Advertisment

நிகரில்லா வளம் தந்தருளும் நெய்க்குப்பை நிமலன்! -கோவை ஆறுமுகம்

/idhalgal/om/neikuppai-nimalan-source-wealth-coimbatore-arumugam

"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்திவ் வுலகு.'

-திருவள்ளுவர்

உலகில் உள்ளவர்களில் யார் பெரியவர்? யார் சிறியவர் என்பதை பிறந்த தேதியை வைத்து சொல்லிவிட முடியும். ஆனால் யார் நீண்டநாள் வாழ்வார்கள், யார் முதலில் இறப்பார்கள் என்று பிறந்த தேதியை வைத்தோ, வேறெந்த முறையிலோ யாரும் முன்கூட்டி கணிக்கமுடியாது என்பதுதான் மனித வாழ்வின் ரகசியம். இதைத்தான் வள்ளுவர் நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம் என்கிறார்.

Advertisment

மகத நாட்டின் நதிக்கரையில் இருந்த காட்டில் தவம்செய்து வந்தார் உத்தமராமபுத்திரன் எனும் முனிவர். தவப்பயனால் அவருக்கு பறக்கும் சக்தி கிடைத்தது. அதன்மூலம் தினமும் மகத மன்னரின் அரண்மனைக்கு பகல் 12.00 மணியளவில் பறந்து செல்வார் முனிவர்.

ஆகாய மார்க்கமாக வருபவரை அரண்மனை வாசலில் நின்று வரவேற்று உள்ளே அழைத்து முனிவருக்கு உணவளித்து வழியனுப்பி மகிழ்வார் அரசர். முனிவரும் பழையபடி பறந்து தன் இருப்பிடம் செல்வார்.

ss

Advertisment

ஒருநாள் முனிவர் வரும் நேரத்தில் அலுவல் காரண மாக அரசர், வெளியே செல்லவேண்டி இருந்தது. அதனால் முனிவரை வரவேற்று உபசரித்து உணவிடும் பணியை பொறுப்பான பெண்மணி ஒருவரிடம் ஒப்படைத்து வெளியே சென்றார். வழக்கப்படி வந்தார் முனிவர். மன்னரால் நியமிக்கப்பட்ட பெண் முனிவரை வரவேற்று அரண்மனை உள்ளே அழைத்துச் சென்று ஆசனத்தில் அமரவைத்து உபசரித்தார்.

பெண்மணியின் இனிய குரலும் வரவேற்று உபசரித்த விதமும் அழகும் முனிவரைக் கவர்ந் தன. ஒரு சில விநாடிகள் அப்பெண்மணியைப் பற்றி நினைக்கத் துவங்கினார் முனிவர்.

அவருக்கு பலவிதமான உணவு வகைகளைப் பரிவோடு பரிமாறினார் பெண்மணி. உண்டு முடித்து விடைபெற்ற முனிவர் அரண்மனை வாசலை அடைந்தார்.

வழக்கபடி ஆகாயத்தில் பறக்க முயல்கை யில் முனிவரால் முடியவில்லை. காரணம் அரண்மனையில் உபசரித்த பெண்மணியைப் பற்றி சில விநாடிகள் மனதை செலுத்தியதால், முனிவரின் தவ ஆற்றல் குறைந்து பறக்கும் சக்தியும் போய்விட்டது.

கடுத்தவம் செய்து ககன (ஆகாய)த்தில் பறக் கும் ஆற்றல் பெற்ற முனிவரின் நிலையே அது வென்றால், கண்களில் படும் பொருட்கள் அனைத்திலும் மனதை பறிகொடுக்கும் நம் நிலை?

பட்டாம்பூச்சியைபோல் பல இடங்களி லும் சிறகடித்துப் பறந்து மகிழ்ச்சியோடு திரிந்துகொண்டிருந்த நம்மை ஏதோ ஒரு நோய் கட்டிப்போட்டுவிட்டது. இந்த இக்கட்டி லிருந்து விலக, விடுவிக்க இறைவனை வேண்டுவோம்; மனதை இறைவனிடம் சமர்ப்பிப்போம்; இன்னல்கள் விலகும்.

ஆற்றின் கரையோரம் இரண்டு ஆலமரங் கள் வளர்ந்து கிளை பரப்பி இருந்தன.

