பிப்ரவரி மாத எண்ணியல் பலன்கள்! -ஆர். மாகலட்சுமி

/idhalgal/om/numerical-benefits-february-r-makalatacaumai

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதத்தின் பாதி நாட்கள், உங்களில் சிலருக்கும் மகனுக்குமிடையே மனஸ்தாபம் ஏற்படலாம். நீங்கள்தான் பின்வாங்க நேரும். மகன் தன் பிடியில் உறுதியாக நிற்பார். மாதப் பிற்பகுதியில் வாழ்க்கைத்துணையின் ஆதரவு உங்களுக்குக் கிட்டும். பண விஷயங்கள், லட்சியக் கனவு போன்றவற்றை மாதத்தின் முதல் பத்து தேதிகளுக்குள் நிறைவேற்றிவிடவும். பிறகு பணவரவு சற்று சுணக்கம் காணும். ஆயினும் கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். வாரிசுகளின் திருமணப் பேச்சுகளையும் மாத முற்பகுதியில் முடித்துவிடவும். பின்னர் அதில் சற்று பிரச்சினைகள் ஏற்படலாம். இந்த மாதம் அரசு சார்ந்த துறைகளில் சிலருக்கு வேலை கிடைக்கும். குலதெய்வ வழிபாடு சம்பந்தமாக உங்கள் உடன்பிறப்புகள் ஒன்றுகூடுவர். சிலர் பழைய கைபேசியைப் பெற்றோருக் குத் தருவீர்கள். பூர்வீக மனை சம்பந்த மாக பேச்சுவார்த்தை நடக்கும். மாத முற்பகுதியில் உடல்நலம் சற்று கெட வாய்ப்புள்ளது. அது கோப தாபங்க ளாலும் அல்லது கடன் விஷயங்களாலும் ஏற்படும். உங்களில் சிலருக்குத் திருமணம் நிச்சயமாகும். உங்களது கலைத் தொடர்பு, விளையாட்டு, பங்குவர்த்த கம், பொழுதுபோக்கு, கொண்டாட்டம் போன்றவைமூலம் நிறைய மனிதர் களை சந்திக்கக்கூடும். சிலரது வாழ்க் கைத்துணை அடிவயிற்று வலியால் துன் பப்பட நேரும். மனை, அடுக்குமாடிக் குடியிருப்பு சம்பந்தமான ஆசை, அதிர்ஷ் டம் நிறைவேறும். பேரன்- பேத்திகள் கிடைப்பர். பத்திரிகை போன்ற ஊடகங் கள், கலைத்துறை சார்ந்தவர்களுக்கு நல்ல ஆதரவு தரும். சிலருக்கு ஒழுக்கம், நல்ல பழக்கங்கள், வைதீகப் பற்று போன்றவை சற்று மங்கக்கூடும். சிலர் வெளிநாட்டு வேலை சம்பந்தம் அல்லது இஸ்லாமியர்கள் தொழில் ஒப்பந்தம் சார்ந்து உங்கள் அன்றாட கெடுபிடிகளைத் தளர்த்திக்கொள்ள நேரும். சிலர் தங்கள் பணத்தேவைக்கு நிலம், வீடு விஷயமாக சற்று தில்லுமுல்லு செய்வீர்கள். மாத முற்பகுதியில் இதன் தாக்கம் அதிகமாகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.

எச்சரிக்கை எண்கள்: 8, 17, 26.

