நவம்பர் மாத ராசி பலன்கள் ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

/idhalgal/om/november-month-rasi-palan-0

மேஷம்

மேஷ ராசிநாதன் செவ்வாய் ராசிக்கு 12-ல் (மீனத்தில்) வக்ரகதியாக செயல்படுகிறார். நவம்பர் 15-ல் வக்ரநிவர்த்தி பெறுகிறார். ராசிநாதன் செவ்வாய் 12-ல் மறைவதால் செயல்பாடுகளில் தேக்கம், தாமதம் போன்றவற்றை சந்திக்கநேரும். இந்த மாதம் 15-ஆம் தேதி குரு 10-ஆமிடமான மகரத்திற்குப் பெயர்ச்சியாகிறார். 9-க்குரிய குரு 10-க்கு வருவதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படும். 10-க்குரிய சனி 9-ல் இருப்பதாலும் தர்மகர்மாதிபதி யோகம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. 10-ல் குரு நீசமெனினும், சனியும் குருவும் பரிவர்த்தனை என்பதால் குருவுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. குரு 2, 4, 6-ஆமிடங்களைப் பார்க்கிறார். குடும்பத்தில் முன்னேற்றம், தாய்வழியில் அனுகூலம், தேக சுகத்தில் சௌக்கியம், பணிபுரியுமிடத்தில் பாராட்டு போன்றவற்றை சந்திக்கநேரும். 6-ஆமிடத்தை குரு பார்ப்பதால் சுபக்கடன் உண்டாகும். சிலருக்கு தொழில்வகையில் மாற்றங்களும் ஏற்றங்களும் ஏற்படலாம். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.

ரிஷிபம்

ரிஷிப ராசிநாதன் சுக்கிரன் 5-ல் நீசம்பெற்றாலும் ஆட்சிபெற்ற புதனோடு இருப்பதால், சுக்கிரன் நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். பொருளாதார உயர்வு, புதிய தொழில் தொடங்க வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகத்திலுள்ளவர்களுக்கு எதிர்பாராத சலுகைகளும் கிடைக்கும். இம்மாதம் 15-ஆம் தேதி குரு மகரத்திற்குப் பெயர்ச்சியாகிறார். 8-ல் மறைந்த குரு இப்போது மிக நல்ல இடமான 9-ஆமிடத்துக்கு மாறுகிறார்; ராசியைப் பார்க்கிறார். 9-ல் குரு நீசமெனினும் நீசபங்க ராஜயோகமாவதால் அச்சம்பெறத் தேவையில்லை. ஜென்ம ராகு அலைக்கழிப்பைத் தந்தாலும் குரு பார்வை அதைச் சரிசெய்து முன்னேற்றச் சூழலை உருவாக்கித் தரும். இல்லங்களில் சுபகாரிய நடவடிக்கைகள் நடைபெறும். சகோதரவழியில் சகாயம் உண்டாகும். காலபைரவரை வழிபடவும். மிளகு தீபமேற்றலாம்.

மிதுனம்

மிதுன ராசிநாதன் புதன் 4-ஆம் தேதிமுதல் துலா ராசிக்கு மாறுகிறார்; 5-ல் திரிகோணம் பெறுகிறார்; 3-க்குரிய சூரியன் சம்பந்தம். புதன் திரிகோணம் பெறுவதால் ஆரோக்கியம் சீராகும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். நண்பர்கள்வகையில் நல்லுதவிகளும் கிடைக்கப்பெறும்.