அங்கு பறந்து வந்தது ஒரு குருவி. அது முதல் ஆலமரத்திடம் "உன் கிளையில் கூடுகட்டி குஞ்சு பொரிக்க அனுமதி தருவாயா....'' என்று கேட்டது. அதெல்லாம் முடியாது என்று மறத்துவிட்டது முதல் ஆலமரம்.

வருந்திய குருவி, அடுத்த ஆலமரத்திடம் சென்றது. தன் நிலையை எடுத்துக்கூறி உதவ வேண்டியது. மிகுந்த கனிவுடன், "நண்பா... இதென்ன பிரமாதம்? எவ்வளவு காலம் வேண்டுமானாலும் என் கிளையில் தங்கிக்கொள்...'' என்று கூறியது.

மகிழ்ச்சியுடன் கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சும் பொரித்தது குருவி. ஒரு நாள். காட் டாற்று வெள்ளம் கரைபுரண்டு பாய்ந்தது.

அலை புரண்ட வெள்ளம் முதல் ஆலமரத்தை இழுத்துச் சென்றது. இதைக் கண்டதும், "எனக்கு தங்க இடம் கொடுக்காததால்தான், உனக்கு இந்த கதி...' என ஏளனமாகக் கூறியது குருவி.

ss

தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட ஆலமரம் மிகவும் மென்மையாக, "குருவி நண்பா.... என் வேர்களின் பலமின்மை பற்றி நான் ஏற்கெனவே தெரிந்திருந்தேன். காட்டாற்று வெள்ளம் பாய்ந்தால், சுலபமாக அடித்துச் சென்றுவிடும் என்பதையும் அற

"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்திவ் வுலகு.'

-திருவள்ளுவர்

உலகில் உள்ளவர்களில் யார் பெரியவர்? யார் சிறியவர் என்பதை பிறந்த தேதியை வைத்து சொல்லிவிட முடியும். ஆனால் யார் நீண்டநாள் வாழ்வார்கள், யார் முதலில் இறப்பார்கள் என்று பிறந்த தேதியை வைத்தோ, வேறெந்த முறையிலோ யாரும் முன்கூட்டி கணிக்கமுடியாது என்பதுதான் மனித வாழ்வின் ரகசியம். இதைத்தான் வள்ளுவர் நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம் என்கிறார்.

Advertisment

மகத நாட்டின் நதிக்கரையில் இருந்த காட்டில் தவம்செய்து வந்தார் உத்தமராமபுத்திரன் எனும் முனிவர். தவப்பயனால் அவருக்கு பறக்கும் சக்தி கிடைத்தது. அதன்மூலம் தினமும் மகத மன்னரின் அரண்மனைக்கு பகல் 12.00 மணியளவில் பறந்து செல்வார் முனிவர்.

ஆகாய மார்க்கமாக வருபவரை அரண்மனை வாசலில் நின்று வரவேற்று உள்ளே அழைத்து முனிவருக்கு உணவளித்து வழியனுப்பி மகிழ்வார் அரசர். முனிவரும் பழையபடி பறந்து தன் இருப்பிடம் செல்வார்.

ss

Advertisment

ஒருநாள் முனிவர் வரும் நேரத்தில் அலுவல் காரண மாக அரசர், வெளியே செல்லவேண்டி இருந்தது. அதனால் முனிவரை வரவேற்று உபசரித்து உணவிடும் பணியை பொறுப்பான பெண்மணி ஒருவரிடம் ஒப்படைத்து வெளியே சென்றார். வழக்கப்படி வந்தார் முனிவர். மன்னரால் நியமிக்கப்பட்ட பெண் முனிவரை வரவேற்று அரண்மனை உள்ளே அழைத்துச் சென்று ஆசனத்தில் அமரவைத்து உபசரித்தார்.

பெண்மணியின் இனிய குரலும் வரவேற்று உபசரித்த விதமும் அழகும் முனிவரைக் கவர்ந் தன. ஒரு சில விநாடிகள் அப்பெண்மணியைப் பற்றி நினைக்கத் துவங்கினார் முனிவர்.

அவருக்கு பலவிதமான உணவு வகைகளைப் பரிவோடு பரிமாறினார் பெண்மணி. உண்டு முடித்து விடைபெற்ற முனிவர் அரண்மனை வாசலை அடைந்தார்.

வழக்கபடி ஆகாயத்தில் பறக்க முயல்கை யில் முனிவரால் முடியவில்லை. காரணம் அரண்மனையில் உபசரித்த பெண்மணியைப் பற்றி சில விநாடிகள் மனதை செலுத்தியதால், முனிவரின் தவ ஆற்றல் குறைந்து பறக்கும் சக்தியும் போய்விட்டது.

