1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

டிசம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்கள் எந்தவொரு முக்கியமான முடிவும் எடுக்கவேண்டாம். மிகக் குழப்பமாக உணர்வீர்கள். கல்வி, உயர்கல்வி, பணவிஷயம், வீடு மாற்றுவது என எல்லா விஷயங்களுமே குழப்பாக இருக்கும். ஆயினும் டிசம்பர் மாத கடைசி இரு வாரங்கள், மிக அருமையாக இருக்கும். நீங்கள் யோசித்து வைத்த செயல்கள் எல்லாமே மிக அழகாக கோத்தாற்போல் கூடிவரும். மாணவர்கள் யோசித்து வைத்திருந்த கல்லூரியில் இடம் கிடைக்கும். வீடு மாற்றமும் அவ்வாறே. கடைசி இரண்டு வாரத்தில் எண்ணியது எண்ணியாங்கே கிடைக்கும். கலைத்துறையினர் முதல் இரு வாரங்கள், சாதாரண வேலை பார்த்துக்கொண்டிருந்தாலும், கடைசி இரு வாரங்களில் விறுவிறுப்பு கூடும். முதல் இரு வாரங்கள் பணவரவு, "வரும், ஆனா வராது' என்கிற ரேஞ்சில் இருக்கும். கடைசி இரு வாரங்களில் பணவரவும், வியாபாரிகளுக்கு லாபமும் தடையின்றிக் கிடைக்கும். சீருடைப் பணியாளர்களுக்கு முதல் இரண்டு வாரம் சற்று பின்னடைவையும், கடைசி இரு வாரம் ஜெகஜ்ஜோதியாகவும் தொழில் நிலை அமையும். பெற்றோரின் உடல்நிலை டிசம்பர் 12-க்குப்பிறகு சீராகி நலம் பெறுவர். இந்த மாதம் முழுவதுமே, வாரிசுகள் சற்று இம்சை தருவர். கடைசி இரு வாரம் பங்கு வர்த்தகம் பலன்தரும். முதல் இரு வாரங்கள் உணவு ஒவ்வாமை வர வாய்ப்புள்ளது. கண்ட இடங்களில் சாப்பிடாதீர்கள். காதல் திருமணம் அல்லது "அரேன்ஜ்டு மேரேஜ்' நடக்க வாய்ப்புள்ளது. டிசம்பர் 12 வரை வாகனம், வீடு பழுது தரும். இந்த மாதம் முழுவதுமே, தொழில் வேகமாகவும் இல்லாமல், மந்தமாகவும் இல்லாமல் ஒரேசீராக செல்லும். ரியல் எஸ்டேட் துறையினர் கடைசி இரண்டு வாரங்களில் முடிவு செய்யவும்.

அதிர்ஷ்ட எண்கள்: உங்கள் உச்ச எண்கள் 1, 73. ஆட்சி எண் 37. எனவே, உங்கள் வாழ்க்கையின் முக்கிய விஷயங்களின்போது, இந்த எண்களின் சம்பந்தம் வருமாறு பார்த்துக்கொள்ளவும். நிம்மதியான நிகழ்வுகள் நடக்கும்.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

