1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

2021 ஜனவரி மாதம் சர்ப்ரைஸ் நிறைந்த, நல்லன எல்லாம் நடக்கும் மாதமாக இருக்கும். முதலிரண்டு வாரங்களில் இதுவரையில் வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். சிலருக்கு முன்பு வேலைபார்த்த இடத்திலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தால் இப்போது அவர்களே அழைத்து வேலைகொடுப்பார்கள். இதுவரையில் சம்பளம் கொடுக்காமலிருந்தால் இந்த ஜனவரி மாதம் பழைய பாக்கியெல்லாம் சேர்த்து ஒரு நல்லதொகை கைக்குக் கிடைக்கும். சிலருக்கு பணியில் பதவி உயர்வுண்டு. இதுவரையில் இழுபறியாக இருந்த வழக்கு களில் எதிர்பாராத வெற்றி கிடைக்கும். திருமணம் நிச்சயமா கும். பல திருமணங்கள் விருப்பத் திருமணங்களாக அமையும் வாய்ப்புண்டு. சற்று அஜீரணக் கோளாறு ஏற்பட்டு இன்னல் தரும். அரசியல்வாதிகள் அதிகம் உழைக்க நேரிடும். தொலைக் காட்சி, சினிமா போன்ற கலைத் துறை சார்ந்தவர்களுக்கு வேலை அதிகரிப்பும், கௌரவமும், கூடவே பணப்பலனும் கிட்டும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று கவனச்சிதறல் ஏற்படும். கல்வி முன்னேற்றம் தடைப்படாது. உயர்கல்வி ஒரு ஒழுங்குமுறைக்கு வரும். பெற்றோர் அனுசரணை கிடைக்கும். விவசாயிகள் விதை சம்பந்தமாக சற்று கவலை கொள்ள நேரிடும். தம்பதிகளுக் குள் அவ்வப்போது சிறுசிறு சச்சரவுகள் உண்டு. உங்கள் தொழில் அல்லது வேலை பற்றிய ஒரு நற்செய்தி கிடைக்கும். அது பெரும்பாலும் வெளிநாடு, வெளியூர் சம்பந்தமானதாக இருக்கும். மூத்த சகோதரர் களுடன் கொஞ்சம் மனஸ்தாப மும், நிறைய லாபமும், வேலையில் வழிகாட்டுதலும் சேர்ந்தே கிடைக்கும். சிலருக்கு பணம் காணாமல்போகும் வாய்ப்புள்ளது; கவனம் தேவை. இந்த மாதப் பிற்பகுதியில் சற்று குழப்பம் ஏற்படும். பின் அதுவே உங்களுக்கு எதிர்பாராத பெரும் நன்மையைத் தரும். வாழ்க்கையில் ஒரு பெரும் நம்பிக்கையும் பிடிப்பும் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

Advertisment

உங்கள் எண்ணின் அதிர்ஷ்டக்கிழமை ஞாயிறு. எனவே இந்த மாதத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் உங்கள் பூர்வீகம் சம்பந்தமான விஷயங்களில் உதவவும். நன்மைகள் விரைவாக நடைபெறும்.