கடுத்தவம் செய்து ககன (ஆகாய)த்தில் பறக் கும் ஆற்றல் பெற்ற முனிவரின் நிலையே அது வென்றால், கண்களில் படும் பொருட்கள் அனைத்திலும் மனதை பறிகொடுக்கும் நம் நிலை?

பட்டாம்பூச்சியைபோல் பல இடங்களி லும் சிறகடித்துப் பறந்து மகிழ்ச்சியோடு திரிந்துகொண்டிருந்த நம்மை ஏதோ ஒரு நோய் கட்டிப்போட்டுவிட்டது. இந்த இக்கட்டி லிருந்து விலக, விடுவிக்க இறைவனை வேண்டுவோம்; மனதை இறைவனிடம் சமர்ப்பிப்போம்; இன்னல்கள் விலகும்.

ஆற்றின் கரையோரம் இரண்டு ஆலமரங் கள் வளர்ந்து கிளை பரப்பி இருந்தன.

அங்கு பறந்து வந்தது ஒரு குருவி. அது முதல் ஆலமரத்திடம் "உன் கிளையில் கூடுகட்டி குஞ்சு பொரிக்க அனுமதி தருவாயா....'' என்று கேட்டது. அதெல்லாம் முடியாது என்று மறத்துவிட்டது முதல் ஆலமரம்.

வருந்திய குருவி, அடுத்த ஆலமரத்திடம் சென்றது. தன் நிலையை எடுத்துக்கூறி உதவ வேண்டியது. மிகுந்த கனிவுடன், "நண்பா... இதென்ன பிரமாதம்? எவ்வளவு காலம் வேண்டுமானாலும் என் கிளையில் தங்கிக்கொள்...'' என்று கூறியது.

மகிழ்ச்சியுடன் கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சும் பொரித்தது குருவி. ஒரு நாள். காட் டாற்று வெள்ளம் கரைபுரண்டு பாய்ந்தது.

அலை புரண்ட வெள்ளம் முதல் ஆலமரத்தை இழுத்துச் சென்றது. இதைக் கண்டதும், "எனக்கு தங்க இடம் கொடுக்காததால்தான், உனக்கு இந்த கதி...' என ஏளனமாகக் கூறியது குருவி.

ss

தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட ஆலமரம் மிகவும் மென்மையாக, "குருவி நண்பா.... என் வேர்களின் பலமின்மை பற்றி நான் ஏற்கெனவே தெரிந்திருந்தேன். காட்டாற்று வெள்ளம் பாய்ந்தால், சுலபமாக அடித்துச் சென்றுவிடும் என்பதையும் அறிந்திருந்தேன்....

இதுபற்றி தெரிந்திருந்தும் என் கிளையில் உன்னை கூடுகட்ட அனுமதித்திருந்தால், அது உன் வாழ்வை கடுமையாக பாதித்திருக்கும். காட்டாற்று வெள்ளம் உன் குஞ்சுகளை அடித்து சென்றிருக்கும். இது தெரிந்துதான் என் கிளையில் கூடுகட்ட உன்னை அனுமதிக்க வில்லை. புரிந்ததா...' என்றது. ஆலமரத்தின் கருணை உள்ளத்தைப் புரிந்துகொள்ளத் தவறியதை எண்ணி மன்னிப்பு கேட்டது குருவி. எந்த செயலிலும் உண்மை நிலையைப் புரிந்துகொள்ள முயலவேண்டும்.

முனிவரைப்போல் சில விநாடிகள் சிந்தனை யைச் சிதறவிட்டு தன் நிலையறியாமலும், ஆலமரத்தை தவறாக எண்ணிய குருவியைப் போல் உண்மை நிலையைப் புரியாமலும் வாழ்பவர்களின் இன்னல்களை விலக்கி, அவர்களது வாழ்வில் சந்தோஷத்தை வரவழைத்து வளப்படுத்துகின்ற அற்புதமானதொரு திருத்தலம்தான் நெய்க்குப்பை ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோவில்.

இறைவன்: ஸ்ரீசுந்தரேஸ்வரர்

இறைவி: சௌந்தர நாயகி

விசேஷமூர்த்தி: சூரிய பகவான்

விநாயகர்: மும்மூர்த்தி விநாயகர்

புராணப் பெயர்: நெய்க்கூபம்

ஊர்: நெய்க்குப்பை, பந்த(ணை) நல்லூர்.

