ஆகஸ்ட் மாத எண்ணியல் பலன்கள்! -ஆர். மாகலட்சுமி

/idhalgal/om/numerical-benefits-august-0

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாத முற்பகுதியில் மிகுந்த அலைச் சல்களை எதிர்கொள்ள நேரும். எனினும் மாதப் பிற்பகுதி உங்களுக்கு ஸ்திரத்தன்மை யையும், கம்பீரமான கௌரவத்தையும் தரும். மாதத்தின் முதல் மூன்று வாரங்கள் நல்ல பணவரவைத் தரும். நீங்கள் எண்ணியவை எண்ணியவாறு நன்கு ஈடேறும். கடைசி வாரத்தில் அதிக லாபம் கிடைக்க வழியுண்டு. வாக்கு பலம்பெறும். குடும்பம் குதூகலமாகும். பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோர் உங்கள் வீட்டில் சந்தித்துக்கொள்வர். சிலருக்கு வீடுவாங்கும் யோகமுண்டு. சிலர் மனைவாங்க முன்பணம் கொடுப்பீர்கள். மனை, வீட்டுப் பத்திரத்தில் ஏதேனும் வில்லங்கம் உள்ளதா என ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்கவும். சிலருக்கு வீடு, மனை விஷயமாக உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு ஏற்படும். சிலர் விவசாயம் சார்ந்த வாகனம் வாங்கும் வாய்ப்புண்டு. வாரிசுகளின் திருமண விஷயமாக அலையநேரும். வாழ்க்கைத் துணையின் உடல்நலனில் சற்று கவனமாக இருக்கவும். மாதப் பிற்பகுதியில் தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடு வர வாய்ப்புள்ளது. வியாபாரிகள், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நலம். இந்த மாதம் ஏதோவொரு அதிர்ஷ்ட நிகழ்வு நடக்க வாய்ப்புள்ளது. உங்களில் சிலர் தாத்தா ஆகலாம். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் சிறிது சறுக்குவதுபோல் தோன்றினாலும், பின் அதுவே நல்ல லாபத்துக்கு வழிகாட்டும். மூத்த சகோதரர் அல்லது மருமகனால் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் சார்ந்த வேலை கிடைக்கும். சிலர் வெளிநாட்டு வேலையை வீட்டிலிருந்தபடியே கம்ப்யூட்டரில் செய்வீர்கள். சில அரசியல் வாதிகள் நல்ல பதவியும் பணபலமும் கிடைக்கப்பெறுவர். மாமனார்- மாமியார் தரும் இம்சை லாபமாக மாறும். கலைஞர்கள் தொந்தரவுடன் கூடிய வாய்ப்பைப் பெறுவர்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: 4, 8 ஆகிய எண்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் உங்களது எண்களை உடையவர்களோடு நட்பாக இருக்கலாம். அந்தணர்களுக்கு உணவுதானியம் வாங்க உதவி செய்யவும்.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் பண வரவும் செலவும் மாறிமாறி இருக்கும். இறைக்கிற கிணறுதான் ஊறும் என்னும் பழமொழி, இந்த மாத வரவு- செலவுக்கு ஏற்றதாக அமையும். வாக்கினால் லாபமுண்டு. குடும்பத்தொழில் செய்கிறவர்கள் மேன்மையும் ஏற்றமும் பெறுவர். தந்தையுடன் சற்று கருத்து வேறுபாடு ஏற்படும். சிலர் விலையுயர்ந்த கைபேசி வாங்குவர். அல்லது கைபேசி, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழிலில் இறங்குவீர்கள். அல்லது இவை சார்ந்த வேலை கிடைக்கும். இளைய சகோதரர் வகையில் ஒரு சுபச்செலவு அல்லது முதலீடு அல்லது நன்மை ஆகியவை கிடைக்கக்கூடும். தொலைக்காட்சி, வானொலி, திரைப்படக் கலைஞர்கள் பணபலமும் புகழும் கிடைக்கப் பெறுவர். வீடு, வாகன லாபமுண்டு. தாயார் அல்லது மூத்த சகோதரிமூலம் அனுகூலம் பெறுவீர்கள். பங்குப் பத்திரம், விளையாட் டுத்துறை, பொழுதுபோக்குத் துறை ஆகிய வற்றைச் சார்ந்தவர்கள் பணமதிப்பும், புகழ் சேர்க்கையும், லட்சிய நிறைவேற்றமும் கிடைக்கப்பெறுவர். எதிர்பாராத லாப நிகழ்வுகள் நடக்கும். இதுவரை இருந்த நோய்பாதிப்பு நீங்கும். எதிரிகளின் தொல்லை விலகும். கடனை அடைக்கலாம். சிலருக்கு திருமணப் பேச்சில் பண விஷயமாக மனக் கசப்பு தோன்றலாம். பணப்பரிமாற்றத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் பெறுவர். சிலரது பூர்வீக சொத்து பணமாக மாறும். தொழிலில் பணப்புழக்கம் அதிகரிக்கும். முதலீடுகள் பெருகும். அரசியல்வாதிகள் தங்கள் அருமையான ப