பரிகாரம்: பங்கு வர்த்தகம், கலைசார்ந்த தொழில், விளையாட்டு போன்றவை இந்த மாதம் மேன்மை தரும். இவை சார்ந்த தொழிலாளர்களுக்கு உதவிசெய்யுங்கள்.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் ஏதோவொரு வில்லங்கம் வந்துகொண்டே இருக்கும். அல்லது வரவேண்டிய பணம், வசூலாகவேண்டிய தொகைக்கு சற்று கடுமையாகப் பேச நேரும். வியாபாரத் திலும் பங்குதாரர்களுடன் கணக்கு வழக்கில் குழப்பம் ஏற்படலாம். சிலருக்கு வீடு மாற்றம் உண்டு. சிலர் வீடு வாங்குவதற்காகக் கேட்டிருந்த கடன் தொகை கிடைக்கும். தாயாரின் உடல்நலம் கவனிக்கப்பட வேண்டும். சிலருக்கு வாரிசுகளுடன் மனஸ்தாபம் ஏற்படும். பங்கு வர்த்தகத்தை எச்சரிக்கையுடன் செய்யவும். கலைத்துறையினர் வேலையுடன் சிறிது சங்கடங்களையும் சந்திப்பர். விளையாட் டுத் துறையினர் சற்று மனக்கலக்கம் அடையக் கூடும். கருவுற்ற பெண்கள் கவனமாக இருத்தல் அவசியம். சிலர் குழந்தைப்பேறு சம்பந்தமாக அலைச்சலை சந்திப்பர். சிலருக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் வீட்டில் வேலைசெய்யும் பணியாளர்களுக்கு பெரும் தொகையைக் கடனாகக் கொடுக்க நேரும். வியாபாரம் தகுதிக்கேற்ப இடமாற்றம் பெறும். தொழிற்சாலைகளில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் சற்று இடையூறு ஏற்படுத்த லாம். அரசியல்வாதிகள் அதிக பணிச்சுமை யுடன் காணப்படுவர். சிலசமயம் அரசு தொடர் பாளர்களுடன் கருத்து மோதல் ஏற்படும். சமையல் கலைஞர்கள் நிறைய வேலைவாய்ப்பு பெறுவர். வீடு விற்பனை எதிர்பாராத லாபம் தரும். சிலரது மறுமணத்தில் சிக்கல் ஏற்பட லாம். இந்த மாதம் முழுவதுமே பேச்சில் கவனம் தேவை. உங்கள் சொற்களே உங்களுக்கு எதிராக மாறும். சிலரது கைபேசியில் பழுது

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதத்தின் பாதி நாட்கள், உங்களில் சிலருக்கும் மகனுக்குமிடையே மனஸ்தாபம் ஏற்படலாம். நீங்கள்தான் பின்வாங்க நேரும். மகன் தன் பிடியில் உறுதியாக நிற்பார். மாதப் பிற்பகுதியில் வாழ்க்கைத்துணையின் ஆதரவு உங்களுக்குக் கிட்டும். பண விஷயங்கள், லட்சியக் கனவு போன்றவற்றை மாதத்தின் முதல் பத்து தேதிகளுக்குள் நிறைவேற்றிவிடவும். பிறகு பணவரவு சற்று சுணக்கம் காணும். ஆயினும் கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். வாரிசுகளின் திருமணப் பேச்சுகளையும் மாத முற்பகுதியில் முடித்துவிடவும். பின்னர் அதில் சற்று பிரச்சினைகள் ஏற்படலாம். இந்த மாதம் அரசு சார்ந்த துறைகளில் சிலருக்கு வேலை கிடைக்கும். குலதெய்வ வழிபாடு சம்பந்தமாக உங்கள் உடன்பிறப்புகள் ஒன்றுகூடுவர். சிலர் பழைய கைபேசியைப் பெற்றோருக் குத் தருவீர்கள். பூர்வீக மனை சம்பந்த மாக பேச்சுவார்த்தை நடக்கும். மாத முற்பகுதியில் உடல்நலம் சற்று கெட வாய்ப்புள்ளது. அது கோப தாபங்க ளாலும் அல்லது கடன் விஷயங்களாலும் ஏற்படும். உங்களில் சிலருக்குத் திருமணம் நிச்சயமாகும். உங்களது கலைத் தொடர்பு, விளையாட்டு, பங்குவர்த்த கம், பொழுதுபோக்கு, கொண்டாட்டம் போன்றவைமூலம் நிறைய மனிதர் களை சந்திக்கக்கூடும். சிலரது வாழ்க் கைத்துணை அடிவயிற்று வலியால் துன் பப்பட நேரும். மனை, அடுக்குமாடிக் குடியிருப்பு சம்பந்தமான ஆசை, அதிர்ஷ் டம் நிறைவேறும். பேரன்- பேத்திகள் கிடைப்பர். பத்திரிகை போன்ற ஊடகங் கள், கலைத்துறை சார்ந்தவர்களுக்கு நல்ல ஆதரவு தரும். சிலருக்கு ஒழுக்கம், நல்ல பழக்கங்கள், வைதீகப் பற்று போன்றவை சற்று மங்கக்கூடும். சிலர் வெளிநாட்டு வேலை சம்பந்தம் அல்லது இஸ்லாமியர்கள் தொழில் ஒப்பந்தம் சார்ந்து உங்கள் அன்றாட கெடுபிடிகளைத் தளர்த்திக்கொள்ள நேரும். சிலர் தங்கள் பணத்தேவைக்கு நிலம், வீடு விஷயமாக சற்று தில்லுமுல்லு செய்வீர்கள். மாத முற்பகுதியில் இதன் தாக்கம் அதிகமாகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.

