டிசம்பர் மாத எண்ணியல் பலன்கள்! -ஆர். மாகலட்சுமி

/idhalgal/om/numerical-benefits-december-r-mahalakshmi

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதத்தின் முற்பகுதி மிகவும் குழப்பமான சிந்தனைகளைத் தரும். வீட்டை மாற்றலாமா அல்லது விற்று விடலாமா- வாகனத்தை யாருக்காவது கொடுத்துவிட்டு புதிதாக வாங்கலாமா- தாயாரை வீடு மாற்றலாமா- பழைய கைபேசியை மாமனாரிடம் கொடுத்து விடலாமா- தொழில் செய்யுமிடம், குத்தகை விஷயம் போன்றவற்றை என்ன செய்வது என்பனபோன்ற ஆயிரம் சந்தேகங்கள், குழப்பங்கள் தோன்றும். எதற்கும் ஒரு முடிவுகாண முடியாமல், இருளில் திசைதெரியாமல் தவிப்பதுபோன்ற நிலையிருக்கும். ஒருவழியாக மாதத்தின் பிற்பகுதியில், ஒரு லட்சம் வினாக்களுக்கு விடை கிடைத்ததுபோல அறிவில் தெளிவு மின்னல்கள் தோன்றும். அந்த யோசனைகள் பங்கு வர்த்தக லாபத்தை அள்ளிக் கொண்டு வரும். திருமணம் பற்றிய நல்ல முடிவுகள் உங்கள் எண்ணம்போல நிறைவேறும். அரசியல்வாதிகள்- குழந்தைகள், ஆரோக்கியம், நிதி சார்ந்த நலம்பெறுவர். அரசு அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு நிச்சயம். கலைத்தொழில், விளையாட்டு, பொழுதுபோக்கு சார்ந்தவர்கள் நல்ல மேன்மையும், தொழில் தொடர்புகளால் ஊக்கமும் பெறுவர். வேலை தேடுபவர்களுக்கு இந்த மாதம் 10-ஆம் தேதிக்குமேல் வேலை கிடைக்க வாய்ப்புண்டு. சிலருக்கு காதல் திருமணம் ஈடேறும். மாதப் பிற்பகுதியில் வாரிசு விஷயங்கள் நன்மை தரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: மாதப் பிற்பகுதியில் அரசு மற்றும் அதிகாரிகள் சம்பந்தமான விஷயம் நன்கு பயனளிக்கும். அதைப் பயன் படுத்திக்கொண்டு செயல்படவேண்டும். விநாயகருக்கு மோதகம் படைத்து வழிபடவும்.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இது உங்களுக்கு இன்ப அதிர்ச்சிதரும் மாதம். வீடு விஷயத்தில் பழுதுபார்க்கும் செலவு அதிகமாக வருமென நினைத்துக் கொண்டிருந்தால், அது மிக எளிய வழியில் சிறிய செலவில் முடிந்துவிடும். மருத்துவச் செலவு அதிகமாகுமோ என்று அஞ்சிக் கொண்டிருக்கும்போது, "பயப்படுவதற்கு ஒன்றுமில்லை' என்று மருத்துவர் அபயம் தருவார். வேலை விஷயமாக அதிக பயணம் மேற்கொள்ளும் நிலை ஏற்படுமோ என எதிர்பார்த்திருக்க, அது சிறிய அலைச்ச -ல் சுலபமாக முடிந்துவிடும் மனை, வீடு வாங்கும் விஷயத்தில் உங்களுக்கு நன்கு அறிமுகமானவர்மூலம் கடன் கிடைக்கும். மாத முற்பகுதியில் வாரிசுகளுடன் வாக்கு வாதம் உண்டாகும். சிலரது கைபேசி பழுதாகும் நிலையுண்டு. உங்களில் சிலருக்கு வீட்டுப் பத்திரங்கள் காணாமல்போய் மீண்டும் கிடைக்கும். காது விஷயமாக மருத்துவரை சந்திக்க நேரும். பெற்றோர்நிலை கவனிக்கப்பட வேண்டும். கலைஞர்கள் சற்று குழப்பமான மனநிலை அடைவர். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் சிலர் லஞ்சப் பண விவகாரத்தில் அச்சம்கொள்ளும் சூழல் நேரும். எனினும் கடைசிநேரத்தில் உங்கள் பெயர் அதில் இடம்பெறாமல் பார்த்துக் கொள்வீர்கள். இந்த தேதிகளில் பிறந்த பெண்களுக்குத் திருமணம் கூடிவரும். இந்த மாதம் நிறைவேற்ற நினைத்த விஷயங் களை சிலர் குறுக்குவழியில் அமர்க்களமாக முடித்துவிடுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 8, 17, 26.

எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.

பரிகாரம்: இந்த மாதம் அரசு அதிகாரிகள், அரசியல் சார்ந்தவர்கள் லஞ்சப் பணம் விவ காரத்தில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விநாயகர

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதத்தின் முற்பகுதி மிகவும் குழப்பமான சிந்தனைகளைத் தரும். வீட்டை மாற்றலாமா அல்லது விற்று விடலாமா- வாகனத்தை யாருக்காவது கொடுத்துவிட்டு புதிதாக வாங்கலாமா- தாயாரை வீடு மாற்றலாமா- பழைய கைபேசியை மாமனாரிடம் கொடுத்து விடலாமா- தொழில் செய்யுமிடம், குத்தகை விஷயம் போன்றவற்றை என்ன செய்வது என்பனபோன்ற ஆயிரம் சந்தேகங்கள், குழப்பங்கள் தோன்றும். எதற்கும் ஒரு முடிவுகாண முடியாமல், இருளில் திசைதெரியாமல் தவிப்பதுபோன்ற நிலையிருக்கும். ஒருவழியாக மாதத்தின் பிற்பகுதியில், ஒரு லட்சம் வினாக்களுக்கு விடை கிடைத்ததுபோல அறிவில் தெளிவு மின்னல்கள் தோன்றும். அந்த யோசனைகள் பங்கு வர்த்தக லாபத்தை அள்ளிக் கொண்டு வரும். திருமணம் பற்றிய நல்ல முடிவுகள் உங்கள் எண்ணம்போல நிறைவேறும். அரசியல்வாதிகள்- குழந்தைகள், ஆரோக்கியம், நிதி சார்ந்த நலம்பெறுவர். அரசு அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு நிச்சயம். கலைத்தொழில், விளையாட்டு, பொழுதுபோக்கு சார்ந்தவர்கள் நல்ல மேன்மையும், தொழில் தொடர்புகளால் ஊக்கமும் பெறுவர். வேலை தேடுபவர்களுக்கு இந்த மாதம் 10-ஆம் தேதிக்குமேல் வேலை கிடைக்க வாய்ப்புண்டு. சிலருக்கு காதல் திருமணம் ஈடேறும். மாதப் பிற்பகுதியில் வாரிசு விஷயங்கள் நன்மை தரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: மாதப் பிற்பகுதியில் அரசு மற்றும் அதிகாரிகள் சம்பந்தமான விஷயம் நன்கு பயனளிக்கும். அதைப் பயன் படுத்திக்கொண்டு செயல்படவேண்டும். விநாயகருக்கு மோதகம் படைத்து வழிபடவும்.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இது உங்களுக்கு இன்ப அதிர்ச்சிதரும் மாதம். வீடு விஷயத்தில் பழுதுபார்க்கும் செலவு அதிகமாக வருமென நினைத்துக் கொண்டிருந்தால், அது மிக எளிய வழியில் சிறிய செலவில் முடிந்துவிடும். மருத்துவச் செலவு அதிகமாகுமோ என்று அஞ்சிக் கொண்டிருக்கும்போது, "பயப்படுவதற்கு ஒன்றுமில்லை' என்று மருத்துவர் அபயம் தருவார். வேலை விஷயமாக அதிக பயணம் மேற்கொள்ளும் நிலை ஏற்படுமோ என எதிர்பார்த்திருக்க, அது சிறிய அலைச்ச -ல் சுலபமாக முடிந்துவிடும் மனை, வீடு வாங்கும் விஷயத்தில் உங்களுக்கு நன்கு அறிமுகமானவர்மூலம் கடன் கிடைக்கும். மாத முற்பகுதியில் வாரிசுகளுடன் வாக்கு வாதம் உண்டாகும். சிலரது கைபேசி பழுதாகும் நிலையுண்டு. உங்களில் சிலருக்கு வீட்டுப் பத்திரங்கள் காணாமல்போய் மீண்டும் கிடைக்கும். காது விஷயமாக மருத்துவரை சந்திக்க நேரும். பெற்றோர்நிலை கவனிக்கப்பட வேண்டும். கலைஞர்கள் சற்று குழப்பமான மனநிலை அடைவர். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் சிலர் லஞ்சப் பண விவகாரத்தில் அச்சம்கொள்ளும் சூழல் நேரும். எனினும் கடைசிநேரத்தில் உங்கள் பெயர் அதில் இடம்பெறாமல் பார்த்துக் கொள்வீர்கள். இந்த தேதிகளில் பிறந்த பெண்களுக்குத் திருமணம் கூடிவரும். இந்த மாதம் நிறைவேற்ற நினைத்த விஷயங் களை சிலர் குறுக்குவழியில் அமர்க்களமாக முடித்துவிடுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 8, 17, 26.

எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.

பரிகாரம்: இந்த மாதம் அரசு அதிகாரிகள், அரசியல் சார்ந்தவர்கள் லஞ்சப் பணம் விவ காரத்தில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விநாயகருக்கு விளக்கேற்ற எண் ணெய் அல்லது நெய் வாங்கிக்கொடுக்கவும்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் பயணங்களும் செலவுகளும் தொடர்ந்துகொண்டே இருக்கும். வேலை தேடுவது, வேலையில் பதவி உயர்வு, வியாபாரம் அபிவிருத்தி செய்வது, தொழில் சார்ந்த விஷயம் என ஏதோவொன்று காரணமாக இருக்கும். வீடு மாற்றும் எண்ணம் வலுப் பெறும். சிலர் வீடு மாறுவீர்கள். விவசாயத் தகவல்கள் மற்றும் அதன் சார்ந்த தரவுகளை சேகரிக்க சற்று அலையக்கூடும். வாரிசுகளின் திருமணம் உறுதியாகி அதன்பொருட்டு செலவும் அலைச்சலும் உண்டு. உங்களில் சிலர் காதல் திருமணத்திற்கு வீட்டில் அனுமதி பெற்று திருமண வேலையை ஆரம்பித்துவிடுவீர்கள். சிலர் வியாபாரத்திற்கு முதலீடு செய்ய கடன் கேட்க முனைவீர்கள். மாத முற்பகுதியில் தந்தையின் உடல்நிலை பொருட்டு மருத்துவமனை செல்ல நேரிடும். மாதப் பிற்பகுதியில் வீட்டிற்கு அழைத்து வந்துவிடுவீர்கள். கௌரவப் பெருமைக்கு வீண்செலவு செய்வீர்கள். அரசு சார்ந்து வரிசெலுத்தும் செலவுண்டு. கொடுத்த கடனுக்கு வட்டிகேட்டு வங்கி நச்சரிக்கும். சில அரசியல்வாதிகள் மாத முற்பகுதியில் தங்களது தவறான செயல்களால் தள்ளாட்டம் கண்டு, மாதத்தின் பிற்பகுதியில் அதனை நேர்செய்து தங்கள் இடத்தைத் தக்கவைத்துக்கொள்வார்கள். வாரிசுகள் திருமணமாகி வேறிடம் செல்வர். அரசு அதிகாரிகள் இடமாற்றம் காணக்கூடும். மிகச்சிலர் சாமர்த்தியமாகத் தங்களது வசதியான இடத்திற்கு வந்துவிடுவர்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.