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாத முற்பகுதியில் மிகுந்த அலைச் சல்களை எதிர்கொள்ள நேரும். எனினும் மாதப் பிற்பகுதி உங்களுக்கு ஸ்திரத்தன்மை யையும், கம்பீரமான கௌரவத்தையும் தரும். மாதத்தின் முதல் மூன்று வாரங்கள் நல்ல பணவரவைத் தரும். நீங்கள் எண்ணியவை எண்ணியவாறு நன்கு ஈடேறும். கடைசி வாரத்தில் அதிக லாபம் கிடைக்க வழியுண்டு. வாக்கு பலம்பெறும். குடும்பம் குதூகலமாகும். பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோர் உங்கள் வீட்டில் சந்தித்துக்கொள்வர். சிலருக்கு வீடுவாங்கும் யோகமுண்டு. சிலர் மனைவாங்க முன்பணம் கொடுப்பீர்கள். மனை, வீட்டுப் பத்திரத்தில் ஏதேனும் வில்லங்கம் உள்ளதா என ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்கவும். சிலருக்கு வீடு, மனை விஷயமாக உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு ஏற்படும். சிலர் விவசாயம் சார்ந்த வாகனம் வாங்கும் வாய்ப்புண்டு. வாரிசுகளின் திருமண விஷயமாக அலையநேரும். வாழ்க்கைத் துணையின் உடல்நலனில் சற்று கவனமாக இருக்கவும். மாதப் பிற்பகுதியில் தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடு வர வாய்ப்புள்ளது. வியாபாரிகள், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நலம். இந்த மாதம் ஏதோவொரு அதிர்ஷ்ட நிகழ்வு நடக்க வாய்ப்புள்ளது. உங்களில் சிலர் தாத்தா ஆகலாம். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் சிறிது சறுக்குவதுபோல் தோன்றினாலும், பின் அதுவே நல்ல லாபத்துக்கு வழிகாட்டும். மூத்த சகோதரர் அல்லது மருமகனால் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் சார்ந்த வேலை கிடைக்கும். சிலர் வெளிநாட்டு வேலையை வீட்டிலிருந்தபடியே கம்ப்யூட்டரில் செய்வீர்கள். சில அரசியல் வாதிகள் நல்ல பதவியும் பணபலமும் கிடைக்கப்பெறுவர். மாமனார்- மாமியார் தரும் இம்சை லாபமாக மாறும். கலைஞர்கள் தொந்தரவுடன் கூடிய வாய்ப்பைப் பெறுவர்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: 4, 8 ஆகிய எண்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் உங்களது எண்களை உடையவர்களோடு நட்பாக இருக்கலாம். அந்தணர்களுக்கு உணவுதானியம் வாங்க உதவி செய்யவும்.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் பண வரவும் செலவும் மாறிமாறி இருக்கும். இறைக்கிற கிணறுதான் ஊறும் என்னும் பழமொழி, இந்த மாத வரவு- செலவுக்கு ஏற்றதாக அமையும். வாக்கினால் லாபமுண்டு. குடும்பத்தொழில் செய்கிறவர்கள் மேன்மையும் ஏற்றமும் பெறுவர். தந்தையுடன் சற்று கருத்து வேறுபாடு ஏற்படும். சிலர் விலையுயர்ந்த கைபேசி வாங்குவர். அல்லது கைபேசி, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழிலில் இறங்குவீர்கள். அல்லது இவை சார்ந்த வேலை கிடைக்கும். இளைய சகோதரர் வகையில் ஒரு சுபச்செலவு அல்லது முதலீடு அல்லது நன்மை ஆகியவை கிடைக்கக்கூடும். தொலைக்காட்சி, வானொலி, திரைப்படக் கலைஞர்கள் பணபலமும் புகழும் கிடைக்கப் பெறுவர். வீடு, வாகன லாபமுண்டு. தாயார் அல்லது மூத்த சகோதரிமூலம் அனுகூலம் பெறுவீர்கள். பங்குப் பத்திரம், விளையாட் டுத்துறை, பொழுதுபோக்குத் துறை ஆகிய வற்றைச் சார்ந்தவர்கள் பணமதிப்பும், புகழ் சேர்க்கையும், லட்சிய நிறைவேற்றமும் கிடைக்கப்பெறுவர். எதிர்பாராத லாப நிகழ்வுகள் நடக்கும். இதுவரை இருந்த நோய்பாதிப்பு நீங்கும். எதிரிகளின் தொல்லை விலகும். கடனை அடைக்கலாம். சிலருக்கு திருமணப் பேச்சில் பண விஷயமாக மனக் கசப்பு தோன்றலாம். பணப்பரிமாற்றத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் பெறுவர். சிலரது பூர்வீக சொத்து பணமாக மாறும். தொழிலில் பணப்புழக்கம் அதிகரிக்கும். முதலீடுகள் பெருகும். அரசியல்வாதிகள் தங்கள் அருமையான பேச்சால் ஆக்கமும் ஊக்கமும் பெறுவர். சிலசமயம் முரணாகப் பேசினாலும், அதையும் சாமர்த்தியமாக உண்மையாக்கிவிடுவார்கள். இதனால் புகழ் ஓங்கும். மருமகள் வீடுவாங்க பண உதவி செய்யக்கூடும். சிலரது வாரிசுகள் தொழில், வேலைமூலம் பணம் சம்பாதிப்பர். விவசாயிகள் பணப் பெருக்கம் பெறுவர்.

அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.

எச்சரிக்கை எண்கள்: 8, 17, 26.

பரிகாரம்: 4, 7 ஆகிய எண் கொண்டவர்கள் மற்றும் உங்கள் எண்ணில் பிறந்தவர்கள் நல்ல நட்பாக இருப்பார்கள். வயதான தம்பதிகளுக்கு, சிரமப்படுபவர்களுக்கு அன்னம், ஆடை வழங்கவும்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் முழுவ தும் வீடு, வீடுமாற்றம், வீட்டு முதலீடு, பூர்வீகநிலம் என இவை சம்பந்தமாக யோசனைகள் தோன்றிக்கொண்டே இருக்கும். சிலர் வீட்டைப் பழுதுபார்க்கும் செலவுசெய்வீர்கள். குடும்பத்தில் பண விஷயமாக உங்களுக்கும் உங்கள் தந்தைக்கும் வாக்குவாதம் ஏற்படும். சிலர் புதிய கைபேசி வாங்குவீர்கள். பணப்புழக்கம் ஏற்ற- இறக்கமாக இருக்கும். வாரிசுகள் விஷயம் மகிழ்ச்சி தரும். வாரிசுகளின் திருமணம் நிச்சயமாகும். பங்கு வர்த்தகம் நன்மைதரும். கலைத்துறையினர், விளையாட்டுத் துறையினர், பொழுதுபோக்குத் துறையினர் நல்ல வேலைவாய்ப்பும் லாபமும் யோகமும் பெறுவர். தந்தை அல்லது மூத்த சகோதரிக்கு சற்று மருத்துவச் செலவு வரலாம். இக்காலகட்டத்தில் நல்ல வேலை, தொழில் செய்யும் வசதியான வரன் அமைந்து திருமணம் நிச்சயமாகும். வாழ்க்கைத்துணையின் வேலையிலும் தொழிலிலும் மாதக்கடைசியில் ஒரு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். மாத முற்பகுதியில் அரசு இம்சை தரலாம். தொழில் ஆரம்பிக்க விரும்புவோர் கடன்வாங்கி நல்ல தொழிலை ஆரம்பித்துவிடுவீர்கள். அல்லது வியாபார விருத்தியுண்டு. பூர்வீக நிலத்தில் சிலர் விவசாயம், பண்ணை, தோட்டம் ஆரம்பிக்கக்கூடும். அரசியல்வாதிகள் சிறு இடையூறுக்குப் பிறகு கௌரவமும் நல்ல லாபமும் உயர்ந்த பதவியும் பெறுவர். குலதெய்வக் கோவில் பயணமுண்டு. இந்த மாதம் உங்கள் மாமியார் காட்டில் செல்வமழைதான். மாமனார் நிலைமை சற்று சங்கடம்தான். உங்கள் தந்தை மாதப் பிற்பகுதியில் பிரகாசமாக இருப்பார். காவல்துறையினர் மாதப் பிற்பகுதியில் அரசு ஆதாயம் பெறுவார்கள். இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் நல்ல யோகம் பெறுவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.

பரிகாரம்: 3, 6, 9 ஆகிய எண் கொண்டவர்கள் நல்ல நட்பாக அமைவார்கள். விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆடை, கருவிகள் வாங்கித் தரவும்.

