் காதல் பிற்பகுதியில் அமிழ்ந்து விடும். கலைத்துறையினர் வேலை, பிரச்சினை இரண்டையும் சந்திப்பர். அரசியல்வாதிகள், பத்திரிகை மற்றும் பொ
1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த புத்தாண்டு பிறக்கும்போதே உங்கள் எண்ணின் நாயகன் மிக நல்ல இடத்தில் அமர்ந்துள்ளார். கூடவே பணம் தரும் அதிபதியும் உள்ளார். எனவே இந்த வருடம் நீங்கள் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். ஆசைகள் அரங்கேறும். எல்லாவற்றுக்கும் மேலாக செலவழிக்க நல்ல பணப்புழக்கம் இருந்துகொண்டே இருக்கும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்திருப்போர் மகவைக் கையிலேந்துவர். பூர்வீக சொத்து கிடைக்கும். வேலை தேடுவோர் இந்த மாதம் முழு முயற்சியெடுத்து, எதிரிகள் காலில் விழுந்தாவது ஒரு வேலைக்கான உத்தரவைக் கையில் வாங்கிவிட்டுதான் மறுவேலை பார்ப்பார்கள். சிலரது வேலையில் வெளி நாட்டு சம்பந்தம் இருக்கும். உங்களில் சிலருக்கு ஒருதலைக்காதல் துளிர்க்கும். திருமண விஷயங்களை மாத முற்பகுதியில் பேசி முடிவெடுத்துவிடுங்கள். மாதப் பிற்பகுதியில் உங்கள் தகப்பனார் எதிர்ப்பை உண்டாக்கக்கூடும். இந்த தேதிகளில் பிறந்த தம்பதிகளுக்குள் கருத்து வேற்றுமை உண்டாகக்கூடும். பெற்றோருக்கிடையே சிறுசிறு சச்சரவுகள் உண்டாகி பின் சரியாகும். அறிவு சார்ந்த ஒரு அதிர்ஷ்ட நிகழ்வுண்டு. உங்களில் சிலர் பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு வாங்குவீர்கள். கலைத்துறை சார்ந்தவர்கள் நிறைய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவர். விளையாட்டுத் துறையினர் வேலை கிடைக்கும் முயற்சியில் வெற்றிகாண்பர். உயர்கல்வி சற்று தடங்கலாகி பின் சரியாகும். உங்கள் மருமகன்- மருமகளின் அனுசரணை அதிகம் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு உண்டு. அரசியல் வாதிகள் சொந்தத் தொகுதியில் ஆதாயம் பெறுவர். விவசாயிகள் இழப்பீட்டுத் தொகை கிடைக்கப்பெறுவர். தொழில் செய்யுமிடத்தில் வேலையாட் களைக்கொண்டு சீர்படுத்தும் வேலையைத் தொடங்குவீர்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: நீங்கள் எப்போதுமே வெளிச்சம் தரத்தக்க வகையில் உதவி செய்யுங்கள். நீங்கள் பிறந்த ஊர் கோவில், குலதெய்வக் கோவில் ஆகியவற்றுக்கு மின்சார விளக்கு, பித்தளை விளக்கு போன்றவை சார்ந்து உதவி செய்வது நன்று.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
நீங்கள் வெகுநாட்களாக அரசு சார்ந்த வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருந்தால் இந்த வருடம் கண்டிப்பாகக் கிடைத்துவிடும். அதுபோல் வீடு வாங்கவும் கடன்வசதி கைகூடும். மேலும் அரசு சார்ந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்கும் எண்ணமும் நிறைவேறும். இளைய சகோதரம் வேலைவாய்ப்பு பெறுவார். கடன்தீரும் வாய்ப்பு கண்டிப்பாக உண்டு. உங்கள் நீண்டநாள் வயிற்றுப் பிரச்சினைகளுக்கு அருமையான மருந்து கிடைக்கும். வாழ்க்கைத் துணைக்கும் உங்கள் தந்தைக்குமிடையே வாய் வார்த்தை முற்றும். தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சரியாகும். காவல்துறையினர் பழைய இடம் அல்லது சொந்த ஊர் அருகே மாறுதல் பெறுவர். சிலர் தங்களது ஆசைகளை எதிர்மறையான