ddd

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த 2021 ஜனவரி மாதத்தில், இதுவரை யில் வீடு, அப்பார்ட்மென்ட் வாங்கப் பெருமுயற்சி செய்தும் கடன் கிடைக்காத வர்களுக்கு இந்த மாதம் கூப்பிட்டுக் கடன்கொடுப்பார்கள். நீங்களும் வாங்கி வீடு, பிளாட்டுக்கு முன்பணம் கொடுத்துவிடுவீர்கள். கல்வி சம்பந்தமான அரசு வேலைக்குக் காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு உடனே வேலை கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, அவர்கள் எதிரிகளுக்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவிப்பதன்மூலம் திட்டம் நிறைவேறி, நல்ல தொகையும் லாபமும் (?) கிடைக்கும். சிலருக்கு வீட்டுவாடகை அதிகம் கிடைக்கக் கூடும். சிலரின் பிள்ளைகள் வேலைக்குச் செல்வார்கள். சில கலைத்துறையினர் அரசியலில் ஈடுபடும் வாய்ப்புண்டு. வெளிநாடு சம்பந்தமான திட்டம் நிறைவேறும். உங்கள் தொழில், வியாபாரத்தில் முதலீட்டைப் பெருக்கி வேறு கடை அல்லது கிளைகள் தொடங்குவீர்கள். மாதத்தின் மூன்றாவது வாரத்தில் எதிர்பாராத பணவரவுண்டு. வாழ்க்கைத்துணையின் உடல்நலம் சற்று கெட்டுப்பின் சீராகிவிடும். திருமணப் பேச்சுவார்த்தையின்போது பண விஷயமாக சற்றுப் பின்னடைவு ஏற்படலாம்; கவனம் தேவை. தம்பதிகளுக்குள் வேலை மாற்றம் காரணமாக பிரிவு ஏற்படலாம். தந்தைக்கும் உங்கள் வாழ்க்கைத்துணைக்கும் பணவிஷயமாக சற்று மனஸ்தாபம் ஏற்படும். உங்கள் கைப்பேசி பழுதாவதால் புதிய கைப்பேசி வாங்க நேரும். மாணவர்கள் கல்வி சம்பந்தமாக சற்று குழப்பமடையக்கூடும். மூத்த சகோதரியுடன் பிணக்கு ஏற்படும். விவசாயிகள் அரசின் அனுகூலம் பெறுவர். சிலருக்கு மழலைப்பேறு கைகூடும். ஏதாவது கடன் வாங்கவேண்டியிருந்தால் முதலிரண்டு வாரத்துக்குள் முயற்சித்தால் கண்டிப்பாகக் கிடைத்துவிடும். அரசுமூலம் வாகனம் அல்லது வாகனக் கடன் கிடைக்கும். விவசாயப் பெருமக்கள் தங்கள் வயல் வரப்புக்கு வேண்டிய வாகனம் மற்றும் கருவிகளுக்கு இந்த மாதம் முதல் வாரத்திலேயே அரசுக்கு விண்ணப்பித்து விடுங்கள். கண்டிப்பாக நல்ல பதிலும் பலனும் எதிர்பார்க்கலாம்.

அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.

எச்சரிக்கை எண்கள்: 8, 17, 26.

உங்களின் அதிர்ஷ்டக் கிழமையான திங்கட்கிழமைதோறும் யாருக்காவது அரிசி அல்லது உணவு வாங்கிக்கொடுங்கள். நன்மைகள் விரைந்தோடி வரும்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த 2021 ஜனவரியில், இந்த தேதிகளில் பிறந்த குழந்தைகளின் தந்தைக்கு விரும்பிய வேலை கண்டிப்பாகக் கிடைக்கும். மற்றவர்களுக்கு தந்தையின்மூலம் லாபம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டிலிருக்கும் மூத்த சகோதரிமூலம் வேலைவாய்ப்பு, கடனுதவியும் கிடைக்கும். வேலைபார்க்கும் வரன் அமைந்து திருமணம் நிச்சயமாகும். மாத முற்பகுதியில் சிலரின் தந்தைக்கும் வாழ்க்கைத்துணைக்கும் பணவிஷயமாக சற்று கருத்து வேறுபாடு ஏற்படும். இந்த மாதம் வேலை, தொழில் விஷயத்தில் சற்று மறதி வர வாய்ப்புண்டு. எனவே, பணம் சம்பந்தமான விஷயங்களை எழுதி வைத்துக்கொள்ளவும். உங்களிடம் வேலைசெய்வோருக்கு பண உதவி செய்வீர்கள். மாதக் கடைசியில் வீடு, வாகனம் பழுதுபார்க்கும் செலவுண்டு. குலதெய்வக் கோவிலுக்குச் செல்வீர்கள். காவல்துறையினர் சிலருக்கு பழைய இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். சிலர் தங்கள் தந்தையின்மூலம் அரசியலில் கால்பதிப்பர். வியாபாரத்தில் எந்த விஷயமும் சற்று குழப்பம் கொடுத்து பின் சரியாகும். இந்த மாதம் உங்கள் புத்திசாலித் தனம் சற்று மந்தமாக இருக்கும். சிலரின் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுசேர்ந்து தொழில் ஆரம்பிக்கக்கூடும். மாதப் பிற்பகுதியில் இதற்கு அரசின் உதவியும் கிடைக்கும். அரசியல்வாதிகள் கண்டனத்துக்கு ஆளாவார்கள். குழந்தைப் பேற்றுக்காக மருத்துவக் கண்காணிப்பில் இருப்பவர்கள் நற்செய்தி கிடைக்கப்பெறுவர். விவசாயிகள் நன்மையான செலவு செய்வர். கலைத்துறையினர் அலைச்சலுக்கு ஆளாவர். சில விவசாயிகள் விதை தயாரிப்பில் நாட்டம் கொள்வர். சிலரின் தந்தைக்கு கொஞ்சம் உடல் உபாதைகள் ஏற்பட்டு சரியாகும். சமையல் கலைஞர்கள் வேலைவாய்ப்பும் லாபமும் பெறுவர். வீண்பேச்சு, வீண்சண்டை வேண்டாம்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.