பரிகாரம்: இந்த மாதம் வாழ்வின் மாற்றங்களின்போது சற்று கவனமாக சிந்தித்து செயல்படவும். சந்தனம் வாங்கி விநாயகருக்கு காணிக்கை செலுத்தவும்.

dd

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதும், அதை சரி செய்யவும் மட்டுமே இந்த மாதம் சரியாகப் போய்விடும். வீடு, வாகனம் விஷயமாக உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் தந்தைக்கும் மாற்றுக்கருத்துகள் துளிர்விடும். உங்களது அறிவுத்திறனால் அதை சமாளித்துவிடுவீர்கள். உங்களது வாரிசுகள் வேலை செய்யுமிடத்தில் பண விஷயமாக சிக்கலை சந்திக்க, நீங்கள் கடன் உடன் வாங்கி அதிலிருந்து மீண்டுவர உதவுவீர்கள். சிலருக்கு பங்குவர்த்தகப் பணம் காலை வாரிவிடும். இந்த மாதம் பங்குவர்த்தகம், கலைஞர்கள், விளையாட்டுத் துறையினர், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் போன்றோர் மிகவும் கவனமாக இருத்தல் அவசியம். வர வேண்டிய பணம் கடைசி நேரத்தில் காலை வாரிவிடக்கூடும். இதனால் கௌரவக் குறைச்சலை சந்திக்கவேண்டி வரலாம். கடன்தொல்லை நீங்கும். உங்கள் தொழிலில், வேலையில் இதுவரை இழுபறியாக இருந்து வந்த பாக்கித்தொகை வசூலாவதால் உங்கள் கடன் சற்று அடையும். தம்பதிகளுக்குள் "ஈகோ' பிரச்சினை தலைதூக்கும். வியாபாரம் செய்யுமிடத்தில் இட அளவீடு சம்பந்தமாக அரசு பிரச்சினை தரும். உங்கள் மூத்த சகோதரரின் உடல்நிலை கவனிக்கப்பட வேண்டும். ஆலயங்கள், தர்ம ஸ்தாபனம், கோசாலையில் பணிபுரிவோர் வேலைப் பளுவை சந்திப்பார்கள். வெகுசிலர் பதவி உயர்வும் லஞ்சப் பணமும் கிடைக்கப்பெறுவர்.

அதிர்ஷ்ட எண்கள்: 8, 17, 26.

எச்சரிக்கை எண்கள்: 5, 14, 23.

பரிகாரம்: இந்த மாதம் ஒரு பிரச்சினை சரியானால் அடுத்த பிரச்சினை வரிசையில் வந்து நிற்கும். எனவே உங்கள் குலதெய்வ- இஷ்டதெய்வ வழிபாட்டை மேற்கொள்வது நன்று. விநாயகருக்கு ஆடை காணிக்கை செலுத்தவும்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் வீடு, மனை, வாகனம் போன்றவற்றை வாங்குவது பற்றிய சிந்தனை மேலோங்கும். இதன்பொருட்டு கடன் வாங்கும் விஷயத்தில் உங்கள் வாழ்க்கைத்துணை, வியாபார பங்குதாரர், உடன்பணிபுரிவோர் போன்றவர்கள் கடன் வாங்கும் வழியைக் காட்டுவர். சிலரது வாரிசுகளும் கடன்வாங்கும் விஷயத்தில் உதவுவார்கள். இந்தக் கடனானது சுபக் கடனாக இருப்பதால் மகிழ்ச்சியுடன் உதவிசெய்வார்கள். எனினும் உங்கள் இளைய சகோதரரின் வெறுப்பையும் கோபத்தையும் நீங்கள் சம்பாதித்துக்கொள்ள நேரும். இந்த மாதம் உங்கள் சொற்களில் கவனம் தேவை. உங்களையுமறியாமல் தவறுதலாகப் பேச வாய்ப்புண்டு. மாத முற்பகுதியில் உங்கள் கைபேசி செலவு தரும். பத்திரிகை, தொலைக்காட்சி சார்ந்தவர்கள், அரசு சார்ந்து அதிக அலைச்சலை மேற்கொள்ள நேரும். இந்த மாதம் கலைத்துறையினர், விளையாட்டு பங்கேற்பாளர்கள் அதிக அளவில் பத்திரிகை, தொலைக்காட்சியில் பேட்டிகொடுக்க வேண்டியிருக்கும். பெண் குழந்தை அல்லது பேத்தி பிறக்கும் வாய்ப்புண்டு. வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புண்டு. அலைந்து திரிந்து பணம் வசூலிக்கும் வேலை, போக்குவரத்தில் அரசு சார்ந்த வேலை கிடைக்கும். தொழில் தொடங்குவோர் இந்த மாதம் அரசுவரி செலுத்துவீர்கள். உங்களது வாரிசுகள் சிலர் மேற்கல்வி அல்லது வேலை சம்பந்தமாக வேறிடம் செல்வர். மாமியார் உங்கள் வீட்டிற்கு வந்து சிலபல செலவுகளை இழுத்துவிடுவார். திருமண விஷயம் சில தடைகளைத் தரும். இந்த மாதம் ஒப்புகை சீட்டு இல்லாமல் எந்தப் பணப் பரிமாற்றமும் செய்யாதீர்கள். யாருக்கும் சாட்சி கையொப்பம் போடாதீர்கள்; அவமானத்தைக் கொண்டுவந்துவிடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.