Advertisment

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

டிசம்பர் மாதம் முழுவதும் பணவரவும் செலவும் சரியாக இருக்கும். மாதப்பிறபகுதியில் எதிர்பாராத, ஆச்சரியப்படும் செய்தி கிடைக்கும். நீண்டநாளாக கட்ட வேண்டிய கடன்தொகையை, இந்த மாதக்கடைசியில் கட்டி, கடனை அடைத்துவிடுவீர்கள். சிலருக்கு பூர்வீக சொத்துகள் பலன் தரும். சிலர் வீடு மாற்றவேண்டியிருக்கும். அல்லது இருக்கும் வீட்டில் பழுது வேலை உண்டு. சிலரின் வாரிசுகள் வேலை கிடைக்கப்பெறுவர். வாழ்க்கைத் துணைக்கு அரசு, அரசு சார்ந்த வேலை கிடைக்கும். அதில் இடமாற்றம் உண்டு. உங்கள்மீது ஏற்பட்டிருந்த ஒரு வீண்பழி இந்த மாதம் விலகும். எதிரிகள் பலவீனமாகிவிடுவர். தந்தையின் உடல்நிலை கவனிக்கப்பட வேண்டும். காவல்துறையினர், தீயணைப்புத் துறையினருக்கு வேலைப்பளு அதிகரிக்கும். சிலர் தங்கள் வாரிசுகளின் கலப்புக்காதல் தெரியவந்து, மன உளைச்சலுக்கு உள்ளாவார்கள். கலைத்துறையினருக்கு தொடர்ந்து வேலை கிடைத்துக்கொண்டே இருக்கும். எனினும் ஏதோவொரு விஷயம் நெருடலுக்கு உள்ளாக்கும். வேலைசெய்யும் இடத்தில் பேச்சில் கவனமாக இருத்தல் அவசியம். டி.வி., செய்தித் துறையினர், மக்கள் தொடர்புத்துறையினர் அதிக வேலை செய்யவேண்டிவரும். கல்வி சம்பந்தமான விஷயம் சற்று குழப்பம் தரும். விளையாட்டுத்துறை, பொழுதுபோக்கு, பங்குவர்த்தகம் இவை சார்ந்த துறையினர் மனதைரியம் பெறுவர். இம்மாதக் கடைசியில், திருமணத் தடைகள் அகலும். தொழில், வியாபார சம்பந்தம் உடையவர்களும் தங்கள் துறைசார்ந்த தடை நீங்கப் பெறுவர். இந்த மாதம் உங்கள் ஆசைகள், லட்சிய எண்ணங்கள் சற்று மானாவாரியாக பொங்கி வழியும். கட்டுப்பாடாக இருக்கவும். மாதப்பிற்பகுதியில் அலைச்சல், செலவுகள் குறையும். ஆன்மிக விஷயங்களுக்கு வாழ்க்கைத்துணை கட்டையைப் போடுவார்.

அதிர்ஷ்ட எண்கள்: உங்கள் உச்ச எண்கள் 2, 38, 74. ஆட்சி எண் 29. வாழ்வில் முக்கிய விஷயங்களுக்கு இந்த எண்கள் வருமாறு பார்த்துக்கொள்ளவும்.

Advertisment

எச்சரிக்கை எண்கள்: 3, 12, 21, 30.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

முதல் இரண்டு வாரங்கள் எல்லா விஷயத்திலும் கவமாக இருக்கவேண்டும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. தொழிலில் வீண் அலைச்சல் உண்டு. வேலையில் இடமாற்றம் உண்டு. வாழ்க்கைத் துணையோடு மனக்கசப்பு வரும். சிலரது சில கெட்ட பழக்கங்களும் இதற்குக் காரணமாகும். சில எதிரிகளின் சதியும் பாடாய்ப்படுத்தும். திருமண விஷயமாக அலைச்சல் இருக்கும். கலைத்துறையினருக்கு பிறமொழிப் படங்களில் வேலை கிடைக்கும். பெண் அரசியல்வாதிகள் வேறிடம் சென்று பணியாற்றுவர். பூர்வீக இடம் அல்லது பழைய வாகனம், முன்னோர் பூமியை விற்க நேரலாம். இந்த மாதத்தின் கடைசி இரண்டு வாரங்கள் நல்ல பலன் கிடைக்கும். தந்தை, அரசின் அனுசரணை கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் அன்பு அதிகரிக்கும். தொழிலில் வெற்றி மிகும். வியாபார அலைச்சல் குறைந்து, வருமானம் அதிகரிக்கும். பணவரவு சரளமாகும். கடன்களில் சிலவற்றைக் கட்ட முடியும். அனேகமாக அது வாகனக் கடனாக இருக்கும். சிலர், அரசு அல்லது அரசு சார்ந்த வேலை விஷயமாக கொஞ்சம் லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும். மற்ற வேலை சார்ந்து டிபாசிட் போல் ஒருதொகை கட்டித் தான் வேலையில் சேரும் நிலை உள்ளது. இதற்காக ஒரு இஸ்லாமிய அன்பர்,

