1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதத்தின் முதல் பாதி நாட்கள் சற்று தைரியக் குறைவையும் முன்னேற்றத் தடையையும் தரும். மாதப் பிற்பகுதியில் மனம் தெளிவடையும். அறிவுத் தடுமாற்றம் நீங்கிவிடும். இந்த மாதத்தின் முதல்வாரம் தவிர மற்ற நாட்களில் பணவரவு சிக்கலில்லாமல் இருக்கும். குறிப்பாக ரியல் எஸ்டேட், வீட்டுத் தரகர்கள், தொலைக்காட்சியில் பணிபுரிவோர், கலைத்துறையினர் ஆகியோர் நல்ல பணப்புழக்கம் பெறுவர். இவர்களது பணவரவு அவர்களின் பெற்றோர்களை மகிழ்ச்சிப்படுத்தும். மாதப் பிற்பகுதியில் இந்த எண்களில் பிறந்த குழந்தைகளின் கல்வியார்வம் மிகும். விவசாயிகள் விளைபொருட்களை மொத்தமாக ஒப்பந்த முறையில் விற்று நல்ல லாபம் காண்பர். வீடு, வாகனம் லாபம் தரும். சிலருக்கு அவ்வப்போது அடிவயிற்றில் வலி ஏற்படும் வாய்ப்புள்ளது. மாதத்தின் முதலிரண்டு வாரங்கள் எதிரிகளிடம் சற்று விலகியிருக்கவும். வாரிசுகளால் லேசான மனக்கிலேசம் உண்டாகும். உங்கள் லட்சியம் ஈடேறவும், நல்ல லாபம் கிடைக்கவும் சற்று எதிர்மறையான வழிகளைக் கைக்கொள்ள நேரும். உங்களில் சிலருக்கு அரசு சார்ந்த அடுக்குமாடி வீடு வாங்கும் யோகமுண்டு. சில அரசு அதிகாரிகள் மாதப் பிற்பகுதியில் பதவி உயர்வு யோகம் பெறுவர். அரசு சார்ந்த சமையல் ஒப்பந்தம் கிடைக்கும். குறைந்தபட்சம் அம்மா உணவகம், கலைஞர் உணவகம் என ஏதோ ஒன்றின் தொடர்புபெறுவீர்கள். மருமகள், மருமகன் உங்களுடன் மிக அனுசரணையாக இருப்பார்கள். மேலும் சிலருக்கு மாமனார், மாமியாரும் தகுந்த நேரத்தில் உதவுவார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

Advertisment

பரிகாரம்: இந்த மாத முற்பகுதியில் உங்கள் எண்ணின் நாயகர் சரியான நிலையில் அமையவில்லை. அதனால் நிறைய விளக்கேற்றுவதும், கிறிஸ்துவ சர்ச்சுக்கு மெழுகுவர்த்தி வாங்கிக் கொடுப்பதும், வயது முதிர்ந்தவருக்கு கைபேசி சார்ந்த உதவிசெய்வதும் நல்லது. சூரிய பகவானை வணங்கவும்.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாத முற்பகுதியில் வீடு விற்கும் விஷயம், பதவி உயர்வு சம்பந்தம், வீடு மாற்றுவது, தாயார் நலன் என பல விஷயங்கள் தாமதப்படுத்தும். உங்களது முயற்சிகள் தடுமாறும். மாதப் பிற்பகுதியில் நீங்கள் எண்ணியது எண்ணியபடியே நிறைவேறும். உங்கள் இளைய சகோதரரின் காதல் விஷயம் சார்ந்து உங்கள் தந்தை அல்லது காவல் துறையிடம் வாக்குவாதம் செய்ய நேரிடும். கைபேசி தகவல் பண நஷ்டம் தரக்கூடும். வாரிசுகளின் திருமணம் சம்பந்தமாக பேசிமுடிக்க வாய்ப்புண்டு. கலைத்துறையினர், விளையாட்டு சம்பந்தம் கொண்டோர், பங்கு வர்த்தக ஈடுபாடு உடையவர்கள், பூர்வீக சொத்து விஷயம் எதிர்பார்ப்பவர்கள், வாரிசு ஏக்கம் கொண்டவர்கள் என இவர்கள் அனைவரும் மிக மேன்மையான நன்மைகளைப் பெறப் போகிறார்கள். திருமணம் கைகூடும். சிலர் உஷ்ணம் சம்பந்தமாக மருத்துவரைப் பார்க்க நேரிடும். குலதெய்வ வழிபாடு சார்ந்த பயணம் அமையும். மக்கள் சந்திப்பு வேலை கிடைக்கும். தொழில் முதலீடு உண்டு. அரசியல்வாதிகள் நினைத்தபடி ஆதாயம் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 8, 17, 26.