எச்சரிக்கை எண்கள்: 8, 17, 26.

உங்களின் அதிர்ஷ்டக் கிழமையான வியாழன்தோறும் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு சார்ந்த உதவிகள் செய்யவும்.

Advertisment

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த 2021 ஜனவரியில் சில நம்பமுடியாத நல்ல விஷயங்கள் நடக்கும். அதேநேரம் சில வேண்டாத விஷயங்களும் நடக்கும். உங்களை இவ்வளவு நாளும் அவதூறு பேசிக் கொண்டிருந்த நபர் உங்கள் பார்வையிலிருந்து விலகிவிடுவார். இது உங்களுக்கு பெருத்த நிம்மதி தரும். பூர்வீக சொத்திலிருந்து ஒரு நல்ல தொகை கிடைக்கும். அல்லது உங்கள் பிள்ளைகள் ஒரு யோகமான பலனைத் தருவார்கள். பங்கு வர்த்தகம் நல்ல லாபம் தரும். உங்கள் தொழில் சார்ந்த மாறுபட்ட சிந்தனைகள் தொழிலை வேறுவிதமான முன்னேற்றத்துக்கு அழைத்துச்செல்லும். சிலருக்கு பெற்றோராகும் பாக்கியமும், வேறுசிலருக்கு தாத்தா- பாட்டியாகும் பாக்கியமும் கிடைக்கும். ஆரோக்கியம் சார்ந்த மேற்கல்வி கிடைக்கும். உணவு சம்பந்த ஏற்றுமதியாளர்கள் ஒரு நல்ல பயனை அடையப் போகிறார்கள். இந்தமாதம் வீடு அல்லது வாகனம் எங்காவது இடித்து "பட்டி' பார்க்கும் நிலை ஏற்படும். எனவே பயணங்களில் கவனம் தேவை. தாயாரின் உடல்நலனில் சிரத்தை எடுத்துக்கொள்ளவும். அரசியல்வாதிகள் தங்களின் பழைய பெருமைகளை அடிப்படை யாக வைத்து மேன்மை காண்பர். சிலர் சிறைச்சாலையிலிருந்து வெளிவர வாய்ப்புள்ளது. சிலருக்கு களவுபோன பொருட்கள் திரும்பக் கிடைக்கும். காவல்துறையினருக்கு விரும்பத் தகாத இடமாற்றம் உண்டு. சில கலைத்துறையி னர் அரசியல் களத்தில் பங்கேற்பர். காதல் விஷயங்கள் சிறு தடைகளுக்குப்பிறகு நிறைவேறும். வீடு வாடகைக்குப் போவது அல்லது வாடகைக்கு விடுவது போன்றவற்றை மாதத்தின் பிற்பகுதியில் வைத்துக்கொள்ளவும். பெண்களிடம் கவனமாகப் பேசவேண்டும். இல்லாவிடில் அரசு தண்டனைக்கு ஆளாக நேரலாம். திருமணப் பேச்சுகள் இழுபறியாகும். விவசாயிகள் மாத முற்பகுதியில் இம்சையும் பிற்பகுதியில் இன்பத்தையும் அடைவார்கள். கடன், நோய் மறையும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 6, 15, 24.

