ஏப்ரல் மாத எண்ணியல் பலன்கள்! -ஆர். மகாலட்சுமி

/idhalgal/om/numerical-benefits-april-r-mahalakshmi-0

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாத முதல் வாரத்தில் முக்கியமான விஷயங்களை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். உங்கள் வேலையில் நல்லதிர்ஷ்டம் கிடைக்கும். மாத முற்பகுதியில் சில விஷயங்கள் ஏமாற்றமாக இருந்தாலும் பிற்பகுதியில் நிறைய எதிர்மறை அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். பணவரவும் சரளமாகும். சிலருக்கு லஞ்சம் அதிகமாகக் கிடைக்கும். கோவிலுக்குப் போனால் அர்ச்சகரே காசு கொடுப்பார். மாதப் பிற்பகுதியில் எதிர்பார்த்த இனங்கள் காலை வாரிவிடும். எதிர்பாராத விஷயங்கள் நல்ல லாபம் தரும். இளைய சகோதரியின் திருமணம் பொருட்டு குலதெய்வக் கோவிலுக்குச் செல்வீர்கள். வீடு கட்ட, மனை வாங்க கடன் கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு சில பங்குகள் மிகுந்த இழப்பைத் தரும். தகவல், தொலைத்தொடர்பு பங்குகளில் நல்ல லாபம் எதிர்பாராமல் கிடைக்கும். குலதெய்வ வழிபாட்டுக் கூட்டத்தில் சிலசமயம் சச்சரவுகள் ஏற்படும். உங்கள் பெற்றோரின் உடல்நலக்குறைவு சீராகும். தம்பதிகளுக்குள் சிறுசிறு பிணக்குகள் வரலாம். மாத முற்பகுதியில் உங்களுக்கு ஏற்படும் அவமானம், மாதப் பிற்பகுதியில் அதிர்ஷ்டமாக மாறும். முற்பகுதியில் தடைப்பட்ட பதவி உயர்வு, பிற்பகுதியில் லஞ்சப் பணத்தின்மூலம் சரியாகி புரமோஷன் கிடைத்துவிடும். சட்டப்புறம்பான தொழில் செய்வோர், போதை வஸ்துகள் விற்போர் கொடுக்கவேண்டியதைக் கொடுத்து விறுவிறுப்பாக வியாபாரம் செய்வர். கலைஞர்கள் சிலர் குறுக்குவழியில் வாய்ப்பும் வசதியும் பெறுவர். தொலைக்காட்சியில் பணிபுரிவோர், பெண்களின் குற்றம், நடத்தை போன்றவற்றை விரிவாக விமர்சனம் செய்து, மறைமுக வருமானம் அதிகம் பெறுவர். உங்களின் மூத்த சகோதரரும் நீங்களும் வேறு தெய்வத்தை வழிபடத் தொடங்குவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

பரிகாரம்: மிகவும் சிரமப்படும் அந்தணர் தம்பதிக்கு உதவுங்கள். ஒரே இடத்தில் முடங்கிக்கிடக்கும் பெண்களுக்கு வேண்டிய உதவி செய்யவும்.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் உங்களுக்கு பணம் வந்துகொண்டே இருக்கும். அதே அளவில் சுபச் செலவுகளும், அதற்கான தகவல்களும் வரும். மாதப் பிற்பகுதியில் உங்கள் வேலையில் வெளிநாட்டு சம்பந்தம் ஏற்படும். நீங்கள் அரசு சார்ந்த ஊழியர், அதிகாரிகளாக இருப்பின் மறைமுக வருமானம் தேடிவரும். இளைய சகோதரரின் திருமணச் செலவு ஏற்படும். வெளிநாட்டுக் கைபேசி சிலருக்கு தேடிவரும். சிலரை அரசு வாகனம் அழைத்துச்செல்ல வரும். தந்தை வீடு மாறுவார். மாத முற்பகுதியில் இம்சை தரும் வீடு, வாகனம் பிற்பகுதியில் அதிர்ஷ்டம் தரும். தாயார் உடல்நலனில் அக்கறை தேவை. பங்கு வர்த்தக விஷயங்களை மாதத்தின் முற்பகுதியில் முடித்துக் கொள்ளுங்கள். அப்போது வாங்கும் கட்டடம், தொழில், மின்துறை பங்குகள் லாபத்தை அள்ளித் தரும். ஆனால் மாதத்தின் பிற்பகுதியில் ஒரு பங்குகூட வாங்கவேண்டாம். இழப்பை ஏற்படுத்தும். மாதப் பிற்பகுதியில் உங்கள் வாரிசுகளால் சற்று சிரமம் ஏற்படலாம். இந்த தேதிகளில் பிறந்த குழந்தைகளின் தந்தைக்கு வேலை கிடைக்கும். சிலருக்கு திருமணம் ஈடேறும்; அதில் கௌரவப் பிரச்சினை எழும். மாதக் கடைசி வாரங்களில் வீடு, மனை, லாபம் தரும். மூத்த சகோதரிமூலம் நல்லதொரு அதிர்ஷ்டம் உண்டு. அரசியலிலுள்ள பெண்கள் பதவியும் மேன்மையும் பெறுவர். சமையல் சார்ந்த தொழில்கொண்ட பெண்கள் சீரும்சிறப் பும் ப

