மேஷம்

கடந்த மாதம் வரை மேஷ ராசிநாதன் செவ்வாய் 10-ல் உச்சமாக இருந்தார். அக்டோபர் 28-ஆம் தேதிமுதல் 11-ஆம் இடமான கும்பத்திற்கு மாறியிருக்கிறார். 11-ஆம் இடம் லாப ஸ்தானம், ஜெய ஸ்தானம். எனவே உங்களது செயல்பாடுகள், காரியங் கள் யாவும் வெற்றிகரமாக நிறைவேறும். 2-க்குடைய சுக்கிரன் 7-ல் ஆட்சியாக இருக் கிறார். கணவன்- மனைவிக்குள் ஒற்று மையும் அன்பும் அதிகரிக்கும். கணவனால் மனைவிக்கும், மனைவியால் கணவனுக்கும் அனுகூலமும் ஆதரவும் அமையும். 8-ல் உள்ள குரு 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால் பொரு ளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை எதிர் பார்த்தபடியே வந்துசேரும். சொந்த வீடில் லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பூமி, வீடு, மனை சம்பந்தமான முயற்சிகள் கைகூடும். சிலர் பழைய வீட்டை வாங்கிப் பராமரிக்கலாம். சிலர் புதிய வீடு கட்டும் முயற்சியையும் மேற்கொள்ளலாம். நவம்பர் 13-ல் 3-க்குடைய புதன் மீண்டும் 7-ல் வக்ரம் பெறுவதால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிட்டும்.

ரிஷபம்

monthrasi

Advertisment

ரிஷப ராசிக்கு அட்டமத்துச்சனி நடக்கிறது. சனியால் ஏற்படும் தொல்லைகளை குருவின் பார்வையால் சமாளிக்கலாம். ராசிநாதன் சுக்கிரன் வக்ரகதியில் செயல்படு கிறார். சிலருக்கு வாகனம் சம்பந்தமான கடன்கள் ஏற்படலாம். சிலர் புதிய வாகனம் வாங்க வங்கிக் கடனை நாடலாம். சிலருக்கு வருமானப் பற்றாக்குறை காரணமாக வாங்கும் கடன்களின் சுமை அதிகரித்துக்கொண்டே போகும். திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லும். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குரு பார்வை நேரடியாக உங்கள் ராசிக்குக் கிடைப்பதால் மலைபோல வரும் துயர் பனிபோல விலகும். 3-ல் உள்ள ராகு எதையும் தைரியத்தோடு எதிர்கொள்ளும் சூழலையும் உருவாக்கும். உடன்பிறந்த சகோதர- சகோதரி வகையில் சற்று விட்டுக்கொடுத்து அனுசரித்துச்செல்வதால் மனக்கசப்பையும் சச்சரவையும் தவிர்க்கலாம். 2-க்குடைய புதன் மாத முற்பகுதிவரை விருச்சிகத்தில் இருக்கிறார். பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்களின் ஆதரவும் கூடும்.

மிதுனம்

மிதுன ராசிநாதன் புதன் மாத முற்பகுதி வரை 6-ல் மறைகிறார். என்றாலும் "மறைந்த புதன் நிறைந்த தனம்' என்பதுபோல, நல்ல பலன்களை அள்ளித்தருவார். நவம்பர் 13-ஆம் தேதி புதன் மீண்டும் துலா ராசிக்குச் செல்கிறார். உங்கள் முயற்சிகளில் தளர்ச்சி அகலும். விலகிச்சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து ஒன்றுசேருவர். 11-க்குடைய செவ்வாய் 9-ல் நின்று 4-ஆமிடத்தைப் பார்க்கிறார். உடல் ஆரோக் கியம் சீராக இயங்கும். 2-ல் ராகு, 8-ல் கேது- அலைச்சலை சற்று அதிகமாக்குவர். அதனால் சில நேரம் சோர்வு உண்டாகலாம். தொழில் துறையில் சில அதிரடி மாற்றங்களை நிகழ்த்த லாம். பொருளாதாரத்தில் பற்றாக்குறை நிலவாது என்றாலும் மன நிம்மதிக்குறைவு இருக்கும். சில காரியங்களை அரைகுறையாகவே செய்யும் சூழல் உண்டாகும். 7-ல் சனி- மனைவியின் உடல்நலத்தில் சிறுசிறு தொந்தரவுகள் வந்துவிலகும். தன்வந்திரி வழிபாடு நடத்தலாம். பிள்ளைகள் வகையில் நல்ல பலன்கள் உண்டாகும்.