மேஷம்

மேஷ ராசிநாதன் செவ்வாய் ராசிக்கு 12-ல் (மீனத்தில்) வக்ரகதியாக செயல்படுகிறார். நவம்பர் 15-ல் வக்ரநிவர்த்தி பெறுகிறார். ராசிநாதன் செவ்வாய் 12-ல் மறைவதால் செயல்பாடுகளில் தேக்கம், தாமதம் போன்றவற்றை சந்திக்கநேரும். இந்த மாதம் 15-ஆம் தேதி குரு 10-ஆமிடமான மகரத்திற்குப் பெயர்ச்சியாகிறார். 9-க்குரிய குரு 10-க்கு வருவதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படும். 10-க்குரிய சனி 9-ல் இருப்பதாலும் தர்மகர்மாதிபதி யோகம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. 10-ல் குரு நீசமெனினும், சனியும் குருவும் பரிவர்த்தனை என்பதால் குருவுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. குரு 2, 4, 6-ஆமிடங்களைப் பார்க்கிறார். குடும்பத்தில் முன்னேற்றம், தாய்வழியில் அனுகூலம், தேக சுகத்தில் சௌக்கியம், பணிபுரியுமிடத்தில் பாராட்டு போன்றவற்றை சந்திக்கநேரும். 6-ஆமிடத்தை குரு பார்ப்பதால் சுபக்கடன் உண்டாகும். சிலருக்கு தொழில்வகையில் மாற்றங்களும் ஏற்றங்களும் ஏற்படலாம். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.

ரிஷிபம்

ரிஷிப ராசிநாதன் சுக்கிரன் 5-ல் நீசம்பெற்றாலும் ஆட்சிபெற்ற புதனோடு இருப்பதால், சுக்கிரன் நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். பொருளாதார உயர்வு, புதிய தொழில் தொடங்க வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகத்திலுள்ளவர்களுக்கு எதிர்பாராத சலுகைகளும் கிடைக்கும். இம்மாதம் 15-ஆம் தேதி குரு மகரத்திற்குப் பெயர்ச்சியாகிறார். 8-ல் மறைந்த குரு இப்போது மிக நல்ல இடமான 9-ஆமிடத்துக்கு மாறுகிறார்; ராசியைப் பார்க்கிறார். 9-ல் குரு நீசமெனினும் நீசபங்க ராஜயோகமாவதால் அச்சம்பெறத் தேவையில்லை. ஜென்ம ராகு அலைக்கழிப்பைத் தந்தாலும் குரு பார்வை அதைச் சரிசெய்து முன்னேற்றச் சூழலை உருவாக்கித் தரும். இல்லங்களில் சுபகாரிய நடவடிக்கைகள் நடைபெறும். சகோதரவழியில் சகாயம் உண்டாகும். காலபைரவரை வழிபடவும். மிளகு தீபமேற்றலாம்.

மிதுனம்

மிதுன ராசிநாதன் புதன் 4-ஆம் தேதிமுதல் துலா ராசிக்கு மாறுகிறார்; 5-ல் திரிகோணம் பெறுகிறார்; 3-க்குரிய சூரியன் சம்பந்தம். புதன் திரிகோணம் பெறுவதால் ஆரோக்கியம் சீராகும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். நண்பர்கள்வகையில் நல்லுதவிகளும் கிடைக்கப்பெறும். அரசு மற்றும் அரசியல்சார்ந்த துறையினருக்கு நல்ல முன்னேற்றகரமான சூழல் தென்படும். இம்மாதம் 15-ஆம் தேதி குரு மகரத்துக்கு மாறுகிறார். மகரம் அவருக்கு நீச வீடு. எனினும் குருவுக்கு வீடுகொடுத்த சனி தனுசு ராசியான குரு வீட்டிலிருக்கிறார். பரிவர்த்தனையாக இருப்பதால் குருவுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. குரு 2, 4, 12-ஆமிடங்களைப் பார்க்கிறார். வீட்டுப் பராமரிப்பில் ஆர்வம் அதிகமாகும். தாய்வழி ஆதரவுண்டு. உத்தியோகம் சம்பந்தமாக வெளியூர் அல்லது வெளிமாநிலப் பயணங்கள் ஏற்படலாம். லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.