பரிகாரம்: மாத முற்பகுதியில் உங்களது பண விஷய நாயகர் சற்று பலமிழந்திருப்பதால், வாட்டர் கேன் போடுபவர்கள், பத்திரிகை கொடுக்கும் சிறுவர்களுக்கு முடிந்த உதவிசெய்யவும். வயதானவர்களுக்கு பயணங்களில் உதவிசெய்தல் நலம்தரும். சீர்காழி சிவனை வணங்கவும்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

Advertisment

உங்கள் வீடு, மனை விஷயம் பணம் கொண்டுவரும். வாகனம், நிலம் விற்பதிலும் பண வரவுண்டு. இந்த மாதம் எதிர்பாராத செல்வநிலை உயர்வுண்டு என்றாலும், சில சமயங்களில் பணம் களவுபோகவோ

அல்லது சிறு நஷ்டம் வரவோ வாய்ப்புள்ளது. எனவே சற்று கவனமாக இருக்கவேண்டும். சிலரது வாழ்க்கைத்துணை வங்கி சம்பந்தமான வேலை பெறுவார். உங்கள் வாரிசுகள் வேலை, வியாபாரம் பொருட்டு வெளியூர். வெளிநாடு செல்வர். பூர்வீக சொந்த பந்தங்களை சந்திக்கச் செல்வீர்கள். சிலருக்கு கணுக்காலில் வலி ஏற்படும். மருமகனுடன் சண்டை ஏற்பட்டு வெளியிடம் செல்ல நேரிடும். சிலருக்கு மறைவு வீடுகளின் சம்பந்தம் தெரிந்து, உங்கள் வீடு உங்களை வதைக்கும். அல்லது உங்கள் தந்தையின் ஏதோவொரு தகாத செயல் வீட்டை சற்று கலவரப்படுத்தும். சிலரது குடும்ப உறுப்பினர்களில் யாரோ ஒருவர் மருத்துவமனையில் இருந்தால் அவர் தற்போது வீட்டிற்குத் திரும்புவார். சிலரது மூத்த சகோதரியின் காதல் விஷயம் தெரியவரும். உங்களில் சிலர் புதிய தொழிலில் பங்குதாரர்களுடன் சேர்ந்து முதலீடு செய்வீர்கள். வெளிநாட்டு வரன் கிடைக்கும் வாய்ப்புண்டு. மூத்த உடன்பிறப்பு சம்பந்த திருமண செலவு மற்றும் அலைச்சல் உண்டு.

அரசியல்வாதிகள் சற்று நிலைதடுமாறி பின் சுதாரித்துக் கொள்வார்கள். கலைஞர்கள் வெளிநாடுசென்று சேவைசெய்வர். இந்த மாதம் சில தம்பதிகள் வேலை, தொழில், திருமணம் காரணமாக வெளிநாடு செல்வார்கள். வேலை கிடைத்தால் அது வெளியூர், வெளிநாட்டில்தான் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.

Advertisment

பரிகாரம்: இந்த மாதம் உங்கள் ஆசைகள், எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணின் நாயகர் சற்று மந்தமாக இருப்பதால், அரசியலில் அறியப்படாமல் இருக்கும்- சிரமப்படும் அடிமட்டத் தொண்டர் அல்லது சமையல் வேலைசெய்யும் முதியவருக்கு உதவி செய்யவும். இராமேஸ்வரம் சிவனை வணங்குதல் நன்று.

s

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் திருமணம் நடக்கும் வாய்ப்புண்டு. அது காதல் திருமணம், கலப்புத் திருமணம், அமைக்கப் பட்ட திருமணம், விருப்பத் திருமணம் என ஏதோவொரு விதமாக அமையும். சிலர் அரசு செலவில் அல்லது ரிஜிஸ்டர் ஆபீஸில் திருமணம் செய்வர். சிலருக்கு நண்பர்களாக சேர்ந்து மறுமணம் செய்து வைப்பார்கள். இளைய சகோதரனுடன் மனஸ்தாபம் ஏற்படும். சில தம்பதிகளுக்குள் சண்டை ஏற்பட்டு மனைவி தாய்வீடு சென்றுவிடுவார். சிலரது தந்தை கருத்து வேறு பாடு கொள்வார். சிலருக்கு வாரிசுகளுடன் தர்மயுத்தம் ஏற்படும். சிலர் சூப்பர் மார்க் கெட் அல்லது அதற்கு இணை யான வியாபாரம் ஆரம்பித்து விடுவார்கள். அரசு சார்ந்த நபர்களுடன் பஞ்சாயத்து ஏற்பட்டு பின் சமரசமாகும். அரசியல்வாதிகள் தன் அடியொற்றி வருடுபவர்களால் வெறுக்கப்படும் நிலை ஏற்படக்கூடும். சிலரது மாமியார் நிறைய உள்நாட்டுக் கலகத்தை ஏற்படுத்திவிடுவார்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.