எச்சரிக்கை எண்கள்: 8, 17, 26.

பரிகாரம்: பங்கு வர்த்தகம், கலைசார்ந்த தொழில், விளையாட்டு போன்றவை இந்த மாதம் மேன்மை தரும். இவை சார்ந்த தொழிலாளர்களுக்கு உதவிசெய்யுங்கள்.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் ஏதோவொரு வில்லங்கம் வந்துகொண்டே இருக்கும். அல்லது வரவேண்டிய பணம், வசூலாகவேண்டிய தொகைக்கு சற்று கடுமையாகப் பேச நேரும். வியாபாரத் திலும் பங்குதாரர்களுடன் கணக்கு வழக்கில் குழப்பம் ஏற்படலாம். சிலருக்கு வீடு மாற்றம் உண்டு. சிலர் வீடு வாங்குவதற்காகக் கேட்டிருந்த கடன் தொகை கிடைக்கும். தாயாரின் உடல்நலம் கவனிக்கப்பட வேண்டும். சிலருக்கு வாரிசுகளுடன் மனஸ்தாபம் ஏற்படும். பங்கு வர்த்தகத்தை எச்சரிக்கையுடன் செய்யவும். கலைத்துறையினர் வேலையுடன் சிறிது சங்கடங்களையும் சந்திப்பர். விளையாட் டுத் துறையினர் சற்று மனக்கலக்கம் அடையக் கூடும். கருவுற்ற பெண்கள் கவனமாக இருத்தல் அவசியம். சிலர் குழந்தைப்பேறு சம்பந்தமாக அலைச்சலை சந்திப்பர். சிலருக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் வீட்டில் வேலைசெய்யும் பணியாளர்களுக்கு பெரும் தொகையைக் கடனாகக் கொடுக்க நேரும். வியாபாரம் தகுதிக்கேற்ப இடமாற்றம் பெறும். தொழிற்சாலைகளில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் சற்று இடையூறு ஏற்படுத்த லாம். அரசியல்வாதிகள் அதிக பணிச்சுமை யுடன் காணப்படுவர். சிலசமயம் அரசு தொடர் பாளர்களுடன் கருத்து மோதல் ஏற்படும். சமையல் கலைஞர்கள் நிறைய வேலைவாய்ப்பு பெறுவர். வீடு விற்பனை எதிர்பாராத லாபம் தரும். சிலரது மறுமணத்தில் சிக்கல் ஏற்பட லாம். இந்த மாதம் முழுவதுமே பேச்சில் கவனம் தேவை. உங்கள் சொற்களே உங்களுக்கு எதிராக மாறும். சிலரது கைபேசியில் பழுது ஏற்படும். உங்கள் இளைய சகோதரர் ஏற்படுத்தும் ஒரு பிரச்சினை உங்களுக்கு சாதகமாக அமையும். சிலரது மாமனார்- மாமியார் வேறிடம் செல்வர். விவசாயக் கடன் கிடைக்கும். வாகனப் பழுது நீக்கும் செலவுண்டு. சிலருக்கு காது அல்லது முழங்காலில் வலி ஏற்படும். ஏற்றுமதி- இறக்கு மதியாளர்களுக்கு பெரும் முயற்சி, சிறிய சண்டைக்குப்பிறகு தடைப்பட்ட பணம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.