கடகம்

இம்மாதம் 15-ஆம் தேதிமுதல் தனுசுவில் இருக்கும் குரு உங்கள் ராசிக்கு 7-ஆமிடமான மகரத்துக்கு மாறுகிறார். மகரம் குருவுக்கு நீச வீடு. அங்கு வரும் குரு நீசபங்கம் பெற்று உங்கள் ஜென்ம ராசியையும், 3, 11-ஆமிடங்களையும் பார்க்கிறார். உங்களின் திறமை, செயல்பாடு, ஆற்றல் எல்லாம் சிறப் பாக விளங்கும். உத்தியோகம், தொழில் போன்றவற்றில் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றிபெறும். வேறு வேலைக்கு முயற்சி செய்துகொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலையும் அமையும். சகோதர வகையிலுள்ள மனக்கசப்புகள் மாறி, ஒற்றுமையும் நட்புறவும் உண்டாகும். செய்தொழிலில் சில நல்ல மாற்றங்கள் முன்னேற்றங்களாக நிகழும். பிள்ளைகளால் நன்மதிப்பும் பாராட்டும் கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். லட்சுமி நாராயணரை வழிபடவும்.

சிம்மம்

சிம்ம ராசிநாதன் சூரியன் 3-ல் நீசமாக இருக்கிறார். 9-க்குரிய செவ்வாய் 8-ல் மறைவு. வீண்விரயம், சில காரியங்களில் ஏமாற்றம் போன்றவற்றை சந்திக்கநேரும். எனினும், 15-ஆம் தேதிவரை குரு 5-ல் நின்று ராசியைப் பார்ப்பதால் வாய்ப்புகள் தள்ளிப்போகலாமே தவிர, தட்டிப் பறிக்கப்படாது. தொழில்வளம் நன்றாக இருக்கும். 15-ஆம் தேதிமுதல் குரு 6-ஆமிடமான மகரத்துக்கு மாறி நீசபங்கம் பெறுகிறார். அவர் 2, 10, 12-ஆமிடங்களைப் பார்க்கிறார். கைநழுவிய காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபமங்கள காரியங்களால் சுபவிரயமும் உண்டாகும். தொழில்துறையில் புதிய முதலீடு அல்லது புதிய பங்குதாரர்களால் முயற்சி செயல்வடிவம் பெறும். தொழிலில் இருக்கும் குறுக்கீடுகளும் அகலும். நண்பர்களின் ஒத்துழைப்போடு செல்வநிலை உயரும். உத்தியோகத்திலுள்ளவர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும். விநாயகருக்கு செம்பருத்திப்பூ மாலை சாற்றி வழிபடவும்.

கன்னி

இம்மாதம் 15-ஆம் தேதிமுதல் 4-ல் இருக்கும் குரு 5-ஆமிடத்துக்கு மாறுகிறார். ஜென்ம ராசி, 9, 11-ஆமிடங்களைப் பார்க்கிறார். இதுவரை நீங்கள் அனுபவித்த கஷ்டங்கள் விலகும். இன்னல்கள் மறையும். உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். உத்தியோகத்திலுள்ளவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தால், மீண்டும் பணியில்சேர அழைப்புகள் வரலாம். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். திடீரென வரும் புதிய பங்குதாரர்களால் தொழிலில் வளர்ச்சி மேம்படும். பிள்ளை கள்வகையில் சுப மங்கள காரியங்களைச் சந்திக்கலாம். தகப்ப னார்வழியிலுள்ள மனக்கிலேசங்கள் மாறி இணக்கம் உண்டாகும். பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சினைகளில் சுமுகத்தீர்வும், பங்கு பாகப்பிரிவினையும் முறையாக வந்துசேரும். தேக ஆரோக்கியத்தில் மருத்துவச் செலவுகள் விலகும். அறுவை சிகிச்சைக்கான சூழ்நிலையும் மாறி, அறுவை சிகிச்சை இல்லாமலேயே குணமாகும். சக்கரத்தாழ்வாரையும் தன்வந்திரியையும் வழிபடவும்.