எச்சரிக்கை எண்கள்: 5, 14, 23.

பரிகாரம்: இந்த மாதம் உங்கள் பங்குதாரர், உங்களைப் பின்பற்றுவோர் என இவை சார்ந்த நாயகர் சற்று இடர்வதால், திருமண விஷயத்தில் உதவிசெய்வதும், பிற இன, மத திருமண அமைப்பாளர்கள் கேட்கும் உதவியைச் செய்வதும் நன்று. கொடுமுடி சிவனை வணங்குவது நன்மை தரும்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் தொழிலில் அரசு விவகாரங் களின் தொல்லைகள் இருக்கும். பணம் வரும்போதே அதைவிட அதிகமான செலவும் வந்துவிடும். உங்கள் பேச்சில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. தரம்தாழ்ந்த வார்த்தைகள் முறைகெட்ட விரயங்களைக் கொண்டுவரும். இந்த விரயமென்பது பணம் சார்ந்து மட்டுமல்லாது கௌரவம், புகழ், நன்மதிப்பு, மரியாதை என எல்லாவற்றுக்கும் பங்கம் ஏற்படுத்திவிடும். தொழிற்சாலையிலுள்ள சிறுதூர வாகனங்களை முறையாகக் கையாளவும். சில கருவிகள்மூலம் தீப்பிடிக்கும் வாய்ப்பு ஏற்படும். உங்கள் அலுவலகத்தில் இரு சக்கர வாகனத்தை பத்திரமாக நிறுத்தவும்; காணாமல் போகும் வாய்ப்புண்டு. காலில் நரம்பு பிடித்து இழுக்கும்; வலி ஏற்படும். இளைய சகோதரிக்குத் திருமணம் கைகூடும். திரைப் படம், தொலைக்காட்சி போன்ற கலைசார்ந்த முதலீடு உண்டு. கலைஞர்கள் நல்ல லாபம் காண்பர். பங்கு வர்த்தகம் மகிழ்ச்சி தரும். மாணவர்கள் மறதியால் சற்று அல்லல்படுவர். சிலருக்கு பூர்வீக இடத்திலிருந்து வரன் அமையும். சிலர் கைபேசியை மாற்றுவீர்கள். உங்கள் மாமியாரால் வீண்செலவு வரும். பிற இன, மத மக்களுடன் பழகும்போதும், பண விஷயத்திலும் கவனம் தேவை. உங்களின் முயற்சி, முன்னெடுப்பு விஷயங்கள் சற்று செலவை இழுத்துவிடும். இதைக் கட்டுப்படுத்த முடியாமலும் போகலாம். சிலர் கோவில்களுக்குக் காணிக்கை செலுத்துவீர்கள். தந்தைக்கு ஆரோக்கியம் சார்ந்து ஏதேனும் வாங்கித் தருவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

பரிகாரம்: இந்த மாதம் உங்கள் விரயாதிபதி சற்று மந்தமாக இருப்பதால், பேச இயலாத- பேச்சு குழப்ப நிலையுள்ள பெரியவர்களுக்கு இயன்றதை உதவுங்கள். பிற இன, மத முதியவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுக்கவும். சங்கரன் கோவில் சிவனை வழிபடவும்.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் திருமணத்திற்குக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்குத் திருமணம் கூடிவரும். சிலர் காதல் திருமணம் செய்துகொள்ளும்படி நேரும். வாழ்க்கைத் துணை அல்லது தந்தையின்மூலம் பணப்புழக்கம் ஏற்படும். உங்களுக்கு எதிர்பாராத பரிசுகள் பல கிடைக்கும். இளைய சகோதரனுக்கு வேலைவாய்ப்பு அமையும். வீட்டுக்கடன் கைகூடும். பூர்வீகத்தில் அல்லது தற்போது வசிக்குமிடத்தில் பழைய வீடு வாங்க இயலும். உங்களது வாழ்க்கைத்துணை அல்லது வியாபார பங்குதாரரின் "புத்திசாலித் தனத்தை' சற்று தாமதமாகப் புரிந்து கொள்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு பெண்கள் விஷயமாக அவப்பெயர் ஏற்பட வாய்ப்புண்டு. அரசு அதிகாரிகள், அரசியல் வாதிகள் சற்று எச்சரிக்கையாக இருப்பது அவசியம். பதவி உயர்வு கிட்டுமா கிட்டாதா என குழப்பமான நிலையில் இருக்கும். உங்கள் ஆசைகள், எண்ணங்களின் நாயகர் சற்று மந்தநிலையில் இருப்பதால் இவ்வாறு நடக்கும். எனவே உங்கள் லட்சியங்களின் போக்கை சற்று ஆறப்போடவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: சமையல் கலைஞர்களுக்கு- குறிப்பாக அசைவ பதார்த்தங்கள் சமைப்பவர் களுக்கு தேவையைக் கேட்டறிந்து உதவுங்கள்.