பரிகாரம்: நீங்கள் இந்த மாதம் கடன் வாங்கலாம். அதற்கு சொந்தபந்தம், உறவினர் கள் கையெழுத்துப் போடலாம். ஆனால் நீங்கள் மறந்தும்கூட யாருக்கும் சாட்சி கையொப்பம் போடக்கூடாது. விநாயகர் அகவல் போன்ற புத்தகங்களை தானம் செய்யலாம்.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு

இந்த மாதம் திருமணப் பேச்சுகள் வேகமெடுக்கும். திருமணப் பேச்சு வார்த்தையின்போது சொற்களில் கவனம் தேவை. ஒருசொல் வெல்லும்; ஒருசொல் குழப்பிவிடும். பணசுழற்சி அமோகமாக அமையும். இளைய சகோதரியின் திருமணம் நிச்சயமாக நிறைவேறும். அதற்குரிய செலவும் அலைச்சலும் உண்டு. காது சற்று இம்சை தரும். உங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்கள் அல்லது பெண் ஊழியர் களின் வதந்திகளால் மனக்கிலேசம் ஏற்படலாம். உங்கள் வீட்டில் எதிர்பாராத விரிசல் அல்லது வாகனத்தில் பழுது ஏற்பட வாய்ப்புண்டு. வாரிசுகளின் பொழுதுபோக்கு விளையாட்டால் உங்களுக்கும் அவர்களுக் கும் வார்த்தை மோதல் ஏற்படும். வாழ்க் கைத்துணையின் சொற்களில் சற்றே சந்தேக சாயல் கலந்திருக்கும். அல்லது வியாபார பங்குதாரர் சந்தேகக் கணக்கைக் கிளப்புவார். இந்த தேதிகளில் பிறந்த மருத்துவர்களுக்கு பணவரவும் நினைத்த விஷயங்களும் மேன்மையாக நடைபெறும். கைபேசி பழுதுபார்க்கும் செலவு வரும். விவசாயப் பெருமக்களுக்கு அரசு சார்பில் விதை கிடைக்கப்பெறுவீர்கள். உங்களில் சிலர் நீங்கள் முன்னர் பார்த்த வேலைக்குத் திரும்புவீர்கள். சிலர் பூர்வீக வீட்டைப் பழுதுபார்ப்பீர்கள். சீருடைப் பணியாளர் கள் மறைமுக வருமானம் அதிகம் கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள் மாத முற்பகுதி யில் ஒரு பழிச்சொல்லுக்கு ஆளாகி, மாதப் பிற்பகுதியில் அதையே புகழாக மாற்றிக் கொள்ளும் வித்தையை செய்துவிடுவர். சிலருக்கு உடலில் கொழுப்பு சார்ந்த சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு, அதற்காக மருத்துவச் செலவு செய்ய நேரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