துலாம்

துலா ராசிநாதன் சுக்கிரன் 12-ல் நீசமாக இருக்கிறார். சுக்கிரனுக்கு வீடுகொடுத்த புதன் 4-ஆம் தேதிமுதல் துலா ராசிக்கு மாறுகிறார். இதனால், இருவருக்கும் பரிவர்த்தனை யோகம் அமைவதால், சுக்கிரன் நீசம்தெளிந்து நீசபங்க ராஜயோகமடைகி றார். பொருளாதாரத்தில் திருப்தி ஏற்படும். சுயதொழில் தொடங்கமுனைவோருக்கு அதற்குண்டான வாய்ப்புகள் அமையும். திட்டமிட்ட காரியங்கள் செயல்வடிவம் பெறும். 15-ஆம் தேதிமுதல் 3-ல் உள்ள குரு 4-ஆமிடத்துக்கு மாறுகிறார்; 8, 10, 12-ஆமிடங்களைப் பார்க்கிறார். தொழில்துறையில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய வாய்ப்புகள் வரும். சிலருக்கு வீடு மாற்றம் ஏற்பட இடமுண்டு அல்லது சொந்ந வீட்டிலிருப்போர் அதை சீர்திருத்தம் செய்து விரயங்களை சந்திக்கலாம். விரயங்கள் ஏற்பட இடமுண்டு எனினும், அதை சுபவிரயமாக மாற்றிக்கொள்ளலாம். வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை வழிபடவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 5-ல் வக்ரகதியாக செயல்படுகிறார். பூர்வீக சொத்துகளிலுள்ள பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். சுமுகமான தீர்வுகள் உண்டாகும். 15-ஆம் தேதிமுதல் செவ்வாய் வக்ரநிவர்த்தியடைகிறார். உத்தியோகத்திலுள்ளவர்களுக்குத் தாமதப்பட்டுவரும் ஊதிய உயர்வு கிடைக்கும். புதிய உத்தியோகத்துக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வேலை வந்துசேரும். இம்மாதம் 15-ஆம் தேதிமுதல் குரு 3-ஆமிடத்துக்குப் பெயர்ச்சியாகிறார். 3-ஆமிடம் மறைவு ஸ்தானமெனினும், குருவுக்கு வீடுகொடுத்த சனி குரு வீட்டிலிருப்பதால் குருவுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. திருமணமாகாதவர்களுக்குத் திருமணயோகம் உண்டாகும். கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். தகப்பனார்வகையில் இருந்துவரும் கருத்துவேறுபாடுகள் மறைந்து, உறவு நன்றாக இருக்கும். செய்தொழில் முயற்சிகள் வெற்றிபெறும். முருகப்பெருமானையும் காலபைரவரையும் வழிபடவும்.

தனுசு

தனுசு ராசிக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடைபெறுகிறது. டிசம்பர், 2020-ல் சனிப்பெயர்ச்சியாகிறது. இம்மாதம் 15-ஆம் தேதிமுதல் ராசிநாதன் குரு 2-க்கு மாறுகிறார். ராசிநாதன் 2-ல் நீசமடைந்தாலும் நீசபங்கம் பெறுகிறார். குடும்பத்திலுள்ள குழப்பங்களுக்கு ஒரு தீர்வு ஏற்படும். அவ்வப்பொழுது பொருளாதாரத்தில் செலவினங்களை சந்திக்கும் சூழ்நிலைகளும் வரும். தேக சுகத்தில் தொந்தரவுகள் வந்து விலகும். கணவன்- மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் சென்றால் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். திடீர் விரயங்களும் ஏற்படும். உடன்பிறப்பு கள்வகையில் சங்கடமும் சஞ்சலமும் ஏற்பட இடமுண்டு. 10-ஆமிடத்தைப் பார்க்கும் குரு தொழில்துறையில் சில நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவார். அரசு உத்தியோகத்திலுள்ளவர்களுக்கு இடமாற்றத் துடன்கூடிய பதவி உயர்வு கிடைக்கும். வரவும் செலவும் சமமாக அமையும். சனிக்கிழமைதோறும் பைரவருக்கு மிளகு தீபமேற்றி வழிபடவும்.

