மேஷம்

மேஷ ராசிக்கு கடந்த அக்டோபர் மாதம் 28-ஆம் தேதி குரு 9-ல் மாறி ஆட்சிபெற்றுள்ளார். 9-ஆம் இடம் பாக்கிய ஸ்தானம்; தெய்வீக அருள் நிலையை உணர்த்தும் ஸ்தானம். அது தேவ குருவின் வீடும்கூட. அங்கு அவர் ஆட்சி. அதனால் குருவருளும் திருவருளும் உங்களுக்குப் பரிபூரணமாகக் கிடைக்கும். 10-க்குடைய சனி 9-ல். எனவே தர்மகர்மாதிபதி யோகமும் ஒருபுறம் செயல்படும். குடும்பத்தில் நிலவும் சிக்கலும் பிரச்சினைகளும் விலகும். பணத்தட்டுப்பாடு மறையும். தொழில்துறையில் தேக்க நிலையும் இருக்காது. கடந்த மாதம் உங்கள் பண நெருக்கடியைப் பார்த்து விலகியோடியவர்கள், உறவினர்கள் எல்லாம் இந்த மாதம் உங்களது வளர்ச்சியைப் பார்த்து ஒட்டி உறவாட வருவார்கள். அவர்களை ஏற்பதும் ஒதுக்குவதும் உங்கள் மனப்பக்குவத்தைப் பொருத்தது. உத்தியோகம் உயரும்; செல்வாக்கு செழிக்கும். உங்கள் உழைப்புக்கு கைமேல் பலனாக பணம் வந்து குவியும். சகோதரவழியில் சுபகாரியங்கள் நடைபெறும். அதனால் சுபச்செலவுகளும் உண்டாகும்.

ரிஷபம்

கடந்த காலத்தில் ரிஷப ராசிக்கு 7-ல் இருந்த குரு போன மாதம் அக்டோபர் 28-ல் 8-ஆம் இடமான தனுசுக்கு மாறி ஆட்சிபெறுகிறார். ஏற்கெனவே ரிஷப ராசிக்கு அட்டமத்துச்சனி நடந்துகொண்டிருக்கிறது. என்றாலும் ரிஷப ராசிக்கு சனி ராஜயோகாதிபதி என்பதால் பெரிய பாதகத்தைச் செய்யவில்லை என்று சொல்லலாம். இப்போது 8-ல் மாறியுள்ள குரு 12-ஆம் இடம், 2-ஆம் இடம், 4-ஆம் இடங்களைப் பார்க்கிறார். 2-ல் இருக்கும் ராகு குடும்பத்திலும் பொருளாதாரத்திலும் சில குழப்பங்களை உண்டுபண்ணினா லும், இனி 8-ஆமிடத்து குரு 2-ஐப் பார்ப்பதால் சிக்கல், சிரமங்கள் குறையும். தேக ஆரோக்கியம் தெளிவாகும். கல்வி மேன்மை உண்டாகும். சிலர் வாகனமாற்றம் செய்யலாம். பழைய வாகனத் தைக் கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்கும் அமைப்பும் உண்டாகும். 12-ஆம் இடத்தைப் பார்க்கும் குரு அவசியமான- தவிர்க்கமுடியாத விரயச் செலவைத் தரலாம். திடீர்ப் பயணமும் உருவாகும். என்றா லும் 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால் அந்த செலவுகளை சமாளிக்கும்வகையில் வருமானத்தையும் தருவார். ஆயுள், ஆரோக்கியம் திருப்தியாக இருக்கும்.