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாத முதல் வாரத்தில் முக்கியமான விஷயங்களை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். உங்கள் வேலையில் நல்லதிர்ஷ்டம் கிடைக்கும். மாத முற்பகுதியில் சில விஷயங்கள் ஏமாற்றமாக இருந்தாலும் பிற்பகுதியில் நிறைய எதிர்மறை அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். பணவரவும் சரளமாகும். சிலருக்கு லஞ்சம் அதிகமாகக் கிடைக்கும். கோவிலுக்குப் போனால் அர்ச்சகரே காசு கொடுப்பார். மாதப் பிற்பகுதியில் எதிர்பார்த்த இனங்கள் காலை வாரிவிடும். எதிர்பாராத விஷயங்கள் நல்ல லாபம் தரும். இளைய சகோதரியின் திருமணம் பொருட்டு குலதெய்வக் கோவிலுக்குச் செல்வீர்கள். வீடு கட்ட, மனை வாங்க கடன் கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு சில பங்குகள் மிகுந்த இழப்பைத் தரும். தகவல், தொலைத்தொடர்பு பங்குகளில் நல்ல லாபம் எதிர்பாராமல் கிடைக்கும். குலதெய்வ வழிபாட்டுக் கூட்டத்தில் சிலசமயம் சச்சரவுகள் ஏற்படும். உங்கள் பெற்றோரின் உடல்நலக்குறைவு சீராகும். தம்பதிகளுக்குள் சிறுசிறு பிணக்குகள் வரலாம். மாத முற்பகுதியில் உங்களுக்கு ஏற்படும் அவமானம், மாதப் பிற்பகுதியில் அதிர்ஷ்டமாக மாறும். முற்பகுதியில் தடைப்பட்ட பதவி உயர்வு, பிற்பகுதியில் லஞ்சப் பணத்தின்மூலம் சரியாகி புரமோஷன் கிடைத்துவிடும். சட்டப்புறம்பான தொழில் செய்வோர், போதை வஸ்துகள் விற்போர் கொடுக்கவேண்டியதைக் கொடுத்து விறுவிறுப்பாக வியாபாரம் செய்வர். கலைஞர்கள் சிலர் குறுக்குவழியில் வாய்ப்பும் வசதியும் பெறுவர். தொலைக்காட்சியில் பணிபுரிவோர், பெண்களின் குற்றம், நடத்தை போன்றவற்றை விரிவாக விமர்சனம் செய்து, மறைமுக வருமானம் அதிகம் பெறுவர். உங்களின் மூத்த சகோதரரும் நீங்களும் வேறு தெய்வத்தை வழிபடத் தொடங்குவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