இப்போதைக்கு உங்களின் அதிர்ஷ்டக் கிழமையான வெள்ளிக்கிழமைகளில் வயதான வர்களுக்கு உணவு அல்லது ஆடை கொடுக்கவும்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த 2021 ஜனவரியில் காதல் திருமணம் சார்ந்த விஷயங்களை மாத முற்பகுதியில் தீர்மானித்துவிடுவது உத்தமம். வேலைக்குக் காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். சிலரின் நன்னடத்தை மற்றும் திறமை காரணமாக ஏற்கெனவே வேலை செய்த இடத்திலிருந்து பணியாற்ற அழைப்பு வரும். சொந்தத் தொழில் செய்பவர்கள் தங்கள் தொழில் அல்லது வியாபாரம் ஆகிய வற்றுக்கான சொந்த இடத்தை வாங்க முதலீடு செய்வர். அதுபோல சொந்த அடுக்குமாடி வீடு வாங்கவும்- அது அரசு சார்ந்ததாக இருக்க லாம்- பணம் கொடுப்பீர்கள். சிலருக்கு வீடு, வாகனம் பழுதுபார்க்கும் செலவுண்டு. அல்லது உங்கள் தந்தைக்கு வீடு பழுது பார்க்கும் செலவுக்குப் பணம் பணம்கொடுக்க வேண்டியிருக்கும். இந்த மாதம் உங்களின் இளைய சகோதரமும் உங்கள் கைப்பேசியும் உங்களைப் பாடாய்ப்படுத்தும். காவல் துறையினர் பாதுகாப்பாக இருத்தல் அவசியம். வாழ்க்கைத்துணையின் பூர்வீக சொத்தில் வில்லங்கம் அகன்று, வீடு கைக்குக் கிடைக்கும். சிறு சஞ்சலத்திற்குப்பிறகு குழந்தை பாக்கிய நற்செய்தி கிடைக்கும். சிலரின் வாரிசுகள் வேலை கிடைக்கப் பெறுவர். அதனால் உங்களின் கௌரவம் அதிகரிக்கும். இந்த மாதம் உங்களுக்கு வயிறு அல்லது முழங்காலில் வலி வரக்கூடும். கல்வியறிவு மேம்படும். அரசியல் வாதிகளுக்கு அலைச்சல் அதிகரிக்கும். கூடவே பண விரயமும் உண்டு. விவசாயிகள் கவனமாக இருக்கவேண்டிய மாதம். கடைசி இரண்டு வாரத்தில் ஏற்படும் காதல் திருமணப் பிரச்சினைகளால் சில ஜாதகர்கள் வீட்டைவிட்டு வெளியேறக் கூடும். சிலருக்கு வீடு மாற்றும் யோகமுண்டு. சிலரது தந்தை ஏடாகூடமாக எதையாவது செய்து தொல்லை தரலாம். உங்களின் பூர்வீக இடத்திலிருந்து ஒரு கௌரவம் உங்களைத்தேடி ஓடிவரும். குத்தகை, தரகு, கமிஷன் சார்ந்த தொழில் உடையவர்கள் சற்று கவனமாக இருத்தல் அவசியம். தகவல் தொடர்பு சார்ந்த வேலை, பத்திரிகை சார்பில் வேலையுடையவர்கள் சில இன்னல்களை அனுபவிக்கவேண்டி வரலாம்; கவனம். தொழில் தொடங்க திட்டமுடையவர்கள் இந்த மாதம் தொடங்க வாய்ப்புண்டு. மாதப் பிற்பகுதியில் ஒரு ரகசியம் வெளிப்படும்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 5, 24.

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.

உங்கள் அதிர்ஷ்டக் கிழமையான புதனன்று கல்விகற்கும் சிறு குழந்தைகளுக்கு ஏதேனும் உதவிபுரியுங்கள்.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

2021 ஜனவரி மாதம் பிறந்தவுடனேயே ஒரு நல்ல தகவல்- அநேகமாக அரசு சார்ந்த தகவல் வந்துசேரும். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஒத்துழைப்பு சற்று காலை வாரிவிடும். சில அரசியல்வாதிகள் இருந்த இடத்தைவிட்டு மாறுவதால் நல்ல பணப்பலன் கிடைக்கப் பெறுவர். இந்தமாதம் மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பலர் சொந்தவீடு வாங்கவும் நல்ல வாகனத்துக்கும் முதலீடு செய்வார்கள். சிலர் வீடு மாறுவர். வாகனத்தைப் பரிமாற்றம் செய்வார்கள். குழந்தைகளின் கல்வி இடம் மாறும். தாயாரின் உடல்நலம் கவனிக்கப்பட வேண்டும். வீட்டுக் கடன் கிடைக்கும். மிகச் சிலருக்கு வாகனம் திருட்டுப்போக வாய்ப்புண்டு. அதற்கான செலவும் அலைச்சலும் மாதப் பிற்பகுதியில் ஏற்படலாம். திருமணப் பேச்சுகள் நல்லவிதமாகப் பூர்த்தியாகும். காவல்துறையில் உள்ளவர்கள் பணவசதி கிடைக்கப் பெறுவர். கலைத்துறையினர் சிலர் வீடுவாங்க முதலீடு செய்வார்கள். இவர்களைப் பற்றிய செய்திகள் சற்று முன்பின்னாக வரும். சிலரது வேலையாட்கள்மூலம் சற்று தொல்லை வரும். இளைய சகோதரியின் கல்விச்செலவு வரும். இந்தத் தேதிகளில் பிறந்த பெண்கள் அரசியல் சம்பந்தம் பெறுவர். தகவல், செய்தி, டி.வி சார்ந்த பெண்கள் அரசு, அரசியல் சம்பந்தமான ஒரு மறைவான செயலை வெளியிடுவர். இந்தமாதம் ஒப்பந்தம், குத்தகை போன்ற இனங்கள் லாபம் தரும். வியாபாரம், தொழில் ஆகியவை நல்லவிதமாக நடக்கும். ஒருசில விவசாயிகள் மாதப் பிற்பகுதியில் அரசுமூலம் கடனை அடைக்க வாய்ப்புண்டு. மூத்த சகோதரர் சம்பந்தமாக கவலையான செய்தி சிலருக்கு வரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 8, 17, 26.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