Advertisment

கடகம்

கடக ராசிக்கு குருவின் 9-ஆம் பார்வை கிடைக்கிறது. எனவே உன்னதப் பலன்களைச் சந்திக்கலாம். கடந்த மாதம் பூர்த்தியாகாமல் பாதியில் நின்ற காரியங்கள் இந்த மாதம் முழுமையடையும். தொட்டது துலங்கும். தொடர் கதையாக வந்த கடன் சுமை குறையும். தொழில்வளர்ச்சிக்குத் துணையாக இருப்பவர்கள் கைகொடுத்து உதவுவார்கள். சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். கௌரவப் பதவிகள் கிடைக்கும். கணிசமான தொகை கைகளில் புரண்டுகொண்டே இருக்கும். இதுவரை எத்தனையோ திட்டங்கள் தீட்டி செயல்படுத்த முடியவில்லை என்று கவலைப் பட்ட உங்களுக்கு இந்த மாதம் அரசு ஒத்து ழைப்போடு கூடுதலாகக் கிடைத்து மகிழ்ச்சியடையப் போகிறீர்கள். உங்கள் ராசிக்கு 7, 8-க்குடைய சனி 6-ல் இருப்பது ஒருவகையில் விபரீத ராஜயோகத்தின் அடிப்படையில் எதிர்பாராத நன்மைகள் உருவாகும். உதிரி வருமானங்கள் பெருகும். மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சுபமங்கள நிகழ்வுகள் உண்டாகும். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். 9-க்குடைய குரு 5-ல் நின்று 9-ஆம் பார்வையாக ராசியைப் பார்ப்பதால் குலதெய்வ, இஷ்ட தெய்வப் பிரார்த்தனையைப் பூர்த்தி செய்யலாம். சொத்து சம்பந்தமான வில்லங்கங்கள் விலகி சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிநாதன் சூரியன் மாத முற் பகுதிவரை நீசமாக 3-ல் இருக்கிறார். 3-க்குடைய சுக்கிரன் 3-ல் ஆட்சியாக இருப் பதால் சூரியனுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படு கிறது. 7-ல் செவ்வாய் நின்று ராசியைப் பார்க் கிறார். தொழிலில் வளர்ச்சி மேலோங்கும். நண்பர்களின் நம்பிக்கைக்குப் பாத்திர மாவீர்கள். வாங்கிய பணத்தைக் குறிப்பிட்ட நேரத்தில் தர இயலாமல் திண்டாடிய உங்களுக்கு வாக்குநாணயத்தைக் காப்பாற்றவும், நாணயமாக நடந்துகொள்ளும் வாய்ப்பும் இம்மாதம் அமையும். 2-க்குடைய புதன் நவம்பர் 13-ல் 3-ல் வக்ரம் பெறுகிறார். இந்த நேரத்தில் பணப்பற்றாக்குறை நிலவலாம். என்றாலும் 3-க்குடைய சுக்கிரன் ஆட்சியாக இருப்பதால் அவற்றை சமாளிக்கும் சூழலும் அமையும். 5-ல் உள்ள சனி பிள்ளைகள் வகையில் மந்தமான பலன்களையே நிகழ்த்துவார். பிள்ளைகளின் திருமண முயற்சி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட காரியங்களில் தாமதமான பலன்களை சந்திக்க நேரும். 6-ல் கேது- எதிரிகள் வழியில் இருந்த தொல்லைகள் விலகும்.