பரிகாரம்: இந்த மாதம் வீடு சம்பந்தமான அனைத்து ரியல் எஸ்டேட் தொழிலும் சுறுசுறுப்படையும்; லாபம் தரும். இவை சார்ந்த தொழிலாளர்களுக்கு உதவவும்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் புதுமையான முயற்சிகளை மேற்கொள்ள வீறுகொண்டு எழுவீர்கள். ஆனால் உங்களது தந்தை "இவையெல்லாம் கதைக்கு ஆகாது' என்றோ, "சரிப்பட்டே வராது' என்றோ தடைபோடுவார். மேலும் பணம், குடும்பம் சம்பந்தமாகவும் அவருடன் மனஸ்தாபம் ஏற்படும். பங்கு வர்த்தகத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யவேண்டுமென்று உங்களுக்குப் பேரார்வம் ஏற்படும். திரையுலகில் சேர்ந்து ஒரு கலக்கு கலக்கவேண்டும் எனும் ஆசை கொப்பளிக்கும். விளையாட்டில் ஈடுபட்டு உலக சாம்பியன் ஆகவேண்டும் என்னும் வெறி உண்டாகும். சிலருக்கு காதல் திருமணம் செய்தே தீரவேண்டுமென ஒற்றைக்காலில் தவமிருக்கத் தோன்றும். சிலருக்கு ஒரு திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்னும் ஆசை அனலடிக்கும். ஒரு தொழிலதிபர் ஆனால்தான் ஆயிற்று என மனம் அடம்பிடிக்கும். சிலருக்கு இரண்டாவது திருமணம் உடனே நடக்கவேண்டுமென்று தேடுதல் வேட்கை மிகுந்தெழும். பூர்வீகத்தில் ஒரு மனை வாங்கினால் என்ன அல்லது பூர்வீகவீட்டைப் பழுதுபார்த்தால் என்ன என்று விதவிதமான கேள்விகள் அலையடிக் கும். இத்தனை அபிலாஷைகளுக்கும் மாத முற்பகுதியில் உங்கள் தந்தையும், பிறகு உங்கள் தாயாரும் முட்டுக்கட்டை போடுவார்கள். இதன்காரணமாக மனம் துவண்டு வீட்டைவிட்டு வெளியேறி விடலாமா என்று சிலர் கணக்குப் போடுவீர்கள். சிலருக்கு கோபம் வந்து, வீட்டைப் பிரித்து போர்ஷனாக் கும். பணம், குடும்பம், அசையும் சொத்துகள் ஆகியவை பற்றி உங்கள் தந்தை மற்றும் அரசு இயந்திரத்திடம் மூச்சுவிட வேண்டாம். இல்லையென்றால் பிரச்சினைகள்தான்; கவனம் தேவை. காவல்துறையினருக்கு வேலையில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. மூத்த சகோதரிக்கு வரன் அமையும்.

அதிர்ஷ்ட எண்கள்: 8, 17, 26.

எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.

பரிகாரம்: இந்த மாதம் பயணங்கள் தொடர்பான அனைத்து வேலைகளும் நன்கு கைகொடுக்கும். இது சார்ந்த தொழிலாளர் களுக்கு உதவி செய்யவும்.