Advertisment

மிதுனம்

மிதுன ராசிக்கு 6-ல் இருந்த குரு கடந்த மாதம் 28-ஆம் தேதிமுதல் 7-ல் மாறி உங்கள் ராசியைப் பார்க்கிறார். ஒரு ஜாதகத்தில் ராசிக்கோ லக்னத்திற்கோ குரு பார்வை இருந்தால், அந்த ராசிக்காரர் வாழ்வில் எப்படியும் எதிர்நீச்சல் போட்டு சமாளித்துக் கரை சேருவார். எனவே இப்போது உங்கள் ராசியை குரு பார்ப்ப தால் திறமை, செயல்பாடு, கீர்த்தி எல்லாம் நிறைவாகச் செயல்படும். திருமண வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆண்- பெண்களுக்குத் திருமணம் கைகூடும். செல்வாக்கும், சொல்வாக்கும் பெருகும். அந்தஸ்தும் கௌரவமும், மதிப்பும் மரியாதையும் உயரும். "சோம்பேறி, உதவாக்கரை' என்று உங்களை விமர்சித்தவர்கள் இனிமேல் நீங்கள் "கெட்டிக்காரர், சாமர்த்தியசாலி−' என்று பாராட்டும் யோகமும் உண்டாகும். 11-ஆம் இடத்தைப் பார்க்கும் குரு உங்கள் காரியங்களை வெற்றியாக்குவார். மூத்த சகோதரர்வகையில் நிலவும் கருத்து வேறுபாடு விலகி ஒற்றுமையுணர்வு மேலோங்கும். உபய களஸ்திரஸ்தானம் என்பதால் சிலர் மறுமணம் செய்யும் அமைப்பும் ஏற்படலாம்.

கடகம்

Advertisment

rr

கடக ராசிக்கு 5-ல் இருந்த குரு கடந்த மாதம் 28-ஆம் தேதிமுதல் 6-ஆம் இடத்துக்கு மாறியிருக்கிறார். 6-ஆம் இடத்துக்குரியவரே குருதான் என்பதால், அங்கு வரும் அவர் கெடுதல் செய்யமாட்டார் என்றும் நம்பலாம். 6-ல் இருக்கும் குரு 10-ஆம் இடம், 12-ஆம் இடம், 2-ஆமிடம் ஆகியவற்றைப் பார்க்கிறார். தொழில் யோகம், வேலை யோகம், உத்தியோக யோகம் அமையும். சிலர் உண்மையாகவும் நேர்மையாகவும் உழைத்துக்கொடுத்தாலும், நிர்வாகம் அதை மதிக்காமல் வெளியே அனுப்பினாலும் அதற்காகக் கலங்காமல் இருப்பீர்கள். "யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க' என்று தத்துவப்பாடல் பாடி நீங்களும் வெளிவருவீர்கள். 2-ஆம் இடத்தைப் பார்க்கும் குரு சுப முதலீடு, லாப முதலீடு, தன வரவு ஆகிய பலன்களைத் தருவார். புதிய தொழில் ஆரம்பிக்கலாம். அல்லது நிறுத்திவைத்திருந்த தொழிலை மீண்டும் தொடங்கி லாபம் பெறலாம். தொழில் சம்பந்தமான கடனும் உருவாகும். ஆரோக்கியம் தெளிவாகும். பிணிபீடைகள் விலகும். உணவுக் கட்டுப்பாடு தேவை.

சிம்மம்

< சிம்ம ராசிககு 4-ல் இருந்த குரு கடந்த மாதம் 28-ஆம் தேதிமுதல் 5-ஆம் இடத்துக்கு மாறி உங்கள் ராசியைப் பார்க்கிறார். 5-ஆம் இடம் திட்டம், மனது, செயல்பாடு ஆகியவற்றைக் குறிக்கும். அங்கு ஆட்சிபெறும் குரு உங்களது கனவுகளையும் திட்டங்களையும் நிறைவேற்றுவார். புத்திர வகையில் நன்மதிப்பும் பாராட்டும் பெறலாம். 5-ஆம் இடம் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களிலும் நன்மையான- அற்புதமான பலன்களைச் செய்வார். திருமணமாகி பல வருடம் வாரிசில்லாமல் எதிர்பார்த்துக் காத்து ஏங்கியவர்களுக்கு வாரிசு யோகம் உண்டாகும். 9-ஆம் இடத்தைப் பார்க்கும் குரு பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சினைகள், வில்லங்கம், விவகாரம் இவற்றில் சுமுகமான தீர்வுகளை ஏற்படுத்துவார். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம். 11-ஆம் இடத்தைப் பார்க்கும் குரு சத்ருஜெயம்- போட்டி, பொறாமைகளை வெல்லலாம். வெற்றிமேல் வெற்றி உண்டாகும். மக்கட்பேறு, மகிழ்ச்சி, உண்மையான- விசுவாசமான வேலையாட்கள் அமைதல், மந்திர உபதேசம் கிடைத்தல் ஆகிய நற்பலன்கள் உண்டாகும்.