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

மாதப் பிற்பகுதியில் எதிர்பாராத பெருந்தொகை, அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது. வீடுவாங்க கடன் கிடைக்கும் அல்லது பூர்வீக சொத்தை விற்றுவிட்டு வேறு வீடு வாங்குவீர்கள். சிலர் மனையில் முதலீடு செய்வீர்கள். அரசு சார்ந்த ஒப்பந்தம், குத்தகை, கையெழுத்து போன்றவற்றில் அனுகூலம் உண்டு. அரசு தரும் கணினி, கைபேசி போன்றவை சிலருக்குக் கிடைக்கும். வாரிசு வேண்டுவோருக்கு வாரிசுயோகம் ஏற்படும். சிலரது பிள்ளைகள் வேலைகிடைத்து வருமானம் கொணர்வர். திரைப்படம், தொலைக்காட்சிக் கலைஞர்கள் ஊதியம் அதிகம் கிடைக்கும் நிலைக்கு உயர்வர். பங்குவர்த்தகம் வெற்றிதரும். விளையாட்டுத் துறையினர் தங்களது முழுத் திறமையை வெளிக்கொணர்வர். விவசாயிகள் நில முதலீடு செய்வர். உங்களில் சிலர் உங்களது பழைய எதிரியை சந்திக்கக்கூடும். சிலரது திருமணம் பெரும்பாலும் தாய்வழி சொந்தத்தில் நிச்சயமாகும். நீங்களும் உங்கள் வியாபார பங்குதாரர்களும் சேர்ந்து, சொந்தமாக இடம் வாங்க முன்பணம் கொடுப்பீர்கள். சிலருக்கு தனியார்துறையில் வேலை கிடைக்கும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. தொழில் சார்ந்த லாபம், "வரும்; ஆனா வராது' என போக்குக் காட்டும். மருமகன் கௌரவயுத்தம் புரிவார். வாக்குமூலம் தொழில்செய்பவர்கள் ஏற்றம் காண்பர். உங்களில் சிலர் குடும்பத்துடன் பயணம் மேற்கொள்வீர்கள். அரசியல்வாதிகள் கௌரவக் குறைச்சலை எதிர்கொள்ள நேரிடும். இதனால் உங்களுடன் இருக்கும் சிலர் விலகக் கூடும். இந்த தேதிகளில் பிறந்த பெண்களில் பலர் தங்கள் பழைய வேலைக்கு மீண்டும் செல்லக்கூடும். மூத்த சகோதரரால் செலவுண்டு. ஆரோக்கியம் சிறந்த முறையில் இருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: 1, 2, 4, 7 ஆகிய எண்காரர் களுடன் நல்ல நட்புகொண்டால் பயன் உண்டா கும். வயலில் வேலை செய்பவர்களின் தனிப் பட்ட விவசாய வாகனங்களுக்கு ஏற்படும் பழுதுச்செலவை ஏற்றுக்கொள்ளுங்கள்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் பதவி உயர்வுடன்கூடிய இடமாற்றம் ஏற்படலாம். தொழில் புரிபவர்களுக்கு எதிர்பாராத முதலீடு கிடைத்து, மேலும் கிளைகள் திறந்து தொழில் அபிவிருத்தி அடையும். அரசுவகை லாபமுண்டு. எனினும் அரசுவகையில் செலுத்தவேண்டிய வரி போன்ற வகையில் செலவும் இருக்கும். தொழில் முனைவோர் இந்த மாதம் புதிய தொழில் தொடங்குவர். காசு பண யோகம் செழிக்கும். வாக்கினால் செலவும் வரவும் இருக்கும். குடும்பத்தில் யோக நிகழ்வுகள் நடைபெறும். அதனால் சுபச்செலவுகள் ஏற்படும். சிலருக்கு மறைமுக யோக அதிர்ஷ்டம் கிடைக்கும். மனை விஷயமாகவோ அல்லது காவல்துறையில் இருப்பவர்களுக்கோ முற்றிலும் எதிர்பாராத ஒரு நல்லசெய்தி கிடைக்கும். சிலருக்கு தாயாருடன் வாக்குவாதம் ஏற்படலாம். திருமணப் பேச்சுகள் சற்று இழுபறியாக இருக்கும். வியாபார பங்குதாரர்களுடன் சற்று மனக்கசப்பு ஏற்படும். வரவிருந்த அவமானம் மறையும். ஆன்மிக சிந்தனைகள் மாறுபடும். மாதப் பிற்பகுதியில் உயரிய கௌரவம் கிடைக்க வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகளுக்கு மாத முற்பகுதியில் பதவி உயர்வும், பிற்பகுதியில் வெளிநாட்டுப் பயணமும் உண்டு. அரசு அதிகாரிகள் வெளிமாநிலம் அல்லது வெளிநாடு செல்லக்கூடும். கருவுற்ற பெண்கள் கவனமாக இருக்கவேண்டும். உங்களது மாமியார் மிகுந்த நன்மை பெறுவார். சிலரது மாமனாரின் கைபேசி தொலையக்கூடும். சிலரது வாழ்க்கைத்துணை வேலைகிடைத்து வேறிடம் செல்வார். விவசாயிகள் அரசு கடன் கிடைக்கப் பெறுவர். உடல்நிலையில் சற்று கவனம் தேவை. இளைய சகோதரர் வெளியூர், வெளிநாடு செல்லக்கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.

எச்சரிக்கை எண்கள்: 3, 12, 21, 30.