விதத்தில் நிறைவேற்றிக்கொள்வீர்கள். உங்களின் எதிரிகள் வேறிடம் செல்வர். சிலர் அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்வீர்கள். பேச்சில் கவனம் தேவை. குடும்பத்தில் சிலரது வம்புகளால் சற்று சலசலப்பு ஏற்படும். வீடு பழுதுபார்த்தல், வாகனங்கள் பழுதுபார்த்தல் போன்ற செலவுகள் ஏற்படும். உங்கள் மூத்த சகோதரியும் இளைய சகோதரரும் சேர்ந்துகொண்டு சற்று பிரச்சினை தரக்கூடும். மாத முற்பகுதியில் அரும்பும் காதல் பிற்பகுதியில் அமிழ்ந்து விடும். கலைத்துறையினர் வேலை, பிரச்சினை இரண்டையும் சந்திப்பர். அரசியல்வாதிகள், பத்திரிகை மற்றும் பொதுமக்கள் சந்திப்பின்போது கவனமாக இருக்கவேண்டும். விவசாயிகள் அதிக ஆட்களை வைத்து வேலை வாங்குவீர்கள். மகளும் மருமகனும் சேர்ந்து வந்து செலவு வைக்கத் தூண்டுவர். மாணவர் கள் கல்வியில் சற்று தடுமாற்றம் காண்பர். மாதப் பிற்பகுதியில் ஹெட் போன் செலவுண்டு.
அதிர்ஷ்ட எண்கள்: 4, 13, 22, 31.
எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.
பரிகாரம்: நீங்கள் எப்போதும் வெண்மை நிறம் சார்ந்த உதவி செய்யவும். அது பால், மோர், அரிசி அல்லது வெள்ளைநிற வேட்டி போன்று அமையலாம்.
3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்களுக்கு வியாபாரம் மிக மேன்மை யடையும். இப்போது வீடு மாற்றம், மனை விற்பனை பற்றிய செய்தி கைபேசியில் வரும். உங்களது மனையை அரசு கையகப் படுத்தியிருந்தால் அதுசார்ந்த அரசின் இழப்பீட்டுத் தொகை கிடைக்கும். மாத முற்பகுதியில் சிலரது வாரிசுகள் வெளியிடம் செல்வர். கடனை அடைக்குமளவுக்கு பணம் கையில் கிடைக்கும். மாத முற்பகுதியில் அரசு சார்ந்த கௌரவமான வரன் பேசி முடிக்கும் வாய்ப்புள்ளது. மாதப் பிற்பகுதி யில் உங்கள் தந்தையும் இளைய சகோதரரும் கருத்து வேறுபாடு கொள்வர். இந்த மாதம் அரசு பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் தடித்த சொற்கள் மிகுதியாக வீசப்படும். மாத முற்பகுதியில் ஆரோக்கியம் சார்ந்த செலவேற்பட்டு பின் சரியாகும். நீண்டநாட்களாக வீடு, வாகனம் மாற்றும் எண்ணத்தில் இருந்தவர்களுக்கு இப்போது அது நடக்கும். கலைஞர்களுக்கு மாத முற்பகுதியில் நல்ல வருமானமும், பிற்பகுதியில் அலைச்சலும் செலவும் ஏற்படும். உங்கள் எதிரிகள் உங்களுக்கு அருகிலேயே வந்து தொல்லை தருவார். வேலையில் இடமாறுதல் உண்டு. மாத முற்பகுதியில் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெறும். பிற்பகுதியில் காதல் திருமணம் கைகூடும். சில அரசியல்வாதிகளின் இடமாற்ற முயற்சி வெற்றி தரும். சிலரது மூத்த சகோதரி வேலை விஷயமாக இடம் பெயர்வார். சிலருக்கு மருமகள் வருவார். உங்கள் மாமனாருக் கும் தந்தைக்குமிடையில் வாக்குவாதம் ஏற்படும். சிலர் இரண்டாவது தொழில் தொடங்குவீர்கள். சிலர் வேலைவிஷயமாக கொடுத்த பணம் திரும்பவராமல், இனி கிடைக்காது என்று கவலைப்படும் நேரத்தில் அந்தப் பணம் கிடைத்துவிடும். விருந்து வைபவம் உண்டு.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: நீங்கள் எப்போதும் அறிவுச் செல்வத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். அது நடைமுறையில் வேலை அல்லது கைத்தொழில், இயந்திரப் பழுதுநீக்கம் என ஏதோவொன்றை அடுத்தவருக்குக் கற்றுக்கொடுங்கள்.