மகரம்

மகர ராசிநாதன் சனி 12-ல் இருக்கி றார். ஏழரைச்சனியில் விரயச்சனி நடக்கிறது. எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு காரியத்தை முடிக்க எடுக்கும் முயற்சிகள் தாமதமாகும். நேரமும் பொருளும் விரயமாகும். வரவைக் காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். பொறுமையும் நிதானமும் தேவைப்படும். 9-க்குரிய புதன் 4-ஆம் தேதிமுதல் 10-ஆமிடத்துக்கு மாறுகி றார். தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. எனவே, மேற்சொன்ன செலவுகளைக் கட்டுக்குள் வைக்கும் யுக்திகளும் தோன்றும். 15-ஆம் தேதிமுதல் ஜென்ம ராசிக்கு குரு மாறுகிறார். 5, 7, 9-ஆமிடங்களைப் பார்க்கிறார். பிள்ளைகள்வகையில் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் திருமண முயற்சிகள் கைகூடும். குரு மகரத்தில் நீசமெனினும் நீசபங்கமடைவதால், சுபகாரிய நிகழ்வுகள் தானாகவே அமையும். சனிக்கிழமை ஆஞ்சனேயரை வழிபடவும்.

கும்பம்

கும்ப ராசிநாதன் சனி 11-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். சனிக்கு வீடுகொடுத்த குரு 15-ஆம் தேதிமுதல் 12-ஆமிடத்துக்கு பெயர்ச்சியாகிறார். குருவுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. 4-ல் உள்ள ராகு தேகசுகம், தாய்சுகம் ஆகியவற்றில் மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தினா லும், குரு பார்வை 4-ஆமிடத்துக்குக் கிடைப்பதால் செலவுகள் ஏற்பட்டாலும் ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்புகளுக்கு இடமில்லை. அறுவை சிகிச்சை போன்ற சூழல்கள் வராது. 6-ஆமிடத்தைப் பார்க்கும் குரு உத்தியோகத்தில் சத்ருகளை ஏற்படுத்துவார். சிலர் குடியிருப்பு சம்பந்தமான செலவுகளை சந்திக்கலாம். சிலர் சொந்த வீடுகட்டும் முயற்சியில் இறங் கலாம். அதனால் வங்கிக்கடன் அல்லது தனியார் கடன் பெறலாம். வெளிநாட்டு வேலைக்கு முயல்வோருக்கு ஜனவரிமுதல் அந்த வாய்ப்புகள் செயல்படும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்க லாம். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

மீனம்

மீன ராசிநாதன் குரு 11-க்கு மாறுகிறார். இம்மாதம் 15-ஆம் தேதி பெயர்ச்சியாகிறார்; நீசபங்கம் பெறுகிறார்; 3, 5, 7-ஆமிடங்களைப் பார்க்கிறார். சகோதர வகையில் சகாயம் நிகழும். தொழில்துறை சம்பந்தமாக தைரியமான முடிவுகளைத் துணிச்சலுடன் எடுத்து செயல்படுத்தலாம். தன்னம்பிக்கையும் அதிகமாகும். செய்தொழிலில் முயற்சிகள் வெற்றியாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனவருத்தம் விலகி நல்லுறவுண்டாகும். உங்களின் கருத்துக்கு பிள்ளைகளும் செவிசாய்ப்பார்கள். குடும்பத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். மதிப்பு, மரியாதை, செல்வாக்கு உண்டாகும். திருமண வயதைக் கடந்து, திருமணத்துக்காகக் காத்திருக்கும் ஆண்- பெண்களுக்கு சுபச்செய்திகள் வந்துசேரும். வாழ்க்கைத்துணையின் உத்தியோகம் சம்பந்தமாக ஏதேனும் முயற்சிகள் எடுத்திருந்தால், அதில் நற்பலன் கிடைக்கும். சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சூரிய பகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும்.

om011120
இதையும் படியுங்கள்
Subscribe