பரிகாரம்: மிகவும் சிரமப்படும் அந்தணர் தம்பதிக்கு உதவுங்கள். ஒரே இடத்தில் முடங்கிக்கிடக்கும் பெண்களுக்கு வேண்டிய உதவி செய்யவும்.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் உங்களுக்கு பணம் வந்துகொண்டே இருக்கும். அதே அளவில் சுபச் செலவுகளும், அதற்கான தகவல்களும் வரும். மாதப் பிற்பகுதியில் உங்கள் வேலையில் வெளிநாட்டு சம்பந்தம் ஏற்படும். நீங்கள் அரசு சார்ந்த ஊழியர், அதிகாரிகளாக இருப்பின் மறைமுக வருமானம் தேடிவரும். இளைய சகோதரரின் திருமணச் செலவு ஏற்படும். வெளிநாட்டுக் கைபேசி சிலருக்கு தேடிவரும். சிலரை அரசு வாகனம் அழைத்துச்செல்ல வரும். தந்தை வீடு மாறுவார். மாத முற்பகுதியில் இம்சை தரும் வீடு, வாகனம் பிற்பகுதியில் அதிர்ஷ்டம் தரும். தாயார் உடல்நலனில் அக்கறை தேவை. பங்கு வர்த்தக விஷயங்களை மாதத்தின் முற்பகுதியில் முடித்துக் கொள்ளுங்கள். அப்போது வாங்கும் கட்டடம், தொழில், மின்துறை பங்குகள் லாபத்தை அள்ளித் தரும். ஆனால் மாதத்தின் பிற்பகுதியில் ஒரு பங்குகூட வாங்கவேண்டாம். இழப்பை ஏற்படுத்தும். மாதப் பிற்பகுதியில் உங்கள் வாரிசுகளால் சற்று சிரமம் ஏற்படலாம். இந்த தேதிகளில் பிறந்த குழந்தைகளின் தந்தைக்கு வேலை கிடைக்கும். சிலருக்கு திருமணம் ஈடேறும்; அதில் கௌரவப் பிரச்சினை எழும். மாதக் கடைசி வாரங்களில் வீடு, மனை, லாபம் தரும். மூத்த சகோதரிமூலம் நல்லதொரு அதிர்ஷ்டம் உண்டு. அரசியலிலுள்ள பெண்கள் பதவியும் மேன்மையும் பெறுவர். சமையல் சார்ந்த தொழில்கொண்ட பெண்கள் சீரும்சிறப் பும் பெறுவர். வெகுநாள் எதிர்பார்த்த பதவி உயர்வு மிக அதிர்ஷ்டமானதாக கிடைக்கும். சிலருக்கு வேலையில் மாற்றம் வரும். கலைஞர்கள் மிகவும் மேன்மை பெறுவர். மாத முற்பகுதியில் கலைஞர்கள் அவமானமும் அசௌகரியகளும் பெற்று, பிற்பகுதியில் நன்மை கிடைக்கப்பெறுவர். அரசியல் ஈடுபாடு, வீடு, மனை, வாகனம் வாங்கும் எண்ணம் உடையவர்கள் மாதப் பிற்பகுதியில் அதற்கான முயற்சியில் இறங்க வும். நன்மைகள் கிட்டும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: வேள்வி, யாகங்கள் செய்யும் அந்தண தம்பதிக்கு தாம்பூலம் கொடுக்கவும். அடிபட்டு துன்பப்படும் விளையாட்டு இளைஞர்களுக்கு உதவிசெய்யவும்.

fdf

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

மாதத்தின் முற்பகுதியில் அலைபாயும் எண்ணங்களும் யோசனைகளும் தோன்றி, மாதப் பிற்பகுதியில் ஸ்திரம் கொள்ளும். திருமணம், தொழில் பற்றிய கவலைகள் அலையடிக்கும். மாத முற்பகுதியில் உங்கள் தொழில் பங்குதாரர்கள் அல்லது வாழ்க்கைத் துணையின் தொழில் குறித்து கடும் வருத்தம் உருவாகும் சூழல் ஏற்படும். பிற்பகுதியில் பிற இன மனிதர்மூலம் அந்த சங்கடங்கள் நீங்கும். உங்கள் வாரிசுகள்மூலம் நல்ல பண வரவையும், பணச் செலவையும் காண்பீர்கள். உங்களது சொத்துப் பிரி வினைக்கு இளைய சகோதரரும் சம்மதிப்ப தால் அதுவும் வருமானம் தரும். சிலருக்கு காது வலி வந்து நீங்கும். உங்களது மூத்த சகோதரி வீடு மாறுவார். உங்களில் சிலர் அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவீர்கள். அது ஒரு கோவில் அருகே இருக்கும். மாதப் பிற்பகுதியில் குலதெய்வ தரிசனம் கிடைக்கும். அரசு சார்ந்த பங்குகள், கல்வி, தொழில் சார்ந்தவை, ஆயுள் சார்ந்த பங்குகள் ஏற்றம் தரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் உள்ளோர் பதவி உயர்வு பெறுவர். அரசியல்வாதிகள் வீடு, வாகனம் கிடைக்கப்பெறுவர். உங்களில் சிலர் தீய பழக்கங்களைத் தொடரக்கூடும். சிலர் பூர்வீகத் தொழிலை ஆரம்பிப்பீர்கள். பரம்பரையாக வரும் வியாபாரத்தை தூசிதட்டி ஒப்பனை செய்து, புது வடிவமைப்பில் பிரம்மாண்டமாக ஆரம்பித்துவிடுவீர்கள். சிலர் வீடுவாங்க கடன்வாங்குவீர்கள். வியாபாரம், தொழிலில் ஏற்படும் ஒரு சறுக்கலை பணம் கொடுத்து சரிக்கட்டிவிடுவீர்கள். தம்பதிகளுக்குள் ஈகோ பிரச்சினை ஏற்பட்டு பின் சரியாகும். வீடு, வேலை சம்பந்தமான நெடுநாள் ஆசை நிறைவேறும். கலைஞர்கள் கிடைக்கும் லாபத்தை வீட்டில் முதலீடு செய்வர். பழம், பூக்கள் வியாபாரிகள் செழிப்பு காண்பர். விவசாயிகள் மிக நல்ல நேரத்தை சுவைப்பார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 8, 17, 26.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