பரிகாரம்: 5, 6-ஆம் எண்ணில் பிறந்தவர்களுடன் நட்பு பாராட்டுதல் நன்மைதரும். கடைநிலை ஊழியர்களின் ஆரோக்கியம் சம்பந்தமாக உதவி செய்யுங்கள்.

pecockmurugan

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

மாத முற்பகுதியானது எதிர்பார்த்த நன்மைகளையும், பிற்பகுதி எதிர்பாராத நன்மைகளையும் தரும். சிலர் எண்ணிய- ஈடேற ஆசைப்பட்டவை சட்டப்புறம்பான வழிகளில் அல்லது வேறு குறுக்குவழிகளில் நிறைவேறும். சிலருக்கு லஞ்சம் கொடுப்பதன்மூலம் எண்ணங்கள் ஈடேறும். உங்களது வாக்கு சிலசமயம் ஏற்றத்தையும் இறக்கத்தையும் தரும். அரசு ஒப்பந்தம் நல்ல லாபம் தரும். இளைய சகோதரரின் திருமணம் நிச்சயமாகும். அரசு மூலம் சிலருக்கு கைபேசி கிடைக்கும். அரசு வேலை அடிப்படையில் வீடு கிடைக்கும். தாயார்மூலம் நன்மையுண்டு. அரசு வாகனப் பயணம் உண்டு. வாரிசுகளின் திருமணம் சிறு சச்சரவுக்குப்பிறகு நிச்சயமாகும். பங்கு வர்த்தகம் நன்மை- தீமை இரண்டையும் கலந்து தரும். கலை, பொழுதுபோக்கு சம்பந்தமானவர்கள் சற்று குளறுபடி மற்றும் நிறைய அலைச்சல்களோடு மிகுந்த நன்மையை அனுபவிப்பர். உடல்நலனில் கவனம் தேவை. திருமணம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். வியாபாரத்தில் பங்குதாரர் மற்றும் அரசு அனுசரணை போன்ற மேன்மை கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் பூர்வீக சொத்து கிடைக்கக்கூடும். பெண்களிடம் பழகும்போது கவனம் தேவை. கல்வி, அறிவு சார்ந்த விஷயங்களில் நன்மையும், நல்ல முதலீட்டு சுதந்திரமும் தரும். தொழிலில் ஏற்றமுண்டு. அரசு அதிகாரிகள் பணி உயர்வு பெறுவர். மறுமணம் வேண்டுவோருக்கு திருமணம் நடக்கும். மாதக்கடைசியில் நன்மைதரும். வெளியூர், வெளிநாட்டுப் பயணமுண்டு. அரசியல்வாதிகள் தங்கள் நிலையில் மேன்மையும் நிலைத்தன்மையும் பெறுவர்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