தீர்த்தம்: சூரிய தீர்த்தம்

தலவிருட்சம்: பவளமல்லி

சுமார் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த தும், தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்களில் காவிரி வடகரை வைப்புத்தலமாகவும், சூரியபகவானின் சாபம் நீங்கப்பெற்ற திருத்தலமாகவும், மூர்த்தி, தலம் தீர்த்தம் எனும் முப்பெரும் சிறப்புக்களுடன் இன்னும் பல்வேறு சிறப்புக்களைப் பெற்றதொரு திருத்தலம்தான் நெய்க்குப்பை ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலயம்.

தொண்டர் தொழுதேத்தும் சோதி ஏற்றார்

துளங்கா மணி முடியார் தூயநீற்றார்

இண்டைச் சடைமுடியார் ஈமஞ்சூழ்ந்த

இடு பிணக்காட்டு ஆடலார் ஏமந்தோறும்

அண்டத்துக் கப்புறுத்தார் ஆதியானார்

அருக்கனாயார் அழலா யடியார் மேலைப்

பண்டை வினையறுப்பார் பைங்க

ணேற்றார் பலியேற்றார் பந்தணை நல்லூராரே

-அப்பர்

நாடாகட்டும்; காடாகட்டும்; பள்ளமாகட் டும்; மேடாகட்டும்- எங்கு நல்லவர்களாக மக்கள் வாழ்கின்றனரோ, அவ்விடமே நன்மை செய்யும் நிலனாம்; அத்தகைய நிலனே! நீ வாழிய; என்று அருந்தமிழ் பாட்டில் ஔவை எடுத்துரைத்தது போல் 1. தென்கயிலை, 2. கோவூர், 3. கொன்றைவனம் 4. பானுபுரம் (கதிரோன்புரி), 5. விட்டுணுபுரம், 6. இந்திரபுரி, 7. கண்ணுவாச்சிரமம், 8. ஆவூர் என்ற புராணப் பெயர் வரலாற்றுடன் திகழும் பந்தனை நல்லூருக்கு நெருங்கிய தொடர்பு டைய திருத்தலம்தான் நெய்க்குப்பை சுந்தரேஸ்வரர் திருக்கோவில்.

தலக்குறிப்பு: நெய்க்குப்பை என்ற பெயர் வித்தியாசமாகத் தோன்றுகிறது. அம்பிகை பசுவாக வந்ததும் இங்குள்ள ஒரு கிணற்றில் பாலைப் பொழிந்தாள். கிணறை கூபம் என்பர்.

அந்தக் கூபத்திலிருந்து பால் நெய்யாக மாறியது. "நெய்க்கூபம்' என்ற பெயரே நாளடைவில் திரிந்து நெய் குபை' ஆகி, இன்று நெய்க்குப்பை என்று நிற்கிறது.

ss

தல வரலாறு

உமையவளின்மூலமாக பசுபதிநாதரான சிவபெருமான பூமிக்கு வேத சக்திகளை அனுப்ப நினைத்தார். பார்வதிக்கு ஒருநாள் திடீரென்று ஓர் ஆசை ஏற்பட்டது. பந்து விளையாட வேண்டும் என விரும்பினாள் அன்னை. தனது ஆசையை சிவபெருமானிடம் கூறவே; சிவபெருமான் நான்கு வேதங்களின் கருத்துகளையும் பந்து போன்ற கோள்களாக (கிரகங்கள்) மாற்றினார். அந்தக் கோள்களை பந்தாடி மேலும் கீழமாக அசைத்து வேத சக்திகளை பரவெளிக்கு அம்பிக்கை செலுத்தி னாள். வேதக் கோள்கள் பெரும் ஒளி மிக்கவை யாகத் திகழ்ந்தன. இதன் ஒளியைக் கண்டு, பேரொளி மிக்க சூரியனே அதிசயித்து விட்டான். ஏனெனில் அந்த ஒளியின் முன்பு சூரியனின் ஒளி கடுகைப்போல் சுருங்கி விட்டது. இந்த மலைப்பிலும், அம்பிகையே அந்தக் கோள்களைப் பந்தாடி விளையாடு வதற்கு இடையூறு செய்யக்கூடாது என்ற நோக்கத்திலும் தான் மறையும் நேரத்தை சூரியன் தள்ளிவைத்தான். இதனால் சகல யோகங்களிலும் சாயங்கால பூஜைகள் ஸ்தம் பித்துவிட்டன. கோபம் கொண்ட சிவ பெருமான் பார்வதிக்கும், தம் கடமையைச் செய்யத் தவறிய சூரியனுக்கும் சாபமிட்டார்.