பரிகாரம்: வீடு கட்டிக்கொண்டிருக்கும் அந்தண தம்பதிகளுக்கு கடன் கிடைக்க கரம் கொடுங்கள். முடங்கிய முதியவர்களுக்கு உதவுங்கள்..

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

பிற இன, மதத் திருமணம்- காதல் கலப்புத் திருமணமாக நடக்கும். கல்வியில் சற்று பின்னடைவு ஏற்பட்டு பிறகு சரியாகும். அரசு சார்பில் வரி, வட்டி, கிஸ்தி என செலவுகள் அதிகரிக்கும். சீருடைப் பணியாளர்களுக்கு ஏற்றம் மிகும். சிலருக்கு தொழில் செய்யுமிடத்தில் காதல் துளிர்விடும். இதன்பொருட்டு சிலர் மிகவும் சங்கடங்களை அனுபவிக்க நேரும். வாழ்க்கைத்துணையின் வேலையில் மாற்றம் உண்டு. உங்களில் சிலரது வாரிசுகளுக்கு திருமண ஏற்பாடு ஈடேறும். பெண் தெய்வ தரிசனம் உண்டு. இந்த மாதப் பிற்பகுதியில் எதிர்மறை சிந்தனைகள்- அதிலும் யாரும் எளிதில் சிந்தனை செய்யமுடியாத யோசனைகளைக் கூறி எதிரில் இருப்பவர்களை கலங்க வைப்பீர்கள். உங்களைவிட்டு யாரும் ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது என்ற அளவில் அனைவரையும் சிறைப்படுத்திவிடுவீர்கள். சிலர் தங்களது தந்தையைக்கூட சற்று மிரட்டி ஓரமாக உட்கார வைத்துவிடுவார்கள். சிலர் தங்கள் மேலதிகாரிகளையும் அவர்களது ரகசிய செயல்களை- லஞ்ச லாவண்யங்களை சுட்டிக்காட்டி வாயை மூடவைத்து அமைதியாக்கி விடுவார்கள். ஆனால் இது போன்ற செயல்களெல்லாம் வாழ்க்கைத் துணையிடம் பலிக்காது. கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் காட்டில் நல்ல மழைதான். ஏதாவது அகட விகடம் செய்து தங்கள் பகுதியின் தலைக்கட்டு ஆகிவிடுவார்கள். அரசியல்வாதிகள் மறைமுக கொடுக்கல்- வாங்கல்மூலம் தங்களின் பதவியை நிரந்தரமாக்கிக்கொள்வார்கள். யாரும் உங்களை மீறாதபடி கவனமாகப் பார்த்துக்கொள்ளவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 5, 14, 23.