அவசரத்துக்கு கடன் கொடுத்து உதவுவார். சிலருக்கு தந்தைவழி வரன் திருமணத்திற்கு அமையும். முதல் இரண்டு வாரத்தில் "காதல் கல்யாணம்தான் பண்ணலாமா' எனும் யோசனை வந்து, கடைசி இரண்டு வாரத்தில் அது நீர்க்குமிழியாக உடைந்துவிடும். வியாபாரம், தொழில் பங்குதாரரிடம் கவனமாக இருக்கவும். இந்த மாதம் உங்கள் வியாபாரம், தொழில், வேலை பற்றிய ஒரு குறுஞ்செய்தி வெளியாகி, அதன்மூலம் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கப்பெறுவீர்கள். மூத்த சகோதரியிடம் பிணக்கு ஏற்பட்டு, திடீரென்று பேசாமல் இருந்துவிடுவார். சிலரின் மருமகள் இடம் மாறிச் செல்வார்.

numer

அதிர்ஷ்ட எண்கள்: உங்களின் உச்ச எண் 30 ஆகும். ஆட்சி எண்கள் 48, 57, 93 ஆகும். முக்கிய விஷயங்களின்போது இவ்வெண்கள் வருமாறு பார்த்துக்கொள்ளவும்.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் கேட்ட இடத்தில், கேட்ட தொகை கடனாகக் கிடைக்கும். காதல் விஷயம் களேபரமாகும். வீடு, மனை, வாகனம் மற்றும் சுகம் சம்பந்த விஷயங்களை மாத முற்பகுதியில் சற்று இடர் வந்தாலும் முடித்துவிடுங்கள். மாதப் பிற்பகுதி, பெற்றோர் வீடு, மனை விஷயங்கள் கவலை கொடுக்கக்கூடியதாக அமையும். வாழ்க்கைத்துணைக்கு பணி ஆணை கிடைக்கும். பங்கு வர்த்தகம், சினிமா, பொழுதுபோக்கு, விளையாட்டு போன்றவை அரசுமூலம் அல்லாடும். கலைத்துறை சார்ந்தோர் சற்று திண்டாட் டத்தை உணர்வார்கள். ஆயினும் சமாளித்து விடுவார்கள். வியாபாரம் அல்லது சொந்தத் தொழில் சற்று வேகமின்றி சென்று ஆயாசத் தைத் தரும். தெய்வ நம்பிக்கை குறையும். அதிர்ஷ்டம் கண்ணாமூச்சி ஆடும். அரசியல்வாதிகள் குழப்பமடைவர். காவல்துறையினரும் விவசாயிகளும் சற்று நிதானப்போக்கைக் கடைப்பிடிக்கவும். டிசம்பர் 12-லிருந்து செலவுகள் கட்டுக் கடங்காமல் இருக்கும். இதிலிருந்து பொருளா தார வரவும் சுருங்குவதால் பணப்புழக்க நிலை சுமார். தம்பதிகளிடையே சிலர் கோள்மூட்டி விடுவர். கவனமாக இருக்கவும். அரசியலில் உள்ளவர்கள் உங்களைவிட வயது குறைந்த வர்களால் இம்சையும், விரயமும் பட நேரிடும். திருமண விஷயத்தைப் பொருத்த அளவில், முன்பு முறுக்கிக்கொண்ட வரன், மறுபடியும் தொடர்புகொள்வார். பயணங்களில் தடை ஏற்பட்டு பின் சரியாகும். மனை சார்ந்த வழக்கில் தேக்கம் உண்டு. இந்த மாதம் மனம் சற்று சஞ்சலமாகவே இருக்கும். மின்சாரத்தைக் கையாளும்போது கவனம் தேவை. இந்த மாதம் விழிப்புடன் இருப்பது அவசியம்.

அதிர்ஷ்ட எண்கள்: உங்களின் உச்ச எண் 67. ஆட்சி எண் எதுவுமில்லை. நட்பு எண்கள் 22, 31, 58, 103. இந்த எண்கள் அமையு மாறு முக்கிய விஷயங்களைக் கையாளவும்.