4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
மாத முற்பகுதியில் எரிச்சல் கொடுக்கும் விஷயம் பிற்பகுதியில் சரியாகிவிடும். மாத முற்பகுதியில் நடக்கும் நன்மைதரும் நிகழ்வுகள் பிற்பகுதியில் காலை வாரிவிடக்கூடும். மாதத்தின் முதலிரண்டு வாரங்களில் தந்தையுடன் சற்று பிணக்கு ஏற்படும். பின்னர் அது உங்கள் தாய்- தந்தையரின் மனஸ்தாபமாக மாறிவிடும். நீங்கள் ஆசுவாசமாகி விடுவீர்கள். இந்த மாதம் முழுவதும் பண விஷயம் சற்று நெருக்கடியாகத்தான் இருக்கும். பங்குப் பத்திரம் பக்கம் தலை வைத்தும் படுக்க வேண்டாம். திரைப்படக் கலைஞர்களின் சிலர் மாதப் பிற்பகுதியில் இன்னலுக்கு ஆளாக லாம். என்றாலும் மாதத்தின் கடைசி வாரத்தில் எதிர்பாராத ஒரு அதிர்ஷ்டம் தேடிவந்து மகிழ்விக்கும். சிலர் தொழிலில் பின்னடைவை சந்திக்கும்போது வேறுசிலர் எதிர்பாராத லாபத்தை ஈட்டுவர். சிலர் தொழில் லட்சியம் நிறைவேற குறுக்குவழிகளைக் கையாளக்கூடும். மாதப் பிற்பகுதியில் உங்கள் கடன் அடை பட்டுவிடும். வாரிசுகளால் பண விஷயமாக மனக்கசப்பு ஏற்படும். சீருடைப் பணியாளர்கள் சிலர், தண்டனையாக வருமானம் வராத இடத்திற்கு மாற்றப்படும் சாத்தியக்கூறு உள்ளது. விவசாயிகளுக்கு அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்வதற்கே நேரம் சரியாகப் போய்விடும். வீடு, வாகனம், வயல் எல்லாம் பழுதுநீக்கும் செலவுகளைத் தரும். சிந்தனைகளின் தடுமாற்றத்தால் சற்று உடல்நலம் கெடக்கூடும். அரசியல்வாதிகள் சில இடையூறுகளை சந்திப்பர். மருமகனால் கௌரவக் குறைவு ஏற்படலாம். குடும்பத்தில் ஏதோ ஒருவித பதட்டம் இருந்துகொண்டே இருப்பதால், "யாராவது செய்வினை வைத்து விட்டார்களோ?' என்ற சிந்தனைகூட தோன்றும். எவ்வாறாயி னும் மாத முற்பகுதியில் சற்று எச்சரிக்கையாக இருப்பது நன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 8, 17, 26.
எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.
பரிகாரம்: பிற இன- மத மனிதர்களுக்கு மருந்து மற்றும் மருத்துவ உதவி செய்யவும்.