பரிகாரம்: பிறமத ஆலயத்திலுள்ள தம்பதிகளுக்கு உதவுங்கள். முடக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்யவும்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

மாத முற்பகுதியில் உங்கள் திருமணப் பேச்சுகள் சர்ச்சையினால் தடைப்படும். மாதப் பிற்பகுதியில் அருமையாக திருமணம் நடைபெறும். வரும் வாழ்க்கைத்துணை மிகவும் சீரும் சிறப்புமாக அமைவார். ஆனால் உங்கள் நிலைதான் இந்த மாதம் முழுவதும் சற்று தொய்வாகக் காணப்படும். இந்த மாதம் முழுக்க திருமணம், தொழில், வேலைமாற்றம், தந்தை, வெளிநாட்டு விஷயங்கள் என ஏதோவொன்றில் அவமானமும் சிரமமும் துரத்திக்கொண்டே இருக்கும். மாதப் பிற்பகுதியில் கடன் விஷயம் பணம் வரவால் தீர்ந்துவிடும். உங்கள் இளைய சகோதரரின் சில அதிகபட்ச செயல்களால் உங்களுக்கு எரிச்சல் ஏற்படும் அல்லது அவரோடு சிறுதூரப் பயணம் செய்யும்போது உங்களுக்கும் அவருக்கும் மனஸ்தாபம் ஏற்படும். வாழ்க்கைத்துணையின் வேலை நிரந்தரமாகும். உங்கள் வாரிசுகள் விளையாட் டுப் போட்டிகளில் பரிசும் பெறுவர்; சற்று பாதிப்பும் பெறக்கூடும். வாழ்க்கைத்துணை யின் உடல்நலம் சற்று பாதிக்கப்பட்டு பின்னர் சரியாகும். வெளிநாடு சம்பந்தமாக சற்று பணம் ஏமாற வாய்ப்புண்டு. பங்கு வர்த்தகத்தில் உச்சபட்ச லாபமும் நஷ்டமும் மாறிமாறிப் பெறுவீர்கள். உங்கள் தந்தையின் நிலை உயரும். இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் மிகவும் கவனம் தேவை. அரசின் சட்டங்கள்மூலம் விரயம் ஏற்படும். சில திரைப்படக் கலைஞர்கள் போராட் டத்தை சந்திப்பர்; பிறகு திருமணம் செய்து கொள்வர். சில கலையுல இணையர் பிரிந்து பின்னர் ஒன்றுசேர்வர். மனம் பரிதவிப்பதால் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று சிறப் பாகப் பூஜை செய்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 8, 17, 26.

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.

பரிகாரம்: திருமணமான புதிய அந்தண மணமக்களுக்கு புத்தாடையுடன் தாம்பூலம் கொடுங்கள். முடங்கியிருக்கும் பிற மத வயதானவருக்கு உதவுங்கள்.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் நாடகக் கலைஞர்கள் மிக ஏற்றமும் முன்னேற்ற மும் பெறும் மாதமிது. மனதில் அவ்வப்போது சந்தேகங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும். பூர்வீக சொத்து நல்ல விலைக்கு விற்று கையில் நிறைய பணம் புரளும். சிலரது வாழ்க்கைத் துணைக்கு மிக உயரிய பதவி கிடைக்கும். சீருடைப்பணி புரிபவர்கள் ஏற்றம் பெறுவதோடு, மனை, வீடு வாங்குவீர்கள். பொறியியல் கல்வி சிறக்கும். இளைய சகோதரருக்கு வேலை கிடைக்கும். உங்கள் தொழிலில் எதிர்பாராத நன்மை ஒன்று காத்திருக்கிறது. சிலரது தந்தையின் உடல்நிலை குறித்து கவலை ஏற்படலாம். பிற மத, இன வியாபார பங்குதாரர்களால் கிடைக்கும் லாபத்தில் ஒரு மறைவுத்தன்மை உண்டாகும். வெளிநாடு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் தேக்கநிலை ஏற்படலாம். அசைவ சமையல்காரர்கள் சற்று அடங்கிப் போக நேரும். அரசியல்வாதிகள் லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் சரிசமமாக இருப்பதால், அவர்களது பணவரவில் சற்று வறண்ட வானிலை நிலவும். சில சமயம் எதிர்பாராத அதிர்ஷ்டம் வரவும் வாய்ப்புள்ளது. விவசாயிகள் பூர்வீக வழியில் செய்யும் வேளாண்மை நல்ல பலன் தரும். விளையாட்டு, வேளாண்மை, பொழுதுபோக்கு சார்ந்த பங்குகள் நல்ல உயர்வு தரும். உங்கள் மருமகன் சொத்து சம்பந்தமாக மனஸ்தாபம் கொள்வார். உங்களது தந்தைக்கும், தாய்மாமனுக்குமிடையே மன வருத்தம் ஏற்படலாம். உங்களது வாழ்க்கைத் துணையின் மாறுபட்ட யோசனைகள் வரவை அள்ளிக்கொண்டு வரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: ஆலயத்தில் தம்பதியராக வேலைசெய்யும் அந்தண தம்பதியருக்கு, நீண்டநாள் வியாதிக்கு- குறிப்பாக பாதம், கால்வலிக்கு நிவாரணம் செய்துகொடுங்கள். முடங்கிப்போன நிலையிலுள்ள இளம்பெண்களுக்கு உதவிசெய்யுங்கள்.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