mm

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் பல செயல்களில் முதலில் பின்னடைவு ஏற்பட்டாலும், பிறகு அவை சரியாகி எதிர்பாராத லாபம், விருத்தி ஏற்படும். மாதத்தின் முதல் வாரத்தில் பணப்பிரச்சினை ஏற்பட்டு, பின் அதுவே ஒரு பழமையான அதிர்ஷ் டத்தின் ஆரம்பமாக அமையும். மாத முற்பகுதியில் பெற்றோர் உங்களுடன் கருத்து வேறுபாடு கொள்வர். பிற்பகுதியில் வேலைச்சுமையால் தானாகவே சரியாகிவிடுவார்கள். முதல் வாரத்தில் உங்களது வாரிசுகள் பணவிஷயமாக உங்களைப் பாடாய்ப்படுத்துவர். பிறகு சமாதானமாகிவிடுவார்கள். முதல் வாரத்தில் பங்குவர்த்தகம் காலை வாரிவிடக்கூடும்; கவனம் தேவை. அடுத்தடுத்த வாரங்களில் இரும்பு சம்பந்தமான தொழில் பங்குகள் அதிர்ஷ்டம் தரும். நீங்கள் கலைத்தொழிலில் உள்ளவராக இருப்பின் எதிர்பாராத அதிர்ஷ்டம் வந்து கதவைத் தட்டும். மற்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் நினைத்த நன்மைகள் கிடைக்கும். கடன்கள் அடைபடும். நோய்த் தாக்கம் குறையும். எதிர்பாராத இடத்தில் வரன் அமையும். எனினும் சிலருக்கு எதிர்பாராத காரணங்களால் திருமணப் பேச்சு அந்தரத்தில் நிற்கும். வெளிநாட்டுச் செய்தி நன்மை தரும். வெளியூர்ப் பயணத்தடை நீங்கும். சிலரது தொழிலில் அரசு சம்பந்தமாக இம்சை ஏற்படலாம். அரசு அதிகாரிகளின் கண்டிப்பை சமாளிக்கவேண்டி நேரும். இதையும் மீறி மறைமுகமான லாபங்கள் வந்து கொட்டும். தொழில் சம்பந்தமாக இடம் வாங்குவீர்கள். அது அரசு ஒதுக்கீடு செய்ததாக இருக்கும். சிலர் தொழிலில் கையூட்டுக் கொடுத்து லாபம் பெறவேண்டியிருக்கும். தொழில் மேன்மைக்கு மூத்த சகோதரர் கைகொடுப்பார். உங்களது மாமியார், உங்கள் தாயார்மீது புகார் கூறுவார். மாதத்தின் முதல் வாரத்தில் அடிவயிறு சார்ந்து சற்று வேதனை ஏற்படலாம். பெண்கள் மாதவிடாய்க் குறைபாடுகளால் சற்று தொல்லையை அனுபவிப்பர்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: இந்த மாதம் அரசியல், திரைப்படத் தயாரிப்பு, அறிவுரை சொல்லும் தொழில், நிதி நிர்வாகம் போன்றவை நன்கு கைகொடுக்கும். இவை சார்ந்த பணியாளர் களுக்கு உதவவும்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் வீடு, வாகனம் கிடைக்கும். மாத முற்பகுதியில் பூர்வீக வீட்டைப் பழுது பார்த்து, பின் அதனை வாடகைக்கு விடுவீர்கள். இந்த மாதம் சிலர் தங்கள் வாகனத்தை எங்காவது மோதிவிட்டு, அதன் பொருட்டு நஷ்ட ஈடாக தொகையை வசூலித்து விடுவீர்கள். வீடு சம்பந்தமாக இளைய சகோதரர்களிடம் பிணக்கு உண்டாகும். காவல்துறையினர் வீடு, மனை, வாகனம் சம்பந்தமான வழக்குகளை கவனமாகக் கையாள வேண்டும். கலைத்துறையினர் அதிர்ஷ்டமும் அவமானமும் ஒருங்கே கிடைக்கப்பெறுவர். கலைத்துறையினரிடம் பேட்டியெடுக்கும் ஊடகத்துறையினர் சற்று கவனமாக இருக்கவும். வாரிசுகள் வகையில் கடன் செலவும் மன வருத்தமும் உண்டு. திருமணத்தில் உங்கள் தாயார் சற்று முரண்டு பிடிப்பார். பங்கு வர்த்தகம் விரயம் தரும். வீடு சிறுபகுதி பழுதடையும். சிலரது தந்தைக்கு ஏதேனும் காயம் ஏற்படக்கூடும். மறைமுக அதிர்ஷ்டம் கிடைக்கப்பெறும் சிலர், பூர்வீகத் தொழிலை எடுத்துச் செய்வர். சிலர் தங்கள் தொழிலில் வாரிசுகளை அறிமுகப்படுத்துவார்கள். கலைத் தொழிலில் இயந்திரப் பிரிவு வேலைக்கு சிலர் செல்வர். மாதப் பிற்பகுதியில் அரசு வேலை சார்ந்து எதிர்பாராத இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. உங்கள் மாமனாரும் மாமியாரும் சண்டையிட்டுக் கொள்வர். கல்வியில் தடுமாற்றமுண்டு. விவசாயத்தில் ஒரு தீமைமூலம் நன்மை கிடைக்கும். உஷ்ணம் சம்பந்தமான பாதிப்புண்டு. உங்களது ஒருசில நன்மைகள் உங்கள் எதிரிகள்மூலம் கிடைக்க வாய்ப்புண்டு. சிலரது பேச்சில் சற்று அசட்டுத்தனமும், பிறரைத் துன்புறுத் தும் தொனியும் மிகையாக இருக்கும். அரசியல் வாதிகள் தங்கள் சொந்த இடத்தில் வெறுப்புக்கு ஆளாவர். சிலருக்கு சொந்தத் தொழில் தொடங் கும் யோசனை ஆர்ப்பரிக்கும். கருவுற்ற பெண்கள் உஷ்ணம் சம்பந்தமான விஷயங் களில் கவனமாக இருக்கவேண்டும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