தேவியை பசுவாகும்படி சிவபெருமான் சாபமிட்டார். இதையடுத்து தேவி தன் தமையன் கேசவன் மாட்டு இடையனாகப் பின்தொடர பூலோகம் வந்தாள். பந்துவந்து விழந்த கொன்றைக் காட்டில் சுயம்புலிங்கமாக இருந்த புற்றின்மீது பசு உருவிலிருந்த தேவி பாலைச் சொரிந்து வழிபட்டாள். ஒருநாள் பசுவின் குளம்பு புற்றின்மீது பட தேவி சுய உருவம் பெற்றாள்.

சாபம் நீங்கப் பெற்ற அன்னையின் முன் தோன்றிய இறைவன் "நீ சுயரூபம் பெற்று விட்டாய். எனினும் நெய்யால் பூஜை செய்து பஞ்சாக்னியில் தவம் செய்து என்னை வந்தடைவாய்' எனச் சொல்லி மறைந்தார்.

உமையவள் இறைவனைப் பால் கொண்டு அபிஷேகம் செய்த தலம் பந்தனை நல்லூர். பார்வதி தேவி இறைவனுக்கு ஊற்றி வழிபட்ட பால் அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நெய்க்குப்பை என்ற தலம் வரை ஓடிவந்து நெய்யாக மாறியது. அன்னை பார்வதி அந்த நெய்யைக் கொண்டு இங்குள்ள இறைவனைப் பூஜித்தாள். அந்தத் தலமே நெய்க்குப்பை திருத்தலம். அன்னையின் சாபம் நீங்கிய தலம் இது. இங்குள்ள ஆலயமே சுந்தரேஸ்வரர் ஆலயமாகும். பந்தநல்லூரில் சொரிந்த பால் இந்தத் தலத்தில் நெய்யாக மாறியதாக தலபுராணம் சொல்கிறது.

அம்பிகை பாதம்பட்ட இடமெல்லாம் வேதசக்தி பரவியது. அம்பிகை பூமிக்கு வந்த போது முதன்முதலில் கால் பதித்த இடமே இன்றைய நெய்க்குப்பை கிராமம்.

சூரியன் அஸ்தமனமாகாது தாமதமானதால் சிவபெருமானிடம் சாபம் பெற்றார் அல்லவா? அந்த சாபத்திலிருந்து விமோசனம் பெறுவது எப்போது என்று அவர் சிவ பெருமானிடம் கேட்டார். ஆண்டுதோறும் மூன்று நாட்கள் தனது கிரணங்களால் இத்தலத்தில் பூஜைசெய்ய, சாபவிமோசனம் கிடைக்கும் என சிவபெருமான் கூற, சூரியனும் அதன்படி பூஜை செய்து சாப விமோசனம் பெற்றார் என்பது புராண வரலாறு.

இங்கு ஆண்டுதோறும் ஆவணி மாதம் 19, 20, 21 ஆகிய மூன்று நாட்களும் சூரியன் தன் ஒளிக்கதிர்களால் கருவறை இறைவனை பூஜை செய்வதை இன்றும் காணலாம்.

சிறப்பம்சங்கள்

ப் இறைவனின் திருநாமம் ஸ்ரீ சுந்தரேஸ் வரர் கண்நோய், பார்வைக் குறைபாடுகளை நீக்குலதில் வல்லமை பெற்றவராக விளங்குகி றார் இத்தலமூலவரான சுந்தரேஸ்வரர்.

ப் இறைவியின் திருநாமம் சௌந்தர நாயகி.

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் சமண சமயத்தைத் தழுவினார். அவரது மனைவி மங்கையர்க்கரசியார் மீண்டும் அவரை சைவராக்கினார். இதனால் ஏற்பட்ட மன மகிழ்ச்சியில் தான் பிறந்த சோழநாட்டில் மதுரை சுந்தரேஸ்வரருக்கு கோவில் அமைத் தாள். ஆனால் மீனாட்சி என்ற பெயர் மதுரைக் குரியதாக இருந்ததால் சோழ முறைப்படி சவுந் தர நாயகி என்று பெயர் சூட்டினாள். சோழப் பெரு மன்னர்களும், விஜயநகர வேந்தர்களும் திருப்பணி செய்ததாக தலபுராணம் சொல்கிறது.