பிறநாட்டு வியாபார வாய்ப்புகள் கிடைப்பதற்குரிய தகவல் வந்துசேரும். வீடு வாங்கும் கனவு பலிதமாகும். புது மாடல் வாகனங்கள் வாங்குவீர்கள். விவசாய இயந்திரங்கள் வாங்கக்கூடும். கல்வியில் மேன்மையுண்டு. பொறியியல், மருத்துவக் கல்லூரி சார்ந்த படிப்பு முதன்மை பெறும். உங்களில் சிலரது தாயாருக்கு ஏதோவொரு வகையில் பெருமை கிடைக்கும். இந்தத் தேதிகளில் பிறந்த குழந்தைகளின் பெற்றோர் வேலை மற்றும் வேலை உயர்வு கிடைக்கப் பெறுவர். பண விஷயங்கள் நீங்கள் நினைத்தபடி கிடைக்கும். அதுபோல நிறைய முதலீடுகளும் செய்வீர்கள். பங்கு வர்த்தகத்தில் கவனம் தேவை. தாய்மாமன் நிலை சற்று தாழ்ந்து வேறிடம் செல்லக்கூடும். அரசு விஷயங்கள் செலவுதரும். சற்று மருத்துவச் செலவும் உண்டு. மூத்த சகோதரர் சற்று தாழ்வுபெற வாய்ப்புள்ளது. திருமணம் சார்ந்து மாங்கல்யம் வாங்குவீர்கள். சுபச்செலவுகள் அதிகம் வரும். கடல்சார்ந்த ஒரு பெண்தெய்வத்தை தரிசனம் செய்வீர்கள். சிலரது கைபேசி காணாமல் போகக்கூடும். கலைஞர்கள் கடல் கடந்தும் சென்று சேவைபுரிந்து நல்ல அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொண்டு வருவர். வியாபாரம் சம்பந்தமான வெளிமாநில, வெளிநாட்டுப் பயணம் உண்டு. அடுக்குமாடிக் குடியிருப்பில் சிலர் முதலீடு செய்வீர்கள். பெண்களால் ஆதாயமும் செலவும் ஏற்படும். வாரிசுகளின் திருமணம் நிச்சயமாகும். திருமணமானவுடன் சிலர் வெளிநாடு செல்வர்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 5, 14, 23.