கன்னி

கன்னி ராசிக்கு கடந்த மாதம் 28-ஆம் தேதிமுதல் 4-ஆம் இடத்தில் குரு சஞ்சரிக்கி றார். 3-ல் இருந்த குரு 10-ஆம் இடமான மிதுனத்துக்கு 6-ல் மறைவென்பதால் தொழில்துறையில் கஷ்டம், கவலை, சிலர் வெளியூர் வேலைக்குச் சென்றாலும் பிடிக்காமல் மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பிய நிலை எல்லாம் நடந்தது. இனி 4-ல் இருக்கும் குரு 8-ஆம் இடம், 10-ஆம் இடம், 12-ஆம் இடங்களைப் பார்க்கிறார். 12-ஆம் இடத்தைப் பார்க்கும் குருவால். வரக்கூடிய வருமானத்தில் பெரும்பங்கு கடனுக்கும் வட்டிக்கும் கொடுக்கவேண்டியுள்ளதே என்ற கவலை ஏற்பட்டாலும், 10-ஆம் இடத்தைப் பார்க்கும் குரு அவற்றை சமாளிக்க தொழில்துறையில் வருமானத் தைப் பெருக்குவார். எந்தப் பிரச்சினை வந்தாலும் அந்தப் பிரச்சினையை சமாளித்துவிடலாம். கௌரவத்துக்கு எந்த பாதிப்பும் வராது. ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் யோகமும் லாபமும் உண்டாகும். தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வைத்தியச் செலவுகள் விலகும். குடும்ப ஒற்றுமையும் நன்றாக இருக்கும்.

துலாம்

துலா ராசிக்கு 2-ல் இருந்த குரு கடந்த மாதம் 28-ஆம் தேதிமுதல் 3-ஆம் இடத்துக்கு மாறியிருக்கிறார். 2-ல் குரு இருந்தபோது 10-ஆம் இடத்தைப் பார்த்த காரணத்தால் தொழில் கெடவில்லை; வேலை பறிபோகவில்லை; உத்தியோகமும் இயங்கிக் கொண்டிருந்தது. என்றாலும் வருமானத்திற்கு பெரிய அளவில் இடமும் தரவில்லை. இப்போது 3-ல் மாறியுள்ள குரு 7-ஆமிடம், 9-ஆமிடம், 11-ஆமிடம் ஆகியவற்றைப் பார்க்கிறார். 3-ஆமிடம் தைரிய வீரிய சகோதர ஸ்தானம். குரு உங்களுக்கு தைரியத்தையும் நம்பிக்கையையும் தருவார். 7-ஆமிடத்தைப் பார்க்கும் குரு திருமணத்தடையை விலக்கி திருமண சுபகாரியத்தை நடத்திவைப்பார். தம்பதிகளுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமையும் இணக்கமும் உருவாகும். தெய்வ அனுகூலம் உண்டாகும். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். யாத்திரைகள் பூர்த்தியாகும். தொழில்துறையில் லாபங்கள் பெருகும். முன்னேற்றமும் திருப்தியும் நிலவும். சகோதரவழியில் சகாயமும் கிடைக்கும்.