பரிகாரம்: உங்கள் பேச்சில் மிக கவனம் தேவை. வதந்திகள் உங்களைக் கவலையடைய செய்து ஆயாசப்பட வைக்கும். விநாயகருக்கு இனிப்புப் பிரசாதம், வெல்லம், நெய் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்கவும்.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாத முற்பகுதியில் உங்கள் தொழிலில் அரசு உத்தரவுகள் குழப்பத்தைத் தரும். அதனை சில அரசியல்வாதிகளின் உதவி யுடன் மாதப் பிற்பகுதியில் சமாளித்து விடுவீர்கள். இதன்பொருட்டு எப்போதும் சற்று கோபத்துடனும் இறுக்கத்துடனும் காணப்படுவீர்கள். இந்த மாதம் நீங்கள் சற்றும் எதிர்பாராத பணவரவு கிட்டும். அது தொழில் லாபம், வியாபார கள்ளக்கணக்கு வருமானம், லஞ்சப்பணம், வட்டிப்பணம் என ஏதோ ஒருவிதத்தில் வந்துசேரும். பணவரவு செழிக்கும்; கொழிக்கும். பெரும்பாலும் அனைத்திலும் நேர்மை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படம், தொலைக்காட்சிக் கலைஞர்கள் தங்கள் வருமானத்தின் அளவு உயரக் காண்பர். உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் மூத்த சகோதரருக்கும் இடையில் சற்று வாக்கு வாதம் வரும். அரசியல்வாதிகள் தற்போதி ருக்கும் இடத்திலிருந்து நல்ல செல்வப் பெருக்கமுள்ள இடத்திற்கு இடமாற்றம் செய்வர். அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டு. இந்த மாதம் உங்கள் குடும்பத்தில் நன்மைகள் நடக்கும்போது சற்று குழப்பமும் உண்டாகும். வாரிசுகளின் கல்வி விஷயமாக இடமாறுதல் உண்டாகும். வெப்பம் சம்பந்தமான தலைவலி வரும். திருமணத்தில் மாங்கல்யம் சார்ந்து சற்று அதிக செலவுசெய்ய நேரும். உங்களின் சிலரது மருமகன் பண விஷயமாக வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடும். மாத சம்பள ஊழியர்கள் தங்கள் சொந்த ஊர் அருகே வேலைமாற்றம் பெறுவர். அல்லது அலைச்சலான வேலைப் பகுதியிலிருந்து, ஓரிடத்தில் அமர்ந்துசெய்யும் பகுதிக்கு மாற்றப்படுவர். மாத முற்பகுதியில் உங்கள் மாமியார் சிலபல பிரிவுகளை ஏற்படுத்திவிட்டுச் செல்வார்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.

எச்சரிக்கை எண்கள்: 5, 14, 23.

பரிகாரம்: இந்த மாதம் பணவரவு களின்போது கவனமாக இருக்கவேண்டும். திருமணப் பேச்சுவார்த்தைகளை ஒரு பெரியவரைக் கொண்டு முடிவுசெய்யவும். உங்கள் பெயரில் விநாயகருக்கு அர்ச்சனை செய்யவும். அர்ச்சகருக்கு தாராளமாகக் காணிக்கை செலுத்தவும்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் குழந்தை சம்பந்தமான ஒரு நற்செய்தி கிடைக்கப்பெறுவீர்கள். அல்லது பேரன், பேத்தி சம்பந்தமான பயணம்- அது வெளிநாட்டுப் பயணமாகக்கூட அமையும். உங்களது பெண்பிள்ளைகள் மேற்கல்வி அல்லது வேலை விஷயமாக வெளியூர், வெளிநாடு செல்வர். சிலரது இளைய உடன் பிறப்பு வீட்டைவிட்டு வெளியேறும் சூழல் உருவாகலாம். உங்கள் மனையை அரசு கையகப்படுத்தி அதன்மூலமும் பணவரவு கிட்டும். கலைஞர்கள் மாதத்தின் முதல்வாரம் மிக அலைச்சலும், மற்ற வாரங்களில் அலைச் சலற்ற வேலைவாய்ப்பும் பெறுவர். இந்த மாதம் பங்குவர்த்தகத்தில் முதலீடு செய்யும் போது மிக கவனம் தேவை. எதிர்பாராத நன்மைதரும் வேலை வாய்ப்புண்டு. அல்லது வேலை, தொழில் விஷயமாக இருந்து வந்த இடைஞ்சலும் இன்னலும் சரிசெய்யப் பட்டுவிடும். ஆன்மிகப் பயணம் செய்யும் போது சில கோளாறுகள் ஏற்பட வாய்ப் புண்டு. எனவே, மூத்த குடிமக்கள் ஆன்மிகப் பயணத்தை நன்கு யோசித்து தீர்மானிக்கவும். தொழில் பெருக்கத்தின் பொருட்டு சற்று கடன்வாங்கி முதலீடு செய்வீர்கள். இந்தமாதம் உடல்நலத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்ளுங்கள். முழங்காலில் அடிபட வாய்ப்புள்ளது. அல்லது ஏற்கெனவே மூட்டுவலி உள்ளவர்களுக்கு அது அதிகமாகக்கூடும். சிலருக்கு இந்த மாதம் யோசனைகள் சற்று தாறுமாறாகத் தடுமாறும். எனவே, 'எடுத்தேன் கவிழ்த்தேன்' என்றில்லாமல், சற்று நிதானித்து சிந்தனைகளை ஒழுங்குபடுத்தவும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.