கன்னி

கன்னி ராசிநாதன் புதன் 3-ல் இருக்கிறார். ராசிநாதன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்நே ரத்தில் எடுத்த காரி யங்கள் வெற்றியாக அமையும். சகோதர வகையில் சகாயம் உண்டாகும். பணிபுரியு மிடத்தில் ஆதரவும் ஏற்படும். பகை விலகும். உங்கள் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். 8-க்கு அதிபதியான செவ்வாய் 6-ல் சஞ்சாரம். "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம்' என்பதற்கேற்ப, திட்ட மிடாமல் செய்யும் காரியங்களில்கூட வெற்றி கிடைக்கும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். உற்றார்- உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவார்கள். கடந்த மாதம் நடைபெறாமல் இழுபறியாக இருந்த காரியங் கள் இந்த மாதம் நிறைவேறும். நவம்பர் 13-ல் புதன் மீண்டும் துலா ராசிக்கு வக்ரகதியில் சஞ்சாரம் செய்கிறார். கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் பெறும் பொழுது யோகத்தைத் தருவார். தன ஸ்தானாதிபதி சுக்கிரனோடு புதன் இணை கிறார். சுக்கிரன் 2-ல் ஆட்சி. பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். தேவைகள் பூர்த்தி யாகும். 5-ல் கேது- பிள்ளைகள் வகையில் சில சங்கடங்களை உருவாக்குவார். அவர்களால் பிரச்சினைகளையும் சந்திக்கநேரும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம்.

துலாம்

துலா ராசிநாதன் சுக்கிரன் ஆட்சியாக இருக்கிறார். 6-க்குடைய குரு 2-ல் இருக்கிறார். பலமுறை கூறியதுபோல் 2-க்குடையவர் 6-ல் இருந்தால் உங்கள் பணம் அந்நியர் கையில் புரளும். 6-க்குடையவர் 2-ல் இருந்தால் அந்நியர் பணம் உங்கள் கையில் புரளும். எனவே பொருளாதாரத்தைப் பொருத்தளவில் இம்மாதம் நிறைவு ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் நல்ல முறையில் செயல்படும். கல்வி வளர்ச்சி, கலைவளர்ச்சி போன்றவை சிறப்பாக இருக்கும். இல்லறம் நல்லறமாக விளங்கும். தொழில் அமைப்பிற்காக சிலர் வங்கிக் கடனை மேற்கொள்ளலாம். தொழில், வாழ்க்கை இரண்டும் சீராக இருக்கும். குடும்ப முன்னேற்றம் கருதி எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். இதுவரை கடுமையாக முயற்சித்தும் நடை பெறாத காரியங்கள் இனி நடைபெறும். பணிபுரியும் இடத்தில் உண்டான பிரச்சினைகள் விலகும். சக ஊழியர் களிடையே ஒற்றுமை ஏற்படும். பிள்ளைகளின் திருமண முயற்சி களில் இருக்கும் தடை அகலும். 5-ல் செவ்வாய். 3-ல் இருக்கும் சனி அவரைப் பார்க்கிறார். சில பிள்ளைகள் காதல் அல்லது கலப்புத் திருமணத்தை சந்திக்கும் சூழல் அமையும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு ஏழரைச்சனியில் கடை சிக்கூறு பாதச்சனி நடக்கிறது. ராசிநாதன் செவ்வாய் 4-ல் சஞ்சாரம். தேக சுகத்தில் தெளிவு கிடைக்கும். கடன் சுமை குறையும். உறவினர்களிடையே ஒற்றுமை நிலவும். மாதப் பிற்பகுதியில் 11-க்குடைய புதன் 12-ல் வக்ரம் பெறுகிறார். வீண்விரயங்களைத் தவிர்க்க கவனம் தேவை. குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு முன்வருவீர்கள். 2-ல் உள்ள சனி பொருளாதாரத்தில் பற்றாக்குறை நிலைகளை உண்டாக்கும். தேவையற்ற வீண்வாக்கு வாதங்களைத் தவிர்த்து சற்று பொறு மையுடனும் அமைதியுடனும் நடந்துகொள்வது அவசியம். வாக்குச்சனி கோப்பைக் குலைக்கும் என்பதுபோல வார்த்தைகளில் கவனம் மிக அவசியம். சிலர் புதிய வாகனம் வாங்கலாம். பூர்வீகச் சொத்து சம்பந்தமான வில்லங்கம், விவகாரங்களில் சாதகமான முடிவுகளை எதிர்பார்க்கலாம். சிலர் பழைய வீட்டை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கலாம். விரயத்தை சுபவிரயமாக மாற்றிக்கொள்ளும் யுக்திகளைக் கையாளுங்கள். சந்திர தசை அல்லது சந்திர புக்தி நடப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