விருச்சிகம்

உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்த குரு கடந்த மாதம் 28-ஆம் தேதிமுதல் 2-ஆமிடத்துக்கு மாறி ஆட்சியாக உள்ளார். 2-ஆம் இடம் மிகமிக நல்ல இடம். 2-ல் உள்ள குரு 6-ஆமிடம், 8-ஆமிடம், 10-ஆமிடங்களைப் பார்க்கிறார். 2-ல் உள்ள குரு குடும்பத்தில் நிம்மதி தருவார். பொருளாதாரப் பற்றாக்குறைகளை சரிசெய்வார். என்றாலும் 2-ல் சனி இருப்பதால், செய−ல் பொறுமையையும் பேச்சில் நிதானத்தையும் கடைப்பிடிப்பது மிகமிக அவசியம். "வாக்குச்சனி கோப்பைக் குலைக்கும்' என்பது பழமொழி. 6-ஆம் இடத்தைப் பார்க்கும் குரு கடன், போட்டி, எதிரி, நோய், வைத்தியச் செலவுகளை ஏற்படுத்துவார். என்றாலும் சில நன்மைகளும் உண்டாகும். 8-ஐப் பார்க்கும் குரு கற்பனைக் கவலைகளை உண்டாக்கலாம். உங்கள் பேருக்கு எதிரிகள் களங்கம் ஏற்படுத்த முயலலாம். ஆனால் அதுவே உங்கள் பெருமையைப் பறைசாற்றும். புதிய தொழில் முயற்சிகளும் ஆர்டர்களும் தேடிவரும். தொழில் வருமானம் சிறப்பாக அமையும்.

தனுசு

உங்கள் ராசிக்கு 12-ல் இருந்த குரு கடந்தமாதம் 28-ஆம் தேதிமுதல் ஜென்மத்தில் மாறி ஆட்சிபெறுகிறார். ஜென்மத்தில் குரு ஆட்சி என்பதாலும், அவருடைய வீடு என்பதாலும் அங்கிருக்கும் குரு சிக்கலை ஏற்படுத்தமாட்டார். குரு 5, 7, 9 ஆகிய சுப ஸ்தானங்களைப் பார்க்கிறார். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு உருவாகும். அறிவாற்றலும் சாமர்த்தியமும் வேகத்தோடு வெளிப்படும். புகழ், கீர்த்தி, கௌரவம், அந்தஸ்து எல்லாம் உயரும். புத்திரகாரகன் புத்திர ஸ்தானத்தைப் பார்ப்பதால் புத்திர சோகமும் தோஷமும் விலகும். புத்திர பாக்கியம் உண்டாகும். வாரிசு உள்ளவர்கள் வாரிசுகளால் பெருமையடையலாம். எண்ணங்கள் ஈடேறும். திட்டங்கள் கைகூடும். மனதில் மகிழ்ச்சியும் திருப்தியும் ஏற்படும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணத்தடை விலகும். திருமணம் கைகூடும். கணவர் அல்லது மனைவி பெயரில் தொழில் ஆரம்பிக்கலாம். தகப்பனார்வழி சொத்துப் பிரச்சினைகள் நல்லமுடிவுக்கு வரலாம். தெய்வ அருளும் அனுகூலமும் உண்டாகும்.

மகரம்

மகர ராசிக்கு 11-ல் இருந்த குரு கடந்த மாதம் 28-ஆம் தேதிமுதல் விரயஸ்தானமான 12-ஆம் இடத்துக்கு மாறியுள்ளார். 12-ல் இருக்கும் குரு இடமாற்றம், சுபவிரயம், வீடு மாற்றம் போன்றவற்றை ஏற்படுத்துவார். பூமி, வீடு, வாகனம் சம்பந்தமான சுபச்செலவுகள் உண்டாகும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு ஏற்படும். மேற்படிப்பு சம்பந்தமான முயற்சிகள் கைகூடும். படிப்பில் நிலவும் தடைகள் விலகி பூர்த்தி பெறும். தாய்வகையிலும் ஆரோக்கியம் பெருகும். முன்னேற்றம் உண்டாகும். 6-ஆம் இடத்தைப் பார்க்கும் குரு தவிர்க்கமுடியாத செலவுகளால் கடன் வாங்கும் நிலையை ஏற்படுத்துவார். கடன்வாங்கும்போது தராதரம் அறிந்து வாங்குதல் நல்லது. 8-ஆம் இடத்தை குரு பார்க்கிறார். விபத்து, கண்டம் அல்லது அதற்குச் சமமான அபகீர்த்தி, அவதூறு சிலருக்கு ஏற்படலாம். திடீர் அதிர்ஷ்டமும் ஏற்படலாம். தெய்வ வழிபாடுமூலம் துன்பங்களி−ருந்து விடுபடும் வழிகளையும் தேடலாம்.