காஞ்சி ஏகாம்பரேஸ்வரரை வணங்கலாம்.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

எப்போதும் எந்த விஷயத்திலும் சற்று குழப்பமும் சந்தேகமும் கொண்ட நீங்கள், இந்த மாதம் மிகவும் மனக்கிலேசம் அடைவீர்கள். குடும்பத்தினர், வாழ்க்கைத் துணை எவ்வளவு நல்லது சொன்னாலும் சிலருக்கு அது காதில் ஏறவே ஏறாது. நீங்கள் நினைப்பதே சரியாக இருக்குமென்று வாதாடுவீர்கள். ஆனால் உங்களது யோசனைகள், திட்டங்களெல்லாம் பயனற் றுப் போய்விடும். எனவே வீண் செலவும் அலைச்சலும் ஏற்படும். உயர் கல்வினர் நன்கு புரிந்துகொண்டு படித்தாலும், தேர்வெழுதும்போது தடுமாறக் கூடும். குழந்தைகள் பதில்களை மாற்றி எழுதி விடுவர். உங்களில் சிலர் அரசு தண்டனைக்கு ஆளாகக்கூடும்; எச்சரிக்கை தேவை. கோவில்களுக்குச் செல்லும்போது தடை, தாமதம் ஏற்படும். இந்த தேதிகளில் பிறந்த ஆசிரிய- பேராசிரியப் பெருமக்கள் சற்று குழப்பமடைவதால் அவப்பெயரை சந்திக்க நேரும். சேவைக் குறைபாடு ஏற்படும். இதனால் உங்கள் துறை உங்களிடம் விளக்கம் கேட்கும். உங்களது நற்செயல்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படும். வருமான வரி, சொத்து வரி போன்ற அரசுத்துறை, இம்சையும் இன்னலும் தரும். இந்தத் தேதிகளில் பிறந்த குழந்தைகளின் தாயாருக்கு வேலைக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டும். சில சுபச் செலவுகளும் சுபப் பயணங் களும் திணறச்செய்யும். சிலரது வாழ்க்கைத் துணை சற்று உடல்நலக் குறைவை சந்திப்பார்.

அதிர்ஷ்ட எண்கள்: 8, 17, 26.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

பரிகாரம்: அரசுத்துறை சார்ந்து சற்று குழப்பம் வர வாய்ப்புள்ளதால், அதன் விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வாழ்வில் தனிமரமாக- தனிமையாக இருப்பவர்களின் தேவை களைப் பூர்த்தி செய்யவும்.