உங்கள் அதிர்ஷ்டக் கிழமையான வெள்ளிக் கிழமைகளில் உணவு மற்றும் இனிப்பு தானம் செய்வது நன்று.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

2021 ஜனவரி மாதத்தில், இந்தத் தேதிகளில் பிறந்தவர்களுக்கு திருமணம் நடக்கும் வாய்ப்புண்டு. வரும் வரன் அரசு சார்ந்த வேலையுடையவராக அமைவார். பங்குவர்த்தகம் சற்று தடுமாறிப் பின் பலன்தரும். பணவரவு பற்றிய செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத பணவரவும் அதிர்ஷ்டமும் உண்டு. கைப்பேசி பழுதாவதால் புதிய கைப்பேசி வாங்குவீர்கள். மாத முற்பகுதியில் தொழிற்சாலை, வியாபாரக் கடைகளிலுள்ள தொழிலாளர்கள் முரண்டுபிடித்தாலும், பிற்பகுதியில் அனுசரணையாக நடந்து கொள்வர். வீடு மாற்றும் சிந்தனை மேலோங்கும் அல்லது ஏற்கெனவே வீட்டுக்குக் கொடுத்த ஒப்பந்தம்பற்றி மறுபரிசீலனை வரும். உங்களில் சிலருக்கு மருமகன், மருமகள் வரும் வாய்ப்புண்டு. இந்த மாதம் வீண்சண்டை வரக்கூடும். கவனமாகத் தவிர்த்துவிடுங்கள். வியாபார விஷயமாக வேறிடம் செல்லநேரும். சிலரது இளைய சகோதரர் ஏதேனும் வம்பில் சிக்குவார். உங்களில் சிலர் அரசிடமிருந்து கிடைக்கவேண்டிய நிலுவைத் தொகைகளைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் தங்களைப் பற்றிய அரும்பெரும் செய்திகள் ஊடகங்களில் தொடர்ந்து வருமாறு பார்த்துக்கொள்வர். தொண்டர்கள் அரசியல்வாதிகளின் பணத்தில் மட்டுமே கவனம் செலுத்துவர். விவசாயிகள் குழப்பமடையக்கூடும். காவல்துறையினருக்கு வேலைப்பளு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு வரவும் செலவும் சமமாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

உங்கள் அதிர்ஷ்டக்கிழமை செவ்வாய் என்பதால், செவ்வாய்க்கிழமைதோறும் சந்நியாசிகளுக்கு அல்லது சித்தர் பீடங்களுக்கு காணிக்கை வழங்கவும்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