எச்சரிக்கை எண்கள்: 6, 15, 24.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் தொழிற்சாலை, வீடு, வேலை செய்யுமிடம் எதுவாக இருப்பினும், அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள், கேள்வியாகக் கேட்டு உங்களைத் துளைத் தெடுப்பார்கள். "போதுமடா சாமி' என்றாகி விடும். சிலர் தொழில் சம்பந்தமான பிரச்சிக் காக பத்திரிகைக்கும் பதில் சொல்லவேண்டி யிருக்கும். அடிக்கடி பயணம் உண்டு. பணவர வில் திருப்தி நிலவும். இளையசகோதரன் இம்சை தருவார். பூர்வீக ஸ்தலத்துக்கு செல்வீர்கள். சிலருக்கு வீடுகட்ட கடன் கிடைக்கும். திருமணப் பேச்சு இழுத்தடிக்கும். தம்பதியினரிடையே தடித்த வார்த்தைகள் விழும். தந்தை, சிறு பிரச்சினைகளை இழுத்து விடுவார். பொதுஜனத் தொடர்பு வேலை யுடையோருக்கு அதிக வேலைப்பளு உண்டு. இந்த மாதம் அரசியல்வாதிகள் பாடு பரிதாபம் தான். விவசாயிகள் விற்பனை விஷயமாக சற்று எரிச்சல் படநேரிடும். காவல்துறையினர் கவனமாக இருக்கவேண்டும். ரியல் எஸ்டேட் துறையினர் கடும் பிரயாசைக்கிடையே கொஞ்சம் லாபம் பார்க்கலாம். சிலர் வீடு மாறும் நிலையும் உண்டு. வாகனம் செலவு தரும். சிலருக்கு சில கெட்ட பழக்கம் வர வாய்ப்பும் ஆசையும் வரும். அதனைத் தவிர்க்க முயலுங்கள். நல்ல முயற்சிகளுக்கு ஏதோ தடை வந்துகொண்டேயிருக்கும். விழிப்புடன் இருங்கள். ஏதேனும் வழக்குகள் பதிவாக வாய்ப்புண்டு. மாதப் பிற்பகுதியில் உஷாராக இருக்கவும். உடல்நலம் விஷயமாக கொஞ்சம் செலவுண்டு. அச்சுத்தொழில், பதிப்பகம் இவற்றில் முதலீடு செய்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: உச்ச எண் 50. ஆட்சி எண்கள் 14, 41, 95. இந்த எண்களை முக்கியமான விஷயங்களில் பயன்படுத்திக் கொள்ளவும்.

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் திருமண ஏற்பாடுகள் ஜரூராக நடக்கும். வாக்கில் உஷ்ணம் அதிகரிக்கும். ஏனெனில் கையில் காசுப் புழக்கம் அதிகமாவதால், அதன் எதிரொலி பேச்சில் தெறிக்கும். வரவேண்டிய கடன் வசூலாகும். பத்திரிகை, எழுத்துத் துறையினர் எதிர்பாராத புத்தி லாபச் செய்தியைக் கேள்விப்படலாம். எழுத்து வேலை அதிகரித்து பரிமளிக்கும். இளைய சகோதர அனுசரணை கிடைக்கும். பழைய செல்போனைக் கொடுத்துவிட்டு புதுசு வாங்குவீர்கள். வீடு, நிலம், வாகன மாற்றம் உண்டு. வாரிசுகளால் பெருமையடைவீர்கள். வாழ்க்கைத் துணையின் வேலையின்மூலம் பணவரவு அல்லது கடன் தொகை கிடைக்கும். மறைமுகப் பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. தந்தையின் சொத்தை விற்றுவந்த பணத்தை வீடுவாங்க முதலீடு செய்வீர்கள். அரசியல் வாதிகள் பணத்தைத் தண்ணீராக செலவளித்து, புகழ், பெருமை சேர்த்துப் பிரபலடைவார்கள். அரசுமூலம் உதவி கிடைக்கும். கல்வி, புத்தி சற்று குழம்பி பின் தெளிவடையும். சீருடைப் பணியாளர்கள் தங்களுக்கு வரவிருந்த இட மாறுதலை, பணம் கொடுத்து சரிக்கட்டிவிடுவார்கள். கலைத் தொழிலாளர்கள் பணவரவு அதிகம் பெறுவர். சிலருக்கு ஆசிரியப் பணி கிடைக்கும். புதிய ஆடைகள், நகைகள் வாங்குவீர்கள். மருத்துவத்துறையினர் நல்ல முன்னேற்றம் காண்பர்.