திருச்சி உச்சிப்பிள்ளை யாரையும் தாயுமானவரையும் வணங்கவும்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் திருமணம் குறித்த முடிவுகளை எடுப்பீர்கள். சிலருக்கு முன்பே பார்த்து வேண்டாமென தவிர்த்த சம்பந்தமாகவும் அமையும். வியாபாரத்தி லும் முன்பு இருந்து விலகிய பங்குதாரரை சேர்த்துக்கொள்வீர் கள். சிலரது பணியாளர்கள் வேலையைவிட்டு விலகி விடுவர். அதற்குப் பணப் பிரச்சினை காரணமாக அமையும். தாயாரின் உடல்நலன் கவனிக்கப்பட வேண்டும். வீடு, வாகனம் பழுதுபார்க்கும் செலவுண்டு. சிலருக்கு மருமகள் வருவாள். சிலருக்கு மருமகளோடு சச்சரவு ஏற்படும். மிகச்சிலர் மார்புவலி அல்லது கணுக்கால் வலியால் துன்பப்பட நேரிடும். வேலை கிடைக்கும். வேலையில் பதவி உயர்வுண்டு. மாதப் பிற்பகுதியில் அரசுப்பணியை எதிர்பார்க்கலாம். இந்த மாதம் நீங்கள் தொழில் செய்யுமிடத்தில் உங்களது மேலதிகாரிகளுடன் கருத்து மோதல் ஏற்பட்டு, மாதப் பிற்பகுதியில் அது விலகும். சிலரது தொழிற்சாலையில் அரசு சோதனை அல்லது களவு போவது அல்லது அரசு தண்டனை போன்ற ஏதாவதொரு வேண்டத் தகாத நிகழ்வு நடக்கும். அரசியல் வாதிகள் தங்கள் தொகுதியில் அவமானத்தை சந்திக்கக்கூடும். வெளிநாட்டு வர்த்தகம் சற்று குளறுபடியாகும். வேலை செய்யும்போது கவனமாக இருக்கவேண்டும்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.

பரிகாரம்: உங்களது விபத்து, ஆபத்துக்குரிய எண்ணின் நாயகர் சற்று பலவீனமாக இருப்பதால் தொழில் செய்யு மிடத்தில் கவனம் தேவை. யாருக்காவது காயம் ஏற்பட்டால் உதவி செய்யவும். திருக் காளஹஸ்தி சிவனை வணங்கவும். அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு வில்வ இலைகளை வழங்கவும்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சாதாரணமாகவே சற்று கோப குணமுள்ள நீங்கள் இந்த மாதம் அதீத கோபம் கொள்ள நேரும். சிலசமயம் இந்த அதிக கோபம் சிக்கலை ஏற்படுத்தும். சிலருக்கு காதல் திருமணம் நடக்கும். மாதப் பிற்பகுதியில் வீட்டில் பார்த்து வைக்கும் திருமணம் சிறிய சலசலப்புடன் நடக்கும். பணப் பற்றாக்குறை ஏற்படும். வேறு சிலருக்கு பரிசுப் பணம் வந்துசேரும். இளைய சகோதரரால் தம்பதிகளுக் குள் பிணக்கு ஏற்படும். சிலர் அலை பேசிமூலம் கடன் விண்ணப் பிக்கும்போது இருப்பதையும் இழக்க நேரும்; எச்சரிக்கை தேவை. சிலரது நரம்புசார்ந்த நோய் குணமாகும். வேலை விஷயம்- குறிப்பாக அரசு வேலை விஷயம் மிகவும் அல்லல் படுத்தும். அரசு வேலைக்காக இந்த மாதம் யாரிடமும் பணம் கொடுக்கவேண்டாம்; ஏமாற நேரும். திரைப்படம், தொலைக் காட்சிக் கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் முடிந்த மட்டும் கையெழுத்திட வேண்டாம். புதிய முயற்சிகளை சற்று தள்ளிப்போடவும். விளையாட்டு வீரர்கள் மற்றும் குழந்தைகள் விளையாடும்போது அடிபட வாய்ப்புள்ளது; கவனம் தேவை. பங்குப் பத்திர விஷயத்தை சற்று ஆறப் போடவும். அரசியல்வாதிகளுக்கு மனம் அலைபாயும். எந்த முடிவெடுப் பது- கட்சி மாறுவது நல்லதா அல்லது கட்சி அலுவலகத்தை மாற்றினால் நன்மை நடக்குமா என பலவாறாக யோசனை தோன்றும். தயவுசெய்து இந்த மாதம் குழப்பத்திலேயே இருக்கவும். இறுதிமுடிவை எடுக்கவேண் டாம். ஒருசிலர் தொழில் விஷயமாக வெளியூர், வெளிநாட்டுத் தகவல் பரிமாற்றம் கொள்வர். உங்களுக்குத் தோன்றும் எதிர்மறை சிந்தனைகளை செயல்படுத்தவேண்டாம்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: உங்கள் சிந்தனை, யோசனை, புத்திசாலித்தனம், திட்டம் ஆகியவைபற்றிக் கூறும் எண்ணின் நாயகர் சற்றே சோர்ந்து காணப்படுவதால், யோசனைகளை செயல்படுத்த வேண்டாம். அறிவுக் குறைபாடு உடையவர்களின் தேவையைக் கேட்டறிந்து உதவி செய்யவும். சிதம்பரம் சிவபெருமானை வழிபடவும்.

செல்: 94449 61845