5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் தொழிலில் முதலீடு செய்வீர்கள். அதற்கு அரசு சார்ந்த உதவி கிடைக்கும். அரசு கௌரவம் உண்டு. பூர்வீக சொத்துமூலம் பணவரவுண்டு. வெளிநாட்டில் பேரன், பேத்திகள் பிறக்க வாய்ப்புண்டு. மாதத்தின் முதலிரண்டு வாரங்களில் தைரியக் குறைவு, முயற்சியில் தடங்கல் ஏற்படும். அடுத்த வாரங்களில் அது சரியாகிவிடும். இளைய சகோதரர் உடல்நிலை குறித்த கவலை ஏற்படும். கைபேசி சில கவலையளிக்கும் செய்திகளைக் கொண்டுவரும். உங்களில் சிலரது வீடுகள் திடீரென்று பெயர்ந்துவிழ வாய்ப்புண்டு. வாரிசுகள் வீடு, மனை, வயல் சம்பந்தமாக கடனுதவி செய்வர். இந்த அதீத செலவுகளால் வாரிசுகளுடன் சற்று கருத்து வேற்றுமை ஏற்படும். சிலரது கைபேசி பழுதாகக்கூடும். திரைப்படம், தொலைக்காட்சிக் கலைஞர்களுக்கு தொழில் வாய்ப்பும் பணவரவும் செழிக்கும். சிலர் வாழ்க்கைத்துணையின் வேலையின் பொருட்டு கடன் வாங்குவீர்கள். திருமண விஷயங்களில் சற்று குதர்க்கமான பேச்சு எழும். உயர்கல்வி சம்பந்தமாக வேலைப்பளு அதிகரிக்கும். தொழில்துறையினர் தங்கள் தொழிலுக்கான சொந்த இடத்தைத் தேர்வு செய்வர். அரசியல்வாதிகள் அதிர்ஷ்டமும் அலைச்சலும் பெறுவர். சிலரது வாரிசு களின் வெளிநாட்டுப் பயணத்தில் அரசு குழப்பம் ஏற்படுத்தும். இந்த மாதம் முக்கியமான ஆவணங்களை கவனமாகக் கையாளுங்கள். வீடு வாங்கும்போதும் விற்கும்போதும் பத்திரங்களை மிக கவனமாகக் கையாளவும். சிலரது மாமியார் உங்கள் வீட்டில் செட்டிலாகி, வீட்டை அதகளப்படுத்துவார். வீட்டு வேலையாட்கள்மேல் ஒரு கண் வைத்துக்கொள்ளவும். மேலும் இந்த மாதம் ஞாபக மறதியால் சில தொந்தரவுகளை சந்திக்க நேரிடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.
பரிகாரம்: எப்போதுமே நீங்கள் பள்ளிக் குழந்தைகளுக்கும், செடி கொடி சம்பந்தமாகவும் உதவி, தானம் செய்யுங்கள்.
6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் உங்களுக்கு வரும் தரவுகள் செலவுகளை அள்ளிவீசும். உங்கள் வீடு பற்றிய ஒரு வதந்தி கிளம்பி, அதனால் வீடுமாற்றம் செய்ய நேரும். பணவரவில் தடை, தாமதம் ஏற்படும். சிலரது வாழ்க்கைத் துணையின் வேலை விஷயமாக அபத்தமான குற்றச்சாட்டு எழக்கூடும். உங்கள் வீட்டு வேலையாட்கள், சமையல்காரர்கள் போன்றவர்களின் சுபச்செலவுக்குப் பணம் கொடுப்பீர்கள். சிலருக்கு அஜீரணக் கோளாறு வந்து விலகும். அரசியல்வாதிகள் நிறைய மனிதர்களை சந்தித்து பேட்டிகொடுக்க வேண்டியிருக்கும். உயர்கல்வி, முனைவர் பட்டம் பெற முயற்சிப்போர் தரவு களைத் திரட்ட அதிக செலவுசெய்ய வேண்டிவரும். உங்கள் இளைய சகோதரர் விளையாட்டு அல்லது கலை சம்பந்தமான வேலையில் சேர்வார். பங்கு வர்த்தகம், இன்சூரன்ஸ், அஞ்சல்துறை முகவர்களை சந்தித்து விளக்கம் பெறுவீர்கள். மூத்த உடன்பிறப்பின் திருமணம் பற்றிய சுபச்செய்தி வரும். ரியல் எஸ்டேட் துறையினர் நிறைய வாய்ப்புகளையும் வேலையும் பெறுவர். தம்பதிகள் நிறைய சுபச் செலவுகளை எதிர்கொண்டு, பயணங் களையும் மேற்கொள்வர். உங்கள் மருமகன் வீடு விஷயமாகவும் குழந்தைகள் விஷயமாகவும் சற்று கருத்து வேறுபாடு கொள்வார். சிலருக்கு சொந்தத் தொழிலில் தொழிலாளர்களுடன் மோதல் ஏற்படும். முக்கியமாக வியாபாரம் செய்வோர் சற்று கவனமாக இருக்கவேண்டும். இந்த மாதம் பணம் கொடுக்கல்- வாங்கலின்போது எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். பணம் தவறிவிடவும் மறந்துவிடவும் வாய்ப்புண்டு. கலைத்துறையினர் பற்றிய நிறைய செய்திகள் வரும். அதிலும் சிலர் செலவுசெய்து அவர்களை அவர்களே பிரபலப்படுத்திக் கொள்வர்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: எப்போதும் வெண்மை மற்றும் இனிப்பு சார்ந்த பொருட்களை தானம் செய்யுங்கள். குறிப்பாக உங்கள் குடும்பப் பெண்களுக்கு வெள்ளிப் பொருட்கள் வாங்கிக்கொடுங்கள்.