ப் சிவாலயங்களில் ஒவ்வொரு நாளும் காலசந்தி பூஜை சூரியனிடமிருந்தே தொடங்கு கிறது. அநேக சிவாலயங்களில் சூரியனின் கதிர்கள் சிவலிங்கத்தின்மீது பூஜிக்கும் நாள் விசேஷமாகும். அந்தவகையில் சோபகிருது வருஷம் ஆவணி மாதம் 19, 20, 21 தேதிகளில் (5-9-2023, 6-9-2023, 7-9-2023) சூரியனின் கதிர்கள் சிவலிங்கத்தின் மீது படும் அப்போது சிறப்புப் பூஜைகள் நெய்க்குப்பை தலத்தில் நடைபெறும்.

யோகா கலையில் சூரிய நமஸ்காரம் முக்கிய மானதாகும். வைட்டமின் டி4 கிடைக்க ஒரு நாளில் சிறிது நேரமாவது சூரிய ஒளியில் உலவுவது அவசியம். ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு தெய்வத்தின் வழிபாட்டுக்குரிய தாக உள்ளது. சதுர்த்தி- விநாயகர்; பஞ்சமிலி வராஹி; சஷ்டி- முருகன்; அஷ்டமி- பைரவர், துர்க்கை, கிருஷ்ணர்; நவமி- ராமர்; பௌர்ணமி- அம்பிகை. அதுபோல சப்தமி திதி சூரியனுக்கு உகந்த நன்னாளாகும். சூரியன் 7 குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருகி றார் என்பது மரபு. அறிவியல் நிறப்பிரிகையில் ஏழு வண்ணங்கள் (விப்ஜியார்) உள்ளன என்கிறது. இத்தகு ஆற்றலை அள்ளித் தருகின்ற சூரிய பகவானின் நட்சத்திரங்களான உத்திரம், கார்த்திகை, உத்திராடத்தில் பிறந்த வர்கள், ஞாயிற்றுக்கிழமை மற்றும் சப்தமி திதியில் பிறந்தவர்கள் ஜாதகத்தில் சூரியன் வலுவிழந்து துலா ராசியில் நீசம் பெற்றவர்கள், சித்திரை மாதம் பிறந்தவர்கள் இவர்களெல் லாம் இந்த நெய்க்குப்பை திருத்தலத்தில் சூரிய தீர்த்தத்தில் நீராடி, தலவிருட்சமான பவளமல்லிக்கு நீர் ஊற்றி 11 நெய் தீப மேற்றி சப்தமியில் 11 முறை வலம் வந்து அர்ச்சனை செய்து வழிபாடு மேற் கொண்டால் ஆரோக்கியமான வாழ்வு, உயர்புகழ், பதவி கிட்டுவதோடு நிகரில்லா வளம் தந்தருள்வார் இத்தல மூலவர் சுந்தரேஸ்வரர், சௌந்தரநாயகி அம்பாள் என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஆலய அர்ச்சகரான நாகராஜ குருக்கள்.

ப் மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, ஆவணி மாத சூரிய பூஜை, பிரதோஷ வழிபாடு போன்றவை ஆலயத்தில் சிறப்பாக நடக்கும்.

ப் திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்த போது பூமியில் பல இடங்களில் அக்னி கோளங்கள் உருவாயின. அம்பிகை நெய்க் குப்பையில் கால் பதித்தபோது அவளது ஸ்பரிசத்தால் பூமி குளிர்ந்தது. அதனால் பிரிந்த தம்பதிகள் இந்த அம்பாளிடம் விண்ணப்பம் வைத்தால் அவர்கள் மன அழுத்தமில்லாமல் சேர்த்து வாழ்வர்.

ப் திருக்கோவிலுக்கு வடக்கே கொள்ளிடம் மற்றும் மண்ணியாறும் அமைந்து, ஆன்மிக சிறப்போடு இயற்கை அழகினையும் இனிதே கொண்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்கது மண்ணியாறாகும். ஆலயத்திற்கு வடக்கே இம்மண்ணியாறு செல்வதால் இதை உத்தரவாஹினி என்றும், முருகப்பெருமானால் ஏற்பட்ட நதி இது என்பதால் சுப்பிரமணிய நதி என்றும் வழங்கப் பட்டது. நாளடைவில் சுப்பிரமணிய என்ற சொல் மருவி இன்று மண்ணியாறு என்றழைக்கப்படுகிறது!