தனுசு

தனுசு ராசிநாதன் குரு 12-ல் மறைவு. ஜென்மத்தில் சனி. அதனால் எதிலும் சிந்தித்து செயல்படுவது சிறந்தது. கொடுக்கல்- வாங்கலில், வரவு- செலவுகளில் பெருந் தொகையை ஈடுபடுத்தாமல் சிறுஅளவில் செயல்படுவது நல்லது. நவம்பர் 13-ல் புதன் வக்ரமாகி மீண்டும் துலா ராசிக்குச் செல்கிறார். அந்த வக்ர இயக்கம் நன்மை தரும் விதத்திலேயே அமையும். தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கும். பூர்வீகச் சொத்துத் தகராறு அகலும். வியாபார விரோதங்கள் அகலும். வீடு மாற்றங்கள், இடமாற் றங்கள் ஏற்படலாம். 3-க்குடைய சனி ஜென்மத்தில். 3-ல் செவ்வாய். அதற்கு சனி பார்வை. சிலர் காதல் திருமணம், கலப்புத் திருமணத்தில் ஈடுபடலாம். 4-ஆம் இடத்தைப் பார்க்கும் குரு பூமி, வீடு, மனை சம்பந்தமான யோகங்களைத் தருவார். அதற்கான கடன்களும் வாங்க நேரிடும். சகோதரவகையில் விட்டுக்கொடுத்து- அனுசரித்துச் செல்வதனால் வீண்வாக்கு வாதம், மனச்சங்கடம், சச்சரவு ஆகியவற் றைத் தவிர்க்கலாம். "விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை' என்ற தத்துவப்படி நடந்துகொள்ளும் முயற்சியைக் கடைப் பிடியுங்கள்.

மகரம்

மகர ராசிநாதன் சனி ஏழரைச்சனியில் விரயச்சனியாக இருக்கிறார். சனிக்கு வீடு கொடுத்த குரு 11-ல் இருக்கிறார். 11- லாப ஸ்தானம், ஜெய ஸ்தானம். எனவே வரவும் செலவும் உங்களுக்குச் சமமாகவே இருக்கும். வருமானம் வந்துகொண்டே இருக்கும் என்றாலும், ஜென் மத்தில் கேது இருப்பதால் மனக்குழப்பங்களும் அடிக்கடி சங்கடமான சூழ்நிலைகளும் உருவாகும். 7-ல் ராகு. கணவன்- மனைவிக்குள் சிறுசிறு பூசல்கள் தோன்றி மறையும். "ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்' என்று அன்றே வள்ளுவர் கூறியிருக் கிறார். ஊடலுக்குப்பின் கூடல் இருந்தால் வாடல் தேடலாகிவிடும். 2-க்குடைய சனி 2-ஆம் இடத்தைப் பார்க்கிறார். தனவரவு மகிழ்ச்சி யளிக்கும். 2-ல் செவ்வாய்; அதைப் பார்க்கும் சனி. எனவே திருமண வயதை ஒட்டியவர்கள் (ஆண்- பெண்களுக்கிடையே) சிலர் காதல் வயப் படலாம். அல்லது சிலர் கலப்புத் திருமணம் செய்யலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் ஏற்படும். திருமணமாகி வாரிசு இல்லையே என்று ஏங்கியவர்களுக்கு புத்திர தோஷம் விலகும். சிலர் வீடு கட்டும் யோகத்தை அடையலாம்.