பரிகாரம்: இந்த மாதம் பயணங்களில் கவனமாக இருக்கவும். உங்கள் பணம் அல்லது நகை அல்லது முக்கிய ஆவணங்கள் காணாமல்போக வாய்ப்புண்டு. முக்கியமான விஷயங்களை ஆரம்பிக்கும் முன்னர் விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைக்கவும்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் திருமணம் நடப்பவர்களின் வாழ்க்கைத்துணை, தகவல் பரிமாற்றத் துறை அல்லது சொந்தத் தொழில் முனைவோராக அமைவார். சிலரது தந்தை எங்காவது இடறிவிழுந்து மருத்துவமனை செல்லவேண்டிய நிலை ஏற்படும். இதனால் நீங்கள் மிகவும் கோபமாகிவிடுவீர்கள். சிலரது இளைய உடன்பிறப்புக்கு வேலை அல்லது திருமணம் என ஏதோவொன்று நடக்கும். பத்திரிகைத் துறையினர் நிறைய தொழிலதிபர்களை அல்லது அரசியல் வாதிகளை சந்திக்கக்கூடும். சிலரது ஒரு கெட்ட பழக்கத்தால், வாழ்க்கைத் துணையின் கோபத்துக்கு ஆளாக நேரும். அரசியல் வாதிகள் ஆன்மிகம் அல்லது குழந்தைகள் நலன் விஷயமாக அதிக அலைச்சலை மேற்கொள்வர். மாத முற்பகுதியில் அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மிக கவனமாக நடந்துகொள்ள வேண்டும். சிலர் சிறைசெல்லவும் நேரும்; எச்சரிக்கை தேவை. மாதப் பிற்பகுதியில் நிலைமை சீராகிவிடும். உணவில் கவனம் தேவை. அஜீரணக் கோளாறு ஏற்படும் வாய்ப் புண்டு. ஒருசிலருக்கு பத்திரிகை, அரசு தொலைக்காட்சி, தகவல்தொடர்பு ஆகிய வற்றில் பணிபுரியும் வாய்ப்புண்டு. கலைஞர் கள் வேலை செய்யும்போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சிலரது வாரிசுகள் சற்று அவமானத்துக்கு உள்ளாவார்கள். சிலருக்கு கல்விசார்ந்த வேலை கிடைக்கும். கர்ப்பிணிகள் மிக எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். உங்களது மாமியாரின் உதவி தொழிலின் மேன்மைக்கு உதவும். விவசாயி கள் சற்று கவனத்துடன் இருத்தல் நன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

பரிகாரம்: இந்த மாதம் உங்கள் நடவடிக்கைகளில் மிக கவனம் தேவை. இல்லை யெனில் அவமானத்துக்கு ஆட்பட நேரும். விநாயகருக்கு அறுகம்புல் மாலைசாற்றி வழிபடவும்.

செல்: 94449 61845

om011221
இதையும் படியுங்கள்
Subscribe