7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் பண விஷயம் சம்பந்தமாக நிறைய குழப்பம் ஏற்படும். வீடு விற்கலாமா- வீட்டைக் குத்தகைக்கு விடலாமா- அரசு ஒப்பந்தம் கைகூடுமா- அதற்கு எவ்வளவு பணம் கொடுக்கவேண்டும் என சிலர் மண்டையைக் குழப்பிக்கொள்வர். சிலருக்கு லஞ்சப் பணத்தை வாங்கலாமா- அதனால் வில்லங்கம் வருமா- வேலை போய்விட்டால் என்ன செய்வது என வானளாவு சந்தேகம் வரும். மாதப் பிற்பகுதியில் "ஆட்டைத் தூக்கி குட்டியில் போட்டு- குட்டியைத் தூக்கி ஆட்டில் போட்டு' என்ற கதையாக பணத்தை எப்படியோ தயார்செய்து இருக்கும் கடனை அடைத்துவிடுவீர்கள். ஆக, இந்த மாதம் பண வரவிருக்கும் அதேசமயத்தில் அதற்கு ஈடாக செலவும் அமையும். மாத முற்பகுதியில் சில தொழிலாளர்கள் வேலையைவிட்டு விலகுவர். பிற்பகுதியில் சற்று முரணான குணம்கொண்ட வேலையாட்கள் கிடைப்பர். சிலர் வீடு மாறுவர். சிலரது வாரிசுகள் இடம்பெயர்வர். அது பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் அமையும். சில திரைப்படக் கலைஞர்கள் வீட்டில் முதலீடு செய்வர். பங்கு வர்த்தகத்தில் பணம் செலுத்துவீர்கள். சிலர் போட்டி, பந்தயங்களில் பணம் பெறுவீர்கள். உங்கள் எதிரிகள் உங்களிடமிருந்து பணம் பெறுவர். உங்களைப்பற்றி காட்டிக்கொடுக்காமல் இருக்கவும், அவர்களின் துஷ்ட செயல்களை அடக்கவும் ஒரு தொகையைச் செலுத்தி ஈடுசெய்வீர்கள். சிலர் தொழில் விஷயமாக அரசுக்கு வரி செலுத்த வேண்டியிருக்கும். பேச்சில் கவனம் தேவை. சில சொற்கள் உங்களுக்கு எதிராகத் திரும்பக்கூடும். இந்த மாதப் பிற்பகுதியில் ஒருவித அச்ச உணர்வு தோன்றும். கூடியமட்டும் எதிரிகளை எதிர்க்காமல் ஒதுங்கிப்போவது தற்போதைக்கு நல்லது. இல்லையென்றால் அவர்களால் தொல்லைகள் மிகும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.
எச்சரிக்கை எண்கள்: 6, 15, 24.
பரிகாரம்: சந்நியாசிகள், வாழ்வைத் தொலைத்தவர்கள், வீடற்றவர்கள் போன்றவர்களுக்கு கம்பளி அல்லது சாதாரண போர்வை வாங்கிக்கொடுங்கள்.