கும்பம்

கும்ப ராசிநாதன் சனி 11-ல் இருக்கிறார். கும்ப ராசியைப் பார்க்கிறார். ராசிநாதன் தன் ராசியைத் தானே பார்ப்பது சிறப்பு. உங்கள் செயல்பாடுகள், திறமை, கீர்த்தி, புகழ் எல்லாம் சிறந்து விளங்கும். சனிக்கு வீடு கொடுத்த குரு 10-ல் இருக்கிறார். அங்கிருந்து 2-ஆம் இடத்தைப் பார்க்கிறார். பொருளாதாரத்தில் தனவரவு தாராளமாக இருக்கும். சங்கடமாக இருக்குமோ என்று சஞ்சலப்பட்ட உள்ளங் களுக்கு சந்தோஷம் ஏற்படுமளவு எல்லாம் இனிதாக நிறைவேறும். குடும்பத்தில் இருந்த சச்சரவுகள் விலகி ஒற்றுமை உண்டாகும். அதற்கு நீங்களும் ஒருவகையில் விட்டுக் கொடுத்து அனுசரித்துச் செல்லப் பழகிக் கொள்ள வேண்டும். யாரையும் துச்சமென தூக்கியெறிந்துப் பேசுவதை விலக்கி, அன்போடு அரவணைக்கக் கற்றுக்கொள்ளுங்கள். தாய்வழி ஆதரவு திருப்திகரமாக இருக்கும். பயணங்கள் அதிகமாகும். இடம் விற்பனை யில் இருக்கும் தடைகள் அகலும். பூர்வீகச் சொத்துகளை விற்றுவிட்டு புதிய சொத்து களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். 6-ல் ராகு. நோய் நொடி, வைத்தியச்செலவு விலகும். சத்ருக்கள் விலகுவர். 3-க்குடைய செவ்வாய் ஜென்ம ராசியில் சஞ்சாரம். சகோதர வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் மறையும்.

மீனம்

மீன ராசிநாதன் குரு 9-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். எனவே உங்கள் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் முன்னேற்றம் திருப்திகரமாக இருக்கும். தொகை வரவு இருமடங்காக உயரும். விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பிவந்து இணைவர். கலக்கங்கள் அகலும். தொட்டது துலங்கும். குருவின் பார்வை 3-ஆம் இடம், 5-ஆமிடம் ஆகியவற்றுக்கும் கிடைப்பதால் சகோதரவகையில் இருக்கும் சண்டை சச்சரவுகள் சமாதானமாகும். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்வும் ஏற்படும். சுக்கிரன் 6-ல் ஆட்சியாக, சூரியனும் இணைந்திருப்பதால் விபரீத ராஜயோக அடிப்படையில் சில முயற்சிகள் திடீரென கைகூடலாம். அரசுவழி அனுகூலங்கள் உண்டு. அரசாங்கம் மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். 2-க்குடைய செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்திற்குத் தேவையான சில அத்தியா வசிய- ஆடம்பரப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பதன்மூலம் வீண்விரயங்களைத் தவிர்க்கலாம். பூர்வீகச் சொத்துகளைப் பங்கு பிரிக்கும் யோகம் மேலோங்கும். புதிய வாகனம் வாங்கும் முயற்சியும் கைகூடும்.