ப் பவளமல்லியைத் தல விருட்சமாகக் கொண்ட இந்த தலத்தில் தினசரி காலை, சாயரட்சை என இரண்டு கால பூஜைகள் நடைபெறுகிறது. மேலும் இங்கே கோவிலின் வெளியே வீற்றிருக்கும் வலஞ்சுழி விநாயகர் சூரிய பூஜைக்கு இடையூறு ஏற்படாதவாறு சற்றே தள்ளி அமர்ந்து காட்சி தருகிறார். கர்ப்பகிரகமும் நுழைவாசலை விட்டு சற்றே தள்ளி அமைந்திருப்பது ஓர் அற்புதமான அமைப்பாகும்.

ப் வம்சாவளிக் குற்றத்தினால் பித்ருதோஷம் ஏற்பட்டு அதன்மூலம் வருகின்ற சாபங்களுக்கு விமோசனம் கிடைக்கவேண்டும் என்றால், பித்ருகாரகன் என்று ஜோதிடத்தில் குறிப்பிடு கின்ற சூரியனுக்கே சாப நிவர்த்தி தந்த நெய்க் குப்பை தலத்தில் 48 நாட்கள் தொடர்ந்து சுவாமிக்கு விலவ அர்ச்சனையும், அம்பாளுக்கு குங்கும அர்ச்சனையும் செய்து 48-ஆவது நாள் முடிவில் இத்தலத்தில் மூலமந்திர ஹோமம் செய்து, வாசனை மலர்களால் அலங்கரித்து வழிபாடு செய்தால் நாட்பட்ட கடன், நோய் நிவர்த்தி பெற்று சகல பாவ சாப விமோசனங் களை இத்தல இறைவன் தந்தருள்வார் என்று உள்ளூர் கிராமவாசிகள் தங்கள் அனுபவ நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

ப் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகின்ற இவ்வாலயம் 1958-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஸ்ரீ சுந்தரேஸ்வரர் நற்பணி மன்றமும், சென்னை பண்பாட்டுப் பாரம்பரிய டிரஸ்டும் சேர்ந்து இந்த ஆலயத்தை புனருத்தாரணம் செய்து வியவருஷம் ஆனி 18 (2-7-2006) ஞாயிறன்று மகா கும்பாபிஷேகம் நிகழ்த்தி னர். 17 ஆண்டுகள் பூர்த்தியடைந்து தற்போது கும்பாபிஷே திருப்பணிக்காகக் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று செயல் அலுவலர் மற்றும் கிராமவாசிகள் கூறுகின்றனர்.

ப் குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி காலங் களில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு ஹோமம் பரிகார பூஜைகள் நன்கு நடைபெறும்.

ப் உலகில் பிறக்கின்ற ஒவ்வொரு உயிரினமும் அதனதன் கர்மவினைகளுக்கேற்ப பிறவி யெடுத்து, பல்வேறு தோஷங்களால் அவதி யடைந்து நோய் நொடியால் பாதிப்படை கின்றன. அதனால்தான் நோய் நொடியின்றி வாழ்ந்திடவேண்டி இறைவனிடம் அனைவரும் வேண்டுகின்றனர். அதை யடுத்து சிவபெருமானை வணங்கு வதால் உடலில் இருக்கும். நோய் மற்றும் மனதில் இருக்கும் குழப்பங் கள் நீங்கி தெளிவுண்டாகும். மேலும் ருத்ரமூர்த்தியாகிய சிவபெருமானே போற்றும் சக்தி வாய்ந்த ருத்ர மந்திரத்தை- குறிப்பாக பிரதோஷ நாளில் படித்து வந்தால் கிரக தோஷங்கள் உட்பட அனைத்து தோஷங்களும் நீங்கும் என்கிறார். ஆலய அர்ச்ச கரான ராஜா குருக்கள்.

மேலும் அவர் கூறுகையில், பிரதோஷ அபிஷேக நேரத்தில் 27 முறை சொல்லி வந்தால் கடுமையான நோய்கள் விலகி நிம்மதியுடன் வாழலாம் என்கிறார்.