கும்பம்

கடந்த ஒரு வருடம் 10-ல் இருந்த குரு போன மாதம் 28-ஆம் தேதிமுதல் உங்கள் ராசிக்கு 11-ஆமிடமான தனுசு வில் ஆட்சிபெறுகிறார். 11-ஆம் இடம் அற்புதமான இடம். 11-ஆம் இடத்து குரு தொழில்துறையில் லாபத்தையும், போட்டி, பொறாமைகளை சமாளிக்கும் திறனையும் தருவார். சத்ரு ஜெயம் உண்டாகும். உத்தியோகத்தில் உயர்வுநிலை பெறும் அமைப்பும் யோகமும் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளிலும் காரியங்களிலும் "வெற்றி' என்ற தாரக மந்திரம் மட்டுமே ஒலி−க்கும். 3-ஆமிடம் சகோதர ஸ்தானம்; தைரிய வீரிய பராக்கிரம ஸ்தானம். எதிர்காலம் உண்டா? இல்லையா? இனிமையான வாழ்க்கை அமையுமா என்று கவலைப்பட்டவர்களுக்கு தைரியமும் நம்பிக்கையும் உருவாகும். சகோதர- சகோதரிவழியில் ஒற்றுமை உண்டாகும். சகாயமும் ஒத்தாசையும் கிடைக்கும். 5-ஆம் இடத்தைப் பார்ப்பதால் நீண்டகால திட்டங்கள் நிறைவேறும். மகிழ்ச்சி உண்டாகும். 7-ஆமிடத்தைப் பார்க்கும் குரு திருமண நிகழ்வுகளை நடத்தித் தருவார். கணவன்- மனைவி ஒற்றுமையும் பலப்படும்.

மீனம்

கடந்த ஒரு வருடமாக 9-ல் இருந்த குரு போன மாதம் 28-ஆம் தேதிமுதல் 10-ஆம் இடத்துக்கு மாறியுளளார். "பத்திலே ஈசனார் தலையோட்டிலே இரந்துண்டது' என்பது பாடல். ஆனால் இங்கு 10-ஆம் இடம் அவரது சொந்த வீடு என்பதா லும், ஆட்சி என்பதாலும் சந்தேகப் படத் தேவையில்லை. தொழில்துறையில் புதிய அணுகுமுறைகளைக் கையாளலாம். புதிய தொழில் ஒப்பந்தங்களும் கையெழுத் தாகும். 10-ஆமிடத்து குரு 2-ஆமிடம், 4-ஆமிடம், 6-ஆமிடத்தைப் பார்க்கி றார். தாயார் சுகம், தன் சுகம், உயர்கல்வி யோகம், புதுமனை, வாகன யோகம் எல்லாம் சிறப்பாக அமையும். தொழில் அபிவிருத்திக்கும், வீடு, மனை, வாகன யோகத்துக்கும் கடன் வாங்கலாம். கடன் இல்லாமலி−ருந்தால் நோய் நொடி, வைத்தியச் செலவுகளை சந்திக்கநேரும். 2-ஆமிடத் தைப் பார்க்கும் குரு வாக்கு, தனம், குடும்பம் இவற்றில் நன்மையான பலனைத் தருவார். பொருளாதாரப் பற்றாக்குறை விலகும். தன வரவும் பெருகும். செலவுகளைச் சமாளிக்க பணவரவு வரும்.