பரிகாரம்: 6, 9 ஆகிய எண் கொண்டவர் களுடன் நல்ல நட்பு உருவாகும். பிற மதம், இனத் தில், கீழ்மட்ட வேலைசெய்யும் மக்களுக்கு வெளிச்சம் தரும் மின்சார பல்பு போன்ற உபகரணங்களை வாங்கித் தரவும். குறைந்த பட்சம் மெழுகுவர்த்தியாவது கொடுங்கள்.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் வேலையில் உயர்வு பெறவும், தொழிலில் கொடிகட்டிப் பறக்கவும், அரசியலில் முதன்மைநிலை பெறவும் சிலரது சிந்தனைகள் மிகவும் தாறுமாறாக வேலை செய்யும். பலரது பேச்சு சூழ்நிலைக்குத் தகுந்தவாறு ஏற்ற- இறக்கமாக இருக்கும். பண வரவு சீராக இராது. இளைய சகோதரர்மூலம் அரசு சார்ந்த இம்சை ஏற்படக்கூடும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. பூர்வீக வீட்டை, சொத்தை சிலர் விற்கக்கூடும். சிலரது பிள்ளைகள் வேறிடம் செல்வர். திரைப்படம், தொலைக்காட்சிக் கலைஞர்கள், பொழுதுபோக்குப் பிரிவினர், விளையாட்டுத் துறையினர் மேன்மையின் பொருட்டு திடீர் இடமாற்றம் செய்ய நேரும். கருவுற்ற பெண்கள் மருத்துவப் பராமரிப்பில் இருக்கவேண்டும். சிலருக்கு மாதப் பிற்பகுதியில் அரசுவேலை கிடைக்க வாய்ப்புண்டு. சிலருக்கு மருத்துவ மனையில் வேலை கிடைக்கும். சிறு சச்சரவுக் குப் பின்னர் திருமணம் நிச்சயமாகும். வியாபாரம், தொழிலில் சில அவமானங்களை சந்திக்கும் சூழல் சிலருக்கு வரலாம். எனினும் உங்களது அபரிமித சாமர்த்தியத்தால் அதையும் வெற்றியாக்கிக் கொள்வீர்கள். ஏற்றுமதி- இறக்குமதி தொழிலில் உள்ளவர்கள் நல்ல லாபம் காண்பார்கள். இதன்பொருட்டு வெளியூர், வெளிநாடு செல்ல நேரலாம். அரசு அதிகாரிகள் சிலருக்குப் பணி உயர்வும் இடமாற்றமும் சேர்ந்து கிடைக்கும். சிலரது வாரிசுகளுக்கு திருமணம் நடக்கும். இந்த தேதிகளில் பிறந்த பலருக்கு மாத இறுதியில் பதவி உயர்வும் தொழில் வெற்றியும் கிட்டும். விவசாயப் பெருமக்கள் அரசு உதவியுடன் வேலைவாய்ப்பு அதிகம் கிடைக்கப்பெறுவர். அரசியல்வாதிகள் துறைமாற்றமும் உயர்வும் பெறுவர். மறுமணம் திடீரென உறுதியாகும். சிலரது மாமியாருக்கு அரசுலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.