பரிகாரம்: இந்த மாதம் சுப விஷயங் களுக்குப் பயன்படக்கூடிய விற்பனை, அழகான கட்டடத் தொழில், கோவில் சிற்பத்தொழில், மூலிகை போன்றவை நன்கு கூடிவரும். இவை சார்ந்த பணியாளர்களுக்கு உதவவும்.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் இளைய சகோதரரால் இம்சை ஏற்படலாம். அது புதிய கைபேசி செலவாக அமையும் அல்லது மேல்படிப்புக்காக பெரிய தொகையைக் கொடுக்கவேண்டிவரும். சிலரது வாழ்க்கைத் துணைக்கு ஊடகங்களில் அல்லது கைபேசி நிறுவனத்தில் அல்லது கல்விப் பயிற்சி மையங்களில் வேலைவாய்ப்பு கிட்டும். குலதெய்வக் கோவிலுக்கு கைபேசிமூலம் காணிக்கையை செலுத்துவீர்கள். உங்கள் இளைய சகோதரிக்குத் திருமண வாய்ப்பு கூடிவரும். சிலரது வீடு, மனை, வாகனம் அரசு உத்தரவால் சில பாதகங்களை சந்திக்கும். மனதில் ஒரு உறுதியும் தைரியமும் முன்னேற்ற எண்ணமும் சுடர்விடும். வாரிசுகள்வகையில் சற்று கடன் அல்லது மனக்கசப்பு தோன்றலாம். மாதப் பிற்பகுதியில் உங்களது வாரிசுகள் அரசுப் பணி கிடைக்கப்பெறுவர். அதற்கான அரசாணை தகவலைப் பெறுவார்கள். தம்பதிகளுக்குள் பணம் விஷயமாக பிணக்கு ஏற்படக்கூடும். சிலரது கைபேசி கீழேவிழுந்து உடையும். சிலருக்கு காது பிரச்சினை தரும். சிலரது தந்தை உங்கள் இளைய சகோதரரைக் காண வெகுதூரப் பயணம் மேற்கொள்வார். மூத்த சகோதரருக்கும் தாயாருக்குமிடையே கருத்து வேற்றுமை உண்டாகும். இந்த மாதம் வீடு, மனை முதலீடு உண்டு. உயர்கல்வி செலவு வரும். பணவரவுத் தரவுகளைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் அதிர்ஷ்டமும் அலைக் கழிப்பும் பெறுவர். ஏற்றுமதி- இறக்குமதி சம்பந்த மான வெளிநாட்டுப் பண விஷயங்களை கைபேசிமூலம் பெறுவீர்கள். விவசாயப் பெருமக்கள் அரசு அதிகாரிகளை சந்திக்க அலையவேண்டி இருக்கும். திருமண ஏற்பாடு களின்போது உங்களது சில யோசனைகள் சலசலப்பை ஏற்படுத்தும். வீட்டு ஒப்பந்த விஷயங்களில் பார்த்துப் படித்துவிட்டு பின்னர் கையெழுத்திடவும். வயிற்றில் பிரச்சினை வரக்கூடும். கலைத்துறையினர் கவனமாக இருத்தல் அவசியம். உங்களது சொற்களே உங்களுக்கு எதிரியாகும். சிலருக்கு கலப்புத் திருமணம் நடக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 8, 17, 26.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