அதிர்ஷ்ட எண்கள்: உச்ச எண்கள் 24, 60, 96. ஆட்சி எண் 15. முக்கிய விஷயங்களுக்கு இந்த எண்களைப் பயன்படுத்துங்கள்.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் சிலருக்கு அரசு, அரசு சார்பு வேலை கிடைக்கும். எதிர்பாராத லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. நீங்கள் நீண்டநாள் எண்ணிக்கொண்டிருந்த செயல் இப்போது நடக்கும். ஒருசிலருக்கு அரசாங்கத்தின் கௌரவமும், வேறு சிலருக்கு சிறு சங்கடங்களும் நேரும். திருமணம் சம்பந்த செலவுண்டு. அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஆதரவும், செலவும் உண்டு. சில அரசியல்வாதிகள், இவ்வளவு நாளும் விலகியிருந்த கட்சியில் மறுபடியும் போய் சேர்ந்துகொள்வர். பணவரவு செழிப்பாகவே இருக்கும். அரசு ஒப்பந்தம், குத்தகை கிடைக்கும். கலைத்துறையினர் சற்று உயர்வு, தாழ்வுகளை சந்திப்பர். பங்கு வர்த்தகம் சறுக்கி, பின் மீளும். உடல்நிலை சற்று ரிப்பேராகி, பின் சரியாகும். எதிரிகள் வலுப்பெறுவதால் நீங்கள் சற்று எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வெளிநாட்டு வாய்ப்புண்டு. அல்லது வெளியூர், வெளிநாட்டு வரன் முடிவாகும். தொழிலில் வெளிநாட்டு சம்பந்தம் தொடரும். பிற இன, மத, பங்குதாரர், உங்கள் தொழிலில் கிடைப்பார். உங்கள் தொழில்- அது அரசியலோ, ஃபாக்டரியோ அதல் நல்ல லாபம் வருவது உறுதி. மாதப் பிற்பகுதியில் கொஞ்சம் சிராய்ப்புகள் ஏற்படும். சிலரின் மறுமண முயற்சிகள் கைகூடும். நகைகள், புத்தகங்கள் வாங்குவீர்கள். மருத்துவக் கல்வி முயற்சிப்ப வர்களுக்கு இப்போது கிடைக்கும் வாய்ப்புண்டு. விவசாயம் நன்றாக இருக்கும். ஒருசிலர் வீடு மாற்றம், இட மாற்றத்தை சந்திப்பீர்கள். சிலருக்கு கண் சம்பந்தமான ஆலோசனை வேண்டியிருக்கும். தாயார்மூலம் ஆதாயம் வரும். சிலர், வீட்டின் ஒரு பகுதியில் சிறுதொழில் தொடங்குவீர்கள். அரசியல்வாதிகள், தங்களது கொள்கையை முற்றிலுமாக மாற்றிவிடுவர். பூர்வீகம் சம்பந்தமான செய்தி உண்டு. அரசு சம்பந்த இம்சை உண்டு.

அதிர்ஷ்ட எண்கள்: உச்ச எண் 70. நட்பு எண்கள் 7, 43, 79, 106. இந்த எண்களை வாழ்வின் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்தவும்.

எச்சரிக்கை எண்கள்: 5, 14, 23.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