எச்சரிக்கை எண்கள்: 3, 12, 21, 30.

பரிகாரம்: 4, 7 மற்றும் 1, 2-ஆம் எண்களில் பிறந்தவர்கள் நல்ல நட்பு பாராட்டுவர். வயதான அந்தணர்களுக்கு உணவு தானியம் சம்பந்தமான உதவிசெய்யவும்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் எதிர்பாராத வரவும், எதிர்பாராத செலவும் இருக்கும். தந்தை அல்லது வாழ்க்கைத்துணையுடன் மனக்கசப்பு ஏற்படலாம். அரசு சம்பந்தமான பிரச்சினை ஏதேனும் வரலாம். பேச்சில் கவனம் தேவை. சிலர் பழைய கைபேசியை மாற்றிவிட்டு புதிதாக வாங்குவார்கள். இளைய சகோதரர் செலவு வைப்பார். குத்தகை, ஒப்பந்தம் போன்றவைமூலம் செலவிருக்கும். நீண்டநாட்களாக வீடு விற்க நினைத்தவர்களுக்கு இப்போது அதற்காக ஆட்கள் தேடிவருவர். எனினும் வீடு, மனை, நிலம்சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. தாயார்நலம் கவனிக்கப்பட வேண்டும். வீடு வாடகைக்குத் தேடுவோர் வீட்டை சற்று கவனமாகத் தேர்வுசெய்தல் அவசியம். காதல் பிரச்சினையைக் கொடுத்து காவல்துறைவரை கொண்டுபோய் விடும். இந்த மாதம் கலைத்துறையினர் எண்ணியதற்கு மாறாக- எதிராக நடக்கும். விளையாட்டுத் துறையினர் காயம்பட்ட நேரலாம்; கவனம் தேவை. சிலரது வாழ்க்கைத்துணை ஏதாவது சங்கடத்தில் அகப்பட்டுக் கொள்ளக்கூடும். இந்த மாதம் அரசு சார்ந்த விஷயங்களில் அதிக கவனத்தோடு இருப்பது அவசியம். உடல்நிலையில் சிறிய பிரச்சினை என்றா லும் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள். சிலருக்கு தந்தையின் வேலை கிடைக்கும் அல்லது பரம்பரை தொழில் பலிதமாகும். சிலருக்கு தொழில் செய்யுமிடத்தில் பெண்களால் அவமானம் ஏற்பட இடமுண்டு. மாதப் பிற்பகுதியில் இந்த பிரச்சினை சரியாகிவிடும். மூத்த சகோதரருடன் பிணக்குவர வாய்ப்புண்டு. காவல்துறையினர் கவனமாக இருக்கவும். பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. மாமியார்மூலம் மனக்கசப்பு வரும். மருமகன் வீடு சம்பந்தமாக வருத்தம் கொள்வார்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.