ருத்ர மந்திரம்

நமஸ்தே அஸ்து பகவன்

விச்வேஸ்வராய மஹாதேவாய

த்ரயம்பகாய த்ரிபுராத்தகாய

த்ரிகாக்னி காலாய

காலாக்னீ ருத்ராய

நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய

ஸர்வேஸ்வராய

ஸதா சிவாய ஸ்ரீமன்

மஹாதேவாய நம:

திருக்கோவில் அமைப்பு

சோழ நாட்டில் காவிரி வடகரையிலும், உத்திரவாஹினியாய் செல்லும் மண்ணி யாற்றின் தென்கரையிலும் வயல் வெளிகள் சூழ்ந்த நெய்க்குப்பை என்ற சிற்றூரில், நாற்புறமும் அழகிய மதில்களால் சூழப்பெற்று மூன்று நிலை ராஜகோபுரத்திற்கு முன்புறம் சூரிய தீர்த்தக் குளம் உள்ளது. சூரிய பூஜைக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் சற்று தள்ளி வலஞ்சுழி விநாயகர் சந்நிதி உள்ளது. ஆலயம் இரண்டு பிராகாரங்களுடன் கிழக்கு நோக்கி உள்ளது.

பலிபீடம், நந்திதேவரைக் கடந்து உள்ளே சென்றால், மணி மண்டபம் அம்மன் அருள் மிகு சௌந்தர நாயகி தென்புறம் நோக்கி சாந்த மான முகத்துடன் நின்ற நிலையில் அருள் பாலிக்கிறாள். அடுத்துள்ளது மகாமண்டபம், வடபுறம் நடராஜர்- சிவகாமி அருள்பாலிக்க, வடகிழக்கு மூலையில் சூரியன் பைரவர் திருமேனிகள் உள்ளது. அடுத்து அர்த்த மண்டபத்தைத் தொடர்ந்து கருவறையில் மூலவர் சுந்தரேஸ்வரர் அருள்கிறார்.

தேவகோட்டத்தில் வடபுறம் தட்சிணாமூர்த்தியும், தென்புறம் துர்க்கையும், அதன் எதிரே சண்டிகேஸ்வரர் சந்நிதி உள்ளது. உட்பிராகாரத்தின் மேற்கில் மும்மூர்த்தி, கணபதி, சுப்ரமணியர் வள்ளி, தெய்வானையுடனும், பாலகணபதி, சிவபெருமான், ருத்ராபதீஸ்வரர், பைரவர், கஜலட்சுமி, நால்வர் திருமேனிகள் உள்ளன.

சுற்றுப் பிராகாரத்தில் வில்வமரம், பூஞ்செடி கள், தலவிருட்சம் பவளமல்லி மற்றும் தீர்த்தக் கிணறும் உள்ளது.

நிலைமாறும் உலகில் நிலைக்கின்ற இறையருளால் நிகரில்லா வளம் தந்தருளும் நெய்க் குப்பை நிமலனடி பணிவோம். நித்திய சுகங்களைப் பெறுவோம்.

நடைதிறப்பு: காலை 7.00 மணிமுதல் 11.30 மணிவரை; மாலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை.

ஆலயத் தொடர்ப்புக்கு: செயல் அலுவலர், அருள்மிகு சுந்தரேஸ்வர சுவாமி திருக்கோவில். நெய்க்குப்பை, பந்தநல்லூர் (அஞ்சல்). திருவிடை மருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். பின்கோடு: 609 807.

சுந்தரராஜன், செயல் அலுவலர்: 97916 97293.

பூஜை விவரங்கட்கு: நாகராஜ குருக்கள்: 94430 19349.

குறிப்பு: ஆலய அர்ச்சகர்க்கு போன் செய்து விட்டு செல்லவும். பூஜைப் பொருட்கள், வாங்குவதற்கு கடை இல்லை. வரும்போதே வாங்கி வரவும்.

அமைவிடம்: தஞ்சை மாவட்டம், கும்ப கோணத்திற்கு வடகிழக்கில் 29 கிலோமீட்டர் தொலைவிலும், பந்தநல்லூர்- வைத்தீஸ்வரன் கோவில் காலையில், பந்தநல்லூரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. கும்பகோணம், திருப் பணந்தாள், பந்தநல்லூர், சீர்காழி ஆகிய ஊர்களிலிருந்து நிறைய பேருந்து வசதி உள்ளது.

படங்கள்: போட்டோ கருணா

om010923
இதையும் படியுங்கள்
Subscribe