வரவும் செலவும் சரியாக இருக்கும். வீடு விற்கும் அல்லது மாறும் நிலை உண்டு. கலையுலக சம்பந்தம் கொண்டோர், பிறமொழி சம்பந்த வாய்ப்பு பெறுவர். விளையாட்டுத் துறையில் உள்ளோர் மனவுறுதி பெறுவர். பங்கு வர்த்தகம் லாபம் தரும். வாரிசுகள் வேலை அல்லது தொழில் ஆரம்பிக்கக் கூடும். பெண் அரசியல்வாதிகள் மேன்மை பெறுவர். விரும்பிய வேலை, கல்வி கிடைக்கப் பெறுவீர்கள். உங்களின் சேவை மதிக்கப்படும். சம்பளம் அதிகரிக்கும். தந்தையின் வேண்டாத தலையீட்டால், ஒரு லாபமும் ஒரு நஷ்டமும் கிடைக்கும். தர்மத்துக்குச் செலவழிப்பீர்கள். உங்கள் பிலபலத்தனத்தை வெளியுலகுக்கு மேன்மைப்படுத்த நிறைய செலவழிக்க வேண்டும். ஆனால் அதுவும் ஒரு தொழில் முதலீட்டுக் கணக்கில் சேர்ந்துவிடும். அரசியல்வாதிகள் பிரித்தாளும் சூழ்ச்சியில் சிக்கிக்கொள்ள நேரிடும். கவனம் தேவை. டி.வி., பத்திரிகை, செய்தித்துறையில் உள்ளோர் பண்டமாற்று முறையில் நன்மை பெறுவீர்கள். மாதப் பிற்பகுதியில் ஒரு நம்பமுடியாத யோகம் கிடைக்கப் பெறுவீர்கள். அது அரசு சம்பந்தமாக இருக்கும். அரசினால் நன்மை கிடைக்கக் காத்திருப்போர், டிசம்பர் 15-க்குப் பிறகு முழு முயற்சியுடன் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.

அதிர்ஷ்ட எண்கள்: உச்ச எண் 62. ஆட்சி எண்கள்: 35, 71, 98, 107. இந்த எண்களை வெற்றிபெறும் விஷயத்துக்குப் பயன்படுத்துங்கள்.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

மாத முற்பகுதி வீண் அலைச்சலையும் செலவையும் கொடுக்கும். ஆனால் பிற்பகுதி நாட்களில் ஸ்திரமாக வாழ்க்கை அமையும். திருமணம் நிச்சயமாகும். நீங்கள் ஒன்றும் பேசாமல் இருந்தாலே எல்லா விஷயமும் நன்றாக நடக்கும். வெளிநாட்டுப் பணப்புழக்கம் அல்லது பிற மதத்தவரிடம் கொடுக்கல்- வாங்கல் தொகை அல்லது லஞ்சப்பணம் என ஏதோவொன்று வந்துகொண்டும் போய்க்கொண்டிமிருக்கும். சிலரது வார்த்தைகளால் மனம் காயமடை யும். மனைவி கோபித்துக்கொண்டு தாய்வீடு செல்வார். அல்லது கணவரை அடி பின்னி யெடுத்துவிடுவார். இளைய சகோதரியால் இம்சை உண்டு. மாத முற்பகுதி நாட்களில் தந்தையாலும் அரசாங்க கெடுபிடியாலும் திணறிவிடுவீர்கள். மாதப் பிற்பகுதி ரிலாக்ஸாகிவிடுவீர்கள். இந்த மாதம் முழுவதும் அப்பா- மகன் பிணக்கு இருந்து கொண்டேயிருக்கும். கடன் அடைபட்டுவிடும். வேலை கிடைக்கும். தொழில் விருத்தி உண்டு. தொழில் தொடங்க விரும்புபவர்கள் தொடங்குவீர்கள். அரசியல்வாதிகளுக்கு மாதப் பிற்பகுதியில் தொண்டர்கள், தொடர்பவர்கள், அபிமானம் மிக்கோர் என இவர்களின் அனுசரணை அதிகமாகும். சிலரின் தந்தை உடல்நிலை கவனிக்கப்பட வேண்டும். சில வெளிநாட்டு சம்பந்த விஷயங்கள் முதலில் தோல்வியாகி, பின் சரியாகும். இந்த மாதம் நகைகள், வீட்டுப் பத்திரம் முதலிய முக்கிய விஷயங்களை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். மாதப் பிற்பகுதியில் வேண்டாதவர்களின்மூலம் திருஷ்டி தோஷம் ஏற்பட வாய்ப்புண்டு. வயதில் பெரியவரின் அறிவுரை கிடைக்கும். உதாசீனப்படுத்தாமல் பணிவுடன் மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: உச்ச எண் 90. ஆட்சி எண்கள்: 9, 72, 81, 108. வாழ்வின் முக்கிய விஷயங்களில் இந்த எண்களைப் பயன்படுத்தி பயனும் பலனும் பெறுங்கள்.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

செல்: 94449 61845