பரிகாரம்: 1, 4, 5 ஆகிய எண்களில் பிறந்த வர்களோடு நட்புக்கொள்வது பயனளிக்கும். குலதெய்வம், இஷ்ட தெய்வத்தை வணங்கவும்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் பூர்வீக சொத்து விஷயமாக எதிர்பாராத நன்மை கிடைக்கும். சிலர் சொந்த மண்ணில் வீடுகட்டுவர். மாதப் பிற்பகுதி யில் உங்களுக்கும், உங்கள் வாரிசுகளுக்கும் இடையில் சற்று மனக்கசப்பு உண்டாகும். அல்லது உங்களது ஆரோக்கியம் சிறிது பாதிக்கப்படலாம். பேச்சு சற்று அதிகப்படியாக இருப்பதால் சிலருடன் மனத்தாங்கல் ஏற்படும். குடும்பத்தில் வாழ்க்கைத்துணையுடன் சச்சரவு வரக்கூடும். சிலருக்கு வெளிநாடு சம்பந்தமான வேலை கிடைப்பதால், வெளிநாட்டுப் பணத்தைப் புழங்கும் யோகம் வரும். சிறுபயண வேலை கிடைக்கும். தகவல் தொழில்நுட்பம், குத்தகை, ஒப்பந்தம், கையெழுத்து, பத்திரிகை சம்பந்தமான வேலை உடையவர்களின் நிலை மிகச்சிறப்பாக இருக்கும். திரைப்படம், தொலைக்காட்சிக் கலைஞர்களுக்கு அரசு ஆதரவு கிட்டும். சில விளையாட்டுத் துறையினர் அரசுவேலை கிடைக்கப் பெறுவர். இதில் சில சிக்கல்கள் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாது. சிலருக்கு வாய் திக்குதல் அல்லது ஞாபகமறதி அடிக்கடி ஏற்படும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் சற்று குறைவு ஏற்பட்டு பின் சீராகிவிடும். பங்குதாரர்களிடம் வாக்குவாதம் உண்டாகி பின் சரியாகும். வியாபாரிகள் சிறு சரிவை சந்தித்தாலும் பிறகு சரியாகி நல்ல வியாபாரப் பெருக்கம் உண்டாகும். சிலருக்கு அவமானங்கள் ஏற்படுதலும், வேறு சிலருக்கு அவமான விஷயங்களிலிருந்து விடுதலையாதலும் நடக்கும். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுதல் பொருட்டு செலவுகள் உண்டு. தொழிலில் அரசுவகை இம்சை வரும். மூத்த சகோதரவகையில் செலவுகள் உண்டு. மாமனாரின் நிலை உயரக்கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: 3, 6, 9 ஆகிய எண்களில் பிறந்தவர் கள் நல்ல நட்புடன் இருப்பர். உடல்நலக்குறைவுடைய இளைஞர்களுக்கு ஆரோக்கியம் சம்பந்தமான உணவு, பானம், மருந்து போன்றவை வாங்கித் தரவும்.

செல்: 94449 61845

om010821
இதையும் படியுங்கள்
Subscribe