பரிகாரம்: ஆன்மிகப் பயணம் ஏற்பாடு செய்யும் அந்தண தம்பதிகளின் தேவையறிந்து உதவிசெய்யவும். பிற மத மனிதருக்கு- முடங்கிப்போன நிலையில் இருப்பவருக்கு உதவலாம்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் நீங்கள் நினைத்த லட்சிய எண்ணங்கள் சற்று ஆர்ப்பாட்டத்துடன் நிறைவேறும். வலிமைமிகு வாகனங்கள் வாங்குவீர்கள். பழுதான கைபேசியைக் கொடுத்துவிட்டு புதிதாக வாங்குவீர்கள். வீட்டை வெளிநாட்டு டிசைனில் கட்டுவீர்கள். பூர்வீகம் சம்பந்தமான நல்ல தகவல் வந்துசேரும். வாரிசுகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். வேலையில் சுணக்கம், சற்று பின்னடைவு ஏற்பட்டு பின்னர் சரியாகும். வேலை தேடுவோருக்கு சற்று அலைச்சலுக்குப்பின் வேலை கிடைத்துவிடும். பங்கு வர்த்தகத்தில் தகவல் தொடர்பு சம்பந்த பங்குகள் நல்ல லாபம் தேடித்தரும். நீங்கள் வழக்கமாக சாப்பிடும் மாத்திரை, மருந்துகள் சற்று குழப்பமாகி பின்னர் சரியாகும். வீட்டில் பழுதுபார்க்கும் செலவு வரும். சிலருக்கு அரசாணைமூலம் வீடு இடிக்கப்படும் சூழலும் ஏற்படலாம். வீட்டைவிட்டுப் பிரிந்துபோன சிலரது தந்தை மாதப் பிற்பகுதியில் வீடுவந்து சேருவார். தொழில் நிலையில் நன்கு முன்னேற்றம் காணலாம். அதன்பொருட்டு முதலீடு அதிகரிப்பும் ஏற்படும். ஆரோக்கியம் சம்பந்தமான ஏஜென்சி, மலர்கள் சம்பந்தமான தொழில்கள் வெகு லாபம் தரும். சிறு- குறு வாகன டீலர்ஷிப் எடுத்தவர்கள் நல்ல பலன் காண்பர். தாயார், மூத்த சகோதரியின்மூலம் பணவரவு கிடைக்கும். உங்கள் இளைய சகோதரியின் பயணம் சம்பந்தமான செலவு ஏற்படும். கலைஞர்கள் தங்கள் தொழிலில் மேன்மையடைவதால், அதன்பொருட்டு ஊடகத்துறையின் நிகழ்வில் பங்குபெறுவர். நல்ல பெண் பணியாளர்கள் கிடைப்பார்கள். அழகுப் பொருட்கள், திரைப்பட வெளியீட்டு ஒப்பந்தம் கிடைக்கும். பொழுதுபோக்குகள் புகழ் தேடித்தரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: சிறு வேலைகளில் பணிபுரியும் அந்தண தம்பதிகளுக்கு தொலைபேசி சம்பந்தமாக உதவிசெய்யவும். முடக்கப்பட்ட தந்தையை கவனிக்கவும்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் தொழிலில் நீங்கள் முற்றிலும் எதிர்பாராத நிகழ்வு நடக்க வாய்ப்புண்டு. பலருக்கு அது நன்மையாகவும். சிலருக்கு கெடுதலாகவும் அமையும். இதற்கு அவரவரின் எதிர்மறை சிந்தனைகளே காரணமாக அமையும். இந்த யோசனைகள் சில சீருடைப் பணியாளர்களை உயர்த்தியும், சிலரை தண்டனைக்குரிய இடத்துக்கு மாற்றியும் செய்யும். பணவரவு சிறப்பாக இருக்கும். சுபச்செலவு நிறையவுண்டு. கண்டிப்பாக திருமணச் செலவிருக்கும். சிலரது இளைய சகோதரர் சண்டையிட்டு எங்காவது பிரிந்துசென்று பின்னர் திரும்பிவருவார். சிலரது தொலைபேசி பழுதாகும் வாய்ப்புள்ளது. பணியாளர்கள் உங்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடும். வாரிசுகளாலும் செலவுண்டு. வாரிசுகளின் வெளிநாட்டுப் பயணச்சீட்டை மாற்றும் நிலை உருவாகி, அதனால் செலவு ஏற்படும். சிலருக்கு வேலை கிடைத்தும், அதில் சேர்வதற்கு தடை ஏற்படும். என்றாலும் பிறகு அதில் சேர்வீர்கள். சிலர் வேறு பிரிவில் மணம் முடிப்பீர்கள். மூத்த சகோதரர் பயணத்தின்போது கவனமாக இருக்கவேண்டும். கலைஞர்கள் வெற்றியின் பொருட்டு பறந்து பறந்து சம்பாதிப்பர். தொலைக்காட்சி மற்றும் ஊடகத் துறையினர் சிறிது நிலைதடுமாறி, பின்னர் சுதாரிப்பர். விவசாயிகளுக்கு மிகுந்த வேலைச்சுமை இருந்தாலும் அதற்கேற்றாற்போல லாபமும் இருக்கும். பங்கு வர்த்தகத்தில் நல்ல மேன்மை பெறுவர். சிலரது தந்தையின் நிலை, வேலை போன்றவை மிகுந்த மதிப்பு பெறும். சிலர் குலதெய்வக் கோவில் அறங்காவலராக நியமிக்கப்படுவார்கள். அரசியல்வாதிகள் சற்று இறக்கமும் பிறகு உயரிய ஏற்றமும் பெறுவர்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.

எச்சரிக்கை எண்கள்: 5, 14, 23.

பரிகாரம்: வெளிநாட்டுப் பயணச் சீட்டு விற்கும் அந்தண தம்பதிக்கு உதவுங்கள். முடங்கிப்போன சீருடைப் பணியாளர்களுக்கு உதவிசெய்யுங்கள்.

செல்: 94449 61845

om010422
இதையும் படியுங்கள்
Subscribe