பரிகாரம்: இந்த மாதம் மருத்துவம், தகவல் தொடர்பு, பழுதுபார்க்கும் தொழில், ஒப்பந்தம் சார்ந்த வேலைகள் அனுகூலம் தரும். இவை சார்ந்த தொழிலாளர்களுக்கு உதவி செய்யவும்.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் உங்களுக்கு பணம் சார்ந்த யோசனைகள், சஞ்சலங்கள், சந்தேகங்கள் அடிக்கடி வந்துவந்து போகும். வாழ்க்கைத் துணை தேவையற்ற செலவுகளை அதிகமாகச் செய்கிறார் என்று தோன்றும். கடன் பெருகிவிடுமோ என்னும் அச்சம் ஏற்படும். வட்டி குட்டிபோட ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வதென்ற கவலை தோன்றும். சிலர் அலுவலகத்தில் வாங்கும் லஞ்சப்பணம் குறித்து யாராவது மொட்டைக் கடுதாசி அல்லது கைபேசியில் விரிவாகப் பகிர்ந்துவிட்டால் என்ன ஆவது என விழிபிதுங்கிப் பதறச் செய்யும். மாத முதல் வாரத்தில் சிலரிடம் லஞ்சப் பணப்புழக்கம் அதிகம் நடமாடும். அரசு ஒப்பந்தம் விஷயமாக சற்று தடை ஏற்படும். பூர்வீக மனை சார்ந்த உத்தரவை மாதப் பிற்பகுதியில் பெறுவீர்கள். சிலரது லஞ்சப் பணப்புழக்கத்தை இளைய சகோதரர் மேற்பார்வை செய்வார். பங்கு வர்த்தகத்தில் கவனம் தேவை. விளையாட்டுக் கல்வி சம்பந்தமாக அரசு உதவி செய்யும். கலைத்துறையினர் வீடு, வாகனத்தில் முதலீடு செய்வர். உங்களில் சிலருக்கு மாதப் பிற்பகுதி, பயணத்துக்கான அரசு வாகன வாய்ப்பைத் தரும். மாமியாருக்கும் உங்கள் இளைய சகோதரருக்கும் இடையில் சச்சரவுண்டாகும். சிலருக்கு வாய்ப்புண் ஏற்படும் அல்லது முகத்தில் காயம்பட வாய்ப்புண்டு. அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எத்தனை தொல்லைகள் இருந்தாலும், பணவரவில் பழுதிருக்காது. கல்யாண செலவுக் கென்று கடன் வாங்கிய தொகை வேறு வகையில் செலவாகும். சிலருக்கு மார்பில் எரிச்சல் உணர்வு ஏற்படும். உங்களை எதிர்ப்பவர்களே உங்களது எதிர்பாராத அதிர்ஷ்டத்திற்குக் காரணமாவார்கள். பண விஷயமாக உங்கள் வியாபாரப் பங்குதாரர் விலகுவார். சிலரது வாரிசுகள் வீடு மாறுவர். அது அரசு சார்ந்த வீடாக அமையும். தம்பதிகளுக்குள் இணக்கம் நிலவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.

பரிகாரம்: இந்த மாதம் பூமிக்கு அடியிலிருந்து வரும் பொருட்கள் லாபம் தரும். இவை சம்பந்தமான தொழிலாளர்களுக்கு உதவிசெய்யுங்கள்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் பணத்தைக் கையாளும் போது மிகவும் கவனம் தேவை. பணம் தொலைந்துவிடவோ திருட்டுப் போகவோ வாய்ப்புள்ளது. இதனால் அவமானத்தையும் சந்திக்கக்கூடும். வெகுசிலருக்கு அரசு தண்டனை கிடைக்க வாய்ப்புண்டு. ஒப்பந்தம் விஷயமான செலவு அதிகரிக்கும். சிலர் வீடு, மனை, வாகனத்தில் முதலீடு செய்வீர்கள். மாத ஆரம்பத்தில் வாகனப் பழுது செலவு வரும். உங்கள் தாயார், மூத்தமகன் அல்லது மருமகன் வீட்டுக்குச் செல்லவேண்டி இருக்கும். அரசியல்வாதிகள் வேறு இலாகா பெறுவர் அல்லது பதவி இறக்கம் ஏற்படலாம். உங்களது தந்தை உங்களுடன் வந்து தங்குவார். இந்த தேதிகளில் பிறந்த குழந்தைகளின் தந்தை நல்ல வேலை கிடைக்கப் பெறுவார். சிலருக்கு வேலையில் இடமாற்றமுண்டு. சிலர் தொழிலை வேறிடத்திற்கு மாற்றம் செய்வர். சிலர் பூர்வீகம் தொடர்பான தொழிலில் முதலீடு செய்வீர்கள். வீடு சம்பந்தமாக வரும் லாபம் மனையில் முதலீடு செய்யப்படும். சிலருக்கு வாடகை வீடு மாற்றமுண்டு. உங்களில் சிலர் நரம்புப் பிரச்சினைகள்- குறிப்பாக பாதம் அல்லது முகத்தில் பாதிப்பு ஏற்பட்டு அவதிப்பட நேரும். ஏற்கெனவே வாத நோய்களால் பாதிப்புள்ளவர்கள் சற்று கவனமாக இருக்கவேண்டும். உங்கள் வாரிசுகளின் திருமணச் செலவுண்டு. கௌரவ லாபத்துக்கு செலவு செய்வீர்கள். சிலரது பெயர் கெடும்படி கைபேசியில் தகவல்கள் வரக்கூடும். கலையைத் தொழிலாகக் கொண்டவர்கள் அதிகம் அலைச்சலை சந்திப்பர். விளையாட்டு வீரர்கள் வேறிடம் செல்வர். பங்கு வர்த்தக முதலீடு செலவு தரும். உங்களது வாரிசுகள் வேறு நாடு, வேறு மாநிலம் செல்வர். உங்களது எதிரிகள் மாத முதல் வாரத்தில் மறைந்திருந்துவிட்டு, பின் உங்கள் அருகிலேயே வந்துவிடுவர்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.