8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
அனைத்து நல்ல விஷயங்களையும் மாதத்தின் ஆரம்பத்தில் முடித்துவிடுங்கள். அப்போதுதான் நீங்கள் நினைத்தது நினைத்த படி நிறைவேறும். தொழில் வகையில் பணவரவுண்டு. அல்லது உங்கள் வாரிசுகள் உங்களுக்கு உதவுவார்கள். பூர்வீக சொத்து பற்றிய நற்செய்தி கிட்டும். வீடு, மனை வாங்கும் விஷயத்தில் சில சந்தேகங்கள் ஏற்படும். மாதப் பிற்பகுதியில் வீட்டில் முதலீடு செய்வீர்கள். இந்த மாதம் கடன் அடைபடும். மேலும் நீண்ட நாட்களாக வாட்டிவதைத்த கால் நரம்புவலி பிரச்சினை தீரும். குலதெய்வம், இஷ்டதெய்வக் கோவில் வகையில் பயணச் செலவுண்டு. வரும் மருமகன் சற்று பிரிவு மாறி அமைவார். மாதப் பிற்பகுதியில் வாரிசுகள் வேலை விஷயமாக வெளிநாடு செல்வர். இந்த தேதிகளில் பிறந்த ஜாதகர்களும் வேலை கிடைத்து வெளியிடம் செல்வர். சிலருக்கு வீடு மாறுதல் சம்பந்தமாக சற்று தொந்தரவுகள் ஏற்படும். இரண்டுவகையில் உங்கள் மனம் சங்கடப்படக்கூடும். ஒன்று, பண விஷயமாக உங்கள் குடும்பத்திற்குள் கருத்து வேறுபாடு வரும். அல்லது அரசு சம்பந்தமாக ஒரு அவமானம் ஏற்படலாம். எனவே சற்று முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம். கைபேசி செய்திகள் தவறான தகவல் தரும். சமையல் செய்யும் போது கவனம் தேவை; காயம் ஏற்பட வாய்ப்புண்டு. அரசியல்வாதிகள் நிறைய அலைச்சலையும் செலவுகளையும் எதிர்கொள்வர். ஒருசில அரசியல்வாதிகள் அவப்பெயருக்கு ஆளாகக்கூடும். அது பணம் சார்ந்ததாக இருக்கும். மூத்த சகோதரர் இடமாறுதல் பெறுவார். சிலர் ஞாபகமறதியாக பொருட்களைத் தொலைத்துவிட்டுத் தேடுவீர்கள். சிலர் தீய பழக்கங்களுக்கு நிறைய செலவுசெய்வர்.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.
எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.
பரிகாரம்: எப்போதும் நீங்கள் ஊனமுற்றோர் சம்பந்தமாக உதவிசெய்யவும். கடைநிலை ஊழியர்கள், விளிம்புநிலையில் வாழ்பவர்களை மரியாதையாக நடத்தவேண்டும்.
9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாத முற்பகுதியில் அரசுவேலை கிடைக்கும். சிலர் அரசு வேலைக்கு லஞ்சப் பணம் கொடுத்துவிட்டு, ஏமாந்துவிட்டோமோ என பரிதவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு தற்போது வேலை கிடைத்துவிடும். உங்கள் பேச்சை கட்டுக்குள் வைத்திருந்தால் போதும்; பல பிரச்சினைகளைத் தவிர்த்துவிடலாம். சிலர் வெளி நாட்டு சம்பாத்தியம் செய்வார்கள். அரசுவேலை செய்வோர் கடன் கிடைக்கப்பெறுவர். வாரிசுகள் நற்செய்தி கொண்டுவருவர். சிலருக்கு பேரன், பேத்தி பாக்கியம் கிடைக்கும். கலைஞர்களுக்கு பெருமதிப்பு கிடைக்கும் அதேநேரம் சில சங்கடங்களையும் எதிர்கொள்ள நேரலாம். சிலரது தந்தைக்கு மருந்து எடுத்துக்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். மாதப் பிற்பகுதியில் சிலரது திருமணம் சற்று குழப்பத்துடன் நடைபெறும். சில சந்திப்புகள் நன்மை தரும்; சில சந்திப்புகள் சச்சரவு தரும். வியாபாரிகள் வியாபார விருத்திக்காகக் கேட்ட கடன் கிடைக்கப்பெறுவர். மாதப் பிற்பகுதியில் தொழிலதிபர்கள் அரசுத்துறையால் சில தொல்லைகளை அனுபவிக்கக்கூடும். அது சட்டமீறல் விஷயமாக இருக்கும். அரசியல்வாதிகள் நல்ல தொழில் வளமும் மேன்மையும் பெறுவர். பூர்வீக சொத்து அல்லது குலதெய்வக் கோவில் விஷயமாக கௌரவப் பிரச்சினையை சிலர் சந்திக்கக்கூடும். சிலரது தந்தையின் கைபேசி காணாமல் போக வாய்ப்புண்டு. நீங்களும் வீட்டில் நகை, பணம் போன்றவற்றைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். சிலருக்கு கைபேசி தகவல்கள் மூலம் வீண் இழப்புக்களை எதிர்கொள்ளும் சூழல் உள்ளது; கவனமாக இருக்கவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: இளைஞர்கள், விளையாட்டுத்துறை சார்ந்தோர், கட்டடத் தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு உதவிசெய்யுங்கள்.
செல்: 94449 61845