2021 ஜனவரி மாதத்தில் உங்களுக்கு பணப் புழக்கம் இருந்துகொண்டே இருக்கும். அலைச்ச லும் அதிகமாக இருக்கும். உங்கள் கைப்பேசித் தகவல்கள் லாபத்தைத் தரும். சிலசமயம் நஷ்டத்தையும் தரும். உங்கள் இளைய சகோதர ருக்கு வேலை கிடைக்கும். உங்களில் சிலருக்கு அரசுப்பணி எதிர்பாராதவிதமாகக் கிடைக்கும். அதற்கு சற்று செலவாகலாம். மாத முற்பகுதியில் அரசு சார்ந்த விஷயங்கள் நம்ப.முடியாத முறையில் பலிதமாகும். எனவே, அரசு சார்பு விஷயங்களை மாத முற்பகுதியில் முடித்துக்கொள்ளுங்கள். பிற்பகுதியில் சிலருக்கு அரசு தண்டனை கிடைக்கக்கூடும்; கவனம் தேவை. அரசியல்வாதிகள் பெரிய நம்பிக்கை பெறுவர். சில அரசியல்வாதிகள் இருக்கும் கட்சியைவிட்டு வேறு கட்சிக்குப் போய் மேன்மை பெறுவர். சிலரது வாரிசுகள் செலவும் தொல்லையும் தருவர். உயர்கல்வி இடமாறுதலுடன் அமையும். விவசாயப் பெருமக்கள் தாங்கள் நினைத்ததை அடைவர். கலைத்துறையினர் சற்றும் எதிர்பாராத முன்னேற்றம் காண்பர். தொழில், வியாபாரத் துறையினர் வேறிடத்திற்கு மாற்றம் பெறலாம். அல்லது வேறிடத்தில் கிளை திறக்கலாம். முதலீடும் செய்வீர்கள். இதற்கு அரசின் ஆணை காரணமாக இருந்து மாற்றமும் ஏற்றமும் தரும். ஆரோக்கியம் சம்பந்தமான செலவுண்டு. மாதப் பிற்பகுதியில் குத்தகை, ஒப்பந்த விஷயங் களில் அரசு தலையிட்டு சற்று இடையூறு ஏற்படுத்தலாம். திருமண விஷயங்களிலும் சிறிது குளறுபடி ஏற்படும். காவல்துறையினருக்கு வழக்கமான பணிகள் நடக்கும். மாதப் பிற்பகுதியில் கைப்பேசியில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.

எச்சரிக்கை எண்கள்: 3, 12, 21, 30.

உங்கள் அதிர்ஷ்டக்கிழமையான சனிக் கிழமைதோறும் முதியவர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் உதவுவது நல்லது.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

2021 ஜனவரி மாதம் உங்களுக்கு தன்னம் பிக்கை நிறைந்த மாதமாக இருக்கும். வார்த்தை களில் திடம் அதிகமிருக்கும். வாக்கின் வீச்சு மதிப்புள்ளதாக அமையும். இந்த மாதம் உங்களுக்குக் கண்டிப்பாக வேலை கிடைக்கும். உங்கள் தொழிலில் வேலையாட்கள் நன்கு அமைவர். சக ஊழியர்களின் அனுசரணையும் கிடைக்கும். மழலைச் செல்வம் கிடைக்க வாய்ப்புண்டு. நீங்கள் வேலை பார்த்தாலும், தொழிலதிபராக இருந்தாலும், ஊழியராக இருந் தாலும் வேலைப்பளு அதிகமாக இருக்கும். அதனால் சற்று அல்லல்பட நேரிடும். இதே போல அரசியல்வாதிகளும் அதிக அலைச்ச லால் அவதியுற நேரிடும். இந்த மாதம் அரசியல் வாதிகள் நிறைய மாறுதலான முடிவை எடுப் பார்கள். அவையனைத்தும் நன்மையளிக்கும் என்பதுதான் முக்கியமான விஷயம். சிலரது காதல் அங்கீகரிக்கப்பட்டு சுபமாக திருமணத் தில் பூர்த்தியாகும். வெளிநாட்டு வேலை சம்பந்தமான கனவு ஈடேறும். கலைத்துறை யினருக்கு யோகமான மாதமாகும்‌. கலைத் துறையினரில் பலர் அரசியலில் இணைவார் கள். மாணவர்களுக்கு விரும்பிய உயர்கல்வி கிடைக்கும் மாதப் பிற்பகுதியில் அரசு சார்ந்த கான்ட்ராக்ட் கிடைக்கும். இந்த மாதம் பணம் கையில் புழங்கிக்கொண்டே இருக்கும். சிலருக்கு வெளிநாட்டுப் பணமாக வும் இருக் கக்கூடும். வாக்கின்மூலம் தொழில் நடத்தும் வழக்கறிஞர்கள், ஜோதிடர்கள், யாகம் செய்வோர் போன்றவர்களுக்கு மதிப்பு உயரும். ஒரு சிலருக்கு மட்டும் வேலையில் இடமாற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

உங்கள் அதிர்ஷ்டக்கிழமையான செவ்வாய்க் கிழமைகளில் இளம்வயதினருக்கு உதவுங்கள்.

செல்: 94449 61845