பரிகாரம்: இந்த மாதம் வாகனம், அதன் தொடர்புடைய உதிரிபாகம், பழுதுத் தொழில், விற்பனை, டீலர்ஷிப் சார்ந்தவை நன்மை தரும். இவை சார்ந்த தொழிலாளர்களுக்கு உதவவும்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் வெளிநாட்டுப் பணம், கணக்கில் வராத பணப்புழக்கம் அதிகரிக்கும். பேச்சில் அலட்சியம் மிகும். குடும்பத்தில் அதிர்ஷ்டமும் சச்சரவுகளும் சமமாக இருக்கும். உங்களது இளைய சகோதரர் கடன்வாங்கி தொழில் ஆரம்பிக்கக் கூடும். வாரிசுகளின் தொழிலில் அரசின் இம்சை இருக்கும். பங்கு வர்த்தகம் மாத முற்பகுதியில் முரண்டு பிடித்து, பிற்பகுதியில் லாபம் தரும். தொடை அல்லது காலில் வலி ஏற்படும். தொழில் ஆரம்பிக்க கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். ஊடகங்களில் பணிபுரிவோர் நிறைய அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவர். தொழில்செய்ய இடம்பார்த்துக் கொடுக்கும் தரகர்கள் நிறைய வேலைவாய்ப்பு பெறுவர். கருவுற்ற பெண்கள் மாத முற்பகுதியில் கவனமாக இருக்கவேண்டும். சிலருக்குத் திருமணம் நிச்சயமாகும். தாய்மாமனின் உடல்நிலை கவனிக்கப்பட வேண்டும். உங்களில் சிலருக்கு தாய்வழி சொந்தத்தில் வரன் அமைய வாய்ப்புண்டு. திருமணம் அதிர்ஷ்டத்தை அழைத்து வரும். சிலருக்கு தந்தையோடு கருத்துவேறுபாடு ஏற்படும் அல்லது தந்தைக்கு உடல்நலக்குறைவு உண்டாகலாம். கைபேசி, வாகனம், மிதிவண்டி பழுதுபார்க்கும் கடைகள் மற்றும் கூரியர் சேவை மையம் போன்றவற்றைத் தொடங்குவீர்கள். அரசியல் வாதிகள் ஏதோ ஒருவித யோகம் பெறுவார்கள். போக்குவரத்து சம்பந்தமான அதிர்ஷ்டமுண்டு. வெளிநாட்டு அனுகூலம் அமையும். கோவில் தரிசனம் கிடைக்கும். அறநிலையத்துறை, அலுவலகம் சம்பந்தமான வேலை, தொழில், ஒப்பந்தம் பெறுவீர்கள். இந்த மாதம் பேச்சைக் கட்டுப்படுத்தினாலே நிறைய யோக நிகழ்வுகளை அனுபவிக்கலாம்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

பரிகாரம்: இந்த மாதம் தகவல்தொடர்பு, ஒப்பந்தம், குத்தகை, தரகு இவை சார்ந்த தொழில் கள் ஏற்றம் தரும். இவற்றோடு சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவிசெய்யவும்.

செல்: 94449 61845

om010222
இதையும் படியுங்கள்
Subscribe